Jump to content

கூப்பன் கடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூப்பன் கடை...... (நினைவுகள் )

 

 

இஞ்ஞாருங்க மகள் சாப்பிடுகிறாள் இல்லை .ஒருக்கா என்னென்று கேளுங்கோவன்  என்று என் மனைவி பத்மா சொல்ல சி  மன்னிக்கவும் அஸ்வனா சொல்ல என் மனிசி பெயர்தான் பத்மா அவள் வெளி நாடு வந்த பிறகு அஸ்வனா என்று பெயரை மாற்றிக்கொண்டாள் .ஆனால் பாஸ்போட்டில் பத்ம அரசி தான் ஆனால் அது பழைய பெயராம் .ஆனால் நான் வாய்க்கு இனிமையாக பத்மா என்று கூப்பிட்டால் கூட ஒரு முறைப்பு முறைப்பாள் அதனால் வீட்டில் மட்டும் செல்லமாக அவளை பத்மா என்று கூப்பிடுவேன்.

ஏன் மகள் சாப்பாடு வேண்டாம் இல்லை அப்பா எனக்கு பசிக்கவில்லை என்றாள் மகள் அஸ்வினி.நானும் மனிசி என்ன செய்திருக்கிறாள் என்று பார்க்கபோனேன்.ஏனென்றால் இந்த ரீவில காட்டுற சமையல் குறிப்புக்களையும் விளம்பரங்களையும் பார்த்து ஏதாவது செய்திருப்பாள் அதை வாயில் வைக்கவும் முடியாது .முழுங்கவும் முடியாது. குசினிக்குள் நுழைந்து பார்த்தேன் இட்லி தான் செய்து வைத்திருந்தாள். நான் அதை நவித்து பார்த்தேன் நன்றாக பூ போல தான் இருந்த்து.சில நேரம் கல் போல இருக்கும் அப்போது நான் சொல்லுவேன் மனைவியிடம் சொல்லுவேன் அம்மியிலோ அல்லது ,மிற்சியிலோ அரைத்து தந்தால் குடித்துவிட்டு போகலாம் என்பேன் அவள் அதற்கு நீங்கள் ஒரு நாள் சமைத்து பாருங்கள் அப்போது உங்களுக்கு தெரியும் என்பாள்.

 

 

மகளிடம் போய் ஏன் மகள் சாப்பிட முடியாது இந்த சாப்பாட்டுக்காகதானே நாம் இவ்வளவு கஸ்ரப்படுகிறோம் இரவு பகல் பாராமல் உழைக்கிறோம் என்றேன் மகள் மசிவதாக இல்லை எனக்கு கோபம் வர .மகளுக்கு கையை ஓங்க மனைவி பாய்ந்து வந்து தடுத்து விட்டாள்.மகள் அழுது கொண்டு  தன் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டாள் மனைவி எனக்கு ஏசி போட்டு அவளை சமாதானப்படுத்த சென்றாள். சென்று அவளை கூட்டிக்கொண்டு வந்தாள் .மகள் இங்க பாரு இந்த சாப்பாட்டுக்காக அப்பா பட்ட கஸ்ரத்தை சொல்கிறேன்  நாம் இப்ப வெளிநாட்டில் வாழ்ந்தாலும் இலங்கையில பட்ட கஸ்ரம் உனக்கு தெரியுமா?  என்று சொல்லி சொல்ல்லானேன்.

 

1990ம் ஆண்டு எனக்கு 6 வயது இருக்கும் அந்த காலம கஸ்ரகாலம் எனலாம் எனாலாம் என்பதை விட காட்டுமிராண்டி காலம் என சொல்லலாம் மனிதனை மனிதன் வேட்டையாடிய கலியுககாலம் கூட. அப்பா என்னை கூப்பிட்டு வா மகன் கூப்பன் கடைக்கு போகலாம் என்றார் எனக்கு ஒரே சந்தோசம் ஏனென்றால் சைக்கிளில் போவதென்றால்  காரில் போவது போல சந்தோசம் நானும் பாய்தடித்து கொண்டு ஓடி போனேன் ஒரு ஓட்டை காற்சட்டை சேட் கிடையாது. சைக்கிளில் இருந்து கொண்டு சென்றேன் பாதை பள்ளமும் படு குழியும் தான்  காலை 7.30 மணி கூட்டம் அலை மோதியது அங்கு வேறென்ன அந்த புழுத்த அரிசியை வேண்டதான் என்னை சைக்கிலுக்கு காவலாக விட்டு விட்டு  அப்பா லைனில் நின்றார். 8.00 மணிக்கு அந்த ஐயா வந்தார் அவர்தான் முத்திரை வெட்டி சாமான் கொடுக்கிறவர். அவர் வரும்போதே போளீன் போளீன் என்று வருவார் ஏதோ ராணுவ அதிகாரி போல அப்படி மரியாதை அவருக்கு .வந்த்தும் சாமான் கொடுக்க தொடங்கினார்கள் .ஒரு படியாக 11.45 மணியளவில் எங்களுக்கு கொஞ்சம்(புழுத்த) அரிசியும் ,மீண்டின் 2,அலியா தீப்பெட்டி12 ஜேம் போத்தல் ,பருப்பு ஒரு 1 கிலோ  கிடைத்தது .

