Jump to content

கொழும்புப் இன அழிப்பு அரசின் போர்குற்றங்களின் இன்னொரு பரிமாணமாக இடம்பெயரும் மக்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் ஆரம்பம் - கஜேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புப் இன அழிப்பு அரசின் போர்குற்றங்களின் இன்னொரு பரிமாணமாக இடம்பெயரும் மக்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் ஆரம்பம் - கஜேந்திரன்

யாழ்ப்பாணத்தின் வடமாராட்சிக் கிழக்கு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோடைப்பகுதிகளில் அண்மையில் சிங்கள இனக்கொலை ராணுவத்தால் பிடிக்கப்பட்டு "தடுப்பு முகாம்களில்" சிறை வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது உறவினர்களிடம் விசாரணை என்ற பெயரில் பல பெண்களை அழைத்துச் செல்லும் ராணுவம் அவர்களை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவருவதாக முறையிட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கடந்த புதன்கிழமை தெரிவித்திருக்கிறார். ஆகவே தொடர்ந்தும் இந்த இனக்கொலையை நியாயப்படுத்தியும், முன்னின்று இயக்கியும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழர்களைச் சரணடையுமாறும் ஆலோசனை வழங்கும் எவரும் இந்த இனக்கொலையின் பங்காளிகள் ஆகிவிடுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு சிங்கள இனவெறி ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வேட்டையாடப்பட்ட பெண்களின் உறவினர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கு நடந்த கொடுமைகள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். 99 வீதம் சிங்கள இனத்தவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இனவெறி ராணுவத்தால் செய்யப்பட்டதாகக் கருதப்படும் பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவர ஆரம்பித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர் மீதான கட்டுப்பாடற்ற அடக்குமுறையை நீண்டகாலமாக அனுபவித்து வரும் சிங்கள ராணுவத்துக்கு எதிராக இந்த அநியாயங்களைத் தமது உயிரச்சம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லத் துணியாததினால் ஒரு மிகப்பெரிய காட்டுமிராண்டித் தனம் மவுனமாக அரங்கேறி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழர்களை அடிமைப்படுத்தவென நடக்கும் இந்த இன அழிப்புப் போரில் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சி எனும் சிங்கள ராணுவத்துக்கு இயல்பாகவே அமையப்பெற்ற கலாச்சாரம் என்பது தமிழரின் உணர்வுகள் மீதான தாக்குதல் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகிறது.

பாலியல் வன்புணர்வுகள் மட்டுமல்லாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு கூட இல்லாமல் இறந்த தமிழரின் நிர்வாண உடல்களை பார்க்கத் துடிக்கும் போர்வெறி கொண்ட சிங்கள அரக்கத்தனத்தை இந்த நவீன உலகு கண்டுகொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்ப் பெண்களுக்கு நடக்கும் அக்கிரமங்களைக் கண்ணுற்ற தென்னாசிய நாடொன்றின் தொழிலதிபர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் " இதுவே ஒரு அரபு நாடாக இருந்திருந்தால் இதற்கான பதில் நடவடிக்க மிகப் பாரதூரமாக இருந்திருக்கும்" என்று சொன்னார்.

தற்கொலைத் தாக்குதலுடன் தமிழர் கலாச்சாரத்துகுத் தொடர்புகள் இருப்பதாகக் கருதிக்கொண்டு அதன் மூலகாரணத்தை அறியும் நோக்கில் தமது "தமிழ் நண்பர்களை" அடிக்கடி தொந்தரவு செய்துவரும் சிங்கள சமூகவியலாளர்களுக்கு இதைக் காட்டிலும், தமது சொந்த இனத்தின் மனோநிலை பற்றிய ஆய்வொன்றினைச் செய்வது மிக இலகுவாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல், பெரும்பான்மையின மக்கள் செய்யும் அடக்குமுறைகளின் பின்ண்ணணியை சர்வதேசம் விளங்கிக்கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

கொழும்பிம் இன அழிப்புப் போருக்கு ஆதரவு கொடுத்துவரும் இந்தியாவும், இன்னும் சில உலக சக்திகளும் தாம் செய்வதன் விளைவு எப்படியிருக்கும் என்று தெளிவாக உணர்ந்துகொண்டும் அதைச் செய்கின்றன. வெறும் உதட்டளவில் இவர்களால் உச்சரிக்கப்படும் மனிதவுரிமைகளைப் பேணல் எனும் கோரிக்கையானது ஒருபோதுமே சிங்கள அரசினால் மதிக்கப்படவோ அல்லது நடைமுறைப்படுத்தப்படவோ இல்லை.

அவர்கள் இந்தப் போர்க்குற்றங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முன்வருவார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்புடன் நல்லுறவைப் பேணிவரும் ஓய்வுபெற்ற அமெரிக்க அதிபர் புஷிலிருந்து, இன்றைய இந்திய அமைச்சர் சிவ சங்கர் மேனன் உள்ளடங்கலாக இந்தப் போர்க்குற்றதில் பங்கெடுத்துக்கொண்டவர்களின் பெரிய பட்டியல் ஒன்றே இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா என்கிற சொல்லை உச்சரிக்கும் ஒவ்வொரு கணமும் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்தி முடித்த அட்டூழியங்கள்தான் தமிழர் மனதில் கொதித்துக்கொண்டிருக்கும், இதை இன்றுவரை காங்கிரஸ் அமைப்பு அறிந்துகொள்ளவில்லை.

