Jump to content

கண் மறைந்த ஓவியம்


arjun

Recommended Posts

அதிகாலை லண்டனில் இருந்து ரவிராஜ் போன் ,அடுத்த கிழமை கனடா வருகின்றேன் ஒரு வார இறுதி நாளை ப்ரீ ஆக வைத்திரு,மற்றது உன்ரை பழைய ஆளின் கணவர் மண்டையை போட்டுவிட்டார் ,எனக்கும் துரத்து சொந்தம் தானே போக இருக்கின்றேன் என்றான் . நான் போனை வைத்துவிட்டு திரும்ப படுத்துவிட்டேன்.பின்னர் அதுபற்றி மறந்தும் விட்டேன்.

ஏனோ பின்னேரம் போல பழைய படம் ஓடத்தொடங்கியது.அப்போ தான் O/L PASS பண்ணி A/L போன காலம், சோட்ஸ்சும் பான்ஸ்சும் மாறி மாறி போட்ட வயது.பாடசாலை முடிந்ததும் எந்த அலுவல் இருந்தாலும் அதைவிட்டு ஓடிவந்து 3.45 பஸ்ஸை பிடித்து வீடு வந்து ஊரில் இருக்கும் மைதானத்திற்கு ஓடும்காலம்.என்னால் ஏழு நாட்களும் அந்த மைதானத்திற்கு போகாமல் இருக்க முடியாது .CRICKET,FOOTBALL இதுவே எனது LIFE .இரவு வந்து படித்தால் காணும்.இந்த 3.45 பஸ்ஸை விட்டால் அடுத்த SCHOOL BUS 4.30 இற்கு சென் ஜோன்ஸ் ,சுண்டுக்குளி,சென்றல்,வேம்படி எல்லாம் ஏத்தி ஆடி அசைந்து வரும்.சில நாட்களில் நான் சற்று பிந்தி வந்தும்,பாஸ் சற்று முந்தி போயும் இருக்கும் சந்தர்பங்களில் நிரம்பி வரும் SCHOOL BUS எடுத்திருக்கின்றேன்.ஒரே கூச்சலும்,குழப்பமுமாக இருக்கும்.அதுவும் பெட்டைகள் ரைவர் கொஞ்சம் சரித்து வெட்டினால் காணும் சரோஜாதேவி கணக்கு வீல் என கத்துவார்கள்,அதை விட கொக்குவில் ரெக்குக்கு மாணவர் என்று வரும் இருபது வயது முதியவர்களை கண்டால் தங்காது.இறுக்கிய பான்சும் ஒரு அகல பெல்டும் சகிக்காது.

அன்றும் அப்படித்தான் அரும்போட்டில் முதல் பஸ்ஸை கோட்டைவிட்டு SCHOOL BUS எடுத்து எரிச்சலில் இருக்கின்றேன் .ரெக் தாண்ட முதியவர்களும் இறங்க பஸ் கொஞ்சம் வெளித்துவிட்டது.சும்மா திரும்பி பின்னால் பார்தேன்.தோய்ந்து விரித்த தலையில் ஒரு வெள்ளை அலிஸ்பான்ட்,சராசரி எமது பெட்டைகள் மாதிரி பத்துதரம் துவைத்து மஞ்சள் அடித்த வெள்ளை யுனிபோமில் இல்லாது வெள்ளை வெளீர் என ஏதோ பொலிஎஸ்டர் துணியில் யுனிபோம்,வெள்ளை சொக்ஸ்,டென்னிஸ் சூ, குமுதத்தில் போன்விற்றா விளம்பரத்திற்கு வரும் சிறுமி போல் பளிச்சென்ற முகம்.அதில் ஒரு சின்ன கருப்புபொட்டு. அந்த பெட்டை என்னை காணவே இல்லை.நான் முதன் முதல் இப்படியும் ஒரு விஷயம் இருக்கு என்று சிறிது உணர்ந்த நாள் அன்றுதான் .எனது இறங்குமிடம் வர அதுவும் எழும்பி எனக்கு முன்னால் இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து ஒரு குச்சொழுங்கையில் திரும்பி மறைந்துவிட்டது.ஏதோ என்னை இழுத்துக்கொண்டு போய்விட்டதை போல உணர்ந்தேன்.எனது வீடு அடுத்த பக்கம் என்றாலும் அரை மைல் தொலைவில் ஒரு உலக அதிசயமா?

