Jump to content

இலங்கையில் இன்னமும் மௌன யுத்தம் தொடர்கிறது - BBC


Recommended Posts

150528183228_sl_army_viuctory_624x351_bb
இலங்கையின் வடக்கே உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவ வெற்றியின் சின்னம்
 
 
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.
 
தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும் அந்த சுயாதீன அறிக்கை, ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு தமிழர் நிலங்களில் இராணுவக் குடியிருப்புகள் மற்றும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
 
26 ஆண்டுகளாக இலங்கையில் தொடர்ந்த சிவில் யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் முதற் தடவையாக அந்த நாட்டின் மனித உரிமை நிலைப்பாடுகள் குறித்து இந்த சுயாதீன அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்ந்தும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் எனவும், இராணுவப் பிரசன்னதுக்கு அவர்கள் தொடர்ந்தும் முகம் கொடுக்க வேண்டி இருப்பதோடு பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் புறந்தள்ளலுக்கும் உள்ளாகிறார்கள் என்றும், இது இன்னொரு வகை மௌன யுத்தம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
 
இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை
 
அரச இராணுவத்தினராலும் பிரிவினை கோரிய தீவிரவாதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் எடுத்த முயற்சிகளுக்கு இலங்கை அரசு இடம் தரவில்லை எனவும் அந்த அறிக்கை சுட்டுக்காட்டுகிறது.
 
இந்த அறிக்கை தொடர்பாக மனித உரிமைகள் மற்றும் காணி விவகாரங்களில் சர்வதேச நிபுணத்துவம் பெற்ற அனுருத்த மித்தாலினாலும், ஓக்லாண்ட் மையத்தின் நிறைவேற்றுப் பனிப்பாளரினாலும் 2014 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பல களப் பணிகளையும் நூற்றுக்கணக்கான நேர்காணல்களையும் உள்ளடக்கியதாய் அமைந்தது.
 
150528182247_idps_in_srilanka_624x351_bb
இடம்பெயர்ந்தவர்கள் இன்னமும் முகாம்களில் வசிக்கிறார்கள்
 
இதுவே போர் முடிவுக்குப் பின்னரான முதலாவது தேடலாக அமைந்தது. அறிவு சார்ந்ததாக அமைந்த இந்த விசாரணைகளில் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்து புதிய அரசாங்கத்தை பாராட்டி ஆதரவு தருவதாக தெரிவித்திருக்கும் பின்னணியில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
நீளும் போரின் நிழல்
 
போரின் நீண்ட நிழல் என்ற தலைப்போடும் இலங்கைப் போரின் பின்னரான நீதிக்கான பாடுகள் என்ற உபதலைப்போடும் வெளியாகி இருக்கும் இவ்வறிக்கையில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனபோதிலும் தமிழரின் பாரம்பரியப்பிரதேசத்தில் 160,000 இராணுவத்தினர் நிலை கொண்டுள்லனர். அங்கு வாழும் தமிழரின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டுபார்த்தால் ஆறு தமிழருக்கு ஒரு இராணுவத்தினர் என்கிற வகையில் இது அமைந்திருக்கிறது என ஓக்லாந்து நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
 
மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இராணுவத்தினர் பெருமெடுப்பிலான கட்டுமானப் பணிகளிலும், உல்லாச விடுதிகள் அமைப்பது உள்ளிட்ட வியாபரப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். நிலமிழந்த மக்கள் இடப்பெயர்வு வாழ்வில் தவிக்கிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
150528181819_srilanka_missing_624x351_bb
காணாமல் போனவர்கள் குறித்த முறையான பதில்கள் கிடைக்கவில்லை
 
ஒருசில பௌத்தர்களே இருக்க்க் கூடிய தமிழர் வாழ்விடங்களில் போர் வெற்றிச் சின்னங்களையும் பௌத்த விகாரைகளையும் அரச அனுசரணையோடு அமைப்பதன் மூலம் தமிழர்களின் பண்பாடு, கலாசரம், வரலாறு அகியன திட்டமிட்ட வகையில் நசுக்கப்படுகிறது, இதுவும் மௌனப் போரின் ஒரு அறிகுறியே என அந்த அறிக்கை கூறுகிறது.
 
"அரசு மாற்றமும்; அதிபரின் ஆளுமையும்"
 
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதியான அரசாங்க மாற்றத்தின் பின்னர் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன இப்பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அரசியல் ஆளுமை கொண்டவரா என்ற கேள்வியையும் ஓக்லாண்ட் இன்ஸ்ட்டியூட் எழுப்பியுள்ளது.
 
பல தீவிர மனித உரிமை மீறல்களை இறுதிப் போரில் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் 54 ஆம் படையணியை வழி நடத்திய ஜகத் டயசுக்கு இராணுவத்தின் உயர் பதவிகளில் ஒன்றான மேஜர் ஜெனரல் பதவியை புதிய அரசாங்கம் வழங்கி இருப்பதானது, புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணைகளை பொறுப்போடும் ஜனநாயக வழியிலும் நடத்துமா என்கிற ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருப்பதாக இந்த அறிக்கையை தயாரித்துள்ள அனுராதா மிட்டல் கவலை வெளியிட்டுள்ளார்.
 
