Jump to content

முகநூலில் ரசித்தவை


Recommended Posts

யாழ்மாவட்டத்தில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது ! 

என்றுமே இல்லாதவாறு இந்த வருடம் வெப்பம் இரவு பகலாக கொளுத்துகிறது .! அத்துடன் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது . ! 

நிலத்துஅடி நீர் குறைந்து விட்டது .! தொண்டமானாறு நீர் ஏரியும் வற்றி கொண்டே செல்கிறது . அதீத வெப்பத்தால் மீன்களும் இறந்து கரை ஒதுங்குகின்றது ! .. வல்லை நீர் ஏரி மிகவும் வற்றி கொண்டே செல்கிறது . இதை பார்க்கும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது ! 

"கடவுளே நல்ல மழையை தா !! " .. என்று வேண்டி கொள்கிறோம் !! 

 

1911200_629382690472839_8767215806431162

 

Subramaniam Anandarajah வழுக்கையாறு போன்ற நீர் நிலைகள் இந்த சந்தர்பத்தை பாவித்து சரி செய்யலாம் , செலவு குறைவு

 

Subramaniam Anandarajah வல்லை பிரதேசத்தில், நிலா அமைப்பை, சீர் செய்ய நல்ல சந்தர்ப்பம். யாரிடமாவது சொல்லி பார்க்கவும்

 

https://www.facebook.com/myjaffna/photos/a.394082700669507.90318.393824350695342/629382690472839/?type=1&theater

Link to comment
Share on other sites

  • Replies 178
  • Created
  • Last Reply

தாய்லாந்த் பயணத்தின் போது எனக்கு ஏற்பட்ட வியப்பு.

 

அன்புத் தமிழுறவுகளே ! தாய்லாந்த் பயணத்தின் எனக்கு ஏற்பட்ட வியப்பை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .தாய்லாந்து பேரரசகுரு வாமனதேவ முனிகள் அவர் சீடர் திராந்து புரானசிறி இருவரை நான் நேர்காணல் செய்தது மகிழ்ச்சியும் வியப்பையும் ஏற்படுத்தியது ..

தாய்லாந்து நாட்டில் வாழும் தமிழ் ! இன்றும் தேவாரமும் , திருவெம்பாவையும் மார்கழித் திங்களில் காலை 4 - மணிக்கு தாய்லாந்து மக்கள் பேரரசகுரு வாமன தேவ முனிகள் முன்னிலையில் பேரூஞ்சல் விழாவில் பாடப்படுகிறது . அவர்கள் பாடல் தமிழ் என்று தெரியாமல் இருந்தாலும் அவர்களால் ஒன்று தெளிவாக சொல்லப்படுகிறது இன்றைய தென் இந்தியாவில் உள்ள இனக் குழுவிடம் மிக பெரிய பண்பாடு தொடர்புப் பாலம் இருந்ததாக தெரிவிக்கிறார்கள் . அந்த இனக்குழு வேறு யாரு இல்லை நம் தமிழர்கள் தான் .

தாய்லாந்து மாமன்னர் முடிசூட்டு விழாவில் தோடுடயசெவியன் என்ற இனிய பாடல் இன்றும் .......... பாடப்படுகிறது !

சீன நாடு உள்ளிட்ட , தென்கிழக்காசிய நாடுகளான , சிங்கபூர் , மலேசியா , சாவகம்(Java), சுமத்ரா, (இந்தோனீசியா),கம்போடியா, வியத்நாம், கொரியா, ஆகிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, வரலாறு, மொழி, இன்றும் கூட பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

தமிழர்களாகிய நாம் உறவுப் பாலம் அமைக்க வேண்டாவா ?
மேற்குலகை நோக்கி மட்டும் ஓடலாமா ?
நம் பண்பாடு இன்றும் விளங்கும் இந்த நாடுகளுடன் உறவாட வேண்டாவா ?

இதற்கு அரசு உதவி எதற்கு ? ஒன்றிணைவோம்! உறவுப் பாலம் அமைப்போம் !

சிந்திக்க அழைக்கிறேன் ! தமிழ் நெஞ்சங்களே ! நம் பேரக்குழந்தைகட்கு நம் தொல் வரலாற்றை சொல்லுவோமே !

நம் பிள்ளைகட்குக் கூட சொல்லலாமே ! தவறில்லையே ! தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி என்று ஓர் அறிஞர் கூறினார் !
சிந்திக்க வேண்டாமா ? நாம் காரணி ஆகலாமா ? இனம் அழியின் பெரும் சாபத்திற்கு அல்லவா ஆளாவோம் !

"சிந்தியுங்கள் !" என்றுமட்டும் சொல்வேன் !

