Jump to content

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்


Recommended Posts

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்
 

 

 

சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பாக தொடங்கப்பட்டு பல்வேறு திருப்பங்களைக் கடந்த சொத்துக் குவிப்பு வழக்கு, மே 11-ம் தேதி குமாரசாமியால் முடித்து வைக்கப் பட்டும், தீர்ப்பு குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதாவுக்கு கிடைத் திருக்கும் விடுதலை எளிதாய் கிடைத்தது அல்ல.

 

2nu4pc5.jpg

 

விடுதலை தந்த 919 பக்க தீர்ப்பின் ஒவ்வொரு எழுத்திலும் முகம் தெரியாத பல வழக்கறிஞர்க‌ளின் உழைப்பு இழையோடிருக்கிறது. சட்டத்தில் இருந்த அத்தனை பிரிவுகளிலும் நுழைந்து வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.

 

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிட்ட விருத்தால ரெட்டியாரில் தொடங்கி ஜோதி, கே.சுப்பிரமணியம், தீனசேனன், நவனீதகிருஷ்ணன், பி.குமார் என வழக்கறிஞர்களின் பட்டியல் நீள்கிறது. இதில் உச்ச நீதிமன்றத் தில் வாதாடிய ஃபாலி எஸ்.நாரிமன், ராம்ஜெத்மலானி, ஹரீஷ் சால்வே, கேடிஎஸ் துள்சி உள்ளிட்ட புகழ் பெற்ற மூத்த வழக்கறிஞர்களும் அடங்குவர்.

 

இதில் கர்நாடக உயர் நீதி மன்றத்தில் வாகை சூடிய பி.குமார் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவின் உழைப்பு மிக முக்கிய மானது. நீதிபதிகளிடமும், அரசு வழக்கறிஞர்களிடமும், ஊடகங் களிடமும் ஆயிரம் முறை திட்டு வாங்கினாலும், திட்டமிட்டு உழைத்ததால் வெற்றி பெற்றிருக் கிறார்கள். அவ்வாறு தடம் பதித்த வழக்கறிஞர்களில் முக்கியமானவர் பி.குமார்.

 

ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் அவருக்கு சட்ட ஆலோசகராக இருந்தவர். 1996-ல் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதில் இருந்து இப்போது வரை ஜெயலலிதா தரப்புக்காக வாதாடிக் கொண்டிருப்பவர். வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி, குற்றவியல் வழக்குகளில் ஆழ்ந்த அனுபவமுள்ள வழக்கறிஞர்களின் பி.குமார் முக்கியமானவர்.

 

செப்டம்பர் 27, 2014 அன்று பரப்பன அக்ரஹாரா சிறை நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா, “சட்டப்படி ஜெயலலிதாவுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க முடியும்'' என முடிவு செய்தார். பி.குமார் எடுத்து வைத்த 4 மணி நேர வாதம் தான் தண்டனையை 4 ஆண்டாக குறைத் தது. மேல்முறையீட்டில் நாட்டின் மூத்த வழக்கறிஞர்களான ராம்ஜெத் மலானி, பாலி எஸ்.நாரிமன், நாகேஸ்வர ராவ் ஆகியோர் களமிறக்கப்பட்ட‌னர். அவர்களுக்கு வழக்கு விவரங்களை முழுமையாக விளக்கியவர் பி.குமார். ஜெயலலிதாவின் விடுதலைக்காக நாகேஸ்வர ராவ் சுமார் 47 மணி நேரம் நின்றுகொண்டே வாதாடினார் என்றால், பி.குமார் அவருக்கு அத்தனை பாயிண்டுகளையும் கொடுத்தார்.

 

நீதிபதி குமாரசாமி எப்போதெல்லாம் கேள்வி கேட்கிறாரோ, அப்போதெல்லாம் குமார் எழுந்து சந்தேகங்களை களைவார். சில நேரங்களில் அரசு வழக்கறிஞராக இருந்த பவானிசிங்கை கேட்டாலும், தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரி சம்பந்தத்தை கேட்டாலும் பி. குமார் தான் பதிலளிப்பார். :o :lol:

ஜெயலலிதாவின் மேல்முறை யீட்டுக்காக சுமார் 3 லட்சம் பக்கங் கள் கொண்ட ஆவணங்களை 3 மாதங்களில் தயாரித்து வழக்கை 3 மாதங்களில் முடித்தார். பெங்களூ ருவில் 8 ஆண்டுகள் ஹோட்டல் உணவை உண்டு வாழ்ந்து வழக்கை வென்றிருக்கிறார். தனது மனைவியையும், மாமியாரையும், வேறு சில ரத்த உறவுகளையும் இழந்த போதும் விடுமுறை எடுக்காமல் செயல்பட்டார்.