 

நானும் அப்பாவும் வீட்டுக்கு வருகிறோம் .நான் நினைத்தேன் இன்று சோறு சாப்பிடலாம் என் நினைத்தேன் ஆனால் அன்றும் அம்மா குறுனல் சோறும் இலை கறியும் தான் இந்த குறுனல் சோறை எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியாது.நானும்  ஒன்றும் சொல்ல வில்லை அந்த நாளில் அந்த அப்படி பஞ்சம் மக்களுக்கு 1990ம் ஆண்டு இனகலவரமும் போரும் சூழலும் எங்கள் கிராமத்தையும் அயலிலுள்ள கிராமத்தையும் தொடர்ந்து பாதித்து கொண்டிருந்த்து அவர்கள் எங்கள் ஊரிலே அகதிகளாக பாடசாலைகளில் தஞ்சம் அடைந்திருந்தார்கள் .பாடசாலை பெரிதாக நடப்பதில்லை அதனால சந்தோசமும்தான் ,ஆனால் படிக்க முடியவில்லை என்ற துக்கமும் தான்

 

( தவிடு வேண்டி அதை புடைத்தெடுத்து எடுப்பது குறுனல் )

எங்கள் வீடு ஒரு குடிசை வீடு கூரை வைக்கோலினால் மேயப்பட்டிருக்கும் நிலத்திற்கு பசுஞ்சாணத்தால் மினுக்கப்படிருக்கும் களி மண் தரை அந்த காலத்தில் ஏசி பூட்டிய வீடு எங்கள் வீடுதான் கதவுகள் இல்லை பன்னாங்கு இழைத்து கதவாக பயன் படுத்தி கொள்வோம். நான் எனது தங்கை 2பேர், தம்பி ஒருவர் மொத்தமாக குடும்பத்தில் ஆறு பேர் அக்கம் பக்கம் எல்லாம் வெட்ட வெளிதான்,எங்கள் வீட்டின் பிரதான் கறிகள் ,வாழை பூ சுண்டல்,வள்ளல் இலை ,முடக்கத்தான் ,பொன்னாங்கண்ணி,,செம்பருத்தி பூ, குறிஞ்சா இலை,நீர் வம்மி இலை மிக மிக முக்கியமான உணவு மரவள்ளி கிழங்கு இதை அவித்து தேங்காய் பூ கொஞ்சம் போட்டு அப்பா பிசைந்து தருவார் ஆளுக்கொரு கொழுக்கட்டை  அந்த நாள் ருசி இப்பவும் ஊறுகிறது நாக்கில்.  இறைச்சி வகைகள் கண்ணில் காட்டமாட்டார்கள்  எப்போதாவது கோழிகளுக்கு வருத்தம் பரவுவது தெரியவந்தால் கறி சமைப்போம் மற்றும் படி கோழிகள் ஆடுகள் மாடுகள் எல்லாம் குடும்ப வருமானத்தின் ஒரு பங்காளிகள்  ஆனால் இனகலவரமும் போரும் சூழ விசமிகளால் எல்லாம் கொல்லப்பட்டும் ,கொள்ளையடிக்கப்பட்டும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும்

 

ஒரு நாள் பம்பர் சத்தம் கேட்ட்து நாங்க அப்பவே உஷாரு ஓடி போய் பங்கருக்குள் ஒளிந்து கொண்டோம். அம்மா சோறு அடுப்பில் வைத்தவாறு அப்பா வீட்டில் இல்லை குண்டு சத்தம் கேட்க ஆரம்பிக்க  அம்மா எங்கள் இழுத்து கொண்டு அகதி முகாம்களுக்குள் சென்று அகதிகளுடன் அகதியாக தஞ்சமடைந்தோம். பக்கத்து வீட்டு பாட்டி அம்மாவின் குடும்பங்கள் வராது ஏனென்றால் பாட்டிக்கு குண்டு சத்தம் அல்லது வெடி சத்தம் கேட்டாலோ உடனே  வயித்தால போவது வழக்கம் இப்ப கூட  நினைக்க சிரிப்பாக வந்தாலும். மற்றவர்கள் பதுங்கு குழிக்குள்  இருப்பார்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழி அமைத்திருப்பார்கள் அந்த் காலத்தில். வெடி சத்தம் ஓய்ந்த்தும் வந்து பார்த்தால் அடுப்பில் இருக்கும் சோறு பத்தி கரியாக இருக்கும் வேறென்ன செய்வது அன்றை நாள் பட்டினிதான் இந்த பசியால் அந் நாளில் நாங்கள் பட்ட வேதனை என்பது இருக்கே சொல்ல மாளாது ஆனால் இப்ப எவ்வாளவு சாப்பாடு கிடைத்தாலும் சாப்பிட முடியவில்லை .

