Jump to content


Tamil Star News

மல்லிகை வாசம்



Photo

இரு உள்ளங்கள்

Posted by மல்லிகை வாசம் , 06 March 2009 - - - - - - · 103 views

கடந்த சில நாட்களாக வசந்தனின் மனம் அமைதியின்றி தவித்தது. எப்படியாவது தனது மனதில் தோன்றிய எண்ணங்களை யமுனாவுடன் பகிர்ந்துவிட வேண்டும் என அவன் மனம் அடிக்கடி சொல்லியது. இருந்தாலும் அவனது சிறு ஈகோ அதை தடுக்கவும் செய்தது. ஆனாலும், இதை இப்படியே மனதில் பூட்டி வைத்திருக்க முடியாது என உணர்ந்து கொண்ட அவன், எப்படியாவது அவளுடனும், அவனது நண்பர்களிடமும் இது பற்றிக் கதைப்...


Photo

தமிழர் உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!!

Posted by மல்லிகை வாசம் , 29 November 2008 - - - - - - · 28 views

ஊனுடலை விட்டு உயிர் பிரிந்தாலும், - தமிழர்உணர்வெல்லாம் நிறைந்தோரே! மாவீரரே...!!பேரினவாதம் எனும் கொடிய மிருகம் ஒன்றுகர்ச்சிக்கும் பலமாக தமிழர் உரிமைகளைக் கொன்று.தமிழர் தம் துயரத்தை துடைத்திட வேண்டும் என்று,கிளம்பிய வீரர்கள் நீங்கள் தியாக தீபங்கள் அன்றோ!அன்னையின் அரவணைப்பு, தந்தையரின் ஆதரவு,உடன் பிறந்து உறவாடிய சகோதரரின் பாசம்,வாழ்வில் உயர்ச...


Photo

மூளை, மனம், கால்கள் - (கவிதை)

Posted by மல்லிகை வாசம் , 14 October 2008 - - - - - - · 32 views

ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம்சோகச் சுமைகளால் மனதில் பாரம்இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம்என் கால்கள் நடந்தன வெகு தூரம்.'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?'வேதனையான மனம் கால்களைக் கேட்டது.'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது'வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது.எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக,புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக,நீண்ட தூர...


Photo

ஏமாற்றம் - (கவிதை)

Posted by மல்லிகை வாசம் , 14 October 2008 - - - - - - · 128 views

துள்ளினான் காளை இவன் - தன்உள்ளம் அள்ளிச் சென்றகள்ளியை கண்டதும் உள்ளத்தில் கள்ளூர..  அள்ளி எடுத்து முத்தமிட, அவள் கன்னம்கிள்ளி பல காதல் கதை சொல்லிட...- ஆனால்,புள்ளி மானினத்தாள் தள்ளியே சென்றது கண்டுமுள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான்.


Photo

அன்னைக்கு ஒரு கை... என் அன்புக்கு மறு கை - (கவிதை)

Posted by மல்லிகை வாசம் , 14 October 2008 - - - - - - · 36 views

நடை பயில விடாமால் என்னைதடை போட்டு விட்டிடலாம் - ஆனால்மனத்தடை தான் போடமுடியுமா - போட்டிருந்தால்மனத்திடை பாதிப்பு வந்திருக்கும் அம்மாஉன் கையில் மட்டும் என்னை தவழவிட்டிருந்தால்நான் உலகமே அறியாத பயலாய் இருந்திருப்பேன்நாளும் நான் வளர்ச்சி பெற உலகத்தை நான் புரிய வேண்டும்நாலு பேருடன் பழக வேண்டும் நல்லது தீயது தெரிய வேண்டும்காதல் உணர்வு இல்லை என்றால் - உனக்குமகனா...