அன்றுதான் முதன் முதன் அரக்க பறக்க விளையாட ஓடாமல் ஆறுதலாக மைதானம் போகின்றேன்.

தொடரும்

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் அண்ணா உங்கள் காதல் கதையை நாமும் கேட்போம் :) ஆனால் கணக்க இடைவெளி விட வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான இடத்தில் நிறுத்தி விடீர்கள் தொடரூ ங்கோ சீக்கிரம். :lol:

Link to comment
Share on other sites

முள்ளும் மலருமா அர்ஜூன் :lol: :lol: ? உங்களுக்கு ஏற்ற இடம் கதைகதையாம் பகுதியே . உங்கள் திறமை அரசியலில் வீணாவதை அறவே வெறுக்கின்றேன் . இலக்கியப்பரீச்சயம் உள்ளவர்களால் தான் தங்களது படைப்புகளை நுணுக்கமாகச் செம்மைப்படுத்த முடியும் . இதை வழமை போல் தொப்பென்று விடாது எனக்கு நல்ல கதையைத் தாருங்கள் :) :) .

Link to comment
Share on other sites

அர்யுன்,

கண் மறை(ற)ந்த ஓவியத்தை தீட்டி முடிச்சு தாங்கோ.

இப்போ கதையெழுத ஆரம்பிச்சிருக்கிறீங்கள். கதையில் கவனத்தை ஆழப்படுத்தி ஒரு முழுமையான படைப்பை கொண்டு வாருங்கள்.

பொட்டெண்டு தொடரும் போடாமல் கதையை முழுசாப் போடுங்கோ அல்லது பெரிய பிரச்சனை வரும் சொல்லியிருக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், அர்ஜுன்! கதை நன்றாக ஆரம்பிக்கின்றது!

வயசுக்கு வந்த நேரம் போல கிடக்கு!

Link to comment
Share on other sites

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் அவளைப்பற்றி எனக்கு வேண்டிய விபரங்கள் பலரிடம் மெல்ல கதைவிட்டு பிடி கொடுக்காமல் புடுங்கி எடுத்துவிட்டேன் .

பெயர் மேனகா ,வேம்படியில் ஒன்பதாம்? வகுப்பு,தகப்பன் கல்வியதிகாரி வில்லன்கள் மூன்று, அதுதான் அண்ணன்மார்கள்(காதலுக்கு மரியாதை) பிள்ளை தகப்பன்ரை காரில தான் பள்ளி போய் வாறது,இடைக்கிடை எப்போதாவது பின்னேரம் பஸ். அந்த குச்சொழுங்கை நேர அவர்கள் வீட்டிற்குத்தான் போகுது, சயிக்கிளில் உள்ளுக்கு விட்டு சுத்தியடிக்கேலாது. பரதநாட்டியம் பழகுது,(ஆளை பாக்கேக்க யோசிச்சனான்).நெட்போலும் விளையாடுகின்றதாம்.

பயோடேட்டா எடுத்து என்ன செய்கின்றது. SCHOOL BUS எடுத்தும் ஆளை காணக்கிடைக்குதில்லை.பழையபடி 3.45 BUS இற்கு மாறிவிட்டேன்.ஒரு மாதம் ஓடியிருக்கும், ஒரு சனி அரைநாள் பாடசாலை (போயா,பிறிபோயா காலம் சனி அரை நாள் பாடசாலை) முடிய பஸ்சில் வந்து இறங்குகின்றேன் ஆள் வேறு சில பெட்டைகளோட மற்ற பக்கமாக நடந்துவந்து கொண்டிருக்கு.முடக்கில் இருக்கும் கடைக்காரரிடம் (அயலவர்தான்) அண்ணை உதில போட்டுவாறன் எண்டு சயிக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு ஒரே உழக்கு. உலகஅதிசயம் கொஞ்சம் ஓவர்,ஆனால் வந்தவர்கள் மத்தியில் தேவதைதான்.இடுப்புக்கு மேல மார்போடு புத்தகக்கட்டை இடக்கையால் எடுப்பாக அணைத்தபடி , நிமிர்ந்த நடை,செல்வமும் செருக்கும்அதில் கலந்திருந்தது இன்று அலிஸ்பான் இல்லை,ஒற்றைபின்னல். அவர்களை விலத்தும் போது முதன் நாளே என் தூக்கத்தை துலைக்க பண்ணிய அந்த கண்களைப்பார்தேன்.சுட்டும் சுடர் விழி என பாரதி பாடியது நிச்சயம் இதைதான்.நான் பார்ப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக சிறிது தூரம் போய் யூ டேர்ன் அடித்து திரும்பி வர ஒழுங்கைக்குள் ஆள் போய்கொண்டிருக்கின்றது.

