Jump to content

வெற்றி விதிகள்


Recommended Posts

வாழ்க்கையின் ஒரு புறம் நீங்கள் நிற்கிறீர்கள். மறுபுறம் வெற்றி நிற்கிறது. இரண்டிற்கும் இடையே இடைவெளி. இடைவெளியை நிரப்பி வெற்றியை அடைய உறுதுணை புரிவது எது? தலைவிதியா? கடின உழைப்பா?
 
பெரும்பாலானோர் வெற்றி என்பது தலைவிதியையும், கடின உழைப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பார்த்தால் வெற்றி பெறபல தன்மைகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய பல தன்மைகள் என்னவென்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
 
ஆயிரம் மைல் தூரப் பயணம் கூட ஒற்றை, முதல் அடியுடன் தான் தொடங்கும் என்பதைப்போல முதல் அடியை எடுத்து வையுங்கள் உங்கள் வெற்றிக்காக….
பில்கேட்ஸும் கற்பனை சக்தியும்:
 
நிஜத்தில் உணர்ந்திடாத ஓர் அனுபவத்தை மனக்கண்ணால் காண்பதே கற்பனை. பில்கேட்ஸ், மிகப்பெரிய அளவில் சிந்திக்கவும், தான் அடைய வேண்டிய இலக்கை முன் கூட்டியே மனத்திரையில் காணவும் ‘கற்பனையின் சக்தி’ தான் உதவியது.
பள்ளிக்குப் போவதே கசப்பான விஷயமாக இருந்த கேட்ஸுக்கு ஒரு கணினியை கண்டது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய 13 வயதில் நண்பர்களுடன் இணைந்து ‘புரோக்ராமர்ஸ் குரூப்’ என்றகுழுவைத் தொடங்கினார். அதன்பிறகு ‘ஒவ்வொரு மேஜையிலும் கணினி. ஒவ்வொரு கணினியிலும் மைக்ரோசாஃப்ட்’ என்றலட்சியத்தை கற்பனை செய்து கொண்டார். அந்தப் பார்வையுடனே மைக்ரோசாஃப்ட்டைத் தொடங்கினார். இன்று அவரது லட்சியம் நிறைவேறி இருக்கிறது. இச்சாதனைக்குப் பின்னால் அபரிமிதமான கற்பனை சக்தியும், விடாமுயற்சியும் நிறைந்திருந்த கேட்ஸின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
 
உங்களது விருப்பம் எதில் என்பதை சீக்கிரமே கண்டுகொள்ளுங்கள். பிறகு தேவையான திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
மனக்கண்ணில் எதிர்காலத்தைக் காண கற்பனை சக்தியைப் பயன்படுத்துங்கள்.
இலக்குகளை அடையும்வரை கடுமையாக உழையுங்கள்.
ஒபாமாவும் சொற்களின் சக்தியும்:
 
உணர்வின் வெளிப்பாடு சொல். உங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதன் காரணமாக சொற்கள் சக்தி வாய்ந்தவையாகின்றன. உள்ளுணர்வை வெளிப்படுத்துவதில் சொற்களே முக்கிய பங்காற்றுகின்றன.
பராக் ஒபாமா பல்வேறு இணங்களைக் கொண்ட அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும், மகத்தான வெற்றி பெறவும் ‘சொற்களின் சக்தி’ முதன்மை வகித்தது எப்படி? 2009 ஜனவரி 20ல் அமெரிக்காவின் 44வது அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட ஒபாமா தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘நமக்குத் தேவை மாற்றம்’ என்றகோஷத்தை எழுப்பினார்.
 
அந்த சக்தி வாய்ந்த மந்திரச் சொல் தான் அமெரிக்க ஆப்பிரிக்கத் தலைவர் ஒருவரை முதன்முறையாக வெள்ளை மாளிகையில் குடியமர்த்தியது. ஒபாமாவிடம் இருந்து அன்பு, பலம், உறுதி என்று நேர்மறையான சொற்களே வந்தது. வெறுப்பு, பலவீனம், சந்தேகம் என்று எதிர்மறைசிந்தனை பேச்சில் தலைகாட்டவே இல்லை.
ஒபாமாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்,
மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த நேர்மறைசொற்களே உதவும்.
மனோபாவத்தை மட்டுமின்றி தலைவிதியையும் சொற்கள் நிர்ணயிப்பதால் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.
 
நீங்கள் பயன்படுத்தும் நேர்மறைச் சொற்கள் பிறருக்கு எழுச்சியூட்டுவதற்கும், உங்களது வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கவும் உதவும்.
ஏ.ஆர். ரஹ்மானும் தன்னம்பிக்கையின் சக்தியும்:
 
மனப்போராட்டத்திற்கும், சந்தேகக் கண்ணோட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இலக்கை நோக்கி ஆர்வத்துடன் பயணிக்க வழிவகுத்து, வாழ்க்கையின் அற்புதமான மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பதுடன் கனவுகள் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கும் சக்தி ‘தன்னம்பிக்கை’.
உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வர ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘தன்னம்பிக்கையின் சக்தி’ உறுதுணை புரிந்தது எப்படி? ஜனவரி 6, 1966ல் சென்னையில் ஒரு இசைக்குடும்பத்தில் திலீப் குமாராகப் பிறந்தார். 4 வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கினார். 9 வயதில் தந்தையை இழந்தார். 11 வயதில் குடும்பத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற நிர்பந்தத்துடன் கீ-போர்ட் வாசிப்பவராக இளையராஜாவிடம் இணைந்தார்.
 
சிறுவயதில் அதிக வெட்கத்தின் காரணமாக, தனிமையில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டே பாடி பார்த்த அவர் இன்று மக்களின் முன் ஒளிவீசும் விளக்குகளுக்கு மத்தியில் பாடுகின்றார். 2008ல் இரண்டு ஆஸ்கர் விருதுகளை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு பெற்றரஹ்மான் உலகப் புகழ் ‘மொஸார்ட் ஆப் மெட்ராஸ்’ன் பிரதிநிதியாக உள்ளார்
ரஹ்மானின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:
உங்களுக்கும் உங்களது இலக்குகளுக்கும் இடையில் இடையூறாக இருப்பது உங்களது அச்சமே. அதை ஊக்கத்துடன் எதிர்கொண்டு வெல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
 
உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
நீங்கள் இன்று எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. தன்னம்பிக்கை சக்தி உடனிருக்கும் பட்சத்தில் எந்த உயரத்தையும் எட்ட முடியும்.
குறிக்கோள் சக்தியும் ஸ்ரீதரனும்:
வாழ்வின் திசைக்கு ஓர் அர்த்தத்தைத் தருகிறஎழுத்துப்பூர்வ வாக்குமூலங்களே ‘குறிக்கோள்’. சாதனைக்கான பாதையில் இருந்து விலகாமல் கவனத்துடன் பயணிக்க உதவும் எழுத்துப் பூர்வமான குறிக்கோள் குறிப்பிட்ட கால எல்லை மற்றும் உங்கள் மனதின் ஆசையை விவரிக்கிறது. கொங்கண் ரயில்வே மற்றும் டெல்லி மெட்ரோ திட்டங்களின் மூலம் அறியப்பட்ட தொழில்நுட்ப அறிஞரான திரு. ஸ்ரீதரன் அவர்களுக்கு தனது இலக்குகள் அனைத்தையும் குறித்த காலத்தில் அடைய குறிக்கோளின் சக்தியே உதவியது.
 
1963ல் கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை 6 மாதங்களில் பழுது பார்த்துவிட வேண்டும் என்று இந்திய ரயில்வே துறையும், 3 மாதத்தில் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று ஸ்ரீதரனின் மேலதிகாரியும் கட்டளையிட்டிருந்தனர். பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஸ்ரீதரனோ வெறும் 46 நாட்களில் வேலையை முடித்துக் கொடுத்தார். 760 கி.மீட்டர் தூர கொங்கண் ரயில்வே திட்டம், 150க்கும் மேற்பட்ட பாலங்கள், 82 கி.மீட்டர் மலையைக் குடைந்து இருப்புப்பாதை அமைத்தல் போன்றதிட்டங்களில், இலக்குகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடித்துக் கொடுத்தவர். திட்டப் பணியில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை நாள்தோறும் ஆய்வுசெய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்த திரு. ஸ்ரீதரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்,
முன்னேற்றத்திற்கு உகந்த, தெளிவான, கால எல்லை வரையறுக்கப்பட்ட குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
 
சரியான இடைவெளிகளில் குறிக்கோளை ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.
குறிக்கோளை நோக்கிய பயணத்தில் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்வதுடன் உங்கள் குழுவையும் உற்சாகப்படுத்திக் கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங்கும் ஒருமுகப்படுத்துதலும்:
அலைபாய்கிற எண்ண ஓட்டங்களை ஓரிடத்தில் குவிய வைத்து, உங்களுடைய குறிக்கோளை அடைய செய்யும் சக்தி ஒருமுகப்படுத்துதல். நீங்கள் ஒரு விஷயத்தின் மீது முழுகவனத்தை போதுமான அளவிற்கு செலுத்தும்போது உங்களது செயல்திறன் மேம்படுவதுடன் குறிக்கோளையும் அடைய முடிகிறது. திரு. லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங் தனக்கு ஏற்பட்ட புற்றுநோயை எதிர்கொள்ளவும், உலகின் மிகப்பெரிய சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெறவும் ‘ஒருமுகப்படுத்துதலின் சக்தி’ வழிவகுத்தது.
 
1999 முதல் 2005 வரை தொடர்ந்து ஏழு முறை பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி வாகை சூடிய ஆம்ஸ்ட்ராங் புற்றுநோயில் இருந்து மீண்டுவந்தவர். 1996ல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இனி ஓராண்டிற்குமேல் உயிருடன் இருக்க வாய்ப்புகள் இல்லை என்றேமருத்துவர்கள் கூறினர். ஆனால் லேன்ஸோ, தனது நோயைப்பற்றி சிந்திப்பதைத் தவிர்த்துவிட்டு தான் ஈடுபட்டுவந்த விளையாட்டில் வெற்றிகளை குவிப்பது ஒன்றின் மீதே மனதை ஒருமுகப்படுத்தினார். இடையில் மருத்துவச் சிகிச்சையையும் மேற்கொண்ட லேன்ஸ் நோயில் இருந்து விடுபட்டு, ‘நானே வெற்றி பெறுவேன்’ என்று சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஆம்ஸ்ட்ராங்கின் வெற்றியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:
 
நீண்ட நெடிய பயணமான வெற்றியை எட்டுவதற்குப் பல தடைகளைக் கடக்க நேரிடும். அதற்கு தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, நம்பிக்கையை இழக்காமல் உற்சாகமாக பயணத்தைத் தொடர வேண்டும்.
உங்களுக்குத் தேவையானதில் மனதை ஒருமுகப்படுத்துங்கள்.
வெற்றியைத் தேர்வு செய்யுங்கள்; ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள்.
திருபாய் அம்பானியும் செயலின் சக்தியும்:
உங்கள் எண்ணங்களுக்குத் தொடர் முயற்சிகளின் மூலமாக நிஜத்தில் வடிவம் கொடுப்பதே செயல். செயல் என்பது உங்கள் குறிக்கோளை அடைவதற்குரிய பணியைச் செய்வதைக் குறிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு சொந்தக்காரராகத் திகழ்ந்த திருபாய் அம்பானிக்கு ‘செயலின் சக்தி’ அவரை குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்த்தியது.
கிராமத்து பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த அம்பானிக்கு, 25 ஆண்டுகளுக்குள் உலகின் கோடீஸ்வர தொழில் அதிபர்களுள் ஒருவராக வலம்வர வேண்டும் என்று எண்ணினார். பெரிதாக யோசி, மாறுபட்டு யோசி, வேகமாக யோசி, முன்னோக்கி யோசி, சிறந்தவற்றிற்கு குறி வை என்றகொள்கையை நடைமுறைப்படுத்திச் சாதித்தார். திருபாய் அம்பானியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
 
இலக்குகளை அடையவும், கனவு நனவாகவும் செயல்களே வழிவகுக்கும்.
ஒருவரது சிந்தனையும், செயலும் பெரிதாக இருக்க வேண்டும். அதுவே கனவுகள் நிறைவேறஉறுதுணை புரியும்.
இலக்குகளை அடைவதற்கு ஒரு சிறு செயலின் மூலம் தொடங்கினாலே போதும். அந்தச் சிறு செயலே எண்ணங்கள் நிறைவேறபாதை அமைத்துத் தரும்.

 

ஏழுமுறை விழு. எட்டாவதாக எழு என்றஜப்பானிய மொழிக்கு ஏற்ப இதுவரை தோல்வியே கண்டிருந்தாலும் இவர்களைப் போன்று சாதிக்க நாமும் அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றுவோம். நாளை உலகம் நமக்கானது.
 

http://thannambikkai.org/2012/11/03/15800/

 

527xNxd2_2021993g.jpg.pagespeed.ic.fPPCD

பொறியாளர் ஸ்ரீதரன் (வலது).

 

11_2017892g.jpg

டெல்லி மெட்ரோ புகழ் ஸ்ரீதரன் தலைமையில் அன்றைக்கு மேற்கொள்ளப்பட்ட பால மறுகட்டமைப்புப் பணி.

Link to comment
Share on other sites

வளர்ச்சிக்கு வழி

15.jpg

 
Author: தங்கவேலு மாரிமுத்து
 
 

வளர்ச்சி. இதற்கு மிக எளிமையான இலக்கணம் என்ன? அல்லது விளக்கம் என்ன?

 
மனிதன் என்பவன், நேற்றைய தினத்தைவிட இன்றைக்கு, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு, பல வகையிலும் ஏற்றம் கண்டிருக்க வேண்டும். அவனுடைய,
 
• பொருளாதார நிலை சற்றாவது உயர்ந்திருக்க வேண்டும்.
• உலக அறிவு கூடியிருக்க வேண்டும்.
• கல்வியறிவும் கூடியிருக்க வேண்டும்.
• பதவியிலும் ஏற்றம் இருக்க வேண்டும்.
• வீட்டில் வசதிகள் அதிகரித்திருக்க வேண்டும்.
• நகையோ, நிலமோ, பாங்க் பாலன்ஸோ கூடுதலாகி இருக்க வேண்டும்.
 
இவ்வளவு தான். (ம்… இதுவா, எளிமையான இலக்கணம்?)
 
வாழ்க்கையில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள், அவரவர்க்கு என்று ஏதாவது ஒரு ரூட்டைப் பிடித்து வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். தங்களுக்கென்று சில கொள்கைகளை, சில திட்டங்களை, சில யுக்திகளை, சில வழிகளை வைத்திருப்பார்கள்.
 
அப்படி ஒரு நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். எப்போதும் தன்னம்பிக்கை நூல்களையும், சுயமுன்னேற்ற நூல்களையும், சாதனையாளர்களின் சரித்திரத்தையும் படித்துக் கொண்டேயிருப்பார் (என்னைப் போலவே). மிகவும் சுவாரஸ்யமான மனிதர் (என்னைப் போலவே).
 
வெற்றிப் படிகளில் வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறவர். சாதனை ஏணியில் சரசரவென்று ஏறிக் கொண்டிருப்பவர். வெற்றிக்கான, வளர்ச்சிக்கான தன்னுடைய கொள்கைகளையும், வழிகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
 
அதைத்தான் நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
 
சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லிவிடுகிறேன்.
 
1.   ஒவ்வொரு நாளும் இரவு, அடுத்த நாளுக்கான முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்கிறார்.
 
2.   ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவு, அடுத்த வாரத்திற்கான முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்கிறார்.
 
3.   ஒவ்வொரு மாதமும் 31ம் தேதி அல்லது 30ம் தேதி இரவு, அடுத்த மாதத்திற்கான முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்கிறார்.
 
4.   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசியில், அடுத்த ஆண்டிற்கான முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்கிறார்.
 
இப்படி முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்வதோடு நின்றுவிடுவதில்லை.
 
அந்த முக்கிய வேலைகளிலும் லட்சியம் நோக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்.
 
அந்த வேலைகளை தெளிவாய்த் திட்டமிட்டு செய்து முடிக்கிறார்.
எண்ணிய வேலைகளில் எத்தனை வேலைகளை செய்யாமல் விட்டோம். எதனால் செய்யாமல் விட்டோம் என்று பிறகு ஆய்வு செய்கிறார்.
அப்படி செய்யாமல் விட்ட வேலைகளை, மீண்டும் முயன்று முடிக்கிறார்.
இப்படி சில பழக்கங்களை வைத்திருக்கும் இவர், இப்படி சில வழிகளைப் பின்பற்றும் இவர்… எப்படி வளராமல் இருப்பார்? எப்படி முன்னேறாமல் இருப்பார்?
 
எனக்குப் புரிந்தது. உங்களுக்கு?
 
Link to comment
Share on other sites

பொய் கடிகாரம்
 
399.jpg
 
Author: அனந்தகுமார் இரா
 
 
 
‘பஞ்சுவாலிட்டி’’ என்னும் சரியான நேரத்திற்கு போவதை தவறென்று சொல்ல வரவில்லை. பரபரப்பான உலகில் கடிகாரங்கள் காட்டும் எல்லா காரியங்களையும் செய்ய எல்லோராலும் முடியாது. தேர்வு எழுதும் முன்பு, எந்த தேர்வு எழுதுவது என்று ‘தேர்வு’ செய்ய வேண்டி இருக்கின்றது.
 
சிறப்பாக வேலை செய்துவிட்டோம், என்று சந்தோஷப்படுவது தவறு… என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? … இது பொருந்துவது எப்பொழுது எனில், அது செய்தே இருக்க வேண்டியில்லாத வேலை என்று தெரிய வந்தால்…
 
கடிகாரங்கள் வீசுகின்ற கயிற்றில் நாம் கட்டுண்டு விட வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு நான்கு வரிகளில் கடிதம் எழுதி தகவல் தொடர்பு கொண்டு சரியான காரியங்களை நிதானமாக இரசித்து – ருசித்து செய்து மகிழலாம்.
 
நாள்காட்டியைப் பார்ப்பது இரண்டாம் தலைமுறை திட்டமிடல், திசைகாட்டியைப் பார்ப்பது மூன்றாம் தலைமுறை திட்டமிடல், (கடிகாரம்) முதல் என்று ஸ்டீவன்கோவே (Steven covey) அவரது புத்தகத்தில் சொல்லியிருக்கின்றார்.
 
தத்துவ ஞானிகள் கடிகாரமின்றி வாழ்வதாக சொல்கின்றனர். வாரென் பஃப்பெட், டெல்லி மெட்ரோ ஸ்ரீதரன் போன்றோர் மாலை வேளையில் குறித்த நேரத்தில் வீடு செல்ல முடிகின்றது. குறித்த நேரத்தில் காரியம் செய்வதற்கும் கடிகாரத்திற்கும் நேரடி தொடர்பில்லை. அதையே பார்த்தால், காரியம் சிதறிவிடாதா?
 
நண்பர் ஒருவரது அறையில் கடிகாரம் இருபது நிமிடம் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. பதறி அடித்துக் கொண்டு எழுந்தால், பக்குவமாக ஆசுவாசப்படுத்தினார்!!  பொய்? கடிகாரம். சில நேரங்களில் இவை போன்ற கடிகாரங்கள், நன்கு, தயாரித்துக் கொண்டு மன அமைதியோடு, விமானநிலையம், இரயில், பேருந்து உயர்நிலை கூட்டங்கள், அத்தியாவசிய சந்திப்புகள் முதலானவற்றில் திறம்பட பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தி தருகின்றது.
 
அடுத்து தென்கொரியாவிற்கு போகலாம் வாருங்கள், தென்கொரியா ஒரு அழகான நாடு. சமீபத்தில் அங்கு பயிற்சிக்காக சென்று இருந்தோம். கொரியர்களது நாணயம் வோன் (Won) என்பதாகும். ஒரு ரூபாய்க்கு இருபத்தைந்து வோன்கள் (Won) என்று பரிமாற்ற மதிப்பு, எதையெடுத்தாலும் ஆயிரக்கணக்கில் விலைபேசி கொரியர்கள் அசத்தினார்கள். தங்கியிருந்த விடுதியில் சாதாரணமாக ஒரு ஆடையை துவைக்க மூவாயிரம் வோன்கள், நம்மூரில் புதிதாகவே வாங்கிவிடலாம்.
 
சாப்பாட்டிற்கு ஒரு வேளை இருபதினாயிரம் வோன் என்று எகிறினாலும் இந்திய ரூபாய்களில் கணக்கிட்டு அல்லது  இன்னும் பிரமிப்பு குறையாமலேயே — இருந்தால் டாலர்களில் பேசி, சமாளிக்க வேண்டி வந்தது… எல்லாம்… நேரம் தான்… பொய் கடிகாரம் காட்டுகின்ற நேரம்…
 
தென் கொரியாவில் இரயில் முதல், அதில் பயணம் செய்யும் பயணிகள் வரை எல்லாருமே வேகமாக இயங்குகின்றார்கள். முதலாளித்துவ உச்சியிலிருக்கின்ற தென் கொரியாவில் தொழிற்சாலைகள் நிரம்பி வழிகின்றது. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் கடும் பஞ்சத்தால் உணவுக்கே அமெரிக்க உதவியை நம்பி இருந்தவர்கள் ஏற்றுமதி செய்த முதல் பொருள் சவுரி முடியாம்!
 
அனைத்து கொரியர்களும், இந்நாட்டுப் பெண்களின் நீண்ட கூந்தல் தியாக வரலாற்றை, அடிக்கடி நினைவூட்டினர். முன்பு நீண்ட கூந்தலை கண்ணீரோடு வெட்டி அனுப்பியதாலோ என்னவோ … தற்பொழுது கிராப்புத் தலையோடுதான் நிறையப்பேர் இருக்கின்றனர்.
 
உலக பொருளாதார சிக்கலின்பொழுது கொரிய மகளிரின் தியாக உணர்வு மீண்டும் வெளிப்பட்டதாம்.  கடந்த 1997ல் பொருளாதார வீழ்ச்சியின் பொழுது ஆசியப் புலிகள் என்றழைக்கப்பட்ட கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் பண மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. பணம் வீழ்ந்ததால் தங்கம் வைரம் போன்ற விலைமதிப்புள்ள பொருட்கள் நாட்டை தாங்கிப் பிடிக்க அவசியப்பட்டது. அதனால் கொரிய நாடு மகளிரிடம், அதாவது தன் தாய்க்குலத்திடம் கையேந்தியது. தாகம் தீர்க்கக் கோரியது.
 
எங்களுக்கு ஒரு வீடியோ காட்சியைக் காட்டினார்கள் …. நம்பமுடியாத காட்சி.   பெண்கள் சாரை சாரையாக வரிசையாக வந்து தங்கள் கைகளில், கழுத்தில், காதில், மூக்கில் இருந்த எல்லா விலைமதிப்புள்ள ஆபரணங்களையும் ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் கொட்டிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு எந்தவித ஏற்பு சான்றிதழும் கொடுக்கப்படவில்லையாம். நிலைமை அப்படி, பெண்கள் கையில் கிடைத்ததை, கையில் இருந்தததை, கைக்கு வந்ததை என எல்லா தங்கத்தையும் அள்ளித் தந்தனர். மொத்தமாக உருக்கி ஒன்பது டன் வந்ததாம். அந்த காலக்கட்டத்தில் மெல்லிய சர்வாதிகாரம் கோலோச்சியது என்று சலசலப்பும், முணுமுணுப்பும் வரலாற்று பக்கங்களில் இருப்தென்னவோ உண்மையே.
 
