Jump to content


Most Liked Content


#929244 ஊரிற்கு போய் வந்து ஒரு பதிவு

Posted by Innumoruvan on 24 August 2013 - 12:34 PM

இருபது நாட்கள் இலங்கையில் களித்து கனடா மீண்டதும் இந்தப் பதிவு.
 
முதலில் ஒரு Flashback -- சில வருடங்களிற்கு முன்னர்...
 
ஈழத்தை விட்டு விலகி 23 வருடங்கள் நகர்ந்து விட்டன. இந்தப் பயணத்திற்கு முன்னர் சமாதான காலத்தில் இருவாரம் ஊரிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து அவர்கள் அனுப்பிய வாகனத்தில் ஏறியது முதல் மீண்டும் விமான நிலையத்திற்கு அவர்கள் அனுப்பிவைத்த வாகனத்தில் வந்திறங்கும் வரை, அவர்களுடன் மட்டுமே அப்பயணத்தில் நின்றிருந்தேன். எனது சொந்த ஊரிற்குக் கூடச் செல்லவில்லை, முழவதும் அவர்களுடனேயே களிந்தது. புளியந்தோப்பை அடுத்த 'தமிமீழம் வரவேற்கிறது' தொடங்கி முகமாலை முன்னரண் வரையான பிரதேசத்திற்குள் எங்கெல்லாமோ அவர்களுடன் திரிந்தேன். அவர்களின் ஏகப்பட்ட பாத்திரங்களில் அவர்களைப் பார்த்தேன். நெஞ்சு நிமிர்த்திக் கால் மிதந்து திரிந்தது. ஒவ்வொரு மண் துகளும் உயிர்கொண்டிருந்தது. இரணைமடு தென்னிந்திய இலக்கியம் சித்தரித்த காவிரியை விஞ்சி நின்றது. எமது மக்கள் நான் வெளியேறிய போது இருந்ததிலும் பாhக்க அதிகம் அன்போடும் மெருகோடும் இருந்தார்கள். துயிலும் இல்லங்களில் அறியாதவர்களைக் காணவும் உணரவும் முடிந்தது. பண்டிதரும் வாகீசனும் மட்டுமல்ல, ஒவ்வொரு குறியீடுகள் கொண்டிருந்த ஒவ்வொரு பாசறைகள். எத்தனை முகங்கள்...
 
குறிப்பாக ஒரு முகம். ஆட்டி பிரிவின் மிகப்பெரும் பொறுப்பாளர். ஆட்டியினை மட்டும் அன்றி அந்தப் படையணிகளையே வேப்பங்குச்சியினால் பல்லுக்குத்துவது போல் மிகச் சாதாரணமாகக் கையாளக்கூடிய அந்த மாபெரும் ஆழுமை. விடுப்புப் பாக்கப்போன என்னைப் போன்ற கொஞ்ச வெறும் பயல்களிற்கு, ஒரு மாலைப் பொழுதில், அந்த உபகரணத்தையும் அது சண்டைகளில் எவ்வாறு நகர்த்தப்படும் என்றும் விளக்கிக் காட்டும் படி அந்த மனிதரிடம் கூறப்பட்ட போது, இயல்பில் வெக்கறையான அவரின் குழந்தைத் தனம் மனதில் பதிந்தது. புதிய மனிதர்கள் முன் கதைக்க முடியாது அவரிற்கு நாக்கு ஒட்டி வியர்த்து. அம்மாவின் பின்னால் ஒளியும் ஒரு குழந்தை போல் ஆகிப்போனார். உயரம் குறைவான அவர், பேசமுடியாத பதற்றத்தில் எங்களின் மூக்குவரை அண்மித்து வந்து பேசமுடியாது அண்ணாந்து நின்ற படி, ஆட்டியினை 'இவர்' என்று மட்டும் திருப்பத்திருப்பக் குறிப்பிட்டமை நெகிழச்செய்தது. அந்த மாபெரும் வீரன் என்றைக்கும் மனதில் மறையாதபடி பதிந்தது போல் ஏராளம் பதிவுகள் உள்ளேறிய பயணம் அது. பாண்டியனும் சேரனும் உண்பதெல்லாம் அமுதம் என்றுணர்த்திய படி துரை அண்ணையின் சமையலோடு போட்டிபோட்ட பயணம் அது. அந்தப் பயணத்தில், ஊரில் நடந்தேன் என்பதைக் காட்டிலும் மிதந்தேன் என்று தான் சொல்லவேண்டிய வகையில் கட்டுப்படுத்தமுடியாத ஒரு பெருமை உள்ளுரப் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
 
அந்தப் பயணம் முடிகையில், கனடா சென்று துரிதமாய் சில விடயங்களை முடித்துக் கொண்டு ஊரிற்கு நிரந்தரமாய் மீளவேண்டும் என்று முடிவெடுத்து விமானம் ஏறினேன். இங்கு வந்த பின்னரும் தேனிசைச் செல்லப்பா தமிழீழம் கிடைத்த நாளைப் விபரித்துப் பாடிய பாடல் தேயும்வரை திருப்பத்திருப்ப வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.
 
இந்தப் பயணம்.
 
சாரதி
 
எத்தனையோ தடவை பகுத்தறிவிற்குக் கட்டுப்பட்டு நிற்பாட்டிய பிரயாணம். இறுதியில், இம்முறை போவதென்று முடிவெடுத்த பின்னர், குறைந்தபட்சம் சில விசாரணைக் கேள்விகளைத் தன்னும் கட்டுநாயக்கா குடிவரவுப் பகுதியில் எதிர்கொள்ள நேரிடும் என்று பதற்றத்துடன் இருந்தேன். விமானத்தில் இருந்து இறங்கியபோது, இற்றைக்கு 23 ஆண்டுகளின் முன்னர் கனடாவில் அகதியாக இறங்கிய போதிருந்த மனநிலையில், முளங்கால்கள் பக்கிள் அடிக்க, கண்களை நேராக மட்டும் பார்த்தபடி நடந்து போனேன். ஆனால் குடிவரவு மேசையில் எனது முறை வந்தபோது, ஏன் வருகிறாய் என்ற கேள்வி கூட அங்கிருக்கவில்லை. விமானத்தில் இருந்து இறங்கிய இருபது நிமிடத்திற்குள் பொதிகளையும் சேகரித்து வெளிவந்துவிட முடிந்தது. 
 
கொழும்பில் ஒரு நாள் நின்று விட்டு யாழ் செல்ல வாடகைக்கு அமர்த்திய வாகனச்சாரதி 'கிளிநொச்சி சிங்கப்பூர் மாதிரி இருக்கும் பாருங்கோ' என்று ஏகப்பட்ட பில்டப் தந்தார். கிளிநொச்சி நிச்சயம் எனக்குச் சிங்கப்பூராகத் தெரியப்போவதில்லை என்பதை அவரிற்குச் சொல்லத் தோன்றவில்லை. மிகவும் வயது குறைந்த அந்தச் சாரதியிடம் எங்கள் இனத்தவன் அவன் என்ற பரிவு எழுந்தது. தம்பி ோன்று ஒரு உணர்வு. மிகச் சாதாரணமாக ஏகப்பட்டதைப் பேசிக்கொண்டு போனோம். அந்த சில மணிநேர பயணத்துள் அவனிற்கு வந்த தொலைபேசி அழைப்புக்களில் எல்லாம், 'வெளிநாட்டுக் காரரை ஏற்றிக் கொண்டுபோகிறேன்' என்றே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். கரைந்த ஒவ்வொரு நொடிப்பொழுதும் சகஜமான உரையாடல் வழியாக அவனுடன் எனக்கு ஒரு அன்னியோனியத்தை உருவாக்கியதாக நானுணர்ந்த போதும், அவனைப் பொறுத்தவரை நான் ஒரு வெளிநாட்டுக் காரன் மட்மே. தெருவோரமாய் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வெள்ளைக் காரனிற்கும் எனக்கும் இடையே அந்தச் சாரதித் தம்பி கண்ட ஓரே வித்தியாசம் எனக்குத் தமிழ் கதைக்கத் தெரியும் என்பது மட்டுமே. அதுவும் ஈழத்தில் நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் அவனும் வளர்ந்திருந்தான். ஆனால் அவனைப் பொறுத்தவரை நான் ஒரு தமிழ் தெரிந்த வெளிநாட்டுக் காரன். ஏதோ ஒரு நெருடல் உள்ளுர உணரப்பட்டது. இதைப் பற்றி பின்னரும் சில சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன்.
 
தமிழீழம் வரவேற்கிறது 
 
புளியந்தோப்பிற்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட ஏ-9 பாதையோரத்தில் எங்கெல்லாம் எம்மைப் புல்லரிக்க வைத்த விடயங்கள் முன்னர் இருந்தனவோ அங்கெல்லாம் இப்போ நாம் தோற்றுப் போனதை முகத்தில் அறைந்து சொல்லும் சித்தரிப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன. இறந்த சிங்கள இராணுவத்தினரின் கட்டவுட்டுக்கள் அங்கங்கே அவர்களின் இராணுவ தரத்துடன் நமிர்ந்து நிற்கின்றன. மகிந்தரை வாழ்த்தும் செந்தமிழ் கவிதைகள், ஸ்த்தூபிகள் என அங்கு நாங்கள் இருந்தோம் என்பதே தெரியாதபடி அந்தச் சித்திரத்தை அவர்கள் முற்றாக அழித்து எழுதியிருக்கிறார்கள். எங்கள் காலம் என்று ஒன்றிருந்ததற்கான ஆதாரம் எதுவும் அங்கில்லை. கண்கள் நப்பாசையில் பாண்டியனையும் சேரனையும் கட்டுமானங்களையும் வரியுடைகளையும் காவற்துறையினையும் தேடத்தான் செய்தன. பண்டிதர் ஒழுங்கையோரம் கண் போகத் தான் செய்தது.
 
புளியந்தோப்பிற்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட பயணம் எந்த உரையாடலும் இன்றி நிகழ்ந்தது. வாகனத்தின் சத்தம் பின்னணியில் இருக்க எனது மனம் ஆளவந்தான் திரைப்படத்தில் கமலகாசன் கண்ட காட்டூண்களாக் குளம்பிக் கிடந்தது. நான் அறிந்திருந்த, இப்போது இல்லாத முகங்கள் அந்தரத்தில் தொங்கிக் கதைத்துக் கொண்டிருந்தன. நான் கண்ட இப்போது இல்லாத எங்கள் படையணிகள் இலக்கின்றி வியூகத்தில் நகர்ந்த படி என்னைப் பார்த்துச் சிரித்த முகங்களாய்க் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. எனது சனங்கள் ஊர்விட்டு ஊர் பொதிகளுடன் ஏதிலிகளாக நடந்துகொண்டிருந்ததும் சிதறிக்கிடந்ததுமான காட்சிகள், ற்றான்சிசன் சீன்களாக,  எரிந்த மண்ணையும் வியூகத்தில் நகரும் படையணிகளையும் அந்தரத்தில் தொங்கும் முகங்களையும் மாற்றிமாற்றிக் காட்டுவதற்காக வந்து போய்க்கொண்டிருந்தன. 
 
அங்கங்கே எழுந்து நின்ற திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புச் சின்னங்கள் கண்ணில் பட்டபோதெல்லம் நிஜத்தில் யாரோ எனது நெஞ்சில் குத்தியதுபோல பௌதீகமாக என்னால் நோவினை உணர முடிந்தது. நத்தார் மரத்தில் பூட்டிய சோடனைகள் போல் தொங்கிக் கொண்டிருந்த முகங்கள் எமது வாகனத்தின் மீது என் மனத்திரையில் தொடர்ந்தன. வலி வலுப்பெற்றுக்கொண்டிருந்தது. 
 
சாரதிக்கு வந்த தொலைபேசியில் அவன் 'வெளிநாடடுக்காரரை ஏத்திப் போய்கொண்டிருக்கிறேன்' என்று மீண்டுமொருமுறை ஆருக்கோ சொன்னபோது சுயநினைவு மீண்டது. 
 
ஊரில் ஒருவருடன் இது பற்றிப் பேசியபோது அவர் கூறினார். முதற்தரம் அப்பிடித்தான் எனக்கும் இருந்தது. எல்லோரிற்கும இருக்கும். பிறகு பழகிரும் என்று. 
 
முறுகண்டி
 
முறுகண்டியில் வாகனம் நின்றதும் நலிந்த உடல் கொண்ட தமிழர் ஒருவர் அண்மித்தார். தான் போரில் பாதிப்புற்றதாயும் உதவுமாறும் கேட்டார். வாழ்வேமாயம் கமலகாசன் றேஞ்சிற்கு இருமிக்காட்டினார். சுhரதி கண்ணைக் காட்டி அழைத்து அவர் ஒரு வழமையான குடிகாரர், இப்போதும் பையிற்குள் சிறுபோத்தலோடு வெறியில் தான் நிற்கிறார், என்றார். அவரிற்கு வெறியோ இல்லையோ, அவர் பாதிக்கப்பட்ட மனிதர் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெரிந்தது. ஆனால் சாரதி என்னோடு கதைப்பதைக் கண்ட அவர் தனது குட்டு வெளிப்பட்டதாய் நினைத்து நான் திரும்பும் முன்னர் அப்பால் சென்று விட்டார். அவரது உருவம் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை குடிக்கு அடிமைத்தனம் என்பது ஒரு நோய் தான். அந்த நோய் வருவதற்கும் நிலைப்பதற்கும் ஏகப்பட்ட பின்னணிக்க காரணிகள் உள்ளன.
 
ஊரில் நின்றுவிட்டு ஊரை விட்டு வருகையில் முறுகண்டியில் வேறு ஒருவர் வந்து மேற்படி அதே ஸ்க்கிறிப்ற்றைச் சொன்னபோது, முன்னைய உறுத்தல் நீங்க அவரிடம் கையில் இருந்த ஐந்நூறு ரூபாய்த் தாழைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அவர் தொடர்ந்து தனது ஸ்க்றிப்ற் பிரகாரம் பேசிக்கொண்டிருந்தார்.
 
இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களை வெளிநாட்டுக்காரர் என இலகுவில் அடையாளப்படுத்தி விடுகிறார்கள்.
 
விருந்தோம்பல்
 
ஊரிற்குப் போன உணர்வினை ஒருவன் தந்தான். தடுப்பில் இருந்து மீண்டிருக்கும் ஒரு போராளியிடம் தான் அந்த உணர்வை முதன்முதலில் உணர முடிந்தது. அவனிற்கு ஏகப்பட்ட பணப்பிரச்சினை. நான் போனவுடன் தேத்தண்ணி போடத் தேவையான சாமான் வாங்க கடைக்கு வெளிக்கிட்டான். எவ்வளவோ தடுத்தும் கேட்காது கடைக்கு அவன் வெளிக்கிட, சரி நானும் வருகிறேன் எனக் கூடிச் சென்றேன். கடையில் நான் கடைக்காரிடம் பில்லிற்கான தொகையினைக் கொடுக்க எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன். அடம்பிடித்துத் தடுத்தவன் இறுதியில் வெகுண்டுபோய் சொன்னான், 'அண்ணை, என்னை நீங்கள் தேத்தண்ணி கூடத் தரமுடியாதவன் என்று பாக்கிறியள் என்ன' என்று. எனது கண்கள் சுரந்ததை என்னால் அடக்கமுடியவில்லை. 
 
வெளிநாட்டில் இருந்து போகும் எவரும் விருந்து வேண்டி அங்கு போவதில்லை.  தடுப்பில் இருந்து வந்தவன் தந்த தேத்தண்ணியினை மிஞ்சும் விருந்தினை எந்தக் கொம்பனாலும் எத்தனை லட்சம் செலவளித்தும் தர முடியாது. ஆனால் அங்கிருப்பவர்களிற்கு இப்போது புலம் பெயர்ந்தவர்கள் 'வெளிநாட்டுக் காரார்கள்'. செஞ்சிலுவைச் சங்கம் போன்று ஒரு கட்டமைப்பினர். நிவாரணம் தருபவர்கள்.  பெரும்பாலும் அவ்வளவு தான். 
 
வைத்தியர் ஒருவர்
 
பல்வேறு காரணங்களால் உளவியல் பாதிப்பிற்குள்ளாகி—பொதுமைக்காகப் பேரிழப்பைச் சம்பாதித்த அர்ப்பணிப்பு மிக்க குடும்பப் பின்னணி--அதனால் குடிக்கு அடிமைப்பட்டுப்போன ஒரு இளைஞன். அங்கு இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடி தொலைபேசி அழைப்பின் மூலம் கடனிற்குச் சாராயமோ கசிப்போ பலரிற்குப் பெற முடிகிறதாம். ஆதனால் குடிக்கு அடிமையாதல் இலகுவாக இருக்கிறது. புலத்தில் எந்தப் பதார்த்தத்திற்கும் அடிமைப் படல் ஒரு நோயாகவே பார்க்கப் படுகிறது. ஆனால் ஊரில் குடிகாரனைத் திட்டும் மனநிலை மட்டும் தான் இன்னமும் இருக்கிறது. பொதுமக்கள் அவ்வாறு நடந்து கொள்வது எதிர்பார்க்கக்கூடியது, ஆனால் உளவியல் வைத்தியரே பொறுப்பற்றுப் பேசின்?
 
மேற்படி இளைஞனின் வீட்டிற்கு நான் சென்றபோது, அந்த இளைஞன் சுயநினைவின்றி இருந்தான். இந்நிலையில் அந்த இளைஞனைப் பார்த்துவிட்டு சும்மா வரமுடியவில்லை. அவன் நினைவு பெறும்வரை காத்திருந்து அவனுடன் இயன்றவரை உரையாடி வைத்தியரிடம் வருவதற்கு அவனைச் சம்மதிக்க வைத்து மறு நாள் ஒரு உளவியல் வைத்தியரிடம் அழைத்துச் சென்றேன். அந்த இளைஞன் முன்னரும் அந்த வைத்தியரிடம் சென்றிருந்தமையால் அது சாத்தியப்பட்டது. 
 
யாழ்ப்பாண ஆஸ்ப்பத்திரியில் வைத்தியர்கள் என்பவர்கள் பயப்படவேண்டியவர்களாகக் கொம்பு முளைத்தவர்களாக நடந்து கொள்கிறார்கள். தாதிகள் முதற்கொண்டு அத்தனை ஊழியர்களும் சேர் சேர் என்று வைத்தியரைப் பயந்து நடுங்கி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ வைத்தியர் முழுங்கிவிடுவார் போன்று அந்த ஊழியர்கள் நடுங்குகிறார்கள். இது ஊழியரின் நிலை என்றால் நோயாளிகள் நிலை சொல்லத் தேவையில்லை. 
 
வைத்தியரைப் பார்க்கும் முறை வந்ததும் அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். நாங்கள் இருந்ததும் வைத்தியர் கூறிய முதல் வாசகம் 'இவைக்கு ஆட்டம்' என்பதாக இருந்தது. உளவியல் வைத்தியரின் சம்பாசனை இவ்வாறு ஆரம்பிக்கும் என்று நான் எதிர்பார்க்காததால் சற்றுச் சுதாகரித்துகொள்ள வேண்டியிருந்தது. அதன் பின்னர் இயலுமான நிதானத்தோடு விளங்கவில்லை என்றேன். வைத்தியர் சொன்னார், 'ஆட்டம் என்பது தமிழில் ஒரு சரியான vulgarறான பதம். அதைத் தான் இவர்களை நோக்கிப் பிரயோகித்தேன்' என்று. எனக்குள் கோவம் பிரவாகிக்கத் தொடங்கியது. ஆனால் இந்தக் கட்டத்தில் எனது தேவை அந்த இளைஞனிற்கான மருத்துவ சேவையினைப் பெறுவது மட்டுமே. மேலும் நான் அங்கு நிற்கும் சொற்ப நேரத்தில் வேறு வைத்தியரைக் கண்டு பிடிப்பதோ, சந்திப்பிற்கான நேரம் பெறுவதோ சாத்தியமில்லை. மேலும் மற்றைய வைத்தியர்களும் ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இவரைப் போலவே இருப்பதற்கான சாத்தியம் அதிகம். கோபத்தைக் கட்டுப்படுத்தி சொல்லவேண்டியதைக் காத்திரமாக ஆனால் நிதானம் தப்பாது சொல்வதற்கு எனக்குத் தோன்றிய ஒரே உத்தி எங்கள் உரையாடலை ஆங்கிலத்தில் நிழத்துவது என்பதாக இருந்தது. எனவே எனது மூச்சைக் சீர்ப்படுத்திக் கொண்டு, அந்த இளைஞனோடு முன்னைய நாள் இரவில் நான் கதைத்தவற்றின் சாராம்சத்தையும் அவன் எனக்குக் கூறியவற்றையும் ஆங்கிலத்தில் வைத்தியரிடம் கூறினேன். அவனது சரித்திரம் தனக்குத் தெரியும் நான் சொல்லத் தேவையில்லை என்பது போல் வைத்தியர் ஆரம்பித்தாலும் சில நொடிகளில் அவரது நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டது. தனது கோபத்தின் காரணம் அந்த இளைஞனோ அவனது குடும்பத்தவரோ ஒழுங்காகத் தொடர்ந்து தன்னிடம் வருவதில்லை என்று வைத்தியர் சொன்னார். ஆங்கிலத்தில் உரையாடல் நகர்கையில் முன்னைய சொறித்தனம் மாறி வைத்தியரும் நாகரிகத்துடன் பேசமுனைந்தார்.  அந்த இளைஞனை வாட்டில் அனுமதித்துத் திரும்பினேன்.
 
ஊரில் வைத்தியர் மட்டுமல்ல அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை பணியாளர்கள் கதைக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். காட்டுமிராண்டித் தனமான கத்தல்கள் தான் அவர்களிற்குத் தெரிகிறது. இதற்கு முதற்காரணம் துறைசார் விடயங்களை தொழில் சார் நிபுணர்கள் பொதுமக்களிடம் மறைத்து வைக்கிறார்கள். தமது துறைசார் அறிவை அஸ்த்திரமாகப் பிரயோகிக்கிறார்கள். ஒரு மெக்கானிக் ஒன்றைத் திருத்தும்போது தான் திருத்திய பிழையினை விபரிக்க மறுக்கிறார் 'திருத்தியாச்சு, இனிப் பிரச்சினை தராது, தந்தால் கொண்டு வாங்கோ' என்று மட்டும் தான் கூறுகிறார். இதுபோல் தான் வைத்தியர் முதற்கொண்டு அங்கு அனைவரும் இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகள் தேசமாகக், கத்துவதற்கு மட்டுமே கற்று வைத்திருக்கிறார்கள். உரையாடத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். பொது மக்களும் தலையைச் சொறிந்தபடி குனிந்து நின்று சேவைபெற்றுக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள், ஏனெனில் அவர்களிற்குத் தெரியும் ஒரு இடத்தில் தாம் கத்து வாங்கினாலும் தாமும் கத்துவதற்கான சந்தர்ப்பம் தம்மிடம் உள்ளதென்று. 
 