 

சொத்துக் குவிப்பு வழக்கின் வரலாற்றிலும் சரி..ஜெயலலிதாவின் வெற்றிக்கு வித்திட்டவர்களின் பட்டியலிலும் சரி..பி.குமாரின் பங்கு மிக மிக முக்கியமானது!

 

(இன்னும் வருவார்கள்)
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7204441.ece?homepage=true&ref=tnwn

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவுக்கு வெற்றி பெற்று தந்த வழக்கறிஞர்கள்
 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் சட்டத்தின் துணையோடு ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசியை விடுவித்தவர்கள் அவர்களது வழக்கறிஞர்கள்.

2014 செப்டம்பர் 27-ம் தேதி நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கியதற்காக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கதறி அழுததைக் கண்டு கர்நாடக வழக்கறிஞர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். த‌ற்போது ஜெய லலிதாவுக்கு விடுதலை கிடைத்த தும் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சியில் திளைத்ததை அம்மாநில உயர் நீதி மன்றம் இதுவரை கண்டதில்லை.

 

 

மணிசங்கர்

சென்னை உயர் நீதிமன்றத்தி லும், உச்ச நீதிமன்றத்திலும் பல் வேறு முக்கிய வழக்குகளில் வாதாடி வாகை சூடியவர் மணி சங்கர். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து நவநீதகிருஷ்ணன் விலகி யதைய‌டுத்து 2011-ல் இருந்து மணிசங்கர், சசிகலாவுக்காக வாதாட தொடங்கினார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.பாலகிருஷ்ணா, ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஆகியோர் முன்னிலையிலும், உயர் நீதி மன்றத்தில் குமாரசாமி முன்னிலை யிலும் வாதாடினார்.

பி.குமார் பவ்யமான குரலில் வாதாடுவதில் வல்லவர் என்றால் மணிசங்கர் ஆணித்தரமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் வாதாடுவதில் வல்லவர்.

மேல்முறையீட்டில் சசிகலாவுக் காக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.பசன்ட் ஆஜரான போதும், அவரது வாதத்துக்கான தயாரிப்புகளை வழங்கியவர் மணிசங்கர். ஒரு கட்டத்தில் பசன்ட், உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட போதும், குமாரசாமியின் கேள்விகளால் சளைத்த போதும் இவரே அவ ருக்கு கைக்கொடுத்தார். `ஜெய லலிதாவுக்கும், சசிகலாவுக்கும் தனித்தனியான வருமானம் இருந்தது. தனித்தனியான சொத்து கள் இருந்தது. ஒரே வீட்டில் வசித்தாலும்,ரத்த சம்பந்தம் இல் லாததால் பினாமி அல்ல. இருவரும் கூட்டுசதி செய்யவில்லை' என இவர் முன்வைத்த வாதத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் எதிரொலித்துள்ளது.

 

 

அசோகன்

சசிகலாவின் உறவினரான அசோகன், இளவரசியின் வழக் கறிஞராக வக்காலத்தில் கையெழுத்து போட்டவர். சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டதில் இருந்து நீதிமன்றத்துக்கு வந்து சென்றார். 2007-ம் ஆண்டு ஜோதி இவ்வழக்கில் இருந்து விலகியதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் பெங்களூருவுக்கு வந்தார். அப்போது நவநீதகிருஷ்ணன னுக்கு வலது கரமாக இருந்து தினமும் நீதிமன்ற நடவடிக்கை களை கவனித்து கார்டனுக்கு தகவல் சொல்பவராக மாறினார்.

நவநீதகிருஷ்ணன் வழக்கில் இருந்த விடுபட்ட பிறகு இவரும், செந்திலும் சொத்து குவிப்பு வழக்கின் முழு பொறுப்பாளர் களாக உயர்ந்தார்கள். நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜூனைய்யாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சசிகலாவும், இளவரசியும் தடுமாறிய போது அவர்களுக்கு மணிக்கணக்கில் பதில்களை தயாரித்துக் கொடுத் தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே விரிசல் விழுந்த போது அசோகன் கவலை அடைந்தார். மீண்டும் ஜெயலலிதா - சசிகலா நட்பு ஏற்பட்டதற்கு இவரும் ஒரு காரணம் என கார்டனுக்கு நெருக்கமானவர்கள் கைக்காட்டுகிறார்கள்.

 

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு நீதிமன்றத்துக்கும், உயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அலைந்து கொண்டிருக்கும் அசோகனை ஜூனியர் வழக்கறிஞர்கள் `ஹெட் மாஸ்டர்' என அழைப்பார்கள். ஏனென்றால் அனைவரையும் செல்லமாக அதட்டி, வேலை வாங்குவார். மேல்முறையீட்டுக் கான ஆவணங்களை தயாரிக்கும் பணி ஜெயலலிதா வீட்டுக்கு எதிர் வீட்டில் இரவு பகலாக நடந்துக்கொண்டிருந்த போது அசோகன் விடிய விடிய வேலை செய்தார்.

