Jump to content

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஞாயிறன்று ஆரம்பம்: ஒற்றையர் சம்பியன்களுக்கான பணப்பரிசு 26 கோடி ரூபா


Recommended Posts

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஞாயிறன்று ஆரம்பம்: ஒற்றையர் சம்பியன்களுக்கான பணப்பரிசு 26 கோடி ரூபா
 

 

உலக டென்னிஸ் அரங்கில் வரு­டாந்தம் நடத்­தப்­படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் இரண்­டா­வ­தான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டி பாரிஸில் அமைந்­துள்ள றோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்­கு­களில் நாளை­ மறுதினம் (ஞாயிற்­றுக்­கி­ழமை) ஆரம்பமாகின்­றது.

வரு­டத்தில் ஜன­வரி மாதம் மெல்­பேர்னில் நடை­பெறும் அவுஸ்­தி­ரே­லிய பகிரங்க டென்னிஸ் போட்­டி­களைத் தொடர்ந்து இரண்­டா­வ­தாக நடை­பெறும் களி­மண்­தரை டென்னிஸ் போட்­டி­யான பிரெஞ்சு பகி­ரங்க போட்டி இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்­ப­மாகி ஜூன் 7ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்­ளது.

213n9zr.jpg

 

இப்போட்­டிகள் 1925 முதல் 1967 வரை சாதா­ரண பிரெஞ்சு டென்னிஸ் போட்டிகள்,ஆண், பெண் இரு­பா­லா­ருக்­கு­மான ஒற்­றையர் ஆட்­டங்கள், இரட்டையர் ஆட்­டங்கள், கலப்பு இரட்­டையர் ஆட்­டங்கள், இருபாலாருக்குமான டென்னிஸ் மேதை­க­ளுக்­கான இரட்­டையர் ஆட்­டங்கள், இளைஞர் மற்றும் யுவ­தி­க­ளுக்­கான கனிஷ்ட ஒற்­றையர், இரட்­டையர் ஆட்டங்கள் என்­ப­வற்­றுடன் சக்­கர இருக்கை டென்னிஸ் போட்­டி­களும் நடைபெ­ற­வுள்­ளன.

தரப்­ப­டுத்தல் மற்றும் நிரல்­ப­டுத்தல்

 

 

இவற்றில் ஆண்கள் மற்றும் பெண்­க­ளுக்­கான ஒற்­றையர் போட்­டி­களே பிரதா­ன­மா­ன­தாக அமை­கின்­றன.

ஆண்­க­ளுக்­கான ஒற்­றையர் பிரிவில் உலகத் தரப்­ப­டுத்தல் மற்றும் போட்டிகளுக்­கான நிரல்­ப­டுத்­தலில் நொவாக் ஜோ­கோவிச் (சேர்­பியா), ரொஜர் ஃபெடரர் (சுவிட்ஸர்­லாந்து), அண்டி மரே (ஐக்­கிய இராச்­சியம்), தோமஸ் பேர்டிச் (செக் குடி­ய­ரசு), கெய் நிஷி­கோரி (ஜப்பான்), மிலோஸ் ராஓனிக் (கனடா), ஐந்து  தட­வைகள் சம்­பி­ய­னா­ன­வரும் நடப்பு சம்பியனுமான ரஃபாயல் நடால் (ஸ்பெய்ன்), டேவிட் ஃபெரர் (ஸ்பெய்ன்), ஸ்டனிஸ்லாஸ் வொரின்கா (சுவிட்ஸர்­லாந்து), மரின் சிலிக் (குரேஷியா) ஆகியோர் முறையே முதலாம் இடத்­தி­லி­ருந்து பத்தாம் இடம்­வரை வகிக்கின்­றனர்.

33cbqtf.jpg

பெண்கள் பிரிவில் செரினா வில்­லியம்ஸ் (ஐக்­கிய அமெ­ரிக்கா), நடப்பு சம்பியன் மரியா ஷர­போவா (ரஷ்யா), சிமோனா ஹாலெப் (ருமே­னியா), பெட்ரா கெவிட்­டோவா (செக் குடி­ய­ரசு), கரோலின் வொஸ்­னி­யாக்கி (டென்மார்க்), இயூ­ஜெனி பௌச்சார்ட் (கனடா), அனா இவா­னோவிச் (சேர்பியா), கார்லா சுவாரெஸ் நவாரோ (ஸ்பெய்ன்), எக்­கெத்­த­ரினா மக்கரோவா (ரஷ்யா), அண்ட்­றியா பெட்­கோவிக் (ஜெர்­மனி) ஆகியோர் உலகத் தரப்­ப­டுத்­த­லிலும் போட்­டிக்­கான நிரல்­ப­டுத்­த­லிலும் முதல் பத்து இடங்­களில் உள்­ளனர்.எதிர்­பா­ராத நிகழ்­வுகள் இடம்­பெற்­றா­லன்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்­ள­வர்­களில் ஒருவர் சம்­பி­யா­ன­வது உறுதி.

