Jump to content

சொந்த மண்ணில் ஆனந்தக் கண்ணீருடன் கால் பதித்த சம்பூர் மக்கள்


Recommended Posts

 
 
May 21st, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது.
 

ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான், மணல்சேனை, கிளிவெட்டி, பட்டித்திடல் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த சம்பூர் மக்கள் அனைவரும் நேற்றுக் காலை தமது சொந்த ஊரான சம்பூருக்கு சென்றனர்.

மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர். இம்மக்கள் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிய சற்று நேரத்தில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை அவ்விடத்திலிருந்து அகன்று செல்லுமாறு பணித்தனர்.

அதன் போது நீதிமன்றத்தின் அறிவிப்பை பொதுமக்கள் தரப்பினர் சுட்டிக்காட்டிய போதும் தமக்கு உத்தியோக பூர்வமாக எவ்விதமான அறிவிப்பும் கிடைக்கவில்லை. கிடைத்ததன் பின்னரே உங்களை இங்கு பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இருந்தபோதும் பத்திரிகை செய்தியை பொலிஸாருக்கு காண்பித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேர வாக்குவாதத்தின் பின்னர் திருமலை மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட பொலிஸார் இவ்விடயத்தை தெரிவித்த போது நீதிமன்ற அறிவிப்பை அவர் சுட்டிக்காட்டியதோடு பொதுமக்கள் தரப்பில் எந்தவிதமான தவறுகளுமில்லை எனவும் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுள்ளனர்.

மீண்டும் தமது சொந்தக் காணிகளுக்கு திரும்பியமை தொடர்பாக கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமின் தலைவர் சோமசுந்தரம் சண்முகநாதன் தெரிவிக்கையில்,

நேற்றுக்காலை நாம் அனைவரும் ஒன்றுபட்டு மீண்டும் எமது சொந்த மண்ணுக்கு திரும்பினோம். அதன்போது பொலிஸார் எமக்கு இடையூறு அளித்தனர். அதன் போது எமது பக்கமுள்ள நியாயங்களையும் நீதிமன்றத்தின் அறிவிப்பைக் கொண்ட பத்திரிகை செய்தியையும் அவர்களிடத்தில் காட்டியிருந்தோம். அவர்கள் அதனை ஏற்க மறுத்ததுடன் எம்மை அகன்று செல்லுமாறு கூறினர். இதனால் அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நாம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு நிலைமையை கூறியபோது பொலிஸாரிடம் தொலைபேசியை கையளிக்குமாறு கோரினார். இருந்தபோதும் இங்கு வருகை தந்திருந்த பொலிஸார் அவருடன் உரையாட மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட பொலிஸார் நாம் சட்டவிரோதமாக வந்திருப்பதாக குறிப்பிட்டனர். அதன்போது அரசாங்க அதிபர் அனைத்து விடயங்களையும் எடுத்துக் கூறினார். அதன்பின்னர் பொலிஸார் இவ்விடத்திலிருந்து விலகிச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து கட்டாந்தரைகளாக மாற்றப்பட்டுள்ள எங்களுடைய பூமியில் எமது காணிகளின் அடையாளங்களையும் எல்லைகளையும் கண்டறியும் செயற்பாடுகளை மேற்கொண்டோம். அத்துடன் இங்கு சிறிதாகவுள்ள பற்றைகளை வெட்டி அகற்றி துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

எமது காணிகள் அடுத்தவாரமளவில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போதைக்கு நாம் அனைத்தையும் துப்புரவு செய்யும் எல்லைகளை அமைக்கும் பணிகளையே மேற்கொள்ளவிருக்கின்றோம். உத்தியோகபூர்வமாக காணிகளை அளித்த பின்னர் மீண்டும் எமது குடிசைகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்வோம் என்றார்.

முன்னதாக 2006ம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைமைகளால் சம்பூர் பிரதேசத்திலிருந்து வெளியேறிய மக்களில் 1345 குடும்பங்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள கட்டைபறிச்சான (368குடும்பங்கள்), மணல் சேனை (80குடும்பங்கள்), கிளிவெட்டி(157குடும்பங் கள்), பட்டித்திடல் (108குடும்பங்கள்) என நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

சுமார் ஒன்பது வருடங்களாக அடிப்படைவசதிகளற்ற நிலையில் சிறிய ஓலைக்குடிசைகளிலும், தகரக்கொட்டில்களிலும் சொல்லெண்ணாத் துயரத்தை அனுபவித்து வந்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இம்மக்களிடமிருந்து சுவீகரிகப்பட்டு முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு வழங்கப்பட்டிருந்த காணிகளை மீண்டும் மக்களிடத்தில் கையளிப்பதை அடிப்படையாகக் கொண்டு முதற்கட்டமாக 818 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 7ம் திகதி விடுத்திருந்தார்.