இவரது கண்டிப்பான அணுகுமுறை இல்லாமல் போய் இருந்தால் அத்தனை லட்சம் ஆவணங்களையும் தேர்வு செய்து, ஜெராக்ஸ் எடுத்து குறுகிய காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க முடியாது. எந்த நீதிமன்றத்திலும் அசோகன் வாதாடியதில்லை என்றாலும், அவரது வழிக்காட்டல் இல்லையென்றால் வெற்றி சாத்தியமாகி இருக்காது என்கிறார் கள் ஜூனியர் வ‌ழக்கறிஞர்கள்.

 

 

செந்தில்

சொத்துக்குவிப்பு வழக்கில் நவநீதகிருஷ்ணன் மனு மேல் மனு போட்டு, வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த நேரம், `இந்த வழக்கு இப்போதைக்கு முடியாது' என எல்லோரும் சொன் னார்கள். அப்போது அவரது உதவி யாளராக நாமக்கல்லை சேர்ந்த செந்தில் முதன் முதலாக பெங்க ளூரு வரத் தொடங்கினார். 2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதும் நவநீதகிருஷ்ணனுக்கு பதவிகள் படையெடுத்தன.

 

அந்த நேரத்தில் நவநீத கிருஷ்ணன், செந்திலை சசிகலாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நாளடைவில் ஜெயலலிதாவின் சட்ட ஆலோ சகராகவும் செந்தில் மாறினார். குமாரும், மணிசங்கரும் ஜெய லலிதாவுக்காக வருடக் கணக்கில் வாதாடினாலும் அவர்களை விட செல்வாக்கான மனிதராக செந்தில் வலம் வந்தார்.

உரிய நேரத்தில் மனு போடுவது, தள்ளுபடியான மனுக்களை மேல்முறையீடு செய்வது, உரிய‌ வழக்கறிஞர்களை தேர்வு செய்வது, டெல்லியில் காய்களை நகர்த்தி யது எல்லாமே செந்தில் தான். இது மட்டுமில்லாமல் மேல்முறை யீட்டில் எவ்வித சிக்கலும் இல்லாமல் வழக்கை வெற்றிக்கர மாக முடிக்க அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என திட்டம் போட்டார்.

 

மே 11-ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை பெங்களூரு ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்துவிட்டு நீதிமன்றத்துக்கு வந்தார். 11.2 மணிக்கு விடுதலை செய்யப்பட்டதாக குமாரசாமி சொன்ன போது அடுத்த கணமே செந்திலை அவரது ஆதரவாளர்கள் தோள் மீது சுமந்து கொண்டாடினார்கள்.

 

வாதாடிய வழக்கறிஞ‌ர்கள்

 

* விருதாச்சல ரெட்டியார் (அதிமுக வழக்கறிஞர் இல்லை) மற்றும் குழுவினர் (1997 முதல் 1998 வரை)

* கே.சுப்பிரமணியம் (அதிமுக வழக்கறிஞர் இல்லை) மற்றும் குழுவினர் (1998-1999 வரை)

* தீன‌சேனன் (அதிமுக வழக்கறிஞர் இல்லை) மற்றும் குழுவினர் (1999 சில மாதங்கள் மட்டும்)

* ஜோதி (முதலில் அதிமுக வழக்கறிஞர் இல்லை. பிறகு கட்சியில் இணைந்து ராஜ்ய சபா உறுப்பினர் ஆனார் ) மற்றும் குழுவினர். (2000 முதல் 2007 வரை )

* நவநீத கிருஷ்ணன் (அதிமுக வழக்கறிஞர்) தலைமையில் அசோகன் மற்றும் குழுவினர் (2007 முதல் 2010 வரை )

* பி.குமார் தலைமையில் மணிசங்கர், அசோகன், செந்தில், பன்னீர் செல்வம், அன்புக்கரசு, மூர்த்திராவ், செல்வகுமார், திவாகர், பரணிகுமார், எம்.ஜோதி குமார், அம்பிகை தாஸ், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர்.(2010 முதல் தற்போது வரை)

* மேல்முறையீட்டு வழக்கறிஞர்க‌ள் ஃபாலி எஸ்.நாரிமன், எல்.நாகேஸ்வர ராவ், ஆர்.பசன்ட் (2014 முதல் 2015)

 

 

(இன்னும் வருவார்கள்)
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7208828.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: அதிரும் வழக்கும்.. நீதிமன்றத்தில் வாதாடிய சட்டப்புள்ளிகளும்
 

 

கடந்த1995-ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதிபெற்று ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவதாக அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அந்த அதிர்ச்சியின் அலைகள் 20 ஆண்டுகள் கடந்தும் இந்திய அரசியலில் அதிர்ந்துக் கொண்டிருக்கிறது.

