Jump to content

ஆஸ்திரேலியா/ 2736 கிமீ தனியாக பாலைவனத்தை நடந்தே கடந்த பெண்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

TRACKS-2013/உலக சினிமா/ஆஸ்திரேலியா/ 2736 கிமீ தனியாக பாலைவனத்தை நடந்தே கடந்த பெண்.

 
1509164_241557226026564_370540574_n.jpg
 
 
நடிகர்  விஜய் நடித்த  துள்ளாத  மனமும் துள்ளும்  திரைப்படத்தில்   இன்னிசை பாடி வரும்  இளம் காற்றுக்கு உருவமில்லை என்று வைரமுத்து எழுதிய  பாடலில் கடைசியில்  பாராவில்....

 

தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே...
 என்று முடியும்...
தேடல் உள்ள  உயிர்களுக்கே தினமும்  பசியிருக்கும் , தேடல் என்பது  உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் என்று அற்புதமான வரிகளை எழுதி போட்டு தாக்கி இருப்பார் வைரமுத்து...

வாழ்வில் ருசி இருக்க வேண்டும் என்றால் தேடல் அவசியமாகின்றது... 
 
அது எல்லோருக்கும் சாத்தியப்படாது... தான் தோற்றுப்போன தொழிலில், அல்லது  கலையில் தன் வாரிசு ஜெயித்து காட்ட வேண்டும் என்றே அத்தனை தகப்பன்களும் விரும்புகின்றார்கள்.
 
 
 அதற்காகத்தான்  இரவு பகல்பராமல் உழைக்கின்றார்கள்... அல்லவா-?ஆனால் பெண்ணாக பிறந்து விட்டால்..??? அவ்வளவுதான்  இப்போதாவது படிக்க வைக்கின்றார்கள்.. 50 வருடத்துக்கு முன்னால்.... கால காலத்துக்கு ஒரு கால்  கட்டு போட்டு  அந்த பெண்ணை குனிந்த தலை நிமிராது, அவள் விருப்பம் அறியாது, அவளுக்கு என்ன தெரியும்? அவளுக்கு என்ன தெரியும் என்று  சொல்லி சொல்லியே  குப்பனுக்கோ சுப்பனுக்கோ கட்டிக்கொடுத்து , பிள்ளை பெக்கும் மெஷினாக உருமாற்றி.... 
 
30 வயதில்  கிழடு தட்டி... கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொல்லி பழுக்க முகத்தில் மஞ்சள் பூசி,  அப்படியே  கணவனின் உயிர் இருக்கும்  தாலியில் இன்னும் கொஞ்சம் மஞ்சளை தடவி, 
 
வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அடுத்த  கழுத்து புருசஷனுக்கு விரதம் இருந்தது போய் ,வயித்து புருஷனுக்கு விரதம் இருந்து ....மரிந்து  போவார்கள் நம்ம ஊர் பெண்கள்.... அது மட்டுமல்ல... அப்படித்தான் ஆட்டி வைத்தனர் நம் ஊர்க்காரர்கள்.
1006047_185093588339595_906040632_n.jpg
 
ஆனால்  1950 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த  ராபின் டேவிட்சன் என்ற பெண்  அப்படி பத்தோடு பதினோன்றாக வாழும் வாழ்க்கையில்  விருப்பம் இல்லை... சாதிக்க வேண்டும் தேடல் வேண்டும் என்று தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்டார்...
 
 அவர் அப்பா தென் அமெரிக்கா பாலைவனம் மற்றும் காடுகளில் தங்கத்தை தேடுகின்றேன் பேர்வழி என்று வாழ்க்கையை தொலைத்து விட்டவர்....
 
ஆனால் அவரின் பெண்ணுக்கு தன் அப்பாவை போல இல்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்  மட்டும் எப்போதும் நெஞ்சில் தீயாய்   எரிந்துக்கொண்டு இருந்தது...
 
வேளாங்கன்னி கோவிலுக்கு  ஒரு கொடியை வைத்துக்கொண்டு நடந்தே    சாலையோரங்களில்  பயணம் செய்து கிடைத்த இடத்தில் படுத்து, கிடைத்த  வயல்களில் இருக்கும் மோட்டர் கொட்டைகைகளில்  குளித்து உடையை காய வைத்து ஒரு தேசாந்திரி போல நடந்து செல்வதை  நீங்கள் பார்த்து இருக்கலாம்..
 
 கன்யாகுமாரியில் இருந்து வேளாங்கன்னிக்கு  ஒருவர் நடந்தே தனது வேண்டுதல்களை  நிறைவேற்றுகின்றார் என்று  வைத்துக்கொள்வோம்.. மொத்தம் 450 கிலோ மீட்டர்... காரில் ஏழரை மணி  நேரத்தி  செல்லலாம்... நடந்தே சென்றால் ஒரு வாரம் ஆகும் என்று நினைக்கின்றேன்...
 
