Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,547
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,872
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,278
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 357,793
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   68,375
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   12,840
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   19,729
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,550
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,860
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,306
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,928
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,678
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,401
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   14,743
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,241
   posts
  2. 33,874
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,802
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,208
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,553
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   18,802
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   26,984
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   21,615
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   55,094
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,146
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,691
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,682
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,628
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,656
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,162
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,516
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,677
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,774
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,887
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,398
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,520
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,199
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   88
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,384
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,710
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   445
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (345,538 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,458 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,891 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • ரொனால்டோவின் சொந்த உல்லாச ஹோட்டல் திறக்கப்பட்டது   போர்த்­துகல் கால்­பந்­தாட்ட வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ தனது சொந்த உல்­லாச ஹோட்­டலை திறந்­து­ வைத்­துள்ளார்.
     கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோவின் பெயரின் முதல் எழுத்­துக்­
   க­ளை யும் அவரின் கால்­பந்­தாட்ட அங்கி இலக்­கத்­தையும் குறிக்கும் வகையில் CR7என இந்த ஹோட்­ட­லுக்குப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.
   போர்த்­துக்கல் நாட்டில் ரொனால்டோ பிறந்த மெடேய்ரா எனும் தீவி­லுள்ள ஃபன்சால் நகரில் இந்த ஹோட்டல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இதை ரொனால்டோ திறந்­து­ வைத்­துள்ளார்.
     பெஸ்­டெனா ஹோட்டல் குழு­மத்­துடன் இணைந்து உல்­லாச ஹோட்டல் வர்த்­த­கத்தை ரொனால்டோ ஆரம்­பித்­துள்ளார். இதற்­காக அவர் 37 மில்­லியன் (சுமார் 608 கோடி ரூபா) யூரோவை முத­லீடு செய்­துள்ளார்.   யூரோ கிண்ண கால்­பந்­தாட்­டத்தில் தனது தலை­மை­யி­லான போர்த்­துக்கல் அணி முதல் தட­வை­யாக சம்­பி­ய­னா­கிய இரு வாரங்­களில் இந்த ஹோட்­டலை ரொனால்டோ திறந்­து­வைத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.   பெஸ்­ட­னான ஹோட்டல் குழுமத் தலைவர் டிய­னிஸ்டோ பெஸ்­ட­னா, மெடெய்ரா பிராந்­திய ஜனா­தி­பதி மிகுவெல் அல்­­பு­­கு­வேர்க் சகிதம் ரொனால்­டோ   31 வயதில் ஒரு ஹோட்டல் அதி­ப­ரா­குவேன் என நான் எண்­ணி­யி­ருக்­க­வில்லை என ரொனால்டோ தெரி­வித்தார். மெடேய்ரா தீவின் உல்­லாசக் கப்பல் துறை­மு­கத்­துக்கு அருகில் CR7ஹோட்டல் அமைந்­துள்­ளது.   பல்­வேறு பொழுதுபோக்கு அம்­சங்கள் கொண்ட 48 அறைகள் இந்த ஹோட்­டலில் உள்­ளன. இதே­வேளை மெடேய்ரா தீவின் விமான நிலை­யத்­துக்கு ரொனால்­டோவின் பெயர் சூட்டப்படும் என மெடேய்ரா பிராந்திய ஜனாதிபதி மிகுவெல் அல்புகுவேர்க் தெரிவித்துள்ளார்.   - See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=18157#sthash.1RbgCZD5.dpuf
  • எங்களுக்கு தேவை தகவல்கள் மட்டுமே...! - அகதிகளின் குரல்கள்   அவர்களுக்கு என்ன வேண்டும்...? பெரும் பணமா, வைர நகைகளா, விலை மதிப்புமிக்க ஆடைகளா... என்ன வேண்டும் அவர்களுக்கு...? நிச்சயம், இது எதுவும் வேண்டாம். அவர்களுக்கு தேவை தகவல்கள். உண்மையான தகவல்கள். தாங்கள் தங்குவதற்கு எங்கு ஒரு துண்டு நிலம் கிடைக்கும், பாதுகாப்பான ஆறு மணி நேர உறக்கம் எங்கு கிடைக்கும், தம் பச்சிளங்குழந்தைகளுக்கு யார் உணவு தருவார்கள், இருள் அப்பிய தங்கள் எதிர்காலத்தில் யார் சிறு வெளிச்சம் பாய்ச்சுவார் என்ற தகவல்கள்.   ஆம். அவர்களுக்கு தகவலன்றி வேறொன்றும் தேவையில்லை.

