Jump to content

சுவிஸ் குமார் சுவிஸ் பிரஜை இல்லை! மறுதலிக்கின்றது சுவிஸ் அரசு!!


Recommended Posts

புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தினில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை இல்லையென கொழும்பிலுள்ள சுவிஸ் தூதவராலயம் அறிவித்துள்ளது.

இன்று தூதுவாலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் குறித்த நபர் இலங்கை பிரஜையே எனவும் எனினும் சுவிஸினில் வதிவிட அனுமதி பெற்றுக்கொண்டுள்ளவரெனவும் அச்செய்தி குறிப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையினை வன்மையாக கண்டித்து சுவிஸ் அரசு பக்கச்சார்பற்ற விசாரணைகளை வலியுறுத்தியுள்ளதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Press%20release%2025-05-2015-page-001.JP

அதே வேளை கொலை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபரொருவர் சுவிஸ் பிரஜை என தெரிவிக்கப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளினில் அது தவறான தகவல் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுவிஸினில் வதிவிட அனுமதி பெற்றுக்கொண்டுள்ள ஒருவரேயெனவும் அச்செய்தி குறிப்பினில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/40367/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவீஸீல் அகதியாக பதிந்து வதிவிட உரிமை உள்ளவர் எப்படி இலங்கை போக முடியும். இலங்கையில் ஆபத்து என்றபடியால்தான் இவருக்கு வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் எதோ வில்லங்கம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஆங்கிலத்தில் உள்ளதில் அவர் அகதி என்று குறிப்பிடப்படவில்லை.

நான் விசாரித்ததில் - ஆள் பலகாலத்துக்கு முன்பு சுவிஸ் வந்து அசைலம் அடிச்சு. இப்போ சுவிஸ் நிரந்தர உரிமை உள்ள ஆளாம். ஆனால் போஸ்போர்ட் இன்னமும் சொறிலங்கா தானாம்.

இவர் இலங்கை போகவோ மீள சுவிஸ் திரும்பவோ எந்த தடையும் இருந்திராது.

குற்றம் நிரூபிக்கப் பட்டால் - சுவிஸ் நிரந்தர வதிவிட உரிமைக்கு சிக்கல் வருமா? தெரியாது. சுவிஸ் லோயர் யாரிடமும் கேக்க வேணும்.

உதிரித் தகவல்: இவர் வேலணையில் மணம் முடித்து. இரு பதின்மவயது ஆண்பிள்ளைகள் உள்ளதாம். இப்போ விவகரத்தாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுவிஸ் தூதுவராலயம் அறிக்கை மூலம் சொல்ல முயற்சிப்பது குறித்த நபர் பற்றிய எதிர்கால நீதிவிசாரணைகள் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவானதாகவே நடக்கும் என்பதாகும். சுவிஸ் பிரஜையாயின் நீதிவிசாரணைகளில் சுவிஸ் அரசின் தலையீடுகள் இருக்கும். ஆனால் சிங்கன் இலங்கை கடவுச்சீட்டையே தொடர்ந்தும் வைத்திருப்பதால் சுவிஸ் அரசின் தலையீடுகள் இருக்காது நீங்கள் தாரளமாக அவரை களுமரத்தில் ஏற்றலாம். வெறும் வதிவிட அனுமதி மட்டும் உள்ளவருக்கு பிரஜா உரிமையுள்ள ஒருவருக்கு வழங்கப்படும் தனிநபர் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஆங்கிலத்தில் உள்ளதில் அவர் அகதி என்று குறிப்பிடப்படவில்லை.

நான் விசாரித்ததில் - ஆள் பலகாலத்துக்கு முன்பு சுவிஸ் வந்து அசைலம் அடிச்சு. இப்போ சுவிஸ் நிரந்தர உரிமை உள்ள ஆளாம். ஆனால் போஸ்போர்ட் இன்னமும் சொறிலங்கா தானாம்.

இவர் இலங்கை போகவோ மீள சுவிஸ் திரும்பவோ எந்த தடையும் இருந்திராது.

