Jump to content

சந்தர்போலின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறி?


Recommended Posts

சந்தர்போலின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறி?
 

 

அவுஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கான பயிற்சிமுகாமில் சந்தர்போல் இணைக்கப்படவில்லை. பயிற்சிமுகாமுக்கு அழைக்கப்பட்ட 12 வீரர்களில் சந்தர்போலின் பெயர் இடம்பெற்றிருக்காதது பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. சந்தர்போலை ஒதுக்கும் முகமான இந்தச் செயற்பாடானது, இளைய வீரர்களை உள்வாங்கும் திட்டத்தோடு மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை உணர்த்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

 

மே 29ஆம் திகதியே மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் அணி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் சந்தர்போலுக்கு இன்னும் இருப்பதற்கான நம்பிக்கை முற்றிலும் இல்லாமல்போய்விடவில்லை. ஆயினும், தேர்வுக்குழுத் தலைவர் க்ளைவ் லொய்ட் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் சந்தர்போலின் தெரிவு சந்தேகமே எனக் கோடிட்டுக்காட்டுவதையும் கவனிக்கலாம்.

 

 

'கடந்த இருபது வருடங்களாக மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட்டுக்கு சந்தர்போல் வழங்கியுள்ள சேவை அளப்பரியது. ஆயினும், இப்போது இளம் வீரர்களை அணிக்குக் கொண்டுவரவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. அதுபற்றிச் சிந்திக்கவேண்டிய நிலையிலிருக்கிறோம். கடந்த 11 போட்டிகளில் அவரது சராசரி 16 ஓட்டங்கள் என்ற நிலையிலிருப்பதைப் பார்க்கவேண்டும். கடைசி இரண்டு மூன்று போட்டிகளை மாத்திரம் கருத்தில்கொண்டு நாம் முடிவெடுக்கப்போவதில்லை. இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கெதிரான அவரது பெறுதிகளையும் நாம் அவதானித்துள்ளோம்.

 

புதிய இளம் வீரர்களை அணிக்குக் கொண்டுவருவதற்கான முடிவை நாம் எடுத்திருக்கிறோம். புதிய பல வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாய்ப்பினை வழங்குவது அவசியமானதாகும்' என்கிறார் க்ளைவ் லொய்ட்.

 

பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம்: தெவேந்திர பிஷ்ஷூ, ஜெர்மய்ன் ப்ளக்வூட், க்ரெய்க் ப்ரத்வைட், டரன் பிராவோ, ஷனொன் கப்ரியெல், ஜேசன் ஹோல்டர், சாய் ஹோப், வீரசாமி பெர்மோல், டினேஷ் ரம்டின், கெமர் ரோச், மர்லொன் சமுவெல்ஸ், ஜெரோம் டெய்லர்.

 

- See more at: http://www.tamilmirror.lk/146834#sthash.gneTZJ6R.dpuf

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படாதது ஏன்?- சந்தர்பாலுக்கு கிளைவ் லாய்ட் கடிதம்
 

 

மேற்கிந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் சந்தர்பால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மே.இ.தீவுகள் விளையாடும் கிரிக்கெட் தொடருக்கு சந்தர்பால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கான காரணங்களை விளக்கி சந்தர்பாலுக்கு தலைமை தேர்வுக்குழு தலைவர் கிளைவ் லாய்ட் கடிதம் எழுதியுள்ளார்.

 

 

அந்தக் கடிதத்தில் சந்தர்பாலின் கடைசி 6 டெஸ்ட் போட்டிகள் பற்றி பரிசீலனை செய்யப்பட்டது என்றும் அதில் சந்தர்பால் சோபிக்கவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

“பயிற்சியாளர் சிம்மன்ஸ், மற்றும் தேர்வுக்குழுவினர் உங்களது கடைசி 6 டெஸ்ட் போட்டிகளை பரிசீலனை செய்தனர். தென் ஆப்பிரிக்கா, மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தலா 3 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் நீங்கள் விளையாடியுள்ளீர்கள். இதில் 183 ரன்களை மட்டுமே எடுத்துள்ளீர்கள். உங்கள் சராசரி 16.64 என்பது குறிப்பிடத்தக்கது.” என்று எழுதியுள்ளார்.