இனி அடுத்த அரைநாள் சனி வரும்வரை என்னசெய்யபோகின்றேன்.விளையாடப்போகவும் மனமில்லை.ஆனால் எப்படியும் போகவேண்டும்.வீட்டில் இருந்து என்ன செய்வது.

தேவையில்லாமல் அடிக்கடி முடக்கு கடையடியில் வந்து நின்று ஒழுங்கையால் கார் வெளியில் வருகின்றதா எனவேறு பார்க்க தொடங்கிவிட்டிருந்தேன். அப்பிடி வந்தாலும் நம்ம ஆள் இல்லாமல் அப்பன் மாத்திரம் போவான். நான் வேறு chemistry, physics tuition பாடசாலை முடிய எடுக்கதொடங்கியிருந்தேன்.

அடுத்த அரைநாள் சனி வந்தது,பாடசாலை முடிய ஒரு அலுவல் என நண்பனையும் கூட்டிக்கொண்டு யாழ்பஸ்ராண்ட் நோக்கி நடைபோடுகின்றேன்.சனி school bus இல்லை ஆள் இங்குதான் வரும் என மனம் கணக்கு போட்டிருந்தது.நண்பனுக்கு விளங்கக்கூடாது என்பதற்காக அம்மா சொல்லிவிட்டவா எனச்சொல்லி பூபாலசிங்கம் புத்தகசாலையில் குமுதத்தை வாங்கிக்கொண்டு போய் கியூவில் நிற்கின்றோம். கணக்கு தப்பவில்லை ஆள் வருகுது .நான் பட்ட அவஸ்த்தையில் நண்பனுக்கும் ஏதோ விளங்கிவிட்டது. "என்ன யாரையும் பார்க்க வந்தனியோ" என்றான்.உந்தா ஆள் வருகின்றது, ஆளைப்பார் என காட்டினேன்.அதற்கிடையில் அவர்களும் வந்து கியூவில் பின்னுக்கு நிற்க தொடங்கிவிட்டார்கள்.

மெதுவாக திரும்பி பார்த்தேன்.அவளின் கண்களில் ஒரு சந்தேகபொறி தெரிந்தது.அண்ணர் தன்னை தான் பார்க்க வந்திருக்கின்றாரோ என்ற கேள்வி அதில் தெரிந்தது.

"டேய் மற்ற பஸ்ஸை எடுத்து வீட்டை போவம்.நீ யாரிட்டையோ வாங்கிக் கட்டப்போகின்றாய்" நண்பன் காதில் குசுகுசுத்தான்."இண்டைக்கு ஒருநாள்தான் தானே சும்மா வா" என அவனை அதட்டினேன்.

ஒரே பஸ்சில் ஏறி,ஒரே இடத்தில இறங்கி அவர்களுக்கு பின்னாலேயே நடந்து ஒழுங்கைக்குள் பூர மட்டும் ஒரு மாதத்திற்கு சேர்த்து பார்த்து விட்டது போலொரு உணர்வு.அவளுக்கும் ஏதோ விளங்கிவிட்டது என உள்ளுணர்வு சொல்ல மனம் துள்ளி குதித்தது.இன்று விளையாட வரும் கிரிகெட் டீம் காலி என பட்சி சொன்னது .உண்மையிலும் அதுதான் நடந்தது. சும்மா அடிக்க சிக்ஸ் சிக்சாக போனது.ஏதோ சாதித்துவிட்டது போலொரு நினைப்பில் அன்று படுக்கையில் கிடந்து உருண்டேன்.

