Jump to content

கொக்கிளாய் ஆற்றுத் தொடுவாயில் களவாக கனிய மணல் அகழ்வு! ஐங்கரநேசன் தலையிட்டுத் தடுத்தார்


Recommended Posts

 
kaniyam%208656de.jpg
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கொக்கிளாய் ஆற்றுத் தொடுவாயில் கடந்த புதன்கிழமை தொடக்கம் அனுமதிப் பத்திரங்கள் இன்றி சுமார் 50 உழவு இயந்திரங்கரளைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்காகப் பெருந்தொகை இல்மனைற் கனிய மணல் அகழ்வு நடைபெற்று வந்த நிலையில் தகவல் அறிந்து நேற்று சம்பவ இடத்துக்கு சென்ற வட மாகாண விவசாய அமைச்சர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
 
அனுமதிப் பத்திரங்களைப் பெறாமல் மேற்கொள்ளப்பட்டு வந்த பெறுமதிமிக்க கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து பொலிஸார் ஊடாக மணல் அகழ்வு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
கனிய வளங்களை அகழ்வதற்கு தேசிய புவிச்சரித அளவையியல் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு பெறப்படாத நிலையில் மணல் அகழப்பட்டு வரும் இடத்துக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் நேற்று நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர். இது குறித்து அமைச்சர் ஐங்கரநேசன் கருத்துத் தெரிவித்தவை வருமாறு:- முகத்துவாரம் பகுதியில் மணல் அகழ்வதில் பெரிதாக பிரச்சினையில்லை.
 
முகத்துவாரம் ஊடாக நீர் மாறும்போது அது தானாக நிரவப்படும். ஆனால் அதற்கு தேசிய புவிச்சரித அளவையியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம் அனுமதிப் பத்திரம் வழங்கியிருக்கவேண்டும். அனுமதியின்றி கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழப்பட்டு உழவு இயந்திரங்கள் மூலம் கிழக்கு மா காணத்திற்குட்பட்ட புல்மோட்டை பகுதிக்கு இது எடுத்துச் செல்லப்படுகின்றது. நாம் சம்பவ இடத்துக்குச் சென்றபோது எம்மைக் கண்டவுடன் கனரக வாகனம் மற்றும் உழவு இயந்திரம் ஆகியன அந்தப்பகுதியிலிருந்து சென்றுவிட்டன.
 
பின்னர் இதுவிடயமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலரை நேரில் சந்தித்து பேசியிருந்தோம். அதன்போது தமக் கும் தெரியாமலேயே குறித்த மணல் அகழ்வு இடம்பெறுவதனை பிரதேச செயலர் ஒத்துக்கொண்டார். மேலும் அவர்கள் ஒரு அனுமதிப் பத்திரத்தை காண்பித்துள்ளனர். அந்த அனுமதிப்பத்திரம் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது. அந்த அனுமதிப்பத்திரத்தை வைத்தே இதுவரையில் மணல் அகழ்ந்துள்ளனர். இது சட்டவிரோத செயற்பாடாகும். - என்றார். மேலும் இல்மனைற் மணல் அகழப்படும் இடம் வடமாகாணத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது. எனவே மணல் அகழ்வு மாகாண சபைக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அதுவும் இடம்பெறவில்லை எனவும் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
 
கேட்பாரற்ற முறையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிறணைட் கல் மற்றும் கனிய மணல் ஆகியவற்றை மத்திய அரசாங்கம் தொடர்ச்சியாக தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகளுக்காகவும் உரிய அனுமதிப்பத்திரங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமல் அபகரித்து வருகின்றது. இதேவேளை, சுமார் 47 ஏக்கர் நிலத்தை இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல் பிரசுரமும் அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த காணிகளை சுவீகரிப்பதற்காக காணி உரிமையாளர்களை நிர்ப்பந்தித்து அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார். -
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.