Jump to content

இயற்கை விவசாய ஆர்வலர் நம்மாழ்வார் காலமானார்


Recommended Posts

முதுபெரும் இயற்கை விவசாய ஆர்வலர் கோ. நம்மாழ்வார், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்கோட்டை கிராமத்தில் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு 75 வயது.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றினார்.

ஆனால் அரசின் செயல்முறைகளில் அதிருப்தியுற்று வெளியேறி, பின்னர் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

மாதிரிப் பண்ணை

'இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இப்போதைய தேவை. கம்பு, எள், கேழ்வரகு (குரக்கன்), கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமை உணவுக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம்' என்றும் அவர் வலியுறுத்திவந்தார்.

கரூரை அடுத்த வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கி வெற்றிகரமாக அதனை அவர் நடத்திவந்தார்.

அங்கிருந்த வறண்ட பாறை நிலப்பரப்பை அவர் மூன்றே ஆண்டுகளில் இயற்கை வேளாண் முறைகளைப் பயன்படுத்தி பல்லுயிர் வாழும் கானகமாக மாற்றியதாக ஆர்வலர்கள் கருதுகின்றனர்

அவரது மறைவிற்கு பல்வேறு ஆர்வலர் அமைப்புக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றன.

 

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/12/131230_nammazhwardead.shtml

 
 

 

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

ஆட்டோகிராஃப் கேட்பவர்களிடம் 'அன்பே வெல்லும்’ என்றெழுதிக் கையெழுத்திடுவார் நம்மாழ்வார். 'ரொம்ப அசல் வார்த்தைங்க!’ என்பார்.

மாடு மேய்ப்பதில் அவ்வளவு விருப்பம். ''அது வயிறாரச் சாப்பிட்டது அதோட முகத்துலயே தெரியும். வயிறு நிறைஞ்சிட்டா என் முதுகை நக்கிக் கொடுக்கும். இப்ப என் வீட்டுப் பசு மாடு கன்னு போட்டது. அந்தக் குட்டி கீழே விழுந்ததும் எங்கெங்கோ தவிச்சுப்போய் சரியா பால் காம்புகளைப் பிடிச்சுக்கிட்டு... அப்புறம் அது உலகத்தையே மறந்துருச்சு!''


''என் மனைவி சாவித்திரி எனக்கு நல்ல நண்பர். துளி அதிகாரம் கிடையாது. என்னை நல்லாத் திருத்தும். ஒருநாள் 'எதுக்கு எதிரே இருக்கிறவங்க நேரம் தெரியாமப் பேசுற?’னு கேட்டுச்சு. அன்னைக்குப் பேச்சைக் குறைச்சது தான். 'ஏன் அரசு போடுகிற திட்டத்தை எல்லாம் குறை சொல்லுற?’னு கேட்டுச்சு. அதைப் பரிசீலனை பண்ணினேன். அது முடியாது. சரியா இல்லைன்னா எதிர்த்துத்தான் பேசணும்!''


''வாதம் பண்ணலாம். விவாதம் பண்றது பிடிக்காது. கவனிச்சுப் பார்த்தீங்கன்னா, விவாதம் பண்றப்போ ஜெயிப் போம். ஆனா, நல்ல மனுஷங்களை இழந்துடுறோம்!''


சமீபத்தில் பார்த்த படம் சே குவேரா. 'பார்க்கப் பார்க்க சிலிர்த்துப்போச்சுங்க. 'விடுதலை’ங்கிற உணர்ச்சிக்கு அவர் எவ்வளவு மரியாதை கொடுக்கிறார், அர்ப்பணிக்கிறார்னு எல்லாம் படிச்சதுதான். ஆனா, படமாப் பார்க்கும் போது ஆச்சர்யமா இருந்துச்சு. கியூபா விடுதலைக்குப் பிறகும் அடுத்தடுத்து பல நாடுகளோட விடுதலைக்குக் கிளம்பிப்போற வேகம் அபாரம். படம் ரொம்ப நாள் மனசுல நிற்கும்!''