 

பாடசாலை முடிந்து வீட்டிக்கு வரும் நல்ல கறி மணக்கும் அஹா இந்த கறியுடன் சாப்பிட்டால் எப்படியிருக்கும் என நினைத்து வந்தால் அம்மா வெறும் சோறு மட்டும் சமைத்திருப்பாள் வேறென்ன செய்வது  யாரை யார் குற்றம் சொல்வது அம்மா தேங்காய் துருவி தருவா தண்ணியை ஊற்றி நாலு வெங்காயத்தை கடித்து சோற்றை குடிப்பேன்.இது எங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் அப்படித்தான் நிலமை .ஏனென்றால் வெளில் செல்ல முடியாது சந்தைக்கு செல்லமுடியாது சென்றவர்கள் காணாமல் போய் விடுவார்கள் ,அல்லது கொல்லப்பட்டிருப்பார்கள்  இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து இரவு வேலைகளில் உறங்கி கொள்வார்கள் பெண்கள் உள்ளுக்கையும் ஆண்கள் வெளியிலையும் உறங்கிகொள்வார்கள்  உறங்கிகொள்வார்கள் என்பதை விட முளித்திருப்பார்கள் ஏதாவது சத்தம்(அசிப்பு) கேட்டால் நாங்கள் படும் பாடு இருக்கே இறைவா அதை சொல்ல இயலாது

 

இப்படி கஸ்ரப்பட்டு வாழ்கையில் அனுபவிக்காத துன்பம் அனைத்தையும் அனுபவித்து சுனாமி  என்ற பேரழி ஏற்பட்ட்தால் என் மனைவியின் சொந்த காரர்கள் மூலமாக வெளி நாட்டுக்கு வந்தோம் .நாம் பட்ட துன்பம் நம் பிள்ளைகள் படக்கூடாது என்பதற்க்காக இரவு பகல்  பாராமல் உழைத்து பிள்ளைகளை படிக்கவைத்து வாழ்ந்தாலும் அவர்கள் தாய் தகப்பனின் நிலையை புரிந்து கொள்வதில்லை

 

நான் இங்கு நல்ல படியாக வாழ்ந்தாலும் சில வற்றை இழந்து கொண்டுதான் வாழ்கின்றேன் எனது தூக்கம் ,மன நிம்மதி எத்தனை ஆயிரம் ரூபா கொடுத்து கட்டில் மெத்தை வாங்கினாலும்  என் வீட்டு களிமண் தரைக்கு ஈடாகவில்லை ஒரு துண்டை விரித்தால் அங்கு நித்திரை ஆனால் இங்க எப்படி புரண்டு படுத்தாலும் நித்திரை இல்லை மனைவியின் குரட்டை சத்தம் வேறு

 

இது எங்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் .....இது கதையல்ல நிஜம்

யாழில் இருக்கும் வயதானவர்கள் கருத்து சொல்ல வேணூம் சொல்லி போட்டன் ஆமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவர்ஜீ

உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நானும் எனது மகன்மாருக்கு சாப்பாட்டின் அருமை பற்றி அடிக்கடி சொல்லுவேன். 70 களின் கடைசியில் சங்ககடையில் பாணுக்கு வரிசையில் நின்றதில் இருந்து நீங்கள் சொன்ன அரிசி, கோதுமை மா, துணி எல்லாமே சங்க கடைதான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவிற்கு நன்றி முனிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூப்பன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நின்றது தான் நினைவுக்கு வருகுது. உங்கள் நினைவுகளைத் தொடர்ந்து தாருங்கள் முனி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூப்பன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நின்றது தான் நினைவுக்கு வருகுது. உங்கள் நினைவுகளைத் தொடர்ந்து தாருங்கள் முனி!

அப்பிடி என்கிறீங்க...!

 

எனக்கு என்னவோ அந்த 'மாசிக்கருவாடு' வாங்கினது தான் நினைவில நிக்குது! :D

 

மண்ணெண்ணெய் மாட்டு வண்டிலில வரும்... கலைச்சுப்பிடிச்சு அவனிட்டை வாங்கினதும் நினைவிருக்கு!

 

உங்களுக்கு அந்தத் ' தேங்காய் எண்ணெய்' அளக்கிற உபகரணம் நினைவிருக்கோ?

 

காம்பு கொஞ்சம் வளைந்சிருக்கும்....அடியில ஒரு பேணியிருக்கும்! :icon_idea:

 

முனிவர்ஜி, உங்கள் நினைவுப் பகிர்வு..பல பழையதுகளைக் கிழறிப்போட்டுது... நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  கருத்துகூறிய  அனைவருக்கும் நன்றிகள் :)

 

இன்று அதிகளவில் கொட்டப்படும்  உணவுகளை  பார்த்தால் வேதனைதான் வருகிறது

 

இன்னும் நினைவுகள் இருக்கின்றது  சொல்ல முடியவில்லை :)

 

வாழ்க்கை ஒரு போர்க்களம் என்பார்கள்  இங்க வா(ள்)ழ்க் கை  வாளில் நடப்பது போல்தான் இருக்கிறது  :( 

 

பழைய் ஆட்கள் கருத்து  சொல்லுவாங்கள் என்று பார்த்தால் நீங்கள் நாலு பேர் பழைய கட்டை போல கிடக்கு :lol: 

Link to comment
Share on other sites

பல ஞாபகங்கள் மீண்டும் வந்து போயின.....  பகிர்வுக்கு மிக்க நன்றி முனிவர்ஜீ! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இல்லாமைகள் எமக்கு அப்போது துன்பமாக தெரியவில்லை ...... ஆசைகள் என்பது எமக்கு மட்டபட்டதகவே இருந்தது. எதுவுமே இல்லது இருந்தும் அப்படி ஏதும் வெறுமை இருந்ததாக தெரியவில்லை.
மனதில் ஒரு மகிழ்ச்சி நிலை கொண்டே இருந்தது.
 