முதலில் மேற்படி வைத்தியரைப் படம் எடுத்து அவரது பெயருடன் இவ்விடயம் பற்றி விரிவாக நடவடிக்கை எடுக்கத் தான் நினைத்தேன். ஆனால் பின்னர் புரிந்தது அங்குள்ள பணியாளர்கள் அனைவருமே அப்படித் தான் இருக்கிறார்கள். அந்தக் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் தான் அவர்களது தொழிற்கலாச்சாரம். அந்த வைத்தியர் அந்தக் கலாச்சாரத்திற்குள் ஒருவர். அவ்வளவு தான். அந்தக் கலாச்சாரத்தில் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் கனடாவில் வாழ்வதற்காக உள்ளுர நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
 
தலைமைத்துவ வெற்றிடம்
 
அரசியலலை விட்டுவிடுவோம். சமூகத்தின் அன்றாட இயக்கம் என்பது மாலுமித் தலைவன் இல்லாத கப்பல் போல் அங்கு சென்று கொண்டிருக்கிறது. புலிகள் ஏகப்பட்ட கட்டமைப்புக்களை வைத்திருந்தார்கள். புலிகளிற்குப் பின் சமூகம் சார்ந்து கற்பனையுடனும் பெட்டிக்கு வெளியேயும் சிந்தித்துச் செயற்படும் தலைமைத்துவம் அங்கு மறைந்து போயுள்ளது. அவரவர் தத்தமது விடயங்களைப் பற்றி மட்டும் சிந்திக்கிறார்கள். ஊரிற்குள் கோயில் சார்ந்தும் இதர பொதுமைகள் சார்ந்தும் கன்னைகட்டி கட்டிப்புரண்டு சண்டை செய்கிறார்கள். அதிகாரத்தை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று தத்தமது மட்டத்தில் தமக்குத் தெரிந்த வகைகளில் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் தமக்காக மட்டும் தான் பிரயோகிக்கிறார்களே அன்றி சமூகம் என்ற சிந்தனை அங்கு அறவே இல்லை. இன்னமும் சொல்வதானால் அணைவுகள் அங்கு அஸ்த்திரங்களாக மட்டுமே பிரயோகிக்கப்படுகின்றன.
 
தமிழர் தேசியக்கூட்டமைப்பு அல்ல எந்த தற்போதைய தலைமைகளும் (அது கிராம மட்டமாகினும் மாகாண மட்டமாகினும்) கற்பனை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். சமூக இயந்திரம் ஏதோ தொழிற்படுகிறது.
 
பிரச்சினைகள்
 
யாருடன் கதைதாலும் நாளாந்த வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி ஓயாது கதைக்கிறார்களே தவிர எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் புதிய தீர்வையும் அவர்கள் கண்டடைய முனைவதாகத் தெரியவில்லை. வயலில் அரிவி வெட்டும் இயந்திரம் முதலாக அங்கங்கங்கே தொழில் நுட்பங்கள் பாவiனியில் உள்ளபோதும் பெரும்பாலும் பழைய வழிகளிற் தான் தொழிற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊரில் இப்போது எல்லாம் கூலிக்கு ஆட்கள் பிடிப்பது மிகக் கடினம். இதை நேரடியாக ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க முடிந்தது. ஒரு கூலியாளிற்கு நாளிற்கு 1000 ரூபாய் ஊதியமும், ஒரு நேர மீன் சாப்பாடும், மூன்று தேனீரும், மிக்ஷர் புகையிலை வெற்றிலை முதலியனவும் கொடுத்தால் தான் வருகிறார்கள். அப்போதும் ஒரு நாளினை ஓட்டுவதில் தான் குறியாக இருக்கிறார்களே அன்றி வேலையினைப் பொறுப்பெடுத்து முடிக்கும் மனநிலை வேலையாட்களிற்கு இல்லை. நேரம் என்பது அங்கு ஒரு பொருட்டே இல்லை. இது பற்றி அங்குள்ளவர்களுடன் கதைத்தபோது இது பற்றி அவர்களும் ஏகப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர், ஆனால் அனைவரும் பிரச்சினைகள் பற்றித் தான் பேசுகின்றார்கள் அன்றி எவரும் தீர்வு பற்றிச் சிந்திப்பதாய் இல்லை. 
 
கூலிக்கு வேலை செய்யும் ஒருவரிடம் ஒருநாள் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்போது இதுபற்றிக் கதைக்கையில் நான் அறிந்து கொண்டது என்னவெனில், கூலி வேலை என்பது அப்பப்போ தான் வருகிறது. அதில் வரும் ஊதியம் சேர்த்துவைப்பதற்குப் போதுமானதாக இல்லை. இதனால் கூலி வேலை செய்யும் அனைவரும் வாழ்வினைக் கொண்டுசெல்லப் பல தொழில்கள் செய்கிறார்கள். உதாரணமாக நான் கதைத்த மனிதர் காலையில் சீவல் தொழில் முடித்துத் தான் கூலி வேலைக்கு வருவாராம். அத்தோடு மரம் வெட்டும் வேலைக்கும் போவாரம். கூலி வேலைக்கு யாரிடமேனும் வருவதாகத் தான் ஒத்துக் கொண்டாலும் திடீரென மரம் வெட்டும் வேலை வரின் தான் அங்கு சென்று விடுவாராம் ஏனெனில் அதில் வருமானம் அதிகமாம். 
 
மேற்படி விபரத்தைக் கேட்கையில் இந்தப் பிரச்சினை பின்வருமாறு தான் எனக்குப் புரிந்தது. அதாவது. கூலியாட்களிற்கு வருமான உத்தரவாதம் தான் பிரச்சினையாக இருக்கிறது. கூலிக்கு ஆட்கள் தேடுபவர்களிற்கு நிர்ணயிககப்பட்ட விலையில் குறித்த நேரத்தில் வேலை முடிப்பதற்கு ஆட்கள் தேவைப் படுகிறார்கள். ஆனால் கூலியாட்கள் எந்தவொரு நிறுவனமாகவோ கட்டமைப்பாகவோ இயங்கவில்லை. மேலும், இன்றையத் தேதிக்கு உள்ள தொழில் நுட்பங்கள் பெரிதாக அங்கு பாவனையில் இல்லை. மரத்தைக் கோடரியால் தால் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள், வேலிக்குக் கம்பிக்கட்டை கோடரியால் தான் தறித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் வேலி அடைக்கையில் அலவாங்கால் தோண்டி சிரட்டையால் தான் மண் அள்ளுகிறார்கள்.
 
பிரச்சினையினையும் தேவையினையும் பார்க்கையில் தீர்வு மிக இலகுவானதாக இருந்தது. அங்குள்ள ஒரு பெருங்காணிக்காரரிடம்--அவர் பல லட்சங்களைக் காணி வேலைகளிற்காகத் தொடர்ந்து செலவளித்துக்கொண்டிருப்பவர். அத்தோடு ஓயாது தினமும் கூலியாட்கள் பிடிப்பதில் உள்ள தலையிடி பற்றி நொந்து பேசிக்கொண்டிருப்பவர்--மேற்படி பிரச்சினையினை உடடினடியாகத் தீர்கக்கூடிய, முதல் நாளில் இருந்து பணம் ஈட்டக்கூடிய ஒரு வியாபாரத் திட்டத்தை விளக்கமாகக் கூறினேன். ஆனால் அதை அவர் நடைமுறைப்படுத்துவார் என்று தோன்றவில்லை. அனைத்துப் பிரச்சினைகளும் அவ்வாறே தொடரும் என்றே தோன்றுகிறது.
 
சிறு முதலீடுகளுடன் (15 ஆயிரம் டொலர்கள் அளவில்) மேற்படி கூலியாட்கள் பிரச்சினை தொட்டு ஏகப்பட்ட  பிரச்சினைகள் அங்கு தீர்க்கப்படக்கூடியன. அவை பிரச்சினை என்பதைக் காட்டிலும் வியாபார சந்தர்ப்பங்கள். அரசியல் முதலான பிரச்சினைகளைச் சந்திக்காது, றாடாரிற்குக் கீழாக இயங்கக்கூடிய முதலீட்டுச் சந்தர்ப்பங்கள் இவை. ஆனால் வெளிநாட்டில் இருந்தபடி அவற்றைச் செய்யமுடியாது. அங்கிருப்பவர்களிற்கோ கற்பனை போதவில்லை.
 
நான் பார்த்தவரையில் மக்களின் சிந்தனை விரியவில்லை. பல கட்டுப்பட்டித் தனங்களும் காலதிகாலமான தழைகளும் அப்படியே இருக்கின்றன. எந்தப் பிரச்சினையினையும் தீர்ப்பதற்கு வரையறுக்கப்பட்டவர்களைத் தான் பார்க்கிறார்களே அன்றித் தம்மால் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்ற சிந்தனையினை அங்கு அறவே காணமுடியவில்லை.
 
சாதி
 
நான் நின்ற வீட்டின் குடும்பத்தாரிற்குப் பாரம்பரியமாகச் சாதி சார் தொழில்கள் புரிந்து வரும் பலரும் அவர்களது சந்ததியினரும் வெளிநாட்டுக் காரரைப் பார்க்க வந்தார்கள். 23 வருடங்களின் முன்னர் நான் பார்த்த நடைமுறைகள் சற்றும் மாறாது அப்படியே இருந்தன. ஒரு வயதான சலவைத்தொழிலாளி. அவர் வந்து வெளியில் நிலத்தில் அமர்ந்தார். அப்போது கதிரையில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டுச் சிறுவன், எழுந்து தன் கதிரையினைத் தூக்கிச் சென்று அவர் அருகில் போட்டு, தனக்குத் தெரிந்த கொன்னைத் தமிழில் 'இந்தாங்கோ இருங்கோ' என்று சொன்னான். வீட்டுக்காரர் முகம் இறுகி இருந்தது. அந்த முதியவர் 'ஐயா கதிரை போடுது' என்று சிரித்துச் சமாளித்து விட்டு, எழுந்து சென்று வேலியோரமாகத் தனது வெற்றிலையினைத் துப்பி விட்டு மீண்டும் வந்து நிலத்தில் அமர்ந்து கொண்டார். கதிரை காலியாகவே இருந்தது.
 
லீசிங்
வாகனங்கள் வீடுதோறும் நிற்கின்றன. எல்லோரும் லீசிற்குத் தான் வாகனம் எடுக்கிறார்களாம். ஒரு காலத்தில் சேமிப்பு மற்றும் வட்டிவீதம் முதலிய விடயங்களில் அடிப்படை அறிவினை இயல்பாகக் கொண்டிருந்த எமது மக்கள் இன்று வெற்றிகரமாக குருட்டு நுகர்வோர் ஆக்கப்பட்டுள்ளார்கள். சிந்திக்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தாயும் தந்தையும் அன்றாடச் செலவிற்கு அல்லாடும் குடும்பங்களிலும் குழந்தைகள் கைப்பேசியினை புதிய மொடல்களிற்குக் கடன்பட்டு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுத்தொகை கட்டமுடியாது போய் பறிமுதலாகும் சொத்துக்கள் சார்ந்து தற்கொலைகள் தினம் நிகழ்கின்றன. பத்திரிகைகள் சொல்கின்றன.
 
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள்
 
சக்தி, வசந்தம் முதலிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரைகைகளைப் பார்த்தபோது புலத்தில் இருக்கும் சிந்தனை வங்குறோத்தான தமிழ் ஊடகங்கள் போலத் தான் அவையும் இருக்கின்றன. இளம் பெண்களையும் ஆண்களையும் கவர்ச்சியாகக் கதைக்க வைத்துப் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மட்டும் தான் நிகழ்கின்றனவே அன்றி சிந்தனை என்பது மருந்திற்கும் காணவில்லை. பத்திரிகைகளில் காலதிகாலமாக இருந்து வந்த நொண்டிக் கவிதைகளும் நொடிகளும் கட்டுரைகளும் மட்டமாகவே தொடர்கின்றன. 
 
ஞாபக வீதி
 
எல்லோரையும் போல, 23 வருடங்களின் பின்னர் நான் பிறந்து வழர்ந்த ஊரிற்குச் செல்கையில் அங்கு ஞாபக வீதியில் பயணிப்பதும் இழந்தவற்றை மீள வாழ்வதும் தான் எனதும் முதற்குறியாக இருந்தது. பிரிந்தபின் ஊர் மீழல் என்பது சாத்தியமற்றது என்பதை அறிவு அறிந்திருந்தபோதும் ஆசை அடம் பிடித்தது.
 
கொத்துரொட்டியில் ஆரம்பித்தேன். கனடாவில் தமிழர்களுடன் கொத்துரொட்டி உண்ணும் போதெல்லாம் நானும் அவர்களும் சொல்வது ஊரில் இருந்த கொத்துரொட்டிக்கு இதெல்லாம் கிட்டவருமா என்பது தான். கொத்து ரொட்டி என்பது வாழை இலையில் சுற்றப்பட்டு பத்திரிகைத் தாழில் வெளியே பொதிசெய்யப்பட்டதாகவே எனது மனதில் இருந்தது. ரொட்டி பேபர் போல மெல்லிதாக மனதில் இருந்தது. ஆனால் ஊரிலும் கொழும்பிலும் இம்முறை கொத்துரொட்டி உண்டபோது, கனடாக் கொத்துரொட்டி தான் நான் முன்னர் இரசித்த கொத்துரொட்டிக்குக் கொஞ்சமேனும் கிட்ட நிற்பதாய்த் தோன்றியது. கனடாவின் கொத்துரொட்டி றெசிப்பி நான் புலம்பெயர்ந்த காலத்தில் புலம் பெயர்ந்தது. அதனால் அது ஓரளவிற்கு என் ஞாபகத்தோடு ஒத்துப் போகிறது. ஊரில் இப்போது கொத்துரொட்டி வாழை இலையில் சுற்றப்படுவதில்லை. பொலித்தீனில் சுற்றப்படுகறது. நான் பிரிந்த கொத்துரொட்டியினை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 
 
கருப்பணி குடித்தேன். அது அன்று போல் இல்லை. பலாப்பழம் உண்டேன் அது வாடல் பழமாக இருந்தது. சீசன் முடிந்து விட்டது என்றார்கள். பழங்களைப் பொதுவில் இப்போதெல்லாம் பிஞ்சில் பறித்த மருந்தடித்துப் பழுக்க வைக்கிறார்களாம். அதனால் சுவையில்லை என்பது மட்டுமல்ல கலியாண வீடுகள் முதலியவற்றில் வாழைப்பழத்தை மக்கள் உண்பதில்லையாம். அவை சோடனைக்கு மட்டும் தானாம்.
 
ஆலங்கொழுக்கட்டையும் பனங்காய்ப் பணியாரமும் அருமையாக இருந்தன. அள்ளி அடைந்து கொண்டேன்.
 
பசுப்பால் குடித்தபோது முன்னைய சுவை தெரியவில்லை. ஊரில் இப்போதெல்லாம் மாடுகள் பெரும்பாலும் எருவிற்காக மட்டும் தான் வளர்க்கப்படுகின்றன. இதுபற்றிப் பேசும் போது ஒருவர் சொன்னார் 'இங்கத்தே மாடுகள் ஒரு போத்தல் கறக்கும்' என்று. பறவாயில்லைத் தானே வீட்டுத் தேவைக்கு என்றேன். அவர் சிரித்துக்கொண்டு சொன்னார் 'ஊரில் உள்ள மாடுகள் எல்லாத்தையும் கறந்தால் மொத்தமாய் ஒரு போத்தல் வரும்' என்று. 
 
எடுத்து வளர்க்க ஆட்கள் இன்றி வன்னியிலும் தீவுப்பகுதிகளிலும் அலையும் மாடுகள் பற்றி பத்திரிகையில் செய்தி வந்திரிருந்தது. அது பற்றி பால் மா பிரச்சினை பற்றிக் கதைத்த ஒருவரிடம் கூறிய போது அவர் சொன்னார்: ' அப்பிடி நாங்கள் அவற்றை கொண்டு வந்து வளர்த்தால் மாடுகள் தேறியதும், ஓரிரு மாத்தத்தில் அவை தங்கள் மாடென்று கேஸ் போடப் பலர் வருவார்கள் என்று. பிரச்சினை விளங்கிக் கொள்ள முடிந்தது.
 
ஊரில் திருட்டுக்கள் அப்பப்போ நடக்கின்றன. மக்கள் பொலிசில் முறையிடுகிறார்கள். நான் செல்வதற்குச் சில நாட்கள் முன்னர் நடந்த ஒரு திருட்டினை நான் அங்கு நிற்கும் போதே பொலிஸ் திருடனைப் பிடித்து தீர்த்திருந்தது. சிங்களப் பொலிஸ் தான் அதிகம் இருக்கிறார்கள். தமிழர்கள் பிரச்சினை சார்ந்து சிங்களப் பொலிசிடம் நம்பிக்கையுடன் முறையிடுவது, ஈழத்தில் பொலிசைக் காணாது வழர்ந்த எனக்கு விந்தையாக இருந்தது.
 
வீதிகள் சிறுத்துப் போய்த் தெரிந்தன. கண் பழகப்பழகத் தான் ஞாபகம் சற்று மீண்டது. ஆனால் நான் பிரிந்த வீதிகளிற்கு என்னைப் பரிட்சயமில்லை எனக்கும் அவற்றை உணரமுடியவில்லை. பல்வேறு அபிவிருத்திகள் வீதிகளையும் ஒழுங்கைகளையும் உருமாற்றிவிட்டன.
 
நான் பிரிந்த மரங்களை ஆரத்தழுவவேண்டும் என்று ஆசையோடு சென்றேன். பல மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. மீதம் உள்ள மரங்களும் நானும் இந்த இருதசாப்த்தத்தில் பிரிந்து வளர்ந்ததால் பிணைப்பு கிடைக்கவில்லை. என் மரங்களிற்கு என்னைத் தெரியவில்லை. எனக்கும் அவற்றோடு ஒட்டவில்லை. மாமரங்களில் குருவிச்சகைள் பெரும்பான்மை ஆட்சி நிகழ்த்திக் கொண்டிருந்தன. பெரிய காடுகளாக எனது மனதில் பதிவாகியிருந்தவை இப்போது பற்றைகளாகத் தெரிந்தன.
 
எனக்குத் தெரிந்த ஊரவர்கள் ஏறத்தாள அனைவரும் புலம் பெயர்ந்து விட்டார்கள். அதனால் நானறிந்தவர்கள் ஊரில் இல்லை. அருமையாக ஒரு சிலரைக் கண்டபோது மகிழ்வாகத் தானிருந்தது. குளங்கள் கிணறுகள் கூட காணாமல் போயுள்ளன அல்லது வற்றிக் கிடக்கின்றன.
 
வல்லிபுரக்கோயில் பிரமாண்டமாக மாறிவிட்டது. சன்னதி பெரும்பான்மைக்கு அப்படியே தான் இருக்கிறது. எரிக்கப்பட்ட தேரினை நினைவூட்டி பெரிய தேர்முட்டி சிறிய தேரை உள்ளடக்கி உயர்ந்து நிற்கிறது. நல்லூர் அப்படியே இருக்கிறது. திருவிழா கோலாகலமாக நடக்கிறது. சன்னதியில் சாமி காவப்படுகையில் நிகழும் ஒலிகள் அறிவைக் கடந்து ஏற்படுத்தும் உணர்வு உடலிற்கு ஞாபகம் இருந்தது.
 
கோயில்களும் பள்ளிக் கூடங்களும் பிரமாண்டமான கட்டிட வளர்ச்சிகளை அடைந்துள்ளன. பள்ளிக் கூட மதில்களில் பும்பெயர் நாடுகளின் ஊர்ச்சங்கங்களின் பெயர்கள் உபயகாரராகப் பதிவாகி இருக்கின்றன. கனேடிய தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்புக்களையும் காண முடிந்தது.
 
மொத்தத்தில் ஊரில் என்னால் ஞாபகவீதியில் அதிவேகத்தில் ஓடமுடியவில்லை. கனடாவில் பொங்கலிற்கு முதல் நாள் தமிழ்கடையில் கிடைக்கின்ற ஞாபகவீதி ஓட்டம் ஊரில் கிடைக்கவில்லை. ஊர் மீழல் என்பது சாத்தியமற்றது என்பது தெரிந்தது தான். இலக்கியங்கள் இம்முனையில் நிறைந்து கிடக்கின்றன. எமது ஞாபகங்கள் நாம் குறித்த நேரங்களில் பிரதி எடுத்தவை தான். அந்தப் பிரதிக்கான காட்சிகளைத் திருப்பச் சென்று தேடுவது சாத்தியமற்றது, ஏனெனில் ஊரும் நாமும் பிரிந்து வழர்கிறோம். எமது அனுபவங்கள் மாறுபட்டவை. எத்தனையோ பிரமிப்புக்களையும் கிழர்ச்சிகளையும் புலப்பெயர்பில் அனுபவித்துவிட்டோம். விடயங்களை உள்வாங்கும் எமது அறிவு நாம் ஊiரைப் பிரிந்தபோது இருந்ததைக் காட்டிலும் பலதூரம் மாறிவிட்டது. ஒரே விடயத்தை அன்றைக்குப் பார்த்தது போல் இன்றைக்குப் பார்க்க முடியாது என்பது ஒரு புறம். மறுபுறத்தில் எமக்குள் முன்னர் பதிவான விடயங்கள் கூட எம்மால் பெருப்பித்துப் பார்த்துப் பழக்கப்பட்டு மறுபதிவாகிவிட்டன. இதனால் எமது ஒறிஜினல் பதிவுகள் எமக்குள் இப்போது இல்லை. அதாவது ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம் எமது ஊர் நினைவுகளை நாம் மனதில் மீள ஓட்டிப்பார்ப்போம். அவ்வாறு நாம் ஓட்டிப் பார்க்கும் போதெல்லாம் எமது பிரிவின் வலி முதலிய உணர்வுகளின் ஆதிக்கத்திலும் எமது அனுபவம் மற்றும் அறிவின் வளர்சியிலும் எம் மனத்திரையில் பழைய காட்சிகள் மருவிப் புதிதாக ஓட்டப்படும். பின்னர் அந்த மாறிய காட்சி தான் நான் நமது சிறுபராயத்தில் ஊரில் கண்ட ஒறிஜினல் காட்சி என்று மனம் நம்பத் தொடங்கி மருவிய காட்சி தொடர்ந்து மருவியபடி ஒறிஜினல் தொலைந்து போகும். இதனால் ஊரிற்குப் போய் ஞாபகங்களைத் தேடுகையில் அவை ஊரில் இல்லை.
 
இது நாம் பிறந்த ஊரில் மட்டுமல்ல. உதாரணத்திற்கு ஐந்தாம் வகுப்பில் எனது பெற்றோரோடு நான் ஜால சரணாலயத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது தூரத்தில் ஒரு யானைக் கூட்டத்தைக் கண்டு அதனால் பயந்து எனக்கு காய்ச்சல் கூட வநதிருந்தது. 28 வருடங்களின் பின்னர் இம்முறை யாலவிற்கு மீண்டும் சென்றேன். மிக அருகில் சிறுத்தைப் புலி யானை உள்ளிட்ட பலவற்றைப் பார்த்தும் உணர்வு அன்றுபோலில்லை. காரணம் இடைப்பட்ட இந்த 28 ஆண்டுகளில் பல சரணாலங்களிற்குச் சென்று விட்டேன். பார்வை மாறிவிட்டது. தூரத்தில் கண்ட யானைக் கூட்டத்தால் காய்ச்சல் வந்த சின்னப்பொடியன் இறந்து விட்டான். இன்றைய பார்வைக்கு ஏற்ப புதிய அனுபவம் தான் இன்று சாத்தியமே தவிர இறந்துபோன சின்னப்பையனின் பார்வை சாத்தியமில்லை. கொத்து ரொட்டி ருசிக்காததன் காரணமும் இது தான்.
 
மொத்தத்தில் ஞாபகவீதி என்பது எனக்குள் தான் இருக்கிறதே அன்றி ஊரில் இல்லை. புலம்பெயர் தேசங்களில் எம்மோடு புலம்பெயர்ந்தவர்களைச் சந்திக்கையில் தான் ஞாபவீதி ஓட்டம் பொதுமைப்படும். ஊரில் நான் பழயதை உணரவேண்டின் கற்பனையில் பார்வையினை மாத்தித் தான் காணமுடியும். அதைச் செய்வதற்கு ஊர் செல்வது அவசியமற்றது!
 
திருகோணமலை மற்றும் சிங்கள தேசம்.
 
ஹபறண, கந்தளாய், திருகோணமலை, தம்புள்ள, சிகிரியா, கண்டி, நுவரேலியா, கதிர்காமம், திசமாறகம, ஹிக்கடுவ, பெந்தோட்டை என்று திரிந்தபோது மனம் அமைதியாக இருந்தது. ஏனெனில் கதிர்காமத்தையும் திசமாறகமவையும் தவிர மற்றைய பிரதேசங்கள் நான் முன்னர் சென்றிராதவை. அதனால் ஞாபகவீதி ஓட்டம் ஒப்பீடு போன்ற தொல்லைகள் இல்லை. இன்றைய நான் இன்றைய பார்வையில் முதற்தடவையாகப் பார்க்கும் பார்வை பிரச்சினையற்று இருந்தது. 
 