 

கடந்த வருடம் ஆண்கள் ஒற்­றையர் பிரிவில் ரஃபாயல் நடாலும் பெண்கள் ஒற்­றையர் பிரிவில் மரியா ஷர­போ­வாவும் சம்­பி­ய­னா­கி­யி­ருந்­தனர்.

28 மில்­லியன் யூரோ பணப்­ப­ரிசுஇவ்வருட பணப்­ப­ரிசு 28 மில்­லியன் யூேராக்களுக்கு (சுமார் 407 கோடி ரூபா) அதி­க­மாகும்.

இது கடந்த வரு­டத்­தை­விட 150,000 யூரோக்கள்அதிகமாகும்.

35aot3k.jpg

ஒற்றையர்பிரிவுகளில் சம்­பி­ய­னாகும் ஒரு­வ­ருக்கு தலா 1.8 மில்­லியன் யூரோக்கள் (சுமார் 26 கோடி ரூபா) பணப்­ப­ரிசு வழங்­கப்­படும்.

அத்­துடன் ஒவ்­வொரு சுற்­றிலும் விளை­யாடி தோல்வி அடை­ப­வர்­க­ளுக்கும் பங்­கு­பற்­ற­லுக்­கான கொடுப்­ப­னவு வழங்­கப்­படும்.இவ்வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் சம்பியனுக்கு தலா 1.56 மில்லியன் யூரோக்களும் கடந்த வருடம் விம்பிள்ட னில் தலா 1.7 மில்லியன் யூரோக்க ளும் ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் தலா 2.03 மில்லியன் யூரோக்களும் பணப்பரிசாக வழங்கப்பட்டிருந்தன.   

    
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10212#sthash.oAQtkCeP.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களிமண் தரை ஆடுகளம் மரியா ஷரபோவா, செரினா வில்லியம்ஸ் இருவருக்கும் கைகொடுக்கும் ஆடவர் பிரிவில் நடால் ஆதிக்கம் செலுத்துவார்! அய் லைக் மரியா!

Link to comment
Share on other sites

களிமண் தரை ஆடுகளம் மரியா ஷரபோவா, செரினா வில்லியம்ஸ் இருவருக்கும் கைகொடுக்கும் ஆடவர் பிரிவில் நடால் ஆதிக்கம் செலுத்துவார்! அய் லைக் மரியா!

எனக்கு தெரியும் இந்த அய் லைக் வரும் என்று வாலி. அதுதான் படத்தை போட்டேன்
Link to comment
Share on other sites

தொடருமா நடால் ஆதிக்கம் * இன்று பிரெஞ்ச் ஓபன் துவக்கம்பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது.

 

இதில் 9 முறை சாம்பியன் ஆன ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 10வது முறையாக சாதிப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் ஷரபோவா, பட்டத்தை தக்க வைக்க காத்திருக்கிறார்.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று முதல் வரும் ஜூன் 7ம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ நடால், உலகின் ‘நம்பர்–1’ வீரர் ஜோகோவிச், ரஷ்யாவின் ஷரபோவா, செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

 

தேறுவாரா நடால்:

களிமண் களத்தில் நடக்கும் போட்டிகளை பொறுத்தவரையில் நடால் தான் நாயகன். இவ்வகை போட்டியான பிரெஞ்ச் ஓபனில் மட்டும் 2005 முதல் 2008, மீண்டும் 2010 முதல் 2014 வரை என, மொத்தம் 9 முறை பட்டம் வென்றார்.

10வது முறையாக கோப்பை வெல்லும் நோக்கத்துடன் களமிறங்கும் நடாலுக்கு, சமீபத்திய களிமண் தரை போட்டிகளில் அடைந்த தோல்விகள் சற்று உறுத்தலாக இருக்கும்.

தவிர, காலிறுதியில் ‘நம்பர்–1’ வீரர் ஜோகோவிச்சை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளதால், நடால் சாதிப்பது கடினம் தான். இருப்பினும் இத்தொடரில் பங்கேற்ற 67 போட்டிகளில், ஒன்றில் மட்டும் தோற்ற (2009) நடால், இம்முறை பட்டம் வென்றால், 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றிய வீரர் ஆகலாம். தோற்கும் பட்சத்தில் தரவரிசையில் 7வது இடத்தில் இருந்து, 10வது இடத்துக்கும் மேல் செல்ல நேரிடும்.

 

ஜோகோவிச் சவால்:

கடந்த 2012, 2014 தொடரில் ஜோகோவிச் பைனலுக்கு முன்னேறியது தான் அதிகபட்சம். மற்றபடி, ஒரு முறை கூட கோப்பை வென்றது கிடையாது. இதுவரை 9 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இவருக்கு, நடால் பெரும் தொல்லையாக இருப்பது உறுதி.