ஆனால் கன்யாகுமாரியில் இருந்து டெல்லி கன்டோன்மென்ட்க்கு 2793 கிலோ மீட்டர் தூரம் கொண்டது...  காரில் நிறுத்ததாமல்  சென்றால்  42 மணி நேரம்  ஆகும்... அதுவே சாலை ஓரமாக ஒரு வேண்டுதலுக்காக  நடந்து சென்றால் 2793 கிலோமீட்டரை நடந்தே கடக்க... எப்படியும் மாதக்கணக்கில் ஆகும் அல்லவா?
 
 
சார்    இதுவே பேத்தல்....
 
எவனாவது   கன்யாக்குமாரியில் இருந்து டெல்லிக்கு நடந்தே செல்வானா?
 
 தம்பி கன்யாக்குமாரியில் இருந்து டெல்லிக்கு ரோட்டு ஓரமா மக்கள் வாழும் பகுதி வழியே நடந்து போறதுக்கே பேத்தல்ன்னு  சொல்லறியே,..??
 
தண்ணியே இல்லாத பாலைவணத்துல... அதுவும்  ஒதுங்க நிழல்  கூட இல்லாத பொட்டல்  பாலைவணத்தில் ....நாலு ஓட்டகம் ஒரு நாயோடு   தனியா  ஒரு பெண்ணாக நடந்து போறது சாதராண விஷயமா?
1898542_240734622775491_360916819_o.jpg
 
 அது மட்டுமல்ல...
 
2750 கிலோ மீட்டர் அதாவது கன்யாக்குமாரியில் இருந்து  டெல்லி துரத்தை பாலவணத்தின் மூலமா  நடந்து  கடக்க வேண்டும் என்று சொன்னால் உங்களால் முடியுமா?
 
அதவும் ஆண் இல்லை.. தனி ஒரு பெண்ணாக ... சான்சே இல்லை என்று நீங்கள் சொல்லலாம்...  கதை விடுகின்றேன் என்று நீங்கள் கருதலாம்.
 
ஆனால் தனி ஒரு பெண்மணியாக 1977 ஆம் ஆண்டு  அஸ்திரேலியாவில்  ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் என்ற   ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் இருந்து Aboriginal Land வரை மொத்தம் 2736 கீலோ  மீட்டர்  பாலைவணத்தை நான்கு ஓட்டகம் மற்றும் தன் செல்ல நாயுடன்  ஒரு பெண் தணியாக கடந்தார் என்றால்  நம்முடிகின்றதா? 
 
அதுவும்  தொழில் நுட்பம் வளராத அக்காலத்தில்  ஆபத்து   என்றால் உதவிக்கு கூட ஆள் கிடைக்காத பாலைவண பகுதியில்  நடந்து கடப்பது என்பது சாத்தியமில்லாதது    என்றே நாம் நினைப்போம்...
 
 
 இதுவே  நம் ஆட்களிடம் இப்படி ஒரு பெண்மணி நடந்தே  பாலைவணத்தை 2736 கிலோ  மீட்டர் கடக்க போகின்றார் என்று நம்ம ஊர் பெரிசிடம் சொன்னால்....  அந்த பொண்ணுக்கு சூத்துக்கொழுப்பு என்று ஒரு வார்த்தையில்  முடிந்து விடுவார்கள்..ஹ
 
 ஒன்று இயலாமை....
 
நம்மால் செய்ய முடியாது... அதனால் யாராலும் செய்ய முடியாது என்று இறுமாப்பு.
 
பெண்தானே என்ன கிழித்து விட போகின்றாள் என்ற கேலி..
 
பாலைவணத்தில் இருக்கும் அபாயங்களை அறிந்த காரணத்தால் கூட அப்படி சொல்லி இருக்கலாம் .
 
ஆனால் இந்த உலகத்தில் முதல் அடி எடுத்து வைத்த அத்தனை பேரும் கேலிக்குள்ளாக்க பட்டுருக்கின்றார்கள்..
 
சமீபத்தில்  சில நாட்களுக்கு முன்   ஹாரி பாட்டர் படத்தில் வில்லனாக நடித்த இங்கிலாந்து  நடிகர்  David Legeno கலிபோர்னியாவின்   டெத் வேலியில்  இறந்து கிடந்தார்...
 