கொரியாவின் அசுரவேக வளர்ச்சி குறித்து, மனதில் தோன்றிய கேள்விக் குறிகள் எல்லாம் தென்கொரிய வரலாற்று நிகழ்வுகளை கேள்விப்பட்டதும், ஆச்சரியக் குறிகளாக தென்கொரிய மக்களின் உழைப்புச் சம்மட்டியால் அடிபட்டு நிமிர்ந்தன என்றே சொல்லலாம்.
 
சூரியன் இங்கே காலை ஐந்து மணிக்கு தோன்றுகின்றது. இரவு ஏழரை மணி வரை வெளிச்சமாகவே இருக்கின்றது. (ஜீன் மாதம்) ஆனாலும் உக்கிரமாக நேரடித் தாக்குதல் கதிரவன் நடத்துவதில்லை.  நில நடுக்கோட்டுக்கும் கடக ரேகைக்கும் மேலே வடதுருவம் அருகே இருப்பதால் இப்படி.
 
ஆனால், மக்களும் சூரியனோடே எழுந்து விடுகின்றார்கள் போல, கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேருக்கு மேலிருக்கும் சியோலில் குதிங்கால் செருப்போடு வேகநடை போட்டு, காத்திருக்கின்ற வாகனங்களில் ஓடிசென்று ஏறுவதை பார்க்க முடிகின்றது. சப்-வே (Subway) எனப்படும் நிலத்தடி சுரங்க இரயில்களில் அவசர அவசரமாக பயணிகள் பரபரக்கின்றனர்-பர-பற-க்கின்றனர்.
 
சமீபத்தில் பரபரப்பான PRISM டெக்னாலஜி என்கின்ற சொல்லின் ழுமு அர்த்தமும் சியோல் நகரில் புரிகின்றது. PRISM என்பது அமெரிக்கா உளவு பார்க்க இணையதளத்தை பயன்படுத்தியது குறித்தது. கொரியாவில் மக்கள் இணைய தளத்தில்தான் மூச்சு விடுகிறார்கள் என தோன்றுகிறது. பெரும்பாலோனோர் பெரும்பாலான நேரம் கரங்களில் தவழும் செல்லிடத் தொலைபேசியையே உற்று பார்த்துக்கொண்டு பொம்மைகள் போல நகர்கின்றனர்.
 
நகரின் நடுவே ஓடிக்கொண்டிருந்த கழிவு நீரோடையாக அசுத்தமாகிப்போன, பின்பு பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்ட பளிங்கு நீரோடை ஒன்றை காட்டினார்கள். அள்ளிக் குடிக்கலாம் போன்ற நீரில் மீன்கள் துள்ளி, விளையாடிக்கொண்டு இருந்தன.
 
ஒரு கால கட்டத்தில் இக்கழிவு நீர்ப் பாதையை மூடி  அதன் மீது சிமென்ட் சாலை அமைத்துவிட்டனராம். அதன் பின்னர் கழிவு நீர்ப்பாதைகளை தனித்துப் பிரித்து இதனை சாதித்து இருக்கின்றனர். தென் கொரியாவில் ஓடுகின்ற சந்தோசத்தோடு நதி சலசலப்பதாக தோன்றியது. புகைப்படங்கள் நிறைய நிறைய எடுத்து மனதை நிறைத்துக் கொண்டோம். இரண்டு வருடங்கள் வேலை நடந்ததாம்.  வந்தவுடன் கண்ட மாற்றங்கள் நிறைய அதில் ஒன்று, முதலாவது தேதியை அவர்கள் வருடத்தில் மாதம் வழியாக நாளில் முடிக்கின்றனர். எனவே தொலை நோக்கும் பார்வை இருப்பதாக தோன்றியது. எப்போதோ நடக்கப்போகின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடலடி தூர்த்து இரயில் பாதைகள் அமைத்து கட்டிடங்கள் விளையாட்டு மைதானங்களை அமைத்து சுறுசுறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றது இஞ்சியான் நகர்புறம். அங்கேதான் விமான நிலையத்தில் வந்து இறங்கினோம். நுழைவுப் பட்டியல் நிரப்புகையில் தேதி குறிப்பிடுகையில் சுதாதேவியும் கூட  தேதியை தவறாக நிரப்பி அடித்துவிட்டு சரியாக தலைகீழாக திருப்பி எழுதினோம்! இதர விஷயங்களை திருப்புவதும் இவ்வளவு எளிதாக இருந்தால் எப்படி இருக்கு!
 
இப்போது குடியரசு தலைவியாக இருக்கும் சீமாட்டி பார்க் அம்மையாரின் தந்தையார் முக்கியமான கட்டத்தில் தென் கொரியாவின் குடியரசு தலைவராக மிக நீண்டகாலம் இருந்து வளர்ச்சிப்பாதையில் அழைத்து வந்திருக்கின்றார்.
 
சேமால் டுங் என்பது 1970களில் தொடங்கப்பட்ட கிராம வளர்ச்சி திட்டம். அது துளிர்விட்ட கிராமத்தை சென்று பார்த்தோம். அங்கே ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்கு சாலை அமைத்ததோடு மட்டும் அன்று தேவைப்பட்டவர்களுக்கு வீட்டின் கூரையையும் சரி செய்து கொடுத்துக் கொண்டார்களாம். ‘பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கின்ற பாசம்’ என்று வைரமுத்து கவியரசரின் வரிகள் மின்னியது.
 
சப்-வே (Subway) என்னும் நிலத்தடி இரயில்கள் செல்லும் வழிகளில் சியோல் நகரை குறுக்கும் நெடுக்குமாக இணைத்து வினாடிய பொழுதில் மக்களை வேண்டுமிடம் சேர்க்கின்றன. இயந்திரம் பொத்தானை அழுத்தினால் பயணச்சீட்டை தருகின்றது. உள்ளே நுழைய இயந்திர தடுப்புகளை பயண சீட்டால் உரசி செல்ல வேண்டும். பின்னர் சேருமிடத்திலிருந்து வெளியே வருகையிலும் அதுவே, அதன்பின்னர் பயணசீட்டை திருப்பி ஒப்படைக்க ஒரு இயந்திரம். ஐநூறு வோன்கள் அது திரும்ப தருகின்றது. ஆறு பேர் பயணிக்க டிக்கெட் எடுக்க, பயணம் இனிதே முடிந்தது.
 
இட்டேவான் என்ற இடத்தில் திருநெல்வேலி தமிழர் ஒருவர் (அலெக்ஸ்) முன்னின்று நடத்தும் அசோகா விடுதியில் இந்திய உணவை உண்டனர். திரும்ப வந்தால் எல்லார் டிக்கெட்டும் சரியாக இருக்க, கதிர் என்கிற நண்பர் உள்ளே மாட்டிக்கொண்டார். ஒன்றரை அடி கண்ணாடி தடுப்புதான் வெளியே ஐவரும் உள்ளே நண்பரும் கடுமையாக யோசித்துக்கொண்டே தவித்தனர். அரையடி என தாண்டிவிட முடியாதே!  காமிராவில் பிடிபட்டு, போலீஸில் என்ன சொல்வது? பக்கத்து ஸ்டேஷன் வரை போய் வா?  என்று டிக்கேட் எடுக்கலாம் என ஒருத்தர் ஐடியா (Idea). மணி இரவு பத்துக்கும் பக்கம். தனியாக எப்படி ? தவறு எப்படி என பார்ப்போம்? திரும்பி கொடுத்த போது மொத்தமாக பழையதிற்கு பதில் புது டிக்கெட்டை போட்டிருக்கலாம் ? அல்லது உரசி பீப் (Beep) சத்தம் வந்த உடன் தடுப்பை தள்ளி வெளியே வரவேண்டும். கதிர் வெளியே வர டோங்குக் பல்கலைகழக டிக்கெட்டை ( அது தான் விடுதி பக்கம்) அங்கேயிருந்தே எடுத்தனர். அதாவது மாம்பலம் டிக்கெட்டை மாம்பலத்திலேயே எடுக்கிற மாதிரி. கம்ப்யூட்டர் இடைப்போடு தந்தது. பெருமூச்சு விட்டனர். இப்போது சிங்கம் அதை வாங்கி உரச… கம்பி காப்பாளன்… ‘எர்ரர்’’(error) தவறு என சிவப்பாய் காட்டினான். எல்லோரும் ‘டென்ஷன்’ (Tension) ஆனோம், மன்னிக்கவும் ஆனார்கள்.
 
பத்துக்கும் மேற்பட்ட தவறுகளில் இப்பொழுது சொன்ன தவறை கண்டால்… இந்த சீட்டுக்காரர் உள்ளே வரவில்லையே என கணினி கேள்வி கேட்டது. இதற்காக இனி என்ன செய்வது என யோசித்ததில் சீனி என்கிற நண்பர் அருமையாக யோசனை சொன்னார்… உரசி உள்ளே போவது போல கைகளில் தள்ளிவிட்டு பிறகு சற்று நேரம் கழித்து உள்ளேயிலிருந்து உரசி கதிர் வெளியே வரலாம் என்று…
 
அதுவே நடந்தது… இயந்திரங்கள் வாழ்வை எளிமையாக்கிடிலும் மனித மூளையை இன்னும் விஞ்சிவிடவில்லை என தோன்றியது. கவனமாக வெளிநாடுகளில் பயணிக்க வேண்டி உள்ளது. தனியாக செல்வது சுதந்திர சௌகர்யம் எனினும் நண்பர்களோடு செல்கையில் அனுபவமும், அறிவும் அமைதியாக அதிகரிக்கின்றது. பாதுகாப்புணர்வும் கூடவே கூடுகின்றது.
 
இன்னும் கிம்சியை பற்றி பேசவில்லை… ஹங்குல் எனப்படும் கொரிய மொழியைப்பற்றியும் அதை அறிவாளிகள் காலையில் தொடங்கி முடிப்பதையும் அல்லாதோர் இரவுக்குள் கற்று முடிப்பதையும் குறித்து கூறவேண்டி உள்ளது.
 
கிம்சி என்பது முட்டைகோஸ் இதழ்களில் பதப்படுத்தப்பட்ட மீன் துகளை தூவி வெட்டி தயாரிக்கப்படும் ஒரு உணவு வகையாகும். மீன்கள், நண்டுகள், பாம்பு, ஆக்டோபஸ் என பல சுவையான உணவு வகைகள் இருந்தாலும், கிம்சி கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட வகைகளில் தென்கொரிய சாப்பாட்டு மேஜைகளில் இடம் பிடித்திருக்கின்றது.
 
இதில் புரோ- பயாடிக் (Foor-biotic) எனப்படும் நம்மூர் தயிர் வகையில் உள்ள லாக்டோ பேசில்லஸ் (Lacto-bacislls) நன்மை விளைவிக்கும் பாக்டீரியங்கள் நிறைய உள்ளனவாம். கொரியர்களில் பெரும்பான்மையானோர் தொப்பை இன்றி வலிமை நிறைந்தவர்களாக காணப்பட்டதற்கு காரணங்கள் வினவுகையில் வியப்பான விஷயங்கள் வெளிவந்தன. மங்கோலிய இனப்பெண்கள் கண்கள் பெரியதாக இருப்பதே அழகு என்று ‘இரட்டை இமைகள்’ (Double eye lid) வேண்டி, அதற்காக மேலிமை மீது இருக்கும் தோலில் சிறு அறுவை சிகிச்சை வெட்டுத் தையல் போட்டு அழகை அதிகரிக்க விரும்பும் அதிசயம் குறித்து திருமதி கிம் என்கின்ற தூதராக பெண்மணி கூறுகையில் அவர் கண்களையே உற்றுப் பார்த்ததில்… தான் அந்த சிகிச்சை செய்யவில்லை என சிரித்தார்… இதை தெரிந்ததும் இனி நீங்களும் கண்களை உற்றுப் பார்பீர்களோ?
 
தென் கொரிய பொருளதாரத்தில் ‘சபோக்கள்’ எனப்படும் மிகப்பெரிய குழுமங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு கொள்கை முடிவுகளில் அவற்றின் விருப்பங்கள் பிரதிபலிக்கக்கூடிய வாய்ப்பினை முற்றிலுமாக மறுப்பதற்கில்லை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஹூண்டாய் என்று நாம் சொல்கின்ற வாகன நிறுவனத்தை கொரிய மொழியில் ‘ஹண்ட்’ என்று சொல்வதில் தொடங்கியது சபோல்களின் விஸ்வரூபம்.
 
Link to comment
Share on other sites

முன்னோக்கிச் செல்லுங்கள்

 

னம்பிக்கை உள்ளவன் பார்வை முன்னோக்கியே இருக்கும். அவன் வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கியே நடத்துவான். முன்னோக்கிச் செல்வது என்பதே அவனது வாழ்விற்கு அவன் அமைத்துக்கொண்ட சட்டமாகவும் இருக்கும். அதுவே அவனது இலட்சியம்.

முன்னோக்கிய பார்வை தேவை
குதிரைகளுக்கு மட்டும் “சீனி” என்ற முன்னோக்கிப் பார்க்கும் கண்ணாடி போடுகிறோமே ஏன்? மாடுகள் போல குதிரைகள் மெதுவாகச் செல்லக்கூடியவை அல்ல; வேகமாகச் செல்ல வேண்டியவை. சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே போனால் அதன் வேகம் தடைப்பட்டுப் போய்விடும். முன்னோக்கிப் பார்ப்பதற்கு மட்டுமே அவை பழக்கப்பட்டிருக்கின்றன. அப்பொழுது தான் அதன் வேகம் அதிகமாகும். செல்ல வேண்டிய இடத்தைச் சீக்கிரம் சென்று அடையமுடியும்.
நமது வாழ்க்கையையும் நாம் முன்னோக்கியதாக அமைத்துக் கொள்ளவேண்டும். வளர்ச்சிக்கு அதுதான் வழி. கவனத்தைச் சிதறவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந் தால், ஆங்காங்கே நின்று நின்று போனால் நாம் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச்சேர முடியாது.
நிகழ்காலமே உயிருள்ள காலம்
அதேபோல வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்துக்கொண்டே இருப்பதிலும் பயனில்லை. வாழ்வில் நடந்ததற்காகவும் கடந்ததற்காகவும் வருந்திக் கொண்டிருப்பதும் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாகும்.
தன்னம்பிக்கை உடையவன் ஒருகாலும் கடந்த காலக் குறைபாடுகளை எண்ணி மறுகிக் கொண்டிருக்கமாட்டான். கடந்தது இனி மீளாது என்பது அவனுக்குத் தெரியும். அதனால், நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்று ஒரு முடிவுக்கு வருவான். நடந்த தவறுகளிலிருந்து விடுபட முயல்வான். அவற்றிற்கு ஒரு முற்றிப்புள்ளி வைப்பான். முன்னோக்கிச் செல்வதில் நாட்டங்கொள்வான்.
நடந்தது வாழ்க்கையின் கடந்தகால வரலாறே தவிர # உயிருள்ளவை நிகழ்காலம்தான். நிகழ்காலச் சாதனைகளே வெற்றி நிறைந்த வரலாற்றை உருவாக்கும்.
மகிழ்ச்சியானவற்றை நினைவு கூருங்கள்
முன்னோக்கிச் செல்வதற்கு முன்னர் வந்த பாதைகளை # அனுபவங்களை வருங்கால வளர்ச்சிக்கு உதவியாக எடுத்துக்கொள்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். உற்சாகமான செயல்பாடுகளாக இருந்தால் சிறிது நேரம் அசைபோட்டுப் பார்க்கலாம், அவ்வளவுதான். கடந்தகால நிகழ்ச்சிகளே வாழ்க்கை ஆகிவிடாது.
பழம்பெருமைகளைப் பேசாதீர்கள்
இன்றும் நாம் நடைமுறையில் காணலாம், பின்னோக்கிச் செல்பவர்கள் பழம் பெருமைகளையே பேசிக் கொண்டிருப் பார்கள். பழம் பெருமை யாருக்கு வேண்டும்? உங்கள் தாத்தாவும் தந்தையும் செய்தவை உங்கள் சாதனைகள் ஆகிவிடுமா?
நான் இளமையில் அப்படி இருந்தேன், வாலிபத்தில் இதை இதைச் செய்தேன், வயதில் இப்படி இருந்தேன் என்று ஒரு பெரியவர் சொல்வாரானால் அதற்கு என்ன பொருள்? அவரால் இப்போது எதுவும் முடியவில்லை என்பதுதானே பொருள். இவர்கள் உயிரோடு இருக்கும்போதே இறந்து போனவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆற்று நீர் போல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்
அன்றியும் பழம்பெருமை பேசுபவர்கள், வாழ்க்கையைப் பின்னோக்கி மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் நிகழ்காலத்தில் வாழவில்லை. ஏதோ இருக்கிறார்கள் என்று பொருள். இனி நாம் எதுவும் செய்ய இயலாது என்ற தன்னம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்பது பொருள்.
இத்தகையவர்களை நீங்கள் சந்தித்தே இருப்பீர்கள். அவர்களை உங்கள் மனம் விரும்புகிறதா? என்று பாருங்கள். நிச்சயமாக இல்லை. அத்தகையவர்களை நீங்கள் வெறுக்கவே செய்கிறீர்கள். அவர்கள் நட்பை ஒதுக்கவே செய்கிறீர்கள்.
பழம்பெருமை பேசுகின்றயாருக்கும் இதே நிலைதான் ஏற்படும். நாமும் இந்தத் தவற்றினைச் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை உள்ளவன் ஆற்றுநீர் போல ஓடிக்கொண்டே இருப்பான். அவன் ஒருபோதும் குட்டைபோலத் தேங்குவதே இல்லை. வாழ்க்கை தேங்கினால் வளர்ச்சி முடிந்து விட்டது என்று பொருள்.
சிலர் கை குலுக்குவதைப் பாருங்கள்
ஒருவரை ஒருவர் கை குலுக்குவதைப் பாருங்கள். கையை யார் முன்னோக்கி நீட்டுகிறார்களோ அவர்களைத்தான் கைகுலுக்கி வரவேற்கிறார்கள். கையை பின்னால் கட்டிக்கொண்டு நிற்பவர்களுக்கு? அவர்கள் தோற்றமே நமக்கு எதைப் புலப்படுத்துகிறது? இவர் கை குலுக்குவதற்குத் தயாராக இல்லை, விரும்பவும் இல்லை என்பதுதானே பொருள்? அதனால்தானே கைகுலுக்கி வரவேற்கின்றஇடத்தில்கூட இவர் ஜோப்பில் கை விட்டுக் கொண்டிருக்கிறார்.
இத்தகையவர்கள்தாம் பின்னோக்கிச் செல்பவர்கள். இவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் இவர்களது நட்பு நமக்குத் தேவையானது அல்ல.
கைகுலுக்கலில் ஓர் ஆற்றல் பிறக்கிறது
கை குலுக்குவதில்கூட கவனித்துப் பாருங்கள். 60ம் 70ம் கடந்தவர்கள் கூட ஏனோ தானோ? என்று இல்லாமல் குலுக்கவேண்டியவர் கையைக் கெட்டியாகப் பிடித்துக் குலுக்குவார்கள். இரும்புப் பிடிபோல் ஓர் பிடிப்பு இருக்கும். அந்தக் கை குலுக்கலில் ஓர் ஆர்வம், ஓர் உற்சாகம், ஒருவேகம் பிறக்கும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக சுறுசுறுப்பாக இருக்கக் கற்றுக்கொள்; இப்படி சோம்பல் முறித்துகொண்டு இருக்காதே என்பது அந்தக் கை குலுக்கல் நமக்கு குற்றுக் கொடுக்கின்றபாடம்.
மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்குங்கள்
தன்னம்பிக்கை உள்ளவன்தான் கைகளை நீட்டுகிறான். வாய்ப்பை எதிர்நோக்கிச் செல்கிறான். கை குலுக்கல் கிடைக்கின்றது. மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறான். பிறர் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறான். தன் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக ஆக்கிக்கொள்கிறான். மகிழ்ச்சி ஆற்றலைப் பெருக்குகிறது. அவன் படிப்படியாக முன்னேறுகிறான்.
கைகளை நீட்டுங்கள்
முன்னோக்கிச் செல்வதுதான் தன்னம்பிக்கை, எழுந்திருந்தால்தான் விடியல். எழுந்து எழுந்து படுத்துக் கொண்டவர்களுக்கு விடியலும் இல்லை; விடிவும் இல்லை. எப்போதும் இருள்தான். அவர்களுக்கு நன்பகல் கூட இருளாகத்தான் தோன்றும்.
கைகளை நீட்டுங்கள், உங்களுக்கு நிச்சயம் கைகுலுக்கல்கள் கிடைக்கும். முன்னோக்கிச் செல்லுங்கள், முன்னேற்றம் வழி தேடி உங்களுக்காக வந்து கொண்டிருக்கிறது.
 
Link to comment
Share on other sites

மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!

 

மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்களையும், தங்கள் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த உலகுக்குப் புதிய படைப்புகளைச் சமர்ப்பித்த விஞ்ஞானிகளையும், எந்தச் செயலிலும் வெற்றி ஒன்றையே காணும் மனோதிடமுள்ள – தன்னம்பிக்கையுள்ள மனிதர்களையும் நினைத்துப் பாருங்கள்Ð இவர்கள் இந்தச் சாதனைகளைச் செய்வதற்குப் பக்கபலமாக இருந்தது எது? தங்களிடத்திலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். எவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல், தங்கள் செயலில் முழு மூச்சாக ஈடுபட்டதுதான் இவர்களுடைய வெற்றிக்குக் காரணமாகும். சேணம் பூட்டப்பட்ட குதிரை, இடதுபக்கம், வலதுபக்கம் திரும்பாமல் நேரான வழியிலேயே சென்று கொண்டிருக்கும். அதைப்போல இவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தங்கள் லட்சியத்தில் உறுதியாக இருந்தார்கள். இதனால் இவர்கள் எந்தச் செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற்றார்கள்.

