Jump to content

ரொறொன்ரோ துறைமுகத்தை விட்டு வெளியேறும் மிதக்கும் உணவகம் Captain John’s .


Recommended Posts

கனடா- மிதக்கும் உணவகமும் ரொறொன்ரோவின் ஒரு மைல்கல்லுமான பெரிய ஒரு கப்பல் நகரத்தின் நீர் முகப்பிலிருந்து இழுத்து செல்லப்பட்டது.

Captain John’s .அதன் நீண்ட கால தங்குமிடமான யங் வீதி அடிவாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பயனற்ற கப்பல்கள் ஒதுக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பல இழுவை படகுகள் வழிகாட்ட காலை 10மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்தது.

இதனை பாதுகாப்பாகவும் கவனமாகவும் ரொறொன்ரோ துறைமுகத்திலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமானதென் ரொறொன்ரோ துறைமுக பிரிவினர் தெரிவித்தனர்.

லேக் ஒன்ராறியோ ஊடாக இழுவை படகுகள்  மரைன் மறுசுழற்சி காப்பரேசனிற்கு இழுத்து சென்றன. இந்த முழு செயல்முறையும் பூர்த்தியாக 18 முதல் 20 மணித்தியாலங்கள் செல்லும்.

Captain John’s .நன்றாக உணவருந்தும் பிரபல்யமான உணவகத்தை நடாத்தி வந்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களிற்கு முன்னர் பொது சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டது.

40வருடங்களாக இக்கப்பல் ரொறொன்ரோ துறைமுகத்தில் நின்றுள்ளது. பிறந்த நாள் வைபவங்கள், விருந்துபசாரங்கள் போன்ற பல கொண்டாட்டங்கள் இக்கப்பலில் இடம்பெற்றுள்ளன.

cap-600x337.pngcap1.jpg cap2.jpg cap3-600x451.jpg cap4-600x286.jpg cap5-600x369.jpg

 

- See more at: http://www.canadamirror.com/canada/43718.html#sthash.Xjv7dn5P.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.