Jump to content

கிளிநொச்சி, பரந்தன் : ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம்


Recommended Posts

ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம்

 

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட 7 வயதுச் சிறுமி ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

 

பரந்தன் பகுதியிலுள்ள பொதுநோக்கு மண்டபத்துக்கு அருகிலுள்ள மலசலகூடம் ஒன்றுக்குள் சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேக நபர், சிறுமியின் வாய்க்குள் துணியை வைத்து அடைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாருக்கு கூறிய நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிறுமி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தேகநபர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் கூறினர்.

 

http://www.tamilmirror.lk/146908#sthash.fB3INICa.dpuf


வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் மூன்று சிறுமிகள் மீது துஸ்பிரயோகம் 
 
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவர் குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற மூன்று சிறுமிகளைப் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸாருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
 
இது தொடர்பில் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் பாடசாலை மாணவிகள் மூவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
அங்க சேட்டைகள் விடுதல், தகாத வார்த்தைகள் பிரயோகித்தல் என துஸ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பில் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அலகில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.- என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த ஆசிரியர் முன்னரும் வேறு பாடசாலை ஒன்றில் மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தார் என முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் அதன் வழக்கு வலுவிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

பாலியலுக்கு முயற்சித்த இளைஞன்: மறுப்பு தெரிவித்தமையால் சரமாரியாக தாக்குதல்

 

Ddfd6f4060dfd.jpg

 

மட்டக்களப்பு, தளவாய்ப் பிரதேசத்தில் விறகு வெட்ட காட்டுப் பகுதிக்குள் சென்ற வயோதிப தமிழ் பெண்கள் மீது இளைஞர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு முயற்சித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த குறித்த பெண்கள் மீது, இளைஞன் இரும்பு தடியால் அடித்து தாக்குதல் நடாத்தியுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தளவாயைச் சேர்ந்த 56 வயதுடைய குணம் சிறிதேவிப்பிள்ளை, ஐயங்கேணியைச் சேர்ந்த 60 வயதுடைய சித்திரவேல் இராசம்மா ஆகிய இருவருமே தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் சென்ற மற்றுமொருவர் தாக்குதலிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். 
 
மட்டக்களப்பு தளவாய் காட்டுப் பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த பெண்கள் மீது போதையில் இருந்ததாக கூறப்படும் இளைஞன் பாலியல் ரீதியில் அணுகியுள்ளார் அதை ஏற்க மறுத்த குறித்த வயோதிப் பெண்கள் மீது அருகிலிருந்த இரும்பு தடியால் அடித்து தாக்கியுள்ளார். 
 
இதில் பாடுகாயமடைந்த இரண்டு பெண்களும் ஏறாவூர் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
தாக்கியதாக கூறப்படும் இளைஞன் பிரதேச மக்கள் தன்னைத் தாக்கியதாக கூறி பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிக்கு இது பற்றி தெரியுமோ..?! சிறீலங்கா பொலிஸார் சொல்ல மாட்டினமோ..?!

 

அவரின் பிள்ளைகள் 4 வர் பாதிக்கப்பட்டிருக்கினம். ஆறுதல் சொல்ல வருவாரோ..?!

 

இல்ல இதெல்லாம் என்ன பெரிய விசயம்.. மூடி மறைச்சிருங்கப்பா.. உந்த ஊடகக்காரரை அடக்க ஒரு வழி செய்தால் தான் எனி உதை அடக்கலாம் என்று மைத்திரி முடிவெடுத்திடுவாரோ என்னவோ..?! :o:rolleyes::icon_idea:


பிரச்சனையின் மூலமே.. சிங்கள ஆட்சியாளர்களின் நிர்வாகமும்.. அதன் சட்டத்தையே.. அமுலாக்கம்..செய்யத் துப்பில்லாத.. சிங்கள காவல்துறையும். இதில் பிரபல்யம் அடைந்த சம்பவங்களுக்கு மட்டும்.. அனுதாப அரசியல் வாக்கு இலவச இணைப்பு என்பதால்.. பிரபல்யமில்லாத இவற்றை குற்றமாகவே.. யாரும் இதனை கண்டுகொள்ளப் போவதில்லை. இது எனி எம் மண்ணில் தொடர்கதை தான். எதிரி ஒரு பக்கம்.. ஒட்டுக்குழுக்கள் ஒருபக்கம்.. கூடவே சமூகவிரோதிகள் ஒருப்பக்கம் என்று 3 பக்கத்தால எம் மக்களுக்கு தொந்தரவு தான்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை யாழ்ப்பாண பக்கம் ஆர் கூட்டிக்கொண்டு திரியினம் எண்டதிலையும் விசயமிருக்கு கண்டியளோ  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை யாழ்ப்பாண பக்கம் ஆர் கூட்டிக்கொண்டு திரியினம் எண்டதிலையும் விசயமிருக்கு கண்டியளோ  :)

 

மகிந்தாவின் குடியுரிமை இருக்க மட்டும் பயமில்லை......சிங்கள மக்களின் வாக்குகள் இருக்கு.......மைத்திரி தமிழருக்கு உரிமையை கொடுத்துவிட்டார் என மகிந்தா தேர்தலில் சொன்னால் போதும் மீண்டும் மகிந்தா தான் ஆட்சி.....