இப்போது எல்லாம் இருக்கிறது ............. மனது வெறுமை ஆகி கிடக்கிறது.
 
புதுவை எழுதிய ...
"எமக்கு குந்தி இருக்க ஒரு குந்து வேண்டும் அவளவுதான்" என்று எழுதியது என்னை மிகவும் பாதித்தது. இப்போதும் இந்த ஆடம்பரங்களில் எனக்கு எந்த இஸ்டமும் இல்லை. அங்கே சென்று அந்த பேய்களுக்கு நடுவில் வாழவும் முடியாது. இப்படியே அல்லல் படுகிறோம்.
 
ஒரு குருவி கூட்டம் போல எங்கள் வாழ்வு இருந்தது 
இயற்கையோடு ஒன்றி இருந்தோம். இப்போ அன்பு  பாசம் கூட செயற்கை என்றாகிவிட்டது. உரியவளிட்கு பிறந்ததினத்தில் பரிசுகொடுக்கவில்லை என்றால். அன்பில்லை ஒரு நினைப்பு  இல்லை என்று கலவரம் நடக்கிறது. நுகர்வு பொருட்களால்தான் அன்பு அளவிட படுகிறது.
புதிய தலைமுறைக்கு இது ஒத்துபோக கூடியதாக இருக்கும். வறுமைக்குள் இருந்து வந்தவர்கள்  நாம் ..... இன்னொரு மனிதன் அப்படி  இப்போதும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டு. நிமதியாக தூங்க முடியவில்லை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண் எண்ணை, சீனி தட்டுப்பாடு நேரம் மிக நீண்ட வரிசையில் காலையிலிருந்தே....

ஆக்கள் வரிசையில் நின்றது ஞாபகம் உள்ளது.
கூப்பன் கடையில்... வெட்டப்படும் புள்ளிகளை, ஒருவர் கோதம்ப பசையால்.... ஒட்டிக் கொண்டிருப்பார்.
பழைய நினைவுகளை, இரைமீட்ட வைத்தது முனிவர் ஜீ.
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை ,மருதங்கேணி அண்ணை  தமிழ் சிறி அண்ணை :)

 

மறக்க முடியாமல் என்னுள்  திரியும் நினைவுகள்  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்கள் மறக்க முடியாதவை. அதுவும் அந்த பங்கர் வாழ்க்கை , குஞ்சு, குருமான்கள் , பூனை நாயையும் உள்ளே அடியில அனுப்பி விட்டு இடைக்கிடை வெளியில் வந்து பிளேனைப் பார்க்கிறது, எனது பாட்டி ஒருநாள் அவசரமாய் பங்கருக்குள் இறங்கும்போது தலையில் தீரந்தி அடித்து , பின் சில நாளில் அவ மோசம் போயிட்டா. இன்னும் எவ்வளவோ நினைவுகள்.. முனிவர் ஜீ...!

Link to comment
Share on other sites

கூப்பன் கடைபற்றி இருபது வருடங்களுக்கு முந்தி நானும் ஒரு கதை எழுதினனான்!!  :o

 

பாதிப்பு

 

சூரியனுக்கு என்னதான் குதூகலமோ? மிகவும் கடூரமாகச் சூட்டை வெய்யிலுடன் கலந்துவிட்டிருந்தான் சிறீலங்கா அரசு தமிழீழத்தில் பொருளாதாரத் தடையுடன் விமானத் தாக்குதலை நடாத்துவதுபோல. ஒருவருக்குச் சந்தோசமானபோது மற்றொருவர் கஸ்டப்படுவது இயற்கைதானே?! எப்படியாவது கொதிக்கும் வெய்யிலில் கால் உழையக் காத்து நின்றாவது அரிசியை வாங்கிக்கொண்டுதான் போகவேண்டும் என்ற உறுதியுடன் அந்த மக்கள் கையில் வியர்வையால் பிசுபிசுக்கும் கசங்கிப்போன சில முத்திரைகளுடனும் உர "வாய்க்"குகளுடனும் காத்திருந்தார்கள்.

 

வயிற்றில் பசி. சூட்டாலும் பசியாலும் கைக்குழந்தைகள் சில தாய்மாரின் மார்புச் சேலைக்குள் முகம்புதைத்து அழுதன. பளீரென்று எறிக்கும் வெய்யிலில் வீதிப்புழுதி அந்தச் சனங்களின் மூக்குத் துவாரங்களில் நுழைந்தாலும் அது அவர்களுக்குப் பழகிப்போனதொன்றாகிவிட்டது. பூவரசம் மரங்களிலும் முள்ளுக்கிளுவைகளிலும் பசுமையைக் காணவில்லை. ஏதோ இலை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று காட்டுவதற்காகவோ என்னவோ இரண்டொரு பழுத்தல்களும் சில பசுமையற்ற பச்சைகளுமாய் இலைகள் வதங்கிப்போயிருந்தன.