   யார் அவர்கள்...? : அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் பெயர் இருக்கலாம். ஆனால், இப்போது அவர்களுடைய பெயர் அகதிகள். இப்படிச் சொல்ல உங்கள் மனதிற்கு கடினமாக இருக்கிறதா...? வேண்டுமானால் ஏதிலிகள் என்று அழைத்துக் கொள்ளுங்கள்.  அதுவும்  இந்த ஏதிலிகள் நமக்கு அவ்வளவு முக்கியமானவர்கள் இல்லை. செய்திதாள்களில் எப்போதும் சர்வதேச பக்கங்களில் மட்டுமே தென்படுபவர்கள். சிரியா, ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து,  மனிதம் கிஞ்சித்தும் இல்லாத பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிக்க பல தேச எல்லைகளைக் கடந்து, பாதுகாப்பற்ற கடல் பயணங்களைக் கடந்து, தங்களை ஏற்றுக் கொள்ளும், அரவணைக்க காத்திருக்கும் தேசங்களைத் தேடி அலைபவர்கள் அவர்கள்.

   அண்மையில் பி.பி.சி ஊடக மையம், கிரீஸ் முகாம்களிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உள்ள பல்வேறு அகதிகளை சந்தித்து உரையாடி, அவர்களின் தேவையை அறிந்து, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அவர்கள் சந்தித்த அனைத்து ஏதிலிகளும் தங்களின்  தேவையாக சொல்லி இருப்பது, ‘தகவல்’ களை மட்டும்தான்.

   ஏன் அவர்களுக்கு தகவல்கள் தேவைப்படுகின்றன...?:   உள்நாட்டுப் போர், பயங்கரவாத ஐ.எஸ். ஐ. எஸ்...  சிரியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை நிர்மூலமாக்கிவிட்டது. அனைத்து உடைமைகளையும் இழந்த மக்கள், தங்கள் உயிரை, பிள்ளைகளின் உயிரை மட்டுமாவது காத்துக்கொள்ள, தங்களின் வேர்களை தாங்களேப் பிடுங்கி, பாதுகாப்பான தேசங்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்களின் ஒற்றை தேர்வாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே.

   சிரியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து புறப்படுபவர்கள் தரை மார்க்கமாக துருக்கி சென்று, அங்குள்ள இஷ்மீர் கடற்கரை நகரம் வழியாக, கப்பல்களில் புறப்பட்டு கிரீஸ் சென்றடைந்து, அங்கிருந்து மீண்டும் தரை மார்க்கமாக ஐரோப்பா செல்கிறார்கள்.

   உயிர் பிழைத்தால்போதும். மீண்டும் தங்கள் வாழ்வை அங்கு கட்டமைத்துக் கொள்ளலாம் என்பதுதான் அவர்கள் நம்பிக்கை. ஆனால், அவர்களுக்கு இந்தப் பாதையும்  பயணமும், சர்வதேச சட்டங்களும் எப்போதும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. இந்தச் சூழலில் அவர்களுக்கு தேவைப்படுவது தகவல்கள் மட்டும்தான்.

   எது மாதிரியான தகவல்கள் தேவை...?   குண்டுகளிலிருந்து தப்பித்துச் செல்லும் இம்மக்களை, 'எந்த நாடு ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது... எந்த நாட்டின் எல்லைக் கதவுகள் திறந்து இருக்கின்றன, ஒரு வேளை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டால், நம்மை என்ன செய்வார்கள்' என இவர்களுக்கு எந்த தகவல்களும் தெரிவது இல்லை.  அதனால், பல லட்சம் மக்கள் பல துயரங்களை சந்தித்து வருகிறார்கள்.

