Jump to content

அடி...ஆத்தி..நிசம்மாவா..??


Recommended Posts

 

அடி ஆத்தி நிஜமாத்தான். அட்ரா சக்கை அட்ரா சக்கை சக்கை சக்கை.....

கெலியிலிருந்து இஸ்டைலாக கூலிங்க் கிளாசுடன் இறங்குபவரை பார்த்தால் சாட்சாத் பிரிகேடியர். சக்கை சியாம் மாதிரியல்லவா இருக்கிறது?  :D  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படமாக்கலில் 'ரியலிசம்' இல்லையென்றாலும், பாடல் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாய் பிறந்த எவணொருவனும் இப்படியான அரவேக்காட்டுத்தனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

இது அபத்தத்தின் உச்சம்.

 

கல்விவியாபாரம் செய்யும் வேந்தர்மூவிஸ் உரிமையாளருக்கு, கலையில் -----  செய்ய ஒரு பிஞ்சின் மரணம் தேவைப்பட்டிருக்கு.

 

இவங்களெல்லாம் சோத்துக்குப்பதிலாக .....யைத் திங்கிறாங்களா?

 

எப்போதடா அந்தப்பையன் சீருடையில தென்பட்டான் உங்கள் கண்களுக்கு. சிங்களவன் கொன்றதுக்குக் நியாயம் கற்பிக்கிறார்கள் ஊடக ----.

Link to comment
Share on other sites

பாலச்சந்திரனை இராணுவ சீருடை அணிந்த போராளியாக சித்திகரித்து, இலங்கை இராணுவத்தின் படுகொலையை நியாயப்படுத்த முயல்கின்றனர் இங்கு. ஒரு போர்க்குற்றத்தினை மலினப்படுத்தி குற்றவாளிகளின் மொழியில் திரைப்படம் எடுக்கின்றனர்.

 

இச் சினிமாவுக்கு எதிராக அனைத்து தமிழ் மக்கள் பிரிவினரும் தம் கடுமையான கண்டனத்தினை பதிவு செய்ய வேண்டும். இப்படியான மலினமான சித்திகரிப்புகள் எதிர்காலத்தில் புதிய தலைமுறையினருக்கு தவறான புரிதல்களைக் கொடுத்து விடும்.

 

எம் கண்ணீரும், இரத்தமும், துயரமும் வெறும் வியாபாரப் பொருட்கள் அல்ல.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுத நினைத்ததை நிழலி எழுதி விட்டார்.சிங்களவன் செய்ததை நியாயப்படுத்த சிங்களவன் தேவையில்லை.இப்படியான கேணைகளே போதும். நம் தமிழர் போன்றவர்கள் இப்படியான படத்தையெல்லாம் எதிர்க்க மாட்டார்கள்.மாறாக ஒரு சிங்களவர் உருப்படியாக ஒரு படம் எடுத்தால் அதில் எங்கே பிழை பிடிக்கலாம் என்று காத்திருப்பார்கள்...இப்படியான படங்கள் எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் அவர்களுக்கு கவலை இல்லை உசுப்பேத்தல் மட்டும் இருந்தால் போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசங்களில் சில்வர் ஜூப்ளிதான் என்று படம் எடுக்கின்றார்களோ என்னவோ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலை மதிக்க முடியாத தியாகங்களை இரண்டு தரப்பு.. தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு.. கொச்சைப்படுத்திக் கொண்டு திரிகிறார்கள். இந்த இரு தரப்பினர் குறித்தும் மக்கள் மிக விழிப்போடு இருக்க வேண்டிய காலம் இது.!!!!!

 

1. முன்னாள் இயக்கம்.. இயக்க ஆட்கள்.. (ஒட்டுக்குழுக்களை சார்ந்தோரும்) என்று சொல்லிக் கொண்டு எமக்குள் உள்ள ஒரு குறூப்.

 

2. சினிமா உலகத்தினர். அது.. சிங்கள சினிமாவா இருக்கட்டும்.. மலையாளமா இருக்கட்டும்.. ஹிந்தியா இருக்கட்டும்.. தமிழாக இருக்கட்டும்...

 

தென்னிந்திய தமிழ் சினிமா உலகம்.. இன்னும் எமது போராட்டத்தை மக்களின் உணர்வுகளை சரியாக இனங்காணவும் இல்லை.. இனங்காட்டவும் அதுக்கு திராணி இல்லை.. என்பதை தான் இப்படம் இனங்காட்டுகிறது.

 

தமிழக சினிமா மோக மக்களிடம் மாயை உணர்ச்சிகளை கிளறிவிட்டு.. காசு பார்ப்பது எல்லாம் வரலாற்றுப் பதிவைச் செய்வதாகி விடாது.