50 வயதாகும் David Legeno  ஒரு பாக்சர் .கட்டுடல்  கொண்டவர்... டிரக்கிங் செல்லும்  போது  இறந்து இருக்கலாம் என்றும் ,அவர் இறக்க காரணம் கடுமையான வெப்பம் என்று தெரிவித்துள்ளனர்.. 
4ef3163a-eb9c-496c-8dc4-a3e0b0c3af98_650
 
காரணம் கலிபோர்னியா பாலைவணத்தில் 120 டிகிரி  அனாயசமாக  கொளுத்துமாம்..  வெயிலின் தாக்குதலில் இறத்ததோடு மட்டுமல்லாமல்  நான்கு நாட்கள் கழித்துதான்  அவரின் உடல் கண்டேடுக்கப்பட்டது...
 
இதை ஏன் இங்கே எழுதுகின்றேன்  என்றால் ஒரு பிரபல நடிகர்..  நவீன உபகரணம் கொண்ட இந்த  வாழ்வியல் சூழலில் பாலைவணத்தில் செல்லும் போது இறந்து இருக்கின்றார் என்றால்???
 
1977 ஆம்  ஆண்டு நான்கு ஒட்டகங்களுடன் தனியாக சென்ற ராபின் டேவிட்சன் தன்னம்பிக்கையை நினைத்து பாருங்கள்.
 
 ஆம் தன்னம்பிக்கைக்கு இந்த திரைப்படம் ஒரு உதாரணம்..
 
2736 கிலோ மீட்டரை நடந்தே அடர் பாலைவணத்தை கடக்க போகின்றேன் என்று  ராபின் சொன்ன போது? ஏன் கடக்க வேண்டும் என்று அவர்களின் உறவுகள் கேட்க ஏன் கடக்ககூடாது என்று எதிர் கேள்வி கேட்டு விட்டு அதற்கான  ஆயுத்த பணிகளை மேற்ககொண்டவர்...
 
ராபின் அலிஸ் ஸ்பிரிங்கில் சட்டென காசு கொடுத்து  நான்கு  ஒட்டகங்களை வாங்கி கொண்டு தன் செல்ல நாயோடு  பாவைவணத்தை கடந்து விடவில்லை....
 
 முதலில் ஒட்டகங்களோடு  இரண்டு வருடங்கள் பழகி  அதன் பழக்க வழக்கங்களை தெரிந்துக்கொண்டார்..
 அது மட்டுமல்ல...வேலை செய்தால் ஒட்டகம் தருகின்றேன் என்று ஒரு முதலாளி சொன்னதை வைத்து ஒட்டக பண்ணையில் வேலை பார்க்க.. கடைசியில் எதுவும் தராமல் ஏமாற்றி விடுகின்றான்.
 
அதே போல பாலைவணத்தை கடக்கவும், ஒட்டகம்  வாங்கவும் பயணத்துக்கு தேவையான பணத்துக்கு என்ன செய்யவது என்று கை பிசைந்து நின்றுக்கொண்டு இருக்கும் போது நேஷனல் ஜியாகரபி புகைப்படக்காரர் நண்பராகி  ராபினுக்கு ஸ்பான்சர் வாங்கி கொடுக்க...
 
 நான்கு ஒட்டகத்துடன் கடும் பாலைவண பகுதிகளில்  நடந்தே ஒன்பது மாதங்கள் 2736 கீலோ  மீட்டரை கடந்து   சாதனை படைத்தார்.
 பின்னாளில் அதனை டிராக்ஸ் என்று புத்தகமாக எழுத  புத்தக விற்பனையில் சாதனை படைத்தது...
 
புத்தகம் எழுத காரணம்.... சல்மான் ரூஷ்ட்டி கூட இந்த அம்மா கொஞ்சநாள் வாழ்ந்து இருக்காங்க...
 
தற்போது அந்த புத்தகத்தை  மையமான வைத்து ராபின் கதையை திரைப்படமாக எடுக்க...  டிராக்ஸ் திரைப்படம்  உலக திரைப்பட விழாக்களில் கொண்டாடும் படமாக மாறி இருக்கின்றது.
 
ஒரு பெண் நான்கு ஒட்டகம் ஒரு நாய்...
விஷூவலாக காட்ட பாலைவண மணலை தவிர வேறு  எதுவும் இல்லை... ஆனாலும் அசத்தி இருக்கின்றார்கள். சான்சே இல்ல.
 அற்புதமான திரைக்கதை...
 
1614381_241388382710115_83513169_o.jpg
 
 முதலில் நேஷன்ல் புகைப்படக்காரர்  ரிக் சாலமனிடம் வேண்டா வெறுப்பாக பழகினாலும் ஒரு கட்டத்தில் இருவரும் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகின்றார்கள்.. பின்னாளில் அவர் எடுக்கும் புகைப்படங்கள்தான் ராபினுக்கு  ஆதாராமாக விளங்கின...
 