எனினும் உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனமொன்று மீள்குடியேற்றத்தை தடைசெய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தமையால் கடந்த வியாழக்கிழமை வரையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனால் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சம்பூர் பிரதேச வாசியான தேவராஜா பிரேம்குமார் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 18ம் திகதி முதல் ஆரம்பித்திருந்ததுடன் அவருக்கு ஆதரவாக இடைத்தங்கல் முகாம் மக்களும் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மக்கள் மீள்குடியேறுவதற்கான இடைக்கால தடையுத்தரவை நீக்குவதாக உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் அறிவித்தது.

 

http://www.tamilcnnlk.com/

 

 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் அந்த ஆனந்தக் கண்ணீர்..

 

 

Uprooted Tamils confront SL police in Champoor, Trincomalee
[Thu, 21 May 2015, 08:42 GMT]
 

Even after TNA Parliamentary Group Leader R. Sampanthan assured the uprooted people of Champoor on Wednesday that they could now start settling down in their lands, except the small plot where two containers of the Sri Lankan Gateway Industries (SLGI) were located, the people who went to their lands, have been blocked by riot control police of the occupying Sri Lankan State Thursday morning. The SL Police ASP from Moothoor was using abusive racial language against the resettling people and was not prepared to talk to Mr R. Sampanthan over the phone. In the meantime, TNA's national list parliamentarian M.A. Sumanthiran was urging the people not to stand on the road and to stay inside their lands and be patient while he talks to the SL Police Deputy Inspector General, news sources in Trincomalee said

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37780

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நடந்திருக்குது.. இதைக் காட்ட ஒரு இதய சுத்தியுள்ள தமிழ் ஊடகம் இல்லை..!!

 

சம்பந்தன் கொழும்பில சொகுசா இருந்து கொண்டு.. கடைசில... எல்லாரும் ஆனந்தக் கண்ணீரோட.. நலமா போய் குந்திட்டினமாம்... என்று அறிக்கை. அங்க குந்த ஒரு கொட்டகை கூட இல்லை மக்களிடம். அவரும் சுமந்திரனும் கட்டிக்கொடுத்த வசதிகள் மிக்க தொடர்மாடி இல்லங்களில்.. எல்லா வசதிகளோடும் தான் இந்த மக்கள் இப்ப போய் இருக்கினமாக்கும்...?!

 

மக்களின் கஸ்டம்.. துன்பத்தில்...இந்தியாவை விடக் கேவலமான அரசியலை மேற்கொள்ளும் சம்பந்தன்.. சுமந்திரன்.. தமது அரசியல் அணுகுமுறைகள் குறித்து சிந்திக்கவும்.. நேர்மையோடு நடக்கவும் முனைய வேண்டும்.

 

அவர்களுக்கு வால்பிடிக்கும் ஊடகங்களும்.. ஆட்களும் கூட. :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

உங்களைப்போல் சிலரும் ,தமிழ்நெட் ,பதிவு போன்றவை யதார்த்தத்திற்கு மாறாகவும் எழுதவும் தான் தெரியும் . சம்பந்தன் ஐயா தன்னுடைய சக்த்திக்குட்பட்ட வகையில் செய்துகொண்டுதான் இருக்கின்றார் .உங்களை விட அந்தமக்களின் நிலைகள் எங்களுக்கு நன்றாகத்தெரியும் .என்னுடைய உறவு திருமணம் முடித்தது சம்பூர் கிராமத்திலைதான் .இன்றைக்கும் அங்குதான் வசிக்கின்றார்கள் .

நீங்கள் காலாகாலமாக எல்லோரையும் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றீர்கள் தவிர ,செயற்பாடு எங்கே ?

எட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப்போல் சிலரும் ,தமிழ்நெட் ,பதிவு போன்றவை யதார்த்தத்திற்கு மாறாகவும் எழுதவும் தான் தெரியும் . சம்பந்தன் ஐயா தன்னுடைய சக்த்திக்குட்பட்ட வகையில் செய்துகொண்டுதான் இருக்கின்றார் .உங்களை விட அந்தமக்களின் நிலைகள் எங்களுக்கு நன்றாகத்தெரியும் .என்னுடைய உறவு திருமணம் முடித்தது சம்பூர் கிராமத்திலைதான் .இன்றைக்கும் அங்குதான் வசிக்கின்றார்கள் .

நீங்கள் காலாகாலமாக எல்லோரையும் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றீர்கள் தவிர ,செயற்பாடு எங்கே ?

எட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது .

மிகவும் ஆணித்தரமான உண்மை .
 