   முன்பு அகதிகள், மேற்கு பால்கன் வழியை பயன்படுத்தி, ஐரோப்பியாவிற்குள் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், மார்ச் 2016 ம் ஆண்டு இந்த பாதை மூடப்பட்டுவிட்டது. இதனால், கிரீஸில் உள்ள அகதி முகாம்களில்  தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும் 46,000 மக்கள். 

   இதுபோல்,  அகதிகள் வருகையை கட்டுப்படுத்த அல்லது நிறுத்த, கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், துருக்கியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, கிரீஸ் தீவுக்கு  வரும் அகதிகள் மீண்டும் துருக்கிக்கே அழைத்து செல்லப்படுவார்கள். அங்கிருந்து மீண்டும் அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்படுவார்கள். ஆனால், இது போன்ற தகவல்கள் தெரியாமல் அதிக எண்ணிக்கையிலான அகதிகள், நாளையும் வாழலாம் என்ற பேராசையுடன் (மன்னிக்கவும். ஒரு அகதி அப்படிதான் கூறுகிறார். 'அடுத்த நிமிடமே நிச்சயமற்றதாக இருக்கும் போது, நாளை உயிரோடு இருப்போம் என்று எதிர்பார்ப்பது பேராசைதானே...!' என்கிறார்) தினம் தினம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

   கிரீஸ் ரிட்சோனா அகதிகள் முகாமில்  இருக்கும் ஒரு யஷிதி அகதி, “எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. எப்போது எல்லை கதவுகள் திறக்குமென்று தெரியாது. நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன்...” என்கிறார்.

   அது போல இன்னொரு சிரிய அகதி, “போர், பயங்கரவாதம், தீவிரவாதம் என எப்போதும் செத்துவிடக் கூடிய சூழல் இருந்தாலும், எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போது அனைத்தும் தகர்ந்து விட்டது.

   போர் சூழலை விட அகதி வாழ்வு கொடுமையாக இருக்கிறது” என்கிறார்.
     “பாதுகாப்பான நாடுகளுக்கு எங்களை அழைத்து செல்வதாக, எங்களிடமிருந்து பணம் பெறுபவர்கள், எங்களுக்கு எந்தவித உண்மையான தகவலையும் சொல்வது இல்லை. எங்களை ஏமாற்றுகிறார்கள். அகதிகள் முகாமிலும் எங்களுக்கு ஏகப்பட்ட துயரங்கள். அந்த நாட்டு அதிகாரிகளின் மொழி புரிவது இல்லை. அகதிகளுக்காக எந்த உரிமைகள் இருக்கின்றன. எங்களை எந்த நாடு அரவணைத்துக் கொள்ள தயராக இருக்கிறது என்று எதுவும் தெரிவதில்லை. பெரும்பாலும் நாங்கள் சமூக ஊடகங்களிலிருந்தே தகவல்களைப் பெறுகிறோம். ஆனால், அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள்.” என்கிறார்கள் கிரீஸில் இருக்கும் அகதிகள்.

   மேலும் அவர்கள், “எங்களுக்கு எதுவும் நீங்கள் அளிக்க வேண்டாம். உண்மையான தகவல்களை அளியுங்கள், கிரீஸில் அகதிகள் முகாமில் இருக்கும் எங்களின் உரிமை என்ன... நிலை என்ன... எப்போது எல்லைக் கதவுகள் திறக்கும் என்ற தகவல்களை மட்டும் அளியுங்கள்..” என்கிறார்கள்.

   'எங்களுக்கு நீங்கள் உணவளிக்காவிட்டாலும் பரவாயில்லை, தகவல்களை மட்டும் அளியுங்கள்' என்பது மட்டும்தான் இவர்களது ஒரே கோரிக்கை.