கோணேச்சரம் என்னைக் கட்டிப்போட்டது. என்னவொரு இடம் அது. சம்பந்தர் மானசீகமாகப் பாடினாரோ ஆரோ சொல்லிப் பாடினாரோ, அல்லது எப்படியோ வந்துபோய்ப்பாடினாரோ தெரியாது. ஆனால் எவரிற்கும் பாட்டுவரும் இடம் தான் அது. அப்படியே இருந்துவிடலாம் என்று தோன்றியது.
 
நிலாவெளி தொட்டு இலங்கையின் அத்தனை "பீச் றிசோட்டுக்களும்" கரிபியனோடு ஒப்பிடுகையில் சிறுத்துத் தான் எனக்குத் தெரிந்தன. ஆனால் கடல் பெரிதாக இருந்தது. றிசோட்டைத் தாண்டி கடலை அதன் பிரமாண்டத்தில் உள்வாங்க இலங்கையில் தான் முடிந்தது. இந்து சமுத்திரம் சற்று உயிர்ப்பு அதிகமானதாகத் தான் தோன்றியது. 
 
வெள்ளவத்தை பீச்சில் மூன்று வயதுப் பையனின் ஞாபகவீதி ஒட்டமும் சற்றுச் சாத்தியப்பட்டது. அந்த ஞாபகம் நான் இரைமீட்டுப் பார்க்காததாய் இருந்ததால், ஒறிஜினல் பிரதி இருந்தது. அது இன்றைய நிலையோடு ஒத்துப் போனதால் மகிழ்வாய் இருந்தது.
 
சிங்கள தேசத்தின் செழிப்பு செழிப்பாகத் தான் இருந்தது. மனம் குளிர்ந்தது. கந்தளாயில் எருமைத் தயிரும் கித்துள் பனியும் அமிர்தமாய் இருந்தது.
 
சிகிரியா ஓவியங்களை அள்ளிப் பருக முடிந்தது மட்டுமன்றி காசியப்பன் என்னமா வாழ்ந்திருக்கிறான் என்று பெருமூச்சு விடவும் முடிந்தது. அருமையான இடம் சிகிரியா.
 
கண்டி எசலபெரகராவால் மக்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தலதா மாளிகையின் உள்ளே செல்லமுடியவில்லை. சுற்றித் திரிந்து விட்டு பெரதேனியா பூந்தோட்டத்தில் அலைந்துவிட்டு நுவரெலியா சென்றேன். 
 
புசல்லாவில் கதிர்காமத்தைக் காட்டிலும் களுதொதல் நன்றாக இருந்தது.
 
நுவரெலியாவில் குளிரிற்குள் அம்மக்களின் சோகத்தை உணரமுடிந்தது. ஒரு சிறுவனுடன் பேசமுடிந்தது. சைவ உணவகம் ஒன்றில் உணவு அருமையாக இருந்தது. நுவரெலியாவின் சீதா கோவில் அமைதியாக இருந்தது. நுவரெலியாவின் பூங்கா அழகாய் அமைதி தந்தது.
 
பண்டாரவளையில் ஒரு பள்ளத்தாக்கில் நான் கற்பனையிலும் நினைத்திருக்கமுடியாப் பெருப்பத்தில் தேன்கூடுகள் பார்த்தேன். பிரமிப்பாய் இருந்தது. ஏதோ சாகசக் கதைப்புத்தகத்தின் அல்லது ஸ்டீபன் ஸ்ப்பீல்பேர்க்கின் கற்பனைப் படம் பார்ப்பதுபோன்ற பிரமிப்பை நிஜத்தில் அந்தத்தேன்கூடுகள் தந்தன.
 
கதிர்காமத்தில் முருகன் ஓரங்கட்டப்பட்டுள்ளார். முற்றுமுழுதான சிங்கள மயம். ஆனால் பாற்செம்பெடுத்து வந்த ஒரு மூதாட்டி அரோகரா என்று ஒரு பிரத்தியேக ஆவர்த்தனத்தில் கத்தியபோது புல்லரிக்கத்தான் செய்தது. செல்லக்கதிர்காமமும் மாணிக்க கங்கையும் மக்களால் நிரம்பி வழிந்தன. எதிர்பாரா விதத்தில் பிள்ளையாரைக் கும்பிட முடிந்தது.
 
வெள்ளைக்காரரும் பல்வேறு மக்களும் சர்வசாதாரணமாக பஸ்சிலும் சைக்கிளிலும் திரிகிறார்கள். மகிந்தவின் கட்டவுட்டுகள் வடமுனை தொடங்கித் தென்முனை வரை ஏகப்பட்ட போசுகளில் நிறைந்து குப்பையாகக் கிடக்கின்றன. 
 
மக்கள் புனரமைக்கப்படும் வேகவீதிகள் பற்றியும் ஏற்கனவே மெருகூட்டபட்ட தெருக்கள் சார்ந்தும் தான் வடக்கிலும் தெற்கிலும் பேசுகிறார்கள். பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுக்குறியாக அனைவரிற்கும் இருப்பது மட்டுமன்றி வேகமாக அந்த முன்னேற்றத்தை அடைய அனைவரும் துடிப்பதால் வேகவீதிகள் பற்றி அவர்கள் ஓயாது பேசும் உளவியல் புரிந்துகொள்ளும் படி இருந்தது.
 
தங்கல்லவை அண்டிய ஒரு குக்கிராமத்தில் சிங்களக் குடிசை ஒன்றில் நடக்கும் உணவகத்தில் மண்பானையில் உணவு உண்டேன். உணவு சுவையாக இருந்தது. தமிழர் அங்கு வந்து உண்பது அவர்களிற்கு மகிழ்ச்சி கொடுப்பதாக முகம்மலர்ந்து சொன்னார்கள்---சிங்களம் தெரிந்த சாரதி மொழிபெயர்த்தார்.
 
துவேசம்
 
நான் துவேசத்தைக் கண்ட ஒரே ஒரு இடம் திரும்பி வரும் போது குடியகல்வு மேசையில் இருந்த சிங்களவனில் தான். பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பான் என்று நினைக்கிறேன். மிக மட்டான ஆங்கிலத்தில் பிறந்த ஊர் போனாயா என்றான். ஆம் என்ற போது மாறியிருக்கிறதா என்றான். நிறைய மாறிவிட்டது என்று நான் சொன்னபோது, 'பலத்தால் கட்டாயப்படுத்தி மாத்தினோம்' என்று விட்டு நக்கல் சிரிப்புச் சிரித்தான். உள்ளிற்குள் ஏகப்பட்ட ஆத்திரம். ஆனால் அவனுடன் நான் சண்டை பிடிப்பது சாத்தியமில்லை. மேலும் இனமொழி மத வித்தியாசங்களிற்கு அப்பால் இலங்கையில் அதிகாரிகள் அனைவருமே கதைக்கத்தெரியாத காட்டுமிராண்டிகளாகத் தான் இருக்கிறார்கள். அந்தவகையில் அந்த சிறிய சிங்களவனோடு விவாதிக்க வேண்டிய தேவை எனக்குள் மறைந்து போனது.
 
முடிவாக
 
சமாதானகாலத்தில் ஊர் சென்று மீள்கையில் அவசரமாக நிரந்தரமாக மீளவேண்டும் என்று நினைத்தேன். இம்முறை, கனடா தான் எனது நாடு என்ற முடிவோடும், இலங்கை என்பது இனிமேல் மெக்சிக்கோ இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து போன்று ஒரு சுற்றுலா நாடு மட்டுமே என்ற எண்ணத்தோடும் வெளிக்கிட்டேன். அதுவும் சுற்றுலா செல்வதற்கு இலங்கையினைக் காட்டிலும் ஏகப்பட்ட தெரிவுகள் உள்ள நிலையில் இனிமேல் நான் இலங்கை போகப் போவதில்லை என்றே நினைக்கிறேன். 
 
கனடாவைக் காட்டிலும் நுகர்வோரிசம் அங்கு தலைவிரித்தாடுகிறது. அரசியல் அபிலாசை என்று அவர்கள் அலட்டிக்கொள்வதை என்னால் காணமுடியவில்லை. புத்தகக் கடைகளில் காத்திரமான நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்க் கிராமங்களும் கிராமங்களின் தன்மை குறைந்து பேராசையிலும் பணம் பறிப்பிலும் பொருளாதாரத்திலுமே குறியாக இருக்கிறார்கள். திருப்த்தியினை அதிகம் காணமுடியவில்லை. முன்னர் மிகச் சிறு கிராமங்களாக என்னுள் பதிவாகியிருந்த குக்குக்கிராமங்கள் எல்லாம் நகரங்கள் போன்று தான் தெரிகின்றன. தங்களிற்குள் மக்கள் போட்டி போட்டு வீடு கட்டுகிறார்கள். பொறாமைப் படுகிறார்கள், கோவில் வைத்து அடிபடுகிறார்கள். வெளிநாட்டுக் காரரைக் கண்டால் குறியாகப் பணம் கேட்கிறார்கள். 
 
புலிகளின் மறைவோடு எனது ஞாபகவீதியும் இல்லாது போனதை உணர முடிந்தது. அதாவது தமிழீழம் என்ற சிந்தனையிலும் அதற்கான முயற்சியிலும் தான் நாம் தமிழர்களாக இருந்தோம். பொதுமை உணரக்கூடியதாக இருந்தது. புலிகள் எவ்வாறோ அந்தப் பொதுமையினைக் கயிற்றில் கட்டி வைத்திருந்தார்கள். புலிகளின் மறைவோடு என்னைப் பொறுத்தவரை எனது ஞாபக வீதியும் மூடப்பட்டுவிட்டது. இன்று அங்கு நுகர்வோர் மட்டும் தான் இருக்கிறாhகள். நுகர்வோரிற்கு இன மொழி மற்றும் பாரம்பரி அடையாளங்கள் அர்த்தமற்றவை. அன்றைய சந்தையின் கட்டழைகளிற்கு ஏற்ப ஓடுபவர்கள் நுகர்வோர். உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நுகர்வோரைச் சந்திப்பதற்காக இலங்கை செல்வது அவசியமற்றது. அந்த மக்களின் அபிலாசை பொருளாதாரம் மட்டுமாக இருக்கிறது. அவர்களிற்கும் எனக்கும் இடையில் தொடர்பு அறுந்துபோன உணர்வுடன் கனடா மீண்டேன். 
 
எனது ஆத்ம திருப்த்திக்காக இப்பயணத்தில் நான் செலவிட்ட மொத்த தொகையில் 70 வீதத்தை பல்வேறு மனிதர்களிற்கும் குழந்தைகளிற்கும் என்னால் இயன்ற தொகையாகப் பிரித்துக் கொடுத்துவிட்டு மீண்டேன். 
 
என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணம் கங்கைக்குச் சென்று அப்பாவின் அஸ்த்திகரைத்து மீண்ட ஒருவரின் பயணம் போன்றே அமைந்தது. ஒரு நிரந்தர வெற்றிடத்தை எனக்குள் உணர்கிறேன்.

 • sOliyAn, கிருபன், sathiri and 31 others like this


#995968 16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.?!

Posted by nedukkalapoovan on 26 March 2014 - 10:32 AM

10007463_10151981058472944_146810450_n.j

 

பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம்.

 

யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது.

 

யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உலகில் பல்வேறு வளர்ச்சிக்கட்டங்கள்.. மாற்றங்கள்..ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கணணி தொழில்நுட்ப உலகிலும் பெருமளவு வளர்ச்சிகள் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்பட்டும் வருகின்றன. உலகில் அதிகம் விரைந்து கூர்ப்படையும் துறையாக இத்துறையே அமைந்துள்ளது.

 

மேலும் வலுவான.. சமூக வலைகளின் பெருக்கமும்.. இதர பொழுதுபோக்கு கணணி சார் சாதனங்களின் ஆதிக்கமும்.. இதே காலப் பகுதியில் இருந்துள்ளது. இந்தச் சவால்களை எல்லாம்.. பெரும்பாலும்.. ஒரு தனிமனிதனாக நின்று சமாளித்து.. ஒரு தமிழ் தேசிய உணர்வேந்தலுடன் கூடிய.. ஒரு இணையத்தை அதுவும் தமிழ் மொழியில்.. கொண்டு நடத்துவதென்பது.. ஒன்றும் இலகுவான விடயமல்ல. மேற்படி.. தொழில்நுட்ப காரணிகளுக்கு அப்பால்.. பல்வேறு அரசியல்.. சமூக.. பொருண்மிய காரணிகளின் தாக்கங்கள் மத்தியிலும் 16 ஆண்டுகளுக்கு.. வெற்றிகரமாக.. இதனை நகர்த்தி வருவதென்பது ஒரு மகத்தான சாதனையே. காலத்துக்கு காலம்.. தன்னையும் சூழலையும் அதில் நிகழும் மாற்றங்களையும்.. உணர்ந்து கொள்ளும் ஒரு உன்னிப்பான நுண்ணிய அவதானியால் தான்.. இதனை சாத்தியமாக்க முடியும்.

 

காலத்துக்கு காலம்.. மாறும்.. தொழில்நுட்ப விருத்தி.. மென்பொருள் விருத்தி.. வீக்கமடையும் செலவீனங்கள்.. நேரச் சுருக்கம்.. போட்டிகள்.. அழுத்தங்கள்.. இணைய ஆபத்துக்கள்.. அச்சுறுத்தல்கள் என்று எத்தனையோ சவால்களை வெளியில் இருந்தும்.. சொந்த வீட்டில் இருந்தான..நாம் அறிய முடியாத பல்வேறு அழுத்தங்கள் மத்தியிலும்.. ஒரு தனிமனிதனாக திருவாளர் மோகன் அவர்கள்.. இதனை முன்னெடுத்து வருவது இந்த முயற்சியை.. உண்மையில் வெறும் வார்த்தையில் போற்றுதல் என்பதன் ஊடாக வாழ்த்தி அமைய முடியாது. அது அதற்கும் அப்பாற்பட்டு.. ஒரு தேசிய இனத்தின் பெருமைக்குரிய அடையாளமாக அவரை முன்னிறுத்தி நிற்கிறது என்றால் மிகையல்ல.

 

இன்று வரை மோகன் அண்ணாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம்.. ஒரு பாராட்டுதலை நல்கி இருக்கோ என்றும் தெரியவில்லை. தமிழ் இனத்தில்.. பல விடயங்களில் முன்னோடியாக இருக்கும் அவருக்கு.. ஒரு சரியான கெளரவிப்பு இதுவரை வழங்கப்பட்டிருக்கோ என்றும் தெரியவில்லை. அவர் அவற்றை எதிர்பார்ப்பவராகவும் என்றும் இருந்ததில்லை..! ஆனாலும்.. இதே இன்னொரு இன மக்களாக இருந்தால்.. நிச்சயம் அவரின் இந்த பங்களிப்பை மனதார வாழ்த்தி அவரை கெளரவித்தும் இருப்பர்.

 

இருந்தாலும்.. இந்த வார்த்தை ஜாலங்கள் மட்டும் அவர் தொடர்ந்து யாழை இயக்கப் போதுமானவை அல்ல. நிகழ்கால.. எதிர்கால.. சவால்களை அவர் எப்படி எதிர்கொள்ளலாம்.. (யாழுக்கு வயது கூடக் கூட மோகன் அண்ணாக்கும் கூடுது என்பதையும் கருத்தில் கொள்ளனும். இங்குள்ள கருத்தாளர்களுக்கும் கூடுது என்பதையும்.. கருத்தில் கொள்ளனும்...).. வருங்கால.. நிகழ்கால..புதிய தலைமுறை ஏற்ப தொழில்நுட்ப.. பொருண்மிய.. சமூக தேவைகளுக்கு ஏற்ப இதனை.. இன்னும் இன்னும் வெற்றிகரமாக எப்படிக் கொண்டு செல்ல உதவ முடியும்.. என்பதை ஒரு பொழுதுபோக்கும்.. சுவாரசியமும்.. கற்பனையும் அதே நேரம் எதிர்வுகூறல்களை.. எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பை காட்டக் கூடியதுமான.. ஒரு விபரணக் கருத்தாடலூடாக இங்கு இனங்காட்டின் அது நன்மை பயக்கும். அதற்கு உதவியாக.. உங்கள் சொந்த கருத்துக்களோடு.. படங்கள்.. காணொளிகளை.. கட்டுரைகளை.. இணைக்கலாம்.

 

இதோ.. உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அது யாழ்..அதன் எதிர்காலத்தை எதிர்கால சவால்களை சந்தித்து மிளரச் செய்ய உதவினால்.. அது நாமும் இங்கு இருந்தோம் அதனை வளர்த்தோம் என்பதற்கு ஒரு அடையாளமாகவும் இருக்கும். ஒரு காலத்தில்.. தன் மூதாதையோரை யாழ் நினைவு கூறும் போது நாமும் அதில் ஒரு சிறுபுள்ளியாக அடங்கி இருக்கலாம்.

 

எல்லோரும் ஒற்றுமையாக கூட்டாக.. முயற்சிப்போமே...!

 

இந்த இடத்தில்.. யாழ் மோகன் அண்ணாவிற்கு.. எனது சிறப்பான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு.. எதிர்காலத்தில்.. கலாநிதிப் பட்டம் ஒன்றைச் செய்யும் எண்ணம் உள்ளது. அந்தப் பட்ட ஆய்வு வெற்றியாக அமைந்தால்... அதனை மோகன் அண்ணாவுக்கு சமர்ப்பித்து.. வெளியிடுவேன் என்று உறுதி சொல்லியும் கொள்கிறேன். இது ஒரு கருத்தாளனாக நான் அவருக்கு அளிக்க விரும்பும் ஒரு கெளரவம் ஆகும். காலம் கூடி வந்தால்.. நிச்சயம்.. அதனை யாழ் உங்களுக்கு ஓர் நாள் தாங்கி வரும்.


 • Mayuran, sOliyAn, கிருபன் and 27 others like this


#1103251 எனது மகள் பேட்டி கண்ட, இரு ஜேர்மன் பிரபலங்கள்.

Posted by தமிழ் சிறி on 16 April 2015 - 08:24 PM

எனது மகள் படிக்கும் பாடசாலையில்.... பிரபலங்களின் பேட்டி அடங்கிய புத்தகம் ஒன்று தயாரிப்பதற்காக,

அவரின் ஆசிரியர், எனது மகள் உட்பட... நான்கு மாணவர்களை தெரிவு செய்தார். ஒவ்வொருவரும்... ஜேர்மனியில் புகழ் பெற்ற ஐந்து பேரை பேட்டி கண்டு, எழுத வேண்டும். இவர் இருவரை பேட்டி கண்டு விட்டார்.
 

Kinder-Turner-Marcel-Nguyen-nascht-auch-

 

முதலாமவர் 2012´ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிப்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற... Marcel Nguyen.

(இணையப் பேட்டி)

 

 

###############################################

 

ranga-yogeshwar-gross.jpg

 

இரண்டாமவர்... ஜேர்மன் தொலைக்காட்சிகளில் அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும்....Ranga Yogeshwar  (தொலை பேசி பேட்டி)

 

அவள் கேட்ட கேள்விகளைப் பார்த்து.... எனக்கே ஆச்சரியமாக போய் விட்டது.

பேட்டி முடிந்தவுடன்... உச்சி முகர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டேன்.

 

 

இது ரங்கா யோகேஷ்வர், இணைந்து நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. 40´வது வினாடியில்... ரங்கா வருகின்றார்.

 


 • sOliyAn, Sabesh, குமாரசாமி and 26 others like this


#880374 அப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி

Posted by நிழலி on 25 March 2013 - 02:29 PM

அப்பாவின் ஈர நினைவுகள்....

 


வேர்களில் இருந்து கசியும்
நீராய் அப்பாவின்
நினைவுகள்
எனக்குள்..

 

 

ஐந்து வயது வரை நடக்கமுடியாது
தவிக்கும் போது
தோள்களில் தூக்கி
திரிந்த காலங்கள்...
பனைவெளிகளின் ஊடாக
சைக்கிள் பாரில் எனை
வைத்து கதை
சொல்லிய பொழுதுகள்....
பெரும் குளக்கட்டின் ஓரம்
தடுக்கி விழாமல் இருக்க
விரல்கள் இறுக்கி
நடந்த நேரங்கள்...
பெரும் மழை சோ என்று கொட்ட
நனைதலின் சுகம் சொல்லித்
தந்த தருணங்கள்...

 


இப்பதான் நடந்ததாய்
தெரியும் பொழுதுகளெல்லாம்
எப்பவும் தொட முடியாத திக்கில்
உறைந்து விட்ட சித்திரங்களாய்...
ஆற்றாத் துயர் அணை மேவினும்
நெருங்க முடியாத தூரங்களாய்....

பசிய இலையொன்றின்
அந்திம காலத்து உதிரும்
தவிப்பில் அப்பாவை கண்ட
இறுதிப் பொழுதுகளில் தான்
வாழ்வின் நிதர்சனம்
எனக்குள் புகுந்து கொண்டது...
பெரும் மரமாய்
சூறைக் காற்றாய்
அலை எழும் கடலாய்
நான் கண்ட அப்பாவின்
உடல் தீயில் உருகிய
தருணங்களி தான்
வாழ்வின் வனப்பும் புரிபட்டது..

சாம்பலின் ஊடாக தேடி தேடி
'இது விலா எழும்பு
'இது மூட்டெழும்பு' என்று
அவரது
எலும்புகளை பொறுக்கிய
அந்த வினாடிகளில்தான்
வாழ்க்கையின் பரிமாணமும்
பிடிபட்டது..

இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன

அவர்கள் இடும் முத்தத்தின்
ஈரத்தில் அவர் கண்களில்
தெரிந்த ஈரம் எனக்குள்
தெரிகின்றது....

இப்படியான சில
கணங்களில்
நானே அவராக மாறிவிடுவம்
இல்லை அவரே நானாக
ஆகிவிடுவதும்
நடக்கத்தான் செய்கின்றன....

 

மார்ச், 25 2013

 

------------

 

இன்று என் அப்பாவின் 71 ஆவது பிறந்த தினம். காலையில் இருந்து மிதமிஞ்சி அருட்டிக் கொண்டு இருக்கும் அவர் பற்றிய நினைவுகளில் எழுதிய ஆக்கம் இது,

 

 


 • shanthy, கிருபன், குமாரசாமி and 25 others like this


#795260 தன் பிள்ளை என்றால்..............

Posted by விசுகு on 04 September 2012 - 09:31 AM

இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன்.

திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதேநிலை ஒரு நாள் எனது மகளுக்கு வந்தபோது...........
வயிற்றுக்குள் நோகுது அம்மா என்று அவள் சொன்னபோது......
துடித்துப்போனேன். கண்களில் ரத்தக்கோடுகள்.
லா சப்பலுக்கு ஓடினேன்.
சின்ன வெங்காயம் அதிலும் நல்ல கொழு கொழு என்று சிவந்ததாகப்பார்த்து
(வாழ்நாளில் இப்படி நான் பார்த்து வாங்கியதே இல்லை)
சிறிய கத்தரிக்காய்
திறமான நல்லெண்ணெய்
வயிற்றில் பூச மஞ்சல்
தடவிவிட வேப்பிலை
குடிக்காத நான் வாங்கியது திறமான பிரண்டி...........

எல்லாம் கொண்டுவந்து போட்டதும் மனைவிக்கும் சந்தோசம்.
ஆனால் கண்ணில் கலக்கம்.
என்ப்பா எனக்கேட்டேன்.
நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.
இடிந்து நொருங்கியது நெஞ்சு.
பதில் சொல்ல ஏதுமில்லை.
உண்மை எப்போதும் சுணைக்கும்.
 • குமாரசாமி, SUNDHAL, akootha and 25 others like this


#1052473 விசுகுவும் அபிலாசைகளும்.............

Posted by விசுகு on 24 October 2014 - 05:06 PM

யாழுக்கு நான் வருவதற்கு ஒரு நோக்கமுண்டு என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகின்றேன்..