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

நல்லாயிருக்கு.. :wub: தொடருங்கோ.. :rolleyes:

Link to comment
Share on other sites

அண்ணர் லண்டன் போனபின் ஒரு முகப்பு ரூம் எனக்காகி விட்டிருந்தது.சோட்ஸ் இனி பாடசாலைக்கு போடுவதில்லை என தீர்மானிச்சாச்சு. BOTANY,ZOOLOGY PRACTICAL COPY களுக்கு நல்ல கலர்புல் கவர் போட்டு, அத்தான் லண்டனில் இருந்து தங்கச்சிக்கு அனுப்பிய WOODBOX இற்குள் கலர் பென்சில்களை அடுக்கி (பறித்து எடுத்தது ) சும்மா அந்தமாதிரி வெளிக்கிட்டு (படம் இருக்கு பார்த்தால் பயந்துவிடுவீர்கள் பெல்போட்டத்தின் அகலம் அந்த மாதிரி ). ஐயா பறக்க ஆரம்பித்து விட்டார். தினமணி கதிரில் வந்து கொண்டிருந்த புஷ்பா தங்கதுரையின் "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகின்றது " தொடர் நாவல் என்னை இன்னமும் உசுப்பேத்தி ஒரு தெய்வீககாதல் இங்கு உருவாகின்றது என சத்தியம் எடுக்க தயாரானேன்.

அடுத்த சந்திப்பு எப்போ என்பதைவிட அவளை பார்த்த கணங்களை அசைபோடுவதில் மனம் இன்பம் கொண்டிருந்தது. நம்பமுடியாத நிகழ்வாய் ஒரு காலை பஸ்சுக்கு அவள் காத்து நிற்கின்றாள்.என்னை அவள் பார்த்த கணமே அவள் எனக்காகத்தான் அந்த திசையில் பார்வையை எறிந்து விட்டிருந்தாள் என அவள் பார்வையே சொல்லி திரும்பியது.

கண்கள் கதை பேச,நண்பர் ,சக மாணவர் ,பஸ் நிற்குமிடங்கள் எதுவுமே அறியாமல் நாம் இருவர் மட்டும் அந்த பஸ்சில் பயணிப்பது போல கண்களால் கதைகள் தொடர்கின்றது.தேவதை என் கோவிலில் குடியேறிவிட்டாள் என பூரணமாக உணர தொடங்குகின்றேன்.இதைவிட மகிழ்வான தருணம் உலகத்தில் இல்லை என்பது போல் ஒரு நிலையில் திளைத்திருகின்றேன்.

அன்று பாடசாலையில் என்ன படிப்பித்தார்கள் என்றே தெரியவில்லை.எண்ணம் முழுக்க நிறைந்து என்னை ஆட்டிப்படைக்க தொடங்கியிருந்தது அவள் நினைவு. டைம்டேபிள் போட்டு வைத்ததுபோல் பாடசாலை,வீடு,டியுசன்,விளையாட்டு என்பன தொடர்ந்தாலும் இருபத்திநாலு மணி நேரமும் அவள் நினைவுதான் என்னை ஆட்கொண்டிருந்தது.காலை எழும்பி எதைபோடுவது என்பது தொடங்கி, படுக்கும் போது இப்ப அவள் என்ன செய்துகொண்டிருப்பாள் என்பது மாதிரியான கனவுகளிலேயே மிதந்தேன். சிலவேளை காலை,சிலவேளை மாலை ஸ்கூல் பஸ் என அவள் அடிக்கடி வரத்தொடங்கினாள்.அது எனக்காக அவள் தனது வீட்டையே ஏமாற்றிக்கொண்ட ஏற்பாடாக எனக்கு பட்டது.

பார்வை ஒன்றாலேயே நாட்கள் ஓடிக்கொண்டிருந்த நிலை மாறி நண்பர்களுடன் பேசுவது போல் நானும்,அதே போல் அவளும் கதைகள் பேசத் தொடங்கியிருந்தோம்.கிடைத்த சந்தர்ப்பங்களில் மிக நெருக்கத்தில் வந்து நல்லாத்தான் இருக்கின்றீர்கள் என வார்த்தையால் வருடவும் தொடங்கியிருந்தேன்.