சமீபத்தில் படித்த புத்தகம் - ரகசியம் (sமீநீக்ஷீமீt). ''பிரபஞ்சத்துக்கும் நமக்கும் நேரடி உறவு இருக்குனு சொல்றாங்க. ஆங்கிலத்தில் வெளியானப்ப பலத்த விவாதம் கிளப்பின புத்தகம். 'நம்ப முடியாத விஷயம்... சும்மா விக்கிறதுக்காகப் பரபரப்பு பண்றாங்க’னு சொன்னாங்க. ஆனா, அதைத் தாண்டியும் என்னவோ அதில் இருக்கு. என்னை ரொம்பப் பாதிச்ச புத்தகம்!''

சமீபத்தில் நடந்த சர்வ மத நல்லிணக்க விழாவுக்கு வந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணியுடன் ஏற்பட்ட அறிமுகம், இப்போது அற்புதமான நட்பாகிவிட்டது!
'சொந்த ஊர் இளங்காடு. ரொம்ப நாள் கழிச்சு என் பேத்திக்கு மாப்பிள்ளை பார்க்கிற நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்தேன்!''

''அமெரிக்கா, சீனா, ரஷ்யானு முரட்டு நாடுகள் பக்கம் போனது இல்லை. ஐரோப்பிய கண்டத்தில் கொஞ்சம் சுத்தியிருக்கேன். இங்கிலாந்து, பிரான்ஸு, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவீடன், டென்மார்க், இத்தாலி, ஜெர்மனி, கிழக்கே மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா... இப்படிப் போயிருக்கேன். ஆயுசுக்கும் நாடோடியாத் திரிஞ்சவன் இப்பத்தான் கொஞ்சம் ஓய்வா உக்காந்துருக்கேன்!''

முன்னெல்லாம் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டிதான் ஆடை. ஆனால், இப்போது காவி வேட்டி, பச்சைத் துண்டுதான் அடையாளம். ''மனசு அந்த அளவுக்குப் பக்குவம் ஆயிருச்சு!''
''நம்ம தமிழ்நாட்டு உணவு அமைச்சர் ஒரு விழாவில் 'பருவ மழை அளவு 28 விழுக்காடு குறைஞ்சதுக்குக் கலங்க வேண்டியது இல்லை’னு பேசியிருக்கார். அவரோட 'அக்கறை’யை நினைச்சுத்தான் கலங்க வேண்டியிருக்கு!''

''இப்ப குற்றாலத்துக்குப் போயிருந்தேன். சிவசைலம்கிறவர் இயற்கை விவசாயம் பண்றாரு. அருவியில் பொன்னாங்கண்ணித் தைலத்தைத் தடவிட்டுக் குளிச்சேன். அப்படி ஒரு சுகம். என்ன புண்ணியம்? பார்த்துக்கிட்டேவந்தா மழையே காணோம். மரங்கள் எல்லாம் காயுது. குளிச்ச சந்தோஷம் வடிஞ்சிருச்சு!''


கடவுளைப் பற்றி யோசிப்பதே இல்லை. நாத்தி கனும் இல்லை. சிற்பக் கலையை ரசிக்கக் கோயிலுக்குப் போவது உண்டு!
பங்குனி 24 இவருடைய பிறந்த நாள். அன்றைய தினம் எப்படியும் ஏதோ ஓர் இயற்கை விவசாயப் பண்ணை யில் இருக்குமாறு பார்த்துக்கொள்வார். தோழர்களுடன் இயற்கை உணவுகளைச் சமைத்து அளவளாவிக் கொண்டாடுவார்!

''மனிதர்கள் 50, 60 வயசு ஆச்சுன்னா அவ்வளவுதான் வாழ்க்கைனு முடிவுக்கு வர்றாங்க. மனிதர்கள் 140 வயசு வரை வாழ வழி இருக்கு. வாழும் முறைகள், நெறிகள் இருக்கு. வாழ முடியாத, வசதி இல்லாதவர்களுக்கு 'உயிர்ச்சூழல் வாழ்வு மையம்’னு ஆசிரமம் மாதிரி ஆரம்பிக்கணும். அதை நிறைவேத்தணும்கிறதுதான் பெரிய கனவு!''

 

 

fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17nam3.jpgNammazhvaar.jpg

 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரின், தொடர் கட்டுரை ஒன்றை... தமிழக பிரபல பத்திரிகை ஒன்றில் வாசித்தேன்.

