Jump to content

தமிழகத்தில் தேசியத் தலைவர் – இயக்குனர் கௌதமன்


Recommended Posts

தமிழகத்தில் தேசியத் தலைவர் – இயக்குனர் கௌதமன்
 

 

va-gauthaman-film-1-296x400.jpgதமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றி ஒரு முழுமையான படம் கோடம்பாக்கத்தில் தயாரானால் எப்படி இருக்கும்?இப்படியான ஒரு இரகசிய தகவல் சில மாதங்களாக அலையடித்துக்கொண்டிருக்கின்றது.

ஈழமக்களின் சிரிப்பு கண்ணீர் போர் ரத்தம்,பிணவாடை,முள்வேலி என்று இப்போதைய நிலைமைவரை ஈழப்பேராட்டத்தையம் தலைவர் அவர்களையும் மையப்படுத்தி சினிமாவாக்க அத்தனை ஏற்பாடுகளிலும் இருக்கின்றார் இயக்குனர் வ.கௌதமன் சந்தணக்காடு வீரப்பனை பற்றி படம் எடுத்தவரே அவர்தான் என்று தமிழகத்தில் இருந்து வெளிவரும் தமிழக அரசியல் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

முழுமையாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வரலாற்றினை சொல்லும் படத்தனை தயாரிக்கும் முயற்சியில் இயக்குனர் கௌதமன் ஈடுபட்டுள்ளார்.

படம் தொடர்பில் பல்வேறு பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது இறுதியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் யார்?எப்போது படத்தை பற்றி அறிவிக்க இருக்கின்றீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு.

உலகம் முழுக்க வாழும் தமிழர்கள்தான் இதை ஒட்டுமொத்தமாக தயாரிக்கப்போறார்கள் ஐயாநெடுமாறன் அவர்களும் உணர்சி கவிஞர் காசியானந்தன் அவர்களும் உலகத்தமிழர் பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்த படத்தின் பெயர் உள்ளிட்ட அறிவிப்பை வெளியிடும் நாள் வெகு சீக்கிரம் வரும் அனேகமாக தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அந்த அறிவிப்புவெளியாகும் அவர்கள் அறிவித்த நாளில் இருந்து இந்த படைப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் யார் நடிக்கின்றார்கள் என்று கேட்டதற்கு..

நட்சத்திர தோ்வு நடக்கின்றது.என் தலைவனின் முகம் மட்டுமல்ல எம் இனத்தை அழித்தவர்களன் முகம்களையும், அச்சு அசேலாக அதேபோல திரையில் வெளிப்படும்,இந்த படத்தை தமிழர்கள் பாப்பார்கள்,உலகமே வியக்கும்,அதுமட்டுமல்ல என் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான என் தலைவர் பிரபாகரன் அவர்களும் பார்ப்பார் என்றும் இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

va-gauthaman-film-2.pngva-gauthaman-film-3.pngva-gauthaman-film-4.png

http://tamizl.com/?p=83438

Link to comment
Share on other sites

கௌதமன் கடந்தவருடம் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்து பல முன்னாள் போராளிகளிடம் தலைவர் பற்றி விபரங்கள் சேகரித்திருந்தார்.  தலைவரை நேசிக்கும் பலரையும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றார். தனது நாட்டு சூழலுக்கு ஏற்பவே படத்தை வெளியிடப்போவதாகவும் சொல்லப்பட்டது. பிரித்தானியாவில் வாழும் சிலர் தலைவர் பிரபாகரனை எடுப்பதில் பிரச்சனையில்லை ஆனால் வளமையான சினிமாத்தனமாக எடுத்து எங்கள் வீரனை விற்றுவிடாதீர்கள் என சொல்லியனுப்பினார்.
 
கௌதமனும் அரசியல்வாதியாக தற்போது தன்னை இனங்காட்டும் நபராக மாறியுள்ளது மட்டுமன்றி தமிழகத்திலிருந்து 80களிலிருந்து புலிகளுடன் பணியாற்றிய பலரையும் துரோகிகள் புலனாய்வாளவர்கள் என ஏக வசனம் பேசி அவமதிப்பதும் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.
 
கேட்க ஆளில்லாத காலத்தில் ஈழத்தமிழனும் ஈழத்தமிழ் கலையுலகும் நாதியற்றுப் போயிருக்கிறது நரிகள் காட்டில் அடைமழை. நாங்கள் இன்னும் நம்பி நாசமாகும் இனமாக......!
 
அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என காத்திருந்தோர் வரிசையில் கௌதமனும்.....!
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.