அடுத்த அரைநாள் சனி.யாழ் பஸ் ஸ்ராண்டிற்கு அதே நண்பனுடன் பறக்கின்றேன்.எமது குறுகிய நண்பர் வட்டத்தில் எல்லாம் தெரிந்த கதையாகி விட்டிருந்தது.பஸ்சில் ஏறுகின்றேன் நண்பனுடன் "அங்க பஸ் வராதென்று சில பேர் இவ்வளவு தூரம் நடந்து வந்து இங்க பஸ் பிடிக்கினம் ". தொடர்ந்த பெட்டைகளின் சிரிப்பு என்னை நாசகாரம் செய்துவிட்டது.அப்படியே போய் முன் கதவால் இறங்கியவன் தான்,அடுத்த பஸ் எடுத்து வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.எனக்கென்று சுய மரியாதையும்,ஒரு பிரிவிலேயையும் அந்த நேரமே வளர்த்துவிட்டிருந்தேன் என்னால் தாங்க முடியவில்லை,இனி அவள் வேண்டாம் என முடிவு எடுத்துவிட்டேன்.பழயபடி படி கிரிக்கெட், படிப்பு,அதைவிட அப்பாவிடம் சயிக்கில் வாங்கி தரும்படியும் கேட்டேன்.

ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில் பெடி ஒன்று வந்து பாடசாலையில் ஒரு கடிதத்தை நீட்டியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்னனை அந்த மாதிரி இருக்குது.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில் பெடி ஒன்று வந்து பாடசாலையில் ஒரு கடிதத்தை நீட்டியது

என்ன எழுதியிருந்தது ....கேட்காவிடில் எனக்கு தலை வெடிக்கும்போலகிடக்கு......தொடருங்கோ....</p>

Link to comment
Share on other sites

கதை நல்ல சுவாரசியமாக இருக்கிறது. முன்பே எழுதத் தொடங்கியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக நல்ல நடையில் எழுதுகின்றீர்கள் அர்ஜுன்! தொடருங்கள் வாழ்த்துகள்! காதல் தேவதைகள் சூழ்ந்து நின்று "லாலிலா" இசைக்கின்றன! :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவதை மாதிரி இருப்பவரைப் பார்க்க வெளிக்கிட்ட பின்னர் என்ன சுயமரியாதை, மனவுறுதி எல்லாம் வேண்டிக்கிடக்கு!

கடிதங்கள் கொடுத்த அனுபவம்தான் இருக்கு, ஆனால் ஒரு பதிலும் கிடைத்ததில்லை! கடிதம் கொடுக்காமலேயே கடிதம் பெற்ற அதிர்ஷ்டசாலி அர்ஜுன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் :lol: ...........அர்ஜுனுக்குள் ஒரு கதாசிரியன். ...........

Link to comment
Share on other sites

அர்ஜுன்! இதுவரை தாங்கள் எழுதிய அனைத்தையும் மிகவும் ரசித்துப் படித்தேன் . அருமையான காதல் கதை! பதின்ம வயது காதலுக்கு உள்ள வேகமும் தாகமும் வேறெதிலும் கிடைப்பதில்லை! ( சொந்த அனுபவம்தான் :D )

தயவுசெய்து... இந்த இனிமையான காதல்கதையில் எந்த அரசியலையும் கலந்து விடாதீர்கள் அர்ஜுன்.(பணிவான வேண்டுகோள் மட்டுமே :) ) காதல் கதை அத்தனை இனிமையாய் இருக்கின்றது! :) தொடரட்டும்!

காதலுக்கு நான் எப்பவும் பச்சை காட்டத் தவறமாட்டேன்! :D

Link to comment
Share on other sites

எங்களுடன் பஸ்சில் வரும் பெடிதான்,கடிதத்தை தந்து விட்டு ஓடி விட்டது, மெல்ல வாங்கி பொக்கெற்றுக்குள் அமத்திவிட்டன். எப்ப சோட்இண்டர்வெல் வரும் என்ற நினைப்பில் இருந்தேன். ஒவ்வொரு பாடமும் முடிய அடிக்கும் மணியோசை அன்றுதான் நாதமாக காதில் பாய்ந்தது .இப்ப கடிதத்தை எங்கே கொண்டுபோய் வாசிப்பது என்ற பிரச்சனை.