 

உயிர்த்துடிப்பின்றி அந்தக் கிராமம் மௌன நிழல்களாய் விறைத்திருந்தது.

 

பசியைத் தாங்கமுடியாத குழந்தைகள், தமது உணர்ச்சிகளை அழுகையில் இருந்து கதறல்களில் வெளிப்படுத்தவென வீறிட ஆரம்பித்திருந்தன. பல பெண்கள் களைப்பு மேலிட நின்ற இடத்திலேயே உட்கார்ந்துவிட்டனர்.

"என்ன பெண்டுகள், இப்பிடிச் சக்கைப்பணிய இருந்தால் வரிசை எப்பிடி முன்னுக்குப் போறது.... எல்லாரும் எழும்புங்கோ" என்றார் செல்லமக்கா.

"எவ்வளவு நேரந்தான் நிக்கிறது? நிண்டு நிண்டு கால் உழைஞ்சு போச்சு...." என்று எவளோ ஒருத்தி எரிச்சலுடன் கூறினாள்.

"வீட்டைபோய் உன்ரை புருசனைத் தைலம் தேய்க்சுவிடச் சொல்லு."

"அந்தாள் தேய்ச்சுவிட்டாலும் தைலத்துக்கு நான் எங்கை போறதாக்கும்" என்று அலுத்துக் கொண்டாள் அந்த ஒருத்தி.

"இதிலை நீட்டிப்பிடிச்சுக்கொண்டு இருந்தால் மற்றவை எல்லாம் எப்பிடி முன்னாலை போறது?"

 

யாரோ ஒரு பெண் வீறிட்டலறும் கைக்குழந்தையை அடக்கமுடியாமல் வரிசையைவிட்டும் விலகிச்செல்ல முடியாமல், குழந்தையின் காலில் இரண்டு நுள்ளு நுள்ளினாள்.

"ஏண்டி லீலா! உனக்குக் கொஞ்சமாலும் மூளைகீளை இருக்கேடி.... அது பசியாலை கத்துதோ இல்லாட்டி வெக்கையாலை அழூதோ ஆர் கண்டது.... அங்கை அந்த வேலி நிழலிலை இருந்து பாலைக் குடடி. வரிசை கிட்டப்போகேக்கை கூப்பிடுறன். கந்தையா அண்ணருக்கு ஒற்றைப் பெட்டையாய்ப் பிறந்து செல்லமாய் வளந்து இப்பிடிக் கஸ்டப்பட வேண்டிக்கிடக்குது" என்று பச்சாதாபப்பட்டாள் செல்லமக்கா. லீலா மௌனமாக வேலியின் நிழலை நாடிச் சென்றாள்.

 

அது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளை. எப்போதாவது இருந்தாற்போல அரிசி வரும். மற்றும்படி நாட்டு நிலையைச் சர்வசாதாரணமாக்கிக் கடை வெறுமையாக இருப்பதுதான் வழக்கம். இன்று அரிசி வந்த செய்தியைக் கேள்விப்பட்ட அக்கிராம மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு கூடியிருந்தார்கள்.

 

"பன்ரண்டு மணிமட்டுந்தான் அரிசி குடுப்பம். பன்ரண்டுக்கு இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கு. ஆறேழு பேருக்குத்தான் குடுக்கலாம். மிச்ச ஆக்கள் மூண்டு மணிக்கு வாருங்கோ...." என்று சங்கக்கடை மனேசர் குண்டைத் தூக்கிப்போட்டார்.

"என்ன.... என்ன...." என்று எல்லோரும் கத்தினார்கள்.

"தமிழிலைதான் சொன்னனான். பேந்தென்ன கேள்வி?" -ஆணவமாகக் கேட்டார் மனேசர்.

"ஏன்ரா பாழ்படுவானே.... கோதாரியிலை போறவனே.... விடியக்காலத்தாலை பல்லுக்கூடத் தேய்க்காமை கைக் குழந்தையோடை நிக்கிறம். போன கிழமை முத்திலும் சங்கத்துக்கு அரிசி வரேல்லை. யானையிலை வந்தமாதிரி இண்டைக்கு வந்திருக்கு. பின்னேரம் அரிசி முடிஞ்சுபோமோ இல்லையோ எண்டு ஆர் கண்டது? நீ என்னடாவெண்டால் பின்னேரம் வாங்கோ எண்டு சுகமாய்ச் சொல்லிப்போட்டாய்.... அப்பு தம்பி.... கொஞ்சம் இரக்கம் காட்டணை. நல்லாயிருப்பாய்..." என்று கத்தலில் ஆரம்பித்துக் கெஞ்சலில் முடித்தார் செல்லமக்கா.

 

மற்றவர்கள் எவரும் குறுக்கிடவில்லை. செல்லமக்காவின் கோரிக்கை ஏற்கப்படாதா என்ற நப்பாசையில் மௌனமாய் நின்றிருந்தனர்.

 

"எல்லாருக்கும் ஒருக்காத்தான் சொல்லுறது.... உனக்கென்ன பேந்து பிறிம்பாய்ச் சொல்லவேணுமே?" என்று கடுகடுத்தார் மனேசர்.