இப்படிக்கு,
தஞ்சை கோ.கண்ணன்

 

10269514_763174027046436_143929517164947

Link to comment
Share on other sites

தோல்வியிலேயே மிகப் பெரிய தோல்வி, தன்னம்பிக்கையை இழப்பது மட்டுமே...! 

 

10312495_764282660268906_687939214669320

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியிலேயே மிகப் பெரிய தோல்வி#தன்னம்பிக்கையை இழப்பது மட்டுமே...! 

 

10312495_764282660268906_687939214669320

உண்மைதான்.

Link to comment
Share on other sites

இனமா ? கிரிக்கெட்டா ?

மே 18 இனப்படுகொலை நாளில் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை தமிழர்கள் புறக்கணிப்பார்களா ? அல்லது இனப்படுகொலை நினைவேந்தலில் பங்கெடுப்பார்களா ?

தமிழர்கள் இனப்படுகொலை நாளை மறப்பார்களா? கிரிக்கெட் போட்டியை அந்த நாளில் புறக்கணிப்பார்களா என்பது தமிழர்களின் தன்மானத்தை சார்ந்த விடயம்.
தமிழர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறோம்.

10247448_764755893554916_375815414130939

 

 

 

Link to comment
Share on other sites

டிக்கட்டை வாங்கிவிட்டு போகாமல் விட வேண்டும்.. இதை தமிழ் ஆர்வலர்களே செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் அங்குள்ள சில டமிழ்ஸ், கேரள, ஆந்திரா, இந்திவாலாக்கள் போய்ப் பார்த்துவிடுவார்கள்.  :rolleyes:

Link to comment
Share on other sites

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்ணியமாய் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்?
அப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச் சிறுமி?

அப்படித்தானே கேட்க்கத் தோன்றுகிறது??
இந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை ’அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர்’ என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா.

ஆச்சர்யமா இருக்கா??
உண்மைதான், கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்த தீபிகா குரூப் தற்போது பொற்றோருடன் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கிறார்.

14 வயதே ஆன தீபிகா தனது விடுமுறை நாள்களை கழிப்பதற்காக இந்தியா வந்தபோது பார்த்த ஒரு நிகழ்வு அவரை ஒரு ஆராச்சியாளராக மாற்றியுள்ளது.

தீபிகா தன் கண்ணால் பார்த்த காட்சி எது தெரியுமா? கிராமத்தில் வாழும் சிறுவர்கள் தேங்கிக் கிடக்கும் குட்டையில் தண்ணீர் குடித்ததைப் பார்த்ததுதான். மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கிறார்களே…. இவர்களுக்காக ஏதேனும் செய்தாகனும் என்ற முடிவுடன் அமெரிக்கா திரும்பிய தீபிகா தனது ஆராய்ச்சியினைத் துவக்கினார்.

சூரிய சக்தியினைக் கொண்டு நீரைத் தூய்மைப்படுத்தும் ஒரு கலன் உருவாக்குவதே அவரின் இலட்சியமாய் இருந்தது. தனது ஆசிரியர்களின் உதவியுடன் திட்டம் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். அதில் அவர் வெற்றியும் கண்டார். நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டஙகளில் கடைசியாக கணிதம் மற்றும் அறிவியல்வகை சார்ந்த ஒன்பது மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இறுதித் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் முதல் பரிசினைப் பெற்றது தீபிகாவின் கண்டுபிடிப்பு.

25,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையுடன் முதலிடமும், அதிபரின் பாராட்டும் கிடைத்தது வெறும் கண்டுபிடிப்புக்கு மட்டுமல்ல; ”இந்தியா மற்றும் இதுபோன்ற இன்னும் சில நாடுகளில் சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்கும் குழந்தைகளின் நலன் காக்கவே எனது கண்டுபிடிப்பான சூரிய மின்சக்தியில் இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்புக் குவளை பயன்படும்” என்று சொன்ன மனிதமும் தான்.

 

10178059_763828613647644_915860702034197

 

Link to comment
Share on other sites

குடியரசுத் தலைவரிடம் விருதுபெற்ற மானாமதுரை கடம் தயாரிப்பாளர்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து சிறந்த கடம் தயாரிப்பாளருக்கான விருதை, மானாமதுரையைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் டெல்லியில் ஏப். 11-ம் தேதி நடைபெற்ற விழாவில் பெற்றுள்ளார்.