 

கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு மேலாக என்னுள் எரியும் நெருப்பு அது.

அது தானாக வந்ததன்று.

சிங்களம் அடித்து படிப்பித்தது அதை.

 

1983 இல்

மிகவும் வசதியாக

சிங்கள இசுலாமிய நண்பர்களுடன் பழகியபடி

பம்பலப்பிட்டிய இந்துவில் படித்துக்கொண்டிருந்த என்னை..

உன் இடம் இதுவல்ல என சிங்களமும் இசுலாமிய நண்பர்களும்

கோடிக்கணக்கான சொத்துக்களை எடுத்துவிட்டு உடுத்த உடுப்புடன் அனுப்பி  வைத்தனர்....

அந்த கொடூர அனுபவமும் தொடர்ந்து நடந்த அழிவுகளும் என்னை ஒருவழித்தீர்வுக்கு மட்டுமே இட்டுச்சென்றன.

 

அது தமிழரின் தாகம் தமிழீழம் என்பதாகும்.....

இதை இன்றும் எங்கும் சொல்ல நான் தயங்குவதில்லை.

அதற்காக உழைப்பதற்கோ

அதற்காக உழைப்பவர்களுடன் கைகோர்க்கவோ

என்றும் பின்னின்றதில்லை....

எனது உழைப்பில் ஒரு பகுதியை  அதற்காக ஒதுக்க மறந்ததில்லை....

 

முள்ளிவாய்க்காலுக்கு பின்

பலர் இதிலிருந்து விலகி

ஒதுங்கி விட்டாலும்

நான் அதிலிருந்து  இம்மியளவும் விலகவில்லை

 

ஆனால் அண்மைய  காலங்களில்

இதற்கு சில எதிர்ப்புக்கள் வருகின்றன.

நான் இவ்வாறு இருப்பது சிலருக்கு இடைஞ்சலாக

எரிச்சல் தருவதாக இருப்பதை அறியமுடிகிறது..

 

 

அதற்காக ஒரு விடயத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன்...

எனது குடும்பத்தை சார்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு

(எனது அண்ணர் மற்றும் அக்காமாரின் பேரப்பிள்ளைகள்)

பிறந்தநாள் விழாக்கள் செய்யும் போது அவர்களுக்கு எனது தாகத்தை வெளிப்படுத்தும்

வேரூன்ற வைக்கும் நோக்கத்துடன்  ஒரு அணிகலனை (பென்ரன்) செய்து போடுவது வழமை.

இதுவரை ஒரு 15 பேருக்கு செய்து போட்டிருப்பேன்.

அது முள்ளிவாய்க்காலுக்கு முன் பச்சையாக இருக்கும்

முள்ளிவாய்க்காலுக்குப்பின் சிவப்பாக இருக்கும்........

எனது நண்பரின் நகைக்கடையில் தான் தொடர்ந்து  அதைச்செய்து வருகின்றேன்.

 

இறுதியாக அந்த அணிகலனை நான் செய்தபோது 

அந்த முதலாளிக்கும்

தொழிலாளிக்கும் நடந்த சம்பாசனையை எழுதி முடிக்கின்றேன்.....

 

இந்த அணிகலனை நான் எடுக்கப்போயிருந்தபோது

அதை என்னிடம் தந்த  தொழிலாளி என்னிடம் கேட்டார்

இன்னும் தமிழீழத்தை நம்புகின்றீர்களா அண்ணா என்று....

நான் பதில் சொல்லும் முன் அந்தக்கடை முதலாளியே  பதில் சொன்னார்.

இந்தக்கேள்வி  இவர் இதை என்னிடம் செய்யும்படி ஓடர் கொடுக்கும் போதெல்லாம் எனக்கும் வரும்.

ஆனால் இவர் ஒன்றை விதைக்கவிரும்புகின்றார்

அதனாலேயே பெறுமதியானதைக்கொடுக்கின்றார்

அதுவும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கின்றார்

இவருடைய ஆசை என்ன என்று கேட்டால் அத்தனை பிள்ளைகளும் சொல்வார்கள் தமிழீழம் என்று.

முள்ளிவாய்க்காலுக்குப்பின் இவரது இந்த நடவடிக்கை தான் என்னுள் சில கேள்விகளை  விதைத்தது

அதுவே இவரது நோக்கமாக இருக்கும் என்றார்...

 

இது தான் அந்த அணிகலன்...

எங்காவது இதனுடன் நீங்கள் யாரையாவது கண்டால்

அது என் குடும்பம் என்பதை அறிந்து கொள்ளலாம்....

 

முன்பக்கம்

img207.jpg

பின் பக்கம்.....

 

img206.jpg

 

 

 

(யாழ் களத்தில் எனது காலம் குறுகிவருகிறது. எழுதவேண்டும்   போலிருந்தது.)


 • sOliyAn, Nitharsan, குமாரசாமி and 25 others like this


#802307 யாழ் கள வாழ்த்துப்பாடல்

Posted by தமிழ்சூரியன் on 21 September 2012 - 06:33 PM

வணக்கம் உறவுகளே எமது கலைச்சொத்துக்களில் ஒன்றான இந்த யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலை இசையாக்கி உறவுகளாகிய உங்களின் சார்பில் இதை சமர்ப்பணம் செய்வதில் நான் பெருமையும் ,மகிழ்ச்சியும் கொள்கிறேன். சிறக்கும் வகையில் வரிகளை தந்து இந்தப்பாடலை சிறப்புற செய்த மதிப்புக்குரிய சகாறா அக்காவிற்கும் ,தெளிந்த மனத்துடன் ஒருங்கிணைப்பு செய்த சகோதரன் சுண்டலுக்கும் ,பரந்த மனத்துடன் சிந்தனை ஆக்கம் செய்த அண்ணா தமிழ்சிறிக்கும் ,அழகான குரலில் பாடலை பாடி சிறப்புற செய்த என் உடன்பிறவா அண்ணன் நாதன் அவர்களுக்கும் நன்றிகள் நன்றிகள்
இந்தப்பாடலின் ஒரு பகுதி மட்டுமே இங்கே இப்போ காண்பிக்கப்படும் .......பரிசளிப்பு விழா அன்று முழுமையாக வெளியிடப்படும் .....மீண்டும் நன்றிகள்

பின்னணி குரல் ,படக்கலவை ..............நாதன்
வரிகள் .........................................................வல்வை சகாறா
ஒருங்கிணைப்பு .........................................சுண்டல்
சிந்தனை ,ஆக்கம் .....................................தமிழ்சிறி
இசை .............................................................தமிழ்சூரியன் . • குமாரசாமி, sathiri, SUNDHAL and 23 others like this


#704274 அலைவரிசை 4 இல் அறிமுகமான மாவீரன்!

Posted by கவிதை on 10 November 2011 - 09:20 PM

பின் மண்டையில் சுடுபட்டு... நான் வீழ்ந்தபோது,
என் மூளைநரம்புகளின் அதிர்வுகளை...
நீங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்!!!

வெறும் செய்தியாகத்தான்.... அதுவும் உங்களுக்கு இருந்திருக்கலாம்!!!

சாகப் போகின்றோம்.... எனும்போது,
"கடைசி ஆசை" என்றொன்று..... எனக்கும் இருந்தது!
இயலாமையுடன் எதிர்ப்பட்ட எண்ணங்களில்... யாரேனும் எம்மை
காப்பாற்ற வரமாட்டார்களா? எனக் கூட, எண்ணத் தோன்றவில்லை!
அனாதையாகி நிற்கும் தாய்மண்ணில்....
நாங்களும் நாதியற்றுத்தான் நின்றோம்!!!

பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா....
விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று,
என் மூளை திருவி... வலக்கண் வழியே,
வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும்,
எனக்கு வலிக்கவேயில்லை!!!
செருகிக் கொண்டிருந்த என் ஒற்றை விழியிலும்...
அப்போதும் கடைசிக் கண்ணீர்த் துளியொன்று...... என் இனத்துக்காய்!!!

புறநானூறு பிறழ்ந்த தமிழனாய்...
பின் பிரடியில் புண் வாங்கி,
மண்மீது சரிந்த எங்களையும்,
என்றாவது ஒரு நாளேனும்... - விடிந்த
எம் மண்ணின்... மாவீரர் பட்டியலில் சேர்
ப்பார்கள்....என்ற
கடைசி நப்பாசையுடன்,
இறுகிப்போன என் இதயம் -முதலும் கடைசியுமாய்,
தன் இயக்கத்தினை நிறுத்திக்கொள்ள,
என் ஒற்றை விழியும் மூடிக்கொண்டது.

இறுதியாக ஒரு வேண்டுகோள்...
"இப்பிடிச் செத்ததுக்கு... கழுத்தானைக் கடிச்சிருக்கலாம்!!!
ஏன் சயனைட் கடிக்கவில்லை???" என்று
தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!
"இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...
அதையும் நான் மறந்திருந்தேன்'!!!

 • shanthy, கிருபன், sathiri and 23 others like this


#1066495 யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

Posted by shanthy on 18 December 2014 - 08:57 AM

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர்.
DSCN0824-300x225.jpg
2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது துணைவியாரையும் இந்நேரம் நினைவு கொள்கிறோம்.

நிழலியின் உதவியில் கழுவங்கேணி 1குடும்பலநல உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட போசாக்கு குறைந்த குழந்தைகளை நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது ஒருங்கிணைத்து உணவு வழங்கலோடு உளவள கருத்தரங்கினையும் நடத்தியிருந்தது.

கழுவங்கேணி கிராமமானது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்துள்ளது. இக் கிராமானது மட்டக்களப்பு நகரை அண்டிய ஒரு கிராமமாகும். 1300குடும்பங்களைக் கொண்ட இக்கிராமமானது மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டது. மிகவும் பின்தங்கிய இக்கிராமத்தில் 5சத வீதத்துக்குள்ளேயே கல்வித்தரம் இருக்கிறது.

அரபு நாடுகளுக்கு செல்லும் தாய்மார் அதிகமாக இக்கிராமத்தில் இருக்கிறார்கள். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்தும் கனவோடு அரபு நாடுகளுக்குச் செல்லும் தாய்மாரின் குழந்தைகள் எதிர்நோக்கும் சிக்கல்களும் பாதிப்புகள் அதிகம். இங்கு அதிகளவிலான பெண்பிள்ளைகள் 15,16வயதுகளில் திருமணம் செய்துவிடும் அவலம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கிறது.

திருமண வயதுக் கட்டுப்பாடு நாடெங்கிலும் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இதுபோன்ற கிராமங்களில் இன்னும் மீறப்பட்டே வருகிறது. சுயபொருளாதார உயர்வு , கல்வியறிவு குறைந்த இத்தகைய கிராமங்களுக்கான நிரந்தர உளவள உயர்வு மேம்படுத்தப்பட வேண்டும்.

தங்களைத் தாங்களே சிந்திக்கவும் தங்களை வழிநடத்தவும் இவர்களுக்கு தற்போது வேண்டியது உளவள மேம்பாடு. தேன்சிட்டு உளவள அமைப்பின் செயற்பாட்டுக் குழுவினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உளவள மேம்பாட்டு பயிற்சிகளுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்றால் இக்கிராமத்தையும் மேம்படுத்த முடியும்.

இக்கிராமத்தின் முதல் கருத்தரங்கை நடத்தவும் போசாக்கு குறைந்த குழந்தைகளுக்கான உணவையும் தந்து முதல் மாற்றத்தை ஏற்படுத்திய யாழ்கள மட்டுறுத்தினர் நிழலி அவர்களுக்கு எமது சிறப்பான நன்றிகள்.

DSCN0785-150x150.jpg DSCN0788-150x150.jpg DSCN0791-150x150.jpg
DSCN0797-150x150.jpg DSCN0809-150x150.jpg DSCN0813-150x150.jpg
DSCN0817-150x150.jpg DSCN0819-150x150.jpg DSCN0823-150x150.jpg
DSCN0824-150x150.jpg DSCN0825-150x150.jpg DSCN0828-150x150.jpg
DSCN0830-150x150.jpg DSCN0834-150x150.jpg DSCN0835-150x150.jpg
DSCN0840-150x150.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://nesakkaram.or...karam.3753.html


 • கிருபன், ஈழப்பிரியன், professor and 23 others like this


#1041536 வல்வை சகாறாவின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு

Posted by ராஜன் விஷ்வா on 11 September 2014 - 07:53 PM

அன்பான உறவுகளுக்கு முதலில் மன்னிப்பு கோருகின்றேன். யாழ் கள உறவு சாகாறா அக்காவின் சரித்திர புகழ் வாய்ந்த விழாவில் பங்கெடுத்து விட்டு காணாமல் போனதற்காக... இது நாள் வரை யாழ் களத்தை தொலைபேசியினுடாகவே பாவித்து வந்தேன். தற்போது தமிழில் தட்டச்சு செய்யக்கூடிய வசதி தொலைபேசியில் இல்லாததால் களத்தில் பங்கெடுத்து கொள்ள இயலவில்லை.

(கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்)

காலம் : 2014 மாதம் மே

சாகாறா அக்கா நூல் வெளியீடு பற்றி தோராயமாக சொன்னார் ஒகஸ்ட் மாதம் இறுதியில் நிகழ வாய்ப்பிருக்காலாம் என்று. சரி தங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள் தமையன் வரவேற்க காத்திருக்கிறேன் என்டு. வருவதற்கு முன்பு அறிய கிடைத்தால் நானும் சந்திக்க திட்டங்களை உருவாக்கி கொள்ளலாம் அல்லவா. வரும் முன்னம் சொல்லுங்கோ என்டு சொல்லியிருந்தேன். பிறகு நானும் மறந்துவிட்டேன். இடையில் அவரிடம் கதைக்கவில்லை. அதுவரை அவரை பற்றி பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை கனடாவை வசிப்பிடமாக கொண்டவர் அபாரமான கவிதை எழுதும் திறனுடையவர் ஒரு பெர்ர்ரிய்ய்ய குடும்பத்தின் தலைவி என்பதை தவிர.

ஒகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பாலக்காட்டில் இடைவிடாது கொட்டும் மழையின் ஈரலிப்பும், நீலகிரி மலைத்தொடரில் சறுக்கி வந்து நிலைகொண்ட மேகங்களும் குளிர்ச்சியுடைய கோயமுத்துரை மேலும் குளுமைபடுத்திக் கொண்டிருக்கும் முன்னிரவில் முகப்புத்தகம் பார்த்து கொண்டிருப்பதற்காக அம்மாவிடம் வசமாக வசை வாங்கி கொண்டிருந்த நேரத்தில் சென்னை வெயிலாக வந்து உட்பெட்டியில் விழுந்தது சாகாறா அக்காவின் தகவல். "தம்பியவை நான் இப்ப சென்னையில் நிக்கிறேன் என்டு, நான் இப்ப கோயமுத்தூரில் அம்மாவிடம் ஏச்சு வாங்கி கொண்டிருக்கிறேன் என்டு சொல்லி வேகமாக தொலைபேசி எண்ணை அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திராமல் துண்டித்துவிட்டு அம்மா நான் தூங்கிட்டேன் என சொல்லவும் தலையனை முகத்தில் விழவும் சரியாய் இருந்தது.

அடுத்த நாள் தொலைபேசி அழைப்புவரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். வரவில்லை இரண்டொரு நாள் கழித்து திண்ணையில் வணக்கம் வைத்தார். கொஞ்சம் யோசித்து வணக்கம் வைத்து திரும்ப திண்ணையில் குருநாதருடனும் விசகு தாத்தா ராசவன்னியன் மாமாகாருவுடனும் ஐக்கியமாகி கவிதாயினியை கண்டு கொள்ளவில்லை. நேரமிருப்பின் பேசுங்கள் என்று மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றேன்.

அடுத்தநாள் முகப்புத்தகத்தில் விழா அழைப்பிதழை பார்க்க சற்று கிலியானது. அதில் அழைக்கப்பட்டுள்ளவர்களெல்லாம் அடிக்கடி தலைப்பு செய்தியில் கேட்ககூடிய பெயர்கள். ஆகா எவ்வளவு பெரிய ஆளிடம் இப்படி பரோட்டா சூரி மாதிரி லொடலொட என்டு பேசிட்டமென்டு குற்ற உணர்வு குறுகுறுக்க அக்கா நீங்க யாரெண்டு தெரியாம அறியா சிறுவன் தெரியாமல் பேசிட்டன் மன்னிச்சுகோங்கனு மடல் அனுப்பி பார்த்திருந்தேன். பாவ மன்னிப்பு வழங்கபடவில்லை என்பது படித்தும் பதிலனுப்பாததில் இருந்தே விளங்கியது.

விழாவை தலைமையேற்க சொல்லி அழைப்பிதழில் அச்சடிக்காமல் புறக்கணித்த கோவம் ஒருபுறம் இருந்தாலும் அவரது மகள்கள் இருவரும் வரவிருப்பதாக ஒற்றுவர்கள் இரகசிய தகவலை தந்ததால் சாகாறா அத்தாச்சிக்கு அக்கணமே வருகையை அறிய தந்துவிட்டேன். தமிழ் என்னை தலைநகர் நோக்கி இழுத்தது... ஆனாலும் சென்னை செல்வதென்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றால் பிரம்மாக்களிடம் அனுமதி பெற வேண்டும். அது பற்றி நிச்சயமில்லாததால் யாழில் யாரிடமும் கதைக்கவில்லை. அனுமதி இல்லையென்றால் அவசர கால சிகிச்சை பிரிவில் அறைகுறை மயக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லி சாமாளிக்க முடிவு செய்தாயிற்று.
புத்தக வெளியீடு சென்னை கனடாவில் வசிப்பவர் இணைய நண்பர் என்பதையெல்லாம் அழகாக விவரித்தால் என்ன நிகழும் என்பது ஒரளவு யூகித்திருந்ததால் திருமணம் நண்பனின் அண்ணன் சென்னை என்று எளிமையாக முடித்து கொண்டேன்.

காலை 6,15 ரயில் புறப்படும் நேரம் 5,30 நிலையத்தை அடைந்தேன். பயணச்சீட்டை வாங்கும்போது மணி 6,20. வாங்கிய சீட்டை வெறித்தபடி இருந்தேன் அடுத்தநாள் ஒணம் என்பதால் கேரள நாட்டிளம் பெண்டிரால் சுழ்ந்திருந்தாலும் மனம் ஜென் நிலைக்கு போயிருந்தது. சென்னை வழியாக மங்களூர் வரைசெல்லும் திருவனந்தபுரம் சிறப்புரயில் 6,40 மணிக்கு நடைமேடை நாலில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தானே காத்திருந்தாய் விச்ச்சு ஒடு ஒடு என்று அசிரிரீ உள்ளே ஒலித்தது. அருகில் நின்றிருந்த சிறிய மலையாள குட்டியிடம் "என்ட ஹிருதயம் நிறைஞ்ஞ ஒண அஷம்ஷகள்" என வாழ்த்திவிட்டு இரயில் பயணங்களில் மூழ்கியிருந்தேன்...

(நாளை சென்னையில்)

# நூல் வெளியீட்டின் நடுவே எனது மானே தேனே பொன்மானே எல்லாம் பொறுத்து கொள்ளுங்கள்....
 • sOliyAn, குமாரசாமி, professor and 23 others like this


#905495 எதை எழுதுவேன் நான்...?

Posted by சுபேஸ் on 09 June 2013 - 10:04 PM

தாங்கவியலா
வெறுமைகளில் அமிழ்ந்து
விழிகளில் நீர்வர
நினைவுகள் கரைந்தழிகிறது...
எழுதுகோலும்
வெற்றுத்தாளுமாய்
என் எதிரிலே...
எதை எழுதுவது...?


முகவரி இழந்து
முகமிழந்து
முற்றத்து நிழல் இழந்து
ஊர் சுமந்த கனவிழந்து
உள்ளே வலி சுமந்து
அகதியாய்
உருக்குலைந்து கிடக்கும்
கதை எழுதவா..?

ளித்து ஒளித்து - தன்
இணையுடன் விளையாடும்
ஒற்றைப்பனை அணிலுக்கும்
விரத விருந்துண்டு
களைத்து
முற்றத்தில்
துருத்திக்கொண்டு நிற்கும்
வேம்பில்
கரகரத்த குரலில்
கரையும்
காக்கைக்கும்
கிடைத்த சுதந்திரம்
என் மண்ணில்
என் முற்றத்தில்
எனக்கு மறுக்கப்பட்டதை
எழுதவா..?

என் பாடு பொருளாய்
பலகாலம் இருந்த
கொலுசொன்றின் ஒலிக்காக
மனசெல்லாம் காத்திருந்து
காலங்கள்
உருக்குலைந்து
உள்ளே துருப்பிடித்து
மனச்சுவர்களில்
உக்கி உதிர்ந்து போனதை
எழுதவா..?

என் தேசத்தின்
தெருக்களில் நிற்கும்
எருக்கலைக்கும்
நாயுருவிக்கும் கூட
எல்லாமாய்
எதுவுமாய்
வெளித்தெரியாமல்
உள்ளே ஒட்டி இருப்பவை
வேர்கள்...
ஊட்டி வளர்த்து - என்
உள்ளிருக்கும் ஆன்மாவை
உருவாக்கிய பாட்டியை
எங்கள் வீட்டின்
வெளித்தெரியா வேரை
விட்டுப்போகும்படி
பிடுங்கி எறிந்த போரை
நீழ்கின்ற இரவினிலே
நினைவுகளினூடே
கொப்பளிக்கும்
அது தந்த வலிகளை
எழுதவா..?

உறவுகள் அறுபட
அகதியாய்
ஊர் விட்டு வந்து
பனி உதிர்ந்த வீதிகளில்
பாதை தெரியாமல்
கனவுகளை பரணில்
காயப்போட்டுவிட்டு
வயிற்றுக்கும்
வாழ்க்கைக்குமாய்
போராடும்போது
செருக்குடன் கடந்துபோகும்
செல்வந்த மனிதர்களின்
இரக்கமற்ற வார்த்தைகளை
புழுவைப்போல் எமைப்பார்க்கும்
எள்ளல்களை
எழுதவா..?

சுமை அமத்தும்
அகதி வாழ்க்கையில்
ஊற்றெடுக்கும்
விழி நீரை துடைக்க
ஒரு உறவும் இன்றி
உருக்குலைந்து
நிற்கதியாய் நின்றிருக்கும்
பொழுதுகளில் எல்லாம்
நாமிருக்கிறோம் என்று
தானாடாவிட்டாலும்
தமிழனென்ற தசையாடிய
ஓடி வந்து தூக்கிவிடும்
ஊரில் பார்த்தறியா
உடன்பிறவா இரத்தங்களை
நினைக்கும்பொழுதெல்லாம்
பனி இரவிலும்
கண்கள் பனிக்க
உள்ளம் விம்மி அழும்
கதை எழுதவா..?

நெஞ்சுள் இருக்கும்
கறுத்த பக்கம்கள்
தெரியாமல்
உரித்துள்ள ரத்தங்கள் என்று
உரிமையுடன் எதிர்பார்த்த
உறவுகள்
கழுத்தறுத்த
கதை எழுதவா..?

இவை எல்லாம் பார்த்த
கொதிப்பில்
தொல்லைகளை துடைத்தழித்து
எல்லைகள் வரையப்பட்ட
என் சுதந்திர மண்ணில்
ஒரு நாள் இறப்பேன் என்று
நெஞ்சுக்குள்
நெருப்பாய் வளர்த்த
கனவை
கடைசியாக தின்று முடித்த
முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த
காலமும்
கண்ணீரும்
எம் வலிகளைப்போக்காத
கதை எழுதவா..?

வானம் பார்த்து
வரும் கண்ணீரில்
வடுக்களைத்
தடவிக்கொள்கிறேன்..
ஓ கடவுளே..
எதை எழுதுவேன் நான்..?
எல்லாக் கண்ணீரும்
என் வேலிகளை
அரிக்கையில்...
 • குமாரசாமி, வல்வை சகாறா, nunavilan and 21 others like this


#893830 ஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்த நாளும்!