 

பெடரர் ‘18’:

சுவிட்சர்லாந்தின் பெடரர், இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். இருப்பினும், கடந்த 2012 விம்பிள்டனுக்குப் பின் இதுவரை ஒரு முறை கூட எந்த கிராண்ட்ஸ்லாம் தொடரில் கோப்பை வெல்லவில்லை. இத்தொடரில் 2009ல் மட்டும் தான் சாதிக்க முடிந்தது. இம்முறை அரையிறுதியில் தாமஸ் பெர்டிக்கை வீழ்த்தும் பட்சத்தில், 18வஆ கிராண்ட்ஸ்லாம் கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

 

ஷரபோவா நம்பிக்கை:

பெண்கள் ஒற்றையரில் ‘நம்பர்–2’ வீராங்கனை, ‘நடப்பு சாம்பியன்’ ரஷ்யாவின் ஷரபோவா, உலகின் ‘நம்பர்–1’ இடத்திலுள்ள அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹாலெப், செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா உள்ளிட்டோர் கோப்பை வெல்ல போராடலாம்.

 

சானியா நம்பிக்கை

இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி, சோம்தேவ் தேவ்வர்மன், ராம்குமார் ராமநாதன் உள்ளிட்டோர் தகுதிச்சுற்றில் வீழ்ந்தனர். இதனால், இந்த ஆண்டு ஒற்றையர் பிரிவில் யாரும் பங்கேற்கவில்லை. மற்றபடி, இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா பங்கேற்கின்றனர்.

 

http://sports.dinamalar.com/2015/05/1432401589/frenchopentennisparis.html

Link to comment
Share on other sites

பெடரர், ஷரபோவா முன்னேற்றம்

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ரஷ்யாவின் மரியா ஷரபோவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினர்.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் மார்சல் கிரானோலர்ஸ் மோதினர். அபாரமாக ஆடிய பெடரர் 6–2, 7–6, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா 6–3, 6–4, 5–7, 6–3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் துசான் லஜோவிச்சை தோற்கடித்தார்.

மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் ஜப்பானின் கெய் நிஷிகோரி, பிரான்சின் கில்லஸ் சைமன், ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கர், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன், ரஷ்யாவின் கபாஷ்விலி, லக்சம்பர்க்கின் கில்லஸ் முல்லர் உள்ளிட்டோர் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

 

 

ஷரபோவா வெற்றி:

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சகநாட்டை சேர்ந்த விடாலியா டையட்சென்கோ மோதினர். அசத்தலாக ஆடிய ஷரபோவா 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6–0, 6–1 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் அமான்டின் ஹெசியை மிகச் சுலபமாக வீழ்த்தினார்.

மற்ற இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் பிரான்சின் அலைஸ் கார்னட், ஜெர்மனியின் சபைன் லிசிக்கி, அன்னிகா பெக், செக்குடியரசின் லுாசி சபரோவா, குரோஷியாவின் மிர்ஜனா லுாசிக்–பரோனி உள்ளிட்டோர் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

 

இந்திய ஜோடி வெற்றி

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி 6–2, 5–7, 7–5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த், கிறிஸ் குசியோன் ஜோடியை வீழ்த்தியது.

 

* மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி 5–7, 6–3, 6–4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச், விக்டர் டிராய்க்கி ஜோடியை தோற்கடித்தது.

 

* பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 6–3, 6–0 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் ஜூலியா, செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா ஜோடியை வீழ்த்தியது.

 

http://sports.dinamalar.com/2015/05/1432744385/sharapovatennis.html

Link to comment
Share on other sites

பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்றில் நடால், செரீனா: வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி
 

 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால், உலகின் முதல் நிலை வீராங்கனை யான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறி யுள்ளனர்.

அதேநேரத்தில் முன்னணி வீராங்கனைகளான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால் 6-4, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான நிகோலஸ் அல்மாக்ரோவை எளிதாக வீழ்த்தினார்.

 

வெற்றி குறித்துப் பேசிய நடால், “இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இன்று மிகச்சிறப்பான, உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக் கிறேன்” என்றார். இதுவரை அல்மாக்ரோவுடன் 14 முறை மோதியுள்ள நடால், அதில் 13-ல் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் நடால், அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் ஜுர்கன் மெல்ஸர் அல்லது ரஷ்யா வின் ஆண்ட்ரே குஸ்நெட்சோவை சந்திக்கவுள்ளார்.

 

நிஷிகோரி முன்னேற்றம்

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் நிஷிகோரியை எதிர்த்து 3-வது சுற்றில் விளையாடவிருந்த ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து 3-வது சுற்றில் விளையாடாமலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் நிஷிகோரி.

மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோன் கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-7 (11), 7-5, 10-8 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம், 50 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த ஆட்டம், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டிகளின் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்தது.