எந்த நேரமும் ஒரு கூட்டத்துடன் சுத்தி திரியும் நான் என்னென்று எல்லாரையும் காய் வெட்டுவது ,தற்செயலாக யாரின் கண்ணில் அகப்பட்டால் அதோ கதிதான் ,பாடசாலை நோட்டிஸ்போட்டில் கடிதத்தை போட்டதற்கு சமன், சபாலிங்கம் பிரின்சிபல் பிறேயர் மண்டபத்திற்க கூப்பிட்டு எல்லோருக்கும் முன்னால அடிக்ககூடிய ஆள். எதற்கும் வீட்டில போய் வாசிப்பும் என இருக்க சோட் இண்டேர்வேல்லும் ஓடிவிட்டது.

லஞ்ச் பிரேக் விட்டதும் கட்டிக்கொண்டு வந்த இடியப்பதை மள மள என விழுங்கிவிட்டு இருப்புகொள்ளாமல் நண்பன் ஒருவனிடம் சயிக்கிளை இரவல் கேட்டு வாங்கிக்கொண்டு வெளிய வந்தால் திரும்பும் திசையெல்லாம் யாரோ ஒரு மாணவன் நின்று என்னை பார்ப்பது போலொரு உணர்வு, . மெல்ல சயிக்கிளை மனோகரா தியேட்டருக்கு அருகில் இருக்கும் புத்தக கடையடியில் நிறுத்தி ஏதோ புத்தக லிஸ்ட் பார்ப்பது போல் கடிதத்தை வாசிக்கின்றேன்.

"நான் பகிடியாக சொன்னதை இவ்வளவு சீரியஸாக எடுப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை, SORRY. நீங்கள் உண்மையில் என்னை விரும்பினால் இன்று SCHOOL BUS இல் சந்திப்போம்". பெயர் ஒன்றும் இல்லை. பறப்பது போல் ஒரு உணர்வு.நல்லவேளை "அடியே கொல்லுதே" பாடல் அந்தநேரம் வெளிவரவில்லை.

எதுவும் நடவாதது போல் school bus இல் ஏறுகின்றேன்,ஆளின் முகத்தில் ஒரு பதட்டம்,கடிதம் கொடுத்துவிட்ட பெடிய வேறு தேடுகின்றா என தெரிந்தது,பெடி முதல் பஸ்சிலேயே போயிருக்கும்.நான் மெதுவாக பஸ்ஸிற்குள் போகின்றேன் .

"கன காலத்திற்கு பின் காத்து இந்தப்பக்கம் அடிக்குது", இது வேற ஒண்டு,இதுவும் என்னை மிஸ் பண்ணியதோ தெரியாது. "பயப்பட வேண்டாம்,இனி ஒழுங்காக அடிக்கும் "என நானும் பதிலுக்கு சொன்னேன்.

வழக்கம் போல் பார்வையை மட்டுமே பரிமாறி கொண்டாலும்,முகத்தில் ஒரு கேள்விகுறி தெரிந்தது,இறங்கும் இடம் நெருங்க பொக்கெற்றுக்க கையை விட்டு கடிதத்தை வெளியில் எடுத்து பிரிக்காமலே "இண்டைக்கு கனக்க கோம்வோக் வந்து ட்டுது" என்றேன். ஆள் சிரித்தபடி இறங்கி ஒழுங்கைக்கு போக முதல் பத்துதரம் திரும்பி பார்த்து,மறையும் போது கையை பின்பக்கம் நீட்டி ஒரு சைகை.

கடிதத்தில் அனைத்தும் எழுதிகொட்ட தொடங்கிவிட்டோம்.கொப்பி கவருக்குள் கடிதத்தை வைத்து பரிமாறுவது பெரிய கஷ்டமாக இருக்கவில்லை.ஒழுங்காக கடித முடிவில் ஒரு சினிமா பாட்டு இருக்கும்.பின் அந்த பாட்டுக்கள் வானொலியில் போகும்போது மனதிற்குள் சிரித்துகொள்வேன்.( இன்றுவரை அது தொடர்கின்றது,விழியே கதை எழுது, நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பட்டியல் ரொம்ப நீளம்).இவ்வளவிற்கும் தனிய school bus சந்திப்பு தான்.கலர் உடுப்பில் இன்னமும் காணவில்லை.வீட்டிலேயே ரியுசன்.கோவில் திருவிழா பக்கம் எட்டிப்பார்பதே இல்லை. நானும் எனது அதே வாழ்க்கை ஒழுங்கு.இருவர் வீடுகளிலும் எதுவும் தெரியாது. பஸ்சிற்குள் கிசு கிசு இருந்தது.கடித போக்குவரத்து ஒரு குருவிக்கும் தெரியாது