“நான் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னையும், என்னுடைய செயல்களையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களேД என்று விஞ்ஞானி நினைத்தால், அவரால் தான் செய்யும் ஆராய்ச்சியில் வெற்றிபெற முடியாது.
ஆய்வு நோக்கத்திலிருந்து அவர் தடம் புரண்டு வந்துவிட்டால், அவரால் எந்த ஆய்வையும் சரிவரச் செய்ய முடியாது.
ஒரு சாதனையைச் செய்ய நினைக்கும் வீரர், அதன் மேலே கண்ணாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்கள் தன்னைக் கேலி பேசுவார்களோ, விமர்சனம் செய்வார்களோ என்ற ஆராய்ச்சியில் இறங்கினால் அந்த வீரரால் எந்தச் சாதனையையும் செய்ய முடியாது.
அவரவர் செயலைச் செய்யும் பழக்கம் மேலை நாடுகளில் அதிகம். அவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் நம் நாட்டில் இது தலைகீழாக இருக்கிறது. ஒருவர் ஒரு செயலைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றால், அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டும், பல விமர்சனங்கள் செய்து பேசிக் கொண்டும், அவரைப் பற்றிய கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்து விட்டும் நேரத்தைப் போக்குகின்றவர்களே, இங்கு அதிகம்Ð தேவையில்லாமல் வேண்டுமென்றே ‘தொண தொண’ என்று பேசிக்கொண்டு, செயலில் மூழ்கியிருக்கும் உங்களைக் கெடுக்க நினைப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.
அடுத்தவர் செயலைக் கூர்ந்து பார்க்கின்ற ‘பண்பு’, படித்தவர்களிடத்திலும் இருக்கிறது, படிக்காதவர்களிடத்திலும் இருக்கிறது.
ஆராய்ச்சியில் மூழ்கிக்கொண்டு தங்களையே மறந்துவிடும் அறிஞர்களுக்கு உறுதுணையாக யாரேனும் செல்வாரேயானால், அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். அவ்வாறு செய்யாமல், அவரையே பார்த்துக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும், தங்களுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் ‘உத்தமர்களை’ எப்படிப் பாராட்டுவது?
ஒரு ஆய்வில் தன்னையே ஈடுபடுத்திக் கொண்டு, அதில் மூழ்கி இருக்கும் போது புதிய சிந்தனைகளும், கண்டுபிடிப்பும், ஒரு விஞ்ஞானிக்கு திடீரென்று உதயமானது. குளியலறையிலிருந்த அவர் தன்னையும் மறந்து “யுரேகாÐ யுரேகாД என்று கூவிய படியே வீதிகளில் ஓடினார். மற்றவர்களைப் பற்றி அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு மாபெரும் உண்மையை அவரால் கண்டுபிடித்திருக்க முடியாது. உலகப் புகழ்பெற்ற அந்த விஞ்ஞானி யார் தெரியுமா? ஆர்க்கிமிடீஸ் தான்Ð (யுரேகா என்றால் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்படும்).
மற்றவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதற்குக் காரணம், உங்களிடமுள்ள தாழ்வு மனப்பான்மையே ஆகும்.
நீங்கள் எந்தப் பணியைச் செய்ய நினைத்தாலும் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் தோன்றினால் நீங்கள் செய்யும் பணியிலே புதிய சாதனைகளைப் படைத்து விடுவீர்கள்.
தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள்தான், மற்றவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவன், யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தன்னுடைய செயலிலே வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கத்தோடு, உழைக்கிறான். இறுதியில் வெற்றி பெறுகிறான்.
மகாத்மா காந்தி, தன்னுடைய கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது, இழிவான குணம் படைத்த ஒருவன், காந்தி அடிகளை, அவருடைய காதிலே விழும்படியாக மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டத் தொடங்கினான். அவர் அதை மனதில் போட்டுக் கொள்ளாதவராய் தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்தார். இவர் மௌனமாக இருப்பதைக் கண்ட நீசன் மேலும் தரக் குறைவான வார்த்தைகளால் காந்தி அடிகள் மேல் அபிஷேகம் செய்தான். அப்பொழுதும் காந்தி அடிகள் தன் மனதிலே போட்டுக் கொள்ளாமல் தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்தார். இதைக் கண்ட அற்பன் வெலவெலத்துப் போனான். இறுதியில் அவரிடம் சரணடைந்தான்; தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டான்.
மற்றவர்கள் நம்மை விமர்சிக்கிறார்களே – மற்றவர்கள் நாம் என்ன செய்கிறோம் என்று நம்மையே கவனித்துக் கொண்டிருக்கிறார்களே – மற்றவர்கள் நம்முடைய குறைகளையே சொல்லிக் கொண்டிருக்கிறார்களே – மற்றவர்கள் நம் மேல் பொறாமைப் படுகிறார்களே – மற்றவர்கள் நம்முடைய செயலைக் கெடுக்கப் பார்க்கிறார்களே என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களால் முன்னுக்கு வர முடியாது.
அமைச்சர்களோ – சட்டமன்ற உறுப்பினர்களோ – பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது உயர் பதவியில் இருப்பவர்களோ மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. அமைச்சர்கள் முதலானோர் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது. மற்றவர்களைப் பற்றி இவர்கள் கவலைப்படாமலோ – உதாசீனப்படுத்தியோ இவர்கள் சென்றால், இவர்கள் பலவிதமான துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். மக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அவர்களைப் பந்தாடி விடுவார்கள்; தூக்கி எறிந்து விடுவார்கள். மனித நேயமுள்ள எவரும் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது. மற்றவர்களின் துன்பங்கள், பொருளாதாரக் கஷ்டங்கள், வறுமைப் போராட்டங்கள் ஆகியவைகளைக் கண்டு மனமுருகி அவர்களுக்காக மிகவும் கவலைப்பட்டு முடிந்த அளவுக்கு உதவிகள் செய்ய நினைப்பது இயல்பு. ஆனால் உங்களுடைய உயர்வைக் கண்டு பொறாமைப்படும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படலாமா? கொஞ்சம் கூடக் கவலைப்படாதீர்கள்.
எவரைப்பற்றியும் கவலைப்படாமல், உங்கள் உயர்வு ஒன்றையே கருதி உழைத்து வந்தால் உங்களுடைய முன்னேற்றத்தை எந்தச் சக்தியாலும் தடுத்தி நிறுத்திவிட முடியாது.
‘மொபைல்’ கடை வைத்திருக்கும் ஒருவனைத் தேடி நிறைய பேர் வருகிறார்கள். அலைபேசிக் கருவிகளை வாங்குகிறார்கள். பழுதடைந்த அலைபேசிக் கருவிகளைப் பழுதுபார்ப்பதற்கு அவனிடம் தந்துவிட்டுச் செல்கிறார்கள். அவன் கடைக்கு எதிரே உள்ளவனும், இதே வணிகத்தைச் செய்கிறான். எதிரே உள்ள கடைக்காரன் என்னையே உற்றுப் பார்க்கிறானே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் தன்னுடைய வியாபாரத்தை விருத்தி செய்வது எப்படி? “என் சிந்தனையை முடக்க நினைக்கும் அவன் கிடக்கிறான்” என்று போய்க் கொண்டே இருக்க வேண்டும். எனவே எவரைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் உயர்வு ஒன்றையே கருதி உழைத்து வந்தால், உங்களுடைய முன்னேற்றத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
படிக்காத மேதை ஜி.டி. நாயுடு, தன்னை மறந்து உழைப்பில் ஈடுபடும் போது மற்றவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படமாட்டார். அதனால் தான் முன்னேற்றம் என்ற மலையின் சிகரத்தின் மீது ஏறி வெற்றிக் கொடி நாட்டினார்.
மாவீரன் அலெக்சாண்டர் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. தன்னுடைய செயல் – தன்னுடைய கொள்கை ஆகியவற்றில் மிகுந்த கவனத்தோடு இருந்தான். மற்றவர்கள் இவனை அசைக்க முடியாத அளவிற்கு மனஉறுதியைப் பெற்றிருந்தான். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட்டிருந்தால் அவனால் ஒரு கிராமத்தைக் கூடக் கைப்பற்றி இருக்க முடியாது.
எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் படைத்தவனாகிய நெப்போலியன், மற்றவர்களின் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் செயலில் தீவிரம் காட்டினான்; வெற்றியும் பெற்றான்.
எனவே நீங்கள் எந்தக் காலத்திலும், “மற்றவர்கள் இப்படிப் பேசுவார்களா? அப்படிப் பேசுவார்களா? என்னைக் கேவலமாக நினைப்பார்களா? கேலி பேசுவார்களா? நையாண்டி பண்ணுவார்களா?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்காமல், மற்றவர்களைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் உழைத்துக் கொண்டே இருங்கள். உங்களில் நீங்கள் ஐக்கியமாகும்போது, அனைவரும் பாராட்டும் படியான உயர்வு உங்களுக்குக் கிடைக்கும். நிறைகுடமாகக் காட்சியளிக்கும் நீங்கள், குறை குடங்களின் கும்மாளங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாதீர்கள்.
 
Link to comment
Share on other sites

உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர…….
 
திட்டமிடல் என்பது வெற்றியின் திறவுக்கோல்தோல்வி என்பது வெற்றியின் மறுமுனை. தோல்வியை கண்டவன் வெற்றியை காண முடியாது என்பது முயலாமையின் வெறும்பேச்சு. வெற்றிக்கண்டர்வர்களுக்கு ஒவ்வோரு தோல்வியும் பகுத்தறிவு பாடங்கள் வாழ்க்கைப்படிப்பினை.
 
தோல்விகளை உற்று ஆராய்ந்த்தால் தோல்வியின் மறுப்பக்கம் வெற்றி என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.
 
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தோல்விக்கான காரணங்களை எடைப்போட்டால் வெற்றிக்கான ரகசியங்களை நீங்கள் உணர்ந்தவராவீர்.
 
வாழ்க்கையில் வெற்றிகண்ட மேதைகளின் கண்களுக்கு அற்ப விஷ்யங்கள் கண்ணுக்கு படுவதில்லை.அவற்றை கடந்து தொலைவில் உள்ள மகத்தான விஷயங்கள் மட்டும் அவர்கள் கண்டார்கள்.
 
மனம் தெளிவாகவும் திடமாகவும் ஒரு பாதையை அவர்கள் தேர்ந்தேடுத்த காரணத்தால்.வெற்றி என்னும் கனியை அவர்களால் பறிக்க முடிந்தது.
 
திட்டமிட்ட வாழ்க்கைமுறை வெற்றியை துரிதப்படுத்தும். திட்டமிடாத நபர்களின் வாழ்க்கை கடினமான உழைப்பு இருந்தும் வெற்றி தாமதப்படும்.
 
தாமதப்படும் ஒவ்வொறு வெற்றியும் தோல்வியின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும்.
 
சாமர்த்தியமாகவும் சிந்தனை திறத்தாலும் ஒருவன் தன் வாழ்வை ஒழுங்குமுறையோடு அமைத்துக் கொள்பவன் இனிமையின் எல்லையை தொடுவான்.
 
எனோ தானோ என்று பெருவாரியான தமிழர்கள் வாழும் முறை அவர்களின் வாழ்க்கை முறையை தரம் தாழ்த்திவிட்டது.
 
தமிழர்களின் ஒரு சில பிரிவினர்களின் திறைமையான திட்டமிடல் இன்று உலகிலே தலைசிறந்த நிர்வாகிகளாகவும் சிறந்த வணிகர்களாக இருப்பதற்கு காரணம்.
 
எதையும் திட்டமிடப் பழகுங்கள்.
 
வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த நிலையை அடைய முயற்சி செய்யும் எவர் ஒருவரும் தனக்கென ஒரு தகுதியை திறமையை வளர்த்துக் கொள்பவர் யாரும் வாழ்க்கையில் திட்டமிட்ட ஒர் உயர்வு நிலையினை பெற முடியும் என்பதுதான் திட்டவட்டமான உண்மை.
 
வாழ்க்கை வெற்றிப்பெருவதற்கு இனமோ மொழி நிறமோ வர்க பேதமோ காரணம் அன்று உழைப்பு உழைப்பு உழைப்பு ,உழைப்போடு திடச்சிந்தனை, முயற்சி, திட்டமிடல் இவைதான் காரணம்.
 
சரித்திரத்தை பாருங்கள் உங்களை வாழ்க்கையை பின்னோக்க செய்வது நீங்கள் திட்டமிடாமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களை பின்னோக்கி இழுக்கும் வலிய தூக்கு கயிறுதான் என்பதை மறவாதீர்கள்.
 
திட்டமிடல் என்பது அற்ப விஷயம் இல்லை.அனைத்திற்கும் முலாதாரமே அதுதான்.
 
எதற்கும் திட்டமிடல் தேவை.
 
தனியார் துறையிலிருந்து அரசாங்கம் வரைக்கும் திட்டமிடல் என்று தனியான ஒரு துறையாக வளர்ந்திருக்கும் இன்றைய பொழுது நாம் திட்டமிடாமல் காரியங்களை நகர்த்தமுடியுமா?
 
நிகழ்ச்சி நிரல் என்று ஒவ்வொரு நிகழ்வும் திட்டமிட்டு செயல்ப்பட்டால் ஆகாதது ஒன்றுமில்லை.
 
திட்டமிட்டு வாழ்க்கையை துவங்குங்கள் சுகமான வாழ்க்கை துலங்கும்
 
உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர…….
 
Link to comment
Share on other sites

வேலையில் எப்படி வேகமாக வளர்ச்சி அடைவது?

 

வேலையில் விரைவில் வளர்ச்சி காண்பவர்கள் யார்?

பாஸ் கடாட்சம் வேண்டும், பாலிடிக்ஸ் பண்ணத் தெரியணும், வேலை செய்வதைவிட வேலை செய்வதைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று எவ்வளவு வேண்டுமானாலும் வம்பு பேசலாம். அதில் உண்மைகூட கொஞ்சம் இருக்கலாம்.

ஆனால், ஆராய்ச்சிகள் கூறுவது ஒன்றைத் தான்: தன் தகுதிகள் மற்றும் திறன்களில் தொடர்ந்து முதலீடு செய்பவர்கள் விரைவில் வளர்கிறார்கள்.

“தகுதி மற்றும் திறன் எல்லாம் வேலையில் சேரும் காலத்தில் தானே தேவைப்படும்?” என்று கேட்கிறீர்களா?

உண்மைதான். பட்டமும் தகுதியும் வேலையில் சேரும்போது மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது அந்தக் காலம். அது ஓய்வுக்காலம் வரை கை கொடுக்கவும் செய்தது.

இன்று சந்தைச்சூழல், நிறுவனம், வேலைத்திறன் என எல்லாம் மாறி வருகையில் வேலைக்குச் சேரும்போது உள்ள திறன்களும் தகுதிகளும் காலம் முழுவதும் உதவாது. வேலையில் பயிலும் சங்கதிகளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் உங்களை உயர்த்தும். அதனால், தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழி.

எந்தத் தொழிலிலும் சிறப்பாக உள்ள மனிதர்களைப் பாருங்கள். அவர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருப்பார்கள்.

எவ்வளவு பிஸியான டாக்டராக இருந்தாலும் ஆண்டுதோறும் கருத்தரங்குகள் சென்றால்தான் நவீன சிகிச்சை முறைகளை அறிய முடியும். எழுத்தாளர்கள் எழுதுவதை விட படிப்பது மிக மிக அதிகம். வாசிப்பு இல்லாத எழுத்தாளர்கள் தேங்கிப் போகிறார்கள்.

என்னிடம் பல நாற்பது வயதினர் பணியில் விருப்ப ஓய்வு பெற்று வேறு வேலைக்குச் செல்ல ஆலோசனை கேட்டு வருவார்கள். பெரும்பாலும் அவர்கள் எல்லோரும் தங்கள் பணியில் சிறப்பாக இருந்தவர்கள்தான். ஆனால் அவர்களில் யாருக்கு விரைவில் வேறு வேலை கிடைக்கிறது என்று பார்த்தால் தொடர்ந்து படித்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள் அல்லது வெளி உலகத் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

யார் வந்தாலும் நிலைத்து நிற்கக்கூடிய ஜாம்பவான்கள் தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். எல்லா நேரமும் போட்டிக்குத் தயாராக இருக்கிறார்கள். எந்த புதிய அலைக்கும் பயப்படுவதில்லை.

எம்.ஜி.ஆர் காலத்தில் நடிக்க ஆரம்பித்து ஜெய்சங்கர், விஜயகுமார், மோகன், பிரபு, கார்த்திக், ராமராஜன், சூர்யா, ஆர்யா வரை போட்டி போடும் கமலஹாசன் தன்னைத் தொடர்ந்துப் புதுப்பித்துக்கொள்வதால்தானே இன்னமும் நிலைக்க முடிகிறது?

எனக்குத் தெரிந்து பல பெரும் பதவிகளில் உள்ளவர்களிடம் வாசிப்புப் பழக்கம் கிடையாது. பயிற்சி வகுப்புகள் கட்டாயம் என்றால்தான் செல்வார்கள். ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே சபை முன் பேச வராது. துறை சார்ந்த விஷயங்கள் தவிர பேச எதுவும் இருக்காது. அதிகாரத்தை மட்டும் தவிர்த்துப் பார்த்தால் இவர்களுடன் ஒன்றுமே இல்லை எனத்தோன்றும்.

“படிப்பு, பயிற்சி என்றால் இளையவர்களுக்கு; நமக்கு இல்லை!” என்கிற எண்ணம் தான் நமக்கு விரோதி. அதே போல எல்லா விஷயங்கள் உள்ள் ஒரே புத்தகத்தையோ, எல்லாவற்றையும் சொல்லித்தரும் ஒரே பயிற்சி வகுப்பையோ தேடுவது அறியாமை.

தங்கள் முயற்சியால் மேல் படிப்பு, சிறப்புப் பயிற்சி, பெரிய மனிதர்கள் வழிகாட்டுதல் என்று தயாராக இருப்பவர்கள் வாய்ப்புகள் வருகையில் முந்திச் சென்று விடுகிறார்கள்.

கடைசியாக நீங்கள் படித்த புத்தகம் எது? கடைசியாக நீங்கள் கலந்து கொண்ட பயிற்சி வகுப்பு எது? கடைசியாக நீங்கள் கற்றுக்கொண்ட புதுத்திறன் எது? கடைசியாக சுய வளர்ச்சிக்காக மேற்கொண்ட பயணம் எது?

இந்தக் கேள்விகளின் பதில்கள் தான் உங்களை உயர்த்திப் பிடிக்கும்.

ஊக்க சக்தி நிபுணர் ஜிக் ஜிக்லரிடம் கேட்டார்கள்: “எல்லா பயிற்சி வகுப்பும் முடியும்போது, முடிந்த பிறகு சில காலமும் உத்வேகத்தைக் கொடுக்கின்றன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடுகிறோம். இதை எப்படித் தக்க வைப்பது?”

அவர் சொன்னார்: “பயிற்சியும் படிப்பும் குளிப்பது போல. அதை தினசரி தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு நாள் குளித்துவிட்டு, ஒரு வாரம் கழித்து நாற்றம் எடுக்கிறது என்று குறை கூறலாமா?!”

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/article6256562.ece

 

Link to comment
Share on other sites

ஆளுமைத் தன்மை வளர்ப்போம்

 

நீங்கள் நல்ல ஆளுமையுள்ளவர்களாக மாற விரும்புகிறீர்களா? அதற்கு சில விசயங்களை அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

 

மனிதர்களை விரும்புங்கள்

 

எந்த மனிதரும் முழுமையாக நல்லவரோ அல்லது கெட்டவரோ இல்லை. எனவே நாம் அவரிடமுள்ள நல்லவைகளை எடுத்துக் கொண்டு அவரை நம்ப வேண்டும். இப்படிச் செய்வதால் அவரும் நம்மீதுஅதே மனோ நிலை கொள்வார், நம்மை மிகவும் மதிப்பவராகவும் மாறுவார்.

 

புன்னகை செய்யுங்கள்

மென்மையான புன்னகையின் சக்தி வலிமையானது. யாரைச் சந்தித்தாலும் புன்னகை முகத்தோடு முகமன் கூறும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் புன்னகைத்தால் எதிரிலுள்ள மனிதரும் புன்னகை புரிந்தே தீருவார். ஒன்றிரண்டு பேரைத் தவிரை.

 

மனிதர்களின் பெயரை நினைவிலிருத்துங்கள்

நாம் சந்திக்கும் மனிதர்களிடம் அவர்களின் பெயரைச் சொல்லி கூப்பிடும் பழக்கம் வேண்டும்.. நாம் அவரின் பெயர் சொல்வதால் அவரிடம் நாம் நெருக்கமானவர் என்கிற ஆளுமை அவருக்குத் தோன்றும்.

 

தன்னைப் பற்றிப் பேசுவதை கைவிடுங்கள்

தன்னைப் பற்றிப் பேசுவதை விடுத்து எதிரிலிருப்பவரின் பேச்சை கேட்கும் பழக்கம் கொண்டால் எதிரிலிருப்பவர்க்கு நம்மை மிகவும் பிடிக்கும்.நல்ல கேட்பவராகுங்கள்.

 

எப்படிச் சொல்கிறோம் என்பதே முக்கியம்.

நாம் பேசும்போது, நம் பேச்சில் தவறு நேர்ந்தால் நாம் sorry என்போம். அதை உண்மையான வருத்தந் தோய்ந்த குரலில் நல்ல உடலசைவோடு சொன்னால் அது எதிரிலிருப்பவரை நிச்சயம் ஈர்க்கும். எனவே நம் உடலசைவுகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும், பணிவையும் நல்லமுறையில் பேணிக் காத்தல் மிக மிக அவசியம்.

 

மற்றவர்க்கு உதவுங்கள் .

ஒரு அலுவலகம் செல்லும் நேரத்தில் ஒரு விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் அலுவலகம் போக நேரமாகலாம், அதற்காக அவருக்கு உதவிடாமல் சென்றால் அது மனித நேயமாகுமா? சுயநலமற்ற உதவும் போகே ஆளுமைத் தன்மையை வளர்க்கும் அருமருந்து.

 

அழகாக தோற்றமளிங்கள்

நமது முதல் அறிமுகம் எதிரிலுள்ளவரைக் கவர வேண்டும். இது மிக மிக முக்கியமானது.

உடல் அழகு, ஆடை அழகு என்பதல்ல இதன் பொருள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் சூழ்நிலைக் கேற்றவாறு ஆடை அணியுங்கள். சுத்தமான சுகாதாரமான தோற்றமும், சீரான தலைமுடி அமைப்பும், நகங்களின் சுத்தமும், காலணிகளின் சுத்தமும் எப்போதுமே நமது ஆளுமையை உணர்த்தும்.

 

எதிரிலிருப்பவரைப் புகழத் தயங்காதீர்கள்.

புகழ்ச்சியை விரும்பாத மனிதரில்லை .எதிரிலிருப்பவரை மனதார உண்மையாய்ப் புகழ்ந்திடுங்கள். பொய்ம்மையாய், செயற்கையாய் இருத்தல்கூடாது.

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6234202.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுமைத் தன்மை வளர்ப்போம்

 

நீங்கள் நல்ல ஆளுமையுள்ளவர்களாக மாற விரும்புகிறீர்களா? அதற்கு சில விசயங்களை அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

 

மனிதர்களை விரும்புங்கள்

 

எந்த மனிதரும் முழுமையாக நல்லவரோ அல்லது கெட்டவரோ இல்லை. எனவே நாம் அவரிடமுள்ள நல்லவைகளை எடுத்துக் கொண்டு அவரை நம்ப வேண்டும். இப்படிச் செய்வதால் அவரும் நம்மீதுஅதே மனோ நிலை கொள்வார், நம்மை மிகவும் மதிப்பவராகவும் மாறுவார்.

