Jump to content

முதல் இரண்டு தினங்களில் எட்டு புதிய சாதனைகள் வடக்கிற்கு இரண்டு சாதனைகள் சொந்தமாகின


Recommended Posts

முதல் இரண்டு தினங்களில் எட்டு புதிய சாதனைகள் வடக்கிற்கு இரண்டு சாதனைகள் சொந்தமாகின
 

கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்­கிலும் திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்­கிலும் நடை­பெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்­லுநர் போட்­டி­களின் முதல் இரண்டு தினங்­களில் சாத­னைகள் பல நிலைநாட்டப்பட்­டுள்­ளன.

 

கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 20 வய­துக்­குட்­பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்­தலில் வலல்ல ஏ. ரட்­நா­யக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹர்­ஷனி மற்றும் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்லூ­ரியைச் சேர்ந்த ஜெ. அனிதா ஆகிய இரு­வரும் 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர்.

 

xfc3l4.jpg

 

எனினும் ஒரே தாவலில் 3.10 மீற்றர் உய­ரத்தைத் தாவிய ஹர்­ஷனி  தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுத்­த­துடன் அந்த சாதனை அவ­ருக்கு சொந்­த­மா­னது.

இரண்­டா­வது முயற்­சியில் அனிதா இந்த உய­ரத்தைத் தாவி­யதால் வெள்ளிப் பதக்­கத்தை வென்­றெ­டுக்க நேரிட்­டது.

இதே­வேளை 18 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­த­லிலும் அள­வெட்டி அரு­ணோ­தயா கல்­லூ­ரியின் நெப்­தலி ஜொய்சன், தெல்­லிப்­பழை மகா­ஜ­னாவின் எஸ். டிலக்சன்  ஆகிய இரு­வரும் 4.20 மீற்றர் உயரம் தாவி புதிய சாத­னையை நிலைநாட்டினர்.

எனினும் குறைந்த முயற்சி அப்­ப­டையில் நெப்­தலி ஜொய்­ச­னுக்கு தங்கப் பதக்கம் கிடைத்­தது.

 

2afbn76.jpg

 

இதே போட்­டியில் மகா­ஜனா வீரர் எஸ். தினேஷ் (3.70 மீற்றர்) வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

பெண்­க­ளுக்­கான 18 வய­துக்­குட்­பட்ட கோலூன்றிப் பாய்­தலில் 2.70 மீற்றர் உயரம் தாவிய தெல்­லிப்­பழை மகா­ஜனா வீராங்­கனை டிலானி ஸ்ரீஸ்கந்தராஜா தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

 

 

இதே­வேளை, திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 18 வயதுக்குட்ட பெண்­க­ளுக்­கான 5000 மீற்றர் வேக­நடைப் போட்­டியை 28 நிமிடங்கள் 31.03 செக்­கன்­களில் நிறைவு செய்த வவு­னியா மாவட்ட மெய்வல்லுநர் சங்­கத்தைச் சேர்ந்த கே. கன­கேஸ்­வரி புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்­கத்தை சூடினார்.

கதிர்­காமம் துட்­டு­கெ­முனு வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த எம். சி. தமயந்தியினால் 2011இல் நிலை­நாட்­டப்­பட்ட 29 நிமி­டங்கள் 55.88 செக்­கன்கள் என்ற சாத­னை­யையே கன­கேஸ்­வரி முறி­ய­டித்­துள்ளார்.

 

 

ஆண்­க­ளுக்­கான 10000 மீற்றர் வேக நடைப் போட்­டியை 58 நிமி­டங்கள் 57.68 செக்­கன்­களில் நிறைவு செய்த இதே மாவட்­டத்தைச் சேர்ந்த கே. ரசி­ஹரன்  தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

வவு­னியா மாவட்­டத்தைச் சேர்ந்த மேலும் ஆறு பேர் பதக்­கங்­களை வென்றெடுத்­தனர்.

 

ஆர். ரமா (20இன் கீழ் பெண்கள் 1000 மீ. வேக நடை 1நி. 09.27.28 செக்), ஆர். தர்ஷிகா (23இன் கீழ் பெண்கள் சம்­மட்டி எறிதல் 23.17 மீற்றர்), சி. ஜேனோசன் (20இன் கீழ் ஆண்கள் சம்­மட்டி எறிதல் 29.19 மீற்றர்) ஆகியோர் வெள்ளிப்பதக்கங்­களை வென்­றனர்.

2ronf4g.jpg

ஐ. மேரி கொன்­சலா (16இன் கீழ் பெண்கள் 3000 மீ. வேக­நடை 19 நி. 05.03 செக்.), பீ. தர்­ஷிகா (18இன் கீழ் பெண்கள் 5000 மீ. வேக­நடை 35 நி. 52.89 செக்.), கே. கோகி­ல­வாணி (23இன் கீழ் 10000 மீ. 1 நி. 00.38.96 செக்.) ஆகியோர் வெள்ளிப் பதக்­கங்­க­ளையும் வென்­றனர்.

 

நேற்­றைய தினமும் மேலும் இரண்டு சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டன.

 

இதன் பிர­காரம் முதல் இரண்டு தினங்­களில் மொத்தம் பத்து சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளன.

 

திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற 20 வயதுக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் நீர்­கொ­ழும்பு நியூஸ்டெட் மகளிர் கல்­லூ­ரியைச் சேர்ந்த விதூஷா லக்­மாலி 13.12 மீற்றர் தூரம் பாய்ந்து தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார்.