150303141846_maithri_in_jaffna_640x360_b
அதிபரின் அரசியல் ஆளுமை அமைதியை ஏற்படுத்துமா?
 
இலங்கை அரசு மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் இருப்பதாகவும், இலங்கை அதன் வட கிழக்குப்பகுதிகளின் பலவந்த குடியேற்றங்களை நிறுத்தவும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டவற்றை மீள பெறுதலும், குற்றங்களுக்கு பொறுப்புக் கூறத் தலைப்படுதலும் ஆகிய நடவடிக்கைகள் நடக்கும் வரை தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் நியாயப் படி நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கும் என்று இந்த அறிக்கை கவலை வெளியிட்டுள்ளது.
 
அரசியல் நாடகங்களை நிறுத்தி சர்வதேச சமூகம் இலங்கை சிறுபான்மையினருக்கு மனித மற்றும் நில உரிமைகளை பெற்றுக் கொடுப்ப்பது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

150528183228_sl_army_viuctory_624x351_bb

 

E.pass-021.jpg

 

அவர்கள் தமது வெற்றியை எமது மண்ணில் நினைவு கூரும் போது.....
 
எமது வெற்றிகளை எம் மண்ணில் நாம்  நினைவு கூருவதில் என்ன தவறு????
Link to comment
Share on other sites

சிறிலங்காவில் தமிழ் மக்கள் மீது தொடரப்பட்டுள்ள மௌனப் போர் – அமெரிக்க ஆய்வு அறிக்கை MAY 29, 2015 | 0:43by புதினப்பணிமனைin செய்திகள்

sri-lanka-army-300x200.jpgசிறிலங்காவில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், அங்கு மௌனமான போர் ஒன்று தொடர்ந்து கொண்டிருப்பதாக, கலிபோர்னியாவை தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லண்ட் நிறுவகம் (Oakland Institute) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘போரின் நீண்ட நிழல்’ என்ற தலைப்பில், ‘சிறிலங்கா -போரின் பின்னரான நீதிக்கான பாடுகள்’ என்ற உபதலைப்புடன் வெளியாகி இருக்கும் இந்த அறிக்கையில்-

தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுதந்திரமான ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு தமிழர் நிலங்களில் இராணுவக் குடியிருப்புகள் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்ந்தும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இராணுவப் பிரசன்னத்துக்கு அவர்கள் தொடர்ந்தும் முகம் கொடுக்க வேண்டியுள்ளதுடன், பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் புறந்தள்ளலுக்கும் உள்ளாகிறார்கள்.

இது இன்னொரு வகை மௌனப் போர் ஆகும்.

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் முடிந்துள்ள போதிலும் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் 160,000 இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.

அங்கு வாழும் தமிழ் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பார்த்தால் ஆறு தமிழருக்கு ஒரு இராணுவத்தினர் என்ற வகையில் இது அமைந்திருக்கிறது.

மக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் இராணுவத்தினர் பெருமெடுப்பிலான கட்டுமானப் பணிகளிலும், உல்லாச விடுதிகள் அமைப்பது உள்ளிட்ட வியாபாரப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்.

நிலம் இழந்த மக்கள் இடப்பெயர்வு வாழ்வில் தவிக்கிறார்கள்.

ஒரு சில பௌத்தர்களே இருக்கக் கூடிய தமிழர் வாழ்விடங்களில் போர் வெற்றிச் சின்னங்களையும் பௌத்த விகாரைகளையும் அரச அனுசரணையோடு அமைப்பதன் மூலம் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வரலாறு ஆகியன திட்டமிட்ட வகையில் நசுக்கப்படுகிறது.

இதுவும் மௌனப் போரின் ஒரு அறிகுறியே.

அரச படையினராலும், பிரிவினை கோரிய தீவிரவாதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் எடுத்த முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசு ஒத்துழைக்கவில்லை.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதியான அரசாங்க மாற்றத்தின் பின்னர் புதிய அதிபராகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன இப்பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் அரசியல் ஆளுமை கொண்டவரா என்ற கேள்வியும் உள்ளது.

பல தீவிர மனித உரிமை மீறல்களை இறுதிப்போரில் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் 57வது டிவிசனை வழி நடத்திய மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு இராணுவத்தின் உயர் பதவிகளில் ஒன்றான, இராணுவத் தலைமை அதிகாரி பதவியை வழங்கி இருப்பதானது, புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணைகளை பொறுப்போடும் ஜனநாயக வழியிலும் நடத்துமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறிலங்கா அரசு மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் இருக்கிறது.

இலங்கை அதன் வடக்கு, கிழக்குப் பகுதிகளின் பலவந்த குடியேற்றங்களை நிறுத்தவும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டவற்றை மீளப்பெறுவதற்கும், குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் நியாயப்படி நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கும்.

