Jump to content


Photo
- - - - -

இன்னும் சில காலம் இருந்திருப்பாரோ காந்தி மகான்!

Posted by PSIVARAJAKSM , 17 August 2007 · 69 views

கூலிப்படை என்பவர்கள்
கூனிகுறுக சம்பவங்கள் பல பல
அவையன்றோ சரித்திரங்கள்!
உலகத்தவர் உயர்த்திக் கூறும்
மனித நேயமும் மகத்தான சுதந்திரமும்
மக்களாட்சி என்ற மான்புறு சனநாயகமும்
இமயம் போல் இருக்கிறது இங்கிலாந்தில் என்று
நம்புவார் நாநிலத்தில் பலர்!
அய்ரிஸ் மக்கள் ஆண்டாண்டாய்
ஆயுதம் ஏந்தி போராடியது அகிலம் அறியும்!
அங்கு சிறைப்பட்ட ஆறு விடுதலை வீரர்கள்
அகிம்சை வழியில் அயராமல் இருந்தனர் உண்ணாவிரதம்!
இசைய மறுத்தது இங்கிலாந்து!
இறந்தனர் வீரர்கள்! இரங்கவில்லை இங்கிலாந்து!
அசைந்து கொடுக்கவில்லை ஆதிக்கவர்க்கம்!
அனாதையாக நின்றது அகிம்சை!
அங்கேயே அகிம்சை அனாதை எனில்
அகிலம் அறிந்த நவீன கிட்லர் - என்றே
செகமெல்லாம் வர்னித்த ஜெயவர்த்தனாவின்
இனவெறி அரசு இருந்த இலங்கையில்!
இருந்தனர் உண்ணாவிரதம்! இருந்தது மாணவர்கள்!
இசைந்ததா இனவெறி! இல்லை! இல்லை!
இசைந்தால் தான் ஆச்சரியம்!
இசையாததில் ஆச்சரியமென்ன?
நடத்தியது ஒன்பதுபேர் அதில் நங்கையர் நால்வர்!
மணிகணக்கில் நாள் கணக்கில் மாணவர்களின் உண்ணாவிரதம்!
துவண்டது உடல்! துவளவில்லை மனம்!
நாட்கள் கடந்தன! நாடே அழுதது!
நாடவில்லை இணக்கத்தை இனவெறி அரசு!
வீதிகளெல்லாம் கறுப்புக்கொடி! கதவடைப்பு!
திறந்ததா இதயத்தை இனவெறி! இருந்தால் தானே திறக்க!
மூடியது பல்கலைகழகத்தை! முயற்ச்சித்தது மாணவர்களை கடத்த!
மூடிய கண்களும் முனகிய வாயுமாக மாணவர்கள் உண்ணாவிரதத்தில்!
மரணத்தின் விளிம்பிற்க்கே சென்றனர்!
மருத்துவமணை செல்லவில்லை!
மருத்துவர்கள் வந்தனர்! மருத்துவமணையில் சேர்க்காவிட்டால்!
மரணம் நிச்சயம் என்று கைவிரித்தும் விட்டனர்!
ஆனால்! ஆனால்! அலச்சியப்படுத்தியது இனவெறி!
ஏழுநாட்கள் நகர்ந்து விட்டது!
எங்கும் எவரிடத்தும் ஓங்கியது மனிதாபிமானம்!
நாட்கள் கடந்தால் நாடிடுவான் நமன்! - என்றே
நல்லோரும் நாட்டோரும் அழுதனர்!
நானவில்லை இனவெறி இலங்கை அரசு!
நல்லோர்கள் சிலர் உயிர்காக்க நாடியே வந்தனர்!
பிற உயிர்காக்க தம்முயிர் கொடுக்க காக்கவேண்டும் உயிர்- என்று
உணர்ந்தனர் மாணவர்கள்! உணர்த்தியது யார்?
அவர்களா கூலிப்படைகள்?
கூச்சமில்லாமல் சொல்லுவது யார்?
நரம்பில்லாத நாக்குதான் என்றாலும்!
நாளும் நாலும் பேசிடுமோ!
நாமும் ஆத்ம பரிசோதனை செய்கிறோம்!
நம்மில் மாறுபடுவோர் செய்வார்களா?
நாம் போற்றும்! நாடு போற்றும் மகாத்மா!
நம் கண்ணெதிரில் சுடப்பட்டார்!
நாணவில்லை நம்மில் சிலர்!
மாறாக மகிழ்ந்திருந்தனர் பலர்!
இந்தியாவில் இது இயல்பாய் போனதோ!
வார்த்தையில் ஆத்மபரிசொதனை செய்வோர்
வந்திங்கு சொல்லட்டும்! வாய்திறந்து பேசட்டும்!
அகிம்சையை அகிலத்துணர்த்தியவரை கொன்றவர் சிறந்தவரா?
அகிம்சை வழி நடப்போரை காத்தவர்கள் சிறந்தவரா?
அவர்கள் அன்று இங்கிருந்திருந்தால்- இன்னும்
சில காலம் இருந்திருப்பாரோ காந்தி மகான்!யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]