 

அத்துடன் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலிலும் விமானப்படையைச் சேர்ந்த எஸ். துலாஞ்சலி 12.76 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10244#sthash.5Dwyv1dK.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சாதனையை நிலைநாட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மெய்வல்லுநர் விளையாட்டில் கிளிநொச்சிக்கு முதல் தங்கத்தை வென்ற டென்சிக்கா

 

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேவதாசன் டென்சிக்கா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அரிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

இவர் போட்டிக்கான நேரத்தில் சாதனை நிகழ்த்தாத போதிலும் இலங்கை மெய்வல்லுநர் வரலாற்றில் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக தங்கப்பதக்கம் வென்ற முதலாமவர் என்ற சாதனைக்கு உரித்துடையவரானார்.

2vhykgz.jpg

 

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 23.94 செக்கன்களில் நிறைவு செய்தே டென்சிக்கா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இவர் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வட மாகாண பாடசாலைகள் அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றதுடன் மாகாண திறந்த நகர்வலப் போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றைய தினம் ஏழு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

15coccx.jpg

 

அவற்றில் முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 400 மீற்றர் சட்ட வேலி ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற யமானி துலாஞ்சலி, தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டினார்.

 

இவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தை ஒரு நிமிடம் 02.12 செக்கன்களில் நிறைவுசெய்து இந்தச் சாதனையை நிலைநாட்டினார்.

2nbha4j.jpg

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் 1.50 மீற்றர் உயரம் தாவிய ஜே. சுஹிர்தா வெண்கலப்பதக்கம் வென்றெடுத்தார்.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=10267

Link to comment
Share on other sites

நான்கு தினங்களில் 20 புதிய சாதனைகள் பதிவாகின 16இன் கீழ் பிரிவில் துலாஞ்சலி சிறந்த வீராங்கனை - ஹாட்லி மாணவன், திருமலை மாணவிக்கு பதக்கங்கள்

 

திய­கம மஹிந்த ராஜபக்ஷ  விளையாட்ட­ரங்கில் நேற்று நிறை­வு­பெற்ற தேசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 18 வயதுக்குட்பட்ட பெண்களில் அதி சிறந்த மெய்வல்லுநருக்கான வெற்றிக் கிண்­ணத்தை அம்பக­முவ மத்­திய கல்லூரியைச் சேர்ந்­த­வரும் ஆசிய கனிஷ்ட சட்டவேலி ஓட்ட சம்­பி­ய­னு­மான யமானி துலாஞ்­சலி வென்­றெ­டுத்தார்.

 

இவர் 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்­டத்தில் (62.12 செக்) புதிய சாதனையை நிலைநாட்­டி­யி­ருந்தார்.

ஆண்கள் பிரிவில் மாரிஸ் ஸ்டெல்லா கல்­லூ­ரியைச் சேர்ந்த யூ.சந்தி­ர­சேன (400 மீ. சட்­ட­வேலி ஓட்டம் 53.38 செக். புதிய சாதனை) சம்­பி­ய­னானார்.

16 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் கம்­பஹா திருச் சிலுவை கல்லூரியின் பிரசாதி ல­க் ஷானி (நீளம் பாய்தல் 5.40 மீ.), ஆண்கள் பிரிவில் மாரிஸ் ஸ்டெல்லா கல்­லூ­ரியின் ப்ரமோத் மதுபாஷ் (நீளம் பாய்தல் 6.83 மீ. புதிய சாதனை), 20 வய­தின்கீழ் பெண்கள் பிரிவில் கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்­லூ­ரியின் ரூமேஷிக்கா குமாரி ரட்­நா­யக்க (200 மீ. 24.12 செக். புதிய சாதனை), ஆண்கள் பிரிவில் இரத்­தி­ன­புரி சீவலி கல்­லூ­ரியின் அக்­கில ரவிஷன்க (110 ம். 14.40 செக்.), வென்னப்­புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் ஜீ. தனஞ்­செய (நீளம் பாய்தல் 7.34 மீ.), 23 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் விமா­னப்­ப­டையின் எஸ். துலாஞ்­சனி (முப்பாய்ச்சல் 12.76 மீ. புதிய சாதனை), ஆண்கள் பிரிவில் இராணுவத்தின் என். கரு­ணா­சிங்க (முப்பாய்ச்சல் 15.95 மீ. புதிய சாதனை) ஆகியோர் சம்­பி­ய­னா­கினர்.

20b1cns.jpg

ஹாட்லி வீர­ருக்கு வெள்ளி, திரு­மலை மங்­கைக்கு வெண்­கலம்

16 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான பரிதி வட்டம் எறி­தலில் யாழ். ஹாட்லி கல்­லூ­ரியைச் சேர்ந்த பாலச்­சந்­திரன் ஆனந்த் வெள்ளிப்பதக்­கத்தை வென்றெடுத்தார்.

 

 

இரண்­டா­வது முயற்­சியில் முத­லி­டத்­தி­லி­ருந்த ஆனந்த் 42.00 மீற்றர் தூரம் பரி­தியை எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

 

இதே­வேளை, திரு­கோ­ணை­மலை ஸ்ரீ சண்­முகா இந்துக் கல்லூரியின் ஏ.நுஸ்ரத் பானு 18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான குண்டு எறிதல் போட்டியில் வெண்­கலப் பதக்கம் (8.36 மீ.) வென்றார்.

 

போட்­டியின் கடைசி நாளான நேற்று 5 புதிய சாத­னைகள் நிலைநாட்டப்பட்டதுடன் ஒரு சாதனை சமப்படுத்தப்பட்டிருந்தது.

 

இதன் பிரகாரம் நான்கு நாள் நிகழ்ச்சியில் மொத்தமாக 20 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=10286

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.