 

இதற்கு முன்னர் 2011-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஷியாவோன்-குஸ்நெட்சோவா மோதிய ஆட்டம் 4 மணி நேரம், 44 நிமிடங்கள் நடைபெற்றது. அந்த ஆட்டம்தான் மகளிர் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற ஆட்டம். அதிலும் ஷியாவோன்தான் வெற்றி பெற்றார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசை யில் 4-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா 6-7 (4), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் சில்வியாவை போராடி வென்றார்.

 

வோஸ்னியாக்கி தோல்வி

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத் தில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 4-6, 6-7 (4) என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

 

போட்டித் தரவரிசையில் முதல் 6 இடங்களில் இருந்தவர்களில் வோஸ்னியாக்கியோடு சேர்த்து 3 பேர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். முன்னதாக 3-வது இடத்தில் இருந்த ருமேனியாவின் சைமோனா ஹேலப் 2-வது சுற்றோடும், 6-வது இடத்தில் இருந்த கனடாவின் யூஜீனி புச்சார்டு முதல் சுற்றோடும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது 2-வது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 5-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அன்ன லீனா ஃபிரைட்சாமை தோற்கடித்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article7258989.ece

Link to comment
Share on other sites

ஜோகோவிச், கிவிட்டோவா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினனின் ரபெல் நடால், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினர்.        

         

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில், உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் தனாசி கோக்கினாகிஸ் மோதினர். அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6–4, 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

 

‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் ரபெல் நடால் 6–1, 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் ஆன்ட்ரே கஸ்னட்சோவை தோற்கடித்து 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்           

மற்றெரு 3வது சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாஸ் மோதினர். இதில் ஆன்டி முர்ரே 6–4, 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.           

 

மற்ற ஆட்டங்களில், குரோஷியாவின் மரின் சிலிக், 6–3, 6–2, 6–4 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் லியோனார்டு மேயரை தோற்கடித்தார். பிரான்சின் சார்டி 6–3, 6–4, 6–2 என பெல்ஜியத்தின் டேவிட் கோபினை வீழ்த்தினார்.     

 

கிவிட்டோவா வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ருமேனியாவின் இரினா–காமிலியா பெகு மோதினர். இதில் பெட்ரா கிவிட்டோவா 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.  

               

மற்றொரு 3வது சுற்றில், இத்தாலியின் சாரா இரானி 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் ஆன்ட்ரியா பெட்கோவிச்சை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் பிரான்சஸ்கா ஷியவோன் 5–7, 4–6 என ருமேனியாவின் ஆன்ட்ரீயா மிட்டுவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

 

http://sports.dinamalar.com/2015/05/1433000627/FrenchOpenTennisDjokovicNadalMurrayKvitova.html

Link to comment
Share on other sites

அய் லைக் மரியா!

 

வாலி இப்ப இவா தான் கனவுக்கன்னி!! 

 

8591395422045.jpg

Eugenie Bouchard

Link to comment
Share on other sites

களிமண் தரை ஆடுகளம் மரியா ஷரபோவா, செரினா வில்லியம்ஸ் இருவருக்கும் கைகொடுக்கும் ஆடவர் பிரிவில் நடால் ஆதிக்கம் செலுத்துவார்! அய் லைக் மரியா!

எனக்கும் மரியா தான் பிடிக்கும் . ஆண்களில் பெடர்ர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் பிரிவில் செர்பியாவின் அனா இவானேவிக் மற்றும் யுக்ரேனின் எலினா ஸ்விடோலினா இருவரும் ஒரு காலிறுதிப் போட்டியில் ஆடுகின்றனர்

Link to comment
Share on other sites

காலிறுதியில் நடால்–ஜோகோவிச் பலப்பரீட்சை

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் நடால், ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயின் வீரர் நடால், அமெரிக்காவின் ஜாக் சாக்கை எதிர்கொண்டார்.

 

இதில், முதல் இரு செட்களை 6–3, 6–1 என, எளிதாக வென்ற நடால், அடுத்த செட்டை 5–7 என, இழந்தார். நான்காவது செட்டில் சுதாரித்துக் கொண்ட நடால், 6–2 என, கைப்பற்றினார். முடிவில், 6–3, 6–1, 5–7, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நடால், காலிறுதிக்கு முன்னேறினார்.

 

ஜோகோவிச் அபாரம்:

மற்றொரு போட்டியில் உலகின் ‘நம்பர்–1’ வீரர், செர்பியாவின் ஜோகோவிச், பிரான்சின் காஸ்குயட்டை 6–1, 6–2, 6–3 என, எளிதாக வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார். இதையடுத்து, நாளை நடக்கும் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் நடால், ஜோகோவிச் மோதவுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பெடரர் வெற்றி:

ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெடரர், பிரான்சின் மான்பில்சை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 6–3 என, கைப்பற்றிய பெடரர், அடுத்த செட்டை 4–6 என, இழந்தார்.