குற்றம் நிரூபிக்கப் பட்டால் - சுவிஸ் நிரந்தர வதிவிட உரிமைக்கு சிக்கல் வருமா? தெரியாது. சுவிஸ் லோயர் யாரிடமும் கேக்க வேணும்.

உதிரித் தகவல்: இவர் வேலணையில் மணம் முடித்து. இரு பதின்மவயது ஆண்பிள்ளைகள் உள்ளதாம். இப்போ விவகரத்தாம்.

சுவிசில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்கள் மேல் வீட்டு சுவிஸ் வயது போன கிழவியுடன் சண்டை என்றவுடன் கேட்டு கேட்க்காமல் குடும்பமாய் சொரிலன்காவிட்க்கு அனுப்பிய அரசு இந்த விடயத்தில் கருணை காட்டும் என்பது நம்ப முடியாது .

ஐரோப்பாவில் அகதிகளுடன் கடுமையாக நடப்பவர்கள் ஆனால் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும் பூலோக சொர்க்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சட்டத்தின் படி, குமார் சுவிஸ் பிரஜை எண்டாலும், சுவிஸ் அரசோ (வேறு எந்த அரசோ) செய்யக்கூடியது

1) சிறையில் தூவரலய அதிகாரிகள் சந்திப்பு

2) உறவுகள் சந்திக்க உதவி

3) லோயர் வைக்க உதவி இவைதான்.

மயூரனுக்கு இந்தோனேசியாவில் அவுஸ் அரசு என்ன செய்ததோ - அதுதான் அதிக பட்சம்.

சிங்கன் சிறி மன்னிக்கணும் சொறி லங்கன் எண்ட படியால் அதுவுமில்லை :)

Link to comment
Share on other sites

ஒரு நாட்டிலிருந்து அகதியாகி நீங்கள் அகதிக்கோரிகையை இன்னுமொரு நாட்டில் விண்ணப்பித்து அந்த நாடு உங்களை அகதியாக ஏற்றுகொண்டால் உங்களுக்கு அந்த நாட்டின் பிரஜாவுரிமை அல்லது உங்களை ஏற்று கொண்ட நாட்டின் ஒரு பயண பத்திரம் இருந்தால் மட்டும் நீங்கள் அந்த நாட்டின் வெளியே வேறு நாடுகளுக்கு செல்லுதல் சட்டபூர்வமானதாகும்.அதே நேரத்தில் நீங்கள் உங்கள் நாட்டிற்கு சென்று வந்தால் உங்களுக்கு உங்கள் நாட்டில் உயிராபத்து இல்லை என்று அர்த்தப்படும்.அல்லது உங்கள் நாட்டில் உங்களை கைது செய்தால் அகதியுரிமை கோரிய நாடு உங்களைப் பாதுகாக்கமுடியாது போய்விடும். நீங்கள் ஒரு சிலர் விடும் தவறுகள் பல அகதிக்கோரிக்கையாளரின் நம்பகத்தன்மையை இழக்கச் செய்கின்றது.உங்களிடம் உங்கள் சொந்த நாட்டுக் கடவுச் சீட்டு இருந்தால் நீங்கள் அகதிக்கோரிக்கையை வைத்த நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும். இதைவிட கொடுமையான குற்றம் வேறு வேறு பெயர்களில் கடவுச் சீட்டு வைத்திருந்து பயணித்தல்.விரைவில் மேற்குலகம் பலரை கைது செய்து அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பவும் தண்டனைகள் வழங்கவும் பெருமெடுப்பிலான முயற்சிகளை மேற் கொண்டுள்ளதுடன் விரைவில் இது சம்பந்தமான தகவல்களை பொது மக்களிடமும் திரட்டவிருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை,

அப்படியே சிறி லங்கா போய் நீங்கள் திரும்பி வருவதை கண்டு பிடித்தால் - உங்களுக்கு மரண தண்டனை நிச்சயம்.

இதையும் சேர்த்து விடுங்களேன்.