 

புன்னகை செய்யுங்கள்

மென்மையான புன்னகையின் சக்தி வலிமையானது. யாரைச் சந்தித்தாலும் புன்னகை முகத்தோடு முகமன் கூறும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் புன்னகைத்தால் எதிரிலுள்ள மனிதரும் புன்னகை புரிந்தே தீருவார். ஒன்றிரண்டு பேரைத் தவிரை.

 

மனிதர்களின் பெயரை நினைவிலிருத்துங்கள்

நாம் சந்திக்கும் மனிதர்களிடம் அவர்களின் பெயரைச் சொல்லி கூப்பிடும் பழக்கம் வேண்டும்.. நாம் அவரின் பெயர் சொல்வதால் அவரிடம் நாம் நெருக்கமானவர் என்கிற ஆளுமை அவருக்குத் தோன்றும்.

 

தன்னைப் பற்றிப் பேசுவதை கைவிடுங்கள்

தன்னைப் பற்றிப் பேசுவதை விடுத்து எதிரிலிருப்பவரின் பேச்சை கேட்கும் பழக்கம் கொண்டால் எதிரிலிருப்பவர்க்கு நம்மை மிகவும் பிடிக்கும்.நல்ல கேட்பவராகுங்கள்.

 

எப்படிச் சொல்கிறோம் என்பதே முக்கியம்.

நாம் பேசும்போது, நம் பேச்சில் தவறு நேர்ந்தால் நாம் sorry என்போம். அதை உண்மையான வருத்தந் தோய்ந்த குரலில் நல்ல உடலசைவோடு சொன்னால் அது எதிரிலிருப்பவரை நிச்சயம் ஈர்க்கும். எனவே நம் உடலசைவுகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும், பணிவையும் நல்லமுறையில் பேணிக் காத்தல் மிக மிக அவசியம்.

 

மற்றவர்க்கு உதவுங்கள் .

ஒரு அலுவலகம் செல்லும் நேரத்தில் ஒரு விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் அலுவலகம் போக நேரமாகலாம், அதற்காக அவருக்கு உதவிடாமல் சென்றால் அது மனித நேயமாகுமா? சுயநலமற்ற உதவும் போகே ஆளுமைத் தன்மையை வளர்க்கும் அருமருந்து.

 

அழகாக தோற்றமளிங்கள்

நமது முதல் அறிமுகம் எதிரிலுள்ளவரைக் கவர வேண்டும். இது மிக மிக முக்கியமானது.

உடல் அழகு, ஆடை அழகு என்பதல்ல இதன் பொருள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் சூழ்நிலைக் கேற்றவாறு ஆடை அணியுங்கள். சுத்தமான சுகாதாரமான தோற்றமும், சீரான தலைமுடி அமைப்பும், நகங்களின் சுத்தமும், காலணிகளின் சுத்தமும் எப்போதுமே நமது ஆளுமையை உணர்த்தும்.

 

எதிரிலிருப்பவரைப் புகழத் தயங்காதீர்கள்.

புகழ்ச்சியை விரும்பாத மனிதரில்லை .எதிரிலிருப்பவரை மனதார உண்மையாய்ப் புகழ்ந்திடுங்கள். பொய்ம்மையாய், செயற்கையாய் இருத்தல்கூடாது.

 

இதுவரை

இதை  நான் செய்ததில்லை

எவரையும் தூக்கி  வைத்து பேசுவது

தேவைக்கு ஏற்றாப்போல் நடிப்பது எனக்கு சரிவராத ஒன்று

 

ஆனால் இந்த எனது குணத்தால் பலதையும் இழந்திருக்கின்றேன்.. :(

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி ஆதவன்.

இந்த வெற்றி விதிகளை எல்லாம் படித்தால் நம்மளே இன்னுமொரு புத்தகம் எழுதலாம். வார்த்தையை மாத்தி மாத்திப் போட்டு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவார்கள். அவ்வளவே இதன் மதிப்பு.

முதலில் வெற்றி எது? என்பதிலே ஒவ்வொருவருக்கும் ஒரு வரையறை உண்டு. இவர்கள் சொல்லுகிற வெற்றி எல்லாம் கார்ப்பரேட் உலகில் எப்படி உன்னை நல்ல விலைக்கு விற்பது என்பது மட்டுமே.  
 

Link to comment
Share on other sites

  • 1 month later...

வாழ்வைப் பேசுங்கள், மரணத்தை அல்ல!

 

14_2119508h.jpg

 

“வாழ்வும் சாவும் நாவின் சக்தியில் இருக்கிறது” என்பது மிக உண்மையான, சக்தி வாய்ந்த வாசகம்.

உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்தான் வாழ்வையும் மரணத்தையும் உருவாக்கின்றன. நீங்கள் பேசுவதைக் கவனியுங்கள். நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ அது மெய்யாகிறது. நீங்கள் உங்களை முட்டாள் என்று சொன்னால் நீங்கள் முட்டாள். நீங்கள் உங்களைப் புத்திசாலி என்று சொன்னால் நீங்கள் புத்திசாலி. நீங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்களோ அதுதான் நீங்கள்.

நீங்கள் சொன்னது மற்றும் நம்புவது எதுவோ அதுவாகவே ஆவீர்கள். “ உங்களால் முடியும் என்று நீங்கள் சொன்னால் உங்களால் முடியும்; உங்களால் முடியாது என்று சொன்னீர்களானால் உங்களால் முடியாது. இரண்டு வழிகளிலும் நீங்கள் சரியே” என்று ஹென்றி ஃபோர்டு கூறியிருக்கிறார்.

எதிர்மறையின் நேர்மறை

எதிர்மறையான விஷயத்தையும் சொல்ல நேர்மறையான வழி ஒன்று நிச்சயம் உள்ளது. நான் உடல்நலமின்றி உள்ளேன் என்பதற்குப் பதிலாக, குணமாகிக்கொண்டிருக்கிறேன் என்று கூறுங்கள். நீங்கள் உடைந்துபோனதைப் பற்றி இன்னொரு நபரிடம் கூறவே கூறாதீர்! “எனது நிதி நிலை மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது” என்று சொல்லுங்கள்.

அது என்னுடைய அதிர்ஷ்டம் என்று யாராவது பேசுவதைக் கேட்கும் சமயத்தில் உண்மையிலேயே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் என்று சொன்னால், நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்கும் சாத்தியம் இல்லை என்று நீங்கள் நம்புவதாக அர்த்தம். பெரிய விஷயங்கள் உங்களுக்கு நடக்கும் என்பதை நீங்கள் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.

மகத்தானவன்

“கண்ணாடியில் உன்னைப் பார்த்து, நீ மகத்தானவன் என்று கூறிக்கொள்” என்று முதல்முறையாக ஒருவர் என்னிடம் கூறியபோது, அந்த ஆளுக்கு நிச்சயம் கிறுக்குதான் பிடித்திருக்கிறது என்று நினைத்தேன்! அவர் என்னைக் கண்ணாடியைப் பார்க்கச் சொல்லி நேர்மறையான விஷயங்களை எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் வீட்டில் கண்ணாடி முன்பு நின்று பல்தேய்த்துக் கொண்டிருந்தபோது அந்த மனிதர் சொன்னது நினைவுக்கு வந்தது. நான் என்னைப் பற்றி என்ன சொன்னால் நேர்மறையாகவும், தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்? கண்ணாடியை உற்றுப் பார்த்து, “ஜானி, நான் உன்னை நேசிக்கிறேன்.” என்று சொன்னேன்.

உடனடியாக நம்பவே முடியாத அதிசயம் ஒன்று நடந்தது. நான் ஒரு குழந்தை போல அழத் தொடங்கினேன். நான் வீட்டில் தனியாக இருந்தேன். அர்த்தமே இல்லாமல் அழுதேன். முதலில் என்னைக் கட்டுப்படுத்தி நிதானமாக இருக்க முயன்றேன். அதற்குப் பிறகு நான் மட்டும்தான் வீட்டில் இருக்கிறேன் என்பது புரியவந்தது.

என் இஷ்டத்துக்கு அழுவது என்று முடிவுசெய்தேன். எதற்காக அழுகிறேன் என்று தெரியாமலேயே 15 நிமிடங்களாவது அழுதிருப்பேன். அப்போது எனக்கு 24 வயது. அந்தக் கணத்தில் நடந்தது என்னவென்று அடுத்த சில மாதங்கள் வரை எனக்குப் புரியவேயில்லை. பிறகு மிகப் பெரிய புரிதல் என்னிடம் மலர்ந்தது. என்னிடம் இன்னொரு மனிதன், “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறியதே இல்லை.

அதை நான் எனது தந்தையிடம் கூடக் கேட்டதில்லை. அந்தக் கணம் வரை தன்னைத் தானே நேசிப்பதைப் பற்றி நான் தெரிந்து கொண்டதே இல்லை. தன்னைத் தானே நேசிப்பது என்பது சுயநலமானது என்று எண்ணியிருந்தேன். ஆனால் ஒருவர் தன்னை நேசிப்பதைத் தெரிந்துகொள்ளாமல் பிறரை எப்படி நேசிக்க முடியும்?

வெற்றியாளன்

என்னைப் பற்றிய அருமையான விஷயங்களை வேறு யாரும் சொல்லாவிட்டால், அவை குறித்து நானாவது பேச வேண்டும் என்று அக்கணத்தில் உணர்ந்தேன்.

அந்த நாள் முதல், எனக்கு நானே உறுதி அளித்துக்கொள்ளாமல் ஒரு நாளும் இருந்ததேயில்லை. நான் அருமையான கணவன், நான் அற்புதமான தந்தை, நான் அதிகபட்சம் ஆசீர்வதிக்கப்படுபவன், மிகவும் விரும்பப்படுபவன். நான் தலை. வால் அல்ல. நான் மேலானவன். நான் இங்கே வரும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவன், போகும்போதும் ஆசீர்வதிக்கப்படுவேன், நான் வாழ்க்கை குறித்தே பேசுவேன்.

நான் பெருந்திரளான மனிதர்களிடம் அவர்கள் சிறந்ததை அடைவதற்கான தன்னிறைவை ஏற்படுத்துவேன். நான் உலகை மாற்றுபவன். நான் நேர்மையானவன். எனது வார்த்தைகள் மலைகளை நகரவைக்கும், நான் சாதனைகளை முறியடிப்பவன். என் கைகள் பட்ட இடமெல்லாம் செழிக்கும்... இந்த வாசகங்களை நான் தினசரி எனக்குள் சொல்லிக் கொள்வேன்.

இதுபோன்ற செயல்முறைகள் அகந்தையானவை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அகந்தைக்கும், தன்னம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.

உங்கள் வாழ்வில் வெற்றி கிடைப்பதற்கு முன்பே நீங்கள் வெற்றியாளர் என்று நீங்கள் நம்ப வேண்டும்.

பண வெற்றிமா?

பணத்தை வெற்றி என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். கை நிறையப் பணம் வைத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி என்பதன் உண்மையான பொருளை அவர்கள் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். உங்களிடம் உள்ள எல்லாப் பழக்கங்களையும் பணம் அதிகரிக்கும்.

அது நல்ல பழக்கமாக இருக்கலாம். மோசமான பழக்கமாகவும் இருக்கலாம். தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் பழக்கத்தை நீங்கள் வைத்திருப்பவர் என்றால், உங்களின் பணம் அதிகரிக்கும்போது உங்கள் கொடைகளும் அதிகரிக்கும்.

உங்களுக்குப் போதைப் பழக்கம் இருந்தால் உங்கள் பணம் அதிகரிக்கும்போது, போதைப் பொருள் உட்கொள்ளும் அளவும் அதிகரிக்கும். பணம் மீதான ஆசைதான், தீமையின் வேர் என்று சொல்லப்படுகிறது.

நல்லது செய்வதற்கான கருவியாகப் பணத்தைப் பயன்படுத்துங்கள். நன்றி செலுத்துவதற்கான கருவியாக மற்றவருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கப் பயன்படுத்துங்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையின் லட்சியமாக அதை ஆக்கிவிடாதீர்கள். வாழ்க்கையைப் பணத்தில் தொலைத்த பிறகு வெற்றி வரும்போது அதை எப்படிக் கையாளுவீர்கள்?

கட்டுரையாளர் ஒரு அமெரிக்கர். அவர் எழுதியுள்ள from the HOOO to doing GOOD எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/article6432602.ece

 

Link to comment
Share on other sites

உங்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் சர்வ வல்லமை பெற்றவர் நீங்கள் தான்

 

ஒரு வாசகர் நான் மேலதிகாரிகள் பற்றி எழுதியதைப் பாராட்டி எழுதி இருந்தார். மேலதிகாரிகளால் அவர் வாழ்க்கையில் நடந்த பாதிப்புகள் பற்றி மின்னஞ்சலில் பட்டியலும் இட்டிருந்தார். இதனால் பல உடல் உபாதைகளில் அவதிப்படுவதாகவும், இதிலிருந்து மீள என்ன வழி என்றும் கேட்டிருந்தார்.

கடித வழி உளவியல் ஆலோசனையில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், அவர் சுகமடைய சுருக்கமாக ஏதாவது எழுத நினைத்தேன்.

 

மறதி மருந்து

“உங்களைக் காயப்படுத்தியவர்களை மன்னித்து அவர்களை உங்கள் மனதிலிருந்து வெளியேற்றுங்கள். மறதிதான் சிறந்த மருந்து. அப்போதுதான் புதியவர்கள் உங்கள் மனதுக்குள் நுழைவார்கள். நல்ல அனுபவங்கள் தருவார்கள்!” என்று இத்தகையவர்களுக்கு நாம் சொல்லலாம்.

 

வேலையில் சிக்கல் உள்ள அனைவருக்கும் சிலர் மீது உள்ள கசப்பான உணர்ச்சிகள்தான் மேலோங்கி நிற்கின்றன. அவை அந்த வேலையின் மற்ற நல்ல நினைவுகளைத் தலை தூக்கவிடாமல் செய்கின்றன. அதனால் ஒரு ஒட்டுமொத்த எதிர்மறை எண்ணம்தான் உருவாகிறது.

வேலையில் மட்டுமா இது நடக்கிறது?

ரயிலில் கேட்டது இது: “நம்ம கல்யாணத்தன்னைக்கே பிரச்சினை பண்ணியவன் இல்ல உன் தம்பி! மறு வீட்டுக்கு வரவே இல்லையே. அதெல்லாம் மறந்துடுமா?” என்று ஒரு ஆக்ரோஷமான குரல். எட்டிப் பார்த்தால் மனிதருக்கு எண்பது வயதிருக்கும். பழுத்த பழமான அந்த அம்மாள் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்!

ஒரு அம்பது வருட காயத்தைக் கீறிக் கீறிப் புதிய ரணமாகவே வைத்திருக்கும் குரோதம் அவர் கண்களில் தெரிந்தது.

 

சண்டையில்தான் சரித்திர நிகழ்வுகள் சரியாக நினைவுக்கு வரும். எல்லா நல்ல விஷயங்களும் பின்னுக்குத் தள்ளப்படும். எடுத்த விவாதத்திற்குச் சாதகமான அனைத்தும் தெளிவாகக் கண் முன் நிற்கும்.

“எங்கப்பா தான் இந்த வேலையில் தள்ளிட்டார்.”

“அந்த ஆள் மட்டும் டிரான்ஸ்பர் பண்ணாம இருந்தா அங்கயே பெரிய ஆளா இருந்திருப்பேன்”

“என் மனைவி ஃபாரின் போகணும்னு பிடிவாதமா இருந்தாள். அதனால்தான் அங்க போய் மாட்டினேன்.”

 

“சம்பளத்தைக் குறைச்சு ஃபிக்ஸ் பண்ணி என் எதிர்காலத்தையே நாசம் பண்ணிட்டார்.”

இப்படிச் சில மனிதர்கள்தான் நம் வேலையையும் வாழ்க்கை யையும் கெடுத்துவிட்டார்கள் எனத் திடமாக நம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். தன் வாழ்க்கையின் அத்தனை துயரங்களுக்கும் இவர்கள் தான் காரணகர்த்தாக்கள் என்ற கற்பிதத்தோடே இவர்கள் வாழ்கிறார்கள்.

தங்களின் திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டும் எதிராளியின் பராக்கிரமத்தை அதிகப்படுத்தியும் இவர்கள் ஆடும் விளையாட்டு சுய பரிதாபத்தில்தான் முடியும்.

ஒரே ஒரு ஆள்தான் உங்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் சர்வ வல்லமை பெற்றவர்: அது நீங்கள் மட்டும்தான்!

 

மன்னித்தலின் பலன்களை மதங்கள் அனைத்தும் போதிக்கின்றன. மன்னித்தலும் மறத்தலும் எவ்வளவு பெரிய மன விடுதலையைத் தரும் என மன்னித்தவர்களுக்குத்தான் தெரியும்.

பழைய காயங்கள் ஆற அவற்றை மீண்டும் தீண்டாமல் இருப்பது முக்கியம். ஆனால் வெறுமையான மனதுக்கு கடந்த காலமும் அதன் கசப்பான எண்ணங்களும்தான் மிஞ்சுகின்றன.

நான் அதிகம் மதிக்கும் நண்பர் ஒருவர் முப்பது வயதுகளிலேயே பெரிய பதவிகள் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவருடன் பழகி நான் கற்றுக்கொண்டது ஒன்று தான்: “எந்த விஷயத்திலும் எதிராளியைப் பழி சொல்லக் கூடாது.” ‘இது நிகழாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று மட்டுமே அவர் யோசிப்பார். அவரை எதிர்க்கும் சிலருடன் கூட நட்பை இழக்க மாட்டார். தன் எதிர்ப்பைக் கண்ணியமான சொற்களில் பதிவு செய்து விட்டுத் தன் நிலையைக் காத்துக் கொள்வார்.

 

தொடர்ந்து வெற்றி பெறுகிற அவரின் சூத்திரங்கள் இவை தான். எல்லா முடிவுகளுக்கும் தானே காரணம் எனத் திடமாக நம்புவது; அதற்கான உழைப்பைத் தொடர்ந்து தருவது.

ஒரு கடந்த கால கசப்பான அனுபவம் பற்றிப் பேச்சு வந்த போது சொன்னார்: “ஓ, அது நடந்ததே மறந்து போச்சு.”

 

பிரெஞ்சு நாட்டின் தலைமைச் செயல் அதிகாரி என்னுடன் பேசும்போது சொன்னார்: “இந்தியர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். காயப்படுகிறார்கள். ஆனால் அவற்றை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதில்லை. செயலில் காட்டுகிறார்கள்!” அவரை மறுத்துப் பேச முடியாமல் தலை ஆட்டினேன்.

 

வேலையில் மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் நிகழ்காலத்தில் இருப்பவர்கள். அது தரும் அனுபவத்தில் திளைப்பவர்கள். வருங்காலத்தை நம்புபவர்கள்.

அதெல்லாம் சரி, மோசமான பணி அனுபவத்திலிருந்து மீள் வது எப்படி? மன்னிப்பது எப்படி?

உங்களுக்கு மோசமான அனுபவம் அளிப்பவரும் மோசமான அனுபவம் உட்கொண்டவர்தான். வெறுப்புக் கொள்வதைவிட பரிதாபம் கொள்ளுங்கள். அவரைக் கையாள்வதும் ஒரு வாழ்வியல் கலை. அதைக் கற்றுக்கொள்ளுங்கள். இது வெறும் பணி இடர்பாடு என்று அறிந்து கொள்ளுங்கள். இதை உங்கள் ஆளுமையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.

 

இந்த அனுபவத்திலிருந்து அவரும் நீங்களும் நிறைய கற்றுக்கொள்வீர்கள். காலம் தன் சுழற்சியில் யாரை எங்கு வைக்கும் எனத் தெரியாது. அதனால் வெறுப்பு வளர்க்காமல் கடமையைச் செய்யுங்கள்.

 

மனதை அமிலப்பாத்திரமாக்கி அதைக் காலம் முழுவதும் காக்க வேண்டாம். மனதைக் கழுவிவிட்டு... ஓ... இங்கிருந்து தான் ‘கழுவி கழுவி ஊற்றுவது’ வந்ததோ?) புதிய பானம் நிறையுங்கள்.

 

மன்னிப்பைவிட வலிமை யான ஆயுதம் எதுவுமில்லை. மறதியைவிடச் சிறந்த மன மருந்து எதுவுமில்லை.

நிறைய வரலாறு படியுங்கள். கேளுங்கள். வரலாறு என்பது வெறும் சம்பவங்களின் கோவை அல்ல. அது தந்த பாடங்களின் தொகுப்பு.

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6347737.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா?

 

4_2108489h.jpg

 

தகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது திறமையையும் குறிக்கிறது. ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி.

 

தன்னம்பிக்கைக்கான பண்புகள்

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கீழ்க்காணும் பண்புகள் வேண்டும்.

 

1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்.

 

2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.

 

3. சுயபச்சாதாபம் கொள்ளாதீர்கள்.

 

தோல்வி வந்தால் இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். சிந்திக்கத் சிந்திக்க தெளிவு பிறக்கும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சயப் பாத்திரமாக மாறும். வெற்றி உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும்.

ஆனால் தோல்வி தான் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும்.

 

தோல்விக்குப் பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகமாகிறது.

அத்துடன் சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும்.

 

தொடர் முயற்சி

 

ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதையின் உள்ளே விருட்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாகப் பரிபூரண

ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அவற்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயல முயல வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

 

மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும் (Technical Skills), மனித உறவுத்திறனும் (Human Relation Skills) உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்!

 

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு லட்சியச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம்.

கட்டுரையாளர் ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறைத்தலைவர், 

kavi@roots.co.in

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6411848.ece

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
வேலைக்குத் தயாராவது எப்படி?

 

job_1651103h.jpg

 

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னால், தொழில் துறை மந்த நிலை உச்சத்தில் இருந்தபோது நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9% என்று அளவிடப்பட்டது. இந்த 9% பேரும் தொழில்துறை மந்தநிலையால் மட்டும் வேலை பெற முடியாமல் தவிக்கவில்லை. அப்போதும் கிடைத்துக்கொண்டிருந்த வேலைகளைச் செய்யும் திறன் அவர்களிடம் இல்லை. இது வேலை தேடும் அனைவரின் உள்மனதுக்கும் தெரியும்.

இதை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வித் துறைச் செயலர் டோனி வேக்னர் அழகாகக் கூறுவார், “உனக்கு என்ன தெரியும் என்று உலகம் கவலைப்படுவதில்லை, உனக்குத் தெரிந்தவற்றை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்றுதான் உலகம் பார்க்கிறது” என்று.

 

இப்போது புதுப்புதுத் தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தும் புதுப்புது வேலைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. வரலாறு, இலக்கியம், தத்துவம் போன்ற கலைப் பாடங்களில் பட்டங்களை வைத்துக்கொண்டு அந்த வேலைகளைச் செய்ய முடியாது.

எனவே, வேலைகளைத் தரக் காத்தி ருக்கும் நிறுவன உரிமையாளர்கள் அல்லது மேலாளர்கள், தங்களுடைய தேவைக்கேற்ப ஆள்களைத் தேர்வு செய்ய, வழிமுறைகளைப் புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் திறமைகள் உங்களுக்கு எப்படி வந்தது என்று அவர்கள் கவலைப்படு வதில்லை. வீட்டில் படித்தீர்களா, ஆன்-லைனில் படித்தீர்களா, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திலா அல்லது யேல் பல்கலைக்கழகத்திலா என்றெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்க ளுடைய வேலைகளை நீங்கள் செய்வதன் மூலம், அவர்களுக்கு உங்களால் வருமானம் பெருகுமா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள்.