 

11,867 டெஸ்ட் ரன்களை 30 சதங்களுடன் 51 என்ற சராசரியில் எடுத்துள்ளார் சந்தர்பால்.

 

ஆனால், லாய்ட் தனது கடிதத்தில், “எதிர்கால நன்மையைக் கருதி இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்ய முடிவெடுத்தோம். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் உங்களை தேர்வு செய்ய முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணி கரீபிய மண்ணில் கிரிக்கெட் தொடர் ஆடிய போது சந்தர்பால் அந்தத் தொடரில் 48 ரன்கள் சராசரி விகிதத்தில் ரன்கள் எடுத்தார். பிறகு வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் 270 ரன்கள் எடுத்தார், இதில் அவுட் ஆகவேயில்லை.

 

லாய்ட், சந்தர்பாலை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் சந்தர்பாலை பிடிக்க முடியவில்லை, “என்னுடைய அழைப்புக்கு நீங்கள் பதில் அழைப்பு விடுக்கவில்லை, நான் இந்த முடிவுக்கு முன்பாக உங்களுடன் கலந்தாலோசிக்க விரும்பினேன், ஆனால் முடியவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பலத்தின் உச்சம் நீங்கள். நீங்கள் உங்கள் பங்களிப்புக்காக எப்போதும் நினைவு கொள்ளப்படுவீர்கள்” என்று லாய்ட் கூறியதோடு சந்தர்பாலை ‘கிரேட் கிரிக்கெட்டர்’என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் அதலபாதாளத்தில் தத்தளித்த காலங்களில் சந்தர்பாலின் பல இன்னிங்ஸ்கள் அந்த அணியின் மானத்தைக் காப்பாற்றியதை ஒருவரும் மறக்கலாகாது. ஆனால் சந்தர்பாலுக்கும் வயது 40 ஆகிவிட்டது.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7251409.ece

Link to comment
Share on other sites

சச்சினுக்கு அளித்த பிரியாவிடை போல் சந்தர்பாலுக்கும் அளித்திருக்க வேண்டும்: லாரா
 

மேற்கிந்திய கிரிக்கெட்டின் கடினமான காலங்களில் போராடி விளையாடிய ஷிவ் நரைன் சந்தர்பாலுக்கு, சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ அளித்த பிரியாவிடை போல் அளிப்பதுதான் நியாயம் என்று பிரையன் லாரா கூறியுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய அணியில் சந்தர்பால் தேர்வு செய்யப்படவில்லை. அவர் கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

ஆனால், கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும், அவரை சச்சின் டெண்டுல்கரைப் போல் மரியாதையுடன் வழியனுப்பியிருக்க வேண்டும் என்கிறார் பிரையன் லாரா.

 

டிரினிடாட் அண்ட் டொபாகோ கார்டியன் இதழில் பிரையன் லாரா இது பற்றி கூறும்போது, “இது ரன்கள், எண்கள் பற்றிய விவகாரம் அல்ல. இது மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் அவர் பிரியாவிடை பெறும் தகுதியை தன் பங்களிப்பின் மூலம் வென்றுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் ஓய்வு பெறும் முடிவை அவரே வெளியிட அனுமதித்திருக்க வேண்டும்.

தங்கள் வீரர்களை அவர்கள் நடத்தும் விதம் இழிவானது, இதனை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. திரும்பிப் பார்க்கும் போது எவ்வளவு வீரர்கள் இம்மாதிரி அடக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பார்த்தால் நமக்கு நடுக்கமே ஏற்படும்.

 

 

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ என்ன செய்தனர்? ஒரு தொடரையே நடத்தி அவருக்கு ஒரு அருமையான வழியனுப்பு விழாவை வழங்கினர். அவரது பங்களிப்பை மதித்தனர்.

