Jump to content

அரோகரா கோஷம் ஒலிக்க நல்லூரானுக்கு இன்று தேர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

18b631255da0f4bc517031330bc2e210.jpg

வரலாற்று சிறப்புடன்  விளங்கும் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இலட்சக் கணக்காண பக்தர்கள் புடைசூழ இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. 

அதிகாலை 6மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி வலம் வந்தார்.நாடெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான பக்தர்களின்  அரோகரா கோசத்துடன் வருடாந்த தேர் உலா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

 

IMG_0717.jpg

 

IMG_0623.jpg

 

IMG_0630.jpg

 

IMG_0693.jpg

 

IMG_0717(1).jpg

 

IMG_0832.jpg

 

22222.jpg

 

666(2).jpg

 

http://onlineuthayan.com/News_More.php?id=438103362324373548

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரான் திருவடியை நான் நினைத்தமாத்திரத்தில் எல்லாம் மறந்தேனடி கிளியே ....எல்லாம் மறந்தேனடி கிளியே.......நல்லுரானுக்கு அரோகரா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28.jpg

 

https://www.youtube.com/watch?v=ARt5YPOlmz8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது பெர்லின் மயூரபதி முருகனின் தேர்ப்பவனி  நடைபெறுகின்றது. ஜி. டி. வி யில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக பார்த்த நல்லூர் திருவிழா 1995 இல். பழய ஞாபகம் வருகிறது இப்படங்கழை பார்க்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன், தேர்ப்பவனி முடிந்து....
பச்சை அலங்காரத்துடன்...... இருப்பிடம் செல்லும் காட்சி.

 

31.jpg

 

32.jpg

 

33.jpg

 

34.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_7275(1).jpg

யாழ். நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (24)  வெகுசிறப்பாக நடைபெற்றது. இரதோற்சவத்தில் கலந்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள், நல்லூர்க் கந்தனை தரிசித்தனர். (படங்கள்: யாழ்ப்பாணத்திலிருந்து குஷான் பத்திராஜ)

IMG_7280(2).jpg

IMG_7284.jpg

IMG_7287.jpg

IMG_7291.jpg

IMG_7327.jpg

IMG_7347.jpg

IMG_7349.jpg

IMG_7350.jpg

IMG_7372(1).jpg

IMG_7553(1).jpg

IMG_7605(1).jpg

IMG_7632.jpg

IMG_7656.jpg

IMG_7675.jpg

IMG_7710.jpg

IMG_7740.jpg

IMG_7747.jpg

IMG_7762.jpg

IMG_7777.jpg

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினம் கூழுக்கும் கஞ்சிக்கும் ஏழைகள் அழுகையில் ஆயிரம் கோயில்கள் தேவையா?

-பட்டுக்கோட்டையார்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திருவிழாக்களுக்கு ஏதோ தனிய பணக்காரர்களும்,மத்திய வர்க்கமும் தான் போகின்ற மாதிரித் தான் கொஞ்சப் பேரின்ட கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சனம் யாழில் இருக்கா

 

ஓம் சரவணாபவ....

அரோகரா

அரோகரா

அரோகரா......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சனம் யாழில் இருக்கா..

 

கண்ணு வச்சிடாதீங்க.. ! அப்புறம் 'மகிந்தா & கோ' "என்னடா.. எவ்வளவு குண்டு போட்டு அழிச்சாலும் புற்றீசல் மாதிரி முளைக்கிறானுகளே...?" ன்னு வேற திட்டம் ஏதாவது போட்டுட போகிறானுக. :o:icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இப்போது மதத்தின் பெயரால் குட்டி உலகப்போரே நடக்கின்றது. இதற்குள் கஞ்சி/சாபக்கேடு என்று தம்மை தாமே தாழ்த்திக்கொள்ளும் சிறுகூட்டங்கள்........சொல்லி வேலையில்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சனம் யாழில் இருக்கா

 

ஓம் சரவணாபவ....

அரோகரா

அரோகரா

அரோகரா......

 

நல்லூர் கந்தனின் மக்கள் படை,புரட்சிப்படை...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு ஒரு விடையம் விளங்கவில்லை :rolleyes: .கடவுள் பக்த்தி இருகக்கு இலலை என்றதுக்கு அப்பால்.தாயகத்தில் மக்கள்தொகை இருக்க வேண்டும் என்கிறீர்களா அல்லது தாயகம் வெறுமையாக இருக்க வேண்டும் எண்கிறீர்களா. :rolleyes:

Link to comment
Share on other sites

தமிழனத்தின் வரம்போல் தோன்றும் மாபெரும் சாபக்கேடு.