Posted by புங்கையூரன் on 01 May 2013 - 10:02 AM

SuperStock_1850-8726.jpg

 

வேலையால் வந்து தபால் பெட்டியைத் திறந்து பார்த்தவனுக்கு, இன்னும் இரண்டு   நாட்களில் அவனது பிறந்த நாள் வருகின்றது என்பது நினைவுக்கு வந்தது.. நீலத்திலும், சிவப்பிலும், கடித உறையில் போடப்பட்டிருந்த வரிக்கோடுகள் அது ஒரு வெளிநாட்டுக் கடிதம் என்பதைத் தெளிவாகக் காட்டின. வீட்டில் உள்ளவர்களுக்கும், சொந்தங்களுக்கும், அவனது பிறந்தநாள், தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்ட நிலையில், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு ஜீவன் மட்டும் இன்றும் அவனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பது, அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சற்றே மகிழ்ச்சியுடன் கடிதத்தைக் கவனமாகத் திறந்தவன், அதனுள் இருந்த வாழ்த்து மடலை எடுத்துப் பிரிக்கையில், அதன் மீது தனது விரல்களை, மெதுவாக நகர்த்தினான். அப்போது, அவனது கையில் படிந்த வெண்மை நிறமான துணிக்கைகளை எடுத்து முகர்ந்து பார்க்கையில், அவனது நினைவுகள் பல வருடங்கள், பின்னோக்கி நகர்ந்தன!


அது ஒரு சற்றுக் குளிர்மையான காலைப்பொழுது. சகாரா பாலைவனத்திலிருந்து, தெற்கு நோக்கிப் பயணம் செய்த மெல்லிய மணல் துணிக்கைகள் வெண்ணிறத் துகள்களாகக் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை, என அந்த நாட்டு மக்களால் நம்பப்படுவதால், இதனை அவர்கள் ஒரு பாதிப்பாகக் கருதுவதில்லை. இது வரும் பருவ காலத்தைக் ‘ஹமட்டான்' என அழைத்துக் கொள்வதோடு சரி. அன்று சனிக்கிழமையாதலால், சற்று நேரம் மேல் மாடியிலிருந்து வீதியை அவதானித்துக் கொண்டிருந்தான். இரண்டு பேர், எதிர் எதிராக நடந்தபடி, ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு போனார்கள். உனது சுகம் எப்படி, உனது மனைவியின் சுகம் எப்படி, அவளது குழந்தைகளின் சுகம் எப்படி, உனது இரண்டாவது மனைவியின் சுகம் எப்படி, என்று ஒருவருடன் ஒருவன் கதைத்தபடி, எதிர்த் திசைகளில் சென்று கொண்டிருந்தது, சின்ன வயதில் பௌதீகத்தில் படித்த ‘தொப்ளரின் விளைவை' அவனுக்கு நினைவு படுத்தியது.


தூரத்தில் ஒரு தாய், தனது குழந்தையொன்றை முதுகில் கட்டியவாறு, தனது இரண்டு கைகளிலும், இரண்டு கோழிகளைத் தலைகீழாகத் தூக்கியபடி, அந்த மேட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்ததை அவதானித்தான். பொதுவாகக் குன்றின் மீது இருந்த அவனது வீட்டை நோக்கி, அவனது நண்பர்கள் தான் வருவதுண்டு. உள்ளூர் வாசிகள் பொதுவாக எட்டிப்பார்ப்பது அபூர்வமாகையால், சற்று ஆச்சரியத்துடன், அந்தத் தாயைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி அந்தத் தாய், தனது வீட்டுக்கதவைத் திறந்ததும், மனசு பக்கென்றது. நேற்று இரவு வீட்டுக்கு வந்து போன நண்பர்கள், போற வழியில் ஏதாவது இசக்குப் பிசகாக ஏதாவது செய்து தொலைத்து விட்டார்களோ, என்று எண்ணியவன், கீழே ஓடி வந்து, மரியாதைக்காகக் கதவைத் திறந்ததும், அந்தப் பெண், அப்படியே அவனது கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விடவும் சற்றுக் கலவரமடைந்து போனவன்,’மமா' என்று கூறியபடி அவளது கரங்களைப் பிடித்து அந்தப் பெண்ணைத் தூக்கிவிட்டான். அவனது கால்களில், அந்த நாட்டு வழக்கப்படி, பலர் விழுந்தெழும்புவது வழமை தான் எனினும், ஒரு தாய் அவனது காலில் விழுந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு கோழிகளையும், அவனிடம் கையளித்தவள், தனது மகனைக் கல்லூரியிலிருந்து கலைத்து விட்டதைப் பற்றிக் கூறினாள். அவன் படிப்பிப்பது, கணித பாடமென்பதாலும், அநேகமான ஆபிரிக்கர்களுக்குக் கணிதம், சூனியம் என்பதாலும், அவன் பலரை, வகுப்பிலிருந்து அடிக்கடி கலைத்து விடுவதுண்டு. மற்றவர்களைப் போல,' பாம்' மரங்களை வெட்ட விடுவது போன்ற தண்டனைகள், மரங்களுக்கேயன்றி, மாணவர்களுக்கு அல்ல என்று அவன் நம்புவதே, அதற்கான காரணமாகும். அவளது மகன் யாரென்று உடனே நினைவுக்கு வராததால், உள்ளூர் மொழியில், மகனது பெயரைக் கேட்டவன், தாய் பெயரைச் சொன்னதும் யாரென்று அவனுக்குப் புரிந்து விட்டது. அந்த மாணவனது, தகப்பன் ஒரு ‘ பிறிக் லேயர்' எனவும் தனது மகன், நன்றாகப் படிக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியவள், இந்தத் தடவை மட்டும், அவனை மன்னித்துக் கொள்ளும் படி கேட்டுக்கொண்டாள். அவள் வந்த விதமும், தனது மகனின் படிப்பில் அவள் காட்டிய  அக்கறையும் அவனுக்குக் கொஞ்சம் பிடித்துக்கொண்டது. எனவே, அன்று விடுமுறையானதால், அந்தப் பையனது தகப்பனைப் பார்க்க முடியுமா எனக் கேட்டான். ஆம், என்று கூறியவள், அங்கு தான் அண்மையில் ஒரு ‘சைட்' டில் அவர் வேலை செய்வதாகவும், அவனை அப்போதே, கூட்டிச் செல்வதாகவும் கூறினாள்.


கண்ணுக்கெட்டிய வரையும், எந்த விதக் கட்டிட வேலைகளும் நடப்பது போலத் தெரியவில்லை எனினும், அந்தத் தாயுடன் நடந்து சென்றான். ஓரிடத்தில், களிமண் குழைக்கப் பட்டுக், கட்டப்பட்டிருந்த தடிகளின் மீது, உருண்டைகளாக அவை அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவர்களில் ஒருவன் மட்டும், வெளியில் வந்து அவனது காலடியில் குனியவே, ‘பிறிக் லேயரைப்' பிழையாய் விளங்கிக் கொண்ட தனது முட்டாள் தனத்தை நொந்துகொண்டான்!


மறுநாள், அந்தப் பையன், ‘அஜிபோலா' வீட்டுக்கு வந்தான். அவனைக் குளித்து விட்டு உள்ளே வரும்படியும், கீழேயுள்ள அறையில் தங்கிக் கொள்ளும்படியும் கூறினான். நம்ம ஆக்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்வதால், அவர்களின் ‘செல்வாக்கு' மூலம் தண்ணீர்த் தாங்கி அடிக்கடி நிரப்பப்படும்.

ஒரு வாளியில் மட்டும் தண்ணீரை நிறைத்தவன், கைகளில் உள்ள விரல்களை உபயோகித்து, காது, மூக்கு போன்ற பகுதிகளை, முதலில் கழுவியபின்பு, முழு உடம்பையும் கழுவத் தொடங்கினான். ஒரு ஐந்து நிமிடங்களில்,அவனது  குளிப்பு முடிந்ததைக் கண்டு, சற்று ஆச்சரியப் பட்டுப் போனதுடன், எவ்வளவு தண்ணீரை நாம் வீணாக்குகின்றோம் என்றும் ஒரு கவலையும் அவனுக்கு ஏற்பட்டது. அன்று காலையில்.சிற்றோடையொன்றில், குளித்துக்கொண்டிருந்த குழந்தையொன்றும், தலைக்கு ;ஒமோ;போட்டுக் குளித்துக் கொண்டிருந்ததுவும், அவனது மனதில் ஒரு வலியை ஏற்படுத்தியிருந்தது.  


காலப் போக்கில்,அவனுக்குக் கணிதத்தை, மெல்ல,மெல்லத் தான் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. பைபிளைப் போன்றோ, அல்லது  பூமிசாத்திரத்தைப்  போன்றோ, கணிதத்தைப் பாடமாக்கி எழுத முடியாமல் உள்ளது என்பது தான்,அஜிபோலாவின் பிரச்சனையாகவிருந்தது. அவன், உதாரணமாகச் செய்து காட்டுபவைகளை, கேள்வி,வேறு இலக்கங்களுடன் இருந்தாலும்,அப்படியே,எழுதிவிட்டு வரும், பழக்கம் அவனிடமிருந்தது. அந்த அடிப்படைச் சிந்தனையை, மாற்றியதும், அவனுக்கும் அஜிபோலாவுக்கும் இடையில் பிரச்சனைகள் வரவில்லை, காலப் போக்கில், அவன் தனது வீட்டுக்கே போவது குறைந்து விட்டது. அஜிபோலாவின் சமையல் அவனுக்கும் பிடித்துக்கொண்டது. இறைச்சி கொஞ்சம், மீன் கொஞ்சம், அவித்த முட்டை கொஞ்சம் என்று எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு ‘’டையினமயற் என எம்மவர்களால் அன்புடன் அழைக்கப்படும் மிளக்காய்த் தூளையும் போட்டு, மஞ்சள் நிறப் ‘பாம்' ஒயிலில் கொதிக்க வைத்தால், அதுக்குப் பெயர் ‘கறி' எனப்படும். தேவையான படி, மீனோ அல்லது இறைச்சியோ அல்லது முட்டையோ சாப்பிட்டுக் கொள்ளலாம். கறியும் ஒரு வாரம் வரைக்கும், பழுதடையாமல் இருக்கும்.


ஒரு நாள், அதிகாலையில் கல்லூரிக்குப் போனபோது, எல்லோரும் ஏசுநாதருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு அடித்த, சுழல் காற்றில், ஒரு கட்டிடத்தின் கூரை தூக்கி எறியப்பட்டகற்குத் தான் நன்றி சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குப் புரியாமல், பக்கத்திலிருந்தவரை ஏனென்று கேட்கப், பகலில் அந்தச் சுழல்காற்று வந்திருந்தால், மாணவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கக் கூடும். எனவே,அதனை இரவில் வர வைத்தற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுகின்றார்கள் என்று விளக்கமளித்தார். என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கின்றார்கள் என அவன் தனக்குள்  நினைத்துக் கொண்டான். அன்றைய தினமும் ஒரு மாணவனை, வகுப்பில் தூங்கிக் கொண்டிருந்த படியால் துரத்தி விட்டவன் பின்னர், அந்த மாணவனுக்கு  ‘நித்திரை வருத்தம்' இருப்பதாக அறிந்து மனவருத்தப் பட்டான். ரெஸ்ரி'  என அழைக்கப்படும் ஒருவகை மாட்டிலையான்கள் கடிப்பதால் இது ஏற்படும். இவர்கள் மட்டுமல்ல,மாடுகளும் மேய்ந்தபடியே, பல மணி நேரங்கள் தூங்கி விடுவதைப் பிற்காலங்களில் பல தடவைகள்  அவன் அவதானித்துள்ளான்.


இனிக்கதைக்குத் திரும்பவும் வருவோம்,  உயர்தர வகுப்பில், மிகத்திறமையாகச் சித்தியடைந்த அஜிபோலா, பிற்காலத்தில் நல்ல வேலையில் இருந்தான். அவனும், அவனது தாயும், அவனது முன்னேற்றத்துக்கு அவனது 'உதவி' தான் காரணம் என்று நம்புகின்றார்கள். காலமும், அவனது பாதையை நகர்த்தி நீண்ட நாட்களாகி விட்டன. அஜிபோலா, தனது மகனுக்கும் அவனது பெயரை, வைத்திருப்பதாகச் சொல்லுகின்றான். வருடம் தவறாது, அவனது பிறந்தநாள் வாழ்த்தும், அவன் பல நாடுகள், மாறியபோதும், அவனைத் தேடி வந்து கொண்டிருக்கின்றது.


அதில் படிந்திருக்கும், சகாராவின் வெள்ளைத் துணிக்கைகளைத் தடவும் ஒவ்வொரு தடவையும், அவன் நேரில் வாழ்த்துவது போலவும், ஒரு விதமான அன்னியோன்னியமும் வந்து போவது போலவே அவன் உணர்கின்றான்!


 • shanthy, குமாரசாமி, putthan and 21 others like this


#864404 இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு

Posted by Innumoruvan on 17 February 2013 - 08:12 AM

இசையோ, இலக்கியமோ அதை அனுபவிப்பது என்பது எம்முள் அது வியாபிக்கும் போது தான் சாத்தியப்படும். நாமிருக்கும் உலகில் இருந்து மட்டுமல்ல, எம்மில் இருந்துகூட எமது அகவெளியில் ஒரு தனி உலகு கோதி எடுக்கப்பட்டு அதற்குள் நாம், அந்த இசையினதோ இலக்கியத்தினதோ பூரண கட்டுப்பாட்டில் திளைத்துக் கிடக்கவேண்டும். அப்போதுதான் அந்த பூரண இனிமை எமக்குக் கைகூடும். இனிமை திணறும். இந்தத் தனியுலகைக் கைப்படுத்துவதற்கு மிகவும் ஏதுவான நிலைமை தனிமை. இதுவே எனது நிலைப்பாடு என்பதால் நான் பொதுநிகழ்வுகளிற்குச் செல்வது அருமை. படைப்பாளியைக் காட்டிலும் படைப்பில் தான் அதிகம் அக்கறை என்பதால், படைப்பாளியைப் பார்க்கவேண்டும் கைகுலுக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை. அவன் தான் தனது ஆன்மாவைப் பிழிந்து படைப்பாக்கி அந்தப் படைப்பையே எம்மிடம் கொடுத்துள்ளானே அதற்குமேலால் என்னத்தை அவனில் பார்க்கப்போகின்றோம் என்பது எனது எண்ணம் (சில எழுத்தாளர்கள் சார்ந்து அரிதாக சந்திக்கும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது தான், ஆனால் வெகு வெகு அரிது.) இதனால் இளையறாஜா நிகழ்ச்சிக்கு நான் போவதாய் இருக்கவில்லை.
 
வெள்ளிக்கிழமை காலை வேலைக்குப் புகையிரதத்தில் சென்றுகொண்டிருந்தேன். புத்தகம் ஏதும் இருக்கவில்லை. அதனால் கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை (C.B.C) காதுக்குள் ஒலிக்கவிட்டபடி சென்று கொண்டிருந்தேன். நான் சற்றும் எதிர்பார்க்காத வகை ஒரு தமிழர் பற்றிய ஒலிப்பேளை ஒலிபரப்பாகியது. றாஜீவ் என்ற இயற்பெயரும், Prophecy என்ற புனைபெயரும் கொண்ட ஒரு கனேடிய ஈழத்தமிழ் இ;ளைஞன்பற்றியது அது.
 
"அப்பா இல்லை. அம்மா தனித்து என்னை வளர்த்ததால் வாடகை வசதிப்பட்ட ஆபத்தான இடத்தில் குடியிருப்பு. அப்போது எனக்குப் பதின்மூன்று வயது. சும்மா பலரும் சொல்வது போலன்றி, என் அம்மா உண்மையில் மூன்று வேலை செய்து தான் தினம் ஒரு நேர உணவை எம்மால் உண்ண முடிந்தது. வாடகை போன்ற இதர செலவுகள் போக, நாளைக்கு ஒரு உணவிற்கே அம்மாவின் மூன்று வேலை ஊதியம் போதியது. அம்மா கடினமாக உழைப்பதைச் சகிக்க முடியவில்லை. ஏதேனும் வேலை செய்யவேண்டும் என்று நினைத்தேன். உழைப்பதற்கான வயதில்லை என்று வேலை கிடைக்கவில்லை. ஒரு தந்தை அடையாளத்திற்காக என் மனம் ஏங்கியது. அப்போது தான் எனது சுற்றாடலில் அவர்களைக் கண்டேன். விலையுயர் கார்களில் நாகரிக உடை அணிந்து திரிந்தார்கள். பணம் பண்ண வயது பிரச்சினை இல்லை என்றார்கள். என்னைத்; துவட்டிய நான் ஏங்கிய அப்பா வெற்றிடத்தை அண்ணாக்களாக நிறைத்தார்கள். அவர்கள் கனேடிய தமிழ் வன்முறைக்குழுவினர். அவர்களால் ஏகப்பட்ட சிக்கல்களில் நான் மாட்டி, காவல்துறையால் சிறையனுப்பப்பட்டேன். தினம் ஒரு உணவிற்கு மட்டுமே காசு சரிப்பட்ட அம்மா, இல்லாத காசை எவ்வாறோ புரட்டி என்னை பெயிலில் எடுத்தார். அப்போது தான் ஒரு மாமா துணைக்கு வந்தார். என்னையும் என் அன்னையையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். பாதுகாப்பான அவரது மிசிசாகா வீட்டுச் சூழலில் வாழ்வில் முதன்முறையாகப் பயமின்றி பாதுகாப்புணர்வுடன் நான் பள்ளி சென்றுவந்தேன். என் மாமா என் இசையார்வத்தை நான் தொடர்வதற்காக தன்காசில் உபகரணங்கள் வாங்கித் தந்தார். அவ்வாறு நான் ஒலிப்பதிவு செய்த "I have a dream" ('எனக்கொரு கனவிருக்கிறது') என்ற மாட்டின் லூத்தர் கிங்கின் பாதிப்பில் உருவான ஒரு சொல்லிசைப்பாடல் எனது சமூகத்தின் பலத்த வரவேற்பைப் பெற்றது. முள்ளிவாய்க்காலிற்குச் சற்று முந்திய இந்தக் காலப்பகுதியில் எனது பாடல் மக்களிற்கு மருந்தானது. நான் பிரபலமானேன்.
 
மேடைகள் எனக்குச் சாதாரணமாகின. எவருமே கவனிக்காது கிடந்து பழகிய எனக்கு இந்த வெற்றி புதிதாக இருந்தது. நான் தலைக்கனமிக்கவனானேன். என் நண்பர்களோடு சண்டையிட்டேன். எனது காதலியைத் தூக்கியெறிந்தேன். குடித்துக் கும்மாளமிட்டேன். தலைகால் தெரியாது நடந்துகொண்டேன். என் வாழ்வு மீண்டும் சரியத் தொடங்கியது. மீண்டும் சட்டம் என்னைநோக்கிச் சாட்டை வீசியது. நான் வெறும்பயலாயப் படுத்துக் கிடந்தேன். மதியம் தாண்டி ஒரு மணிக்குப் பின் தான் தூக்கத்தால் எழுவேன். இலக்கின்றிக் கிடந்தேன். அப்போது என் அம்மா இரண்டாம் முறையாக இல்லாத பணத்தை எவ்வாறோ புரட்டினார். என்னைப் பார்த்துச் சொன்னார். இந்த உலகில் நீ பிறந்ததில் இருந்துஇந்தச் சமூகம் உன்னை மனிதனாய்ப் பார்த்தது நீ இசையோடு சேர்ந்தபோது தான். அது மட்டும் தான் உன்னிடம் உண்டு. அதைப்பற்றித் தான் நீ எழவேண்டும். வெளிக்கிடு இந்தியாவிற்கு என்று எனது தாயார் மீண்டும் என்னைத் தூக்கிவிட்டார். நான் சென்னை சென்றேன். அமீர் என்னை அடையாளங்கண்டார். இன்று ஆதிபகவனில் எனது பாடல் வருகிறது.
 
ஆனால் எனக்கினித்தலைக்கனம் வராது. எனது இசை மட்டும் அன்றி நான் ஒரு மனிதனாகவும் வளர்ந்துவிட்டேன். எனக்கு வாழ்வில் இப்போது ஒரு நம்பிக்கை தெரிகிறது. போற்றவேண்டிய விடயங்கள் புரிகின்றன. என் அன்னையின் அர்ப்பணிப்புப் புரிகிறது. கடவுளை நான் அதிகம் நம்புகிறேன். வாழ்வு இனிச் சீராகச் செல்லும் என்று தோன்றுகின்றது. என்னைப்போன்ற ஒரு தமிழன் இசையினால் பிளைக்கணும் என்றால் அது தமிழகத்தில் தான் சாத்தியம். அந்தத் தமிழகம் எனக்கு இப்போது ஒரு பாதையினைத் தந்துள்ளது"
 
ஏறத்தாள அந்த இளைஞனின் பேட்டியின் சாராம்சம் அப்படித் தான் இருந்தது. எனது மண்டையில் யாரோ சுத்தியலால் தாக்கியது போலிருந்தது. எனது தாயகம் தொடர்பில் எனது மசாட்சிக்கு எந்த உழல்தலையும் கொடுக்காதவகை எனது வாழ்வு நகர்ந்தது. முள்ளிவாய்க்காலின் பின்னரும் எனது மனசாட்சி நிம்மதியாய் உறங்கும் வகை மனிதாபிமானம் தொடர்கிறது. ஆனால் நான் வாழும் அதே மாகாணத்தில் எனக்குச் சிலமணிநேர தூரத்தில் ஒரு தமிழ்ச்சிறுவன் நாளைக்கு ஒருநேர உணவு மட்டுமே உண்ண முடிந்து பசியோடு கிடந்தான் என்ற செய்தியினை எனது காதிற்குள் சி.பி.சி அறைந்தபோது மனசு பிசைந்தது. அப்போது அந்த ஒலிப்பேளை சொன்ன ஒரு உதிரித் தகவல் மனதின் முற்புறத்திற்கு வந்தது. அந்த இளைஞன் இன்று நம்பிக்கையோடு பயணிப்பதற்குத் தென்னிந்திய திரையுலகு தான் வழி செய்தது என்பது மட்டுமன்றி, புலம்பெயர் சமூகத்தில் இரண்டாம் தலைமுறைக்குக் கூட கோடம்பாக்கம் ஒரு பற்றிக்கொள்ளக் கூடிய கிளையாய் இருக்கிறது என்பது தெரிந்தது. அந்த இளைஞனிற்கு அந்த நம்பிக்கைக் கீற்றை வழங்கிய அந்தத் திரையுலகிற்கு ஒரு நன்றி செலுத்தத் தோன்றியது. இளையறாஜா நிகழ்விற்குப் போக முடிவெடுத்தேன்.
 
சனிக்கிழமை நிகழ்விற்கு வெள்ளி காலையில் ரிக்கற் கிடைப்பது அரிது என்று தோன்றியது. தெரிந்த சிலரைத் தொடர்பு கொண்டபோது வி.வி.ஐ.பி ரிக்கற்றுக்கள் மட்டும் தான் சாத்தியம் என்றார்கள் (நிகழ்வில் ஏகப்பட்ட இருக்கைகள் சாதார ரிக்கற்றிற்குரிய இருக்ககைகள், காலியாய் இருந்தது வேறுகதை). இரண்டை வாங்கிக்கொண்டேன். இப்போது நிகழ்வால் வந்து தான் இதனை எழுதுகிறேன்.
 