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் நாரந்தனை: துஸ்பிரயோகத்துக்குள்ளாகிய சிறுமி நீதிமன்ற உத்தரவுக்கமைய மீட்பு
 
Link to comment
Share on other sites

சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை ஆரம்பம்!

பரந்தனில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சமூக குற்றங்களை களையும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

கூட்டமைப்பு பா.உ. சி.சிறிதரன் தலைமையில் மாகாண கல்வி அமைச்சர், கி,ளிநொச்சி பிரதேச பொலிஸ் அதிகாரி, கரைச்சி பிரதேசசபை உபதலைவர், கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி, பிரசைகள் குழு உறுப்பினர், மனிதஉரிமைகள் அமைப்பினர், கிராமசேவகர், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமிய அமைப்பினர் மற்றும் நூற்றுகணக்கான மக்கள் பங்களிப்புடன் இன்று மாலை 4:30 மணியளவில் கிளி ஆனையிறவு அ சி த க பாடசாலையில் இடம்பெற்றது.

அங்கு எமது பதிவுகளாக.....

பாலியல் குற்றங்கள் கனகராயன் குளம், புங்குடுதீவு சிவபுரம், நாரந்தனை என தொடர்கதையாக தொடர்வதை கடுமையாக கண்டடித்ததுடன் இவ்வாறான சம்பவங்கள் அதிகாரமிழந்ந சமூகவிரோத குழுக்களின் திட்டமிட்ட இனவழிப்பாக உள்ளதாக சந்தேகம் வெளியிட்டார்.

அத்துடன் சட்டத்தை கையிலெடுக்காமல் பொலிஸாருடன் இணைந்து சமூகவிரோத சக்திகளை களையெடுப்பதற்கான பலமான கிராமமட்ட அமைப்பினை முன்மொழிந்தார்.

இவ் அமைப்பில் எம்முடன் இரண்டு பொலிஸர், மற்றும் ஆறு ஆண் உறுப்பினர்களையும், மூன்று பெண் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இவ் அமைப்பு பிரதேசத்தில் இடம்பெறும் சமூகவிரோத நடவடிக்கைகளை இனம்கண்டு சட்டத்தின் முன் கொண்டுவர பொலிஸாருக்கு உதவவுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில் அதிகாரமிழந்ந சமூகவிரோத குழுக்களினால் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாகவும் இதுவே குற்றங்களுக்கு காரணமாக அமைவதாகவும் தெரிவித்தார்.

முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை எனவும் தற்போது இவை தினசரி நடைபெறுவதையும் சுட்டிக்காட்டியதுடன் இவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த வடமாகாண கல்வி அமைச்சர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புடன் செயற்படுமாறும் கைத்தொலைபேசி பாவனையை கவனிப்புடன் கையாளவும் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்களை மீண்டும் இணைக்கவேண்டும் எனவும் கல்வியே சமுதாய மாற்றத்திற்கு அவசியம் எனவும் தெரிவித்தார்.

மேலும் கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

பட்டப்பகலில் முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற துஸ்பிரயோகம் பயங்கரமான செயல் எனவும் இவ்வாறான சம்பவங்களுக்கு பெற்றோர் அசட்டையாக இருப்பதும் ஒருகாரணம் என தெரிவித்தார்.

மேற்படி துஸ்பிரயோக சம்பவம் 26ம் திகதி பாடசாலை முடிந்து சிறுமி வீடு செல்லும்போது 16 வயதையுடைய சந்தேகநபர் 7 வயது சிறுமியை மலசலகூடததினுள் இழுத்துச்சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் பாடசாலை முடிந்து ஒன்றரை மணிநேரம் கழித்தே சிறுமி வீடுசென்று தாயாரிடம் சம்பவத்தை தெரிவித்ததாகவும் அதன்பின்னர் பொலிஸாருக்கு அறிவித்தபின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

பொலிஸார் தெரிவிக்கையில் 16 வயது சந்தேகநபர் ஒருவரை கைது செய்து இன்று 28 நீதிமன்றில் முற்படுத்தியதாகவும் சந்தேகநபர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்ட்டதாகவும் விரைவில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்தனர்.

ஊர்மக்கள் தெரிவிக்கையில் சந்தேகநபருடைய தந்தை இறந்தபின் தாயார் மறுமணம் புரிந்ததாகவும் அதன் பின் சித்தியுடன் வசித்து வந்ததாகவும் அண்மையில் அங்கிருந்தும் வெளியேறி போதை பழக்கத்துக்கும் அடிமையானதாகவும் வன்புணர்வின் பின் தனது ஆடைகளை நண்பர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்ததாகவும் பின்னர் பொலிஸாரால் அவ் உடையை ஆதாரமாக மீட்கப்ட்டதாகவும் தெரிவித்தனர்.

11224164_450529505107819_913128955639596
 
 
 
 
 
11070783_450529498441153_506420015238468

 

Shritharan Sivagnanam

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.