Jump to content

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களில் 32 சதவீதமானவர்கள் வாழ்க்கை துணையை விட்டு விலக திட்டம் - புதிய ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சமூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது  வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
article-2677981-04C761A5000005DC-909_634
அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் ஈ காட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
 
இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பேஸ்புக்குகளை உபயோகிக்கும் 43 நாடுகளைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற, திருமணம் செய்து கொண்ட18 வயதுக்கும் 39 வயதுக்குமிடைப்பட்ட வயதுடைய 1160 தனி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
 
பேஸ்புக்கை அதிகளவில் உபயோகிப்பவர்கள் விவாகரத்து தொடர்பில் 2.18 சதவீத வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.    
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா தப்பிச்சன் 40 வந்திட்டுது. :lol:

எதுக்கும் ஆத்துக்காரரை கேட்டுப்பாருங்கோ அவர் இப்பவும் ஐடியா வச்சிருக்கிறாரோ தெரியேல்ல
Link to comment
Share on other sites

எதுக்கும் ஆத்துக்காரரை கேட்டுப்பாருங்கோ அவர் இப்பவும் ஐடியா வச்சிருக்கிறாரோ தெரியேல்ல

அவருக்கும் 43 ஆகீட்டுது அப்பிடி ஐடியா இருக்கிறமாதிரி தெரியேல்ல. அப்பிடி ஏதும் இருந்தாலும் சொந்த செலவில எல்லாத்தையும் குடுத்து அனுப்பீடுவன் அண்ணோய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் தொடர்ந்து தரித்து நிற்பது என்பது முடியாத காரியமாகத் தான் இருக்கிறது காரணம்...பிரச்சனைகள் உருவாகிக்கொள்வதற்கு திருமணம் செய்தவர்கள்,செய்யாதவர்கள் என்று இல்லை.
என்னைப் பொறுத்த மட்டில் தேவை அற்ற பிரச்சனைகள் எல்லாம் வந்து சேரும் இடம் முகநூல்.கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் கோவம் வராதவர்களுக்கே வந்து சேர்ந்துவிடுகிறது..அந்தக் கோவத்திலிருந்து ஆரம்பித்து நட்புக்களுக்கிடையில் அன்பாக, பழகுபவர்களுக்கிடையில் கூட பிரிவினைகளை உண்டு பண்ணிவிடுகிறார்கள்.
எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்ற ஒன்று இருக்காமல் இருக்காது ஆனால் அந்த தீர்வு சுய நலம் சார்ந்ததாக ஒரு தலைப் பட்சமானதாக இருக்க கூடாது.

பொழுது போக்கிற்காக நாலுவகை கதைகளையும் சொல்லிக் கொண்டு இருந்துட்டு, ஒருத்தி வந்து திடீர் என்று ஒரு படத்தை போட்டு மூன்றெத்து சொல்லைச் சொன்னால் அதன் பின்,தொடர்ந்து பேசுவார்கள் என்று எதிர் பார்க்க முடியாத நிலையில் தான் இருக்க வேண்டி இருக்கிறது..

பிரிவினைகளை ஏற்படுத்துவற்கு முதல் காரணிகளாக இருப்பவர்கள் பெண்கள்.என்ட கண்ணால  கண்ட காட்சிகள் நிறைவே இருக்கிறது..இப்படியான உறவுகள் ஏற்படுத்தும் குழப்பங்களால் இயற்கையாகவே அரை,குறை உயிரோடு,வாழ்வோடு போராடிக் கொண்டு காலத்தை நகர்த்திக் கொண்டு இருப்பவர்களுக்கு மேலதிக மனத் தாக்கத்தை தான் இவ்வாறன உறவுகள் குடுக்கிறார்கள்.நட்புக்களுக்கு இடையில்,பிரிவுகள் ஏற்படுதற்கு ஆய்வுகள் மேற்கொண்டு தான் கண்டு பிடிக்க வேணும் என்று இல்லை.சாதரணமாக கொஞ்ச நேரம் போய் இருந்து ஒரு அழகான படத்தைப் போட்டுட்டு இருந்தாலே புரியும்.அதற்கு கணவன்,மனைவியாகவோ,இல்லைக்  காதலன்,காதலியாகத் தான் இருக்க வேணும் என்று இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு கலியாணவீட்டுக்கு போனனான். பரவாயில்லாத சனம்......

ஒரு கொஞ்ச ஆக்களை எனக்கு தெரியவேயில்லை....நைசாய் விசாரிச்சு கொண்டு போன இடத்திலைதான் தெரிஞ்சுது....அவையள் பேஸ்புக் பிரண்ட்/சொந்தங்களாம்..... :o

 

கிளிஞ்சுது போ லம்பாடி லுங்கி  :lol:  :D

 

இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால் உங்கை கன சனத்துக்கு உரித்து சொந்தத்தை விட பேஸ்புக்கு சொந்தம் முக்கியமாய்ப்போச்சு  :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு கலியாணவீட்டுக்கு போனனான். பரவாயில்லாத சனம்......