எனக்கு நிகழ்வு 90 வீதம் பிடிக்கவில்லை. பாலசுப்பிரமணியத்தின் மடைதிறந்து, கார்த்திக்கின் இரு பாடல், இளையறாயாவின் சில பாடல், விவேக்கின் நிகழ்வு, இப்படி தொட்டுத்தொட்டாக ஒரு பத்துவீதம் மட்டும் பிடித்தது. பாடல்களை யார் தெரிவுசெய்தார்கள் என்று தெரியவில்லை, இளையறாஜாவைக் கூட்டிவந்து வைத்து ஏதோ கத்தினார்கள். கார்த்திக் திறமை மிக்கவர் தான், ஆனால் 'என் இனிய பொன்நிலாவே' பாடலைக் கார்த்திக் பாடியபோது எழுந்து சென்று கன்னத்தில் ரெண்டு போட்டால் என்ன என்று தோன்றியது. அன்னக்கிளி பாடலைக்கூட சித்திரா கொலைசெய்திருந்தார். வி.வி.ஐ.பி ரிற்கற் என்று காசை வாங்கி விட்டு வாங்கு போலக் கதிரை போட்டிருந்தார்கள். ஐந்து மணிக்கு நிகழ்வென்று, வாங்கில் வந்து குந்தச் செய்துவிட்டு, ஏழு மணிக்கு நிகழ்வு தொடக்கினார்கள். இளையறாஜாவால் ரசிகர்களுடன் connect பண்ண முடியவில்லை. கரகோசத்தையும் எழுந்துநின்று பாராட்டுவதையும் இரந்து பெற்றுக்கொண்டார்கள். இசை நிகழ்ச்சி பார்ப்பதற்கான பக்குவமற்ற பல பீடைகள் வந்திருந்து தண்ணியைப் போட்டுட்டு கத்தி மறைத்துக் கிடந்தார்கள். இசையை இரசிப்பதற்கான உள் உலகத்தைக் கோதி எடுக்க முடியவில்லை. அதற்கான பக்குவம் எனக்குச் சாத்தியப்படவில்லை. ஒரு இருட்டறையில் இருந்து இளையறாஜா பாடல்களை காதுக்குள் ஒலிக்கவிட்டு இந்த 7 மணிநேரத்தைச் செலவிட்டிருப்பின் மிகுந்த மகிழ்ச்சி கிடைத்திருக்கும். அதை விட்டு சொந்தக் காசில் சூனியம் வைத்து வந்தது தான் மிச்சம்.
 
ஒரு இசை நிகழ்விற்குச் சென்று வந்தால் மனது இறகாய்ப் பறக்கணும். ஆனால் இன்று இரும்பாய்க் கனக்கிறது. இத்தனை செலவில் இவர்களை அழைத்து வந்தவர்களிற்கு, நிகழ்வை எவ்வாறு சிறப்புற வடிவமைப்பது என்று சிந்திப்பதற்குத் தோன்றவில்லை என்பது பலத்த ஏமாற்றமாக இருக்கிறது. இளையறாஜாவின் எண்பதுகளின் முத்துக்களை மட்டும், அதைச் சரியாகப் பாடக்கூடியவர்கள் மூலம் பாடவைத்து, அவை பற்றிய இசைநுணுக்கங்களை இளைறாஜா வாயால் சொல்லவைத்துச் சென்றிருந்தால், இன்று பாடப்பட்டதில் அரைவாசிப்பாடல்கள் மட்டுமே பாடப்பட்டிருப்பினும் திருப்த்தி கிடைத்திருக்கும். அதைவிட்டுக், கடமைக்குக் கத்திச் சென்றார்கள்.
 
வாழ்வில் உணர்ச்சிவசப்பட்டு நான் செய்த எந்தக் காரியமும் உள்ளார்ந்த வெறுப்பையே எனக்கு இது வரை சம்பாதித்துத் தந்தன. இந்நிகழ்வு கூட உணர்ச்சிவசப்பட்டுச் செல்லணும் என்று நான் முடிவெடுத்துச் சென்று, நொந்து நூடில்சாகி வீடு வந்துசேர்ந்தது தான் மிச்சம்.

 • Sabesh, குமாரசாமி, SUNDHAL and 21 others like this


#1102906 கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல்

Posted by இசைக்கலைஞன் on 15 April 2015 - 06:40 PM

கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல்

சித்திரை 15, 2015

கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். :huh: இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். :unsure:

இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. :o

இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துகொண்ட விபரங்கள் பின்வருமாறு.

அப்பாவி இசைக்கலைஞன் வீட்டில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவெடுத்துவிட்டதால் வேறு வழியின்றி மருத்துநீர் பெறுவதற்காக கனடா கற்பக விநாயகர் கோயிலுக்குச் சென்றுள்ளார். :unsure:


templeMain.jpg


அன்று பயங்கரமான மழை கொட்டியதால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை. மழைக்கு ஒதுங்கி கட்டடத்தின் ஓரமாக சென்றுள்ளார் பாதிக்கப்பட்டவர். அந்த இடத்தில்தான் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பெண் ஒளிந்துகொண்டு இருந்துள்ளார்.

இதைக் கவனியாது, சித்தன்போக்கு சிவன் போக்கு என்று சென்று கொண்டிருந்த வாலிபரைக் கண்ட சம்பந்தப்பட்ட பெண் தனது குழந்தையை திருட வந்த திருடன் என்று நினைத்து கொலைவெறித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். :huh:

அருகில் வரும் வரையில் பொறுத்திருந்து நெஞ்சில் மூர்க்கமான ஒரு தாக்குதலை மேற்கொண்டபோது பாதிக்கப்பட்டவர் நிலைகுலைந்து என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒருகணம் விளித்துக்கொண்டு நின்றார். :blink: தாக்குதலை நடத்திய பெண் அந்தப்பக்கமாக நிலையெடுத்து, 'மோதிப்பார்க்கலாம் வரியா..' என்று தலையை ஆட்டியுள்ளார்.

சாதாரணமாக விருந்தாளி வீட்டுக்குள் நுழையவே பத்துத்தரம் யோசிக்கும் இசைக்கலைஞனால் ஊடு கட்டியெல்லாம் அடிக்க முடியுமா? :( நைசாக அந்தப்பக்கமாக தள்ளி 20 அடி சுற்றி அந்தப்பக்கமாகப் போய்விட்டார். முறுகலை தவித்துக்கொண்ட இவரது செயலை காவல்துறை பாராட்டுகிறது.

தாக்குதலுக்கு உள்ளானாலும்கூட மருத்து நீர் பெறுவதில் குறியாக இருந்த இசைக்கலைஞன் :wub: கோயிலுக்குள் சென்று (அங்கு ஏற்கனவே மருத்து நீர் எடுத்துக்கொண்டு நின்ற ஃபிகரை சைட் அடித்து வழிந்துவிட்டு :wub:) வெற்றிகரமாகத் திரும்பிவந்தார். தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய இவரின் செயலை காவல்துறை வெகுவாகப் பாராட்டுகிறது.

அதே சமயம் தாக்குதலில் ஈடுபட்ட பெண் தலைமறைவாகியுள்ளார். சந்தேகத்துக்கிடமான பெண் எவரையும் கண்டால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அண்மையில் திருட்டு வழக்கில் கைதான பெண் ஒருவரின் படம் வெளியானதால் யாழ்களத்தில் பயங்கர கலகம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு கலகம் மறுபடியும் ஏற்படுவதை ஒன்ராரியோ காவல்துறை விரும்பவில்லை. ஆகவே, சந்தேக நபரின் புகைப்படத்தை மறைத்து வெளியிடுகிறோம்.

Spoiler

 • கிருபன், குமாரசாமி, சுவைப்பிரியன் and 21 others like this


#1098286 யாழ் இணையம் - 17வது அகவை

Posted by மோகன் on 29 March 2015 - 09:04 PM

அனைவருக்கும் வணக்கம்,

தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம்! யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும்  வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம்.

யாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது எனும் செய்தியினையும் சொல்லிக் கொண்டு, வருங்காலத்திலும் அந்தவகையிலேயே யாழானது தனது பணிகளைத் தொடரும். அத்துடன்  மேலதிகமாக சில புதிய செயற்திட்டங்களையும் செய்யத் தீர்மானித்துள்ளது.

வெறுமனே கருத்துக்களுடன் நிற்காது இனி வருங்காலத்தில் செயலிலும் எம்மக்களுக்கான பொருளாதார உதவிகளைச் செய்து கொள்ள விரும்புகின்றோம். அந்த வகையில் சில திட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். யாழ் கள உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி இத்திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இது சம்பந்தமாக பல உறுப்பினர்கள் பல தடவைகள் கருத்துக்களையும் பதிவு செய்தும் உள்ளார்கள்; தவிர நேரடியாக கேட்டும் இருக்கின்றார்கள்.
 
எம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யாழின் இணையத்தின் திட்டங்களை யாழ் உறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட முடியும்.

நிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி.

எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம்.

நன்றி.
யாழ் இணைய நிர்வாகம்


 • shanthy, குமாரசாமி, ஈழப்பிரியன் and 21 others like this


#1026060 மரணத்தின் வாசனை ~ மலேசிய விமானம்

Posted by Sasi_varnam on 18 July 2014 - 08:53 AM

கணவன் கடிந்து கொண்டான் மனைவியை 
எத்தனை தடவை சொன்னேன்,
அந்த கறுப்புப் பை கவனம் என்று  
மனைவி கவலைப்பட்டாள்,
அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே...
 
காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் 
அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள்
இன்னும் 10 நாட்கள்  கடற்கரையில்
உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ...
 
இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு
தொலைபேசி செய்தியில் மூழ்கிப்  போனான்
நாளைய நாள் கண் முன்னே நடமாடியது,
அலுவலகத்தில் முக்கிய மூன்று  சந்திப்பு,
நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும்
அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ...     
 
முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார்,
நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் 
மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்,
பேரக் குழந்தைகளை கவனிப்பதே  அவள் வேலை
அடுத்த வாரம்  அவளை முருகனிடம் அழைத்துப் போகவேணும்,
உடைந்த மூக்குத்தியும் மாற்றவேணும் ...
  
பாதிரியார் வந்தவரைய்  பார்த்து முறுவலித்தார்,
கையில் இருந்த பைபிளில் தொலைந்து போனார் 
26 அநாதை சிறுவர்கள்,  யார் யார்க்கு என்ன தேசமோ  
கவலையானார், இது பெரும் பொறுப்பு தான்   
நல்லபடியாக எல்லாம் அமைய வேணும்
யேசுவே, கண் கலங்க மனதுக்குள் மன்றாடினார்...
 
சிறுவன் கணணி விளையாட்டில் சாப்பிட மறுத்தான்,
அன்னை சலித்துக்கொண்டாள் 
அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன்,
பார் சிறுவனுக்கு பயம் காட்டினாள்
அப்பா சிறுவனிடம் பாசமாக கெஞ்சினார்,
முதலில் சாப்பாடு அதன் பிறகு தான் விளையாட்டு ...
 
உயரமாய் தெரிந்தவர்
சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார்,
சாப்பாடு சுவையாய்  இல்லை நொந்து கொண்டார்
எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார்,
என்ன அழகு இவள் 24 இருப்பாளா ?
பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி,
இவளை போலதான் இருப்பாள்,
பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ...
 
யாரோ ஒருத்தி தலைக்கு மேல் இருந்த
பெட்டியை தட்டி தடவி இறக்கிக்கொண்டு இருந்தாள் 
அதை இங்கு தான் வைத்தேனா,
இல்லை பெரிய பெட்டியில் போட்டேனா,
தலையை சொரிந்தாள்,
போன மாதம் வாங்கிய புகைப்பட கருவி,
கொஞ்சம் கவலையானாள்,
எங்கும் போகாது காலையில் தேடுவோம் நினைத்துக்கொண்டாள்...
 
கைக் குழந்தை சிணுங்கிற்று,
அம்மா புட்டியில் பாலை ஊற்றி வாயில் திணித்தாள் 
குழந்தை அமிர்தம் கண்டது,
அன்னையை பார்த்து கண்ணை சிமிட்டியது,
பால் வெளியே வழிந்தது
அன்னை குழந்தை முகத்தை கொஞ்சினால், தடவினாள் ,
கனவுகளோடு சஞ்சரித்து  தூங்கிப் போனார்கள்.. 
 
அழகிய அந்த பெண்
கள்ளம்  கபடம் இல்லாமல் சிரித்தாள்,  
ஓடி ஓடி உபசரித்தாள், சுத்தம் செய்தாள் 
குழந்தைகளுக்கு பரிசு தந்தாள்,
முதியவருக்கு போர்வை தந்தாள்,
விளக்கை அணைத்து வணக்கம் சொன்னாள்,
இன்னும் ஏதும் வேணுமா என்று திரும்ப கேட்டாள்,
அயர்ச்சியோடு பணிவிடை செய்தாள் ..
 
ஒருவன் வக்கீல், ஒருவன் நோயாளி,
ஒருவன் ஆசிரியன், ஒருவன் படைப்பாளி...
ஒருத்தி மணப் பெண், ஒருத்தி கர்ப்பிணி,
ஒருத்தி சினிமா பிரபலம், ஒருத்தி மூதாட்டி ...
அவர் அவர் வாழ்க்கை, இயந்திரமாய் 
கரையும் பொழுதுகள், எல்லோரும் நல்லவரே ...
 
எங்கோ ஒரு தேசம், இருள் சூழ்ந்த நேரம்,  
தூரத்தில் இரைச்சல், இவன் தான் முதலில் அவதானித்தான் 
சிறிதாய் வெளிச்சம், அதுவாய் இருக்குமோ,
பரபரப்பானான், செய்தி அனுப்பினான்
அங்கே தாடியோடு இருந்தவன் சுருட்டை பற்ற வைத்தான்,
உள்ளே இழுத்து வெளியே புகையை விட்டான்
 
உனக்கு பாடம் நான் போதிப்பேன் இன்று,
மனதுக்குள் கருவிக்கொண்டான், 
எழுந்து சென்று கட்டளை இட்டான்,
இயந்திரங்கள் முடுக்கப்பட்டன, 
300 கனவுகளை  சுமந்து வந்த மலேசிய பட்சி நான் ..
சின்னத் திரையில் தெளிவாய் முடக்கப்பட்டேன்     
 
உஷ்ணம் உணரப்பட ஒளிக் கீற்றுகள் சீரிப்பாய
மரணத்தின் வாசனை மண்ணை தொட்டது,          
அனர்த்தம் நிகழ்ந்தது, அனைத்தும் அதிர்ந்தது
அவள், அவன், பெரியவர், பாதிரி, குழந்தை, காதலன் ....
எல்லோருக்கும் ஒரே புள்ளியில் அஸ்தமனம்,
நான் புள்ளியாய் சிறு புள்ளியாய் பஸ்மம் ஆகிறேன்
மீண்டும் ஒருமுறை செய்தியாய் மாறுகிறேன்..
"Missile downed Malaysia Airlines"  CNN, BBC அலறுகிறது!!
 

 • குமாரசாமி, putthan, இசைக்கலைஞன் and 21 others like this


#937720 நான் பழகிய யாழ் உறவுகள்

Posted by பையன்26 on 19 September 2013 - 08:39 AM

வணக்கம் உறவுகளே..2008ம் ஆண்டில் இருந்து  இன்று வர நான் யாழில் பழகிய உறவுகளை பற்றி எழுதாலம் என்று இருக்கிறேன்...எழுதுபதற்கானநேரம் இப்போது இருக்கு ஆனா படியால் பழகிய உறவுகளை பற்றி எழுதுறேன்...

 


n1ux.jpg

 

 

(1)

மச்சான்  கரும்பு  மாப்பிளை கலைஞன்  :)  

 

யாழில் நான் மனம் விட்டு பழகிய உறவுகளில் மச்சானும் ஒரு ஆள்...மச்சானின் பலஆக்கங்களை கண்டு வியந்தது உண்டு..அவரிடம் பல திறமைகள் இருக்கு...தெரியாததை மச்சானிடம் கேட்டால் அன்பாய் விளக்கமாய் பதில் சொல்லக் கூடியவர்..மச்சானிடம் உதவி கேட்டால் கூட இல்லை என்று சொல்ல மாட்டார்..2010ம் ஆண்டு சின்ன ஒரு உதவி இணைய தளம் மூலமாக்க தேவை பட்டிச்சு மச்சானை தொடர்பு கொண்டேன்  இரண்டு  நாளில் செய்து தந்தார்..மச்சானுடன் விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒரு தருனம்...எந்த எந்த வீரருக்கு நல்ல எதிர் காலம் இருக்கு என்று கணிப்பிடுவதில் மச்சான் கிள்ளாடி..தொலை பேசியில் கதைக்கேக்க கூட புத்திமதி தான் கூட சொல்லிட்டு இருப்பார். வார வருடம் கனடா போர ஜடியா இருக்கு அப்படி போனால் மச்சானை கண்டிப்பாய் சந்திச்சிட்டு தான் வருவேன்...

 

 

(2)

 

சுண்டல்

 

மூன்று வருடத்துக்கு முதல் என்ற தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திச்சு யார் என்று பார்த்தால் நம்ம சுண்டல்..மச்சி நான் சுண்டல் கதைக்கிறேன்டா நீஎனக்கு ஒரு உதவி செய்யனும் என்று சொன்னான்..சரி சொல்லு மச்சி என்ன உதவி நான் உனக்கு செய்யனும் என்று கேட்டேன் ( சுண்டலும் உதவியை சொன்னான் நீ இதை தான் செய்யனும் என்று..அவன் சொல்ல என்ற வீடு ஒருக்கா  நில நடக்கம் வந்தது நடுங்கினபோல உனந்தேன்.அந்த கதையோடை சுண்டலுக்கு இன்னொரு பெயரும் வைச்சாச்சு முட்டை என்று  :D அதிலை இருந்து இரண்டு பேரும் அலட்ட வெளிக்கிட்டது தான் இன்று வர தொடருது எங்கள் நற்பு இடைக்கிடை  ஸ்கைப்பில கதைப்போம் சுகம் விசாரிப்போம்...சுண்டல் பார்த்தது கேட்டது ரசித்தது என்ற திரியில் ஒரு   வசனம் எழுதியிருந்தார் அதை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை அந்த வசனம் இதோ ( டாக்டர் டாக்டர்  என்ற கணவர் பத்து லீற்றர் பெற்றோல் குடித்து விட்டார் டாக்டர் இப்ப  என்ன செய்யலாம் டாக்டர் என்று..அப்ப டாக்கடர் சொல்லுவார் உங்கட கணவர பத்து கிலோ மீற்றர் ஓட சொல்லுங்கோ எல்லாம் சரியா வரும் என்று )சுண்டல் மச்சியிடமும் கதை கவிதை என்று எழுதுற திறமைகள் அதிகம் இருக்கு வாழ்த்துக்கள் மச்சி

 

 

(3)

 

ஜமுனா

 

ஜமுனா என்றால் யாழில் தெரியாத் ஆட்கள் இருக்க மாட்டினம்...ஜம்மு பேபி யாழிழ் எழுதினது ஏராளம்...கவிதை படக் கதை நாங்களும் கிரிக்கெட் விளையாடப் போறோம் என்று நகைச்சுவையாய் எழுதி யாழ் உறவுகளை சிரிக்க வைச்ச பெருமை ஜமுனாவையே சேரும்...நான் யாழில் இணைந்த காலத்தில் ஜமுனா கூட‌  ஜொல்லு விட்டு ஆளை ஆள் கிண்டல் அடிச்சசு பழகினது மறக்க முடியாத தருனம் அது..ஏதோ தெரியல இரண்டு பேருக்கும் எல்லா விசயத்திலும் நல்லா ஒத்துப் போக்கும்..யாழுக்கு வெளியில் நாங்கள் இரண்டு பெரும் நல்ல நண்பர்கள்...ஜமுனா கூட சேர்ந்து செய்த குழப்படி ஏராளம் அந்த நாட்களில் ...நான் யாழிழ் மனம் விட்டு பழகிய உறவுகளில் ஜமுனாவும் ஒரு ஆள்.... அப்ப நான் வரட்டா  :lol: 

 

(4)

குமாரசாமி தாத்தா

 

குமாரசாமி தாத்தா யாழில் இருக்கும் நல்ல உறவுகளில் தாத்தவும் ஒரு ஆள்...குமாரசாமி தாத்தாவிடம் இருந்து தான் நிறைய பஞ்சு டையிலாக் கற்றுக் கொண்ட்டேன்...எதையும் பயப்பிடாமல் துனிந்து எழுதக் கூடிய ஒரு உறவு.....நானும் ஜமுனாவும் ஒரு திரியில் சும்மா அலட்டி புலம்பி எழுதி கொண்டு இருக்க..தாத்தா வந்து எழுதினார் வைரவருக்கு நாய் வாய்த்த மாதிரி நீங்களும் வந்து வாச்சியல் என்று...அதிலை ஆரம்பிச்ச எங்கள் நற்பு இன்றும் தொடருது....கால் பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர்..நான் சந்திக்க விரும்பும் உறவுகளில் தாத்தாவும் ஒரு ஆள்..அடுத்த முறை ஜெர்மன் வரும் போது உங்களை கண்டிப்பாய் சந்திப்பேன் தாத்தா......

 

 

(5)

தமிழ் சிறி அண்ணா

 

 

யாழில் புதியவர் முதல் பழையவர் வர தமிழ் சிறி அண்ணாவை தெரியாத ஆட்கள் இருக்க மாட்டினம்...யாழின் தூண் என்று கூட சொல்லலாம் இவர‌ .....கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு ஆள்...யாழிழ் அறிமுகம் ஆகும் உறவுகளை அன்பாய் வர வேற்பார்.....கருணாநிதியை பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேணும் என்றால் தமிழ் சிறி அண்ணாவை தொடர்பு கொண்டால் விளக்கமாய் அந்த மாதிரி சொல்லுவார்...ஒரு திரியில் கருணாநிதியை பற்றி எழுதி இருந்தார் அதை வாசித்து வியந்து போனேன்...தமிழ் சிறி அண்ணாவும் கால் பந்து விளையாட்டு மேல் தீவீர ஆர்வம் கொண்டவர்...2010 பீபா உலக கோப்பை கால் பந்து போட்டியில் சிறி அண்ணா கூட விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒன்று....யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் தமிழ் சிறி அண்ணாவும் ஒரு ஆள்

 

 

(6)

 

வாத்தியார்

 

வாத்தியார் அண்ணா கூட விளையாட்டு திரியில் தான் என் கருத்தாடல் ஆரம்பம் மானது..வாத்தியார் மிகவும் அமைதியான ஒரு உறவு.....கூட அலட்டி எழுத மாட்டார்..மற்றவர்களை சீன்டி பார்ப்பதும் இல்லை.....எப்பவும் வெளிப்படை பேச்சு..மற்ற உறவுகளை கவனிப்பதிலும் வாத்தியார் அந்த மாதிரி..உறவுகள் 5000 அல்லது 10000 ஆயிரம் கருத்து எழுதி முடித்தால்..அவர்களுக்கு புது திரி திறந்து வாழ்த்து சொல்லி மற்றவர்களையும் வாழ்த்த செய்பவர்....வாத்தியாரும் ஒரு சில ஆக்கங்களை யாழிழ் எழுதி இருந்தார்..அதிலும் கோயில் சம்மந்தமாக்க எழுதி இருந்தார்....அடுத்த வருடம் நடக்க இருக்கும் பீபா உலக கோப்பை விளையாட்டில் யாழிழ் வாத்தியின் ஆதீக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்....மற்ற உறவுகளைப் போல் வாத்தியும் நல்ல ஒரு உறவு

 

 

(7)

 

டங்கு இசைக்கலைஞன்

 

இசைக்கலைஞன் அண்ணா..யாழில்யார் தன்னும் இவருடன் சீன்டி பார்த்தால் கூட கோவப் படமாட்டார்..பொறுமையா பதில் அளிப்பார்...நான் கவனித்த மட்டில் இவர சீன்டிப் பார்க்கிற ஆக்கள் எல்லாம் 50 கருத்துக்கு உள்ளை எழுதின ஆட்கள் தான் இவர கூட சீன்டி பார்ப்பது :D ...இசைக்கலைஞன் அண்ணாவுக்கு யாழ்ழுக்கு வெளியிலும் ஒரு சில ரசிகர்கள் இருக்கினம் இவரின் எழுத்தை விரும்பி வாசிக்க...என்ர நெருங்கிய உறவு சொன்னது இது தான் இசைக்கலைஞன் அண்ணா நல்ல ஒரு கருத்தாளர் என்று (வாழ்த்துக்கள் அண்ணா... ) யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் இசைக்கலைஞன் அண்ணாவும் ஒரு ஆள்.....