இப்போது தமிழர்கள் இருக்கும் நிலையில் 
நல்ல தலைமை வேண்டும் 
இனி பயங்கரவாதிகள் என்று மேற்கு ஜெனநாயக நடிகர்களால் பசப்பு பேச முடியாது 
இந்த பெரியண்ணன் சீன சண்டைக்குள் எமக்கு தேவையானதை 
கிடைக்காவிட்டாலும் உறுதியோடு கேட்கும் ஒரு தலைமை வேண்டும்.
 
அப்பப்ப சிங்களவன் மேற்க்கு உலகிற்கும் மகிந்தவை மீள முடியாது அமத்தவும் 
செய்யும் விடயங்களை எதோ தாம் அழுத்தித்தான்  அம்மி நகர்ந்ததாக வித்தை காட்டுவதை விட்டு விட்டு 
அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
 
மகிந்தவுடன் சம்மந்தன் நடத்திய பேச்சுவார்த்தைகள் எல்லாம் வெற்றியாகத்தானே முடிந்தது .....?
நீங்கள் கூட ஓடி ஓடி இங்கு இணைப்பீர்கள்.
அப்போது இருந்து அவருக்கு வெற்றிதான் 
மக்களுக்குத்தான் அது எட்டா கனியாக இருக்கிறது.
 
தனது சக்திக்கு தகுந்த மாதிரி 
ஒரு வில்லுபாட்டு குழுவை உருவாக்கி சம்மந்தன் ஐயா 
பக்கவாட்டில் ஆமா போட்டுகொண்டு இருக்கலாம்.
 
இந்த அரசியல் வேலைகளை அடுத்த தலைமுறையிடம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது.
சம்மந்தன் ஐயா உண்மையோடு இருந்தாலும் அவருடைய வயதில் ஞாபகமறதி போன்றவை சாதரனமானவை 
இதை சுமந்திரன் போன்ற குள்ள நரிகள் தமக்கு சாதகம் ஆக்குவார்கள்.
கெட்ட பெயரை சம்மதிப்பதை தவிர யாதர்த்தமாக இனி எதையும் சாதிக்க முடியாது.
 
கருணாநிதி 2009இல் பதவியை துறந்து இருந்தால் ...?
இப்போ தமிழரின் அசைக்க முடியாத தலைவராக இருந்திருப்பார் 
தி மு கா தமிழ்நாட்டில் கொடி கட்டி பறந்திருக்கும் 
இப்போ 
விஜகாந்த் எதிர்கட்சி தலிவரு (அதுக்கு கூட வக்கிலை) 
சுவாசிக்கும் பிணமாக தமிழருக்கு கருணாநிதி.
 
எங்களுக்கு (தமிழருக்கு) சம்மந்தரை விட்டால் இப்போ வேறு வழியில்லை 
எதை எதை எழுதினாலும் தேர்தல் என்று வந்தால் சம்மந்து கூட்டணிதான் ஒரே தெரிவு 
இந்த இறுமாப்பில் இன்னும் 4 வருடம்தான் கழிக்க முடியும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப்போல் சிலரும் ,தமிழ்நெட் ,பதிவு போன்றவை யதார்த்தத்திற்கு மாறாகவும் எழுதவும் தான் தெரியும் . சம்பந்தன் ஐயா தன்னுடைய சக்த்திக்குட்பட்ட வகையில் செய்துகொண்டுதான் இருக்கின்றார் .உங்களை விட அந்தமக்களின் நிலைகள் எங்களுக்கு நன்றாகத்தெரியும் .என்னுடைய உறவு திருமணம் முடித்தது சம்பூர் கிராமத்திலைதான் .இன்றைக்கும் அங்குதான் வசிக்கின்றார்கள் .

நீங்கள் காலாகாலமாக எல்லோரையும் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றீர்கள் தவிர ,செயற்பாடு எங்கே ?

எட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது .

 

மக்களே சம்பந்தனை சுமந்திரனை நம்பாது தன்னெழுச்சியாக அரசியல் சார விரும்பாது.. போராடி வரும் நிலையில்.. அதனை சம்பந்தன் வாக்கு அரசியலாக்குவதை மக்களின் வாக்குமூலங்களே நிரூபிக்கும் நிலையில்.. நீங்கள் எல்லாம் சம்பந்தன் சுமந்திரன் மயம் என்று காட்ட விளைவதை நாங்களோ.. எந்த ஒரு நீதியான ஊடகமோ செய்யமாடாது.

 

தமிழ்நெட் வெறும் படம் காட்டாமல்.. மக்கள் கருத்தை அவர்கள் வாயாலேயே வெளியிடுகிறது. சும்மா படத்தைப் போட்டு எழுதப்படும் புனைவுகளையே நீங்கள் அதிகம் இணைத்து வருகிறீர்கள்.. சம்பந்தன்.. சுமந்திரன் விசுவாசத்தை வெளிப்படுத்த உள்ள அக்கறை மக்களின் குரலை தேவையை உள்ள படி சொல்வதில் இல்லை. ஆனால் தமிழ்நெட்டுக்கு அது அதிகம் உள்ளது வெளிப்படை.