புறக்கணி சிறிலங்கா எல்லாம் குப்புற விழுந்தாப் பிறகு இப்படி பொய் சொல்லியாவது சனம் இலங்கை போறதை நிப்பாட்டப் போறியளாக்கும்?

செம காமெடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் குமார் நீண்ட காலம் சுவிசில் வசித்துவருகிறார் என்று தகவல் சொல்கிறது எனினும் அவர் சுவிர் பிராஜா உரிமை அற்றவர் என்ற செய்தியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அந்த நீண்ட காலம் என்பது எத்தனை ஆண்டுகள் என்பது தெரியவில்லை. இங்கு ஏதோ சொல்லப்படாத செய்தி ஒன்றும் உள்ளதாகவே எனக்குப் படுகிறது. பிரஜா உரிமை இருக்கும் பட்சத்தில் அவருக்கு இலங்கை நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்பட்டு வழங்கப்படும் தண்டனையை அவர் தன் பிரஜா உரிமையுள்ள நாட்டில் அனுபவிக்க சுவிஸ் அரசு வேண்டுகோள் விடுக்கப்படும் சந்தர்ப்புங்களும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுவிஸ் தூதுவராலயம் அறிக்கை மூலம் சொல்ல முயற்சிப்பது குறித்த நபர் பற்றிய எதிர்கால நீதிவிசாரணைகள் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவானதாகவே நடக்கும் என்பதாகும். சுவிஸ் பிரஜையாயின் நீதிவிசாரணைகளில் சுவிஸ் அரசின் தலையீடுகள் இருக்கும். ஆனால் சிங்கன் இலங்கை கடவுச்சீட்டையே தொடர்ந்தும் வைத்திருப்பதால் சுவிஸ் அரசின் தலையீடுகள் இருக்காது நீங்கள் தாரளமாக அவரை களுமரத்தில் ஏற்றலாம். வெறும் வதிவிட அனுமதி மட்டும் உள்ளவருக்கு பிரஜா உரிமையுள்ள ஒருவருக்கு வழங்கப்படும் தனிநபர் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது.

 

 

இங்கு சுவிஸ் குமார் என்ன விசா அடிப்படையில் நீண்ட காலம் வாழ்ந்தார் என்பது தான் கேள்வி.எதனடிப்படையில் இவருக்கு இந்த விசா வழங்கப்பட்டது.
 
Long time student/subsidiary protection/desecration basis/humanitarian basis/work permit என பல உள்ளது, travel document  உள்ளவர்களுக்கே போக முடியாது
 
நிட்சாயமமாக அகதியாக இருக்க முடியாது. இதற்கு நீலப்பறவையின் பதிவி நல்ல சாட்சி.
Link to comment
Share on other sites

நீலப்பறவை,

அப்படியே சிறி லங்கா போய் நீங்கள் திரும்பி வருவதை கண்டு பிடித்தால் - உங்களுக்கு மரண தண்டனை நிச்சயம்.

இதையும் சேர்த்து விடுங்களேன்.

புறக்கணி சிறிலங்கா எல்லாம் குப்புற விழுந்தாப் பிறகு இப்படி பொய் சொல்லியாவது சனம் இலங்கை போறதை நிப்பாட்டப் போறியளாக்கும்?

செம காமெடி.

 

கனடாவிலிருந்து அகதியுரிமை கோரிய பலர் தங்களுடைய நாட்டு கடவுச்சீட்டில் சொந்த ஊர்களுக்கு பயணித்த படியால் மீண்டும் நிரந்தர வதிவிட அட்டைக்கு விண்ணப்பித்த போதும் பயணத்திற்கான காரணம் கேட்கப்பட்டு அவர்களுடைய அட்டையை வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறார்கள்.இதில் பல இலங்கையர்களும் அடக்கம்.முன்னைய காலங்களில் ஒற்றைத்தாளிலேயே நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டு விடும்.ஆனால் தற்போது ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
 
அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவர் இந்தியாவில் சென்று திருமணம் முடித்திருந்தார்.அவர்களது பதுவுத்திருமணம் இலங்கை தூதரகத்தில் ஏற்பாடாகியிருந்தது.அங்கு சென்ற இவரிடன் கனடிய பயண பத்திரம்(Canadian travel document) இருந்தது.அதை பார்த்தவுடன் உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு நிவர்த்தி(security clearance) செய்ய வேண்டும் அதன் பின் தான் பதிவுத்திருமணம் என்றிருக்கின்றார்கள்.இவரும் வந்து விட்டார்.தூதரகம் முதலில் கனடா அரசிடம் இவரது பாதுகாப்பு நிவர்த்தி விண்ணப்பத்தை பரிசீலிக்க அனுமதி கோரியிருந்தது.(எனெனில் இவர் கனடாவால் பாதுகாக்கப் படும் ஒரு நபர்)கனடிய அரசு அனுமதி வழங்கிய போதும் இவர் கனடாவுக்கு வரும் போது விசாரணைக்கும் ஏற்பாடு செய்திருந்தது போலும்.திருமணம் எல்லாம் நிறைவேற்றி விட்டு வரும் போது கனடாவுக்கான விமானத்தை ஜேர்மெனியில் ஏறும் போது இவரது கடவுச்சீட்டு மஞ்சள் உறையில் பொதி செய்யப்பட்டு கனடாவின் விமான நிலைய வாசலில் போலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.கிட்டத்தட்ட இவ் விசாரணை 2 மணித்தியாலங்கள் எடுத்திருக்கும்.எப்படி இலங்கை சென்றாய்? எதற்காக? எங்கே உன்னுடைய மற்றைய கடவுச்சீட்டு? (கனடிய சான்றிதழில் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாது)இப்படி அக்கு வேறு ஆணி வேறாக விசாரிக்கப்பட்டு திருமணப்பதிவு பத்திரத்தின் பிரதியைப்பார்த்து திருப்தி அடைந்து மன்னிப்புடன் வெளியேற விட்டார்கள்.
 
11ctd.jpg
MORE IMMAGES
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை மன்னிக்கணும், நீங்களும் குழம்பி ஏனையோரையும் குழப்புகிறீர்கள்.

படி முறை விளக்கம் இதுதான்.

1) அகதி அந்தஸ்து கோரல்

2) அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படல். இதன் போது குறிப்பிட்ட காலத்துக்கு தஞ்ச நாட்டில் வாழும் உரிமை கொடுக்கப்படும். யூகேயில், Refugee Status -Limited Leave to Remain என்பார்கள். இது அநேகமாய் 5 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த விசாவை சொந்த நாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்தால் அதிலே அடித்துக் கொடுப்பார்கள். பாஸ்போர்ட் இல்லாமல் வந்தோர்க்கு நீங்கள் மேலே காட்டிய மாதிரி 1951 Refugee Covention அடிபடையிலான டிரவல் டொகுமெண்ட் வழங்குவார்கள். இந்த 5 வருட வீசாவை தன் பாச்போர்டிலோ அல்லது டிரவல் டொகுமெண்ட்டிலோ வைத்திருப்பவர் சொந்த நாட்டுக்குப் போனால் அவரின் அகதி அந்த்ஹஸ்து மறு பரிசீலனையாகும். டிரவல் டொக்குயூமெண்ட்டில் சொந்த நாட்டுக்கு போக முடியாது என்று அடித்தே கொடுப்பார்கள்.

3) இப்படியான விசாவில் 5 வருடத்தை கழித்த ஒருவர், பின்னர் நிரந்தர வீசா, யூகேயில் indefinite leave to remain என்பர், விற்கு விண்ணபிக்கலாம். இப்படி நிரந்தர வீசா கிடைத்தவரின் வீசாவுக்கு காலாவதியாகும் திகதி என்று ஒண்டு இல்லை. தவிரவும் இவர் எந்த நாட்டுக்கும் போய் வரலாம். சொந்த நாடு உட்பட. ஆனால் சொந்த நாட்டுப் பாஸ்போட் இருந்தால மட்டுமே இது சாத்தியமாகும். நீங்கள் மேலே சொன்ன டிரவல் டொகுமெண்ட் வைத்திருப்போர்கு, நிரந்தர வீசா கிடைத்தாலும் - சொந்த நாட்டுக்கு போக முடியாது - காரணம் அவர்கள் வைத்திருக்கும் டிரவல் டொக்குமெண்ட்ட்டில் அது தடை செய்யப் பட்டிருக்கும். இப்படியானவர்கள், தஞ்சம் கொடுத்த நாட்டின் பிரஜா உரிமை பெற்ற பின்பே, சொந்த நாட்டுக்குப் போகலாம்.