Photo

கடவுளுக்கு பூவெதற்கு? - (கவிதை)

Posted by மல்லிகை வாசம் , 14 October 2008 - - - - - - · 15 views

கடவுளுக்கு பூவெதற்கு.. மாலையெதற்கு..உன் வெள்ளை உள்ளத்தை மலராக்கிஅதை ஆண்டவனுக்கு அர்ச்சித்தால் மனிதா.பூஜை, புனஸ்காரங்கள் தான் எதற்கு...உன் மனதை கோயிலாக்கி - அன்பைஇறைவனாக்கி வழிபட்டால் பக்தா.பால், தயிர், பழங்களால் அபிஷேகங்கள் ஏனோ...ஏதிலிகளின் வயிற்றில் நீ பால் வார்த்தால்.விரதங்களும், நேர்த்திகளும் இங்கு வீணே,ஒழுக்கமும், வாய்மையும் உன் வாழ்வில் இல்லையெனில்


Photo

யார் பக்கம்? - (கவிதை)

Posted by மல்லிகை வாசம் , 14 October 2008 - - - - - - · 21 views

வாழ்வு யார் பக்கம் ? அது நம் பக்கம்தாழ்வு கண்டு சளைத்திடாதநாளும் பல முயற்சி செய்துவாழும் நாம் பக்கம்வெற்றி யார் பக்கம்? - நேரம்முற்றும் தம் இலக்கை மட்டும்பற்றியே நினைக்கும் கரும வீரர் ,மற்றும் ஒழுக்கமுடையோர் பக்கம்மகிழ்ச்சி யார் பக்கம் ? - தம்புகழ்ச்சிக்காக உழைக்காமல் - நேர்ந்தஇகழ்ச்சிகளை வளர்ச்சிப்படிகளாக நோக்கபழகும் மனிதர் அவர் பக்கம்


Photo

அன்பே நினைப்பிருக்கா? (கவிதை)

Posted by மல்லிகை வாசம் , 14 October 2008 - - - - - - · 59 views

அன்றொருநாள் பொன் அந்தி மாலை நேரம்அமைதியான அழகு கடற்கரை ஓரம்அன்பே நீயும் நானும் அமர்ந்திருந்துஆசை மொழி பேசி மகிழ்ந்த நினைப்பிருக்கா?  'விரிந்த அந்த வான வெளியினிலேபறந்த ஜோடி பறவைகள் போல் - கவலைமறந்து உன்னுடன் நான் உலகை ரசிப்பேன்' என்றுஉறவே நீ அன்று சொன்னது நினைவிருக்கா?  'அருகே நின்ற இரட்டை தென்னை மரங்களாய்ஒரு கணமும் உயிரே நான் உன்னை பிரியாதுஈரு...


Photo

நினைவு கூர்வோம் - (கவிதை)

Posted by மல்லிகை வாசம் , 14 October 2008 - - - - - - · 17 views

தலைவன் ஆணையில் - நம்தாய் மண்ணை காத்திடவேஉம் உயிரையும் துச்சமாக்கதுணிந்தீரே கரு வேங்கைகளே?உமக்கும் உறவுகள் உண்டு - பாசஉணர்வும் உண்டு அவர் மேலே. - அந்தஉறவை எல்லாம் துறந்துவிட்டுஉம் தாயகமே பெரிதென்று வெடித்தீரேநாளை நம் மண் விடிந்த பின்னேநாம் சுவாசிப்போம் சுதந்திர காற்று - புதுநாட்டின் தியாக தீபாங்களே - உமைநினைவு கூர்வோம் நாளெல்லாம் நன்றியுடனே


Photo

மிகவும் பிடித்த புத்தகம்

Posted by மல்லிகை வாசம் , 12 October 2008 - - - - - - · 445 views

நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு பலர் இந்நூலை முன்பே ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும். என்றாலும் இதைப்பற்றி அறியாதவர்களுக்காக இந்த குறிப்பை எழுதுகிறேன். நான் இங்கு எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் விரும்புவது நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து உணர்ந்து பயன் பெறுவத...






வணக்கம்

smile.gif தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம். மல்லிகையின் வாசத்தை நுகர வந்தமைக்கு நன்றி! smile.gif

May 2013

S M T W T F S
   1234
567891011
12131415161718
19202122 23 2425
262728293031 

0 user(s) viewing

0 members, 0 guests, 0 anonymous users

Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]