"கிழமையிலை ஒரு நாளைக்காலும் ஒழுங்காய் அரிசியைக் கொண்டுவந்து தாறதில்லை. சனங்கள் எல்லாம் சோத்துக்கு அரிசியைக் காணாமைக் கஞ்சியையோ கூழையோ உறிஞ்சிக்கொண்டு அரையும் குறையுமாய்ப் பட்டினியாலை வாடுதுகள். எல்லாச் சனமும் சங்கக் கடையை நம்பித்தான் காயுதுகள். வெளிநாட்டிலை ஆராலும் இருந்தாலாவது கையிலை மடியிலை பிழங்குறதை வைச்சு எங்கையாலும் அரிசி வாங்கித் தின்னலாம். நீ என்னடாவெண்டால் நெஞ்சிலை கொஞ்சங்கூட ஈவிரக்கம் இல்லாமைக் கதவைச் சாத்தப்போறனெண்டுறாய். மரியாதையாய்ச் சொல்லுறன்.... எல்லாருக்கும் அரிசியைக் குடுத்துப்போட்டுப் பேந்து கடையைப் பூட்டு. என்னவோ சம்பளமில்லாமை வேலைசெய்யுறவன்மாதிரி...."

"நீ என்ன பெரிய லோயரின்ரை பெஞ்சாதிமாதிரி விட்டாக் கதைச்சுக்கொண்டே போறாய். இப்ப அரிசி தந்தால் வாங்கிக்கொண்டு போ. இல்லாட்டில் பின்னேரம் வந்து வாங்கு.... உனக்காக வேண்டிக் கடையைத் திறந்துவைச்சால் நான் வீட்டை போறேல்லையே.... சாப்பிடுறேல்லையே....?"

"ஏனப்பா.... உங்கடை வசதிக்குத் தகுந்தமாதிரி அதிகாரம் பண்ணுறியள்.... நியாயத்தைக் கேட்டால் கதையாமை இரு எண்டு அடக்கிறாய். இரக்கமில்லையே?! உன்ரை வாயைப் பொத்திக் கொண்டிருந்து அரிசியைப் போடெண்டு சொல்ல எவ்வளவு நேரஞ்செல்லும்? நாங்கள் என்ன திண்டு கொழுத்துப்போய் சொக்கிலேற்று வாங்கித் தின்னவே வந்து நிக்கிறம். ஏதோ அரைவயித்துக் கஞ்சியோ, கால்வயித்துக் கஞ்சியோ காய்ச்சிக் குடிக்கத்தானே இஞ்சைவந்து காயுறம். கொஞ்சம் கெதியாய் "பில்" எழுதி நிறுத்துப்போட்டால் ஒரு மணிக்குள்ளை எல்லாத்தையும் முடிச்சுப்போடலாம்."

"கடையைத் திறந்ததே அரை மணித்தியாலம் பிந்தி. அதிலை ஒண்டும் சட்டதிட்டம் இல்லை. பூட்டேக்கைதான் சட்டப்படி பூட்டவேணுமோ? மூண்டுமணிமட்டும் இந்த வெய்யிலுக்கை காத்திருந்து, எப்ப சமைச்சுச் சாப்பிடுறதாக்கும்.... பச்சைக் குழந்தையள் மூண்டு மணிவரையும் வயித்தைக் காயவைக்க முடியுமே? இப்பவே பசியாலை துடிக்குதுகள். நீயும் இந்த ஊரிலைதானே பிறந்து வளந்தனீ.... இதிலை நிக்கிற சனங்களின்ரை நிலவரங்கள் உனக்கும் தெரியுந்தானே... இதிலை எத்தினைபேர் வசதியாய் வாழ்ந்து இப்ப கெட்டுநொந்துபோய் இருக்குதுகள் எண்டதும் தெரியுந்தானே? ஏதோ எங்கடை ஊர்க்காரன்.... அறிஞ்சவன்.... தெரிஞ்சவன் எண்டு பார்த்தால் என்னவோ அதிகாரம் கொடிகட்டிப் பறக்குதே?" என்று செல்லமக்கா குத்தலாகப் பேசப்பேச, சங்கக்கடை மனேசருக்குக் கோபத்தால் முகம் சிவக்க ஆரம்பித்தது.

 

"அப்பவே இருந்து பாக்கிறன், நீதான் என்னோடை ஏறுக்குமாறாய் மிண்டிக்கொண்டிருக்கிறாய். அரைவயிறு கால்வயிறுக் கஞ்சி குடிச்சே கொழுப்பேறிப்போய்க் கதைக்கிற நீ, சோறு திண்டால் இன்னும் என்னென்ன கதைப்பாய்? நீ பசியோடை இருந்தாலும் சரி செத்தாலுஞ் சரி எனக்கென்ன?" என்றவர், சாமான் நிறுத்துக்கொண்டிருந்தவனைப் பார்த்துக் கத்தினார்.

"டேய் மூர்த்தி.... கடையைப் பூட்டடா கெதியாய்" என்று உத்தரவிட்டபடி கதிரையில் இருந்து எழுந்தார் மனேசர்.