கொழும்பான்,

குமாரி விடயத்தில் நடந்திருக்க கூடியது இதுதான்.

1) சுவிசில் தஞ்சம் கோரி இருப்பர், ஆனால் இலங்கை பாஸ்போர்டை காட்டி இருப்பார். அல்லது பின்னர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து எடுத்திருப்பார்.

2) அகதி வீசாவை இலங்கை பாஸ்போர்ட்டில் அடித்துக் கொடுத்திருப்பர்.

3) 5 வருடத்தின் பின், இலங்கை பாஸ்போர்டில் சுவிஸ் நிரந்தர விசாவை அடித்து கொண்டு, இலங்கைக்கு புறப்பட்டிருப்பார்.

Link to comment
Share on other sites

 நீங்கள் ஒரு நாட்டிலிருந்து அகதியாக வந்தால் அகதி கோரிக்கை வைத்த நாட்டிலிருந்து வெளியே போவதானால் மீண்டும் உங்கள் நாட்டு கடவுச் சீட்டைப் பாவித்தால் அது உங்களுக்கு பாது காப்பானதா? நீங்கள் உயிராபத்து இருக்கும் பட்சத்தில் தான் இன்னுமொரு நாட்டில் அகதி கோரிக்கையை முன் வைக்கிறீர்கள். நீங்கள் திரும்பவும் உங்கள் நாட்டு கடவுச் சீட்டை பாவித்து பயணிப்பதால் உங்களை கைது செய்து சொந்த நாட்டுக்கு அழைத்து செல்ல உங்கள் நாட்டிற்கு உரிமை உண்டு.அதே போல நீங்கள் அகதி கோரிக்கை வைத்த நாட்டில் குடியுரிமை பெற்றால் உங்கள் நாட்டின் குடியுரிமை ரத்து செய்யப்படும் (அகதிக்கோரிக்கையாளருக்கு மட்டும் பொருந்தும்)அதன் பின் மட்டும் தான் நீங்கள் உங்கள் சொந்த நாட்டுக்கு பயணிக்க முடியும்.அகதிக்கோரிக்கை முன்வைத்தவர்.சொந்த நாட்டுக்கு  அடிக்கடி பயணம் செய்வது இரட்டை குடியுரிமை பெறுவது யாவும் உங்களை ஏற்றுகொண்ட நாட்டை ஏமாற்றுவதாகும்.உங்களுக்கு இருக்கும் உயிராபத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.சில வேளைகளில் சுதந்திரம் பெற்றால் உயிராபத்து நீங்கும்

 

Link to comment
Share on other sites

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்கள்…..

1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976

2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981

3. பூபாலசிங்கம் சசிகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் பிறந்த திகதி 29.07..1984

4. மகாலிங்கம் சசிந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 25.05.1984

5. தில்லைநாதன் சந்திரகாந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 13.08.1983

6. சிவதேவன் பிரசாந்தன் – புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 06.03.1991. இவர் வேலணைப் பிரதேச சபையில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.

7. நிசாந்தன் என்னும் பரணி ரூபசிங்கம் குகநாதன் – புங்குடுதீவ பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 28.04.1989 இவர் வசிக்குமிடம் நாவலசிங்கராம மாவத்தை, மோதறை, மட்டக்குளி என்னும் கொழும்புப் பகுதியாகும்.