அம்மாதிரி மரியாதை செய்யும் போட்டியில் அவர் டக் அடித்தாலும் சரி அல்லது இரட்டைச் சதம் அடித்தாலும் சரி அது ஒரு விஷயமே அல்ல. அது ஒரு பிரியாவிடை தொடர், உலகம் முழுதும் அது தெரியும். அது போல் சந்தர்பால் பிரியாவிடை விழா எடுக்க தகுதியானவரே.

 

சந்தர்பாலை மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும், அதற்கான தனது மதிப்பை அவர் தனது பங்களிப்பின் மூலம் ஈட்டியுள்ளார். எனவே மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் சந்தர்பாலை மரியாதையாக நடத்தவில்லை என்றே நான் கருதுகிறேன்” என்று சாடினார் பிரையன் லாரா.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/article7255254.ece

Link to comment
Share on other sites

கடைசி வாய்ப்பளிக்குமாறு மன்றாடிய சந்தர்பால்: அலட்சியம் செய்த பயிற்சியாளர் சிம்மன்ஸ்
 

 

21 ஆண்டுகளாக மேற்கிந்திய கிரிக்கெட்டுக்கு அயராது பங்களிப்பு செய்த சந்தர்பால் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்த பின்னணியை அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

 

சந்தர்பாலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் கிளைவ் லாய்ட் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஸ்மார்ஃபோன் அப்ளிகேஷனான வாட்ஸ் அப்பில் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ், சந்தர்பால் இடையே நடந்த உரையாடலை உள்ளூர் பத்திரிகை ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

 

164 டெஸ்ட் போட்டிகளில் 11,867 ரன்கள் எடுத்துள்ளார் சந்தர்பால், மே.இ.தீவுகள் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்து சாதனையை வைத்துள்ள லாரா எடுத்த ரன்கள் 11,953, இன்னும் 87 ரன்கள் எடுத்தால் லாராவின் சாதனையை சந்தர்பால் முறியடித்திருப்பார்.

 

சந்தர்பால் தனது உரையாடலில் இதைக்கூட தெரிவிக்கவில்லை, மாறாக, தனது சொந்த மண்ணில், தனது ரசிகர்கள் முன்னிலையில் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடும் தனது நியாயமான விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால்... சிம்மன்ஸ்-சந்தர்பால் உரையாடல் இதோ:

 

"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் முடித்துக் கொள்ளும் எனது முடிவு அதிகப்படியான கோரிக்கை அல்ல, உள்நாட்டில் என்னுடைய ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்லும் வாய்ப்பை கேட்கிறேன். மேலும் மேற்கிந்திய கிரிக்கெட்டுக்கு எனது பங்களிப்புக்காக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு பிரியாவிடை அளிக்கும் சாத்தியமும் இதில் உள்ளது.

 

என்னை ஓய்வு முடிவுக்கு தள்ளக்கூடாது. எனது சொந்த மண்ணில் நான் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாட ரசிகர்களும் விரும்புகின்றனர் மக்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

ஆனால் பயிற்சியாளர் சிம்மன்ஸ் தனது மறுப்பில், “கடந்த 21 ஆண்டுகளாக மேற்கிந்திய கிரிக்கெட்டுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது, உங்களது சேவையும் அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு ஆண்டுகள் விளையாடியது என்ற சேவைக்காலம் அணித்தேர்வுக்கான அளவுகோலாக இருக்க முடியாது.

 

ரசிகர்கள், மற்றும் பொதுக்கருத்து உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம், ஆனால் இது அணித் தேர்வுக்கு ஒரு அளவு கோலாக இருக்குமானால் நீங்கள் 50 வயது வரை கூட ஆட முடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதனை நாம் அளவுகோலாகக் கொள்ள முடியாது என்பதே.