 

பின் எழுச்சி பெற்ற பெடரர் 6–4, 6–1 என, அடுத்த இரு செட்களையும் தன் வசப்படுத்தினார். முடிவில், 6–3, 4–6, 6–4, 6–1 என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று, 11வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். குரோஷியாவின் மரின் சிலிக்கிற்கு எதிரான மற்றொரு நான்காவது சுற்று போட்டியில், ஸ்பெயினின் டேவிட் பெரர் வெற்றி பெற்றார்.

 

ஷரபோவா அதிர்ச்சி:

பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’, உலகின் ‘நம்பர்–7’ வீராங்கனை ரஷ்யாவின் ஷரபோவா, செக் குடியரசின் சபரோவாவை எதிர்கொண்டார்.

‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 6–7 என, இழந்தார் ஷரபோவா. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சபரோவா, 6–4 என, கைப்பற்றினார். முடிவில், ஷரபோவா 6–7, 4–6 என்ற நேர் செட்களில் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

 

முகுருஜா வெற்றி:

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் முகுருஜா, இத்தாலியின் பெனிட்டாவை சந்தித்தார். இதில் முதல் செட்டை 6–3 என, கைப்பற்றிய முகுருஜா, அடுத்த செட்டினை 6–4 என, வென்றார். முடிவில் 6–3, 6–4 என்ற நேர் செட்களில் முகுருஜா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

 

செரினா அபாரம்:

மற்றொரு பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், சக வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்சை, 1–6, 7–5, 6–3 என, வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

 

2வது சுற்றில் சுமித்

ஜூனியர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், ஜப்பானின் வடானுக்கியை சந்தித்தார். இதில் நாகல், 6–3, 7–5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

 

* ஜூனியர் பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரன்ஜலா, ஜெங் (சீனா) ஜோடி, பிரான்சின் ஹாசய்னெ, காஸ்டிலே ஜோடியை 6–0, 6–1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2015/06/1433180594/DjokovicandRafaelNadalsetupFrenchOpenclash.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரியாவின் வெளியேற்றம் இதயத்தில் ஆணி அறைந்தது போலிருக்கிறது. இனி எனது சப்போர்ட் 'அனா இவானோவிக்'குக்குத்தான்!

Link to comment
Share on other sites

அரையிறுதியில் இவானோவிச்

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு செர்பிய வீராங்கனை இவானோவிச் முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் இவானோவிச், உக்ரைனின் ஸ்விட்டோலினாவை எதிர்கொண்டார்.

 

 

இதன் முதல் செட்டை 6–3 என, எளிதாக கைப்பற்றினார் இவானோவிச். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டை 6–2 என, வென்றார்.

 

முடிவில், இவானோவிச் 6–3, 6–2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

 

சுமித் தோல்வி:

‘ஜூனியர்’ டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், தென் கொரியாவின் யன்சியாங் சங்கை சந்தித்தார். முதல் செட்டை 6–2 என, வென்ற சுமித், அடுத்த இரு செட்களில் சொதப்ப 3–6, 4–6 என, பறிகொடுத்தார். முடிவில், சுமித் 6–2, 3–6, 4–6 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433252846/frenchopentennisivanovic.html

 

Link to comment
Share on other sites

காலிறுதியில் பெடரர் தோல்வி

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் ‘நம்பர்–2’ வீரர் சுவிட்சர்லாந்தின் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெடரர், சக வீரர் வாவ்ரின்காவை சந்தித்தார்.

 

இதன் முதல் செட்டை 6–4 என, கைப்பற்றிய வாவ்ரின்கா, அடுத்த செட்டை 6–3 என, எளிதாக வென்றார். தொடர்ந்து நடந்த மூன்றாவது செட், ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இதில் அசத்திய வாவ்ரின்கா, 7–6 என, தன்வசப்படுத்தினார். முடிவில், பெடரர் 4–6, 3–6, 6–7 என்ற நேர் செட்களில் வீழ்ந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

 

கனவாகும் ‘18’:

சுவிட்சர்லாந்தின் பெடரர், இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். இருப்பினும், கடந்த 2012 விம்பிள்டனுக்குப் பின் இதுவரை ஒரு முறை கூட எந்த கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் கோப்பை வெல்ல முடியவில்லை.

இத்தொடரில் 2009ல் மட்டும் தான் சாதிக்க முடிந்தது. இம்முறை எப்படியும் அசத்தி, 18வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை வெல்வார் என்று நம்பப்பட்டது. ஆனால், இது கடந்த மூன்று ஆண்டுகளாக கனவாகவே தொடர்கிறது.