"ஏண்டாப்பா.... நாங்கள் நிக்கிறது உன்ரை கண்ணுக்குத் தெரியேலையே? இன்னும் பன்ரண்டு மணிகூட ஆகேலை. ஏன் இப்பிடி ஏடாகூடமாய் நடக்கிறாய்?" என்று வேறும் சிலபேர் செல்லமக்காவுடன் சேர்ந்து சத்தமிட்டனர்.

"சொன்னது சொன்னதுதான். டேய் மூர்த்தி.... பூட்டடா. உங்கடை வசதிக்காய்க் கடையைத் திறந்துவைக்கச் சொல்லி எனக்கு ஆரும் சொன்னதுமில்லை. உங்களுக்குச் சேவை செய்யவேணுமெண்டு என்ரை தாய் தேப்பன் என்னைப் பெறவும் இல்லை."

"ஏண்டாப்பா அளவுக்கு மிஞ்சிக் கதைக்கிறாய்? நாங்கள் என்ன அவ்வளவு இளக்காரமாய்ப் போனமா? உன்ரை கொப்பன் எப்பிடி வாழ்ந்தவன் எண்டு இஞ்சை நிக்கிற சனத்துக்குத் தெரிஞ்சதுதானே? கள்ளமாடு பிடிச்சு வன்னியிலை கொண்டுபோய் வித்துத்தானே சீவிச்சவன்...."

"கொழுப்பு ஏறிப்போச்சு...."

"என்னடா கொழுப்புக் கிழுப்பெண்டுகொண்டு.... உனக்குத்தான்டா கொழுப்புப் பிடிச்சுப்போச்சு. சங்கத்துக்கு வாற அரிசி மூட்டையளிலை பாதியை ஏரம்புகடைக்கு வித்துக் காசடிக்கிற நீயும் ஒரு மனிசனே.... ஈனப்பிறவி. இப்ப மரியாதையாய் அரிசி தரப்போறியா இல்லையா?"

"இல்லாட்டி.... இல்லைத் தெரியாமைத்தான் கேக்கிறன். இல்லாட்டி என்ன செய்யப்போறியள்? டேய் மூர்த்தி.... மடையா, அங்கை என்னடா வாய் பாத்துக்கொண்டு.... கெதியாய்ப் பூட்டடா."

 

மூர்த்தி கடையைப் பூட்டப்போக, செல்லமக்கா அவனது கையைப் பிடித்துக்கொண்டாள். செல்லமக்காவுக்கே ரோசம் பொத்துக்கொண்டு வந்தபோது.... பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆண்களும் சேர்ந்துகொண்டார்கள். மனேசர் குறுக்கே பாய, யாரோ அவரைப் பிடித்து வெளியே இழுத்தெறிந்தார்கள். ஆவேசத்தில் ஆக்கினையில் அகப்பட்டுச் சிலிர்த்தெழுந்த அந்த மக்கள்கூட்டம் வெற்றுப்பைகளுடன் முண்டியடித்தவாறு கடைக்குள் நுழைந்து அரிசியைப் பைகளில் நிரப்பிக்கொண்டது. செல்லமக்கா பெருமை பொங்க, "மக்கள் சக்தியைப் பார்" என்பதுபோல மனேசரைப் பார்த்தாள். எதுவுமே செய்யமுடியாத இயலாமையுடன் பழிவாங்குவேன் என்ற கோலத்தில் நின்றிருந்தார் மனேசர்.

 

தற்போதைக்கு அந்த மக்களின் அரிசிப் பிரக்கனை தீர்ந்துவிட்டது. நாளையிலிருந்து சங்கக்கடையே இல்லாமல் போகலாம். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. நாளையும் அவர்கள் வாழத்தான் போகிறார்கள். ஏதாவது கிடைக்காமலா போய்விடும்?!

 

அந்தச் சிறுகதையைப் படித்து முடித்துவிட்டுப் பெருமூச்சொன்றை உதிர்த்தான் உதயன்.

அரிசிக்காகப் போராடி அரைவயிற்றை நிரப்ப முற்படும் தாயக மக்களின் அவலத்தின் ஒரு நிகழ்வை எவ்வளவு ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறது அந்தக் கதை. அவர்களின் எதிர்காலம்தான் என்ன? அவர்களுக்கு எவர் உதவுவார்கள்? அந்த மக்களுக்கு என்றுதான் விடிவு வரும்? வயிறு நிறையச் சாப்பிட்டு, வசதியாக வாழ ஒரு காலம் அவர்களை நாடாதா? அவர்களைப்பற்றி இந்த ஜேர்மன் மண்ணிலோ அல்லது ஐரோப்பிய மண்ணிலோ வாழும் தமிழர்களில் எத்தனைபேர் சிந்தித்து உதவிசெய்ய விழைகிறார்கள்? ஏன் மற்றவர்களைப்பற்றி எண்ணவேண்டும்?

நானே.... அவர்களுக்காக.... என் தேவைகளை வசதிகளைக் குறைத்துச் செயற்பட்டால் என்ன?! தன்னையே கேட்டுக்கொண்டான் உதயன்.