அன்னாரின்... ஆத்ம சாந்திக்கு, இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள இளங்காடுதான் நம்மாழ்வார் பிறந்த ஊர். 

அண்ணாமலை, பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., அக்ரி பட்டப்படிப்பு படித்தவர். 

கோவில்பட்டி மங்கல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஆறு ஆண்டுகள் பணி செய்த இவர், இயற்கை வழி விவசாயத்திற்காக பணியைத் துறந்தார்

. பிறகு நோபல் பரிசு பெற்ற dominique pyre என்பவரின் நிறுவனத்தில் (களக்காடு) பணியில் சேர்ந்தார்.

ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேப்பிலைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர். 

இதுவரை Leisa, kudumbam உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உறுவாக்கியவர். 

எழுபது நாலு வயதை எட்டி இன்று மறைந்த நம்மாழ்வர் என்றும் நம்ம நெஞ்சில் நீங்காது இருப்பார் .

நம்மாழ்வார் : 1987_ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் ‘‘இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று’’ சொன்னார். இதை அவர் 1987_ல் சொன்னார்.ஏன் என்று நான் கேட்டதற்கு, ‘‘உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள ‘டீ’ தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது.

 

அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை’’ என்று சொன்னார் அவர்

நம்மாழ்வார் : இதில் உங்களுடைய வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும். இங்கு அறிவே வெளிப்படவில்லை.

 

அதற்குப் பதிலாக இவர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில், நாம் எதைப் பேசினால் மக்களுடைய ஆதரவு எனக்கு கொஞ்சம் கூட வரும். என்னுடைய பெட்டியில் இன்னும் கொஞ்சம் ஓட்டு விழும். அதை மட்டும்தான் யோசித்துப் பேசுகிறார்களே ஒழிய வேறு எதையும் யோசித்துப் பேசவே இல்லை. மக்களுக்கு நலமென்றால் அது எதில் இருக்க முடியுமென்றால் குறிஞ்சி, குறிஞ்சியாக இருக்க வேண்டும். முல்லை, முல்லையாக இருக்க வேண்டும். மருதம், மருதமாக இருக்க வேண்டும். நெய்தல், நெய்தலாக இருக்க வேண்டும். இதை இளங்கோவடிகள் அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்கிறார். தொல்காப்பியத்தில் சொல்லி இருக்கிறது. திருவள்ளுவருக்கு 133 அடிக்கு சிலை வைத்திருக்கிறோம். திருவள்ளுவர் என்ன சொன்னார் என்பது பற்றி யோசிக்கவே இல்லை. 

‘‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’’ என்று சொல்லி இருக்கிறார். நம்முடைய பாதுகாப்பு என்றால், அது காடும் சேர்ந்ததுதான். காடு இருந்தால்தான் தண்ணீர் வரும். தண்ணீர் இருந்தால்தான் மக்களுக்கு வாழ்க்கை இருக்கும். ஆக, மக்களுக்கு அறிவில்லை. ரோடு போட்டு முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் என்று ஒருவர் பேசினால் இதைவிட முட்டாள் தனம் ஒன்று இருக்கவே முடியாது. நம்முடைய மடமைக்கு அளவே இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பெரும்பாலான மக்களுக்கு இந்த அறிவைக் கொண்டு போய் சேர்த்து இதனால் நமக்கு அழிவு வரும் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி, பிறகு நாம் எல்லோரும் சேர்ந்து வரப்போகும் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வைத்தான். அந்த வேலையை மட்டும் தான் இப்போதைக்கு நம்மால் செய்ய முடியும்.நாம் இவ்வளவு பேசுகிறோம் இல்லையா?

 

இவையெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தெரியாதென்று நாம் சொல்ல முடியாது. எல்லோரும் மனு கொடுத்திருக்கிறார்கள். எல்லோரிடமும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளில் செய்தி வெளி வந்திருக்கிறது. இவையெல்லாம் அறிந்து கொண்ட பிறகும், இவர்கள் செய்யும் தவறுகளைக் குறைத்துக் கொள்ளவே இல்லை. ஒவ்வொரு தடவையும் கூட்டவே செய்கிறார்கள். உதாரணத்திற்கு: எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையெல்லாம் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையில் இருக்கின்ற தொழிற்சாலைகள் என்ன செய்கின்றன? ஆற்றிலிருக்கின்ற நீரை தொழிற்சாலையின் உள்ளே இழுத்துக் கொள்கிறது. மறுபடியும் தன்னுடைய கழிவு நீரையெல்லாம் ஆற்றினுள் விடுகிறது. இந்தக் கொடுமை எந்த மந்திரிக்குத் தெரியாது சொல்லுங்கள்? எதிர்க் கட்சியாக இருக்கும் போது மந்திரிக்குத் தெரிகிறது. ஆளுங்கட்சியான பின்பு தெரியமாட்டேன் என்கிறது. ஆக, அவர்களின் நடத்தையில், பண்பிலுள்ள குறைபாட்டை நாம் பார்க்கிறோம். அதைத் தடுத்து நிறுத்தவே முடியாது. குற்றவாளிகளை நீங்கள் குற்றவாளி என்று சொன்னால், அவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் ஒரு குடியாட்சி நாட்டில் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. மக்கள் இதைப் புரிந்து கொண்டார்கள் என்றால், மக்களே இதைத் தடுத்து நிறுத்துவார்கள். நம்முடைய வேலை அங்குதான் இருக்கிற

 

fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நம்மாழ்வார் : இதில் உங்களுடைய வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும். இங்கு அறிவே வெளிப்படவில்லை.

 

வேத வாக்கு!

 

மானிடம் வாழ வழி வகுத்துத் தந்ததே, தமிழனின் மதம்!

 

அந்த வழியில் நம்மாழ்வார் ஒரு சித்தர்!

 

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மாழ்வார் நினைவாக 'மணி வர்மா' வரைந்த ஓவியமும், கவிதையும் !

 

1491431_10203113227377880_622258604_o.jpபசுமை புரட்சி பெயரால்

ஏகபோகம் செய்த
இயற்கை படுகொலையை
எங்கள் எளிய தமிழால்
கிண்டி காட்டியவர்

எண்டோ சல்பான் தெளிப்பா
கூடங்குள அணு உலை திணிப்பா
மீத்தேன் குழாய் புதைப்பா
ஆற்று மணல் கொள்ளையடிப்பா
பிடி கத்தரிக்காய் விளைவிப்பா
வால்மார்ட்க்கு வரவேற்பா
எங்கும் எதிர்ப்பார் நம்மாழ்வர்
இயற்கையை கொள்வோரின்
எதிர்ப்பில் அங்கும் இருப்பார்
என்றும் வாழ்வார்
நம்மாழ்வார்..

நெளியும் மண்புழுவில்
உருண்டோடும் ஆற்றுநீரில்
பறக்கும் சிட்டுக்குருவியில்
எருவாகும் தழைச்சத்தில்
என்றும் வாழ்வார்
நம்மாழ்வார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//''அமெரிக்கா, சீனா, ரஷ்யானு முரட்டு நாடுகள் பக்கம் போனது இல்லை. ஐரோப்பிய கண்டத்தில் கொஞ்சம் சுத்தியிருக்கேன்.

இங்கிலாந்து, பிரான்ஸு, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவீடன், டென்மார்க், இத்தாலி, ஜெர்மனி, கிழக்கே மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா... இப்படிப் போயிருக்கேன். ஆயுசுக்கும் நாடோடியாத் திரிஞ்சவன் இப்பத்தான் கொஞ்சம் ஓய்வா உக்காந்துருக்கேன்!''//

 

-நம்மாழ்வார்-

 


 

Link to comment
Share on other sites

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு! தமிழக விவசாயிகளுக்கு ஈடு செய்யவே முடியாத இழப்பாகும் - வைகோ இரங்கல்

 

1526837_625493957510554_1724596967_n.jpg

நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களால் ஒரு நம்மாழ்வார் பெரும் புகழ் பெற்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம் போற்றுதலுக்குரிய நம்மாழ்வார், வேளாண்மைக்கும் விவசாய நிலங்களுக்கும் அழிவைத் தர முற்றுகையிடும் மரபணு விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்தையும் எதிர்த்து, வேளாண் நிலமும் பயிர்களும் நச்சுத்தன்மைக்கு ஆளாகி விடாமல், பாதுகாக்க உண்மையான அறவழிப் வேளாண்மை புரட்சியை தலைமையேற்று நடத்தி, காலத்தால் அழியாத புகழ் படைத்தார்.

வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்று, கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக பணிபுரியும் காலத்திலேயே, நஞ்சாகி வரும் வேளாண்மை முறையை எதிர்த்துப் போராட அரசு பணியைத் தூக்கி எறிந்துவிட்டு, இயற்கை வேளாண்மையை நிலைநாட்டும் போராளியானார்.

மீத்தேன் எரிவாயு திட்டத்தால் சோழ மண்டலமே பாழாகிவிடும் ஆபத்தை எதிர்த்துப் போராடினார். உடல்நலம் குன்றிய நிலையிலும் அந்த அறப்போரை மேற்கொள்ளச் சென்ற சூழலில் உயிர் நீத்தார்.

2005 ஆம் ஆண்டு வேடசந்தூரில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயிகள் மாநாட்டில், அவர் ஒரு மணி நேரம் ஆற்றிய உரையையும், வழிகாட்டுதலையும் மறக்கவே முடியாது. மதுரையில் நடைபெற்ற அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் அவரோடு பங்கேற்ற நிகழ்வில், அவரது உன்னதப் பண்புகளைக் கண்டு வியந்தேன்.

அவர் உயிர் இழந்து உடலால் மறைந்தாலும் விவசாயிகளையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க அவர் தந்த அறிவுரைகளாலும், தொலைநோக்குத் திட்டங்களாலும் நம்மோடு வாழ்கிறார். என்றென்றும் வாழ்வார் நமது மனங்களை ஆளும் நம்மாழ்வார். அவர் ஏந்திய வேளாண்மை இலட்சியக் கொடியை உயர்த்தி அவரது கனவுகளை நனவாக்க உறுதிகொள்வோம்!

அவரை இழந்து துயரத்தில் துடிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
31.12.2013 மறுமலர்ச்சி தி.மு.க

 

(facebook)

Link to comment
Share on other sites

1526619_687479931291619_228019043_n.jpg

 

1512551_687482781291334_1638303187_n.jpg

 

1525732_589085651156787_697879266_n.jpg

 

1525640_687638637942415_1901317778_n.jpg

 

என்ன கொடுமையடா இது..
ஊரை அடித்து உலையில் போட்டவன்
தொண்ணூறைத் தாண்டியும்
இன்னும் எக்காளமிட்டு வாழ்கிறான்...

ஊருக்காக உழைத்தவன்
காடு மேடாய்ச் சுற்றியவன்...
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அற்புதமாய்க் கொண்டுவந்த
உழவான்மை தத்துவத்தை
அயராமல் மீட்டெடுத்தவன்
மீத்தேன் என்னும் சாத்தானை
எதிர்த்து தாய்த்தமிழரோடு
களம் கண்டவன்.....
நாம் தமிழர்க்கு இயற்கை
உழவான்மையைப் பயிற்றுவித்தவன்
வாழ்வாங்கு வாழவேண்டியவனை
வலிதாய் அழைத்த மரணமே....
துர்மரணமே....
நீ மரணித்துபோகக் கடவாய்........

 

(facebook)

Link to comment
Share on other sites

நம்மாழ்வார் நினைவாக 'மணி வர்மா' வரைந்த ஓவியமும், கவிதையும் !

1491431_10203113227377880_622258604_o.jpபசுமை புரட்சி பெயரால்

ஏகபோகம் செய்த

இயற்கை படுகொலையை

எங்கள் எளிய தமிழால்

கிண்டி காட்டியவர்

எண்டோ சல்பான் தெளிப்பா

கூடங்குள அணு உலை திணிப்பா

மீத்தேன் குழாய் புதைப்பா

ஆற்று மணல் கொள்ளையடிப்பா

பிடி கத்தரிக்காய் விளைவிப்பா

வால்மார்ட்க்கு வரவேற்பா

எங்கும் எதிர்ப்பார் நம்மாழ்வர்

இயற்கையை கொள்வோரின்

எதிர்ப்பில் அங்கும் இருப்பார்

என்றும் வாழ்வார்

நம்மாழ்வார்..