 

மக்களுக்கு தெரியும் எதை எப்படி முன்னெடுப்பது என்று. இந்த உண்ணாவிரத வடிவம் கூட மக்கள் தேர்ந்தெடுத்தது. அதனை கொழும்பில் இருந்து கொண்டு கைவிடக் கேட்டிருக்கிறார் சம்பந்தன்.. தன் அரசியலை திணிக்க.

 

இருந்தும் மக்கள் அதனை முழுமையாக நம்பவில்லை. இந்த அண்ணா இன்று என்றால்.. நாளை நானோ இல்ல மற்ற மக்களோ இருப்பார்கள். இது முடியும் என்று நம்பல்ல.. என்கிறார் மக்களில் ஒருவரான அந்த பல்கலைக்கழகம் செல்ல உள்ள மாணவி.

 

சம்பந்தன்.. சுமந்திரனை விட அகதிமுகாம்..அந்த தகரக் கொட்டிலில் கிடந்து படித்த அந்த மாணவியின் குரலில் அதிக யதார்த்தம் வெளிப்படுகிறது. சம்பந்தன்.. சுமந்திரன் உட்பட்ட.. அரசியல் கோமாளிகளின் சித்து விளையாட்டும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வருகிறது.

 

நாங்கள் மக்களாக மக்களுக்குச் செய்ய வேண்டியதை செய்வோம். அதனை விளம்பரப்படுத்தி அரசியல் செய்யும் கீழ்த்தரமான அணுகுமுறை எமக்கு அவசியமில்லை.

 

தோல்விப் பயத்தில் கடைசி நேரத்தில் எழும் அக்கறை.. வாக்குச் சுரக்காயை விட யாழ் களம் தாங்கி வரும்.. ஏட்டுச் சுரக்காய் எவ்வளவோ மேல். :icon_idea::)

Link to comment
Share on other sites

சொந்­த­மண்­ணுக்கு திரும்­பினர் சம்பூர் மக்கள்; ஆனந்­தக்­கண்ணீர் மல்க காலடி பதித்­தனர்

 

sampur1.jpg

 

ஒன்­பது ஆண்­டு­கா­லத்­திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்­ணுக்கு திரும்­பி­யுள்­ளனர். மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள கட்­டை­ப­றிச் சான், மணல் சேனை, கிளி­வெட்டி, பட்­டித்­திடல் ஆகிய இடைத்­தங்கல் முகாம்­களில் தங்­கி­யி­ருந்த சம்பூர் மக்கள் அனைவரும் நேற்றுக் காலை தமது சொந்த ஊரான சம்­பூ­ருக்கு சென்­றனர்.
 
 
மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்­த­வர்கள் ஆனந்த கண்ணீர் மல்­கினர். இம்­மக்கள் சம்பூர் பிர­தே­சத்­திற்கு திரும்­பிய சற்று நேரத்தில் அவ்­வி­டத்­திற்கு விரைந்த பொலிஸார் அவர்­களை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகன்று செல்­லு­மாறு பணித்­தனர்.
 
அதன் போது நீதிமன்­றத்தின் அறி­விப்பை பொது­மக்கள் தரப்­பினர் சுட்­டிக்­காட்­டிய போதும் தமக்கு உத்­தி­யோக பூர்­வ­மாக எவ்­வி­த­மான அறி­விப்பும் கிடை க்­க­வில்லை. அதன் பின்­னரே உங்­களை இங்கு பிர­வே­சிப் ­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடியும் என பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
 
இருந்­த­போதும் பத்­தி­ரிகை செய்­தியை பொலி­ஸா­ருக்கு காண்­பித்த பொது­மக்கள் வாக்­கு­வாதத்தில் ஈடு­பட்­டனர். சிறிது நேர வாக்­கு­வாதத்தின் பின்னர் திரு­மலை மாவட்ட அர­சாங்க அதி­பரை தொடர்பு கொண்ட பொலிஸார் இவ்­வி­ட­யத்தை தெரி­வித்­த­போது நீதி­மன்ற அறி­விப்பை அவர் சுட்­டிக்­காட்­டி­ய­தோடு பொது­மக்கள் தரப்பில் எந்­த­வி­த­மான தவ­று­க­ளு­மில்லை எனவும் கூறப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவ்­வி­டத்தை விட்டு அகன்று சென்­றுள்­ளனர்.
 