8. ஜெயரட்ணம் கோகுலன் (கண்ணா) – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 05.02.1989 இவர் வசிக்குமிடம் கிறீன் ரோட், கொட்டாஞ்சேனை, என்னும் கொழும்புப் பகுதியாகும்.

9. சுவிஸில் பிரகாஸ் எனவும் புங்குடுதீவில் குமார் எனவும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 06.10.1971 இவரது வழக்கு இல:B.116/ 2015

இவர்கள் அனைவரும் 01.06.2015 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேகநபர்கள் வித்தியா படுகொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களா? இல்லையா?? என்பதை உறுதிப்படுத்த முடியாது. விசாரணைகளின் முடிவிலேயே வழக்கின் முடிவு தெரியவரும்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தப்பி விட்டதாகவும் அவர் உதயசூரியன் சுரேஸ் எனவும் பரவலாக பேசப்படுகின்றது. இது குறித்து பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில்,

“அப்படி யாரும் தப்பிவிடவில்லை. அப்படியான ஒருவரை நாம் தேடவும் இல்லை. ஆகவே இந்த ஒன்பதுபேர் மாத்திரமே இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்னும் சந்தேகத்தின்பேரில் நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். டீ.என்.ஏ பரிசோதனையின் முடிவிலேயே இவர்கள் குற்றவாளிகளா? இல்லையா?? என்பதை எம்மால் உறுதியாகக் கூறமுடியும் என தெரிவித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் அரசியல் அடைக்கலம் கோரியவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அவர்கள் அந்த நாட்டில் நீண்ட காலங்கள் வாழ்ந்து சட்டப்படி வேலை செய்து வருமானவரி கட்டி இருந்தால் வேறு ஒரு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிரந்தர வதிவிடம் உரிமை வழங்கப்படும்.(சிறிலங்கா கடவுச்சீட்டில்)அந்த விசாவில் குறிப்பிட்ட காலம் இருந்த பின் அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.இவ்வாறனவர் சிறிலங்காவுக்குப் போய்வரலாம்.அரசியல் தஞ்சம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விசா வழங்கப்பட்டவர்கள் குடியுரிமை பெறும்மட்டும் சிறிலங்காவுக்குப் போய்வரமுடியாது.சுவிசில் நல்ல சம்பளம் என்ற படியால் ந்த்மவர்களுல் பலர் நிரந்தர வதிவிடம் உரிமையை பெற்று விட்டு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்புவதில்லை.அவர்கள் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறினால் அவர்களது ஓய்வூதியப் பணம் (பெருந்தொகை)ஒரேயடியாக கிடைக்கும். குடியுரிமை எடுத்தால் 67 வயதுக்குப்பிறகு அந்தப்பணம் கொஞ்சம் கொஞ்சமாக மாதம் மாதம் கிடைக்கும்.மேற்படி நபர் அப்படிப்பட்ட ஒரு விசாவில் இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் ஊடகங்களின் தவறான கருத்தால் இதனை அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்டவர் சுவிஸ் பிரஜை என்ற ஊடகங்களின் கருத்து அவரை சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்ற மாயையை தோற்றுவித்துள்ளது. அதுமட்டுமல்லாம் சுவிஸ் நாட்டு ஊடகங்களிலும் இந்த பாலியல் குற்றம் தொடா;பான செய்திகள் வெளியாகியிருந்தன.

 

இந்த குழப்பத்தினை தீர்ப்பதற்காகவும் சட்டச்சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் அவா;கள் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். 
 
