Jump to content

கர்ப்பிணி பலி; யாழில் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பிணி பலி; யாழில் பதற்றம்

வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014 12:44 
unnamed(216).jpg-    

யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த  25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கர்ப்பிணி பெண் பலியானதையடுத்து ஆத்திரமுற்ற பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சேர்ந்து விபத்துக்கு காரணமான அந்த வாகனத்தை  தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம், இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பித்து ஓடிவிட்டார்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார், வாகனத்தை தீயிட்டு கொளுத்தியவர்களைத் துரத்தியதுடன், வாகனத்தின் சாரதியையும் தேடிப்பிடித்து கைது செய்தனர் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வாகனத்தின் பெருமளவான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவத்தில் பலியான கர்ப்பிணியின் சடலம் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து கோப்பாய், காங்கேசன்துறை, ஆகிய பொலிஸ் நிலையங்களிலிருந்து   மேலதிக பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் பகல் 12.45 மணியளவில் நிலைமையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/124332-2014-08-28-07-14-45.html
Link to comment
Share on other sites

ஈபிடிபியின் மகேஸ்வரி பவுண்டேசன் அமைப்பின் டிப்பர் வாகனமொன்று புத்தூர் நவக்கிரிப் பகுதியில் வீதியால் சென்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் கோபமுற்ற ஊர்மக்கள் அந்த டிப்பரைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். எனினும் வாகனச்சாரதி தாக்குதலாளிகளிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். அத்துடன் வீதியை தடை செய்து ஈபிடிபிக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தது.
 

tipper_2014.2.png

இந்த விபத்தில் க.சுபாசினி (வயது 25) என்ற கர்ப்பிணிப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பாக ஈபிடிபியினரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை துரத்த முற்பட்டனர்.
 

tipper_1.1.png


tipper.2.png

எனினும் அவர்களும் முரண்பட பதற்றமான சூழல் நிலவியது.தீயினை கட்டுப்பாட்டினுள் கொண்டவர காவல்துறை முற்பட்ட போதும்; டிப்பர் முற்றாக எரிந்து நாசமாகியிருந்தது. சம்பந்தப்பட்ட சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
வடமராட்சி கிழக்கிலிருந்து மணல் ஏற்றிவந்த ரிப்பரொன்றே மோதி கர்ப்பிணியை கொன்றுள்ளது.

 

tipper.3.png
tipper.4.png
tipper.5.png
tipper_2014.4.png

 http://www.pathivu.com/news/33476/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவக்கீரி  மக்கள் செய்தது தான்.... சரி.
ஆனால்.... இந்த வாகனத்தால், இரண்டு தமிழ் உயிர்கள். பலியாகி விட்டதே....... :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.