 

ரசிகர் காயம்

நேற்று நடந்த மற்றொரு காலிறுதியில் ஜப்பானின் நிஷிகோரி, பிரான்சின் வில்பிரட் டி சோங்கா, பிலிப்பே சாட்ரியர் மைதானத்தில் மோதினர். இப்போட்டியின் இரண்டாவது செட் நடந்த போது, வேகமான காற்று அடித்தது. அப்போது, அங்கு வைக்கப்பட்டு இருந்த ராட்சத டெலிவிஷன் ஸ்கிரீன் பின்புறம் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு தகடு, கழன்று கீழே விழுந்தது. இதில் ரசிகர் ஒருவர் காயம் அடைந்தார். அப்பகுதியில் இருந்த பிற ரசிகர்கள் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் போட்டி துவங்க, 30 நிமிடம் தாமதம் ஆனது.

 

 

காலிறுதியில் இந்திய ஜோடி

ஜூனியர் பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரன்ஜலா, ஜெங் (சீனா) ஜோடி, ரஷ்யாவின் அனஸ்டாசியா, பிரிட்டனின் லம்ஸ்டென் ஜோடியை 7–5, 6–4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2015/06/1433266722/frenchopentennisfederer.html

Link to comment
Share on other sites

என்ன கொடுமை . நம்ம ஆட்டக்காரங்க ரெண்டு பேரும் மண்ண கவ்விட்டாங்க

Link to comment
Share on other sites

கால் இறுதிப் போட்டிகளில் பிரபல வீர, வீராங்கனைகள்
 

 

பாரிஸில் நடை­பெற்­று­வரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்­டி­களின் ஆடவர் ஒற்­றையர் பிரி­வுக்­கான ஒரு அரை இறுதி ஆட்டத்தில் பிர­பல வீரர்­க­ளான நொவாக் ஜோகோ­விச்சும் ரஃபாயல் நடாலும் விளை­யாட தகுதிபெற்றுள்­ளனர்.

 

இதற்கு முன்­னோ­டி­யாக நடைபெற்ற நான்காம் சுற்றில் பிரான்ஸ் வீரர் றிச்சர்ட் கெஸ்கெட்டை எதிர்த்­தா­டிய சேர்­பி­யாவின் ஜொக்­கோவிச் 3 நேர் செட்­களில் இல­கு­வாக வெற்­றி­கொண்டு கால் இறு­திக்கு முன்னேறினார்.

 

மற்­றைய நான்காம் சுற்று ஆட்­டத்தில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜெக் சொக்கை எதிர்த்­தா­டிய ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடால் கடும் சவா­லுக்கு மத்­தியில் 3 க்கு 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்றி­ பெற்றார்.

 

பிரித்­தா­னி­யாவின் அண்டி மறே, ஸ்பெய்னின் டேவிட் ஃபெரர் ஆகியோரும் கால் இறு­திக்கு முன்­னே­றி­யுள்­ளனர்.

பெண்கள் ஒற்­றையர் பிரிவில் தனத சக நாட்­ட­வ­ரான 22 வயதுடைய ஸ்லோன் ஸ்டீவன்­ஸிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட செரீனா வில்லியம்ஸ் இறு­தியில் 2 க்கு 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று கால் இறு­திக்குள் நுழைந்தார்.

 

செரீனாவை இத்­தா­லியின் சாரா எரானி கால் இறு­தியில் எதிர்கொள்­ள­வுள்ளார்.

 

இவர் நான்காம் சுற்றில் ஜெர்­ம­னியின் ஜூலியா கோர்­ஜஸை இலகு­வாக 2 க்கு 0 என்ற நேர் செட்கள் அடிப்­ப­டையில் வெற்றி கொண்டார்.

 

பெட்ரா கெவிட்­டோ­வாவை 2 நேர் செட்­களில் வீழ்த்­திய சுவிட்ஸர்லாந்தின் டிமியா பெசின்ஸ்­கியும் அண்ட்­றியா மிட்டுவை வெற்றிகொண்ட ருமேனியாவின் அலிசன் வன் உய்ட்வாக்கும் கால் இறுதியில் சந்திக்கவுள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10400#sthash.Jhx5NXtV.dpuf

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன்: இரட்டையர் காலிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி தோல்வி
 

wlx8v6.jpg

முதன்மை தரவரிசையில் உள்ளவர்களும், பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பட்டம் வெல்லும் ஜோடி என்றும் எதிர்பார்க்கப்பட்ட சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி இரட்டையர் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

 

அமெரிக்க-செக். இணையான பெத்தானி மேட்டக் சாண்ட்ஸ்-லூசி சஃபரோவா ஜோடியிடம் சானியா-ஹிங்கிஸ் ஜோடி 5-7, 2-6 என்ற நேர் செட்களில் எந்த வித போராட்டமும் இல்லாமல் எளிதாக சரணடைந்தனர்.