உலகம் இன்றுவரை உண்மையான போர்க்குற்றம் புரியும் நபர்களுக்கெதிரான சர்வதேச சட்டமுறை ஒன்றை கண்டுபிடிக்கவில்லை.

காலம் காலமாக தமிழ்ப் பெண்கள் மீதான திட்டமிட்ட பாலியல் வல்லுறவுகள், கொலைகள் என்பதைச் சிங்கள ராணுவம் செய்துவருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சி.....

பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் ஒரு சில பெண்கள் மட்டும் தான் மீன்டும் தமது குடும்பங்களுடன் இணைந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், நீர்கொழும்பு பகுதிகளில் சிங்கள ராணுவத்தால் நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை 2001 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு அனுப்பியிருந்த கோரிக்கையில், " உடனடியாக இவ்வாறான பாலியல் வல்லுறவுகளைத் தடுத்து நிறுத்துமாறும், குற்றவாளிகளை உடனேயே சட்டத்தின் முன் நிறுத்துமாறும் " கேட்டிருந்தது.

னோர்வே நாட்டின் அனுசரனையுடன் அமுலாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்ட 2002 ஆம் ஆண்டில் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தலைப்பிட்டு எழுதியிருந்து," இலங்கை : காவல்த்துறையின் கைகளில் நடக்கும் பாலியல் வல்லுறவுகள்" என்பதுடன் "இன்றுவரை தமது கோரிக்கைக்கு சிங்கள அரசால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

சித்திரவதைகளுக்கெதிரான உலக அமைப்பு 1998 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதமொன்றில், "தமக்கெதிரான குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்டவர்கள் தமதும், தம் குடும்பத்தவரதும் உயிர் இழப்புகளுக்கு அஞ்சி சொல்லாமல் மறைப்பதைக் காரணமாக வைத்துக்கொண்டு சிங்கள ராணுவம் பெண்கள் , சிறுமிகள் மேல் கட்டுப்பாடற்ற பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டு வருகிறது" என்று குறிப்பிட்டிருந்தது.

அதே ஆண்டில் சர்வதேச கல்வி அபிவிருத்தி எனும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய அறிக்கை ஒன்றில் , காலம் காலமாக தமிழ்ப் பெண்கள் சிறுமிகள் மீதான சிங்கள ராணுவத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிட்ட பாலியல் வல்லுறவுகள் ஒரு அடக்குமுறை ஆயுதமாக பாவிக்கப்பட்டு வருவதை விபரங்களுடன் தம்மால் ஆவனப் படுத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது.

அரச சார்பற்ற மனிதவுரிமை அமைப்புகள் தொடர்ச்சியாகவே பாலியல் வல்லுறவுகள் தொடர்பான சிங்கள ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடற்ற கலாச்சார அனுமதி பற்றி குற்றஞ்சாட்டி வருகின்றன.

முற்றும்.

நன்றி தமிழ்நெட்

தமிழாக்கம் ரகுனாதன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது எல்லா கட்சிகளிலும் உள்ள ஒரு நிலைதான்.. யாரை விழுத்தி எப்படி உயர்வது எனத் தொடங்கி.. கட்சி மாறுவது வரை..   
    • வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - அமெரிக்க தூதுவர் Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 04:50 PM   வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) சந்திப்பு நடைபெற்றது.  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கால்நடை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும், இயந்திர தொழில்நுட்ப பயன்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது  ஆளுநர் தெரிவித்தார். காணி விடுவிப்பு, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார்.  ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்படுவதாகவும் ஆளுநர் கூறினார்.  மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்ககூடிய கண்காட்சி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம்,  ஆளுநர் கேட்டுக்கொண்டார். வடக்கிற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்புகளை  ஆளுநரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.  27 வருடங்களின் பின்னர் அமெரிக்க அமைதி காக்கும் கழகத்தின் ஊடாக இலங்கையில் இலவச ஆங்கில மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கூறினார். https://www.virakesari.lk/article/183799
    • Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 03:49 PM   சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்தின் தாயாரின் வீட்டிற்கு சென்ற சிஐடியினர் விசாரணையில் ஈடுபட்டடுள்ளனர் திருகோணமலையில் உள்ள தனதுதாயாரின் வீட்டிற்கு சிஐடியினர் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது  இன்று காலை 10 மணியளவில் மூன்றாவது தடவையாக எந்த முன் அனுமதியுமின்றி CIDயினர் திருகோணமலையில் உள்ள எனது அம்மாவின் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டார்கள்.  இங்கு கொழும்பில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்கள் என் சார்ந்தவை அதை கடந்து செல்ல என்னால் முடிகிறது. ஏற்கனவே சென்ற வருடம் இரவு 12 மணிக்கு திருகோணமலை வீட்டைச் சென்று தட்டினார்கள்.  புலானாய்வுப் பிரிவினருக்கு எனது விபரங்கள் முழுமையாகத் தெரிந்தும் தொடர்ச்சியாக எனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்வதை அனுமதிக்க முடியாது.  என்னைப் பற்றிய என் குடும்பம் பற்றிய விபரங்களை அம்மாவிடம் கேட்டுள்ளனர். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இவர்கள் தொடர்ச்சியாக இப்படியான மோசமான அத்துமீறல்/ உரிமை மீறல்களில் ஈடுபடுவதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.  வரும் திங்கட்கிழமை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளேன். https://www.virakesari.lk/article/183793
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.