 

திறமைகளை அடைவது எப்படி?

 

இன்றைக்கு வேலைவாய்ப்புகள் எப்படிக் கிடைக்கின்றன என்று அறிய ஹயர்ஆர்ட் (www.hireart.com) எலியோனோரா ஷரேப் (27), நிக் செட்லட் (28) ஆகியோருடன் பேசினேன். எலியோனோரா, மெக்கின்ஸி நிறுவனத்திலும் நிக் செட்லெட் கோல்ட்மேன் சேஷ் நிறுவனத்திலும் அனுபவம் பெற்றவர்கள்.

 

“வேலைக்கு ஆள் தேடுவோருக்கும் வேலை தேடுவோருக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க இவர்கள் தனி நிறுவனத்தைத் தொடங்கினர். இரு தரப்பாரும் தொடர்பில்லாமல் துண்டு துண்டாகப் பிரிந்து நிற்பதால், இணைப்புப் பாலமாக நாங்கள் இருக்க வேண்டியதாக இருக்கிறது.

 

“வேலை தேடும் பலர், வேலை தரும் நிர்வாகிகள் விரும்புவது என்னவென்று தெரியாமல் இருப்பது மட்டுமல்ல, அந்தத் திறமைகளை எப்படி அடைவது என்பதும் தெரியாமல் இருக்கிறார்கள். வேலை தருவோரும் சரி, இப்போதைய படிப்பு எப்படிப்பட்டது, அதை முடித்து வருவோரிடம் என்னென்ன திறமைகள் இருக்கும் என்பது தெரியாமலேயே எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். எந்த முதலாளியும் தன்னிடம் புதிதாக வேலைக்குச் சேருபவருக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இல்லை. வரும்போதே எல்லாம் தெரிந்த வித்தகராக இருக்க வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள்.

 

“இப்போதைய பொருளாதாரச் சூழலில் வேலைக்குச் சேரும்போதே, அந்த வேலைக்குத் தகுதியானவர்தான் என்று நிரூபிக்க வேண்டிய நிலைமையே நிலவுகிறது. அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யவே நாங்கள் எங்கள் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

“சிஸ்கோ, சேப்வே, ஏர்பிஎன்பி போன்ற பெரிய நிறுவனங்களும், சிறிய அளவில் குடும்பங்களே நடத்தும் நிறுவனங்களும் தங்களிடமிருக்கும் வேலைவாய்ப்பு என்ன என்பதை எங்களுக்குத் தெரிவிக்கிறார்கள். நாங்கள் உடனே அந்த வேலைக்குத் தேவைப்படும் தகுதிகள் என்ன என்று வரைமுறை செய்து அதற்கேற்ப எழுத்துத் தேர்வுகளுக்கும் காணொளித் தேர்வுகளுக்கும் களம் அமைக்கிறோம். பிறகு, வேலை தேடும் இளைஞர்களுக்கு அந்தத் தேர்வுகளை நடத்தி, அவர்களுடைய குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுகிறோம். வேலைக்குத் தேவைப்படும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் உத்திகளையும் இதர பயிற்சிகளையும் அளிக்கிறோம். நல்ல முறையில் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுகிறவர்களை அந்தந்த நிறுவனங்களின் நேர்காணலுக்கு அனுப்புகிறோம்.

 

500-ல் ஒன்று

“எங்கள் நிறுவனத்தில் மொத்தம் 50 ஆயிரம் பேர் பதிவுசெய்துகொண்டனர். ஒரு வேலைக்கு 500 பேர் என்று பத்து விதமான வேலைகளுக்கு அவர்க ளைத் தயார்செய்தோம். வேலை தேடுவோர் நிறுவனங்களுக்கு அவர்கள் தங்களைப்பற்றிய சுயவிவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களையும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்களில் இவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இந்த சுயவிவரக் குறிப்புகள் அனைத்துமே குப்பைகள் என்றே பல நிறுவனங்களில் உள்ள மனித ஆற்றல் துறை ஊழியர்கள் கருதுகின்றனர். 500 நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பினால், ஏதாவது ஒரு நிறுவனம்தான் அதற்குப் பதில் தருகிறது என்றார் அனுபவம் மிக்க விண்ணப்பதாரர். இது உண்மையாகவும் இருக்கலாம். பல நிறுவனங்களின் வேலைக்குத் தாங்கள் பொருத்தமானவர்களாக இருக்க மாட்டோம் என்று விண்ணப்பதாரர்களே முடிவுசெய்து அசுவாரசிய மாக விண்ணப்பங்களை அனுப்புவதும் நடக்கிறது.”

 

பயிற்சியும் முயற்சியும்தான் தகுதி

 

வேலைக்குத் தேடுவோரை எப்படித்தான் தேர்ந்தெடுப்பது? ஹயர்ஆர்ட் நிறுவனம் அதற்கொரு வழிமுறை வைத்திருக்கிறது. ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால், அந்த நிறுவனத்தில் அந்த வேலையிலேயே சேர்ந்துவிட்டதாக நடிக்கச் சொல்கிறது. இணையதளத்தில் வரும் தகவல்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய வேலை என்று வைத்துக்கொள்வோம். ஹயர்ஆர்ட் நிறுவனம், விண்ணப்பதாரரை அழைத்து, “சரி, உங்களை அந்த நிறுவனத்தின் விற்பனை மேலாளராகவே நியமித்துவிட்டோம் என்று கற்பனை செய்துகொள்வோம்… இப்போது நாங்கள் தரும் புள்ளிவிவரங்களை எப்படிப் பரிசீலிப்பீர்கள், இவை மேம்பட என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்” என்று கேட்பார்கள். இப்படித்தான் அந்த வேலைக்கு அவர்களைத் தயார் செய்வார்கள்.

 

சமூக ஊடக மேலாளராக விரும்பினால், டுவிட்டர், ஃபேஸ்புக், பின்டெரஸ்ட், கூகுள், எச்டிஎம்எல், ஆன் பேஜ் எஸ்இஓ கீ வேர்ட் அனாலிசஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் இருக்க வேண்டும். கேன்யி வெஸ்ட் நிறுவனம் இந்த ஃபேஷன் ஆடைகளைப் புதிதாக வடிவமைத்திருக்கிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் வாங்க ட்வீட் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும், என்ன வாசகத்தைச் சொல்லி வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள் என்று ஹயர்ஆர்ட் நிறுவனம் கேட்கும். விண்ணப்பதாரர் அதற்குச் சரியான பதிலைச் சொல்வார். அப்படி முடியாவிட்டால், நிறுவனம் அவருக்கு உணர்த்தி அவரைத் தயார் செய்யும்.

இதைத் தெரிவித்த ஷரேப் ஓர் உதாரணத்தையும் சுட்டிக்காட்டினார். “பார்டர்ஸ் என்ற நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிந்தார் ஒரு பெண். தனக்கு எதிர்காலம் இல்லை என்று சிறிது காலத்துக்குப் பிறகு உணர்ந்தார். அவர் தானாகவே எக்செலைக் கற்றுக்கொண்டு தேர்ந்தார். அவர் எங்களிடம் சேர்ந்தபோது எக்செலில் அவருக்குக் கடுமையான பயிற்சிகளை அளித்தோம். ஸ்டான்போர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களைவிட அவர் சிறந்து விளங்கினார். பிறகு, அதற்கான வேலைவாய்ப்புத் தேர்வில் அவர்தான் முதலிடம் பெற்று உயர் பதவியில் சேர்ந்துவிட்டார். கல்வித் தகுதி என்று பார்த்தால் அவரிடம் ஏதுமி்ல்லை. கடுமையான முயற்சியும் பயிற்சியும்தான் அவரைத் தகுதியுள்ளவராக்கியது.

 

“வேலைக்குத் தகுதியில்லாதவர் என்று ஒருவர் நிராகரிக்கப்பட இரண்டு காரணங்கள்தான் உள்ளன. உங்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டால், எப்படி உதவிகரமாக இருப்பீர்கள் என்று வேலை தருவோருக்குத் தெளிவாக உணர்த்தத் தவறுகிறீர்கள். அடுத்தது, நீங்கள் பார்க்கப்போகும் வேலைக்கு உங்களுக்கு என்ன திறமைகள் தேவை என்று உங்களுக்கே தெரிவதில்லை. இந்தக் காரணங்களால்தான் வேலை கிடைப்பதில்லை” - ஹயர்ஆர்ட் நிறுவனத்தை நடத்தும் இருவரும் கூறுகின்றனர்.

 

புதிதாகச் சிந்திப்பவர்கள், தீர்வுகளைக் காண்பவர்கள்தான் உடனுக்குடன் வேலைகளைப் பெறுகிறார்கள். நீங்கள் படித்த படிப்போ, உங்கள் திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொண்ட முறைகளோ வேலை தருகிறவர்களுக்கு முக்கியமே இல்லை. அவர்களுடைய தொழில் அல்லது வியாபாரத்தை முன்னுக்குக் கொண்டுவர, அவர்கள் லாபம் சம்பாதிக்க நீங்கள் எப்படி உதவியாக இருப்பீர்கள் என்பதுதான் அவர்களுடைய அக்கறை என்பதே நாம் பெற வேண்டிய பாடம்.

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article5344716.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
துன்பங்கள் எல்லாம் தூசிகளே!
 
1_2163712f.jpg
 
“வேலை கிடைக்க வில்லை. சாகலாம் போல உள்ளது.” என்று ஒரு மின்னஞ்சல் வந்தது. எழுதியவர் நல்ல கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் தேறிய பொறியாளர். தாமதிக்காமல் பதில் போட்டேன்.
 
பணியிட மனநலம்
 
வேலையில்லாத நிலை, வேலையில் பளு, வேலையில் மனஅழுத்தம் எனப் பல காரணங்களுக்காகத் தற்கொலைகள் பெருகி வருகின்றன. இது கவலை தரும் விஷயம்.
 
தமிழ்நாட்டில் சாலை விபத்துகள், டாஸ்மாக், மாரடைப்பு போல இதுவும் அவசியம் விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டிய விஷயம். இதன் சமூக, உளவியல், மருத்துவத் தீர்வுகள் எல்லோருக்கும் தெரிய வேண்டியவை. மேலை நாடுகளில் பணியிட மனநலம் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கும் அதன் தேவை வளர்ந்துவருகிறது.
 
துக்கம் எனும் நோய்
 
சுய மதிப்பு இழத்தல், உதவி இல்லாமை மற்றும் நம்பிக்கையின்மை என 3 முக்கிய உளவியல் காரணங்களைத் துக்க நோய்க்குக் காரணமான மனநிலைகள் என்கிறார்கள். ஆமாம், துக்கம் என்பதும் ஒரு நோய்தான்.
 
இதில் நம்பிக்கை யின்மைதான் கடைசியில் தவறான முடிவை எடுக்க வைக்கிறது.
 
நம்பிக்கையை வளர்க்கும் செய்திகளைத் தேர்வு செய்து உட்கொள்வது மிக அவசியம். நம்பிக்கையைக் கெடுக்கும் செய்திகளை நச்சு போலத் தவிர்ப்பது நல்லது. இதை ஒரு திறனாகச் செய்ய நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.
 
வாலியைத் தேற்றிய கண்ணதாசன்
 
கவிஞர் வாலி திரைப்படத் துறைக்கு வருவதற்கு மிகவும் போராடிக்கொண்டிருந்த நேரம். ஒரு முறை சலித்துப் போய் ஊருக்குத் திரும்பலாம் என்று நினைக்கையில் அவர் கண்ணதாசனின் ஒரு திரைப்பாடலைக் கேட்கிறார்.
 
அது அவர் மனதை உறுதி செய்து மீண்டும் போராடித் திரைப்பட வாய்ப்பிற்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. அந்தப் பாடல் “மயக்கமா கலக்கமா?” என்று தொடங்கும்.
 
அதில் என் பிரிய வரிகள்:
 
“உனக்கும் கீழே உள்ளவர் கோடி.
 
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!”
 
அமரத்துவம் பெற்ற இந்த வரிகள் துன்பம் வரும் தருணங்களில் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய வரிகள்.
 
மாறும் நிஜங்கள்
 
வேலை கிடைக்கவில்லை. வருமானம் இல்லை. வேலை போய் விட்டது. குடும்பம் கஷ்டத்தில். வேலையில் தீராத மன உளைச்சல். ஆரோக்கியம் கெடுகிறது. எல்லாம் நிஜமான போராட்டங்களே. எதையும் மறுப்பதற்கில்லை.
 
ஆனால் மறந்துவிட்ட ஒரே உண்மை: இவை அனைத்தும் மாறக்கூடிய நிஜங்கள். இவற்றை மாற்றத் தேவை மனோ திடம்.
 
மாறாத நிஜங்கள்
 
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாற்ற முடியாத நிஜங்களுடன் எத்தனை பேர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்?
 
மன வளர்ச்சி குன்றியவர்கள், சிறு வயதில் பெற்றோர்களை இழந்தவர்கள், போர்க் குற்றங்களால் பாதிக்கப் பட்டோர், இயற்கைப் பேரிடரில் அனைத்து உடைமைகளையும் இழந்தவர்கள், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், விபத்தில் உறுப்பிழந்தவர்கள், சாதிக் கொடுமையால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டோர், வேற்று நாட்டுச் சிறையில் நீதி கிடைக்காமல் வருடக்கணக்கில் சிக்கி உள்ளோர், மனநலம் பாதிக்கப்பட்டுத் தெருவில் விடப்பட்டவர்கள்...இன்னமும் நிறையப் பேரைப் பட்டியலிடலாம்.
 
பூதக்கண்ணாடியில்..
 
இவர்கள் வலிகளை விட நம் வலி பெரிதா? எந்த நம்பிக்கையில் இவர்கள் வாழ்கிறார்களோ, அதே நம்பிக்கை நம்மைக் காக்காதா?
 
யோசித்துப் பார்த்தால் நம்மில் பலர் சமூகத்தின் 98 சதவீத மக்களை விடச் சிறப்பாக இருக்கிறோம். இந்த உண்மையைப் பெரும்பாலான நேரத்தில் நாம் நினைப்பதில்லை. நம்மிடம் இல்லாததை நினைத்து வேதனை கொள்ளும் மனம் நாம் மற்றவர்களை விடச் சிறப்பாக இருக்கிறோம் என்கிற உண்மையைப் புறந்தள்ளி விடுகிறது.
 
இப்படிச் சலித்து எடுத்துப் பிரச்சினைகளைப் பூதக்கண்ணாடியில் வைத்துப் பார்க்கையில் நாம் மலைத்து விடுகிறோம்.
 
நல்லதே நடக்கும்
 
போதாக்குறைக்கு, நாம் பேசும் மொழி நம் எண்ணங்களைக் கூர்மைப்படுத்துகிறது.
 
“இந்த வேலை மாதிரி கஷ்டமான வேலை உலகத்திலேயே கிடையாது!”
 
“என் அளவுக்கு அடிபட்டவன் யாரும் இருக்க மாட்டான்.”
 
“என் நிலைமை என் எதிரிக்குக் கூட வரக் கூடாது.”
 
“அது மாதிரி ஒரு சோதனையை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்ததில்லை”
 
“இந்த மாதிரி ஒரு மோசமான முதலாளி உலகத்திலேயே கிடையாது!”
 
இப்படிப் பேசப்படும் சொற்களை ஆழ்மனம் பதிவு செய்து கொள்கிறது. பின்னர் இவை மெல்ல நம் சுய மதிப்பைக் குறைக்கின்றன. பின் அடுத்தவர் மதிப்பையும் குறைத்துத் ‘தன்னை யாராலும் காப்பாற்ற முடியாது’ என்று நம்ப வைக்கிறது. எதிர்காலம் சூனியமாகத் தெரியும். பின் தன்னம்பிக்கை மறையும். வாழ்க்கை பற்றிய நம்பிக்கை மறையும்.
 
அதனால் படித்துவிட்டு வேலை தேடுவோர், வேலை தாவி வேறு வேலை தேடுவோர், வேலைச் சூழ்நிலையில் சிக்கலில் உள்ளவர்கள் என அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:
 
நல்லது நிச்சயம் நடக்கும் என நம்புவது!!
 
அந்த நம்பிக்கையைத் தரக்கூடிய தெய்வங்கள், மனிதர்கள், புத்தகங்கள், பாடல்கள், வழிமுறைகள், அமைப்புகள், வார்த்தைகள், நடத்தைகள் என அனைத்தையும் தழுவிக்கொள்ளுங்கள்.
 
சிறு தூசி
 
ஒரு சோதனைக் காலத்தில் நான் தலைப்பு பார்த்து வாங்கிய புத்தகம் என் சோதனைகளை விட என் வலிமையை உணர்த்தியது. அந்தப் புத்தகத்தின் பெயர்:
 
“Tough times never last. Tough people do!”
 
ஆண்டவன் இந்தச் சோதனையை உங்களுக்கு அளித்திருக்கிறான் என்றால் அதை வென்று வெற்றி கொள்ளும் திறமை உங்களுக்கு உள்ளது என்கிற காரணத்தில் தான்!
 
கண்ணில் விழும் தூசி கண் பார்வையையே மறைக்கும். அதைத் துடைத்துப் போடுகையில்தான் தெரியும் அது கண் பார்வைக்குக்கூட அகப்படாத சின்னஞ்சிறிய தூசி என்று.
 
எதை இழந்தாலும் இழக்கக் கூடாதது நம்பிக்கை!
 
தொடர்புக்கு: 
gemba.karthikeyan@gmail.com
 
Link to comment
Share on other sites

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை

 

kalam_kala_2173954f.jpg

 

டா க்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய FORGE YOUR FUTURE ஆங்கில நூலின் பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. கலாமிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்த நூல். வெளியீடு: ராஜ்பால் அண்ட் சன்ஸ். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடுகிறது. மொழியாக்கம் மு. சிவலிங்கம். இவர் கலாமின் அக்கினிச் சிறகுகள் நூலை மொழியாக்கம் செய்தவர்.

 

“உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள், உங்களது சுய ஆற்றல்களில் நியாயமான நம்பிக்கை வைக்காமல் உங்களால் வெற்றிபெறவோ, மகிழ்ச்சியை அனுபவிக்கவோ முடியாது” என நீங்கள் பேசியதைக் கேட்டேன். என் மீது எப்படி நான் நம்பிக்கை கொள்வேன்? குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தத் திறமைகளும் என்னிடம் இல்லை. நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்தாது என நினைக்கிறேன். தயவுசெய்து, எனக்கு வழிகாட்டுங்கள்.

 

நண்பரே, உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

வாழ்க்கையின் எந்த ஒரு களத்திலும், தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் எடுத்ததற்கெல்லாம் மன்னிப்புக் கோரியவாறும் ஒருவர் முன்வைக்கும் திட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். இதற்கு மாறாக, தெளிவாகப் பேசும் திறனுடன் தலை நிமிர்ந்து, கேள்விகளுக்குத் திட்டவட்டமாகப் பதில் அளித்து, தனக்குத் தெரியாத எதையும் உடனடியாக ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பவர் மற்றவரின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார்.

 

வழிநடத்தும் நம்பிக்கை

தன்னம்பிக்கை கொண்டுள்ளோர் மற்றவர்களிடமும் அவர்கள் தங்கள் ரசிகர்களாக இருந்தாலும், சகாக்கள் அல்லது எஜமானர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது தங்கள் நண்பர்களாக இருந்தாலும் அனைவரிடமும் நம்பிக்கையைத் தூண்டிவிடுகின்றனர். மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதை வெற்றியடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகத் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் வகுத்துக் கொண்டுள்ளனர்.

 

தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ள முடியும், வளர்த்துக்கொள்ள முடியும் என்பது நல்ல விஷயம். உங்களது சொந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலோ உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலோ நீங்கள் ஈடுபடும்போது, அந்த முனைப்பு நல்ல பலன் தரும்.

 

சுய ஆற்றல், சுய உழைப்பு ஆகியவைதான் தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள். திறன்களில் நாம் நிபுணத்துவம் பெற்று நமக்கு முக்கியமாக உள்ள இந்தத் திறன் தொடர்பான இலக்குகளை அடைவதில் நாம் வெற்றி பெறும்போது, சுய ஆற்றலை நாம் உணர்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதற்காக நாம் கடுமையாகப் பாடுபட்டால், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற அறிதலில் நம்பிக்கை பிறக்கிறது. தோல்விகள் குறுக்கிடும்போது துவண்டுவிடாமல், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதில் இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நம்மை வழிநடத்துகிறது.

 

சுயமதிப்பு என்றால்..

சுய மதிப்பு குறித்த சிந்தனையுடன் இந்த நம்பிக்கை ஒன்றிணைந்து கொள்கிறது. நமது வாழ்க்கை நிகழ்வுகளை நம்மால் சமாளிக்க முடியும், மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நமக்கு உரிமை உள்ளது என்ற அறிதல்தான் பொதுவாகச் சுய மதிப்பு எனக் கருதப்படுகிறது. நற்பண்புகளுடன் நாம் நடந்துகொள்கிறோம், நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கான திறன்படைத்தவர்களாக இருக்கிறோம், நாம் முழு மனதுடன் செயல்படும்போது, நம்மால் போட்டியில் வெல்ல முடியும் என்ற அறிதலிலிருந்தும் சுய மதிப்பு தோன்றுகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்ற உணர்வும் நமது சுய மதிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.

1957-ம் ஆண்டு. சென்னை தொழில்நுட்பப் பயிலகத்தில் (Madras Institute of Technology) நான், இறுதியாண்டு பயின்ற நேரம். ஒப்படைக்கப்பட்ட வேலையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான அவசர உணர்வை எப்படி உருவாக்கிக்கொள்வது என்ற மிகவும் மதிப்புவாய்ந்த பாடத்தை நான் அப்போது கற்றுக்கொண்டேன். ஒரு திட்டத்துக்காக எனது தலைமையில் ஆறு உறுப்பினர் அணியை எனது ஆசான் பேராசிரியர் நிவாசன் அமைத்திருந்தார். தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தின் ஆரம்பக் கட்ட வடிவமைப்பை உருவாக்கும் பொறுப்பு எங்கள் அணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காற்று இயக்கம் மற்றும் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்குவது எனது பொறுப்பு.

