Jump to content

குறைபாடுடைய மாணவர்களுக்குள் மலர்ந்த காதல்: மனதை வருடும் காட்சி (வீடியோ இணைப்பு)


Recommended Posts

குறைபாடுடைய மாணவர்களுக்குள் மலர்ந்த காதல்: மனதை வருடும் காட்சி (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 27 மே 2015, 02:25.26 பி.ப GMT ] downsyndrome_love_001.jpgநியூயோர்க்கில் டவுண் சிண்ட்ரோம் என்ற குறைபாடுடைய இளம் காதலர்கள் டேட்டிங் செல்லும் வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது.

தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பவர்கள் டவுண் சிண்ட்ரோம் குறைபாடுடையவர் ஆவர்.

மேலும், தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தைவிட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக்கொண்டும் காணப்படும்.

"டவுன் சிண்ட்ரோம்" குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவுத்திறன் மற்ற குழந்தைகளைப்போல் முறையாக வளர்ச்சியடைவதில்லை.

இதன் காரணமாக சாதாரண பள்ளிகளில் அவர்களால் படிக்க முடியாது. இங்கிலாந்தில் 1981-ம் ஆண்டிலிருந்தே இக்குறைபாடுடைய குழந்தைகள், சாதாரண குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இப்படி அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் டவுண் சிண்ட்ரோம் மாணவர் டெரன்ஸ் மற்றும் அவரது தோழி டிஸுவர் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பள்ளி இறுதியாண்டு தேர்வை எழுதி முடித்துள்ள இவர்கள் இருவரையும், இவர்களது உறவினர்கள் ”டேட்டிங்”கிக்கு வாழ்த்தி அனுப்பும் காட்சி இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது.

 

downsyndrome_love_002.jpg

downsyndrome_love_003.jpg

http://newsonews.com/view.php?22eMM303lOy4e2BnBcb280Mdd208Ybc3nBTe43OlR023gAy3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.