Jump to content

விடிய விடிய முழித்திருக்கும் பிள்ளைகள் தூங்க வைக்க போராடும் பெற்றோர் கணவன் மனைவிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அனேகமான எமது குடும்பங்களில் அன்றாடம் நடைபெறும் ஒரு முடிவில்லா விடயம் நீயா நானாவில் பார்க்க கிடைத்தது.

இங்கு ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் இருபாலருமே தாங்கள் செய்வது சரி தான் என்று வாதாடுகிறார்கள்.

 

இவர்களை தூங்க வைக்க பெற்றோர்கள் மிகவும் கஸ்டப்பட்டு நோய் நொடிக்குள்ளும் சிக்கித் தவிக்கிறார்கள்.

 

இங்கு வேதனையான விடயம் என்னவென்றால் இளம் வயது தம்பதியினர் கூட ஒருவர் தூங்கும் போது மற்றவர் கணனி முன்பாகவோ தொலைக்காட்சி முன்பாகவோ விடிய விடிய இருக்கிறார்கள்.

 

முடிவில் டாக்டர்கள் கூறுவதைக் கேட்டால் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனேகமானோர் ஏதோ ஒரு வகை தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

எமது குடும்பங்களிலும் அனேகமாக பல்கலைக் கழகம் செல்லும் பிள்ளைகள் வீட்டில் இதே பிரச்சனை இருக்கவே செய்கிறது.அப்படியான பிரச்சனை உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒரு தடவையாகினும் பிள்ளைகளுக்கு போட்டுக் காட்டலாம்.இப்போதைக்கு எதுவும் இல்லாவிட்டாலும் எதிர்காலங்களில் எப்படியான பிரச்சனைகள் வரலாம் என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன் மிகவும்   பயனுள்ள  ஒரு நிகழ்வு.. இக்கால  பிரச்சினையும்  இது தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.