2736  கிலோ மீட்டர்  பாலை வண பயணத்தில்  மூன்று முறை ரிக் சாலமன்  ராபினை சந்திக்கின்றார்.
10441407_279764545539165_321216445278464
 
( படத்தில் கேமல் லேடி ராபின். அவர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மிலா.)
 
ராபினாக Mia Wasikowska நடித்து இருக்கின்றார்... நான்  இல்லை...
 ஒரு  விருப்பம் இல்லாத ஆண்  என்றாலும் செய்த உதவிகள், தனிமை, அந்த தனிமையை போக்க காமம்.. என்று காமம்  உருவாகும்   விதத்தை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார் இப்படத்தின் இயக்குனர் John Curran
 
  பாலைவணத்தில் பழக்கப்பட்ட  ஒட்டகங்களை காட்டு ஓட்டகங்கள் தாக்க வரும் அப்போது  தயவு தாசன்யம் பார்க்காமல் சட்டு கொன்று விடுவது நல்லது.. அப்படி பரிதாபம் பார்த்து கொல்ல வில்லை என்றால்   உன் ஒட்டகத்தை  கொன்று விடும் ஒட்டகம் இல்லையென்றால் பாலைவணத்தில் நீயும் மடியவேண்டியதுதான்  என்று   ஒட்டகம் கொடுக்கும் பெரியவர்  தன் அனுபவத்தை    சொல்லி வழி அனுப்பி வைப்பது   கிளாஸ்.. 
அவர் சொன்னது போல பாலைவணத்தில் ஆபத்தை எதிர்நோக்குவது... தூங்கி எழுந்து பார்த்தால் ஒட்டகம் காணமல் போய்  பயந்து போய்  பாலைவணத்தில்   தேடுவது எனம் படம்  நெடுக சுவாரஸ்யங்கள்....
1557526_230750797107207_1467151445_n.jpg
 
  நாம் வசிக்கும்  வீட்டில்  யாரும் இல்லையென்றால் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு  ஜட்டி யோடும் சில நேரம்  இல்லாமலும்   சுந்திரமாக அலைவோம்  அல்லவா?
 
 அது போல பாலைவணத்தில் அவளும் ஒட்டகங்கள்தான் புழுக்கம் வேறு.. வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு மேலே ஒரு துண்டை போர்த்திக்கொண்டு ஒரு தேசாந்திரி போல நடந்து செல்வதும்... நடுவில்  இருக்கும் தண்ணீர் நிலைகளில் குளித்து மகிழ்வதும் கவித்துவமான காட்சிகள்.
 
நடுவில் பழங்குடி மக்கள் உதவி செய்வதும் அவர்களோடு அன்பு  பாராட்டுவதும்... பாதுக்காப்பற்ற பகுதியில் சில கிலோ மீட்டர்  பழக்குடி மக்களில்  இருந்து ஒரு பெரியவர்  துணைக்கு வருவதும் அவருக்கும் ராபினக்கும் உண்டான நட்பு என நெகிழ வைக்கின்றார்கள்..
 
  உடம்பு தோல் வரண்டு அது கொஞ்ச கொஞ்சமாக பாலைவண வெயிலில் கருகி  துவண்டு போய்  கடைசியாக தண்ணீரை பார்க்கும்  காட்சி இருக்கின்றதே சான்சே இல்லை.. நீங்களே சாதித்தது போல ஒரு மகிழ்ச்சி   தென்படும். அதுதான் அந்த படத்தின் வெற்றி...
 
 
ரிக் எடுத்த போட்டோக்கள் பத்திரிக்கையில் வந்த  காரணத்தால் ராபின்  சாதனையை  உலகம் உணர்ந்து அவரை பேட்டி எடுக்க வருவதும் அவருக்கு கேமல் லேடி என்று பட்டம் வழங்குவதும்  அசத்தல்
=========
 படத்தின் டிரைலர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், பெருமாள்!

 

இதுவே நம்ம ஊராக இருந்தால்......மற்றக்கரையை அடையும் போது.... எத்தனை குழந்தைகளோடு சென்றிருப்பாள்? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1898542_240734622775491_360916819_o.jpg

 
-----
இதுவே  நம் ஆட்களிடம் இப்படி ஒரு பெண்மணி நடந்தே  பாலைவணத்தை 2736 கிலோ  மீட்டர் கடக்க போகின்றார் என்று நம்ம ஊர் பெரிசிடம் சொன்னால்....  அந்த பொண்ணுக்கு சூத்துக்கொழுப்பு என்று ஒரு வார்த்தையில்  முடிந்து விடுவார்கள்..ஹ
------

 

ஊர்ப் பெரிசுகள் மட்டுமல்ல,

இளைஞர்களாகிய நாமும்,  அப் பெண்ணுக்கு.... சூத்துக் கொழுப்பு, என்று தான் சொல்வோம். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.