Jump to content

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் பெருமளவிலான சிங்கள மீனவர்கள்! படங்கள்


Recommended Posts

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் பெருமளவிலான சிங்கள மீனவர்கள் தனியார் காணியில் வந்து தங்கி தடைசெய்யப்பட்ட தொழில்களைச் செய்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
 

singal_fishers_mulliativu.1.png

இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களில் இருந்து,

முன்னைய காலத்தில் தொழில் காலத்தின் போது ,அதிகார வர்க்கத்தின் ஆசியுடன்  சுமார் 72 மீனவர்கள் வரை இங்கு வந்து தொழில் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது 250 இற்கும் மேற்பட்ட மீனவக்குடும்பங்கள் வந்து தொழில் செய்கிறார்கள். தனியார் காணியில் தங்கியும் , கடலில் தடை செய்யப்பட்ட தொழில்களையும் இவர்கள் செய்வது கடும் கண்டனத்திற்குரியவை.
 

singal_fishers_mulliativu.2.png

அனுமதியின்றி இவ்வாறு அத்து மீறும் மீனவர்களை முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களம் தடுக்கமுடியவில்லையா என்கிற கேள்வி எழுகிறது. அத்துமீறி தங்கியுள்ள அம்மீனவர்கள் தொடர்பான விபரங்களை சென்ற வாரம் நான் நேரில் சென்று உறுதிப்படுத்தினேன் என்றார்.

 

http://www.pathivu.com/news/33980/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

தமிழ்மக்களின் நிலங்களை காத்தவர்களை அழிக்க பச்சை கொடிகாட்டி போலி அரசியல் செய்பவர்கள் எப்படி இதனை எல்லாம் தடுப்பார்கள்? அவர்களுக்கு தேவை அரசியல் பதவிகளும், பந்தாக்களுமே.. உறுப்படியாக எதனை செய்துள்ளனர்? வெளி நாட்டுதூதுவர்களுடன் தொடர்புகளை வைத்து இப்படியான, அத்துமீறி குடியேறுதல், இராணுவ நிலம் அபகரிப்பு தடுக்க முடியாதா?

Link to comment
Share on other sites

மற்றவர்களுக்கு உபதேசம் செய்கின்றவர்கள் செயலில் இறங்கலாமே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.