நான் போன்விட்டா என பட்டமும் வைத்து இரவு எனது டியுசன் முடிந்து வரும் போது சிலவேளை கத்துவேன் ,அண்ணன்மார் சொன்னாங்களாம் யாருக்கோ போண்டா பட்டம் குரங்குகள் கத்திக்கொண்டு போகுதுகள் என்று. பஸ்சில் வராத நாட்களில் சிலவேளைகளில் தகப்பனின் காரில் பஸ்ஸை விலத்தும் போது வெளியில் ரோசாப்பூ ஓன்றை வைத்து கை அசைபடும்.நேரில் கதைப்பது இல்லை ,வெளியில் சந்திப்பது இல்லை ஆனால் கடிதம் மூலம் வெகு அந்நியோன்யம் ஆகி விட்டோம்.உனக்கு நான்,எனக்கு நீதான் என்பது போலாகிவிட்டது.

ஆவணி பிறந்து நல்லூர் திருவிழா தொடங்க கோவில் வீதியில் அவளை காவ்சாறியில் பார்க்க,

"நல்லூர்வீதியில் தேர் ஊர்வலம் வருவது ஒரு நாளில்லை இவள் வரும் நாளெல்லாம்" என்றாகி விட்டிருந்தது. பல நண்பர்களுக்கு அப்போ தான் உரிமையுடனும் பெருமையுடனும் ஆளை காட்ட தொடங்கினேன்.

முதன் முதன் பார்த்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகின்றது.ஆளுக்கு மார்கழியில் O/L EXAM, எனக்கு சித்திரையில் A/L EXAM சோதினை முடிய மார்கழி விடுதலை காலங்களில் எப்படி சந்திப்பது,என்ன மாதிரி கடிதம் பரிமாறுவது இதையெல்லாம் பற்றி சிந்திக்கவில்லை.மீண்டும் பாடசாலை தொடங்கும் தானே,SCHOOL BUSஓடும் தானே என்ற நினைப்பு.ஆனால் அதுதான் இல்லை.சோதனை முடிய பெரும் சோதனை வந்தது.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நெஞ்சு பட படவென்று அடிக்கின்றது!

Link to comment
Share on other sites

ம்ம்.............ம்ம் .................... தொடருங்கோ..................

சில சம்பவங்கள் சொந்த நினைவுகளையும் மீட்டிச் செல்கிறது.

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம் நல்லாத்தான் போகுது! சித்திரையில் A/L Exam!!!!!! :rolleyes: அப்ப நீங்கள் எனக்கு தம்பிதான்! :lol:

(அய்யையோ... இதுக்கு முன்னர் ஆவணி விடுத்து சித்திரையில்தான் A/L Exam வச்சாங்களோ எண்டு தெரியலயே :unsure::huh: )

Link to comment
Share on other sites

பாட்டு ரசனை, கதை எல்லாம் அந்த மாதிரித் தான் போய்க்கொண்டிருக்கு. நீங்களும் யாழ் இந்துவின் சொந்தங்களில் ஒன்று போல? நாங்க படிச்ச காலத்தில சபாலிங்கம் என்று முன்னைய அதிபர்கள் வரிசையில் ஒரு படம் மட்டும் தான் தொங்கினதைப் பாத்த ஞாபகம். அல்லது இது வேறு சபாலிங்கமோ? காலங்கள் வேறென்றாலும் யாழ் இந்துவின் நினைவுள் ஒரு தனி தான்.

இந்தக்கதையில நான் ஆவலாக் காத்துக்கொண்டிருக்கிற கட்டம், இத்தனை வருடங்களின் பின்னர் அவவின் துயரில் பங்கெடுக்க நீங்கள் சென்றபோது நிகழ்ந்த சந்திப்பின் வர்ணனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் உள்ளதைகக்கி வெளிலை எடுக்க முதல் கடைசியாய் வந்த இரண்டு பேரும் குறுக்காலை வந்து குழப்பிட்டாங்கள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.