 

இப்படத்துக்கு.. வை.கோ.. நெடுமாறன் ஐயா.. சீமான்.. போன்றவர்களிடம் ஆலோசனை பெறப்படுவதாக நக்கீரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. உண்மையில் ஆலோசனைகள் பெறப்படுகின்றனவா.. அல்லது அப்படிச் சொல்லி.. இந்தப் படத்தை புரமோட் பண்ணுகிறார்களா..???!

 

விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு இனத்தின் தேச விடுதலைக்காக போராடிய அமைப்பு. காந்தி தாத்தா தலைமையிலான.. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு நிகரான ஒன்று. ஏன் அதைவிட அதிக தியாகங்களை வழிகாட்டுதலை மக்களின் விடுதலைக்காக வழங்கிய ஒரு அமைப்பு.

 

அதனை.. எதிரியின்.. ஒரு போர்க்குற்ற நிகழ்வை மக்களுக்கு காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு... சினிமா.. ஹீரோ வில்லத்தனமாக.. சித்தரிப்பது.. போர்க்குற்றங்கள் தொடர்பிலான மதிப்பீட்டை தமிழ் சினிமா உலகம் இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்றே அடையாளப்படுத்துகிறது.

 

மேலும் தேசிய தலைவரை.. யாரும் பிரதியீடு செய்ய முடியாது. அது சினிமாவிலும் கூட. பிரபாகரன் துப்பாக்கி எடுத்து சும்மா.. சுட்டுக்கொண்டு திரிந்த மனிதர் அல்ல. ஒவ்வொரு ரவைக்கும்.. பாவனைக்கும்.. காரணம்.. கணக்குத் தேடும்.. ஒரு விடுதலை அமைப்பின் தலைவர்.  பாலச்சந்திரன் தேசிய தலைவரின் மகனாக இருந்த போதும்.. சாதாரண பள்ளி மாணவனாகவே இறக்கும் வரை வளர்ந்துள்ளார்... வளர்க்கப்பட்டுள்ளார்.

 

தென்னிந்திய சினிமா உலகத்தவர்களே. உங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.  ஆனால்.. தவறான தரவுகள் அடங்கிய படங்களை தயாரித்து சர்ச்சைகளையும்.. வாதப் பிரதிவாதங்களையும் வளர்த்துக் கொண்டிருப்பதிலும்.. தயவுசெய்து உங்களால் முடிந்தால்... திறமை இருந்தால்.. சனல் 4 போல் ஆவணங்களை வெளியிடுங்கள். உலகிற்கு தமிழ் மக்களின் நிஜமான உணர்வுகளை பிரதிபலித்து நில்லுங்கள். இனப்படுகொலையாளனை தண்டிக்கத்தக்க... நிஜமான உண்மைகளை திரையில் காட்டி.. உங்களை ஆற்றலையும்.. திறமையையும் உலகம்.. உதாரணமாக்கிக் கொள்ள.. அது எமது இன மக்களின் துன்பங்களை நீக்கி.. விடுதலைக்கு உதவ பக்க பலமாக இருங்கள்..!

 

வை.கோ.. நெடுமாறன்.. சீமான்.. இவர்களை மட்டுமல்ல.. வெளிநாடுகளில்.. எத்தனையோ ஆயிரம் ஈழத்தமிழர்கள்.. போர்க்களத்தில் வாழ்ந்த..நிஜ சாட்சியங்களாக உள்ளனர். அவர்களை அணுகுங்கள்.. அவர்களின் உணர்வுகளை.. சாட்சியங்களை பதிவு செய்யுங்கள். ஈழக் களத்தில் இருந்தான எத்தனையோ நிஜ காட்சிகள் பதிவுகள் உள்ளன. அவற்றை பெறுங்கள்... ஒருங்கிணையுங்கள்.. திரைக்கு மட்டுமல்ல.. உலகின் முன் ஒரு ஆதார ஆவணமாக்கிப் போடுங்கள். அது தான் இன்றைய தேவை. நாளைய சந்ததிக்கும் நிஜத்தை காட்ட உதவும்.

 

சும்மா டூப்பு..  டோப்பு மூலம்.. நிஜத்தை.. போலியாக்க உதவாதீர்கள்..! அதுவே ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.....

