Jump to content

2014 உலகக் கிண்ண போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 11 புதிய சாதனைகளின் விபரம்


Recommended Posts

2014 உலகக் கிண்ண போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 11 புதிய சாதனைகளின் விபரம்:
2014-07-18 12:07:06

 

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் ஜேர்மன் அணி வீரர் மிரஸ்லோவ் குளோஸ் தனது 16 ஆவது கோலை அடித்து புதிய சாதனை படைத்தமை தெரியும்.

ஆனால், 2014 உலகக் கிண்ண போட்டிகளின்போது  நிகழ்த்தப்பட்ட ஒரே புதிய சாதனை இதுவல்ல.  கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களின் தகவல்களின்படி இத்தொடரில் நிகழ்த்தப்பட்ட  சாதனைகளின் பலவற்றின் விபரம்:


1) ஜேர்மன் வீரர் மிரஸ்லோவ் குளோஸ் 16 ஆவது கோலை அடித்து உலக கிண்ண போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரரானார்.

2) இம்முறை இறுதிப்போட்டியில் விளையாடிய ஜேர்மன் அணி, அதிகக் எண்ணிக்கை உலக கிண்ண இறுதிப்போட்டியில் (8) விளையாடிய அணியாக சாதனை படைத்தது.


3) பெல்ஜியம் அணியுடனான போட்டியின்போது, அமெரிக்க கோல் காப்பாளர் டிம் ஹோவார்ட் 16 தடவை கோல் புகாமல் பந்தை தடுத்தார். இதுவும் ஒரு புதிய சாதனையாகும்.

 

4) பிரேஸிலுடனான அரையிறுதியில்  ஜேர்மனி 7:1 விகிதத்தில் வென்றது. உலகக் கிண்ண போட்டிகளை நடத்தும் நாடொன்று போட்டியொன்றில் அடைந்த மிகப்பெரிய  தோல்வி 6 கோல் வித்தியாசம் இது.


5) கொலம்பிய கோல் காப்பாளர் பரிட் மொன்ட்ரகன் 43 வயதில் போட்டியில் பங்குபற்றினார். உலக கிண்ணப் போட்டியொன்றில் விளையாடிய மிக வயதான வீரர் இவர்.

6) இத்தொடரில் 171 கோல்கள் அடிக்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண சாதனை இம்முறை சமப்படுத்தப்பட்டது.


7) உலகக் கிண்ண வரலாற்றில் தமது 224 ஆவது கோலை அடித்து ஜேர்மனி மற்றொரு சாதனை படைத்தது.

8) 20 ஆவது தடவையாக உலகக் கிண்ண இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலம் பிரேஸில் அணி சாதனை படைத்தது.


9) பிரேஸிலுடனான அரை இறுதியில் ஜேர்மனியின் டொனி குரூஸ், மிகக் குறுகிய நேரத்தில் (69 விநாடிகள்) இரு கோல்களை அடித்து  சாதனை படைத்தார்.

10)  ஜேர்மனி வீரர் மிரஸ்லவ் குளோஸ் இம்முறை கோல்களை அடித்ததன் மூலம், 4 உலகக் கிண்ண சுற்றுப்போட்டிகளில் கோல் அடித்த வீரரானார். ஜேர்மனியின் ஊவ் சீலர், பிரேஸின் பேலே ஆகியோரின் சாதனையை குளோஸ் சமப்படுத்தியுள்ளார்.


11) நெதர்லாந்து அணி இம்முறை தனது குழாமிலுள்ள 23 வீரர்களையும் போட்டிகளில் பயன்படுத்தியது. இதுவும் ஒரு புதிய சாதனையாகும்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6220#sthash.bdEcbAIc.dpuf

Link to comment
Share on other sites

ஆட்டம் ஆரம்பித்து 31 செக்கன்களில் அமெரிக்கா கோல் போட்டதும் ஒரு சாதனை என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் காலிறுதிக்குள் வந்தபின்னும்  ஏழு கோல் போடுவதற்கு ஜெர்மனியுடன் ஒத்துழைத்ததும் கூட ஒரு சாதனையே...! :lol::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.