ஒரு கொஞ்ச ஆக்களை எனக்கு தெரியவேயில்லை....நைசாய் விசாரிச்சு கொண்டு போன இடத்திலைதான் தெரிஞ்சுது....அவையள் பேஸ்புக் பிரண்ட்/சொந்தங்களாம்..... :o

 

கிளிஞ்சுது போ லம்பாடி லுங்கி  :lol:  :D

 

இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால் உங்கை கன சனத்துக்கு உரித்து சொந்தத்தை விட பேஸ்புக்கு சொந்தம் முக்கியமாய்ப்போச்சு  :(  :(  :(

அந்த பேஸ்புக் சொந்தங்கள் காப்பிலி,வெள்ளை.ரொமானியன்கள். அல்பேனியர்களாய் இருக்கமாட்டார்கள் என நினைக்கிறன் கு.சாமியன்னேய் .நம்ம சனம் ஊர் நாகபூசனியம்மனுக்கு போய்வர பஞ்சிபட்டு லண்டனிலேயே அம்மனை கொண்டு வந்தாச்சு,அதே போல்  ஊரில் குடும்ப உறவுகளே இரண்டு நம்பருக்கு குறைவாக இல்லாமல் உற்றமும் சுற்றமும் கலாதியாய் வாழ்ந்த சமூகத்தில் வாழ்ந்துவிட்டு இங்கு உங்களுக்கு விளங்கும் சொல்லவே வேண்டாம் பாவம் விட்டுவிடுங்கள். :D

                                                                                                                                                                                                     இந்த முக நூல் ஆரம்பத்தில் பிடிக்காவிட்டாலும் சுவிசிலும், கனடாவிலும், அவுசிலும்,ஊரிலும் சொந்தங்கள் அருகாமையில் இருப்பது போன்ற பினைப்பு இதற்க்கு வேறையாய் முகநூல் வைத்திருந்தால் நல்லது அல்லாவிடின் லைக் பன்னுங்க பிச்சைகாரர்களின் தொல்லைதான் முன்னுக்கு வரும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி தங்கள் படங்களை விதம்,விதமாக எடுத்துக் கொண்டு வந்து போட்டு மற்வைக்கு எடுப்புக் காட்டிக் கொண்டு இருக்கிறவைக்கு,யாலியாக இருக்க  விரும்பிறவைக்கு முகநூல் போன்றவை மிகவும் நல்லது போன்று இருக்கும்...மனிதன் இருக்கும் மட்டும் சந்தோசமாக வாழத் தான் வேண்டும் இல்லை என்று சொல்ல வில்லை...எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது தானே..
சில,பல வேண்டாத விடையங்களை காணும் போது,இது என்ன ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் அதிலிருந்து நாங்கள் அவர்களுக்கு பட்டிக் காடுகளாத் தான் தெரிவோம்.இப்படி நிறையப் பிரச்சனைகள் எழும் இடம் முகநூல்..எல்லாம் நாம் நம்பிக் கொள்பவர்கள் செய்யும் கைங்கரியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதை வாசிக்க

சிரிப்பதா

அழுவதா எனத்தெரியவில்லை

 

நமது வீட்டை நாமே திறந்துவிட்டுவிட்டு

அடுத்தவன் வீட்டுக்குள்ளும்  நாம் கண்டபடி உள்நுழைந்து

எமது வீட்டுக்குள்ளும் கண்டதையும்

எமது சிறுசந்தோசத்துக்காக(பொழுது போக்கு?) அனுமதித்துவிட்டு....

எல்லாம் இறுகியபின்

நாமும அனுபவித்து முடிந்தபின்

என்னை  மட்டும் இனி சுத்தமாக விடு என்றால்..........??

முடிகிற  காரியமா இது........?

Link to comment
Share on other sites

எல்லாம் நம் கையில்தான் உள்ளது.  நாம் எதையும் அளவோடு பயன்படுத்தினால் எமக்கேன் பிரச்சனை வரப் போகிறது?  சொந்தங்களோடு உறவாடுவதற்கு இது உதவுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  ஸ்கைப் முகப்புத்தகம் போன்றவற்றின் மூலம் நாமும் ஊரில் இருப்பது போன்றதொரு உணர்வைத் தருகிறது.  அதைவிட, விடுப்புப் பார்ப்பதற்கு இது மிகவும் உதவுகிறது என்பதும் முக்கியம்.   :icon_idea:  :icon_idea:  :icon_idea:    நாம்தான் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.  

Link to comment
Share on other sites

மூன்று வருசத்துக்கு முன் பேஸ் புக் என்ற ஒன்று என்னிடம் இருந்திச்சு. பின் அதை வீட்டுக்காரி எடுத்துக் கொண்டா. கிட்டத்தில் என் பெயரை கூகுள் பண்ணியபோது என் பேஸ் புக் முகவரியும் வந்திச்சு. ஒரு பப்ளிக்காக என்ன விசயம் தெரியுது என்று பார்த்தேன். ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் நான் யாழ்ப்பணத்தில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலையில் படித்ததாக வருகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக நூல் கணக்கிருந்தும் கணக்கில் எடுப்பதில்லை
அதனால் இதுவரை எந்தப்பிரச்சனையும் இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் அளவோடு பாவிச்சால் பிரச்சனை இல்லை கண்ட பாட்டுக்கு எல்லோரையும் மு.புத்தகத்தில் அட் பண்ணினால் பிரச்சனை தான்.அத்தோடு மு.புத்தகம் சொந்தக்காரார்கள்,நண்பர்கள் எங்கே போயினம்,வாறீனம் என விடுப்பு பார்க்கவும் உதவும்:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில,சில விடையங்கள் அவை,அவைக்கு ஏற்பட்டால் மட்டுமே அதன் தாக்கங்கள் புரியும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.