சுவிஸ் நாட்டின் வதிவிட உரிமை பெற்றவர்கள் விசா பெற்று வேறு நாடுகளிற்கு சென்றுவரலாம் (அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்பது தவறு). 
இங்கே குறிப்பிட்ட நபர் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றவர். தற்காலிக அனுமதி பெற்றவர்கள் தான் நாட்டை விட்டு வெளியே போகமுடியாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு(சுவிஸ்)அகதி அந்தஸத்து கோரித்தான் அனைவரும் விண்ணப்பிகிறார்கள்.அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அகதி அந்தஸத்து வழங்கப்பட்டால் சொந்த நாட்டைத்தவிர மற்ற எல்லா நாடுகளுக்கும் போய்வரலாம்.அது நிராகரிக்கப்பட்டாலும் மனிதாபன அடிப்படையில்   தனிப்பட்ட ரீதியில் பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்டாலும்(பொதுப்படையிலும் மனிதாபன முறையிலும்)இங்கு தங்குவதற்க்கு ஒரு விசா கொடுப்பார்கள்.அந்த விசாவில் நாட்டை விட்டு வெளியேற முடியாது.வேலை செய்யலாம்.இந்த விசாவில் குறிப்பிட்ட காலம் இருந்தால் (பொதுவாக 5 வருடம்)தற்காலிக விசா(B) கொடுப்பார்கள்.அதன்பின் சிறிதுகாலம் செல்ல நிரந்தர விசா© கொடுப்பார்கள்.தற்காலிக் விசா மற்றும் நிரந்தர விசாவில் இலங்கை்கும் அய்ரோப்பிய நாடுகளுக்கும் சென்று வரலாம் விசா எடுக்காமல்.பிரஜாவுரிமை எடுத்தால் இலங்கைக்கு விசா எடுக்க வேணும்.இதில் எந்த விசாவும் பாஸ்போட்டில் அடிப்பது இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை மன்னிக்கணும், நீங்களும் குழம்பி ஏனையோரையும் குழப்புகிறீர்கள்.

படி முறை விளக்கம் இதுதான்.

1) அகதி அந்தஸ்து கோரல்

2) அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படல். இதன் போது குறிப்பிட்ட காலத்துக்கு தஞ்ச நாட்டில் வாழும் உரிமை கொடுக்கப்படும். யூகேயில், Refugee Status -Limited Leave to Remain என்பார்கள். இது அநேகமாய் 5 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த விசாவை சொந்த நாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருந்தால் அதிலே அடித்துக் கொடுப்பார்கள். பாஸ்போர்ட் இல்லாமல் வந்தோர்க்கு நீங்கள் மேலே காட்டிய மாதிரி 1951 Refugee Covention அடிபடையிலான டிரவல் டொகுமெண்ட் வழங்குவார்கள். இந்த 5 வருட வீசாவை தன் பாச்போர்டிலோ அல்லது டிரவல் டொகுமெண்ட்டிலோ வைத்திருப்பவர் சொந்த நாட்டுக்குப் போனால் அவரின் அகதி அந்த்ஹஸ்து மறு பரிசீலனையாகும். டிரவல் டொக்குயூமெண்ட்டில் சொந்த நாட்டுக்கு போக முடியாது என்று அடித்தே கொடுப்பார்கள்.

3) இப்படியான விசாவில் 5 வருடத்தை கழித்த ஒருவர், பின்னர் நிரந்தர வீசா, யூகேயில் indefinite leave to remain என்பர், விற்கு விண்ணபிக்கலாம். இப்படி நிரந்தர வீசா கிடைத்தவரின் வீசாவுக்கு காலாவதியாகும் திகதி என்று ஒண்டு இல்லை. தவிரவும் இவர் எந்த நாட்டுக்கும் போய் வரலாம். சொந்த நாடு உட்பட. ஆனால் சொந்த நாட்டுப் பாஸ்போட் இருந்தால மட்டுமே இது சாத்தியமாகும். நீங்கள் மேலே சொன்ன டிரவல் டொகுமெண்ட் வைத்திருப்போர்கு, நிரந்தர வீசா கிடைத்தாலும் - சொந்த நாட்டுக்கு போக முடியாது - காரணம் அவர்கள் வைத்திருக்கும் டிரவல் டொக்குமெண்ட்ட்டில் அது தடை செய்யப் பட்டிருக்கும். இப்படியானவர்கள், தஞ்சம் கொடுத்த நாட்டின் பிரஜா உரிமை பெற்ற பின்பே, சொந்த நாட்டுக்குப் போகலாம்.