 

நீண்ட பட்டியல்

எங்கள் அணியின் மற்ற ஐந்து உறுப்பினர்களும் விமானத்தின் உந்துவிசை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், ஏவியானிக்ஸ், இன்ஸ்ட்ருமன்டேஷன் ஆகியவற்றுக்கான வடிவமைப்பை உருவாக்கும் பணியை ஏற்றிருந்தார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த பேராசிரியர் நிவாசன், திட்ட முன்னேற்றம் குறித்து அதிருப்தி அடைந்தார். மிகுந்த ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். பல்வேறு வடிவமைப்பாளர்களிடமிருந்து தேவையான தகவல்களை ஒன்றுதிரட்டுவதில் எதிர்கொண்ட சிக்கல்களை நான் நீண்ட பட்டியலிட்டதை எல்லாம் அவர் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. எனது ஐந்து சகாக்களிடமிருந்தும் உள்ளீடுகளை நான் பெற வேண்டியிருந்தது. அவை இல்லாமல், வடிவமைப்புப் பணியைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நான் மேலும் ஒரு மாத அவகாசம் கேட்டேன். பேராசிரியர் நிவாசனோ “இங்கே பார் இளைஞனே, இது வெள்ளிக் கிழமை பிற்பகல் நேரம். கான்ஃபிகரேஷன் வரைபடத்தை (விமானத்தின் அனைத்து அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடம்) என்னிடம் காட்டுவதற்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கிறேன். அது எனக்குத் திருப்தியாக இருந்தால், கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிப்பேன். திருப்தியாக இல்லாவிட்டால், உன்னுடைய உதவித்தொகை ரத்து செய்யப்படும்” என்று சொல்லிவிட்டார்.

 

மன அழுத்தம்

என் வாழ்க்கையின் பேரதிர்ச்சி என்னை இடியாகத் தாக்கியது. எனது உயிரோட்டமே அந்த உதவித் தொகைதான். அது நிறுத்தப்பட்டுவிட்டால், விடுதியில் என் உணவுக்கான பணத்தைக்கூட என்னால் கொடுக்க முடியாமல் போய்விடும். மூன்று நாள் கெடுவுக்குள் அந்த வேலையை முடிப்பதைத் தவிர வேறு எந்த வழியுமே இல்லை. நானும் எனது அணி உறுப்பினர்களும் எங்களால் முடிந்த அளவுக்குத் தீவிர முனைப்புடன் செயல்படுவது என முடிவு செய்தோம். 24 மணி நேரமும் பாடுபட்டோம். இரவு முழுவதும் வரைபலகையிலிருந்து எங்கள் தலைகளை நிமிர்த்தவே இல்லை. உணவையும் உறக்கத்தையும் துறந்தோம். சனிக்கிழமை அன்று ஒரு மணி நேரம் மட்டுமே நான் ஓய்வெடுத்துக்கொண்டேன்.

ஞாயிறு காலை எனது வேலையில் நான் மூழ்கியிருந்தபோது, ஆய்வுக் கூடத்தில் வேறு யாரோ இருப்பதை உணர்ந்தேன். அவர் வேறு யாரும் இல்லை, பேராசிரியர் நிவாசன் தான். அமைதியாக அவர் என்னுடைய முன்னேற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனது வேலையைப் பார்த்த பிறகு, பாசத்துடன் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். “ஒரு நெருக்கடியான கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று சொல்லி உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கினேன் என்பது எனக்குத் தெரியும், ஆனால், இந்தத் திட்டத்தை உங்களை முடிக்க வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டார்.

 

மேலும் ஒரு மாதம் இருட்டில் நாங்கள் துழாவிக் கொண்டிருப்பதற்கு இடம் தராமல், அடுத்த மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனப் பேராசிரியர் நிவாசன் தெள்ளத் தெளிவாகக் கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு என்ற நிர்ப்பந்தம்தான், கடந்த சில மாதங்களாக எங்களுக்குப் போக்குக் காட்டி வெற்றியை நோக்கி எங்களை விரைவாகப் பயணிக்க வைத்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய தொடர்கட்டங்களில், நான் பொறுப்பேற்றிருந்த பணியில் அடிப்படைத் தகுதியை மேம்படுத்திக்கொண்டேன். அணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான மென் திறன்களையும் வளர்த்துக்கொண்டேன்.

 

நான்கு படிநிலைகள்

இந்த அனுபவம் தரும் செய்தி என்ன? பின்வரும் நான்கு படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி. முதலாவது, உங்களுடைய இலக்கை வரையறுத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது, அந்த இலக்கை எட்டுவதற்குக் களம் இறங்குங்கள். மூன்றாவது, இலக்கை நோக்கி விரைந்து முன்னேறுங்கள். நான்காவது, உழைப்பு; உழைப்பு; உழைப்பு.

 

உங்களுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயலாக அமையக்கூடியது, இலக்கை நிர்ணயித்துக்கொள்வதுதான். உங்களை மிகவும் ஈர்க்கும் ஒரு துறையில் உங்களுக்கான இலக்கை முடிவு செய்துகொண்டு, அந்த இலக்கை அடைவதற்காகக் கடுமையாகப் பாடுபடுங்கள். இது, ஆயுட்காலம் முழுவதும் நீங்கள் வெற்றிகளைக் குவிப்பதற்கு உந்துசக்தியாக அமையும். மற்றவர்களுடன் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான நம்பிக்கையையும்கூட நீங்கள் பெறுவீர்கள்.

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6536043.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

velaiyai_2174027h.jpg
 
வாய்ப்பு என்பது ஒரு மறைமுக வரம். ஆனால் பல சமயங்களில் சாபம் போலத் தோன்றும். வேலையிலும் தொழிலும் ஏற்படும் பல சிக்கல்கள் நிஜமாகவே வாய்ப்புகள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
 
நல்ல வாய்ப்பை அது வந்து போன பின் உணர்பவர்கள் தான் இங்கு அதிகம். அதைத் தவறவிட்டவர்கள்தான் அதன் அருமை அறிந்தவர்கள்.
 
தெரியாம போச்சே
 
“அப்பவே அந்த கம்ப்யூட்டர் கம்பனியில வேலை கிடைச்சது. இதெல்லாம் நிலைக்காதுன்னு இங்க வந்தேன். எனக்குப் பதிலா சேர்ந்தவரு இப்ப எங்கேயோ போயிட்டாரு. ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருமானம். நாம இன்னமும் இங்கே முப்பதைத் தாண்டலை!” என்று அங்கலாய்த்தார் இருபத்தைந்து வருடங்கள் அனுபவம் கொண்ட ஒரு முதிய மேலாளர்.
 
“யாரு கண்டாங்க ஐ.டியெல்லாம் இப்படி வளரும்னு?” என்று சொல்லி எழுந்து சென்றார்.
 
நெருக்கடியில் வாய்ப்பு
 
“எனக்கு நல்ல பாஸ். அவனுக்கு ஒரு மோசமான பாஸ். நாங்க இரண்டு பேரும் ஒரே கம்பனியில ஒண்ணா ட்ரெய்னியா சேந்தவங்க. புதுசா வந்த எம்.என்.சியில இரண்டு பேருக்கும் வேலை கிடைச்சது. எனக்குப் போகப் பெரிய மனசில்ல. சம்பள உயர்வும் அதிகமில்ல, பாஸ் தொந்தரவு தாங்காம அங்கே போன என் நண்பன் இன்னிக்கு அங்க டிபார்ட்மெண்ட் ஹெட். நான் இங்கே ஒரு புரமோஷன்தான் வாங்கியிருக்கேன். நல்ல பாஸ்னு அந்தப் புது கம்பனிக்கு போகாம விட்டது பெரிய தப்பாப் போச்சு. அது எவ்வளவு பெரிய வாய்ப்புன்னு அப்பத் தெரியாமப் போச்சு!”
 
உடனடி அனுகூலம் எதிர்பார்ப்பது அல்லது இன்றைய பிரச்சினையிலிருந்து உடனடியாகத் தப்பிப்பது இதுதான் நம் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும் மன நிலை. இது நாளைய வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வைக்காது!
 
இன்று பெரிதாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியாது. அதேபோல இன்று சாதாரணமாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியலாம். இந்தச் சிந்தனை இடைவெளியில்தான் வாய்ப்புகள் நழுவிப்போய் விடுகின்றன!
 
ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏதேனும் வாய்ப்பு தென்படுகிறதா என்று பாருங்கள். அது உங்கள் முடிவு எடுக்கும் திறனைக் கூர்மைப்படுத்தும்.
 
பிரச்சினைகளில் வாய்ப்புகளைத் தேடுபவர்கள்தான் வேலையில் பெரிய வெற்றிகளைப் பெறுகிறார்கள்.
 
எனது நெருக்கடி
 
என் ஆரம்பக் காலச் சிக்கல் ஒன்றுதான் என் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறியது. 1990-ல் நடந்த சம்பவம் அது.
 
முனைவர் ஆராய்ச்சியும், மருத்துவ உளவியல் ஆலோசனையும் மட்டும்தான் உலகம் என அப்போது நான் இருந்தேன். ஒரு குடியிருப்போர் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குச் சிறப்பு பேச்சாளனாக வர அழைப்பு கிடைத்தது.
 
முதல் முறை என்பதால் செம கெத்து. புதுச் சட்டை, கூலிங்கிளாஸ் சகிதம் பஸ்ஸில் பாரிமுனை சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை சென்றேன். உடன் என் உயிர் நண்பர் வேறு. சந்துக்குள் நுழைய முடியாது என்ற ஆட்டோ ஓட்டுனருடன் சண்டை போட்டு உள்ளே செலுத்தி ஒருங்கிணைப்பாளார் வீட்டு வாசலில் கித்தாப்பாய் இறங்கினோம். ஆரத்தி எடுக்க ஆளில்லாவிட்டால் பரவாயில்லை. நிகழ்ச்சிக்கே யாரும் வர ஆரம்பிக்கவில்லை. ஒரு வெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டும் பவுடர் பூசி நடனத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இப்படி ஏழு மணிக்குக் கூட்டம் சேர்ந்தது. என்னைப் பேசச் சொன்னார்கள்.
 
நான் பெரிதாகச் சொன்ன உளவியல் விஷயங்கள் எடுபடவில்லை. சில சிரிப்புத் துணுக்குகளுக்கு ஆரவாரமாய்க் கை தட்டினார்கள். இறுதியில் பலமாகக் கை தட்டியபோது ‘போதும்’ என்று நினைத்துக் கை தட்டினார்களா என்று சந்தேகம். இருந்தும் பலர் ஆட்டோகிராப் வாங்கினார்கள். விழா முடிவில் “நீங்கள் கண்டிப்பாக இதை வச்சுக்கணும்” என்று ஒரு சின்ன கவரைத் திணித்தார் அந்த ஒருங்கிணைப்பாளர். பையில் போட்டு விட்டு ஆட்டோ ஏறினோம். முனை தாண்டியதும் பிரித்துப் பார்த்தால் ஆட்டோ காசிற்கே பற்றாத ஒரு ஒற்றை நோட்டு நோஞ்சானாகத் தென்பட, ஆட்டோவை நிறுத்தி பஸ் பிடித்தோம். வீடு வரும்வரை அவர்கள் போற்றிய பூத்துவாலையில் எங்கள் ஆனந்தக் கண்ணீரைத் துடைக்கும் அளவு விழுந்து விழுந்து சிரித்தோம்!
 
எனது வாய்ப்பு
 
அடுத்த வாரமே வேறு ஒரு காப்புரிமை முகவர்களுக்கான கூட்டத்தில் பேச அழைத்தார்கள். நண்பன் காதைக் கடித்தான். “மீண்டும் தேங்காய் மூடி கச்சேரியா?”
 
எவ்வளவு கட்டணம் வேண்டும் என்று அவர்களே கேட்டவுடன் ஒரு நல்ல தொகையைச் சொன்னோம். 20 முதல் 70 வயதுவரை இருந்த மக்கள் கூட்டத்தில் பேசினேன். வண்ணாரப்பேட்டை அனுபவம் நிரம்ப கை கொடுத்தது. அன்றைய பேச்சு மிகச் சிறப்பாக அமைந்ததாகச் சொன்னார் அந்த அதிகாரி, தன் சொந்த வங்கி கணக்கில் உள்ள காசோலைப் புத்தகத்திலிருந்து தாள் கிழித்தார்.
 
“கம்பெனிதான் கொடுக்கிறது என்று பெரிய தொகை கேட்டோம். உங்கள் அக்கவுண்ட் என்றால் கொடுப்பதைக் கொடுங்கள்!” என்றேன். அதற்கு அவர், “உங்கள் பேச்சைக் கேட்ட முகவர்களில் 5% பேர் கூடுதலாக 25% ரிசல்ட் கொடுத்தாலே போதும். இந்த மூலதனம் எனக்கு நூறு பங்காகத் திரும்பி வரும்!” என்றார்.
 
இரண்டுக்கும் ஒரே சொல்
 
ஒரு பெரும் வணிகச் சூத்திரத்தை நொடிப் பொழுதில் கற்றுக் கொண்டதோடு, ஒரு தொழில் வாய்ப்பையும் கண்டுகொண்டேன். தனியார் நிறுவனங்களுக்கு உளவியல் பயிற்சி எடுக்கத் தயாரானேன்.
 
என் வாழ்வின் போக்கையே மாற்றிய தருணம் அது.
 
முதல் அனுபவத்தை மறக்க வேண்டிய சம்பவமாக அல்லாமல் படிக்க வேண்டிய பாடமாக எடுத்துக் கொண்டேன். பின் வருடங்களில் உலகின் முன்னணி நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்க, அந்தக் கற்றல் ஆதாரமாய்த் தேவைப்பட்டது.
 
சீன மொழியில் “நெருக்கடி” மற்றும் “வாய்ப்பு” இரண்டிற்கும் ஒரே சொல் தான். அதை இடம் பார்த்துப் பொருள் படுத்திக் கொள்ள வேண்டும்.
 
உங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்களை நெருக்கடியாகப் பார்ப்பதும் வாய்ப்பாகப் பார்ப்பதும் உங்கள் மனநிலையைப் பொறுத்தது.
 
“வேலை எப்படிச் சார்?” என்றால் உங்களிடமிருந்து வரும் முதல் பதில் உங்களின் இந்த மனநிலையைக் காட்டிக் கொடுத்துவிடும்!
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இந்த நாள் மட்டுமே இனியநாள்!

 

book_2217548h.jpg

 

இந்தப் புத்தகத்தைப் பற்றி நாம் பேசும்முன் இந்தப் புத்தகத்தின் ஆசிரியரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். முழுக்கமுழுக்க கண் பார்வையற்றவரான இவருடைய சாதனைகள் எண்ணிலடங்காதது (www.jimstovall.com). பொதுவாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமோ அல்லது அதற்குமேலோ நாம் நமது வேலைக்கோ அல்லது தொழிலுக்கோ செலவிடுகின்றோம் அல்லவா!

 

அதற்கான அத்தனை பலனும் முழுமையாக நமக்கு கிடைக்கின்றதா? “இல்லை” என்பதுதான் பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கக்கூடும். சரி, இதற்கான காரணம் மற்றும் தீர்வு என்ன? இவற்றுக்கு விடையாக கிடைத்திருப்பதுதான் ஜிம் ஸ்டோவல் (Jim Stovall) எழுதிய “வின்னர்ஸ் விஸ்டம் டு சக்சீட்” (Winners’ Wisdom to Succeed) என்னும் இந்த புத்தகம். மிகவும் பரபரப்பாக விற்பனையான‘த அல்டிமேட் கிஃப்ட்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் இவர்.

 

ஆக்டிவிட்டி மற்றும் ப்ரொடக்டிவிட்டி என்ற இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டினை புரிந்துகொள்ளா மலிருப்பதே இதற்கு காரணம் என்கிறார் ஜிம் ஸ்டோவல். மேலும், கன்னாபின்னாவென்று உழைக்கத் தயாராயிருக்கும் நாம், அதில் எந்த அளவுக்கு ப்ரொடக்டிவிட்டி இருக்கிறது என்பதைப்பற்றி ஆராய்ந்து பார்ப்பதில்லை என்கிறார்.

 

ஒரு சேல்ஸ் கம்பெனியின் ஊழியர் களுக்கு பயிற்சியளிக்க செல்கிறார் ஜிம் ஸ்டோவல், கம்பெனியின் செயல்பாடுகளையும், தயாரிப்புகளையும் பற்றி மணிக்கணக்காக வாடிக்கை யாளர்களிடம் பேசுவதே அவர்களின் பிரதான வேலை. அந்தப் பேச்சிலிருக்கும் உபயோகத்தன்மை (Productivity) பற்றி அவர்களுக்கு உணர்த்த விரும்பிய ஜிம் ஸ்டோவல், அவர்களிடம் ஒரு ஸ்டாப் வாட்ச்சினை அளித்து ப்ரொடக்ட்டிவாக பேசும்போதோ, செயல்படும்போதோ மட்டும் அதனை உபயோகப்படுத்துமாறு கூறுகிறார்.

 

பின்னர் அந்நாளின் இறுதியில் அதனை கணக்கிடும்போது மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே இருப்பதைக் காண்கிறார். பெரிய அளவில் வெற்றிபெற, நிறைய சம்பாதிக்க அல்லது விரைவாக உங்கள் லட்சியங்களை அடைய, நடவடிக்கை மற்றும் ப்ரொடக்ட்டிவிட்டி ஆகியவற்றை பிரித்துப்பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் தினமும் ஒரு அரை மணி நேரமாவது ப்ரொடக்ட்டிவ்வாக செயல்படுங்கள் என்பதே ஜிம் ஸ்டோவலின் அறிவுரையாக இருக்கின்றது.

 

தள்ளிப்போடாதீங்க

 

எல்லோருக்கும் சிறுவயது முதலே அவரவரின் வாழ்க்கைக்கேற்ப சிறந்த கனவுகளும், லட்சியங்களும், திட்டங் களும் இருந்திருக்கும். ஆனால், யதார்த்த வாழ்க்கையில் அவையெல்லாம் காலப்போக்கில் நிறைவேறாமல் நழுவிச் சென்று கொண்டிருப்பதை உணர்கிறோம். எனினும், ஒவ்வொருமுறை அந்த கனவுகள் மற்றும் திட்டங்களைப்பற்றி நினைக்கும்போதும், அதை “ஒரு நாள்” அடைந்தே தீருவேன் என்று நமக்குநாமே சொல்லிக்கொண்டிருப்போம். அந்த “ஒரு நாள்” என்பது ஒருநாளும் வரப்போவதில்லை என்கிறார் ஜிம் ஸ்டோவல்.

 

இன்று நம் கையிலிருக்கும் வெள்ளிக்காசு, நாளை கிடைக்கப் போகும் தங்கக்காசைவிட பலமடங்கு மதிப்புமிக்கது. நிகழ்காலத்தில் செயல்படுத்தப்படும் ஒரு நல்ல திட்டமானது, எதிர்காலத்தில் செயல்படுத்தப்போகும் மிகச்சிறந்த திட்டத்தைவிட பலமடங்கு சிறந்தது என்கிறார் ஆசிரியர். நமது கனவுகளை அடைவதற்கான ஏதோ ஒரு நாளை எதிர்பார்த்து, நமது திட்டங்களையும், செயல்களையும் தள்ளிப்போடாமல் இன்றைய தினமே, அந்த ஒரு நாள் என தீர்மானித்து செயல்படும்போது வெற்றிக்கனி நம் கையில். நேற்று என்பது காலாவதியான காசோலை, நாளை என்பது முன்தேதியிட்ட காசோலை, இன்று என்பதே கையிலிருக்கும் ரூபாய் நோட்டு என்பதை உணர்ந்து செயல்படும்போது நம்முடைய கனவுகள் நனவாகின்றன என்கிறார் ஜிம் ஸ்டோவல்.

 

நேற்றும் நாளையும் ஒன்றல்ல

 

தொடர்ச்சியான முயற்சியும், செயல்பாடுகளுமே எதிர்காலத்தில் நாம் யார் என்பதை தீர்மானிக்கின்றன. மாறாக நேற்று நாம் என்னவாக இருந்தோம் என்பது முக்கியமல்ல என்கிறார் ஜிம் ஸ்டோவல். இதனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வின்மூலம் விளக்குகிறார். 1848-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி போராடிக்கொண்டிருந்தது அயர்லாந்து. அந்த நாட்டைச்சேர்ந்த ஒன்பது இளம் போராளிகள் இங்கிலாந்து அரசால் கைது செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு, ராணி விக்டோரியாவால் ஆஸ்திரேலியாவிலுள்ள இங்கிலாந்து சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

 

சுமாராக நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ராணி விக்டோரியா ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார், அந்நாட்டு பிரதமர் சார்ல்ஸ் டாஃபியைப் பற்றி தெரிந்துகொண்ட ராணி விக்டோரியா வியப்பும், அதிர்ச்சியும் அடைகிறார். காரணம், இவரால் நாற்பதாண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட ஒன்பது தண்டனை கைதிகளில் ஒருவர்தான் அவர். மேலும், மற்ற எட்டுபேரும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மிகப்பெரிய பதவிகளில் இருப்பதையும் அறிந்துகொள்கிறார். மோசமான கடந்த கால நிகழ்வுகளை நமது திடமான செயல்பாட்டால் சிறந்ததாக மாற்றியமைக்க முடியும் என்பதே இவர்களின் மூலம் நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி.

 

ஓவ்வொன்றும் முக்கியம்

 

ஒரு செயலை செய்யத் தொடங்கி முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறோம், இடையில் பல திட்டங்களையும், வழிமுறைகளையும் உபயோகித்து இறுதியில் நமது இலக்கினை அடைந்துவிடுகிறோம். இந்த செயல்பாட்டில் முக்கியமான தருணம் அல்லது திருப்புமுனை எது என்பதை நம்மால் கண்டுப்பிடிக்க முடியுமா?

நூறாவது ரன்னை அடித்து செஞ்சுரி போட்ட ஒரு பேட்ஸ்மேனுக்கு, அவர் அந்த மேட்சில் எடுத்த முதல் ரன் அந்த நூறாவது ரன்னைவிட மதிப்பு குறைந்ததாகிவிடுமா? நிச்சயமாக இல்லை. நூறாவது ரன்னை எட்டிப்பிடிக்க எடுக்கின்ற ஒவ்வொரு ரன்னும் முக்கியமானதுதானே? எத்தனை பேர் அந்த ஒரு ரன் இல்லாமல் தொண்ணுற்றி ஒன்பதில் அவுட் ஆகின்றார்கள்.

 

ஏன் சிலசமயம் எத்தனையோ ஜாம்பவான்கள் கூட ரன் ஒன்றைக்கூட எடுக்காமல் பூஜ்ஜியத்துடன் திரும்புகின்றார்கள். ஒவ்வொரு செயலும் அந்தந்த சூழ்நிலையில் மிக முக்கியமானதே. வெற்றியாளராக மாற வேண்டுமானால், ஒவ்வொரு அடியையும் திறமையாக எடுத்துவைக்க வேண்டியது அவசியம். இதுவே பெரும்பான்மையான வெற்றியாளர்களால் பின்பற்றப்பட்டு, எல்லா நேரத்திலும் அவர்களை வெற்றியா ளர்களாகவே வைத்திருக்க உதவுகிறது.

 

அறிவுரையை ஆராய்ந்துப் பாருங்கள்

 

நமக்கு மற்றவர்களிடமிருந்து எளிதில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒன்று “அட்வைஸ்”. ஒருவரிடமிருந்து அட்வைஸ் பெற விரும்புகிறீர்கள், அதை எவ்வாறு அனலைஸ் செய்து பயன் பெறுவது என்பதற்கான சிம்பிள் ரூல்ஸ்களையும் தந்திருக்கிறார் ஜிம் ஸ்டோவல். முதலில் அட்வைஸ் தருபவரின் திறமை மற்றும் நம்பகத்தன்மை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு அந்த சூழ்நிலையில் என்ன தேவை என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும், மேலும் உங்கள் பிரச்சினையைப் பற்றி முழுமையாக அவர் உங்களிடம் கேட்டு அறிந்திருக்கவேண்டும்.