மானாமதுரை மண்ணில் பிசைந்து தயாராகும் கடத்திற்கு, இசை உலகில் தனி இடம் உண்டு. இதன் சிறப்பை உணர்ந்த இந்திய தேசிய சங்கீத அகாதெமியின் தலைவர் லீலா சாம்சன், தேசிய அளவில் சிறந்த கடம் தயாரிப்பாளர் விருதுக்கு மீனாட்சி அம்மாளை 2013 டிசம்பர் மாதம் தேர்வு செய்து அறிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் ஏப்.11-ல் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மீனாட்சி அம்மாளுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
ஒரு லட்சம் பண முடிப்பும், தாமிரப் பட்டயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக கடம் தயாரித்துவரும் மீனாட்சி (60) கூறுகையில், "15 வயதில் இருந்து கடம் தயாரிக்கிறேன். மூன்று தலைமுறைகளாகத் தயாரித்து வருகிறோம். குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது"என்றார்.

 

 

10168220_765828206781018_675117156561411

 

Link to comment
Share on other sites

படத்தின் உண்மைத்தன்மையில் நம்பிக்கை இல்லை.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் உண்மைத்தன்மையில் நம்பிக்கை இல்லை.. :D

 

அத்துடன்... இப்பறவை, உறை பனிப் பிரதேசத்தில் வாழும் பறவையும் அல்ல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை கோளின் விஸ்வரூபம்.- அருமையான காணொளி.

 

https://www.facebook.com/photo.php?v=10201508734829670&set=vb.1515495864&type=2&theater

Link to comment
Share on other sites

இந்திய ஊடகங்களின் பொய் பிரச்சாரம்

1798474_809000705781448_1179681940_n.jpg

இந்திய ஊடகங்களின் பொய் பிரச்சாரம்

* ராஜீவ் கொலையாளிகள் என்றே சொல்கிறார்கள்.

- இவர்கள் கொலையாளிகள் அல்ல. கொலையாளிகளுக்கு மறைமுகமாக உதவியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள். நேரடி கொலையாளிகள் இறந்துவிட்டார்கள்.

* ராஜீவ் கொலை ஒரு தீவிரவாதச் செயல் என்றே குறிப்பிடுகிறார்கள்.

- உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், இது பழிக்கு பழியான செயல் என்றே குறிப்பிடுகிறது. தீவிரவாதத்தின் எந்த ஒரு வரையறைக்குள்ளும் இவை வருவதில்லை.

* ஒரு நாட்டின் பிரதமரை கொன்றவர்கள் என்கிறார்கள்.

- ராஜீவ் ஒரு முன்னாள் பிரதமர். சொல்லப்போனால் ஒரு சாதாரண தேர்தல் வேட்பாளர்.

* நாட்டின் விருப்பத்திற்கு (Nations Interest) எதிரானது என்கிறார்கள்.

- சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடைபெறும் நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த மனசாட்சி அல்லது நாட்டின் விருப்பம் என்று சொல்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகும்.

* மரண தண்டனை குற்றத்தின் தன்மையின்படி அவசியம் என்கிறார்கள்.

- குற்றத்தின் தன்மையை பொறுத்து தீர்ப்பு வேறுபட்டாலும், ராஜீவ் கொலை வழக்கு என்பதை தவிர, குற்றம் மிகத்தீவிரமானது அல்ல. குற்றத்தின் தன்மையில், கொலைக்கான காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு பார்த்தால், கொலையை ஒரு வகையில் நியாயப்படுத்தக்கூட முடியும்.

* ராஜீவ் என்னும் முக்கிய நபர் கொலையில் அனைவரும் விடுவிக்கப்படுவதில் நீதி இல்லை என்கிறார்கள்.

- சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில் ராஜீவ் என்ற நபருக்காக தண்டனை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. நீதியின் அடிப்படையில் தான் அவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள்.

* ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

- நாமும் அதையே தான் கேட்கிறோம். நீதியின் அடிப்படையில் இவர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டார்கள் என்றாலும், நீதி விசாரணை பலமுறை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சு.சாமி போன்ற உண்மைக் குற்றவாளிகள் வெளியே தைரியமாக சுற்றி வரும் நிலையில், மறுவிசாரணை ஏன் கூடாது?

* ராஜீவ் கொலைக்கு ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்கிறார்கள்.

- 23 சிறைவாசம் இருந்த பின்பும் தண்டிக்கப்படவே இல்லை என்பது அறிவீனம். அதுவும் 14 வருடங்களுக்கு மேலாக மரணத்தின் நிழலில்.

* தமிழக அரசின் முடிவு சட்டத்திற்கு எதிரானது.

- சட்டத்தின் அடிப்படையில் தான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதி சதாசிவம் தனது தண்டனையை குறைத்து வெளியிட்ட தீர்ப்பில், இவர்களை விடுவிக்கும் முடிவு மாநில அரசிடமே விடுவதாக கூறியுள்ளார்.