மீண்டும் தமது சொந்தக் காணி­க­ளுக்கு திரும்­பி­யமை தொடர்­பாக கிளி­வெட்டி இடைத்­தங்கல் முகாமின் தலைவர் சோம­சுந்­தரம் சண்­மு­கநாதன் தெரி­விக்­கையில்,
 
நேற்­றுக்­காலை நாம் அனை­வரும் ஒன்­று­பட்டு மீண் டும் எமது சொந்த மண்­ணுக்கு திரும்­பினோம். அதன்­போது பொலிஸார் எமக்கு இடை­யூறு அளித்­தனர். அதன் ­போது எமது பக்­க­முள்ள நியா­யங்­க­ளையும் நீதி­மன்­றத் தின் அறி­விப்பைக் கொண்ட பத்­தி­ரிகை செய்­தி­யையும் அவர்­க­ளி­டத்தில் காட்­டி­யி­ருந்தோம். அவர்கள் அதனை ஏற்க மறுத்­த­துடன் எம்மை அகன்று செல்­லு­மாறு கூறி னர். இதனால் அவர்­க­ளுக்கும் எங்­க­ளு­க்குமி­டையில் சிறு­வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.
 
அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தனிடம் நாம் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு நிலை­மையை கூறி­ய­போது பொலி­ஸா­ரிடம் தொலை­பே­சியை கைய­ளிக்­கு­மாறு கோரினார். இருந்­த­போதும் இங்கு வருகை தந்­தி­ருந்த பொலிஸார் அவ­ருடன் உரை­யாட மறுத்­து­விட்­டனர்.
 
இந்­நி­லையில் அர­சாங்க அதி­பரை தொடர்பு கொண்ட பொலிஸார் நாம் சட்­ட­வி­ரோதமாக வந்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்­டனர். அதன்­போது அர­சாங்க அதிபர் அனை த்து விட­யங்களையும் எடுத்துக் கூறினார். அதன்­பின்னர் பொலிஸார் இவ்­வி­டத்­தி­லி­ருந்து விலகிச் சென்­றனர்.
 
அதனைத் தொடர்ந்து கட்­டாந்­த­ரை­க­ளாக மாற்­றப்­பட்­டுள்ள எங்­க­ளு­டைய பூமியில் எமது காணி­களின் அடை­யா­ளங்­க­ளையும் எல்­லை­க­ளையும் கண்­ட­றியும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டோம். அத்­துடன் இங்கு சிறி­தா­க­வுள்ள பற்­றை­களை வெட்டி அகற்றி துப்பு­ரவு செய்யும் பணி­களை ஆரம்­பித்­துள்ளோம்.
 
எமது காணிகள் அடுத்­த­வா­ர­ம­ளவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­படும் என உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் தற்­போ­தைக்கு நாம் அனைத்­தையும் துப்பு­ர­வு­செய்யும் எல்­லை­களை அமைக்கும் பணி­க­ளையே மேற்­கொள்­ள­வி­ருக்­கின்றோம். உத்­தி­யோக பூர்­வ­மாக காணி­களை அளித்த பின்னர் மீண்டும் எமது குடி­சை­களை அமைக்கும் பணி­களை மேற்­கொள் வோம் என்றார்.
 
முன்­ன­தாக 2006ஆம் ஆண்டு ஏற்­பட்ட அசா­த­ாரண சூழ்­நி­லை­மைகளால் சம்பூர் பிர­தே­சத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய மக்­களில் 1345 குடும்­பங்கள் மூதூர் பிர­தே­சத்­தி­லுள்ள கட்­டை­ப­றிச்­சான (368குடும்­பங்கள்)இ மணல் சேனை (80குடும்­பங்கள்)இ கிளி­வெட்டி(157குடும்­பங் கள்)இ பட்­டித்­திடல் (108குடும்­பங்கள்) என நான்கு இடைத்­தங்கல் முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டனர்.
சுமார் ஒன்­பது வரு­டங்­க­ளாக அடிப்­ப­டை­வ­ச­தி­க­ளற்ற நிலையில் சிறிய ஓலைக்­கு­டி­சை­க­ளிலும்இ தக­ரக்­கொட்­டில்­க­ளிலும் சொல்­லெண்­ணாத்­து­ய­ரத்தை அனு­ப­வித்து வந்­தனர்.
 
ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து இம்­ம­க்க­ளி­ட­மி­ருந்து சுவீ­க­ரி­கப்­பட்டு முத­லீட்டு ஊக்­கு­விப்பு சபைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த காணி­களை மீண்டும் மக்­க­ளி­டத்தில் கையளிப்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முதற்­கட்­ட­மாக 818 ஏக்கர் காணி­களை விடு­விப்­ப­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த 7ஆம் திகதி விடுத்­தி­ருந்தார்.
எனினும் உச்ச நீதி­மன்­றத்தில் தனியார் நிறு­வ­ன­மொன்று மீள்­கு­டி­யேற்­றத்தை தடை­செய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்­த­மையால் கடந்த வியா­ழக்­கி­ழமை வரையில் இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.
 