நெளியும் மண்புழுவில்

உருண்டோடும் ஆற்றுநீரில்

பறக்கும் சிட்டுக்குருவியில்

எருவாகும் தழைச்சத்தில்

என்றும் வாழ்வார்

நம்மாழ்வார்..

எனது குரு போய்விட்டார். உலக இயற்கை விவசாயிகளுக்கும், இயற்கைக்கும் பெரிய இழப்பு.

நம்மாழ்வார் ஐயாவின் இயற்கை விவசாய யுக்திகள் எங்கள் கனடிய இயற்கை தோட்டத்தில் எப்போதும் இருக்கும்.

அபராஜிதன், இணைப்புகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

ஒரு நல்ல மனிதனை தங்களது விளம்பரத்துக்கு எல்லாம் பயன் படுத்துகிறார்கள்...

 

தமிழ்நாட்டுக்கு பிடித்த கேடு இவரை மாதிரி மனிதரெல்லாம் புறக்கணிக்கப்படுவது (பெரும்பான்மை மக்களால்)

Link to comment
Share on other sites

ஒரு நல்ல மனிதனை தங்களது விளம்பரத்துக்கு எல்லாம் பயன் படுத்துகிறார்கள்...

 

விளம்பரம் அல்ல. இவர் தமக்கு  வழிகாட்டியாக பல நேரங்களில் தம்முடன் போராட்டங்கள் பொதுக்கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறார். அந்த நாட்களை மறக்க முடியாது என நினைவுகூர்கிறார்கள்.

பிழை பிடிக்க நினைப்பவர்களுக்கு எதுவும் பிழையாக தான் தெரியும். <_<

 

Link to comment
Share on other sites

இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி தமிழ் கூறும் நல்லுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்ச் சமூகம் இந்த நூற்றாண்டின் மற்றுமொரு தலைசிறந்த அறிவரை இழந்துள்ளது. இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அன்னாருக்கு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளது.

 

இராச்குமார் பழனிசாமி

(facebook)

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சிலரின் இழப்புகள் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்லும். தனியார்மயம் உலகமயம் இரண்டும் இணைந்து தமிழ்ச்சமூகத்தின் நிலத்தினை, வாழ்வை சூரையாடும் காலத்தில் இச்சமூகத்திற்கு விடிவெள்ளியாய் திசை காட்டிய உத்தம ஆன்மா அய்யா. நம்மாழ்வார் அவர்கள். நிலச் சட்டமும், விதைச் சட்டமும், மீத்தேனும், எரிவாயு குழாயும், அணுக் கதிர்வீச்சும் நம்மை தின்ன காத்திருக்கும் வேளையில் அய்யாவின் பிரிவு மிக மிக துயரமானது. நேர்மையாக சமரசமின்றி போராட்டத்தினை நடத்திச் செல்லும் முதன்மை ஏர் இல்லாமல் தமிழ்ச் சமூகம் துயருருகிறது. இவர் இடத்தை இட்டு நிரப்ப எவரும் இல்லை எனும் பொழுது நெஞ்சு பிளக்கிறது. ஒரு லட்சம் பேரை திரட்டி வரும் ஜனவரியில் மீத்தேனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த களமாடிக் கொண்டிருந்தவர் மறைந்தது நமக்கு பெரும் பின்னடைவு.

சாதிக்காய், கட்சிக்காய் லட்சம் பேரை திரட்டும் சமூகத்தில் மக்களுக்காய், மண்ணுக்காய் திரட்ட நினைத்த உயர்ந்த போராளி. மீத்தேண் திட்டத்திணை தடுத்து நிறுத்தும் வலிமையை மக்களுக்கு கொடுக்கக் கூடிய மாமனிதராய் இவரை நான் கண்டேன். காவிரி வறண்ட பொழுது சாதிக்காரனை திரட்டி போராடாத வரட்டு வீரம் பேசும் சமூகத்தில் இந்த வேறுபாடுகளை வென்று மக்களை ஒன்றினைக்கும் ஆற்றல் வாய்ந்தவரை இழந்து நிற்கிறோம். அய்யாவிற்கு வீரவணக்கம் செலுத்துவோம். தன் உடல் நலம், பொருளாதார நலம், முதுமை என எதையும் பாராமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காய் போராடிய மாமனிதருக்கு நாம் மரியாதை செலுத்துவது என்பது மீத்தேன் எதிர்ப்பு ஊர்வலதிலும், போராட்டத்திலும் பெரும் திரளாய் பங்கேற்பதுதான். இதைச் செய்யுமா தமிழினம்? இவருக்கான மரியாதையை இதன் மூலம் செலுத்துமா?