 

 

 

(8)

 

தமிழ் அரசு

 

தமிழ் அரசு அண்ணா...யாழின் புயல் என்று கூட இவர சொல்லலாம்...தீவிர ஈழ ஆதரவாளர்..ஒரு தருடனும் முரன் படுவது இல்லை தானும் தன்ர பாடும்...இவர் யாழிற்கு ஆற்றும் பணி பெரியது...உறவுகளை காணாட்டி கூட..காணவில்லை திரிக்கு சென்றும் ஆக்களை தேடுவார்..தெரியாததை கேட்டால் பொருமையா சொல்லியும் குடுப்பார்....

 

 

 

(9)

 

நிலாமதி

 

 

நிலாமதி அக்கா...இந்த அக்காவை பற்றி கூட எழுதலாம்...எல்லாருடனும் நல்ல மாதிரி பழகும் ஒரு உறவு...ஆரம்ப காலத்தில் தனி மடலில் சுகம் விசாரிப்பா...நான் எழுத்துப் பிழை விட்டு எழுதும் தமிழை பார்த்து கவலைப் பட்ட ஆட்களில் நிலா அக்காவும் ஒரு ஆள்....ஒழுங்காய் எழுதனும் என்று ஊக்கம் தருவா.நான் அவாக்கு வைச்ச பெயர் டீச்சர் ….நிலா அக்காவை இப்ப பெரிதாக்க யாழிழ் காணக் கிடைப்பது இல்லை...யாழிழ் நான் எழுதின கதையை அடிக்கடி ஆரம்பத்தில் நினைவு படுத்துவா...நிலாக்க கூட கருத்தாடின அந்த நாட்கள் மிகவும் சந்தோசமான நாட்கள்.....

 

 

 

(10)

 

நெடுங்கால போவான்

 

நெடுங்ஸ் அண்ணா...யாழின் அறிவாளி என்று கூட இவர சொல்லலாம்...நெடுங்ஸ் அண்ணாவிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கு...இவரும் தீவிர ஈழ ஆதரவாளர்...இவருடன் எதிர் அணியினர் கருத்து எழுதி ஜெயிக்கிறது ரொம்ப கஸ்ரம்....நல்ல ஒரு எழுத்தாளர்..யாழிழ் நான் அதிக பச்சை குத்தினது என்றால் அது நெடுங்ஸ் அண்ணாவின் கருத்துக்கு தான்...ஈழ விசயத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் நல்லா ஒத்துப் போக்கும்...நெடுங்ஸ் அண்ணாவுக்கு விஞ்ஞான ரீதியிலா பலவிடையங்கள் தெரியும் அதிலும் நாசா சம்மந்தமாய்.. உங்களுக்கு நல்ல ஒரு எதிர் காலம் இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்.... :)  :icon_idea: 

 

 

தொடரும்

 
 
 
எழுத்துப் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்  :D 
 

 

 

 


 • குமாரசாமி, தயா, SUNDHAL and 20 others like this


#752860 சிமிக்கி

Posted by sathiri on 20 April 2012 - 09:02 PM

சிமிக்கி
Posted Image

மனோகரா தியேட்டர் முதலாவது வகுப்பு இருக்கையில் நாதனும் சாவித்திரியும் படத்தில் மூழ்கிப்போருந்தனர்.மடமடக்கும் பட்டுச்சேலையில் அவளும் . வெள்ளைச் சட்டை வெள்ளைக்காற்சட்டையில் அவனும்.அவர்களை பார்த்ததுமே புதிதாய் கலியாணமானவர்கள் என்று சொல்லிவிடலாம்.வெள்ளி விழா படத்தில் ஜெமினிகணேசனை ஒட்டி உரசியபடி ஜெயந்தி காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான்நான் பேசுவேன் என்கிற பாடலை பாடிக்கொண்டிருந்தார். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் அனைவருமே சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். நாதனின் விரல்கள் சாவித்திரியின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொள்ள திரை வெளிச்சத்தில் நாணத்துடன் நாதனை திரும்பிபிப்பார்தாள். நீரும் அசல் அந்த கீரோயின் மாதிரித்தான் இருக்கிறீர் யாரோ புது ஆள். பெயரை எழுத்தோட்டத்திலை கவனிக்கேல்லை வாற ஞாயிறு வந்து படத்தை திரும்ப பாக்கேக்குள்ளை கீரோயினின்ரை பேரை கவனிக்கவேணும். அதிலை அவா போட்டிருக்கிற மாதிரி ஒரு சிமிக்கி உமக்கும் போட்டால் அந்த கீறோயின் மாதிரியே இருப்பீர் எண்டு சாவித்திரியின் காதில் கிசுகிசுத்தான்.படம் முடிந்து வெளியே வந்து சைக்கிளில் சாவித்திரியைஏற்றிக்கொண்டு வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கும் போது அவனது மனம் முழுதும் எப்படியாவது அவளிற்கு ஒரு சோடி சிமிக்கி வாங்கி குடுப்பது என்கிற எண்ணம் மட்டும்தான் மனதில் நிறைந்திருந்தது சாவித்திரியோ காதோடுதான் பாடலை மனதிற்குள் முணு முணுத்தபடியே இருந்தாள்.

நாதன் தொலைத் தொடர்பு இலாகாவில் சாதாரண ஊழியன். சாவித்திரியை கோயிலில் அவனது அம்மா காட்டியதுமே பிடித்துபோய் திருமணம் செய்து கொண்டான். இருவர்களது குடும்பங்களும் நடுத்தர குடும்பங்கள்தான். நாதன் குடும்பத்தில் ஒரேயொருத்தன் என்பதால் அவனது வீட்டிலேயே சாவித்திரியோடு குடும்பம் நடாத்தத் தொடங்கியிருந்தான். நாலைந்து தடைவைகள் வெள்ளி விழா படத்தை அவர்கள் பார்த்து முடித்துவிட்டதொரு நாளிள் வேலை முடிந்து வீட்டிற்கு மகிழ்ச்சியோடு வந்த நாதன் சாவித்திரியை தன் தாய் தந்தைக்கு தெரியாமல் இரகசியமாக அறைக்குள் அழைத்தவன். அவளது கண்ணை மூடச்சொல்லி கைகளில் சிவப்பு ரிசு பேப்பரில் சுற்றியதொரு சிறிய பொட்டலத்தை வைத்தான். கண்களை திறந்த சாவித்திரியின் கண்கள் ஆச்சரியத்தோடு ஆனந்தக் கண்ணீரால் கசிந்தது. அவளது கைகளில் ஒரு சோடி சிமிக்கி மின்னியது.அவளது காதில் இருந்த வழையங்களை கழற்றிவிட்டு சிமிக்கியை போட்டு விட்டவன் நீர் இப்ப அசல் அந்த கதாநாயகிமாதிரியே இருக்கிறீர் எங்கை ஒருக்கா அந்த பாட்டை பாடுமன் என்றதும். வெட்கத்தில் குனிந்த சாவித்திரியின் கன்னத்தின் அருகே முகத்தை கொண்டு போனதுமே. கெதியிலை அப்பா ஆகப்போறார் இன்னும் ஆசையைப்பார் என்று வயிற்றை தடவிக்காட்டினாள். அவன் கன்னத்திற்கு கொடுக்கப்போன முத்தத்தை அப்படியே இறக்கி அவளது வயிற்றில் கொடுத்துவிட்டு இப்ப இரண்டுபேருக்கும் கணக்கு தீர்த்தாச்சு என்று சிரித்தான்.
இண்டைக்கு நல்லம்மா கிழவி என்ரை வயித்தையும் நான் நடக்கிறதையும் பாத்து ஆம்பிளை பிள்ளைதான் எண்டு சொன்னவா.

உண்மையாவே??நல்லம்மா கிழவி சொன்னால் அரக்காது என்றபடி மீண்டும் அவளது கன்னத்தை நோக்கி முகத்தை கொண்டு போகும் பொழுது ..டேய் தம்பி வேலையாலை வந்ததும் சாப்பிடாமல் உங்கை என்னடா செய்யிறாய் என்கிற அவனது அம்மாவின் குரலை கேட்டதும் அவசரமாய் உடுப்பை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.


0000000000000000000000

ஒவ்வொரு இரவிலும் அவனது அணைப்பில் இருக்கும் சாவித்திரியின் சிமிக்கியை அவன் சுண்டி விழையாடுவததோடு அந்த பாடலை ஒருக்கால் பாடச்சொல்லி கேட்பதும் அவளும் இரண்டொரு வரிகளை முணுமுணுப்பதும் அவனிற்கு ஒரு பழக்கமாகிப் போய் விட்டிருந்தது கால ஓட்டங்கள் அவர்களிற்கு ஒரு மகனையும் மகளையும் பிள்ளைகளாக்கி மகிழ்வை கொடுத்ததோடு அவனது தாய் தந்தையரின் மரணங்களும் இயற்கையோடு கரைந்து போய்விட்டிருந்தது. நாட்டுப்பிரச்சனையில்அவனதுவேலையும்பறிபோயிருந்தாலும்.சிறிதளவுஓய்வூதியப்பணம் கிடைத்துக்கொண்டிருந்தது..அளவான வருமானம் அழகான குடும்பம். அன்பான மனைவி சாராசரி மனிதருக்கு இருக்கவேண்டிய அனைத்தும் இருந்தாலும். நாட்டின் அசாதரண சூழலும் அரசியலும் அவர்களையும் அவ்வப்பொழுது சீண்டத் தவறியதில்லை.தொண்ணூறுகளின் ஆரம்பம். பிள்ளை பிடி இராணுவத்திடமிருந்து பிள்ளையை காப்பாற்ற கையிலிருந்த பணத்தோடு நகைகளையும் அடைவு வைத்து மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பதினெட்டு வருடங்களிற்கு பின்னர் முதன் முதலாக சாவித்திரியின் சிமிக்கியும் கழன்று அடைவு கடைக்குள் போயிருந்தது. அவளிற்கு வேறு எதுவும் பேட விருப்பம் இல்லததால் வேப்பங் குச்சியை முறித்து காது ஓட்டையில் செருகிவிட்டிருந்தாள்..நாதனிற்கும் சிமிக்கி இல்லாத சாவித்திரியின் முகத்தை பார்க்கவே அந்தரமாக இருந்தது. மகன் வெளிநாட்டிலை இருந்து காசு அனுப்பினதும் முதல் வேலையா நகையளை மீட்கலாம். இல்லாட்டி நான் சிமிக்கியை மட்டுமாவது எப்பிடியும் மீட்டுத் தருவன் என்று அவள் மனதை தேற்றியபடியிருந்தார். அதே போல் பிரான்ஸ் வந்து சேர்ந்துவிட்ட மகன் பல மாதங்களின் பின்னர் அனுப்பிய பணத்தில் சிமிக்கி மீண்டதும்தான் சாவித்திரியின் முகத்தில் மகிழ்ச்சி முழுவதுமாய் மீண்டிருந்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வோடை மகளும் குமராகிவிட்ட நிலையில் வன்னிக்குள் புகுந்துவிட்டிருந்தவர்கள். உடனடி செலவுகளிற்காக நகைகள் அடைவிற்கு போனாலும் சாவித்திரி சிமிக்கியை மட்டும் கழற்றவேயில்லை.அதே நேரம் மகள் இயக்கத்துக்கு ஓடிடுவாளோ எண்டிற பயத்திலை மகனை நச்சரிச்சு அவளையும் ஒரு மாதிரி இலண்டனில் கட்டிக்குடுத்து விட்டிருந்தார்கள்.காலப்போக்கில் வன்னிக்குள்ளேயே புலிகளின் நிருவாகக் கட்டமைப்பில் நீதி நிருவாகத் துறையில் நாதனிற்கு பதிவாளராக வேலையும் கிடைத்துவிட வன்னியிலேயே தங்கிவிட்டிருந்தனர்.இறுதி யுத்தத்தில் பலஇலட்சம் மக்களோடு மக்களாக அவர்களும் மணிக்பாம் முகாமில் முடங்கிப் போனவர்கள். பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குகூட கையில் பணமேதும் இல்லாததால் மீண்டும் சிமிக்கியை கழற்றி அம்மானின் ஆள் எண்டவனிடம் குடுத்து கொஞ்சப்பணம் வாங்கி மகனுடன் கதைத்து உண்டியலில் காசும் எடுத்து வெளியே வந்த பிறகு அம்மானின் ஆளை தேடினால் காணக்கிடைக்கவில்லை. சிமிக்கி போன கவலையில் மீண்டும் சாவித்திரியன் காதுகளில் வேப்பங்குச்சி புகுந்து கொண்டது. கொழும்பில் தங்கியிருந்தவர்களிற்கு அவசர அவசரமாக ஸ்பொன்சர் வேலைகள் நடந்தது.

ஆனால் நாதன் மகனிடமும் சாவித்திரி மகளிடமும் போய் விட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் தாங்கள் தனித்தனி தீவுகளிற்குள் தூக்கி வீசப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். தொலைபேசியில் மட்டுமே நலம் விசாரிப்புக்கள். ஒருநாள் சாவித்திரி கணவனிடம் சாதாரணமாய் சாப்பிட்டியளோ என்று தொலைபேசியில் கேட்டதற்கு. என்னத்தை எதை சாப்பிட்டாலும் வைக்கலை சாப்பிட்டமாதிரிக் கிடக்கு ருசியே இல்லையெண்டு சொல்லப்போக அது மருமகளின் காதில் விழுந்து அதை அவள் அழுதழுது என்ரை சாப்பாடு சரியில்லையாம் எண்டு மாமா மாமிட்டை சொல்லுறார். ஏதோ என்னாலை முடிஞ்சது இவ்வளவுதான் எண்டு கணவனிடம் சொல்ல அது பெரிய பிரச்சனையாகிப் போயிருந்தது. அன்றிரவு மகன் நாதனிற்கு வெளிநாடு ஜஸ் சாப்பட்டு வகை பற்றி பெரியதொரு விரிவுரையே நடத்தியதோடு உங்களிற்கு சிகரற் வாங்கித்தாறன். குடிக்க பியர் வாங்கி அடிக்கி வைச்சிருக்கிறன். வெத்திலை வாங்கி போட காசும் தாறன் இதைவிட வாழக்கையிலை வேறை என்ன வேணும் இனிமேல் மருமகளை குறை சொல்லாதையுங்கோ என்று முடித்திருந்தான். அதற்கு பிறகு நாதனும் பேச்சை குறைத்துக் கொண்டார். தமிழ் அதிகம் தெரியாத பேரப்பிள்ளையும் பள்ளிக்கூடம் போய்விட்டால் தனியே தொலைக்காட்சிதான் பொழுது போக்கு அதுவும் நாள்செல்ல வெறுத்துப் போய்விட கொஞ்சம் வெய்யிலடித்தால் வெளியில் இறங்கி உலாவுவார். சாவித்திரிக்கு தொலைக்காட்சி மட்டுமே தஞ்சமாகிப் போனது. மகள் எவ்வளவு நச்சரித்தும் காதில் தோடு போட மறுத்துவிட்டாள். எங்கையாவது வெளியில் போகும் போது மட்டும் மானம் மரியாதைக்காக மகள் தருவதை போடுபவர் வீட்டிற்கு வந்ததும் கழற்றி குடுத்துவிடுவார் மகளும் காரணம் கேட்பதில்லை சாவித்திரியும் சொல்வதில்லை.

00000000000000000000000
ஒரு வருடத்தில் நாதனிற்கு பிரான்சின் விசா கிடைத்துவிட மகன் குடும்பத்தோடு மகளிடம் போயிருந்தார். மனைவியை கண்ட அவரது மகிழ்ச்சி அவளின் காதுகளை பார்த்ததுமே மறைந்து போனது.ஆனால் அவரும் ஏதும் மனைவியிடம் கேட்கவில்லை. பிரான்சிற்கு திரும்பியதும் ஒரு முடிவு செய்திருந்தார். தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள பகுதியான லா சப்பல் பகுதில் ஒவ்வொரு கடையாக ஏறி வேலை தேடத் தொங்கியிருந்தார். அவரின் வயதை பார்த்து எல்லாருமே தயங்கினாலும் ஒரு கடைக்காரன் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலம் சாமான் அடுக்கிற வேலை. சம்பளம் மணித்தியாலத்துக்கு ஏழு யுரோ .சம்பளம் பதிய மாட்டன் விரும்பினால் செய்யலாமெண்டான். நாதனுக்கும் கிடைத்தவரை லாபம். அடுத்தநாளே பகல் நகைக்கடை கண்ணாடிகளிற்குள்ளால் கண்களை மேயவிடத் தொடங்கியிருந்தார்.
மகனிற்கும் தான் வேலைக்கு போறது தெரியாமலிருக்க தெரிஞ்ச சினேதன் ஒருதன் அம்பிட்டிருக்கிறான் லா சப்பல் பக்கம் போய் அவனோடை கதைச்சிட்டு வாறனான் என்று கதைவிட்டிருந்தார்.

ஒரு மாதம் போனதும் ராயூ யுவர்லசின் கதைவை தள்ளிக்கொண்டு உள்ளை புகுந்தவர் தம்பி எனக்கொரு சிமிக்கி வேணும் எண்டார். கடைக்காரனும் இருந்த சிமிக்கி வகை எல்லாத்தையும் அவர் முன் பரப்பினான். இதன்ன ஒண்டும் சரியில்லையெண்டு விட்டு பக்கத்திலிருந்த மோகன் .தங்கமாளிகை என்று பாரிசில் இருந்த எல்லாக்கடையும் ஏறி இறங்கிவிட்டார் அவர் தேடியமாதிரி சிமிக்கி எங்கையும் இல்லை.திரும்பவும் ராயூ யுவர்லசிற்கு நுளைந்தவரிடம் என்ன ஜயா சிமிக்கி கிடைச்சதோ?? என்றான் கடைக்காறன்.என்னத்தை குட்டி குட்டி சிமிக்கியள்தான் புது டிசைன் எண்டு காட்டுறாங்கள். தம்பி நான் சொல்லுறமாதிரி செய்து தருவியோ??
தாராளமா நீங்கள் காசை தாறியள் அதுக்கேற்றமாதிரி செய்து பொருளை தருவம்.
சரி ஒரு பேப்பரும் பேனையும் தாரும். என்றதும் நீட்டிய பேப்பரில் கண்ணாடியை சரிசெய்து விட்டு மெதுவாக நடுங்கும் கைகளால் சிமிக்கியை கீறத் தொடங்குகிறார் வாடிவா பாரும் தம்பி தோடு இப்பிடி வட்டமாயிருக்கவேணும்.கல்லு வைச்சது கீழை சிமிக்கி 5 கல்லு பிறகு 7 கல்லு பிறகு 9 கல்லு வைக்கவேணும்.
கீறி முடித்த சிமிக்கியை பாத்த கடைக்காரன் இதென்ன கர்ணனின்ரை குண்டல சைசிலை கீறியிருக்கிறியள். கோழிக்கரப்பு மாதிரி இருக்கு இப்ப இந்த சைசிலை ஒருத்தரும் போடுறேல்லை ஜயா.
தம்பி உம்மாலை முடியுமோ முடியாதோ??

எனக்கென்ன ஆனால் இந்த அளவுக்கு இதே டிசைனிலை செய்யிறதெண்டால் ஆயிரத்து இருநூறாவது ஆகும் பவுண் விலை தெரியும்தானே?

உமக்குஅந்த கவலை உமக்கு வேண்டாம்.

சரி ஜயா அட்வான்ஸ் பாதி தந்தால் பவுணை வாங்கி பொருளை செய்யத் தொடங்கலாம்.
தம்பி இந்த மாத கடைசியிலை கொண்டந்து தருவன். பிறகு செய்யத் தொடங்கும் விடை பெற்றார்.
அவரும் அட்வான்ஸ் குடுத்து சிமிக்கி செய்யத் சொல்லி எல்லாம் நல்லாய் போய்க்கொண்டிருந்த ஒருநாள் கடையில் சாமான் அடுக்கிக் கொண்டிருந்த நாதன் நிமிர்ந்து பார்த்து திடுக்கிட்டு போனார்.
வீட்டுக்கு பக்கத்திலை தமிழ் கடை இருக்க இஞ்சை என்னத்திற்கு வந்தவள் என்று அவர் யோசித்து முடிப்பதற்குள் மருமகள் அவரை பார்த்து விட்டு மருதாணி பவுடரை எடுத்துக்கொண்டு போய் கடைக்காரரிடம் காசு குடுக்கும் பொழுது அந்த ஜயா கனநாளய் இஞ்சை வேலை செய்யிறாரோ ??எண்டதும் கடைக்காரரும் வஞ்சமிலலாமல். இப்பதான் ஒரு மூண்டு மாதமாய் நல்ல மனிசன். பாவம் பிள்ளையள் அவரை கவனிக்கிறேல்லை போலை அதுதான் இந்த வயதிலையும் வேலை செய்யிறார் எண்டொரு மேலதிக தகவலையும் சொல்லி வைத்தான்.

000000000000000000000000
இண்டைக்கு வீட்டிலை சுனாமி அடிக்கப் போகுது என்று நினைத்தபடியே வீட்டிற்குள் நுளைந்த நாதனிடம் அப்பா உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும். எண்டதும் மருமகளும் பேரனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்துவிட்டாள். கடைக்காரன் தான் உங்கடை சினேதனோ என தொடங்கியவன் மானம் போகுது மரியாதை போகுது. என்ன குறை விட்டம். சாப்பாடா?? சிகரற்றரா?? பியரா?? வெத்திலையா??உடுப்பா??அடுக்கிக் கொண்டே போனான். நாதனின் மௌனம் மட்டுமே பதிலானது. கோபத்தில் லண்டனிற்கு போனடித்து சத்மாய் நடந்ததை சொல்லி முடித்துவிட்டு அம்மா நீங்களே அவரிட்டை கேளுங்கோ எதுக்கு வேலைக்கு போனவெரெண்டு உங்களிட்டையாவது சொல்லுறாரோ பாப்பம் என்று தொலைபேசியை நாதனிடம் நீட்டினான். தொலைபேசியை காதில் வைத்தவர். மறுபக்கத்தில் என்னப்பா இதெல்லாம் என்கிற விசும்பிய குரலிற்கு எல்லாம் காரணத்தோடைதான் என்றுவிட்டு மகனிடம் தொலைபேசியை நீட்டிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்.டேய் அப்பா என்ன செய்தாலும் ஏதாவது காரணம் இருக்குமடா அவரை பேசாதை என்றவரிடம் நீயும் அவருக்கு வக்காளத்து வாங்கு என்று கத்திவிட்டு போனை வைத்தான்.