இதனால் இடைத்­தங்கல் முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த சம்பூர் பிர­தேச வாசி­யான தேவ­ராஜா பிரேம்­குமார் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­­விரதப் போராட்­டத்தை கடந்த 18ஆம் திகதி முதல் ஆரம்­பித்­திருந்­த­துடன் அவ­ருக்கு ஆத­ர­வாக இடைத்­தங்கல் முகாம் மக்­களும் உண்­ணா­வி­ரத போராட்­டங்­களை முன்னெ­டுத்­தனர்.
 
இந்­நி­லையில் நேற்று முன்தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மக்கள் மீள்குடியேறுவதற்கான இடைக்கால தடையுத்தரவை நீக்குவதாக உயர் நீதிமன்ற பிரம நீதியரசர் ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் அறி வித்தது.
 
Link to comment
Share on other sites

மிகவும் சந்தோசமான செய்தி. இதற்காக முன்னின்று உழைத்த அனைத்து தரப்பினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நன்றி. ஆண்டாண்டு காலமாக தம் நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைக்க தொடர்ந்து சனநாயக வழியில் போராட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமான செய்தி. இதற்காக முன்னின்று உழைத்த அனைத்து தரப்பினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

மிகவும் சந்தோசமான செய்தி. இவ் விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
 
மேலும் இவ்வாறான காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதற்காக உழைக்கும் யாவர்க்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

மக்களே சம்பந்தனை சுமந்திரனை நம்பாது தன்னெழுச்சியாக அரசியல் சார விரும்பாது.. போராடி வரும் நிலையில்.. அதனை சம்பந்தன் வாக்கு அரசியலாக்குவதை மக்களின் வாக்குமூலங்களே நிரூபிக்கும் நிலையில்.. நீங்கள் எல்லாம் சம்பந்தன் சுமந்திரன் மயம் என்று காட்ட விளைவதை நாங்களோ.. எந்த ஒரு நீதியான ஊடகமோ செய்யமாடாது.

 

தமிழ்நெட் வெறும் படம் காட்டாமல்.. மக்கள் கருத்தை அவர்கள் வாயாலேயே வெளியிடுகிறது. சும்மா படத்தைப் போட்டு எழுதப்படும் புனைவுகளையே நீங்கள் அதிகம் இணைத்து வருகிறீர்கள்.. சம்பந்தன்.. சுமந்திரன் விசுவாசத்தை வெளிப்படுத்த உள்ள அக்கறை மக்களின் குரலை தேவையை உள்ள படி சொல்வதில் இல்லை. ஆனால் தமிழ்நெட்டுக்கு அது அதிகம் உள்ளது வெளிப்படை.

 

மக்களுக்கு தெரியும் எதை எப்படி முன்னெடுப்பது என்று. இந்த உண்ணாவிரத வடிவம் கூட மக்கள் தேர்ந்தெடுத்தது. அதனை கொழும்பில் இருந்து கொண்டு கைவிடக் கேட்டிருக்கிறார் சம்பந்தன்.. தன் அரசியலை திணிக்க.

 

இருந்தும் மக்கள் அதனை முழுமையாக நம்பவில்லை. இந்த அண்ணா இன்று என்றால்.. நாளை நானோ இல்ல மற்ற மக்களோ இருப்பார்கள். இது முடியும் என்று நம்பல்ல.. என்கிறார் மக்களில் ஒருவரான அந்த பல்கலைக்கழகம் செல்ல உள்ள மாணவி.

 

சம்பந்தன்.. சுமந்திரனை விட அகதிமுகாம்..அந்த தகரக் கொட்டிலில் கிடந்து படித்த அந்த மாணவியின் குரலில் அதிக யதார்த்தம் வெளிப்படுகிறது. சம்பந்தன்.. சுமந்திரன் உட்பட்ட.. அரசியல் கோமாளிகளின் சித்து விளையாட்டும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வருகிறது.

 

நாங்கள் மக்களாக மக்களுக்குச் செய்ய வேண்டியதை செய்வோம். அதனை விளம்பரப்படுத்தி அரசியல் செய்யும் கீழ்த்தரமான அணுகுமுறை எமக்கு அவசியமில்லை.

 

தோல்விப் பயத்தில் கடைசி நேரத்தில் எழும் அக்கறை.. வாக்குச் சுரக்காயை விட யாழ் களம் தாங்கி வரும்.. ஏட்டுச் சுரக்காய் எவ்வளவோ மேல். :icon_idea::)

வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு மாற்றீடு கிடைத்து விட்டார் .வன்னிவீதி திறப்பு விழா திரியில் நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவை வெளிச்சத்திற்கு வந்துதே .

மகிந்த பதவியில் இருந்தபோது எங்கே போனது மக்களுடைய செயல்பாடுகள் இதற்கு பின்னியில் யார் உள்ளார்கள் என்றும் எங்களுக்கு நன்றாககத் தெரியும் .