 

முதலாம் தரவரிசையில் உள்ள சானியா-ஹிங்கிஸ் ஜோடி 7-ம் தரநிலையில் உள்ள அமெரிக்க-செக் ஜோடியிடம் சரணடைந்தது இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

எதிர்பார்த்ததை விட மோசமாக ஆடிய சானியா-ஹிங்கிஸ் ஜோடி மொத்தத்தில் 61 புள்ளிகளையே பெற்றனர், மாறாக அமெரிக்க-செக் ஜோடி 70 புள்ளிகளைப் பெற்றனர்.

ஆட்டம் முழுதும் சர்வ், வாலி உள்ளிட்டவற்றில் எடுப்பதிலும், அடிப்பதிலும் தடுமாறினார்கள் சானியாவும் ஹிங்கிஸும்.

 

முதல் செட்டில் வெற்றிக்காக உத்வேகத்துடன் ஆட வேண்டிய தருணத்தில் 2 பிரேக் பாயிண்ட்களை வென்றாலும் 3 முறை தங்கள் சர்வ்களை இழந்தனர். இதனால் 5-7 என்று முதல் செட்டை இழந்தனர்.

 

2-வது செட்டில் மேலும் உத்வேகமாக ஆட வேண்டிய சானியா-ஹிங்கிஸ் ஜோடி முதலிலேயே தங்கள் சர்வை இழந்து 0-2 என்று பின் தங்கினர். 4 முறையில் 3 முறை பிரேக்பாயிண்ட்டில் தங்கள் சர்வில் ஆட்டத்தைப் பறிகொடுக்க 2-6 என்று இரண்டாவது செட்டையும் இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article7278763.ece

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதிக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி

 

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில், பெண்கள் பிரிவில் அரையிறுதிக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். காலிறுதி போட்டியில் அவர் இத்தாலியின் சாரா எர்ரனியை, 6-1,6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1266592

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : களிமண் மன்னன் நடால் 'அவுட்'
 

 

பாரிஸ்: பிரெஞ்ச ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் தோல்வியடைந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடரில் இருந்து வெளியேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஓற்றையர் பிரிவு காலிறுதியில் களிமண் மன்னன் என கருதப்படும் ஸ்பெயினின் ரபெல் நடால், உலகின் 'நம்பர்-1' வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

 

 

போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், முதல் செட்டை 7-5 என போராடி வென்றார். இரண்டாவது செட்டிலும் அசத்திய ஜோகோவிச் 6-3 என மிகச்சுலபமாக தனவசப்படுத்தினார்.மூன்றாவது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-1 என எளிதாக வென்றார்.

 

இறுதியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், 7-5, 6-3, 6-1 என்ற நேர்செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். களிமண் மன்னனாக நடால், காலிறுதியுடன் நடையை கட்டினார்.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1266664


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஆண்டி முர்ரே
 

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.

 

காலிறுதியில் அவர், டேவிட் பெர்ரரை, 7-6, 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். அரையிறுதியில் ஆண்டி முர்ரே, ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1266693

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சபரோவா

 

பாரீஸ்: பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் தொடரில், இறுதிப்போட்டிக்கு செக் குடியரசின் சபரோவா தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில், செர்பியாவின் ஆனா இவானோவிச்சை, 7-5,7-5 என்ற செட் கணக்கில் சபரோவா தோற்கடித்தார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1267361

Link to comment
Share on other sites

பிரெஞ்சு அரை இறுதிகளில் பிரபல வீரர்கள்
 

 

பாரிஸின் ரோலண்ட் கரொஸ் டென்னிஸ் அரங்­குகளில் நடை­பெற்­று­வரும் பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் ஆடவர் ஒற்­றை­ய­ருக்­கான அரை இறு­தி­களில் நோவாக் ஜோகோவிச், அண்டி மறே, ஜோ வில்ப்ரட் சொங்கா, ஸ்டனிஸ்லோஸ் வொரின்கா ஆகியோர் விளையாடுவதற்கு தகு­தி­பெற்­றுள்­ளனர்.

அரை இறுதிப் போட்­டிகள் இன்று நடைபெறவுள்­ளன.

 

இதற்கு முன்­னோ­டி­யாக நடை­பெற்ற கால் இறு­தி­களின் முடி­வுகள் வரு­மாறு;

 

ஜொக்­கோவிச் 7 – 5, 6 – 3, 6 – 1 எதிர் நடால்

 

அண்டி மறே 7 – 6, 6 – 2, 5 – 7, 6 – 1 எதிர் டேவிட் ஃபெரர்.

 

சொங்கா 6 – 1, 6 – 4, 4 – 6, 3 – 6, 6 – 3 எதிர் கெய் நிஷி­கோரி (ஜப்பான்),

 

வொரின்கா 6 – 4, 6 – 3, 7  6 எதிர் ரொஜர் ஃபெடரர்.

 

பெண்­க­ளுக்­கான அரை இறுதிப் போட்டிகள் இலங்கை நேரப்­படி நேற்று இரவு 8 மணியளவில் ஆரம்­ப­மா­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது.