மகளிடம் திரும்பியவர் பிள்ளை அப்பாக்கு அங்கை சரிவருதில்லை போலை இஞ்சை வீடு வசதியா தானே இருக்கு இஞ்சை கூப்பிட்டால் எனக்கும் துணையா இருக்கும் என்றதும். அதிகம் பேசாத மருமகன் உங்கடை அம்மாக்கு அப்பாவை விட்டிட்டு இருக்கேலாது போலை என்று நமட்டு சிரிப்படன் சொல்லி சிரித்ததும் சாவித்திரி கூனிக் குறுகி கூசிப் போனாள். அதற்கு பிறகு சாவித்திரியும் சரியாக சாப்பிடுவதில்லை யாருடனும் கதைப்பதில்லை ஏன் இந்த மனுசன் இப்பிடி செய்ததெண்டு அந்த கவலையிலேயெ நாட்கள் போய்க்கொண்டிருந்தது. நாதனை வேலைக்கு போகவேண்டாமென்று மகனிற்கும் அவரிற்கு சண்டை விரிசல் கூடிக்கொண்டே பேனதே தவிர இருவரும் ஆற அமர்ந்து இருந்து அவர் வேலைக்கு போவதற்கான காரணங்களை கதைக்கவில்லை. அம்மா அப்பா என்கிற உறவு பிள்ளைகளின் வாய்களில் கிழவன் கிழவியாகிப் போனது.
மட்டுமல்லாமல் உறவுகளிற்கிடையில் விரிசல்களும் அதிகரித்துப் போனது அந்த மாத இறுதியில் நாதனின் கைகளிற்கு சிமிக்கி கிடைத்துவிடும். அன்று வேலையால் வந்தவர் மகனிடம் நானும் அம்மாவும் உருக்கு போகப் போறம் அதுக்கான வேலையளை பார் என்றுவிட்டு போய்விட்டார். அவன் மீண்டும் தங்கைக்கு போனடித்து கத்தினான். அம்மவும் அப்பிடித்தான் இஞ்சை சரியா கதைக்கிறேல்லை சாப்பிடுறேல்லை கனதரம் பிறசர் கூடி தலைசுத்தி விழுந்திட்டா ஏதும் நடந்திடுமோ எண்டு எனக்கும் பயமா கிடக்கு பேசாமல் ஊருக்கே அனுப்பிறது நல்லதுபோலை கிடக்கு அங்கை என்ரை சீதன வீடும் காணியும் யாரோ தானே இருக்கினம். அவையளோடை கதைச்சு எழும்ப சொல்லிப் போட்டு பேசாமல் இரண்டு கிழட்டையும் அனுப்பி விடுறது நல்லது போலத்தான் கிடக்கு என்றாள்.

0000000000000000
பயண அலுவல்கள் தயாராகி விட்டிருந்தது நாதன் british airways இலண்டனிற்கு போய் அங்கிருந்து சாவித்திரியுன் இணைந்து கொழும்பு போவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது..தம்பி நான் ஊருக்கு போறன் என்று வேலை செய்த கடைக்காரரிடம் விடை பெற்ற நாதன் சம் பளத்தை வாங்கிக் கொண்டு நகைக் கடைக்குள் நுளைந்தார். மிகுதி பணத்தை கொடுத்ததும் கடைக்காரர் ஒரு சிறிய டப்பாவை திறந்து சிமிக்கியை காட்டினான் ஜயா எப்பிடி இருக்கு?
நான் நினைச்சமாதிரியே இருக்கு ..

அது சரி இவ்வளவு பெரிய சிமிக்கியை யாருக்கு குடுக்கப் போறியள்??

. என்ரை மனிசிக்கு என்றபடி கொடுப்பிற்குள் சிரித்தவர் அதை வாங்கி சிறிய பையில் சுற்றி சட்டை பையில் பத்திரப் படுத்திக்கொண்டு வீடு நொக்கி போனவர். மகன் அவரது பொருட்கள் தயாராக எடுத்து வைத்திருந்தான் அவர்களது கார் விமான நிலையம் நோக்கி போய்க்கொண்டிருந்தது அவரோ அடிக்கடி சிமிக்கி பத்திரமாக இருக்கிறதா என தொட்டு பார்த்தபடியே இருந்தார். விமான நிலையத்தில் பேரனை கட்டியணைத்து முத்தம் இட்டு விடைபெறும்போது அவரது கண்கள் கலங்கிப்போய்விட்டிருந்தது. மருமகளிடமும் பிள்ளை ஏதும் குறையள் இருந்தால் மனசிலை வைச்சுக்ககொள்ளாதைஎன்றதும் அவளும் கலங்கித்தான் போனாள்.மகனிடம் திரும்பியவர் தம்பி பேட்டுவாறன் என்றதும் போங்கோ ஆனால் அங்கை போய் நிண்டு கொண்டு போனடிச்சு காசு காசு எண்டு உயிரை வாங்ககூடாது என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டான். அவரிற்கு குளைக் கம்பியால் யாரோ நெஞ்சில் செருகியது போலதொரு வலி. நெஞ்சை தடவினார் சட்டைப் பையில் சிமிக்கி தட்டுப்பட்டது.

கீத்றோ விமான நிலையம் கொழும்பு செல்லும் விமானத்தில் ஜன்னல் பக்கமாக சாவித்திரியும் அருகில் நாதனும் அமர்ந்திருந்தார்கள். சாவித்திரிதான் முதலாவதா தொடங்கினாள். நீங்கள் ஊருக்கு போவம் எண்டதும் நானும் ஏன் எதுக்கொண்டு கேக்காமல் மகளையும் பேரப் பிள்ளையையும் விட்டிட்டு பேசாமல் வந்திட்டன். எதுக்கு இதெல்லாம்??

சத்தியமா சொல்லு சாவித்திரி வன்னியிலை நாங்கள் கடைசியாஅந்த செல்லடிக்குள்ளையும் இலைக்கஞ்சி குடிக்கேக்குள்ளை இருந்த நிம்மதி சந்தோசம் இஞ்சை வந்த இரண்டு வரியத்திலை இருந்ததோ?

இல்லைத்தான் .....

சத்தியமாய சொல்லுறன் ஒவ்வொரு நாளும் சாப்பிடேக்குள்ளை எனக்கு ஏதோ கல்லையும் முள்ளையும் விழுங்கினமாதிரியெ இருந்தது ஆனால் மகனும் மருமகளும் சங்கடப் படுவினம் எண்டு எதுவும் பேசாமல் விழுங்குவன். அவரின் குரல் தளுதளுத்தது...

எனக்கு மட்டும் என்ன நீங்கள் என்னத்தை சாப்பிடுறியள் எப்பிடி சாப்பிடுறியள் எத்தினை மணிக்கு தேத்தண்ணி குடிக்கிறியள் எல்லாம் கவலைதான்.

அது மட்டுமில்லை நலைஞ்சு உடுப்பு காலையும் சப்பாத்துக்குள்ளை செருகிக் கொண்டு மிசின் மாதிரி பிள்ளையள் ஓடித்திரியிதுகள். அதுகளுக்கு எங்களையும் தனிய கவனிக்கிறது ஒரு பாரம். அதே நேரம் இந்த நடைமுறையளும் எங்களுக்கும் சரிவராது அதுதான் போறதெண்டு முடிவெடுத்தனான். அதுகள் விரும்பினால் வருசா வருசம் ஊருக்கு வந்து எங்களை பாத்திட்டு போகட்டும்.

விமானம் மேலெழும்பத் தொடங்கிவிட்டிருந்தது

நானும் அதைத்தான் யோசிச்சனான். ஆனா எதுக்கு நீங்கள் வேலைக்கு போனனீங்கள் அதாலைதானே பிரச்சனையே தொடங்கினது அதையாவது சொல்லுங்கோவன்.

சிரித்தபடி சட்டைப் பையிலிருந்து சிறிய பெட்டியை எடுத்து திறந்து காட்டினார் மின்னிக்கொண்டிருந்த சிமிக்கிளை பார்த்து சாவித்திரியின் கண்கள் மின்னியது. ஆனாலும் இதுக்காகவா இவ்வளவு கஸ்ரப்பட்டு வேலைக்கு போனனீங்கள் மகனிட்டை கேட்டிருக்கலாம்தானே??

அப்பிடியா அப்ப நீ மட்டும் ஏன் மகள் தந்த தோட்டை வாங்கி போடேல்லை எனக்கு உன்னைப்பற்றி தெரியுமடி அதுதான் நானே வேலை செய்து அந்த சம்பளத்திலை இதை செய்தனான். என்றபடி சாவித்திரியிடம் நீட்டினார்.அவளோ காதை அவரிடம் நீட்டினாள் கண்ணாடியை கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து கொண்டவர் அவள் காதிலிருந்த குச்சியை மெதுவாக ஆட்டி இழுத்தெடுத்துவிட்டு சிமிக்கிகளை பூட்டிவிட்டார் அதை கவனித்த பகத்து இருக்கையில் இருந்த வெள்ளைக்காரி வலக்கை கட்டை விரலை உயர்த்திக்காட்டினாள். நாதனும் அவளிற்கு கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு சாவித்திரியிடம். எங்கை அந்தப் பாட்டை ஒருக்கா பாடுமன்.

எந்தப் பாட்டை ??

அதுதான் அந்தப் பாட்டு. சாவித்திரியும் அவரது காதில் மெதுவாக நடுங்கும் குரலில் காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான் நான் பேசு...................தொண்டை அடைத்தது கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். நாதனின் கை விரல்கள் அவளின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொண்டது.கட்டுநாயக்காவில் தரை தட்டிய விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியபின்னரும் இருவர் மட்டும் இன்னமும் உறக்கத்திலிருந்ததை கவனித்த பணிப்பெண் அவர்களின் அருகில் சென்று உங்கள் பயணம் நிறைவடைந்து விட்டது எழுந்திருங்கள் என்று அவர்களை மெதுவாய் தட்டியவள் பயத்தில் திடுக்கிட்டு உதவி உதவி என கத்தினாள்.

யாவும் கற்பனையே
 • கிருபன், கந்தப்பு, சுவைப்பிரியன் and 20 others like this


#900925 ட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்!

Posted by புங்கையூரன் on 24 May 2013 - 09:11 AM

MM001.jpg

 

விடிகாலையில், காகங்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சேனாதி, கிணத்தடிக்குப் போய் முகத்தை அலம்பிவிட்டு, வீட்டுவாசலில் தொங்கிய திருநீற்று முட்டிக்குள் கையைவிட்டு எடுத்த திருநீற்றை முகத்தில் பூசியபடி, அப்பனே முருகா என்று உரத்தே சத்தம்போட்டார். அவர் கூப்பிடுவதும், முருகனிடமிருந்து பதில் வராததும் வழமையே எனினும், அவர் முருகனை அழைக்கும் உரத்த குரல், அவரது மனைவியாகிய சரசு என அழைக்கப்படும் சரஸ்வதியை நிச்சயம் நித்திரையிலிருந்து எழுப்பி விடும். அடுப்படிக்குப் போய், நேற்றே,அரைவாசியாய் எரிந்து முடிந்திருந்த ஒரு கங்குமட்டையிலிருந்து ஒரு துண்டுக்கரியை எடுத்துப் பல்லைவிளக்கிக்கொண்டு , பிள்ளையள் எழும்புங்கோவன் விடிஞ்சிட்டுது எண்ட படி, கேத்திலைத் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டுக் கிணத்தடியை நோக்கிப் போனாள்!

 

சேனாதியும், தனது முத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது மொரிஸ் மைனர் காரை நோக்கிச் சென்றார். அது அவருக்கு ஒரு குழந்தை மாதிரித் தான். அது தான் அவரது வருமானத்தின் பெரும்பகுதியை அவருக்கு ஈட்டித் தந்தது. மெல்ல அதை அன்போடு தடவிக்கொடுத்தவர், பக்கத்தில் நின்ற, தூக்குச் செம்பரத்தை மரத்திலிருந்து, மூன்று பூக்களைப் பிடுங்கி, அந்தக் காருக்குள் இருந்த முருகன், லட்சுமி, பிள்ளையார் ஆகியோருக்கு ஒவ்வொரு பூவாக வைத்தார். அதன் பின்னர், சிறிது திருநீறை எடுத்து, வண்டியைச் செலுத்தும் சக்கரத்தின் நடுவில் உள்ள வட்டத்தில், முருகா என்ற படி பூசினார்.

 

அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சரசுவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. ஒவ்வொரு நாளும், தனது கணவனின் இந்தச் செயலை, அவள் பார்த்துக் கொண்டிருக்கின்றாள், எவ்வளவு, மகிழ்ச்சியான காலங்கள் அவை என, அவளது மனது தனக்குள் நினைத்துக் கொண்டது. சேனாதி, ஓடிய அந்தக்கார், ஒருநாள் கூட, வேறொரு காருடனோ, வேறு எதனுடனுமோ மோதியது கிடையாது. தனது, இன்னொரு குழந்தையைப் போலத் தான், சேனாதி அந்தக் காரைப் பராமரித்தார். சேனாதிக்கும், மற்றவர்கள் தன்னை, ட்றைவர் சேனாதி என்று அழைக்கும்போது, புறக்டர் சேனாதி என்று அழைப்பது போல மிகவும் பெருமையாகவும் இருக்கும்!

 

அவளது நினைவுகள், கடந்த காலத்துச் சேனாதியை ஒரு கணம் நினைத்துப்பார்க்க, சரசுவின் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

 

சேனாதி, காரின் முன்பக்கத்தைத் திறந்து, எண்ணை, தண்ணி எல்லாம் ஒழுங்காக இருக்கின்றதா என்று சரி பார்த்த பின்னர், கார் முழுவதையும், ஈரத் துணியால் ஒருமுறை துடைக்க, அதுவும் பளபளவென்று, காலைச்சூரியனின் ஒளியில் மினு மினுத்தது.  பின்னர், காருக்குள் கிடந்த முதல் நாள் வீரகேசரிப் பேப்பரை எடுத்துக்கொண்டு சாய்மனைக்கதிரைக்கு வரவும், சரசுவும் முட்டைக் கோப்பியோடு வரவும் சரியாக இருக்கும்.  சுவரில் மாட்டப்படிருந்த ‘பெக்' கில் தொங்கிய சேட்டை எடுத்தவர், அதற்குள்ளிருந்த ‘சுவீப்' டிக்கட்டைக் கவனமாக எடுத்து, வீரகேசரிப் பேப்பரில் உள்ள, சுவீப் முடிவுகளுடன், ஒப்பிட்டுப் பார்த்த பின், ‘அட, மூண்டு நம்பரால இந்த முறை சறுக்கிப் போட்டுது' என்று கோப்பியுடன் நின்ற சரசுவைப் பாத்துச் சப்புக் கொட்டினார். அவர் ‘சுவீப்' டிக்கட் வாங்குவதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், அவரது மூன்று பொம்பிளைப் பிள்ளைகள். அடுத்தது, அந்தச் சுவீப் டிக்கட்டின் முதலாவது பரிசு, ஒரு பென்ஸ் கார் என்பது. கடைசிக்காரணம், இவர் யாழ்ப்பாணச் சந்தையடியில் இருந்து காரை எடுக்கும் போது, இவரைக் காணும் சுவீப் டிக்கட் விற்பவன், போனாக் கிடையாது, பொழுது பட்டாக்கிட்டாது, என்று உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குவதும் தான்!

 

சரி, இண்டைக்கு திங்கட்கிழமை எண்டது மறந்து போச்சுது என்று கூறியவர், கிழமை தெரியிறதுக்கு நான் என்ன கவுன்மேந்து வேலையா பாக்கிறன் என்று தனக்குத் தானே பதிலும் கூறிக்கொண்டார். இப்ப வெளிக்கிட்டாத்தான் 776 வாறதுக்குக் கொஞ்சம் முந்திப்போனால், போடிங்குக்குப் போற பெடியளைப் பிடிக்கலாம். இந்தப் பெடியளை ஏத்திக்கொண்டு போறதால அவருக்குக் கொஞ்சம் ‘லாபம்' அதிகமாக இருக்கும். பெரிய ஆக்களின்ர மடியளில, பெடியளை இருக்கவிடலாம் என்பதால், அதிக இடத்தை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. எனவே வருகின்ற முழுக்காசும் எக்ஸ்ட்ரா வருமானம் தான். வழியில, பொன்னர், போயிலைக்கட்டுக்களோட நிண்டதையும், காரை மறித்ததையும் கண்டார். உடனை அவருக்கு, அண்ணை, பின்னால பஸ் வருகுது என்று கூறியபடியே, விடிகாலைப் பயணிகளை ஏத்திக்கொண்டு போக இறுப்பிட்டியிலிருந்து வெளிக்கிட்டார். பொதுவாக, மீன், போயிலை போன்றவற்றை ஏத்துவது சேனாதிக்கு விருப்பமில்லை. சாமிப்படங்கள் இருக்கிறதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், சேனாதியிடம் சில தொழில் தர்மங்களும் இருந்ததை மறுக்க முடியாது. பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களை, எந்த நேரத்திலும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குச் சேனாதி ஒரு நாளும் காசு வாங்குவதில்லை. போகும் வழியில்,  வாற ஒவ்வொரு கோவிலடியிலும் , கண்ணைமூடி, நெத்தியையும் நெஞ்சையும் ஒருக்காத் தொட்டுக் கொள்ளவும் சேனாதி மறப்பதில்லை.

 

சேனாதியர் கார் ஓட்டுற விதமே அருமை. பாக்க வலு சந்தோசமாயிருக்கும். அந்தக் கோழி முட்டை மாதிரியிருக்கிற கியரின்ர நுனியைத் தொட்டுப்பாக்கச் சில வேளைகளில் ஆசை வருவதுண்டு. தம்பியென்ன, கடலுக்குள்ள எங்களைக் கவிழ்க்கிற பிளானோ, எண்ட அவரது கடுமையான தொனி, அந்த ஆசையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும். அதே போலத்தான், அவர் காரின்ர சிக்னலைப் போடும்போதும், காரின்ர கதவுக்குப் பக்கமாய், ‘பொப்' என்ற சத்தத்துடன், ஒரு சின்னத் தடி மாதிரி ஒண்டு, மேல உயர்ந்து பின்னர் கீழே போகும். அது வரப்போகும் நேரம் பார்த்துத் திடீரென அதை அமத்தும்  போது மட்டும் சேனாதிக்குப் பொல்லாத கோபம் வரும். எங்கட ரோட்டிலை, பஸ் ஓடினாலும், சேனாதியின்ர காருக்கு ஒரு தனி மவுசு இருந்தது. ஒண்டு, காரில, கெதியாப் போயிரலாம். மற்றது, காரில எப்பவும் நல்ல ‘லோட்' இருக்கிறபடியால, இந்தத் துள்ளலுகள் கொஞ்சம் குறைவா இருக்கும். அதோட கொஞ்சம் ஊர்ப் புதினங்களும், பயணிகளால், பகிரப்படுவதுண்டு. அப்போதெல்லாம், அவர், இவருடன் ஓடிப்போனார் என்ற கதைகள் அவ்வளவு விளங்காத காலம்.

‘தம்பி மார், பண்ணைப்பாலம் வருகுது. மணியண்ணையின்ர காரிலை, கையைக்காட்டிப்போட்டுப் போறார். போலீஸ்காரன் நிக்கிறான் போல கிடக்கு. எல்லாரும் ஒருக்காக் குனியுங்கோப்பு, என்று கூறினார். போலீஸ்காரனும், வெளியவந்து பாக்கிறதில்லை. தனது மேசையிலிருந்த படியே, கார்க் கண்ணாடிக்குள்ளால பாத்து ஆக்களை எண்ணுறதோட சரியென்ட படியால, சேனாதியும் ஒவ்வொரும் முறையும் தப்பிக் கொள்வார்.

 

யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பி வாற நேரம், அனேகமாக, கடைக்காரர் தங்கட கடைக்குச் சந்தையில சாமான் வாங்கி ஏத்துவினம். வாழைக்குலைகள், மரக்கறிகள்,உடுப்பு வகைகள் எண்டு நிறையச் சாமான் ஊருக்குப் போகும். அதோட, ஏதாவது கோவில் திருவிழா, கலியாணவீடு, செத்தவீடு எண்டால், சேனாதியின் காருக்கு நிரம்ப வேலையிருக்கும். பத்துமணிக்குப் பிறகு, பட பஸ், போனப்பிறகு, சனம் எவ்வளவு காசெண்டாலும் குடுத்து, ஊருக்குப் போக ஆயத்தமாக இருக்கும். அதோட, கொழும்புப் பயணகாரர் வாறபோதும், அவர்கள் சேனாதியை விரும்பி அழைப்பதுண்டு. கிழமையில, ஏழுநாளும் சேனாதிக்கு வேலையிருக்கும்.

 

ஒரு நாள் இரவு, ஒரு ஆறு  பெடியளவில, சேனாதியிட்ட வந்து, அண்ணை, உங்கட கார், எங்களுக்கு அவசரமாத் தேவைப்படுகுது, அலுவல் முடியத் திருப்பித் தந்திடுவம்  எண்டு கேட்டனர்.. அவர்கள் எல்லோருடைய கைகளிலும்,  துப்பாக்கிகள் இருந்தன. சேனாதிக்குப் பொதுவா, ஊரில எல்லாரையும் தெரியும். ஆனால், வந்த பெடியளைச் சேனாதி ஒரு நாளும் கண்டதுமில்லை. இல்லைத் தம்பிமார், எனக்குக் கார் தான் பிழைப்புக்கு வழி காட்டிறது, இதில்லா விட்டால், வீட்டில எல்லாரும் சிவபட்டினி கிடக்க வேண்டியது தான் என்று கூறவும்,.வந்தவர்கள், சேனாதியின் விளக்கத்தைக் கேட்பவர்களாக இல்லை.

அண்ணை, திறப்பைத் தாறீங்களோ அல்லது, வேற விதமா நாங்கள் ‘ஸ்டார்ட்' பண்ணுறதோ? எனக் கேட்கச், சரசுவும் பிள்ளையளும் அழத்தொடங்கி விட்டினம். சேனாதியும், மிகவும் தயக்கத்துடன் காரின் திறப்பைக் கொடுக்கவும், அவர்கள் காரை எடுத்துக் கொண்டு எல்லோரும் அதில் ஏறிக்கொண்டு போனதைப் பார்த்துக்கொண்டு, வாயடைத்துப் போன சேனாதி, அவர்கள் போன பின்பு தான் , தம்பியள், கார் கவனமப்பு என்ற வார்த்தைகளைத் துப்பினார்.

 

அதன் பின்பு, ஒரு மாதத்தின் பின்பு, அவரது கார் கோயிலடியில் நிற்பதாக, ஆரோ சொல்லக்கேட்டுப் போய்ப் பார்த்தார். அவரது காரை, அவராலேயே அடையாளம் காண முடியவில்லை. அதன் சில்லுகளும், காத்துத் திறக்கப்பட்டு, வெறுமையாகக் கிடந்தன. அந்தக்காரின் நிலையைப் பார்த்ததும், சேனாதியின் மனம் முற்றாக உடைத்து போய் விட்டது. அதை, ஒரு மாதிரிக்கட்டியிழுத்து, வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அதன் ‘என்ஜின்' செத்துப்போயிருந்தது. அவரது மனமும் தான்.

 

இப்போது, கார் ஓடாமல் விட்டு ஐந்து வருடங்கள்  உருண்டோடி விட்டன

ஆனாலும், காலையில் எழுந்து, அதற்குப் பூவும், பொட்டும் வைப்பதை, அவர் இன்னும் நிறுத்தவேயில்லை.. ஒரு வேளை, அந்தக் காரின் ‘ஆன்மா' அவருக்குத் தெரிகின்றதோ, என்னவோ!

 


 • குமாரசாமி, SUNDHAL, putthan and 19 others like this


#866011 எங்கள் பாலனின் பாதத்தில்

Posted by வாத்தியார் on 20 February 2013 - 08:43 PM

பார்க்கும் கண்களே

 

துடிக்கும் காட்சி


பாலனின் மேனியில்

 

பலதுளைகள் கொடுங்கோற்  


சிங்களம் செய்த கொடுமை


கொலைக்களத்தின்


அதி உச்சக்கட்டம்


 

அவன் விழிகளில்


தெரிகின்றது அவன் ஒரு


வீரன் மகன் என்று


அவன் விழிகளைக்


கண்டு மிரண்டு அவன்


மேனியில் துளைத்ததா குண்டு


 

சிங்களம் செய்த


கொலை வேள்வியில்


எங்கள் குலவிளக்கை


எரித்ததா  ஈனம் இல்லாச் 


சிங்களம்   ஆடிய


கொலைவெறியில்


தங்கள் இச்சையைத் 


தீர்த்ததா  இச்சிறு வேங்கையின் 


பொற்திருவுருவில்


 

பாரெங்கும்  பரந்திருக்கும் 


நாமெல்லாம் கோர்த்திடுவோம் 


கரங்களைக் கொடுங்


கோலனை ஒளித்திடக் 


கூடிடுவோம் ஒன்றாய்  


கொலைக்களத்தின் உச்சத்தைப் 


பரப்பிடுவோம் உலகமெங்கும்  


எடுத்திடுவோம் சபதம் 


எங்கள்  பாலனின் பாதத்தில் 


 • குமாரசாமி, SUNDHAL, akootha and 19 others like this
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]