இன்னும் நிறைய சொல்லலாம்....

 

@அசோக்குமார் தவமணி

 

 

இந்த நேயர் ஒரு அருமையான கேள்வி கேட்டார்

இதுவரைக்கும் ராஜிவ்காந்தி தமிழகத்துக்கு 12 முறை தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறார் வரும்போதெல்லாம் உடன் சோனியாகாந்தியும் வந்திருக்கிறார்

ஆனால் இந்த 12 வது முறை ராஜிவ் தமிழகத்துக்கு வரும்போது ஏன் சோனியாகாந்தி தன் கணவரோடு வரவில்லை ? என சுப்பிரமணிசாமி தனது புத்தகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் ?

காங்கிரஸ்காரர்கள் ஏன் அந்த புத்தகத்திற்கு ஒரு சரியான எதிர்ப்பு தெரிவிக்க வில்லை ?

1528710_483366525114397_738521603_n.jpg
 
 

 

Link to comment
Share on other sites

வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன்

 

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சகாயம் ஐ.ஏ.எஸ். :

''மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன். கைலி, அழுக்கு சடையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள் யார்?’ என்று அவரிடம் கேட்டேன். 'அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்துவருகிறோம். சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார். நான் அதிர்ந்துபோனேன். 'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன். வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம். வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது. தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.''

10308264_389980537809550_523758857873053

உன்னத மனிதன் சகாயம்

 

Link to comment
Share on other sites

சகாயம் அவர்கள் நேர்மையுடன் இருப்பதால்தான் அவரை உப்புச் சப்பில்லாத கோ ஆப் டெக்ஸ் பதவியில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

10168094_767727183257787_586187079254561

 

சவுதி அரேபியாவில் மனித நேயம் உள்ள ஒருவர் தன் வீட்டின் முன்னால் பெரிய குளிர்சாதன பெட்டி வைத்துள்ளார்...!
யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவை இல்லாத உணவை அல்லது மீதமான உணவை இங்கே வைத்து விடலாம்.. யாருக்கு தேவையோ அவர்கள் அதை எடுத்துக்கொள்ளலாம்.
நல்ல சிந்தனை நல்ல தொண்டு..!!

Link to comment
Share on other sites

1505500_760668917307218_9187794613249140

 

மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும்

Link to comment
Share on other sites

யார் முட்டாள்??? யார் பைத்தியகாரன்???

தூத்துக்குடில வழக்கமா ஒரு கடைல டீ குடிப்பேன், நேத்தும் அப்படி தான், ஒருவர் டிரஸ் கிழிஞ்சி பாக்க பாவமா நாமலாம் பைத்தியகாரன்னு சொல்லுவோம்ல அப்படி தான் இருந்தாரு... அவரை பார்தத்தும் எல்லாரும் ஒதிங்கி நின்றனர். என் நண்பன் ஒரு டீ வாங்கி கொண்டு போய் குடுத்தான், அதை வாங்க மறுத்து விட்டார், பின்னர் வடை வாங்கி கொடுத்தான் அதையும் வாங்க மறுத்து விட்டார்...

அந்த கடைக்காரரிடம் "என்ன அண்ணாச்சி டீ குடுத்தா வாங்கமாட்டேன்குறாருன்னு நான் கேட்டேன்" ....
கொஞ்சம் பொருங்க தம்பி நீங்களே பாப்பிங்க....
பின்னர் சிறிது நேரம் அங்கே நின்று கொண்டு இருக்கும் போது, கூட்டம் குறைந்த பின்னர் அந்த நபர் அந்த டீ கடையின் வெளியே நாம் சாப்ட்டுவிட்டு கீழே போடும் பேப்பர்களையும், இலைகளையும் அள்ளி குப்பைதொட்டியில் போடுகிறார், அதன் பின்னர் டீ கடை அண்ணாச்சி ஒரு டீயும் வடையும் குடுக்க அதை அந்த நபர் பெற்று கொண்டு செல்லுகிறார்...

இப்ப சொல்லுங்க யார் பைத்தியகாரன்???

- கிஷன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை

* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை

* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை

* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை

* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை

* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை

* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்

* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி

* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்

*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்

*16 வயதிற்குண்டான பருவம் – விடலை

*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை

* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

***********************************************

 

Link to comment
Share on other sites

10259946_636535979757510_317730551806649

 

அழகிய சாவகச்சேரி நகரப் பகுதி  

பிடித்திருந்தால் ஒரு Like போடுங்க.. 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.