Link to comment
Share on other sites

ம்பூர் விவகாரம்: இடைக்கால தடையுத்தரவை விலக்கியது நீதிமன்றம்!
[ புதன்கிழமை, 20 மே 2015, 11:38.37 PM GMT ]
high_court_001.jpg
இடம்பெயர்ந்திருந்த மக்களை சம்பூர் காணியில் மீளக்குடியமர்த்துவதற்கான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவினை உச்ச நீதிமன்றம் நேற்று விலக்கிக்கொண்டது. 

இதற்கமைய சம்பூர் காணியில் மீள்குடியேற்றுவதற்கான ஜனாதிபதி வர்த்தமானி பிரசுரம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், பிரியந்த ஜயவர்தன, உப்பாலி அபயரத்ன ஆகிய மூவர் கொண்ட குழுமம் இந்த வழக்கை விசாரித்தது.

சம்பூர் மக்கள் சார்பில் சட்டத்தரணியாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்காக வழங்கப்பட்டிருந்த 818 ஏக்கர் சம்பூர் காணியை மீட்டு அதில் இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதாக அமைச்சரவை கடந்த பெப்ரவரி மாதம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

இதற்கமைய, மீட்கப்பட்ட காணியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தொடருமாறு மார்ச் 07ம் திகதியன்று ஜனாதிபதி வர்த்தமானி பிரசுரம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையிலிருந்து குறித்த காணியை சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் பெற்றிருந்த தனியார் கம்பனி, ஜனாதிபதி வர்த்தமானி பிரசுரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி வர்த்தமானி பிரசாரத்திற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கடந்த அரசாங்கம் சம்பூர் காணியை மீளப்பெற்று மீள்குடியேற்றத்தை செய்வதாக உச்ச நீதிமன்றத்திற்கு 2007ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதியையும் பசில் ராஜபக்ச எம்.பி. 2012ல் பாராளுமன்றத்தில் வைத்து வழங்கிய வாக்குறுதியினையும் சட்டத்தரணி சுமந்திரன் உச்சநீதிமன்றத்திற்கு முன்வைத்திருந்தார்.

விசாரணைகளின் முடிவில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை விலக்கிக்கொண்டது.

http://www.tamilwin.com/

 

 

சம்பூர் மக்களின் காணிகளை மீளக்கையளிப்பது தொடர்பான ஜனாதிபதி பிறப்பித்திருந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருந்த நிலையில், அத்தடையை இன்று உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இடைக்காலத்தடை நீக்கத்தினால், ஜனாதிபதியின் உத்தரவு அமுலுக்கு வரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இரா சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு அறிவித்தனர்.

சம்பூரில் பறிக்கப்பட்ட மக்களின் காணிகளை மீளக்கையளிக்கும் நோக்கில் முதலீட்டுச் சபைக்கு கொடுத்திருந்த காணியை மீளப்பெறுவதற்கான உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்ததை அடுத்து, அவ்விடயம் வர்த்தமானியிலும் பிரசுரமாகியிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிராக கேட்வே இண்டர்ரீஸ் என்ற நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடையை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Smpr.jpg?resize=600%2C400

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9 வருடமா தகரக்கொட்டகைகளிலும்.. ஓலைக் குடிசைகளிலும் வாழ்ந்த மக்கள் நேற்று வரை தாமே உண்ணாவிரதம் இருந்தும் போராடிய மக்கள்.. தம் நிலத்தை மீட்டுக் கொள்ள அவர்கள் பட்ட துன்பத்தில்.. 1% ச.சு கும்பல் பட்டதில்லை. ஆனால்.. இப்போ அந்த மக்களுக்கு கட்டாந்தரையை காட்டிவிட்டு.. ஏதோ நவீன வசதிகளோடு அமைக்கப்பட்ட சம்பூர் நகரில்.. ஆனந்தக் கண்ணீரோடு 35 மாடி அடுக்கு இல்லத்தில் குடியிருக்க விட்ட கணக்கா அறிக்கைகள் பல.

 

இந்த சம்பூர் ஆக்கிரமிப்பை.. ஆரம்பித்தவர் அம்மையார் சந்திரிக்கா. கிபீரால் கொண்டு போய் கொட்டு கொட்டடென்று குண்டுகளை கொட்டியவர் அவர். அந்த மக்களின் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டு.. அவர்களின் சொத்துக்களை வருவாய்களை நாசப்படுத்தி விட்டு.. இப்போது அதனை மீளளிப்பதில்.. அரசியல் செய்கிறார்கள்.

