Jump to content

ஸ்காட்லாந்து ஏற்பாடு இலங்கைக்கு பொருந்துமா? - அமைச்சர் தேவானந்தா கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காட்லாந்து ஏற்பாடு இலங்கைக்கு பொருந்துமா? - அமைச்சர் தேவானந்தா கருத்து

நாட்டுக்கு நாடு பிரச்சினைகள் வேறுபட்டிருக்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் பிரிவினைக்கான கோஷம் ஒன்று தொடர்பில் இலங்கையில் கருத்துக் கோரப்பட்டால் மக்கள் அதனை நிராகரித்து விடுவார்கள் என்றே தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.

ஸ்காட்லாந்தில் ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அது போன்ற ஒரு ஏற்பாடு இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் பொருந்துமா என்று கேட்டதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு கூறினார்.

 

ஸ்காட்லாந்தில் காலம்காலமாக அங்குள்ள மக்களுக்கு படிப்படியாக அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு, அதன் இறுதியிலேயே இப்படியான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அமைச்சர், ஆனால் இலங்கையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய இலங்கை - இந்திய ஒப்பந்தம் போன்ற வாய்ப்புக்களை இலங்கை தமிழ் தலைவர்கள் தவறவிட்டுவிட்டதாகவும் கூறினார்.

 

BBC Tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கி தின்னு அரசியல் செய்யுறதுங்க எல்லாம் ஸ்காட்லாந்து அரசியல் பற்றி பேசவே தகுதியில்லை.

 

ஜனநாயகம் என்று பெயரை வைச்சுக் கொண்டு.. ஆயுதம் ஏந்திய படுகொலை அரசியல் செய்யும் இவர் முதலில் தன் கட்சிக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முன் வர வேண்டும். எத்தினை காலம் இவர் ஏக போக.. செயலாளர் நாயகமாக இருக்கிறார். எத்தினை தடவைகள் இவரின் கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

1.61 மில்லியன் வாக்குப் பெற்றும்.. இன்று தனது பதவிகளை ராஜனாமாச் செய்ய முன்வந்துள்ள ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் முதன்மை மந்திரி எங்க இதெங்க. இதெல்லாம்.. அரசியல் பேசுது. அதுவும் ஸ்காட்லாந்து அரசியல் பேசுது.

 

முதலில் சூளை மேட்டு படுகொலைக்கு பொறுப்பேற்று சரணடையிற வழியப் பார்க்கனும். வேலணை புதைகுழிகள் தொடர்பில் மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும்..!! :icon_idea:


ஜனநாயக நீரோட்டத்துக்க பாய்ச்சிட்டம்.. பதுங்கிட்டன்.. கலந்திட்டன் என்று சொல்லிக் கொண்டு செய்வது எல்லாம் சர்வாதிகார மனித உரிமை மீறல்.. ஆயுத அரசியல். முதல் இவர் அதனை கைவிட்டு விட்டு.. அரசியலில் இருந்தே விலகிச் செல்வதே சிறந்தது. எனியாவது செய்த குற்றங்களுக்கு தண்டையை அனுபவிக்கட்டும். குறைந்தது அதையாவது செய்யலாம். ஸ்காட்லாந்து அரசியல் பற்றி பேசி நேரத்தை வீணடிக்கிற காலத்துக்கு.! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்த பிக்குகள் இருக்கும் வரை.....
ஸ்ரீலங்காவில், ஸ்கொட்லாந்து வாக்கெடுப்புக்கு சாத்தியமில்லை.

கொஞ்சம் பின்னே... நோக்கி நகர்வோம்...
பண்டா -  சாஸ்திரி ஒப்பந்தம்.
0
0
0
0
திம்பு பேச்சுவார்த்தை.

 

30 வருட ஈழக் காற்று,
 

போராடி... நாம் மான்றோம்  என்ற பெருமை எனக்கு இன்றும் உள்ளது.
 

யாரும்... காட்டிக், கொடுத்திராவிட்டால்... இன்று நாம்,......
 

நெஞ்சை நிமிர்த்தி.....  எனக்கு, ஒரு நாடு, ஒரு தலைவன் இருக்கிறான் என்று.... சொல்லியிருப்பேன்.
 

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட டோங்கா பயலே நீ "இலங்கையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய இலங்கை - இந்திய ஒப்பந்தம் போன்ற வாய்ப்புக்களை இலங்கை தமிழ் தலைவர்கள் தவறவிட்டுவிட்டதாக" சொல்ர . ஒப்பந்தத்திலேயே தமிழன் என்ற பெயரை சேத்துக்கலை. இவங்கல்லாம் ஒப்பந்தம் போட்டு என்காளுக்கு உரிமையை எப்படி தருவாங்க?

Link to comment
Share on other sites

புத்த பிக்குகள் இருக்கும் வரை.....

ஸ்ரீலங்காவில், ஸ்கொட்லாந்து வாக்கெடுப்புக்கு சாத்தியமில்லை.

கொஞ்சம் பின்னே... நோக்கி நகர்வோம்...

பண்டா -  சாஸ்திரி ஒப்பந்தம்.

0

0

0

0

திம்பு பேச்சுவார்த்தை.

 

30 வருட ஈழக் காற்று,

 

போராடி... நாம் மான்றோம்  என்ற பெருமை எனக்கு இன்றும் உள்ளது.

 

யாரும்... காட்டிக், கொடுத்திராவிட்டால்... இன்று நாம்,......

 

நெஞ்சை நிமிர்த்தி.....  எனக்கு, ஒரு நாடு, ஒரு தலைவன் இருக்கிறான் என்று.... சொல்லியிருப்பேன்.

 

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

 

 

நீங்க எங்க மாண்டீங்க? தப்பி வெளிநாட்டுக்கெல்லோ ஒடி வந்தீங்க. அங்க அப்பாவி இளைஞர்கள் சாக வெளிநாட்டில இருந்து நீங்கள் பெருமை படுறீங்கள் :icon_idea: . ஒரு வேளை அங்க இருந்து போரடி இருந்தா நெஞ்சை நிமிர்த்தி சொல்லியிருக்கலாம்.  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எங்க மாண்டீங்க? தப்பி வெளிநாட்டுக்கெல்லோ ஒடி வந்தீங்க. அங்க அப்பாவி இளைஞர்கள் சாக வெளிநாட்டில இருந்து நீங்கள் பெருமை படுறீங்கள் :icon_idea: . ஒரு வேளை அங்க இருந்து போரடி இருந்தா நெஞ்சை நிமிர்த்தி சொல்லியிருக்கலாம்.  :(

 

 

நாங்க  தான் ஓடி வந்திட்டமில்ல...

முடிஞ்சுதில்ல..

 

அப்புறம் எதற்கு

இங்கு நடக்கும் தேர்தலில்

இன்னாளுக்கு  வாக்கு போடும்படி

தாயகத்தலைவர் அறிக்கை விடுகிறார்....?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் வைத்தால் நிச்சயம் இணைவுக்குத்தான் வெற்றி.

வடக்கில் 85% மேல் பிரிவையே ஆதரிப்பர்.

இன்னும் 20 வருடத்தில் வடக்கின் இனப்பரம்பலையும் மாற்றிய பின் - அங்கும் பிரிவுக்கு ஆதரவிராது.

இனவாதிகளின் திட்டம் இதுதான். அமைச்சருக்கும் இது தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.