Jump to content

4வது முறையாக, உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை கால்பந்து: 4வது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!!

 

ரியோடிஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி.

 

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜெர்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

 

14-1405305481-argentina-lionel-messi444-

 

கோல் அடிக்காமலே....

ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி, அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது.

 

14-1405305489-argentina-marcos-rojo-600.

 

கூடுதல் நேரம்

இதனால் 90 நிமிட முடிவிலும் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார்.

 

14-1405305473-argentina-ezequiel-lavezzi

 

மீண்டும் கூடுதல் நேரம்..

முதல் பாதி கூடுதல் நேரத்திலும் அர்ஜென்டினா - ஜெர்மனி அணிகள் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து இரண்டாம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

 

14-1405305497-germany-mario-goetze-600.j

 

கோல் அடித்த ஜெர்மனியின் மரியோ கோட்சே

ஆட்ட முடிவுக்கு 8 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியோ கோட்சே ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல்கணக்கில் வென்று 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி.

 

14-1405305505-fifa-world-cup-2014-final-

 

4வது முறை கோப்பையை வென்ற ஜெர்மனி

இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி 4 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதில் 3 முறை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ. 207 கோடி பரிசு
 

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. முடிவில்1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜெர்மனி, நான்காவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

 

உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு  சாம்பியன் பட்டத்துடன், ரூ. 207 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ரூ. 148 கோடி பரிசு வழங்கப்பட்டது.

 

அதிக கோல் அடித்தவருக்கான ‘கோல்டன் ஷூ’ விருதை, கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் தட்டிச் சென்றார். ஐந்து போட்டியில் விளையாடிய இவர், மொத்தம் 6 கோல் அடித்தார்.

 

இத்தொடரின் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருதை, அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்சி தட்டிச் சென்றார். ஏழு போட்டியில் விளையாடிய இவர் 4 கோல் அடித்தார். தவிர, 4 முறை ஆட்டநாயகன் விருது வென்றார். சக வீரருக்கு ஒரு முறை கோல் அடிக்க உதவினார்.

 

சிறந்த கோல்கீப்பருக்கான ‘கோல்டன் கிளவுஸ்’ விருது ஜெர்மனியின் நுாயருக்கு வழங்கப்பட்டது.

 

நன்றி நக்கீரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி!
சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி!


103.jpg

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. முடிவில்1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜெர்மனி, நான்காவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

 

நன்றி நக்கீரன்.


4வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனி
 

இதுவரை நடந்துள்ள 20 உலக கோப்பை தொடரில் பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஏழு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

 

அதிகபட்சமாக பிரேசில் அணி 5 முறை (1958, 62, 70, 94, 2002) கோப்பை வென்றுள்ளது.

 

இத்தாலி 4 முறை (1934, 1938, 1982, 2006) கோப்பை வென்றுள்ளது. ஜெர்மனி 4 முறை (1954, 1974, 1990, 2014)  கோப்பை வென்றுள்ளது.

 

அர்ஜென்டினா 2 முறை (1978, 1986) கோப்பை வென்றுள்ளது. உருகுவே 2 முறை (1930, 50)  கோப்பை வென்றுள்ளது.

 

பிரான்ஸ் (1998), இங்கிலாந்து (1966), ஸ்பெயின் (2010) தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ஃபீஃபா' வரலாற்றிலேயே... முதல் முறையாக,

தெ. அமெரிக்க மண்ணில் வென்ற ஐரோப்பிய அணி ஜெர்மனி!

 

ரியோடி ஜெனிரோ: ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம் 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே அணியை அதே கோல் கணக்கில் வீழ்த்திய பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது. மேலும் தென் அமெரிக்க மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய நாட்டு அணி ஜெர்மனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் இருக்கும் மரகானா ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்தது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜேர்மனி. கூட்டு முயற்சிக்கான வெற்றி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.