 

அந்த நிலம்.. எந்த ஒரு கெடுபிடியும் இன்றி சும்மா கையளிக்கப்பட்டிருக்க வேண்டும். இழந்த சொத்துக்கள்.. வருவாய்களுக்கான வழிமுறைகள் அந்த மக்களுக்கு மீள அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 9 ஆண்டுகால ஆக்கிரமிப்பால் அந்த மக்கள் இழந்தவற்றிற்கான இழப்பீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். மீளக் குடியேறி அந்த மக்கள் நிம்மதியான ஒரு வாழ்வை வாழ பொருண்மிய உதவி செய்யப்பட்டிருக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்புக்கள் நவீன முறையில் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

இவை எதுவுமே இன்றி மக்களின் சொந்த காணிகளை நிலத்தை பற்றைக் காணிகளாக்கி கையளித்து விட்டு.. அதுவும் இறுதி நேரம் வரை பல்வேறு தடைகளை ஏற்படுத்தி மக்களை துன்பப்படுத்தி விட்டு.. இப்போ மக்கள் ஆனந்தக்கண்ணீரில் மிதக்கிறார்கள் என்று ச.சு கும்பல் சொல்லும் அரசியல் செய்தி தான் இங்கு கண்டிக்கப்படுகிறது. நில விடுவிப்பு என்பது அந்த மக்களுக்கான அடிப்படை உரிமை.

 

எம் மக்களின் நிலம்.. பூமி.. மண்.. எந்த நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும். மக்களின் இழப்புக்களுக்கு நியாயமான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். மக்கள் நிம்மதியாக.. மகிழ்வோடு வாழக் கூடிய அளவுக்கு அவர்கள் தமது இயல்பு வாழ்வை சிதைந்து போன நிலங்களில் கட்டி அமைக்க போதிய பொருண்மிய உதவிகள் அடிப்படை கட்டுமானங்கள் கட்டமைப்பு வசதிகள்.. அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

 

அதைச் செய்யாமல்.. மக்களிடம் பற்றைக் காணிகளை காட்டி.. இந்தா பிடி உன் நிலம் என்று அதற்குள் அவர்களை அனாதரவாக தள்ளிவிட்டு ஆனந்தக் கண்ணீர் அதில் ஓடுது என்பது போன்ற போலி பிரச்சாரங்கள் அல்ல இங்கு அவசியம்.

 

நிலம் விடிவிக்கப்பட்ட வேண்டியது எவ்வளவு அவசியமோ.. அந்த நிலம் அந்த மக்களின் வாழ்விடமாக இருந்த போது இருந்த செழிப்பை விட அதிக செழிப்போடு இருக்கச் செய்யப்படுவது அதைவிட அவசியம். இன்றேல் இந்த நிலத்தை அந்த மக்கள் வறுமையால் எத்தனை நாளைக்கு தக்க வைப்பார்கள். மீண்டும் அதனை ஆக்கிரமிப்பாளன் வேறு வழியில் பறிக்கவே வசதி ஏற்படும். அப்போ அது மீட்கப்பட முடியாத நிலைக்கு சென்றுவிடும். அப்போதும் அந்த நிலங்களுக்கு பட்டா எழுது.. ச.சு கும்பல்  சட்டத் தொழில் செய்து.. பணம் பார்த்துக்கும். :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு மாற்றீடு கிடைத்து விட்டார் .வன்னிவீதி திறப்பு விழா திரியில் நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவை வெளிச்சத்திற்கு வந்துதே .

மகிந்த பதவியில் இருந்தபோது எங்கே போனது மக்களுடைய செயல்பாடுகள் இதற்கு பின்னியில் யார் உள்ளார்கள் என்றும் எங்களுக்கு நன்றாககத் தெரியும் .

 

எங்களைப் பற்றியோ.. செயற்பாடுகள் பற்றியோ.. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல்.. (எங்களுக்கு தெரியும் எம்மவரை எப்படிக் கையாளனுன்னு) சும்மா ஆட்களுக்கு துதிபாடித் திரிவதல்ல.. எமக்குத் தொழில். கொஞ்சக் காலம்.. ஹரி ஆனந்தசங்கரி. இப்ப சம்பந்தன்.. சுமந்திரன்.  அதில வீ.ஆனந்த சங்கரி மாற்றான்.. என்பது போல ஒரு பாசாங்கு. எல்லாம் உங்க ஆக்கள் தான். உங்களின் வட்டம் வளையம் நோக்கம் யாழ் உறவுகளுக்கு நன்கே தெரியும். :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.

வெள்ளிகிழமையும் அதுவுமா நல்ல தீர்ப்புக்களவே வருவது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனித் தொடர்ந்து நல்ல செய்திகளாகவே வடக்கு கிழக்கு மக்களுக்கு வரும்! குழப்பவாதிகளை இனங்கண்டு ஒதுக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக முன்னின்று உழைத்த அனைவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதுக்கு முன் நின்று ஆரம்பத்தில் உழைத்தது சிங்கள இராணுவம்தான் 
அவர்கள்தான் மக்களை போர் மூலம் வெளியேற்றி நிலத்தை பறித்தது..........
Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.