அரசியல் நாடகங்களை நிறுத்தி சர்வதேச சமூகம் சிறிலங்கா சிறுபான்மையினருக்கு மனித மற்றும் நில உரிமைகளை பெற்றுக் கொடுப்பது அனைத்துலக சமூகத்தின் பொறுப்பாகும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மனித உரிமைகள் மற்றும் காணி விவகாரங்களில் அனைத்துலக நிபுணத்துவம் பெற்ற அனுருத்த மிட்டல் மற்றும், ஓக்லண்ட் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகியோரால், 2014 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள், களப் பணிகள் மற்றும் நூற்றுக்கணக்கான நேர்காணல்களை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவே சிறிலங்காவில் போர் முடிவுக்குப் பின்னர், சுதந்திரமாக நடத்தப்பட்டுள்ள முதலாவது ஆய்வாக அமைந்துள்ளது.

அறிவு சார்ந்ததாக அமைந்த இந்த விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/05/29/news/6575

 


Land seized from Tamils turned into luxury tourist resorts in Sri Lanka, report finds All the while, hundreds of thousands of Tamil families remain displaced, living in camps.

  •  
 
tamils.jpg.size.xxlarge.letterbox.jpg

PEDRO UGARTE / AFP/GETTY IMAGES

Internally displaced Tamil civilians are seen at Manic Farm in the northern Sri Lankan district of Vavuniya. A report has found that thousands of hectares of land seized from Tamils during the war are being redeveloped as luxury tourist resorts, industrial projects and army bases.

By: Raveena Aulakh Environment, Published on Thu May 28 2015

 

Six years after Sri Lanka’s army crushed the Tamil Tiger guerrillas and ended a 26-year civil war that killed tens of thousands of people, a silent war continues under the guise of a land grab, says a new report.

Thousands of hectares of land seized from the locals during the war are being redeveloped as luxury tourist resorts, industrial projects and army bases, the report says.

In some cases, fertile land — also occupied during the war — is being used for farming by soldiers and the produce sold to the very people the land was seized from, it alleges.

The report says tourists can book holidays at luxury beach resorts by calling numbers at the ministry of defence.

All the while, hundreds of thousands of Tamil families remain displaced, living in camps, said Anuradha Mittal, author of the report and executive director of the Oakland Institute, a think tank in California.

“These people see no sign of return despite several demands and petitions,” she said in an interview.

The Sri Lanka High Commission in Ottawa called the report “baseless” and “unsubstantiated.”

 

“There is nothing to these allegations,” said Waruna Wilpatha, the acting high commissioner. The army, he said, released 20,000 acres of land in the northern part of the country in June 2014.

“Gradually all land will be released but it first has to be cleared of land mines . . . can’t release without de-mining the land. The new government is committed to doing it.”

On the question of internally displaced people, Wilpatha said there are none. “We closed all the camps and resettled all the IDPs.”

Mittal says she visited camps and met several displaced people — mostly Tamils — who had left their land years ago to escape the shelling.

“They didn’t even get to collect their belongings, forget about the land deeds,” she said. “Now, there is almost no way they can prove that this is their house or their land.”

Thousands of Tamils, she said, are displaced, without homes or livelihoods. Many of those who have been “resettled” through government schemes have often been moved involuntarily to areas that lack proper infrastructure like homes, schools or hospitals.

“They are becoming IDPs (internally displaced people) yet again, in their own land.”

It’s tough to get an estimate about how much land is still being occupied by the Sri Lankan army, said Mittal.

“It’s widespread, I was blown away.” she said. “We have worked on land issues around the world . . . but have never seen anything like this where you just move in because you are either the army or have the support of the largest Sinhala majority.”

(The Oakland Institute has chronicled land-grab cases in Africa, Argentina and Papua New Guinea.)

One woman, from eastern Sri Lanka, told Mittal that the army took over her home and homes of least 40 other families in June 1990.

“When we left, it was not from choice,” said the woman. “We were forcibly evicted without compensation and legal procedure. The army now says that it will leave if the government gives orders to vacate.”

If people pursue the issue, “unidentified visitors come to see you,” she said. “Out of the homes of 40 families, today only seven to eight remain. The rest have been destroyed to make way for the army camp.”

This case is among several chronicled in the Oakland Institute report.

The document notes that what aggravates the situation for the Tamils is the new government’s refusal to take the country off war footing, and the delay in investigating alleged war crimes by both the army and Tamil Tigers.

Apart from land occupation, the report also talks about the huge presence of soldiers still.

An estimated 160,000 soldiers — almost entirely Sinhalese — were stationed in the north in 2014. With the area’s population standing at a little over 1 million people, the occupation means there is one soldier for every six civilians, the report concluded.

 

 

http://www.thestar.com/news/world/2015/05/28/land-seized-from-tamils-turned-into-luxury-tourist-resorts-in-sri-lanka-report-finds.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது மெளனயுத்தம் என்று .....மெளனகீதம் நடக்குது சில சனம் சொல்லுது.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.