 

 

தினம் கூழுக்கும் கஞ்சிக்கும் ஏழைகள் அழுகையில் ஆயிரம் கோயில்கள் தேவையா?

-பட்டுக்கோட்டையார்-

மனிதர்களுக்கு துன்பம் வரும் போது அவர்களுக்கு கடவுள் தேவை. இந்த படங்களில் மக்கள் மிகுந்த நம்பிக்கையோடும் பக்தியோடும் நல்லூர் முருகனை வழிபடுவதை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு துன்பத்தின் மத்தியில் இருக்கிறார்கள் என்பதையே என்னால் காண முடிகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வசதிகளுடன் வாழும் நாம் அங்கு எல்லா நம்பிக்கையும் இழந்து நல்லூர் முருகனிடம் சரணடைந்த மக்களை விமரிசிப்பது நியாயமானதல்ல.

Link to comment
Share on other sites

இல்லை ஜீட் அளவுக்கு அதிகமான மதநம்பிக்கை எமது மக்களின் சாபக்கேடே. அதில் வசதியானவர், வசதியற்றவர் என்ற பாகுபாடு இல்லை. வசதியான நாடுகளில் வாழும் எம்மவர்களும் இந்த சாபக்கேட்டினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். காருக்கு பூசை செய்து எலுமிச்சம் பழமும் பட்டு துண்டும் கட்டும் முட்டாள்தனத்தை எம்மவர்களில் தான் அதிகமாக காணலாம். உண்மையான கடவுள் நம்பிக்ககை உள்ளவன் மூடப்பழக்கங்களில் மூழ்க மாட்டான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நம்பீக்கை தவறல்ல. மதங்களின் வழிகாட்டலும், நெறிமுறைகளும் நம் ஆய்விற்கு உட்பட்டே தற்கால வாழ்க்கைக்கு வழிகாட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டும். கண்மூடித்தனமான் குருட்டு பக்தியும், மூட நம்பிக்கைகளும் நாளந்த வாழ்வின் சமூக நிம்மதியை குலைப்பவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில்..... மக்களுக்கு பொழுது போக்க எதுவும் இல்லை.
ஒரு மிருகக் காட்சி சாலை, அருங்காட்சியகம், பிள்ளைகளின் பொழுது போக்குக்கு... பெரிய  உல்லாசப் பூங்கா எதுவும் இல்லை.
அதனால்.... இப்படியான கோவில் திருவிழாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில்..... மக்களுக்கு பொழுது போக்க எதுவும் இல்லை.

.

 

இப்ப இராணுவத்திற்கும் வடமாகாணத்தில் பொழுதுபோக்க ஒன்றுமில்லை போலகிடக்கு அதுதான் ....துவக்கு தூக்கின் கையால காவடி தூக்கி ஆடுகிறான்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு ஒரு விடையம் விளங்கவில்லை :rolleyes: .கடவுள் பக்த்தி இருகக்கு இலலை என்றதுக்கு அப்பால்.தாயகத்தில் மக்கள்தொகை இருக்க வேண்டும் என்கிறீர்களா அல்லது தாயகம் வெறுமையாக இருக்க வேண்டும் எண்கிறீர்களா. :rolleyes:

 

தாயகத்தில் மக்கள்தொகை இருக்க வேண்டும் என்றே  விரும்புகின்றேன்

பார்த்ததும் சந்தோசமே வந்தது

அதை உறுதிப்படுத்தவே கேட்டேன்...

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன், தேர்ப்பவனி முடிந்து....

பச்சை அலங்காரத்துடன்...... இருப்பிடம் செல்லும் காட்சி.