 

நாங்கள் உங்களை ஓய்வு நோக்கி தள்ளவில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், சந்தர்பால் ஓய்வு பெறுகிறார் என்பது சந்தர்பால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதை விட மதிப்பு மிக்கதுதானே?” என்று சிம்மன்ஸ் கூறியதாக அந்த உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கயானா கிரிக்கெட் வாரிய தலைவர் சந்தர்பாலுக்கு நிகழ்ந்ததை கடுமையாக எதிர்த்து தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார். கயானா ரசிகர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7260294.ece

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்து நான் விரல் சூப்பும் காலத்தில் இருந்து சந்தர்பால் விளையாடுகின்றார் .... இன்னும் ஓய்வெடுக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது

Link to comment
Share on other sites

 

மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் அதலபாதாளத்தில் தத்தளித்த காலங்களில் சந்தர்பாலின் பல இன்னிங்ஸ்கள் அந்த அணியின் மானத்தைக் காப்பாற்றியதை ஒருவரும் மறக்கலாகாது. ஆனால் சந்தர்பாலுக்கும் வயது 40 ஆகிவிட்டது.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7251409.ece

 

 

எனக்கு தெரிந்து நான் விரல் சூப்பும் காலத்தில் இருந்து சந்தர்பால் விளையாடுகின்றார் .... இன்னும் ஓய்வெடுக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது

 

நிழலி நீங்கள் 20 வயதிலும் விரல் சூப்பினீர்களா? :icon_mrgreen::lol: :lol:

 

http://www.espncricinfo.com/westindies/content/player/51469.html

 

 

21 ஆண்டுகளாக மேற்கிந்திய கிரிக்கெட்டுக்கு அயராது பங்களிப்பு செய்த சந்தர்பால் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்த பின்னணியை அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7260294.ece

 

Link to comment
Share on other sites

சந்தர்பால் விவகாரம்: லாயிட் முடிவுக்கு ஹோல்டிங் ஆதரவு
 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து மூத்த வீரரான சந்தர்பாலை நீக்கிய தேர்வுக் குழு தலைவர் கிளைவ் லாயிட்டின் முடிவுக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள்-ஆஸ்திரே லியா இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 3-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. சமீபத்தில் நடை பெற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன் சேர்க்காத 40 வயதான சந்தர்பாலுக்கு ஆஸ்திரேலியத் தொடரில் வாய்ப்பளிக்கப்பட வில்லை.

 

 

இந்த விவகாரத்தில் சந்தர் பாலுக்கு ஆதரவாக களத்தில் குதித்த முன்னாள் கேப்டன் லாரா, சச்சின் தனது பிரிவு உபசார டெஸ்ட் போட்டியில் விளையாட பிசிசிஐ வாய்ப்பளித்ததைப் போன்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் சந்தர்பாலுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கிளைவ் லாயிட்டுக்கு ஆதரவு தெரிவித் துள்ள ஹோல்டிங் மேலும் கூறியிருப் பதாவது: சந்தர்பால் தனது ஆட்டத்திறனை இழந்துவிட்டார். அவர் அணியில் இடம்பெறத் தகுதியான நபர் அல்ல என்பதை உறுதியாக நம்புகிறேன். கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுவதற்காக பிரிவு உபசார தொடரை நடத்த வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை யில்லை. சந்தர்பால் இப்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட தயாராக இருந்தாலும், சமீபத்திய தொடர்களில் அவர் சிறப்பாக ஆடவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் விளையாடியதைப் பார்த்தேன். அதில் அவருடைய ஆட்டம் பழைய சந்தர்பாலின் ஆட்டமாக இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் அவருடைய செயல்பாடு மெதுவாக இருந்தது.

 

வரும் தொடரில் ஆஸ்திரேலி யாவின் வேகப்பந்து வீச்சு எப்படி இருக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். எனவே சந்தர்பால் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும். சந்தர்பாலின் இடத்தை உடனடியாக யாராலும் நிரப்ப முடியாது. ஆனாலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரை சேர்க்க வேண்டிய நேரம் இது என்றார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7263465.ece
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.