 

அண்ணர் இன்னும் பழைய காலத்தில இருக்கிறார். இப்ப எல்லாம்.. biometric card தான்.

 

uk-biometric-identity-card_0.jpg

 

 

உந்த பாஸ்போட்டில ஒட்டிற கிட்டிறது எல்லாம் கைவிட்டாச்சு. :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு தனியே Biometric card மட்டும் கொடுக்கினம், சிலருக்கு காட்டும் உம் கொடுத்து, பாஸ்போர்டில் biometric ஸ்டிக்கரும் ஒட்டிக்கொடுத்து கொண்டுதான் இருக்கினம். மிகச்சிலருக்கு இன்னும் ஸ்டிக்கர் மட்டும்தான்.
இப்பவும் transition period than. இரண்டு நடைமுறைகளும் புழக்கத்தில் உளது. ஆனால் ஸ்டிக்கர் 2017 உடன் நிப்பாட்டும் திட்டம் உண்டு.

நாட்டுக்கு வெளியே உள்ள எல்லா ஹைகொனிசன்களிலும் கார்ட் கொடுக்கும் வசதி இன்னும் இல்லை. தவிர கார்ட்டுக்கும், பாஸ்போர்ட் ஸ்டிக்கருக்கும் நடைமுறையில் ஒருவித்தியாசமுமில்லை.

**************.

 

 

நியானி: ஒருவரி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு வெளியே உள்ள எல்லா ஹைகொனிசன்களிலும் கார்ட் கொடுக்கும் வசதி இன்னும் இல்லை. தவிர கார்ட்டுக்கும், பாஸ்போர்ட் ஸ்டிக்கருக்கும் நடைமுறையில் ஒருவித்தியாசமுமில்லை.

**********

 

இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. கார்ட்டில்.. புகைப்படம் மற்றும் தரவுகளுடன்.. பயோமாற்றிங் (கைவிரல் அடையாளங்கள்) தரவும் பதியப்பட்டுள்ளது. கூடிய அளவு அடையாளத்தை உறுதிப்படுத்தும்.

 

ஸ்ரிக்கரில்.. பயோமற்றிங் தரவு இல்லை.

 

மேலும்.. 2009 காட் கொடுக்க ஆரம்பித்து.. இப்போது பொதுவாக இங்கிலாந்தில் நுழைந்து விசாவுக்கு விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. இல்லாதோரும் விண்ணபிக்கக் கோரப்படுகின்றனர்.

 

இங்கினை சிலர் தாங்க சொல்லுறது தான் சட்டம் என்றிருக்கினம் போல.

 

Get a biometric residence permit (BRP)

 

If you applied from inside the UK

 

Your biometric residence permit (BRP) should be sent to you by post.

You need to check and report any errors on your BRP or damage when it arrives.

 

If you applied from outside the UK

 

When your leave is granted, you’ll be issued a 30 day vignette. The vignette is valid for 30 days from the date you said you’d arrive in the UK (even if you arrive at a later date).

 

You’ll have to apply for another 30 day visa if you don’t travel within that 30 days.

Your decision letter will tell you:

You must bring your passport or travel document with your vignet.

 

https://www.gov.uk/biometric-residence-permits/collect

 

அண்ணருக்கு பழைய உலகை விட்டு வாற நோக்கமே இல்லைப் போலும். :lol::D

 

 

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இப்போது பொதுவாக இங்கிலாந்தில் நுழைந்து விசாவுக்கு விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. இல்லாதோரும் விண்ணபிக்கக் கோரப்படுகின்றனர்".

இங்கே கவனிக்கப் பட வேண்டிய சொற்கள் "பொதுவாக" மற்றும் "இல்லாதோரும்".

பூவ, பூ எண்டும் சொல்லலாம், புய்ப்பம் எண்டும் சொல்லலாம், நீங்க சொல்லுறமாரியும் சொல்லலாம் :)

தொடர்ந்தும் தலை முடியை புடுங்கி, மூக்கில் விட்டு தும்மும் நோக்கம் எனக்கு இல்லை.

நன்றி, வணக்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.