 

31.jpg

 

நல்லூர்க் கந்தனின் அழகைவிட  விட என் உடன் பிறவாத் தம்பி

கந்தனுக்குச் சாமரம் வீசும் அழகே தனி அழகு :)

 

Link to comment
Share on other sites

மனிதர்களுக்கு துன்பம் வரும் போது அவர்களுக்கு கடவுள் தேவை. இந்த படங்களில் மக்கள் மிகுந்த நம்பிக்கையோடும் பக்தியோடும் நல்லூர் முருகனை வழிபடுவதை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு துன்பத்தின் மத்தியில் இருக்கிறார்கள் என்பதையே என்னால் காண முடிகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வசதிகளுடன் வாழும் நாம் அங்கு எல்லா நம்பிக்கையும் இழந்து நல்லூர் முருகனிடம் சரணடைந்த மக்களை விமரிசிப்பது நியாயமானதல்ல.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=145008#entry1037452

//தமிழனத்தின் வரம்போல் தோன்றும் மாபெரும் சாபக்கேடு.//

இதுவே நான் எழுதிய வசனம். இங்கே ஆன்மீகத்தை நான் விமர்சிக்கவில்லை மாறாக வரம் தருவதாக மாயத்தோற்றம் அளித்து பெரும் சாபத்தை வழங்கும் ஒரு இடமாக சுட்டிக்காட்டியுள்ளேன்.

ஈழத்தமிழ் இனத்தின் சிதைவின் சூக்கும முடிச்சு இங்கேதான் தனது ஆணிவேரைக் கொண்டுள்ளது.முதலில் இது அடயளத் தலம். இது ஆன்மீகத் தலம் என்பது இரண்டாம் பட்சமானது முதல் நிலையில் இது கலாச்சார அடயாளம். கலாச்சார அடயாளம் என்பதுக்குள் ஒளிந்திருப்பது போட்டிகளும் ஏற்றதாழ்வுகளும் இதர சமூகப் சிதைவுகளுக்கான காரணிகளுமே. இதில் தோன்றும் ஏராளமான தலைகளைப் பார்க்கையில் ஐக்கியப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் போல் ஒரு தோற்றம் எற்படும் ஆனால் ஒவ்வொரு தலையும் தனித்தனித் தீவுகள் தனித் தனி அரசுகள் போன்றது.

எந்த யுத்தத்திலும் எந்த நெருக்கடியிலும் இந்த இடம் மட்டும் எதிரியாலும் பாதுகாக்கப்படும். எதிரியாலும் அரவணைக்கப்படும். ஏனெனில் எதிரிக்கும் தெரியும் தமிழினத்தை கருவறுக்க இந்த இடத்தின் ஆதரவு மிக முக்கியம் என்பது.

நான் ஆன்மீகத்துக்கு எதிரானவன் இல்லை ஆனால் இது ஆன்மீகத் தலமாக ஒருபோதும் நான் உணர்ந்தது கிடையாது. அதே போல் யாழ் பல்கலைக்கழகத்தை மானுட அறிவை விருத்தி செய்யும் இடமாக நான் உணர்ந்தது கிடையாது. இரண்டும் இவ்வினத்தின் மிகப்பெரிய சபக்கேடாகவே நான் பார்க்கின்றேன்.

அறிவும் ஆன்மீகமும் இவ்வினத்தை இனத்தேசீயத்தை சிதைப்பதற்காக காலகாலம் நுதனமாக செயற்பட்டே வருகின்றது. அந்தவகையில் இவை இரண்டும் அறிவு ஆன்மீகம் என்பதற்கு அப்பால் சாதீய வர்க்க பிரதேசவாத தோற்றுவாய்களின் குறியீடுகள், அடயாளங்கள்.

ஈழத்தமிழரின் தொன்மத்துக்கும் வரலாற்றுக்கும் எடுத்துக்காட்டாக ஆன்மீகத் தலங்களாக பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம் கோணேஸ்வரம் முன்னேஸ்வரம் என பல புனிதத் திருத்தலங்கள் உள்ளது. சிறு தெய்வ வழிவாடுகளும் நிறைந்தே உள்ளது.

இங்கு நடப்பது என்னைப்பார் உன்னைப்பார் என்ற போட்டி. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளை விருத்திசெய்தல். ஆன்மீகத்துக்கும் இறை அன்புக்கும் இந்த இடத்துக்கும் சம்மந்தமே கிடையாது.

சுருக்கமாகச் சொன்னால் தனிஒருவன் வாழ்வதற்காக தன்னினத்தையே காணிக்கையாக்கும் இடங்கள் இவைகள்.

மற்றபடி எம்பெருமான் முருகன் மீது எப்போதும் பற்றுதல் உண்டு.

Link to comment
Share on other sites

மக்கள் தொகையை பார்க்க வடக்கில் வசந்தம் வீசுது போல இருக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.