 

ஒரு அரை இறு­தியில் அனா இவா­னோவிச், லூசி சஃபா­ரோவா ஆகி­யோரும் மற்­றைய அரை இறு­தியில் செரினா வில்லியம்ஸ், டிமியா பஸின்ஸ்கி ஆகியோரும் மோதவிருந்தனர்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10437#sthash.ZOZFf3hD.dpuf

Link to comment
Share on other sites

பட்டம் வெல்வாரா செரினா: பைனலில் சபரோவாவுடன் மோதல்

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக்குடியரசின் லுாசி சபரோவா மோதுகின்றனர். இதில் செரினா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.     

 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 13வது இடத்தில் உள்ள செக்குடியரசின் லுாசி சபரரோவாவை எதிர்கொள்கிறார். டபிள்யு.டி.ஏ., அரங்கில் இவர்கள் இருவரும் மோதிய 8 போட்டியிலும் செரினா வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடைசியாக கடந்த கனடா, பீஜிங்கில் நடந்த தொடர்களில் செரினா வெற்றி பெற்றார்.     

 

மூன்றாவது முறை: இத்தொடரின் 3வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரன்காவை வீழ்த்திய செரினா, 4வது சுற்றில் சகவீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்சை தோற்கடித்தார். காலிறுதியில் இத்தாலியின் சாரா இரானி, அரையிறுதியில் சுவிட்சர்லாந்தின் டிமியா பக்சின்ஸ்கியை தோற்கடித்த செரினா, பிரெஞ்ச் ஓபனில் மூன்றாவது முறையாக (2002, 2013, 2015) பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக விளையாடிய இரண்டு பைனலிலும் செரினா வெற்றி பெற்று கோப்பை வென்றார். இன்றைய பைனலில் செரினா வெற்றி பெறும் பட்சத்தில், 20வது முறையாக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்று சாதிக்கலாம். அரையிறுதியில் உடல் நிலை சரியில்லாமல் விளையாடிய செரினா இன்று பூரண குணமடைந்து பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.     

 

முதன்முறை: இம்முறை 3வது சுற்றில் ஜெர்மனியின் சபைன் லிசிக்கி, 4வது சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ ரஷ்யாவின் மரியா ஷரபோவா, காலிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகருஜா, அரையிறுதியில் செர்பியாவின் அனா இவானோவிச் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முன்னேறிய உற்சாகத்தில் சபரோவா உள்ளார். இதேமுனைப்புடன் இன்றைய பைனலில் விளையாடும் பட்சத்தில், முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தலாம்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433522709/FrenchOpenTennisSerenaSafarovaFinal.html

Link to comment
Share on other sites

பைனலில் வாவ்ரின்கா: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா முன்னேறினார். அரையிறுதியில் பிரான்சின் ஜோ–வில்பிரைடு டிசோங்காவை தோற்கடித்தார்.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்–9’ வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, 15வது இடத்தில் உள்ள பிரான்சின் ஜோ–வில்பிரைடு டிசோங்கா மோதினர்.

 

முதல் செட்டை வாவ்ரின்கா 6–3 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட டிசோங்கா, ‘டை–பிரேக்கர்’ வரை நீடித்த 2வது செட்டை 7–6 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட வாவ்ரின்கா, ‘டை–பிரேக்கர்’ வரை சென்ற 3வது செட்டை 7–6 என வென்றார். தொடர்ந்து அசத்திய வாவ்ரின்கா 4வது செட்டை 6–4 என கைப்பற்றினார். மூன்று மணி நேரம் 46 நிமிடம் வரை நீடித்த அரையிறுதியின் முடிவில், சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா 6–3, 6–7, 7–6, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கு முன்னேறினார்.

 

தவிர இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 2வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பைனலுக்கு முன்னேறிய இவர், முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433522841/WawrinkaSwitzerlandFrenchOpenTennis.html

Link to comment
Share on other sites

பிரெஞ்ச் பகிரங்க டெனிஸில் செரீனா சம்பியன்
 

11w33o6.jpg

பிரெஞ்ச் பகிரங்க டெனிஸ் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் லூசி சஃபரோவாவை வீழ்த்தி அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

 

மேலும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனைகள் பட்டியலில் 33 வயதான செரீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டெனிஸ் இறுதிப் போட்டி பரீஸின் ரோலண்ட் கேராசில் நடைபெற்றது.

 

இதில் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள செரீனாவும் 13ஆவது இடத்தில் உள்ள செக் குடியரசின் லூசி சஃபரோவாவும் மோதினர்.

 

இந்த போட்டி முடிவில், செரீனா வில்லியம்ஸ், 6-3, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசு வீராங்கனையை வீழ்த்தி பிரெஞ்ச் பகிரங்க பட்டத்தை வென்றார்.

 

 

- See more at: http://www.tamilmirror.lk/147761#sthash.gZ404YRr.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.