Jump to content

ஹொலிவூட்டில் கால் பதிக்கும் பாடகர் சிவா கணேஸ்வரன்


Recommended Posts

ஹொலிவூட்டில் கால் பதிக்கும் பாடகர் சிவா கணேஸ்வரன்
2014-08-11 11:56:11

 

 

இலங்­கையில் பிறந்து புலம்­பெ­யர்ந்­த­வர்­களும் அவர்­களின் வாரி­சு­களும் சர்­வ­தேச ரீதியில் பல்­வேறு துறை­களில் பிர­கா­சித்து வரு­கின்­றனர். இவர்­களில் மேற்­கு­லக இசைத்­து­றையில் சர்­வ­தேச புகழ்­பெற்ற ஒரு கலை­ஞ­ராக சிவா கணேஸ்­வரன் விளங்­கு­கிறார்.

6503Untitled-14_zps9e0d92de.jpg
இலங்­கை­ய­ரான தந்­தைக்கும் அயர்­லாந்து தாயா­ருக்கும் மக­னாக பிறந்­தவர் சிவா மைக்கல் கணேஸ்­வரன். இங்­கி­லாந்தின் பிர­பல இசைக்­கு­ழுக்­களில் ஒன்­றான "வோண்டட்" குழுவின் 5 பாட­கர்­களில் ஒருவர் இவர்.


2009 ஆம் ஆண்டில் செயற்­பட ஆரம்­பித்த வோண்ட்டட் இசைக்­கு­ழுவில் சிவா கணேஸ்­வ­ர­னுடன் மெக்ஸ் ஜோர்ஜ், ஜே மெக்­கின்னஸ், டொம் பார்க்கர், நேதன் ஸ்கைஸ் ஆகி­யோரும் அங்­கத்­த­வர்­க­ளாக விளங்­கினர்.

இக்­குழு த வோண்டட், பெட்­டில்­கி­றவுண்ட், வேர்ட் ஒவ் மௌத் முத­லான இசை அல்­பங்­களை வெளி­யிட்­ட­துடன் பல்­வேறு விரு­து­க­ளையும் வென்­றது.
பல நாடு­களில் இசை நிகழ்ச்­சி­களை நடத்­தி­யுள்ள இக்­கு­ழு­வினர் தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் தோன்­றி­யுள்­ளனர்.

6503_siva-kaneswara_zps393f1004.jpg
சில மாதங்­க­ளுக்­குமுன் தமது செயற்­பா­டு­களை இடை­நி­றுத்தி வைப்­ப­தா­கவும் ஆனால் எதிர்­கா­லத்தில் மீண்டும் இணைந்து செயற்­ப­டக்­கூடும் எனவும் இக்­குழு அறி­வித்­தது.

இந்­நி­லையில் தற்­போது அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் தங்­கி­யுள்ள 25 வயதான சிவா கணேஸ்­வரன், ஹொலி­வூட்டில் நடி­க­ரா­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறார். இவர் மொட­லா­கவும் பணி­யாற்­றிய அனு­பவம் கொண்­டவர். கிளே­டி­யேட்டர் புகழ் ரஸல் குரோவ் தனது ரோல் மொடல் என சிவா கணேஸ்­வரன் தெரி­விக்­கிறார்.

6503Untitled-19_zps1f44b802.jpg

 

மேற்­கு­லகில் வாழும் நிலையில், அதுவும் வேடிக்­கை­களும் கேளிக்­கை­களும் நிறைந்த இசைத்­து­றையில் பிர­ப­ல­மான கலை­ஞ­ராக திகழ்­கின்ற போதிலும் தனிப்­பட்ட ரீதியில் மிகுந்த கட்­டுப்­பாட்­டுடன் விளங்­கு­கிறார் சிவா.


"நான் மது அருந்­து­வ­தில்லை. புகைப்­ப­தில்லை. உண்­மையில் சொக்லேற் கூட நான் உண்­ப­தில்லை" என பிரிட்­டனின் டெய்லி மெயில் பத்­தி­ரி­கைக்கு அண்­மையில் அளித்த செவ்­வி­யொன்றில் தெரி­வித்­துள்ளார் சிவா கணேஸ்­வரன்.

6503_Untitled-17_zps3b4472f0.jpg


"ஹொலிவூட் நடி­க­ரா­கு­வ­தற்­காக எனது உடல்­நி­லையை சிறப்­பாக வைத்­துக்­கொள்­வ­தற்கு விரும்­பு­கிறேன். என்னால் முடிந்­த­வரை சிறப்­பாக தோற்­ற­ம­ளிக்க நான் விரும்­பு­கிறேன். இதற்­காக எனது உண­வு­முறை முற்­றாக மாறி­யுள்­ளது. வெள்ளை சோறு, இனிப்­புகள் போன்­ற­வற்­றுக்கு ஏற்­கெ­னவே குட்பை சொல்­லி­விட்டேன். குறைந்­த­ள­வான உண­வு­க­ளையே உட்­கொள்­கிறேன். தீவி­ர­மாக உடற்­ப­யிற்சில் ஈடு­ப­டு­வ­துடன் வாரத்­திற்கு இரு­த­டவை குத்­துச்­சண்டை பயிற்­சி­யிலும் ஈடு­ப­டு­கிறேன்" என்­கிறார் சிவா கணேஸ்­வரன். இவர் நரீஷா மெக்­கர்ஃபி எனும் யுவ­தியை நீண்­ட­கா­ல­மாக காத­லித்து வரு­கிறார். மேற்­கிந்­தியத் தீவு­களில் ஒன்­றான பஹாமஸ் உட்­பட பல நாடு­களின் கடற்கரைகளில் இந்த ஜோடி உல்லாசமாகக் காணப்பட்ட புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

6503Untitled-15_zps41fb307c.jpg

பாதணி வடிவமைப்பாளரான நரீஷா மெக்கர்ஃபி சமையலிலும் சிறந்துவிளங்குவதாக சிவா கணேஸ்வரன் பாராட்டுகிறார். கடந்த வருடம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=6503#sthash.ZLc3OxEz.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.