   மூன்று நிமிடப் படம்: பி.பி.சி இந்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு, மூன்று நிமிடப்  படத்தை எடுத்து இருக்கிறது.    தங்கள் தேச அடையாளங்களை துறந்து, அகதி என்னும் புது அடையாளத்தை தழுவிக் கொள்ள இருப்பவர்கள், தங்களுடன் எடுத்துச் செல்வது ஒரு கைபேசியை மட்டும்தான். அப்படி கைபேசியுடன் செல்லும் ஒரு அகதி கூட்டத்தின்  கதைதான் அந்த அனிமேஷன் படம்.    கையில் கைபேசியுடன், கடலில் ஒரு அகதி கூட்டம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. பெரும் மழை.இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நிலப்பரப்பில் இருக்கும் தந்தையுடன், ஒருவன் கைபேசியில் உரையாடி சில தகவல்களை பெறுகிறான். அப்போது அவனுடைய கைபேசிக்கு ஒரு தகவல் வருகிறது. 'திரும்ப வந்துவிடு, எல்லை வாயில் மூடப்பட்டுவிட்டது' என்கிறது தகவல்கள். 'இது உண்மையா... நிச்சயமாகவா... உங்களுக்கு எப்படி தெரியும்...? ' என்று கேட்கும்போது கைபேசியில் பேட்டரி சார்ஜ் குறைகிறது.

   மூன்று நிமிடம் உங்கள் தேசங்களை மறந்து, சவுகரியங்களை மறந்து, கடலில் தத்தளிப்பவராக உங்களை நினைத்துக் கொண்டு அந்த படத்தைப் பாருங்கள். 

   உண்மையில் அவர்களுக்கு தகவல்கள் விலைமதிப்பற்றவை என்று புரியும்...! http://www.vikatan.com/news/world/66485-we-need-correct-informations-only--refugees.art
  • மற்றுமொரு  ஈழத்து பாடகி லக்ஸ்மி (கனடா) டி. இமானின் இசையில் பாடி உள்ளார். படம் இன்னும் வெளிவரவில்லை. லக்ஸ்மிக்கு வாழ்த்துக்கள். D Imman   Page Liked · 19 hrs via Facebook Mentions ·        Glad to introduce a Srilankan Tamil singing talent Luksimi Sivaneswaralingam from Toronto,Canada for #Bogan She rendered a Romantic number to Mrs.Thamarai's lyric!      கர்நாடக சங்கீதத்தை முறையாக பயின்றவரும் மேற்கத்தையை இசையில் பல்கலைகளக பட்டம் பெற்றவர் என்பதும்( doing masters in waterloo) பரத நாட்டியத்தை முறையாக பயின்றவரும் சுப்பர் ஸ்ரார் எனும் கனேடிய தொலைக்காட்சி இசை நிகழ்வுக்கு குரல் பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • துருக்கியில் 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களை கைது செய்ய உத்தரவு   துருக்கியில் 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கைது பட்டியலில், துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்லி லிகக் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு ஆயிரக்கணக்கான கைது நடந்தன. கடந்த ஞாயிறன்று, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்தான்புல்லில் உள்ள டக்ஸிம் சதுக்கத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். துருக்கியில் மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பினராக சேர நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/07/160725_turkey_jouranalist_arrest
  • இலங்கை: வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழ் கைதிகளுக்கு நினைவஞ்சலி   இலங்கையில் கடந்த 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜுலை கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்து இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.    வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழ் சிறை கைதிகளுக்கு நினைவஞ்சலி இந்தக் கலவரத்தின் போது, குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இரண்டு பேர் உள்ளிட்ட தமிழ் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களையும், ஏனைய வன்முறைகளின் போது கொல்லப்பட்ட சுமார் மூவாயிரம் பொதுமக்களுக்கும் இந்த நிகழ்வின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது. வன்முறையாளர்களினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலை என வர்ணித்திருந்தார். அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை வன்முறைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்ளிட்ட சிங்களத் தவைர்கள் பின்னர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரியிருந்தனர். அத்துடன் இத்தகைய வன்முறைகள் மீண்டும் இடம்பெறாது என உறுதியளித்தனர். இந்த அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜி லிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர, கறுப்பு ஜுலை கலவரத்தின் பின்னரும் தமிழர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு, அவற்றுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத்தக்க வகையில் அரசியல் தீர்வு ஒன்று விரைந்து காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160725_black_july
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,260
  • Most Online
   1,326

  Newest Member
  Parthi Appuparthi
  Joined
 • Images

 • Today's Birthdays

 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   158,059
  • Total Posts
   1,040,942