 

தென்னிந்திய சினிமா உலகத்தவர்களே. உங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.  ஆனால்.. தவறான தரவுகளை அடங்கிய படங்களை தயாரித்து சர்ச்சைகளையும்.. வாதப் பிரதிவாதங்களையும் வளர்த்துக் கொண்டிருப்பதிலும்.. தயவுசெய்து உங்களால் முடிந்தால்... திறமை இருந்தால்.. சனல் 4 போல் ஆவணங்களை வெளியிடுங்கள். உலகிற்கு தமிழ் மக்களின் நிஜமான உணர்வுகளை பிரதிபலித்து நில்லுங்கள். இனப்படுகொலையாளனை தண்டிக்கத்தக்க... நிஜமான உண்மைகளை திரையில் காட்டி.. உங்களை ஆற்றலையும்.. திறமையையும் உலகம்.. உதாரணமாக்கிக் கொள்ள.. அது எமது இன மக்களின் துன்பங்களை நீக்கி.. விடுதலைக்கு உதவ பக்க பலமாக இருங்கள்..!

 

வை.கோ.. நெடுமாறன்.. சீமான்.. இவர்களை மட்டுமல்ல.. வெளிநாடுகளில்.. எத்தனையோ ஆயிரம் ஈழத்தமிழர்கள்.. போர்க்களத்தில் வாழ்ந்த..நிஜ சாட்சியங்களாக உள்ளனர். அவர்களை அணுகுங்கள்.. அவர்களின் உணர்வுகளை.. சாட்சியங்களை பதிவு செய்யுங்கள். ஈழக் களத்தில் இருந்தான எத்தனையோ நிஜ காட்சிகள் பதிவுகள் உள்ளன. அவற்றை பெறுங்கள்... ஒருங்கிணையுங்கள்.. திரைக்கு மட்டுமல்ல.. உலகின் முன் ஒரு ஆதார ஆவணமாக்கிப் போடுங்கள். அது தான் இன்றைய தேவை. நாளைய சந்ததிக்கும் நிஜத்தை காட்ட உதவும்.

 

சும்மா டூப்பு..  டோப்பு மூலம்.. நிஜத்தை.. போலியாக்க உதவாதீர்கள்..! அதுவே ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்..! :icon_idea:

 

Good one. :icon_idea:

 

மேற்கண்ட காணொளியில் தொழில் நுட்பம் சார்த்த பார்வை பார்க்கத் தெரிந்த எனக்கும், அதன் பின்னால் உணர்வுபூர்வமான வரலாற்று உண்மையை நோக்க தவறிவிட்டேன். :(

கவனச் சிதறலுக்கு வருந்துகிறேன்.

 

Link to comment
Share on other sites

http://cinema.dinamani.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82/   போர்க்களத்தில் ஒரு பூ  

porkalathil-oru-poo-movie-300x200.jpgஈழத்தில் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவின் வாழ்க்கை படமாகிறது. ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற தலைப்பில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் கு.கணேசன். இவர் கர்நாடகாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.

பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியா நடிக்கிறார். இவர் இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் கதாப்பாத்திரமேற்று நடிக்கிறார். மற்றும் பிரபாகரன், சுமந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ராதா, ரேகா, ஸ்ரீலஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.கே.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக கே.சி.குருநாத் சல்சானி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள பார்த்திபன் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கலை துறையை கவனிக்க, சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.

படம் குறித்து இயக்குனர் கு.கணேசனிடம் கேட்டோம்

இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் குழந்தை பருவம் முதல் இளமைப் பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் படுகொலைவரை கதையாக்கப்பட்டிருகிறது. நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் கொண்ட படமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ’ உருவாகிறது. படத்தின் கதையோட்டத்திற்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இசைப்பிரியாவின் வாழ்க்கைக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது..” என்றார் கு.கணேசன்.

இந்தப் படத்திற்கு இசைப்பிரியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் என்பது இன்னுமொரு விஷயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இநத் கேப்பில "கத்தி"யை ரெம்ப கூர்மையா தான் தீட்டுறாங்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உள்ள எந்த உணர்வாளர்களாலும் ஈழப்போராட்டம் பற்றி படம் எடுக்க முடியாது ஏனெனில் அவர்கள் அதனை சினிமாவாக பார்க்கிறார்கள் எங்களின் உணர்வுகளை மதிப்பதைவிட அந்த சினிமாவினால் எப்படி பணம் சம்பாதிப்பது என்றுதான் பார்க்கின்றார்கள் இப்படி இருக்கும்போது எப்படி எமது உணர்வு பூர்வமான விடுதலைப் போராட்டத்தை சினிமாவில் சித்தரிப்பார்கள் நாமும் அவர்களிடம் எப்படி அதனை எதிர்பார்க்கமுடியும் 


இவர்களிடம் ஒரு வேண்டுகோள்: உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாது இருங்கள் சகோதரர்களே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.