 

Thirumurugan Gandhi

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ,ஐயாவின் ஆத்மா சந்தியடையட்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1526994_10151873913523857_1289363213_n.j

 

(facebook)

ஆழ்ந்த இரங்கல்கள் ,ஐயாவின் ஆத்மா சந்தியடையட்டும் !

Link to comment
Share on other sites

எனது கண்ணீர்  அஞ்சலி. மண்ணை நேசித்த மனிதனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

எனது கதாநாயகன். ஐயாவின் மறைவு, உழவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஆரோக்கிய வாழ்விற்கும் ஒரு பேரிழப்பு. மறைந்து போன இயற்கை விவசாயத்‌திற்கு புத்துயிர் அளித்துள்ளார். இவர் மறைந்தாலும், ஐயா விதைத்துச் சென்றுள்ள 'இயற்கை விவசாய முறை' செழித்து வளரும்.

Link to comment
Share on other sites

1526994_10151873913523857_1289363213_n.j

(facebook)

நம்மாழ்வார் ஐயா, ஒரு இயற்கை மண் வள உரை நடத்திகொண்டிருந்தார்.

ஒரு செயற்கை விவசாயி இயற்கை விவசாயம் எந்த நாட்டிலாவது உத்தியோகபோகமாக வருமா என்று கேட்டிருந்தார்.

இந்த கேள்வி அவரை உரையின் போதும் யோசிக்க வைத்தது.

திடீரென்று உரையை நிறுத்திவிட்டு சொன்னார்,

"தமிழீழம் கிடைத்தால் நடக்கும். என்னை விட இயற்கையை நேசிப்பவர் அவர்கள் தலைவர் தான்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்..... http://tamil.oneindia.in/news/tamilnadu/organic-farming-scientist-nammalvar-dead-190524.html

Link to comment
Share on other sites

ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டு விட்டது புலவர் அண்ணா. :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134067&page=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார்: - 
 

gsiwb-150-seithykal.jpg

 

திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் 

திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் !

இயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை ! 

இயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு !

பூச்சிக்கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் ! 

பூ மனதுக்காரர் எச்சரிக்கை விடுத்தார் நமக்கு ! 

  

இயற்கை உரம் இருக்க மனிதர்க்குத் தீங்கு தரும்

செயற்கை உரம் வேண்டவே வேண்டாம் என்றார் !

உலகமயத்தின் தீங்கை எடுத்து இயம்பினார் !

உலகம் மதிப்பு அளிக்க வில்லை வெம்பினார் !

விவசாய நாட்டில் விளைபொருள் இறக்குமதி 

வேண்டாம் என்றார் கேட்கவில்லை ஆள்வோர் !

.

விவசாயம் செழிக்க வழிகள் பல சொன்னார் !

விபரம் தெரியாதவர்கள் ஏற்க மறுத்தனர் ! 

தீங்கான மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தார் ! 

தேவையற்றது மரபணு சோதனை என்று எதிர்த்தார் !

விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை !

வீ ணாக்கும் என்றார் பலரும் கேட்க வில்லை ! 

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ! 

நாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார் ! 

மண்ணை நேசித்த மனிததருள் மாணிக்கம் அவர் ! 

மரத்தையும் நேசித்த மட்டற்ற மாமனிதர் அவர் !

இறுதி மூச்சு உள்ளவரை இறுதி வரும் வரை ! 

இயற்கையைக் காக்கப் போராடினார் ! 

இறுதியாக இருக்கும் இயற்கையிலும் ! 

உறுதியாக இருக்கும் அவர் முகம் ! 

அவருடைய உடலுக்குத்தான் மறைவு வந்தது !

அவருடைய உள்ளத்திற்கு மறைவு வரவில்லை !

இயற்கையை நேசிப்போம் நம்மாழ்வரை நினைப்போம் !

செயற்கையைக் குறைப்போம் நம்மாழ்வரை மதிப்போம் !

 

கவிஞர் இரா இரவி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.