அந்தச் சிறுகதை அவனுள் பலவிதமான உணர்வுகளைத் தோற்றுவித்திருந்தது. ஜேர்மனியில் அகதி அந்தஸ்துக் கோரி, நல்லதொரு தொழிற்சாலையில் வேலைசெய்யும் உதயன் தாயக அகதிகளுக்காக உதவிசெய்ய அப்போதே தீர்மானித்தான்.

 

"என்னங்க.... சாப்பாடு எடுக்கட்டே...." சமையல் முடித்துக் குரல் கொடுத்தாள் சாந்தி.

"ம்....."

சாப்பாட்டுச் சட்டிகள் மேசைக்கு வந்தன.

பரிமாறினாள்.

 

சோற்றைக் கறியுடன் பிசைந்து ஒரு கவளம் விழுங்கிய உதயனின் முகம் சுருங்கியது.

"இதென்ன கறி...." என்று கோபம் கொப்புளிக்கக் கேட்டான்.

"சுறாக்குழம்பு.... ஏன் கேக்கிறியள்?"

"உனக்கு எத்தினை தரம் படிச்சுப் படிச்சுச் சொன்னனான் சுறாக் குழம்புக்குப் பழப்புளி விடவேணுமெண்டு. கறியிலை உப்பும் இல்லை. புளியும் இல்லை.... என்ன எண்ணத்திலை சமைச்சனீ?"

"புளி முடிஞ்சுபோச்சு..."

"அதை முந்திச் சொல்லி இருக்கலாந்தானே.... புளி இல்லாட்டி வேறை கறியைக் காய்ச்சாதன்...."

"இறைச்சியும் முடிஞ்சுபோச்சு..." என்று கணவனுக்கு அடங்கிய (அடிமையாகிய) அப்பாவி முணுமுணுத்தாள்.

"எல்லாத்துக்கும் முடிஞ்சுது முடிஞ்சுது எண்டத்தான் உனக்குத் தெரியும். சரியான இழவு.... நீயும் உன்ரை கறியும்" என்றவாறு சோற்றுக் கோப்பையைத் தள்ளிவிட, சோறும் கோப்பையும் தரையில் விழுந்து நாலாபுறமும் சிதறின.

 

சிறிது நேரத்திற்கு முன்பு படித்த அந்தச் சிறுகதை.... அதனால் எழுந்த எண்ணங்கள்.... எல்லாமே அந்தக்கணத்தில் நீரில் எழுதிய எழுத்துக்களாக.... அந்த ஆணின் அதிகாரத்தில் அலங்கோலமாகிய அறையைச் சுத்தமாக்குவதில் முனைந்திருந்தாள் சாந்தி. 

 

(கடல்-மார்கழி-1993) 

(தமிழர் புனரமைப்பு ஒன்றியம் ராட்டிங்கன் 4வது ஆண்டுமலர்-1995) 

(பூவரசு கலை இலக்கியப் பேரவை வெளியீடான "யௌவனமில்லாத யதார்த்தங்கள்" சிறுகதைத் தொகுப்பில்.. 1998)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்குமிக்க நன்றி ..இதுக்கும் வழியில்லாமல்  ஒரு காலம் வந்தது ....வரலாம்..என்பது ஏனோ உறைக்கவில்லை .

 

..பட்டால் தான் தெரியும்.  புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கூப்பன் கடை...... (நினைவுகள் )

 

 

இது எங்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் .....இது கதையல்ல நிஜம்

யாழில் இருக்கும் வயதானவர்கள் கருத்து சொல்ல வேணூம் சொல்லி போட்டன் ஆமா

முனிவரே நீங்கள் சொன்ன கூப்பன்காலம் நானும் அனுபவித்திருக்கிறேன். இந்திய இராணுவ காலம் பிறகு இலங்கை இராணுவ காலமென காலங்கள் மாறியும் எங்களது விதிமாறாத பொருளாதாரத்தடை பட்டினி வறுமை எவரைத்தான் விட்டு வைத்தது.
 
வெளிநாடுகளில் வளரும் எங்களது பிள்ளைகளுக்கு அடிக்கடி ஒவ்வொரு பெற்றோரும் பழைய நினைவுகளைச் சொல்லித்தான் வருகிறோம். ஆனாலும் இன்று நாங்கள் யாதுமற்றவர்களாய் போயிருக்கும் அவலத்தையும் கூடவே ஊட்டுகிறோம். ஏனெனில் எங்கள் கண்ணீருக்கு ஒரு வி(மு)டிவும் வருமென்ற நம்பிக்கையோடு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி அண்ணை, சோழியன் அண்ணை 20 வருடங்களூக்கு முன்னாலா அப்ப நாங்க சின்ன பிள்ளைகள் ,நன்றி சாந்தி அக்கா ,நிலாமதி அக்கா :)

 

 

Link to comment
Share on other sites

கூப்பனின் ஆளுமையில் அன்று சில தானியங்கள்கூட பெயர்மாற்றம் கொண்டிருந்தன.

 

கூப்பன் மா,

 

கூப்பன் அரிசி.

 

பழையதைக் கிளறி அதன் நறுமணத்தை நுகரவைத்த முனிவருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பாஞ் உங்க கருத்துக்கும் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.