Jump to content

நடுவானில் செயலிழந்த விமானம், உயிர் தப்பிய 182 பயணிகள்.


Recommended Posts

சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் தற்காலிகமாக செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பயணிகள் அனைவரும் பத்திரமாக ஷாங்காய் வந்து சேர்ந்தனர்.

ஏர் பஸ் ஏ.330-300 என்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமையன்று சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 3.5 மணி நேரம் வானில் பயணித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு என்ஜின்களும் மின்சக்தியை இழந்தன.

அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

இதனால் 182 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இரவு 10.56 மணியளவில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் ஷாங்காய் நகரில் தரையிறங்கினர். பின்னர் இரு என்ஜின்களும் தொடர்ந்து சோதனையிடப்பட்டன.

எனினும் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் என்ஜின் நல்ல முறையில் இயங்கியது தெரியவந்தது.Felit2.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/43654.html#sthash.OXZDoPrp.dpuf

 

பல விதத்திலும் கேள்விக்குறியாகிய மனித வாழ்க்கை ?

Link to comment
Share on other sites

சுமார் 39,000 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் இரண்டு இயந்திரங்களின் இயங்கு திறனையும் இழந்து, 13 ஆயிரம் அடி கீழிறங்கியதான செய்தியும் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்தில் விமானங்களிற்கு ஏற்படும் இழப்புப் பற்றியும் இவ்வார நிஜத்தின் தேடலில் விபரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய வட அமெரிக்கச் சந்தைகளை எவ்வாறு மத்திய கிழக்கின் எமிரேற்ஸ் நிறுவனம் கைப்பற்றி, உலகின் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக டுபாய் விமான நிலையத்தை மாற்றி வருகின்றது என்பது பற்றியும் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விபரித்தார்.

- See more at: http://www.canadamirror.com/canada/43731.html#sthash.nWIzBlFp.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.