 

முக்கியமாக அட்வைஸ் தருபவர் அவரது சொந்த கருத்துக்களை உங்கள் மீது திணிப்பவராக இருக்கக்கூடாது. யார் என்ன சொன்னால் என்ன? முக்கியமாக நாம் படிக்க வேண்டியது நம்முடைய அனுபவத்தில் இருந்து படிக்கவேண்டிய பாடத்தை மட்டுமே என்று சொல்லும் ஆசிரியர் நமது வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் அனுபவப் பாடமே சிறந்த அட்வைஸ் என்கிறார்.

பிரச்சினைகளை எதிர்கொண்ட வர்களை மட்டுமே உலகம் நினைவில் வைத்துக்கொள்கின்றது. ஒருவர் நல்லபடியாக பிறந்து, நல்லபடியாக வளர்ந்து, நல்லபடியாக வாழ்ந்து, நல்லபடியாக போய்ச்சேர்ந்தார் என்பது வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய நிகழ்வு இல்லை.

 

இத்தனை பிரச்சினைகளை சந்தித்தார். இப்படிப்பட்ட சொல்யூஷன்களை கொண்டுவந்தார் என்பதுதான் வரலாற்றில் இடம்பிடிக்கின்றது. பல்வேறு பிரச்சினையை எதிர்கொண்டு பல்பைக் கண்டுபிடித்த எடிசன் தான் வரலாற்றில் இருக்கின்றாரே தவிர அந்த பல்பை எரியவிட்டு உபயோகிக்கும் சாமான்யன் வரலாற்றில் இடம்பிடிப்பதில்லை. ஜிம் ஸ்டோவல் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி, இன்றே செயலாற்ற ஆரம்பித்தால் நாம் கனவுகாணும் வாழ்க்கை நிச்சயம் நம் வசமாகும்.

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article6625455.ece

Link to comment
Share on other sites

உருவாக்கிக்கொள்பவைதான் வேலைகள்!

 

work_2218791f.jpg

 

வாழ்க்கையில் உளச் சிக்கல் உள்ளவர்களுக்கும் அவர்களின் வேலைப் பளுவுக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்டார் நண்பர் ஒருவர். வேலைப் பளு அதிகம் இருந்தால் உளச் சிக்கல் வருமோ இல்லையோ, மிகக் குறைவான வேலைப் பளு நிச்சயம் மன உளைச்சலைத் தரும் என்றேன். வேலை குறைவாக இருந்தால் முதலில் ஆறுதலாகத்தான் இருக்கும். நிறைய நேரம் இருப்பது நன்மையாகத் தோன்றும். பின்னர் அதுதான் ஆபத்தாக மாறும்.

 
குறைந்த சம்பளத்திலும் திருப்தி
 
“வேலைன்னு பெரிசா கிடையாது. ஆனால் கண்டிப்பா சீட்டில் இருக்கணும்!” என்று ஆரம்பத்தில் பெருமையாகப் பேசுபவர்கள் பின்னர் நேரத்தைக் கொல்வதைவிடத் தங்கள் அமைதியைக் கொல்வார்கள். வேலை இல்லாதவன் மனம் ஒரு பிசாசின் பட்டறை என்று தெரியாமலா சொன்னார்கள்?
 
நீங்களே யோசித்துப் பாருங்களேன். உற்பத்திக் கூடத்தில் அடிமட்டத் தொழிலாளியின் பணியிடம் அவரது ஒவ்வொரு நிமிட வேலையையும் நிர்ணயித்து விடுகிறது. ஒரு பாகத்தைப் பொருத்துவதற்குள் அடுத்த பாகம் தயாராக நிற்கிறது. அத்தனையையும் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். தேநீர் இடைவெளியும் உணவு இடைவெளியும் போய் வரத்தான் நேரம் சரியாக இருக்கிறது. இதனால் மனதை வேறு எதிலும் செலுத்தாவண்ணம் பணிபுரிகிறார்கள். இதனால்தான் குறைந்த சம்பளத்திலும் பணித் திருப்தி இவர்களிடம் அதிகம் உள்ளது.
 
ஓய்வறியா சூரிய(ளே)னே!
 
என்ன வேலை , எவ்வளவு வேலை என்று அளவிட முடியாத வேலைகளில் யோசிப்பதற்கு நேரம் நிறைய கிடைக்கிறது. அது பெரும்பாலும் மன உளைச்சலில்தான் கொண்டு முடிகிறது.
 
வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களை நான் எப்போதும் பெருமையுடன் பார்ப்பேன். என் வீட்டுப் பக்கத்தில் உள்ள ஒரு பெண்மணி காலை 5 முதல் இரவு 8 வரை பல வீடுகளில் வேலை பார்ப்பவர். ஒரு பக்கம் வீட்டு வேலை. இன்னொரு பக்கம் சமையல். இன்னொரு பக்கம் வண்டி துடைத்தல். இப்படிப் பல வேலைகள்.
 
காலை முதல் இரவுவரை அப்படி ஒரு துறுதுறுப்பு. தெரியாத வேலையே கிடையாதோ என்று சந்தேகிக்கும் அளவு எல்லா வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். யாருக்குப் பிரச்சினை என்றாலும் முதலில் நிற்பார். எங்க ஏரியாவில் எல்லாருக்கும் அந்தம்மா பரிச்சயம்.
 
“ஓய்வறியா சூரியனே” என்று இவருக்கு போஸ்டர் ஒட்ட ஆளில்லை. ஆனால் சொந்தச் சோகங்கள் எவ்வளவு இருந்தாலும் படுத்தால் நிம்மதியாக உறங்கும் வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். உட்கார்ந்து யோசித்தால் பெரும் பட்டியல் போடும் அளவுக்குப் பிரச்சினைகளும் துயரங்களும் அவருக்கு நிச்சயம் உண்டு. ஆனால் நேரம் ஏது?
 
வேலையில் கரைதல்
 
யோசிக்க நேரமில்லை என்பது மறைமுக ஆசீர்வாதம். நம் வாழ்க்கையில் வருத்தப்படவும், கோபப்படவும் ஆட்களுக்கும் சம்பவங்களுக்குமா பஞ்சம்? உட்கார்ந்து யோசித்தால் கசப்புதான் மிஞ்சும். குறிப்பாகக் கடந்த காலத்தை இம்மி அளவும் மாற்ற நமக்குச் சக்தி கிடையாது. வருங்காலம் பற்றிய பயங்களும் பெரும்பாலும் வீண் என்று நமக்கே தெரியும். அதனால் நேற்றைய வாழ்க்கையையும் நாளைய வாழ்க்கையையும் நினைக்காமல் இருக்க, இன்றைய பொழுதில் நிலைக்க நமக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. அது நம்மை முழுவதுமாக உள் வாங்கிக்கொள்ள அனுமதித்து அதில் கரைந்து போக முடிந்தால் நாம் பாக்கியசாலிகள்.
 
இதனால்தான் விழித்திருக்கும் நேரத்தில் அதிகம் வேலை இல்லாதவர்கள் நிம்மதியைத் தொலைத்துவிடுகிறார்கள்.வேலை என்பதை நாம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகப் பார்க்க வேண்டும்.
 
மன அழுத்தம்
 
ஆறு மாதமாகச் சம்பளம் தராத கம்பெனியில் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் மிகச் சிறப்பாகச் செயல்படும் நண்பரைச் சந்தித்தேன். சம்பளம் வராத பிரச்சினையைக் கூட நினைக்க நேரமில்லை என்று சிரித்தார். ஒரு புத்த பிக்குவைப் பார்த்தது போலிருந்ததது. “சம்பளம் வராம எங்கே போகும், அதுக்காக வேலையைக் கெடுக்க முடியுமா?”
 
மன அழுத்தம் மேல்த் தட்டு மக்களுக்கு அதிகமாக வரக் காரணம் அவர்களுக்கு அதிகமான நேரம் கிடைப்பதால்தான். பத்துப் பேருக்குச் சதா பொருள் எடுத்துத் தரும் பெட்டிக்கடைக்காரருக்கோ, சாலையில் மக்கள் நெரிசலில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளிக்கோ வராத மன அழுத்தம், ஏசி அறையின் தனிமையில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாதவருக்கு வருகிறது.
 
வேலையின் முக்கியத்துவம்
 
அலுவலகத்திலும் அதிகம் வம்பு பேசும் மக்கள் வேலை குறைவான பிரிவுகளில்தான் இருப்பார்கள். ஆனால் வேலைப்பளு உள்ள துறைகளில் உடல் அசதி இருந்தாலும் மன வெறுமை இருக்காது. சீனா போன்ற தேசத்தில் மக்கள் மன நலத்துடன் இருக்கக் காரணம் எல்லாரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள். முதியவர்கள்கூட வீட்டில் இருந்தே சின்னச் சின்ன வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள்.
 
வேலை பார்ப்பது முக்கியம். அது நம் படிப்புக்கு, தகுதிக்கு, வசதிக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். வருமானம் இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். குறிப்பாகக் குடும்பத்தை மட்டும் பராமரிக்கும் பெண்கள், ஓய்வுக்குப் பின் முதியோர்கள், படித்து வேலைக்குக் காத்திருக்கும் மாணவர்கள் இவர்கள் அனைவரும் அதிகம் தாமதிக்காமல் சில மணி நேரங்கள் செய்யும் பகுதி நேர வேலையையாவது மேற்கொள்ள வேண்டும்.
 
என்ன செய்யலாம்?
 
தொலைபேசி வழியே பொருட்கள் விற்கலாம். வலைத்தளத்தில் எழுதலாம். பார்வையற்றோர்க்குப் படித்துக் காட்டலாம். சின்ன முதலீட்டில் பலர் சேர்ந்து தொழில் செய்யலாம். டியூஷன் எடுக்கலாம். மொழிபெயர்ப்பு செய்யலாம். உங்கள் துறை சார்ந்து ‘குறைந்த கட்டண ஆலோசகர்’ ஆகலாம்.
 
கோயில்களில் சேவை செய்யலாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் அலுவலகத்தில் உதவிகள் செய்யலாம். சிறியதாகத் தொடங்கும் பல வேலைகள் பின்னர் பெரும் வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தலாம். எதையாவது செய்யலாம். ஆனால் கண்டிப்பாக எதையாவது செய்யணும். வேலைகள் தானாக வருவதில்லை. அவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தொழில் செய்ய ஆசை இருக்குதா?

 

velayai_2230328f.jpg

 

‘‘யாருக்கோ வேலை செஞ்சது போதும். நானா தனியா ஏதாவது பண்ணலாம்னு பாக்கறேன். நல்ல பிஸினஸ் பிளான் இருந்தால் சொல்லுங்களேன்! என்று வந்து அமர்ந்தார் நண்பர்.
 
நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க. லவ் பண்ணனும்னு கேக்கற மாதிரி இருக்கு. உங்களுக்குத் தேவை இருந்தா இந்நேரம் ஆரம்பிச்சிருப்பீங்க. ஐடியா எல்லாம் கேக்கமாட்டீங்க! என்று உரிமையாய்ச் சொன்னேன்.
 
பெட்டிக்கடைத் தகுதி
 
வேலையில் சலிப்பு வரும் போது பலர் சொந்தமாகத் தொழில் செய்வதைப் பற்றி பேசுவர். “இந்த வேலை செய்யறதுக்கு பெட்டி கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம்” என்பர். மகன் படிக்கவில்லை என்றால் “நீ ஆடு மாடு மேய்க்கத் தான் லாயக்கு” என்று சொல்வது போல. நிஜத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பதற்கும் மாட்டைப் பராமரிப்பதற்கும் சிறப்புத் தகுதிகள் தேவைப்படுகின்றன.
 
சின்னப் பெட்டி கடை வைத்திருப்பவர் ஒரு நாள் 14 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யணும். வெயில், மழை பாராது கடையைத் திறந்து வைக்கணும். பந்த் என்றால் கூட ஆறு மணிக்கு மேல் கடை திறக்கக் காத்திருக்கணும். விடுமுறை நாளெல்லாம் கிடையாது. உணவு இடைவேளைக்குக் கூடக் கடை மூட முடியாது. மூலையில் சாப்பிட உட்காருகையில் வாடிக்கையாளர் வந்தால் பொருள் தர எழுந்திருக்கணும். எல்லா வகை மனிதர்களையும் சமாளிக்கணும். போட்ட முதலை ஒவ்வொரு ரூபாயாக உட்கார்ந்து வேலை செய்து திரும்பப் பெறவேண்டும். இதையெல்லாம் செய்யத் தயாராக இருந்தால் தான் பெட்டிக்கடை வைப்பது பற்றி யோசிக்கணும்.
 
தொழில் ஆசை
 
நண்பர் கிளம்பும் போது சொன்னார். “இந்த வேலையில் நான் போட்ட உழைப்பைச் சொந்தத் தொழிலில் போட்டிருந்தால் எங்கோ போயிருப்பேன்!”
 
வேலையில் சலிப்பு வருகையில் நம்மில் பலர் ‘என்ன வேலை இது? இதுக்குச் சொந்தமாக நாமே ஏதாவது பண்ணினால் என்ன?” என்கிற எண்ணம் வருவது இயல்பு. இன்று பலர் நாற்பதுகளில் தனியாக ஆரம்பிக்கும் எண்ணத்தைக் கொண்டுள்ளனர். சிலர் வேலை செய்கையிலே தொழில் பண்ண முடியுமா என்றும் யோசிக்கின்றனர்.
 
வேலையா தொழிலா என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் பலர். அவர்கள் பிரச்சினை என்ன? வேலைக்கான ஸ்திரத்தன்மையும் வேண்டும். தொழிலில் உள்ள வளர்ச்சியும் வேண்டும். இந்த மாறுதலையும் உடனே செய்ய வேண்டும்.
 
வேறு வேறு திறன்கள்
 
நம்மைச் சுற்றி உள்ள வெற்றிக் கதைகளும் நம்மை ஒரே போல யோசிக்க வைக்கின்றன. ஃப்லிப்கார்ட் மூணு வருஷத்தில ஆயிரம் கோடிக்கு மேல போயிருச்சு. ஒரு ஆங்கிரி பேர்ட் கேம் உலகம் முழுதும் சக்கை போடு போடுகிறது. இப்படி வெற்றிக் கதைகள் மட்டும் தான் வெளிச்சத்திற்கு வருகின்றன. ஒரு விதத்தில் இது நம்பிக்கை செய்தியாகத் தெரிந்தாலும் வியாபார உலகின் உண்மைகளை இது உரைப்பதில்லை.
 
யார் முயற்சி செய்தாலும் வெல்லலாம் என்பது நல்ல எண்ணம் தான். ஆனால் அது எத்தகைய முயற்சி என்பது பற்றி விரிவான பார்வையை அது வளர்ப்பதில்லை.
 
வேலைத்திறன்களும் வியாபாரத் திறன்களும் வேறு வேறு. ஒரு நல்ல சமையல் கலைஞர் ஒரு லாபகரமான உணவுச் சாலையின் முதலாளியாக மாற முடியும் என்று அவசியமில்லை. பெரிய நிறுவனத்தில் நல்ல மேலாளராக உள்ளவர்கள் பலர் தங்கள் வியாபாரத்தில் நல்ல மேலாளர்களாகச் செயல்படுவதில்லை. காரணம் களங்கள் வேறு. பொறுப்புகள் வேறு.
 
வேறு வேறு விரக்திகள்
 
மாதம் பிறந்தால் சம்பளம். விடுமுறைகள் நாட்கள் அதிகம் வந்தால் ஓய்வு கிடைக்கும். நம் வேலையை மட்டும் சரிவரப் பார்த்தால் போதும். இது பணியாளர் மன நிலை. அவரே ஒரு முதலாளி ஆகிவிட்டால் மாதம் பிறந்தால் பணியாளர் சம்பளத்திற்கு வழி செய்ய வேண்டும். விடுமுறை நாட்கள் வந்தால் பணி நாட்கள் குறைகிறதே என்கிற கவலை. தன் வேலையே நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் பராமரிப்பது எனும் போது பொறுப்புகள் கூடும்.
 
பணியாளருக்கு ஒரு முதலாளியைத்தான் திருப்திபடுத்த வேண்டும். நீங்கள் ஒரு தொழி புரிபவர் என்றால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் முதலாளி தான். அதனால் பணியில் ஏற்படும் விரக்தியை விட வியாபாரத்தில் விரக்தி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
 
தன்னம்பிக்கை முக்கியம்
 
வேலையில் சஞ்சலப்பட்டு வியாபாரத்தைச் சிந்திக்காதீர்கள். எது வந்தாலும் தாங்கும் உறுதிதான் வியாபாரத்தில் ஈடுபட முதல் தகுதி. ஆரம்ப காலத்தில் வருமான இழப்பைத் தாங்க வேண்டும். வேலையில் உள்ள சமூக அந்தஸ்தை தற்காலிகமாக இழக்க நேரலாம். உங்களைப் போல உங்கள் குடும்பமும் கொஞ்சம் சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும். அவர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்களா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
 
திரும்ப வேலைக்கு வந்தால் சில வேலைகள் கிடைக்கக் கூடியவை. சில வேலைகளை விட்டால் மீண்டும் பெற முடியாது. அதனால் வியாபாரம் என்பது முயற்சி செய்து பார்க்கும் விஷயம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முடிவு.
 
தனியாகத் தொழில் செய்யத் துணிந்து ரிஸ்க் எடுக்கும் மன நிலை, எது வந்தாலும் உறுதியான மனம், மிகுந்த தன்னம்பிக்கை மிக மிக முக்கியம். தெரிந்த தொழில், அதில் ஓரளவு நேரடி அனுபவம், வழி காட்டத் தொழில் துறை ஆசான்கள், வங்கி போன்ற ஸ்திரமான அமைப்பில் குறைந்த வட்டியில் கடன், நீண்ட காலத் தொழில் திட்டம், அனுபவஸ்தர்களை மேலாளர்களாகக் கொள்ளல் போன்றவை உங்கள் தொழில் முயற்சிக்கு உதவும்.
 
இதற்கெல்லாம் தயார் என்பவர்கள் வேலையிலிருந்து சொந்தத் தொழில் செய்ய மெல்ல அடி மேல் அடி எடுத்து வையுங்கள்.
 
லட்சத்தில் ஒருவர்
 
ஒரு சினிமாப் பாட்டில் வியாபாரக் காந்தம் ஆகும் கனவைக் கலைத்து நிஜத்திற்கு வாருங்கள். லட்சக்கணக்கான உயிரணுக்கள் தோற்று ஒன்று ஜெயிப்பது போல லட்சத்தில் ஒன்றுதான் தொழில் வெற்றியும். அந்த ஒருவர் நீங்களாகவும் இருக்கலாம்.
 
தொழில் ஆசை இருந்தால் வேலையில் இருக்கும் போது கனவு காண்பதுடன் உங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
 
தொடர்புக்கு:gemba.karthikeyan@gmail.com
 
Link to comment
Share on other sites

அடியெடுத்து வைக்க ஒரு நொடி!

 

nodi_2238139f.jpg

 

ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதற்குச் சாக்குபோக்கு தேடுபவன் அவற்றைக் கண்டறிந்துவிடுவான். உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு உங்கள் இறந்தகாலத்தை அனுமதிக்காதீர்கள். உயிர்த்திருத்தல் பற்றிப் பேசுங்கள். மரணத்தைப் பற்றிப் பேசாதீர்கள்.

 

நீங்கள் என்ன சொன்னாலும் மரணம் வந்தே தீரும். நண்பர் களும் எதிரிகளும் இருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு பேரையும் பிரித்துணர்வது உங்களுடைய பொறுப்பு. எதிரிகள் உங்களைப் பின்னடைவு அடையச் செய்யாமல் அவர்களிடமிருந்து துண்டித்துக்கொள்வதும் உங்களுடைய பொறுப்பே.

 

நீங்கள் வெளிப்படுத்தும் செயல் மூலம் உங்கள் விதியைத் தேர்வு செய்யும் கடவுள் கொடுத்த மனோ வலிமை உங்களிடம் உள்ளது. நாளை உங்களை உச்சத்தில் பார்க்க இன்று நீங்கள் வெற்றியைத் தேர்ந்தெடுப்பது அவசியம். வெற்றியாளர் போன்றே யோசியுங்கள். நீங்கள் வெற்றியாளர் என்று நம்புங்கள். நீங்கள் வெற்றியாளர் என்று உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவீர்கள்! நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒவ்வொரு நாளும் சாதிப்பதற்கான இன்னொரு நாள்!

 

புதியதொரு எதிர்காலத்தை உருவாக்குவதில் கால தாமதம் ஒன்றும் ஆகிவிடவில்லை. எனது இறந்த காலத்தின் சுமைகள் அதிகமாகிவிட்டதால் இனியும் என்னைப் பெரிதாக மாற்ற முடியாது என்று ஒரு காலத்தில் யோசித்திருக்கிறேன். அதற்குப் பிறகுதான் இறந்த காலம் என்று ஏன் அதை அழைக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. ஏனெனில் அது உங்கள் பின்னால் உள்ளது.

 

ஒரு முடிவை எடுக்க ஒரு நொடிதான் ஆகிறது. ஆயிரம் மைல்கள் பயணத்தைத் தொடங்க ஒரு அடிதான் முதலில் தேவைப்படுகிறது. இன்று என்பது உங்களின் முதல் நாள். நீங்கள் முதல் அடியைத் தற்போது எடுத்து வைக்கிறீர்கள். அதை முதலில் நிகழ்த்துங்கள்!

வாழ்வின் அடித்தளத்திலிருந்து நான் உயர்ந்துள்ளேன்.

என்னால் முடியும் என்றால் யாராலும் முடியும்.

அமெரிக்கத் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான் வெளியிட்டுள்ள From the HOOD to doing GOOD எனும் நூலிலிருந்து

தொகுப்பு - நீதி

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/article6673979.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

தொழிலதிபராக என்ன தேவை?

thunive_2237037f.jpg

 

புத்திசாலித்தனம், கடின உழைப்பு, நல்ல படிப்பு, தொழில் அனுபவம் இருந்தால் மட்டுமே ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக ஆகி விட முடியுமா? இல்லை, அது மட்டும் போதாது. கடந்த பல ஆண்டுகளாக எனக்கு தெரிந்த பலர் மிக பெரிய கனவுகளோடு தங்கள் சுய தொழிலை ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு குறுகிய காலத்திற்கு உள்ளாகவே தாக்கு பிடிக்க முடியாமல் கடையை மூடிவிட்டனர். இவர்களிடம் புத்திசாலித்தனத்திற்கோ, கடின உழைப்பிற்கோ பஞ்சமே இல்லை சொல்ல போனால் ஒரு சிலர் MBA கூட படித்திருந்தார்கள்.

 

அப்படியென்றால் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது ஒரு வெற்றி யாளராகவும், தங்கள் கார்ப்பரேட் பயணத்தில் ஒரு அதி வேக வளர்ச்சியை அடைந்தபோதிலும் தங்களுடைய சொந்த தொழில் என்ற போது அதே மாதிரியான வெற்றியை அடைய முடியவில்லை என்றால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? சற்று சிந்திக்க வேண்டும்!

