Jump to content

சாட்சியங்களை புலம்பெயர் நாடுகளிலும் திரட்டுங்கள்! உள்நாட்டில் நெருக்கடிநிலையென்கிறார் சிவாஜிலிங்கம்!!


Recommended Posts

ஜ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியங்களை அளிக்காதவாறு அனைத்துத் தரப்பினருக்கு கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.விசாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் புலம் பெயர் மக்கள் மற்றும் தமிழகத்திலுள்ள தமிழீழ மக்கள் ஐ.நா விசாரணைக் குழுவிற்கான சாட்சியங்கள் திரட்டுவதற்கு முன்வர வேண்டும். இறுதி தருணம்வரைக் காத்திருக்காமல் பாதிக்கப்பட்ட அனைவரும் சாட்சியங்களைப் பதிவு செய்யது தேசியக் கடமையினை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழு விசாரணைகளை ஆரம்பித்து நடத்திக் கொண்டு இருக்கின்றது. அந்த விசாரணைக் குழுவிற்கான சாட்சியங்களை அனுப்ப வேண்டியதன் இறுதிநாள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதியாகும்.

ஆந்த விசாரணைக் குழுவிற்கு தமிழ், ஆங்கிலம் அல்லது சிங்கள மொழியில் எழுத்து மூலமாகவும், மின்னஞ்சன் மூலமாகவும், வேறு வழிகளிலும் கூட சாட்சியங்களை வழங்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இருந்து  சாட்சியங்களைத் திரட்டி அனுப்புவதற்கு பல்வேறு இடர்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. தொடர்ந்து மக்கள் அச்சுறுத்தப்படுவதனால் மிகவும் மெதுவாகத்தான் சாட்சியமளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த சாட்சியங்களை கொடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் உள்ள அமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையங்களை அமைத்து அங்கிருக்கக் கூடிய மக்களுடைய சாட்சியங்களை தொகுத்து பதிவு செய்ய வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.

சாட்சியங்கள் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையிலே பாதிக்கப்பட்டவர்களுடைய சாட்சியமாக இருக்கலாம், 1990 ஆம் ஆண்டு, அல்லது 1995 ஆம் ஆண்டாக இருந்தாலும் அந்த சாட்சியங்களை அவர்கள் நிச்சையமாக பரிசீலனைக்கு எடுப்பார்கள்.

இதைவிட விசேடமாக அவர்களுடைய காலக்கோடு இருக்கக் கூடிய 2002 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரையான அட்டூழிஙங்களால் பாதிக்கப்பட்ட சாட்சிகளும் இப்பொழுது பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து இருக்கின்றார்கள். அவர்களுடைய சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டாலே எமக்கு மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.

நாங்கள் அறிந்தவரையில் எக்காரணம் கொண்டும் சாட்சியங்கள் பதிவு செய்யயப்படுவதில் கால நீடிப்பு வழங்கப்படா மாட்டாது என்பதில் அந்த விசாணைக்குழு உறுதியாக இருக்கின்றது. எனவே காலம்தாழ்த்தாது விரைந்து செயற்பட வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார்.http://www.pathivu.com/news/33970/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.