Jump to content

ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும்

கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேன்டும்

வாடை தருமூதலிலே நடுங்கும் போதும்

வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும்

பாடையிலெ படுத்தூரை சுற்றும் போதும்

பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும்

ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும்

ஒண் தமிழெ சலசலத்து ஓடவேண்டும்"

இது யாரால் இயற்றப்பட்டது என்பதையறிந்தால் தெரிவிக்கவும்.

ஈழத்தில் கல்வி கற்ற காலத்தில் இதை உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் என்று சிலர் சொன்னதாக நினைவு.வரதரின் அறிவுக் களஞ்சியம் இதழில் இது வேறு ஒருவரால் இயற்றப்பட்டதாவகவும் சொல்லப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது யாரால் இயற்றப்பட்டது என்பதையறிந்தால் தெரிவிக்கவும்.

Link to comment
Share on other sites

  • 7 years later...

இதை இயற்றியவர்  ஈழத்தைச் சேர்ந்த மாவிட்டபுரம் சச்சிதானந்தம் என்று எங்கேயோ வாசித்துள்ளேன். 

 

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது புரட்சிக்கவி பாரதிதாசனது வரிகளாக இருக்கலாம்

 

அந்நாட்களில் தமிழர் கூட்டணி மேடைகளில் மங்கயர்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் பாடுவதைக் கேட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்... கவிஞர் காசி ஆனந்தனால் இயற்றப் பட்ட கவிதை என்று தான்... இது வரை நினைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப் பாடலைப் படித்திருக்கின்றேன்...! யார் இயற்றியது எனத் தெரியவில்லை, இப்போது ஆவலாயுள்ளது...!

Link to comment
Share on other sites

அரிய வரிகள்...

 

இதை எழுதியவர் சச்சிதானந்தம் என்றும் சாகித்ய அகாதெமியின் இதழான இந்திய இலக்கியத்தின் ஆசிரியர் என்றும் விக்கிப்பீடியா கூறுகிறது.  

ஆனால் இணையத்தில் இதை இயற்றியவர் ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் மறவன்புலவு க.சச்சிதானந்தன் என்று கண்டேன். 

http://www.vallamai.com/?p=18792

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிபீடியாவில் இருப்பது எல்லாம் உண்மை என்று கூற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர்  காசி ஆனந்தன் அவர்களிடம், தொடர்பில் உள்ளவர்கள் அவரிடம் கேட்டால்....
ஒரு சொல்லில்.. ஆம், அல்லது... இல்லை என்று சொல்லுவார்.
இந்த அருமையான... வரிகளை பிறர் யாராவது இயற்றி இருந்தால்.... நிச்சயம் அவர் உரிமை கோரமாட்டார்.
 

மறவன் புலவு சச்சிதானந்தம் இப்போதும்.... தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு உள்ளார் என நினைக்கின்றேன்.
அவரும்... மிகச் சிறந்த தமிழ் பற்றாளர். தனது பெயர் பத்திரிகைகளில்.... வெளி வருவதை விரும்பாதாவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை

இந்த வரிகள் கீழுள்ள கவிஞர் காசியானந்தனின் வரிகளை நினைவூடுகிறது.

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து

பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்

கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து

கவலை மிகுந்தாலும் - வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து

கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்

தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்

துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து

நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்

பாயில் நெளிந்து மரண மடைந்து

பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து

சிதைந்து முடிந்தாலும் - என்றன்

தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்

தாங்க மறப்பேனா?

பட்டம் அளித்துப் பதவி கொடுத்தொரு

பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துக்

கால்கை பிடித்தாலும் - என்னைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்

தோழமை கொண்டாலும் - அந்த

வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை

வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்

பூட்டி வதைத்தாலும் - என்றன்

அங்கம் பிளந்து விழுந்து துடிக்க

அடிகள் கொடுத்தாலும் - உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்

தூள்பட நேர்ந்தாலும் - ஒரு

செங்களம் ஆடி வரும் புகழோடு

சிர்க்க மறப்பேனா?

Link to comment
Share on other sites

கவிஞர்  காசி ஆனந்தன் அவர்களிடம், தொடர்பில் உள்ளவர்கள் அவரிடம் கேட்டால்....

ஒரு சொல்லில்.. ஆம், அல்லது... இல்லை என்று சொல்லுவார்.

இந்த அருமையான... வரிகளை பிறர் யாராவது இயற்றி இருந்தால்.... நிச்சயம் அவர் உரிமை கோரமாட்டார்.

 

மறவன் புலவு சச்சிதானந்தம் இப்போதும்.... தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு உள்ளார் என நினைக்கின்றேன்.

அவரும்... மிகச் சிறந்த தமிழ் பற்றாளர். தனது பெயர் பத்திரிகைகளில்.... வெளி வருவதை விரும்பாதாவர்.

இந்த பாடலை இயற்றியவர்  யார் என்று தெரியவில்லை என்று சொன்னார் மறவன் புலவு சச்சிதானந்தம் .இதே போல ஒரு பாடல் மாவிட்டபுரம் பண்டிதர் க.சச்சிதானந்ததால் இயற்றப்பட்டதாக சொன்னார் .

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை என்னைப் போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை - அந்த மாரன் அழகு எனக்கு வேண்டியதில்லை கன்னித் தமிழ் எனக்கு வேணுமேயடா - உயிர்க் கம்பன் கவியெனக்கு வேணுமேயடா தின்னத்தமிழ் எனக்கு வேணுமேயடா தின்று செத்துக்கிடக்க தமிழ் எனக்கு வேணுமேயடா. கால்கள் குதித்து நடமாடுதேயடா கவிக்கள்ளை குடித்து வெறிஏறுதேயடா நூல்கள் கன்னித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை நோக்கி தமிழ்ப்பசியும் ஆறிட வேண்டும். தேவர்க்கு அரசுநிலை வேண்டியதில்லை - அவர் தின்னும் சுவையமுதும் வேண்டியதில்லை சாவிற்றமிழ் படித்து சாகவேண்டும் என்றன் சாம்பர் தமிழ் மணந்து வேகவேண்டும்.
 
 

11063162_951518621525382_1809846181_n.jp

மாவிட்டபுரம் பண்டிதர் க.சச்சிதானந்தன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.