 

இதை நான் ஆராய்ந்த போது மிகத் தெளிவாக தெரிந்து கொண்டது ஒன்றுதான். ஒரு தொழிலாளியாகச் செயல்படும் போது இருக்க வேண்டிய சிந்தனையும், மனப்பாங்கும் வேறு, ஒரு முதலாளியாக, தொழில் அதிபராக செயல்படும் போது இருக்க வேண்டிய சிந்தனையும், மனப்பாங்கும் வேறு. நான் ஒரு தொழில் நிறுவனராக கற்று கொண்ட மிக பெரிய பாடம் என்னவென்றால் "எது நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு - நான் மட்டுமே தான் பொறுப்பு" என்பதுதான்.

 

என்னுடைய வெற்றி-தோல்வி, இரண்டிற்குமே காரணம் நானாகதான் இருக்க முடியும் என்ற மனப்பக்குவம் அவசியம். நாம் பள்ளியிலோ (அ) கல்லூரியிலோ படிக்கும் போதும் சரி (அ) எங்கேயோ வேலைக்கு செல்லும் போதும் சரி நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு பணி சரிவர முடியவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறுவதோடு, இவர் அதனைச் சரியாக செய்யவில்லை, அவர் அதனை சரியான நேரத்தில் எனக்கு கொடுக்கவில்லை அதனால்தான் என்னால் கொடுத்த பணியை சரியாக செய்ய முடியவில்லை என்று அடுத்தவர் மீது பழியை போடுவதையே ஒரு வழக்கமாக பெரும்பாலானோர் கொண்டுள்ளனர்.

 

இத்தகைய ஒரு சிந்தனையோடு செயல்படும் ஒருவரால் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக உருவெடுக்கவே முடியாது என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. இப்படி நம் சிந்தனைதான் நம் வாழ்க்கையையே வழி நடத்திச் செல்கிறது. டாக்டர் பட்டம் பெற்றவர் கூட சொந்த தொழிலில் தோல்வியை மிக விரைவாக தழுவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

 

இதனால் நான் படிப்பு தேவையில்லை என்றோ, அது உபயோகப்படாது என்றோ எண்ணிவிட வேண்டாம். இன்றைய போட்டி நிறைந்த ஒரு உலகத்தில் படிப்பும், திறமையும் மிகவும் முக்கியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை விட மைன்ட்செட் என்பது தான் ஒரு தொழில் அதிபரின் வெற்றியையும், தோல்வியும் தீர்மானிப்பது என்பது நிச்சயம்.

 

thunive_table_2237038a.jpg

 

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/article6672330.ece

 

Link to comment
Share on other sites

அதிகமான கல்வித் தகுதியும் வேலைவாய்ப்பும்

 

velaivaaippu_2246024f.jpg

 

 

கனிகா மனதில் பதற்றத்துடன் நேர்முகத் தேர்வு அறையில் உட்கார்ந்திருக்கிறாள். எதிரில் உள்ள தேர்வாளர்கள் அவளது தன்விவரக் குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

தேர்வாளர் 1 – நீங்க நிறையப் படிப்பீங்களோ?

 

கனிகா - நிறைய சார். இலக்கியப் புத்தகங்களையும் படிப்பேன். நேத்துதான் கிரேக்கக் காவியமான இலியட் ​நூலின் மொழிபெயர்ப்பைப் படிச்சு முடிச்சேன்.

 

தேர்வாளர் 2 - ஐ.ஸீ. ரொம்ப சீரியசான புத்தகங்கள்தான் பிடிக்குமோ?

 

கனிகா – அப்படின்னு இல்லை. சிட்னி ஷெல்டனின் புத்தகங்களும் பிடிக்கும் சார்.

 

தேர்வாளர் 2 – அப்படின்னா சிட்னி ஷெல்டனின் புத்தகங்கள் சீரியசானவை இல்லையா?

 

கனிகா – அவற்றையும் நிறைய ஆராய்ச்சி செய்த பிறகுதான் எழுதுறார்னு புரியுது. ஆனாலும் ஒரு புதினம் என்கிற மதிப்பீட்டில் அதைச் சீரியசானதுன்னு சொல்ல முடியாது இல்லையா?

 

தேர்வாளர் 1 – (புன்னகையுடன்) இலியட், ஒடிஸி இதோடெல்லாம் ஒப்பிட்டா சிட்னி ஷெல்டன் நாவல்கள் சீரியசில்லைதான்.

 

தேர்வாளர் 2 – ஷெல்டனின் எந்தப் புத்தகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?

 

கனிகா - இஃப் டுமாரோ கம்ஸ்.

தேர்வாளர் 2 – எதனால்? அந்த ​நூலின் முக்கியக் கதாபாத்திரம் ஒரு பெண்ணாக இருப்பதாலா?

 

கனிகா – அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மிகவும் புத்திசாலித்தனமான, சவால்களைக் கச்சிதமாகச் சந்திக்கக்கூடிய ஒரு பெண்ணாக அவள் இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

 

தேர்வாளர் 1 – நீங்களும் அப்படித்தானா?

 

 

கனிகா - புத்திசாலின்னுதான் நினைக்கிறேன். ஆனால் ட்ரேஸி மாதிரிச் சதிவேலையிலெல்லாம் ஈடுபட மாட்டேன். என்னை நம்பலாம். (சிரிக்கிறாள். தேர்வாளர்களும் சிரிக்கிறார்கள்.)

 

தேர்வாளர் 2 – நீங்கள் புத்திசாலின்றதை நம்பறேன். நிறையப் படிச்சிருக்கீங்க. (கனிகா கொஞ்சம் குழப்பமாகப் பார்ப்பதைக் கவனித்து) நீங்க படிச்ச புத்தகங்களைச் சொல்லலே. உங்களுடைய கல்வித் தகுதியைச் சொன்னேன்.

 

கனிகா - ரொம்ப தாங்ஸ் சார்.

 

தேர்வாளர் 1 – (மற்றொரு தேர்வாளரைக் கொஞ்சம் விஷமமாகப் பார்த்தபடி) ஏன் சார், மிஸ் கனிகாவுக்குத்​ தேவைக்கு அதிகமாகவே க்வாலிஃபிகேஷன் இருக்கே, என்ன செய்யலாம்?

 

தேர்வாளர் 2 – அதுதான் நானும் யோசிச்சுக்கிட்டிருக்கேன்.

 

கனிகா- (சற்றே பதற்றத்துடன்) அதிகமா க்வாலிஃபை ஆனால் நல்லதுதானே சார்?

 

தேர்வாளர் 1 – அப்படிச் சொல்ல முடியாது. குறைவான கல்வித் தகுதி மாதிரியே மிக அதிகமான கல்வித் தகுதியும் சில சமயம் சங்கடத்தை உண்டு பண்ணும்.

 

தேர்வாளர் 2 – சொல்லப்போனால் கொஞ்சம் கம்மியாக இருந்தால்கூட உரிய பயிற்சி கொடுத்துச் சரி செய்து விடலாம்... அது இருக்கட்டும், நீங்களே சொல்லுங்க இந்த வேலைக்கு நீங்கள் ஓவர்-க்வாலிஃபைடு இல்லையா?

 

கனிகா (தடுமாறுகிறாள். பின் மெல்ல) - அப்படிச் சொல்ல முடியாது சார். எனக்குக் கல்வித் தகுதி அதிகமாக இருப்பது உங்க நிறுவனத்துக்கும் நல்லதுதானே?

 

(தேர்வாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். பிறகு மேலும் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். பதற்றத்தில் இருக்கும் கனிகா அவற்றுக்கு அரைகுறையாகப் பதில் சொல்கிறாள்).

 

தேர்வாளர் 1 – நாங்க கேட்க வேண்டியதைக் கேட்டுட்டோம். நீங்க ஏதாவது எங்களைக் கேட்கணுமா?

 

கனிகா - எதுவுமில்லை சார். ஆனால் அதிகமாகப் படித்ததே என் வேலை வாய்ப்பை தடுத்திடக் கூடாது. அந்தக் கவலைதான் எனக்கு.

 

தேர்வாளர் – (சிரித்தபடி) பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட்.

 

(தேர்வாளர் கூறியதை எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது என்று புரியாமல் கனிகா குழப்பத்துடன் விடை பெறுகிறாள்)

எதிர்பாராத கோணங்களில் கேள்விகள் வரும்போது திகைப்படைவதும், பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்வதும் இயற்கையானதுதான். ஆனால் அதுபோன்ற கணங்களில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிந்தனையில் வேகம் கூட்டிக் கொள்வது அவசியம்.

 

“தேவைக்கதிகமான கல்வித் தகுதி கொண்டவரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?’’ என்ற கேள்வி கனிகாவிடம் மறைமுகமாக எழுப்பப்படுகிறது. இதற்குப் பலவிதங்களில் பதில் கூற முடியும்.

“கல்வித் தகுதி ஒருபுறம் இருந்தாலும் நடைமுறை அனுபவம் என்பது மேலும் முக்கியம்’’ என்று கூறித் தன்னடக்கத்தை வெளிப்படுத்திக் கொள்ளலாம். இதன் ​மூலம் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கர்வமின்றிப் பணிபுரிவேன் என்பதையும் அவள் வெளிப்படுத்தியதாக அர்த்தம்.

 

வேறொரு விதத்தில் கனிகா சாமர்த்தியமாக விடை அளித்திருக்கலாம். “நான் சீக்கிரம் எதையும் நன்றாகக் கற்றுக் கொள்ளக் கூடியவள் என்பதற்கான முதல் ஆதாரம் இந்தக் கல்வித் தகுதிகள். வேலையையும் சீக்கிரம் கற்றுக் கொள்வேன் என்பதற்கான அடிப்படையாக இதை​ வைத்துக்​ கொள்ளலாமே’’ என்றும் கூறியிருக்கலாம்.

 

தவிர ஒரு கேள்விக்குச் சரியாக விடையளிக்கவில்லை என்று தோன்றினால், படபடப்பைக் கூட்டிக் கொண்டு அடுத்தடுத்த கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தடுமாறக் கூடாது. யாராக இருந்தாலும் சில கேள்விகளுக்குத் தவறான பதில்களையோ, முழுமையற்ற பதில்களையோ அளிக்கத்தான் செய்வார்கள். எனவே அடுத்தடுத்த கேள்விகளில் கவனம் செலு​த்த வேண்டுமே தவிர, ஏற்கனவே அளித்த பதில்களையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

 

தவிர “நீங்கள் வேறு ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமா?’’ என்று தேர்வாளர்கள் கேட்டபோது கனிகாவின் பதில் மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம். “இவ்வளவு அருமையான வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி சார். நான் ஏதாவது விஷயத்தில் மேலும் கவனம் செலுத்த வேண்டுமென்று நினைத்தால் அதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். அடுத்த கட்டத்தில் சந்திப்போமென்று நம்புகிறேன்’’ என்பதைப் புன்னகையுடன் கூறியிருக்கலாம். ஒவ்வொரு சின்ன விஷயமும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6695279.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
தொழில்முனைவோருக்கு... முத்தான 10 பாடங்கள்!
Tamil_News_8104516863823.jpg
 
இந்தியாவில், மென்பொருள் துறையில் தவிர்க்க முடியாத சக்தி அசிம் பிரேம்ஜி. ‘விப்ரோ’ நிறுவனத்தின் தலைவர். ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட, ‘2014ம் ஆண்டின் உலக பணக்காரர்கள்’ பட்டியலில் 61வது இடம் பிடித்திருப்பவர். 2010ல் உலகின் சக்தி வாய்ந்த 20 பேரில் ஒருவராக ‘ஆசியாவீக்’ பத்திரிகையால் அடையாளம் காணப்பட்டவர். தன் அனுபவத்திலிருந்து அவர் கூறும் இந்தப் பாடங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பொருத்தமானவை!
 
‘‘ஒன்று உங்களிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்கும் போதுதான் அதன் உண்மையான மதிப்பை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள்... இது வாழ்க்கையின் வேடிக்கையான வாடிக்கை. என் தலைமுடி கருமையிலிருந்து கருமையும் வெண்மையும் கலந்த நிறத்துக்கு மாறி, இறுதியாக முழுக்க நரைத்தபோதுதான் இளமைக்கேயான கிளர்ச்சியையும் உற்சாகத்தையும் நான் உணர ஆரம்பித்தேன். வழியில் கற்றுக்கொண்ட சில பாடங்களை நான் நேர்மையாக மதிப்பிட ஆரம்பித்ததும் அப்போதுதான். 
 
நீங்கள் நுழைந்திருக்கும் இந்த உலகம், நான் தொழிலில் நுழைந்தபோது, இப்போதிருப்பதைவிட பலவிதங்களில் மிகவும் வேறுபட்டிருந்தது. அது அறுபதுகளின் பிற்பகுதி... இந்தியா அப்போதும் உணவு போன்ற அடிப்படை விஷயங்களுக்கு பிற நாடுகளைச் சார்ந்திருந்தது. நாங்கள் வெளிநாடுகளுக்குப் போனபோதெல்லாம் சுயபச்சாதாபத்தோடு, வியப்பும் எங்களுக்கு எழுந்தது. 
 
‘இந்தியாவுக்கு வந்தவர்கள் எல்லாம், இந்தியாவுக்கு தங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்’ என்று யாரோ ஒருவர் எப்போதோ என்னிடம் சொல்லி யிருந்தார். இப்போது, இந்தியாவால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று பார்ப்பதற்காக வருகிறார்கள். ஒரு நம்பிக்கை மிகுந்த இந்தியனாக, நம் நாடு இனத்தாலும் கலாசார பன்முகத்தன்மையிலும் உயர்ந்து இருப்பதையும், நம் நாட்டில் நிலவும் மதசார்பற்ற ஜனநாயகம் ஒரு நிலையான சமூகத்தை கட்டமைக்க நமக்கு உதவுவதையும் நான் காண்கிறேன்.
 
பாடம் 1: 
 
பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்! 
 
40 ஆண்டுகளுக்கு முன், அமல்னெரில் இருக்கும் ‘விப்ரோ’ தொழிற்சாலைக்குள் நான் நுழைந்தபோது ஏற்பட்ட முதல் எண்ணம் இதுதான். அப்போது எனக்கு 21 வயது... கடைசி சில வருடங்களை கலிஃபோர்னியா, ஸ்டாண்ட்ஃபோர்டு யுனிவர்சிட்டி இன்ஜினியரிங் ஸ்கூலில் கழித்திருந்தேன். சவால்கள் நிறைந்த எண்ணெய் நிறுவன தொழிலுக்கு பதிலாக நல்ல, குஷியான ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கச் சொல்லி நிறைய பேர் எனக்கு அறிவுரை சொல்லியிருந்தார்கள். 
 
இப்போது நினைத்துப் பார்க்கும் போது, அதற்குப் பதிலாக நான் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடிவெடுத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில், தலைமைப் பண்பு அதற்குள் இருந்துதான் தொடங்குகிறது. அது ஒரு சின்னக் குரல்... நீங்கள் தொலைந்து போனதாக உணரும்போது, ‘எங்கே போக வேண்டும்’ என்பதை உங்களுக்குச் சொல்லும். அந்தக் குரலை நம்பினால், உங்களை நீங்களே நம்புவீர்கள். உங்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்று வரும்போது, உங்களுடைய தலைவிதிக்கான பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  
 
பாடம் 2:
 
சந்தோஷத்தைச் சம்பாதியுங்கள்! 
 
இருக்கும் 5 ரூபாயை விட, இன்னும் ஒரு ரூபாயை சம்பாதிப்பது என்பது மிகவும் மதிப்பு வாய்ந்தது. உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட, பரம்பரைச் சொத்துகளை வைத்திருப்பவர்கள், ‘எளிதாக வாழ்ந்தோமா, போனோமா’ என்கிற பழைய பழமொழியையே கடைப்பிடிக்கிறார்கள். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்திருந்தால், அதன் அருமை நமக்கு மட்டும்தான் தெரியும். 
 
பாடம் 3:
 
தோல்வியைப் போன்ற வெற்றி வேறு எதுவும் இல்லை! 
 
எல்லா நேரத்திலும் ஒருவரால் சதமடிக்க முடியாது. இதுதான் நான் கற்றுக் கொண்ட மூன்றாவது பாடம். வாழ்க்கை, நிறைய சவால்களைக் கொண்டது. சிலவற்றில் வெற்றி பெறலாம், சிலவற்றில் தோற்க நேரலாம். வெற்றி பெற்றதை அனுபவிக்க வேண்டும். ஆனால், அதை தலைக்கு மேல் ஏற அனுமதிக்கக் கூடாது. அப்படி நடக்கும் தருணம் எனில், ஏற்கனவே நீங்கள் தோல்விப் பாதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையில் எதிர்பாராத தோல்வி குறுக்கிட்டால், அதை இயற்கையான நிகழ்வாக எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் எதையாவது இழக்கும்போது, அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினையை இழக்காதீர்கள். 
 
பாடம் 4:
 
வெற்றியைப் போன்ற தோல்வி வேறு எதுவும் இல்லை! 
 
நான் கற்றுக்கொண்ட நான்காவது பாடம்... பணிவின் முக்கியத்துவம்! நம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் நடுவில் மிகச் சின்ன இழைதான் வித்தியாசம் இருக்கிறது. நம்பிக்கையுள்ள மனிதர்கள் எப்போதும் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஐரோப்பாவிலுள்ள நிர்வாகிகள் குறித்து ஓர் ஆய்வு நடந்தது. தலைமையில் வெற்றி பெறத் தேவைப்படும் ஒரு முக்கியமான தகுதி என்னவென்றால், எந்தச் சூழ்நிலையிலும் கற்றுக் கொள்வதற்கு விருப்பத்தோடு இருப்பதுதான் என்கிறது அந்த ஆய்வு. இன்னொருபுறம் கர்வம், கற்றுக் கொள்வதற்குத் தடை போட்டுவிடும். தெரிந்து கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிற ஒருவர், செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சரியாக செய்து முடிக்கிறார் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். 
 
பாடம் 5:
 
ஒரு சிறந்த வழி இருக்க வேண்டுமே! 
 
ஒன்றை எப்படி நன்றாகச் செய்து முடித்தோம் என்பதையல்ல... அதற்கு உறுதுணையாக ஒரு சிறந்த வழி இருந்தது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒரு பயணத்தில் விசேஷத் திறமை என்பது சென்று சேரும் இடம் அல்ல. சில நேரங்களில் படைப்பாற்றலுக்கும் கண்டுபிடிப்புக்கும் மற்ற துறைகளில் இருந்து உத்வேகம் தேவைப்படலாம். இசையில் ஐன்ஸ்டீனுக்கு இருந்த ஆர்வம் இயற்பியலில் இருந்ததைப் போலவே அதிகமாக இருந்தது. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு தத்துவவியலாளர் என்பதைப் போலவே கணித மேதையாகவும் இருந்தார். தனித் திறமையும் படைப்பாற்றலும் ஒன்றுக்கொன்று கையைப் பிடித்துக் கொண்டு செல்பவை. 
 
பாடம் 6:
 
பதிலளியுங்கள்...  பதிலடி கொடுக்காதீர்கள்!
 
வெற்றி மற்றும் தோல்விக்கான வித்தியாசத்தைப் போலவே பதில் சொல்வதற்கும் எதிர்வினை ஆற்றுவதற்கும் உலக அளவு வித்தியாசம் இருக்கிறது. நாம் பதில் சொல்லும் போது, அமைதியான மனநிலையோடு ஒரு விஷயத்துக்கு எதெல்லாம் பொருத்தமாக இருக்கும் என்று மதிப்பிடுகிறோம். நம் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்திருக்கிறோம். எதிர்வினையாற்றும் போது, எதிராளி நம்மிடம் எதை எதிர்பார்க்கிறாரோ அதையே செய்து கொண்டிருக்கிறோம். 
 
பாடம் 7:
 
உடல்நலம் பராமரியுங்கள்! 
 
இளமையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது எளிது. உடற்பயிற்சி நீண்ட நேரம் நாம் உழைக்க உதவுகிறது என்பதற்கு மட்டுமல்ல... நாம் தூங்கும் நேரத்தையும் வெகுவாகக் குறைக்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். மன அழுத்தம் உலகம் முழுக்க அதிகமாகி வருகிறது என்பது உண்மை. அதை சமாளிக்க நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். 
 
பாடம் 8:
 
முக்கியமான தகுதிகளை எப்போதும் விட்டுக் கொடுக்காதீர்கள்! 
 
‘மனக் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். ஆனால், காற்று உங்களுடைய தடங்களை அழித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று மகாத்மா காந்தி சொல்வார். எதற்காகக் களத்தில் நிற்கிறோம், செயல்படுகிறோம் என்பதை ஒருவர் வரையறுத்துக் கொள்ள வேண்டும். அது கஷ்டமுமல்ல. ஒன்றை விவரிக்க பயன்படுத்தும் வார்த்தைகளில் அல்ல... சின்னச் சின்ன செயல்பாடுகளில்தான் மதிப்பீடுகள் இருக்கின்றன. அதுதான் மிகக் கடினமான பகுதி. யாரோ ஒருவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்... ‘நீங்கள் சொல்வதை என்னால் கேட்க முடியவில்லை. ஏனென்றால், நீங்கள் செய்தது அதைவிட சத்தமாக வெளியே வந்துவிட்டது...’ 
 
பாடம் 9:
 
வெற்றி பெற விளையாடுங்கள்! 
 
வெற்றி பெறுவதற்காக விளையாடுவது, நமக்குள்ளும் நம் குழுவினருக்குள்ளும் இருக்கும் சிறந்த விஷயங்களை வெளியே கொண்டு வரும். நமக்கு எட்டாத தூரத்தில் இருப்பதை அடைவதற்கான அளவுக்கு நமது விருப்பத்தை விரிவுபடுத்தி வெளியே கொண்டு வரும். எனினும், இது என்ன விலை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்பதல்ல. ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்பதும் அல்ல. மற்றவர்களின் செலவில் வெற்றியடைய வேண்டும் என்பதும் அல்ல. எல்லா நேரங்களிலும் புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தொடர்பானது. கடந்த முறை செய்ததை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்கான தொடர் முயற்சி. 
 
பாடம் 10:
 
சமூகத்துக்குத் திருப்பிக் கொடுங்கள்!
 
சிறிய அளவிலேனும் இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சமூகப் பொறுப்பு நம் எல்லோருக்குமே இருக்கிறது. இருக்கிற அனைத்து சவால்களிலும் என்னைப் பொறுத்த வரை முக்கியமானது கல்வி. ஒரு முரண்பாடான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்... ஒரு பக்கம், வேலைவாய்ப்புகளை வைத்துக் கொண்டு பொருத்தமான திறமைசாலிகளை தேடிக் கொண்டிருக்கிறோம்... மற்றொரு பக்கம் பரவலாக வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வறுமை. இந்த இரண்டு விளிம்புகளையும் இணைக்க ஒரே வழி, அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க வழி வகை செய்வதுதான்!
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.