 

இந்த வழக்குக்கு வலு சேர்க்க‌ தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றிய ஆவணங்கள், திரட்டிய ஆதாரங்கள், சமர்ப்பித்த விசாரணை அறிக்கைகள், இதை ஆட்சேபிக்க ஜெயலலிதா தரப்பு குவித்த ஆவணங்கள், அரசு தரப்பும், திமுக தரப்பும் சேர்த்த ஆவணங்களை எல்லாம் ஒரே இடத்தில் சேர்த்தால் கடல் போல காட்சியளிக்கும். இதில் சிக்கித் தவித்த ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசியை மீட்க இந்தியாவில் இருக்கும் எல்லா பெரிய வழக்கறிஞர்களும் வாதம் புரிந்தார்கள்.

 

சென்னை, கர்நாடக உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத் திலும் மேல்முறையீடு செய்த போது நாட்டின் மிக மூத்த நீதிபதி கள் எல்லாம் வரிசையாக விசாரித் தார்கள். இந்திய நீதித்துறை வரலாற்றில் இத்தனை பெரிய வழக்கறிஞர்களும், பெரிய நீதிபதிகளும் விசாரித்த‌ ஒரே வழக்கு அநேகமாக இதுவாக தான் இருக்கும் என்கிறார்கள் சட்டத்துறை வல்லுநர்கள்.

 

தாமாக முன்வந்த தத்து

2014-ம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற் காக பரப்பன அக்ரஹாராவுக்கு வந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நீதிபதி குன்ஹா நேராக சிறைக்கு அனுப்பு கிறார். சூட்டோடு சூடாக ஜாமீன் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா ஆணித்தரமான காரணங்களைச் சொல்லி தள்ளுபடி செய்கிறார்.

 

உடனே ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, அதனை விசாரிக்க பல மூத்த நீதிபதிகள் தயங்கினர். யாரும் விசாரிக்க முன்வரவில்லை என்பதால் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தானே விசாரிக்க முன்வந்தார். அக்டோபர் 18-ம் தேதி ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை 65-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

 

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி, 2 மாதங்களுக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்து 3 மாதங்களுக்குள் மேல்முறையீட்டு வழக்கை முடிக்க வேண்டும். இதை விசாரிக்க சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டு, கர்நாடக உயர் நீதிமன்ற‌த்தில் சிறப்பு அமர்வும் அமைக்கப்படும் என படிப்படியாக வழிக்காட்டுதல்களை வழங்கினார். ஏராளமான வழிகாட்டுதல்களை வழங்கிய தத்து அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றியும் அப்போதே கூறியிருந்தால் பவானிசிங் பிரச் சினையே எழுந்திருக்காது. விசா ரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் காலக் கெடுவே விதிக்கப்பட்டிருக்காது.

 

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க காட்டிய வேகம், மேல்முறை யீட்டை முடிக்க காட்டிய சுறுசுறுப்பு, தீர்ப்பை வெளியிட தத்து காட்டிய விறுவிறுப்பு எல்லாமே இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

 

நம்பிக்கை பெற்ற நரிமன்

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலிதாவுக்கு ஜாமீன் வாங்கித் தருவதற்காக 92 வயதான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி 2 முறை வாதாடினார். 21 நாட்கள் ஆன பிறகும் திறக்கப்படாமல் இருந்த பரப்பன அக்ரஹாரா சிறை கதவுகளை திறந்தவர் ஃபாலி எஸ்.நரிமன்.'' நரிமன் எனது குரு என்பதற்காக ஜெயலலிதாவின் ஜாமீனை எதிர்க்கவில்லை' என்று சுப்பிரமணியன் சுவாமி அப்போது சொன்னார்.

 

காவிரி வழக்கில் தமிழக அரசுக்கு எதிராகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பிலும் ஆஜரான 89 வயதான ஃபாலி எஸ்.நரிமன் தான் ஜெயலலிதாவின் தற் போதைய சட்ட ஆலோசகர். அவ ருடைய வழிகாட்டுதலின் பேரில் தான் ஜாமீன் காலத்தில் ஜெய லலிதா வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. விடுதலைத் தீர்ப்பு சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த போதும், இன்னும் சில தினங் களில் ஜெயலலிதா கோட்டைக்கு போவதும்கூட இவரது ஆலோ சனையின் பேரில் தான்.

 

பவானிசிங்கை நீக்கக் கோரி திமுக தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது ஜெயலலிதா தரப்பில் களமிறங்கிய நரிமன் கடுமையாக வாதிட்டார். அந்த மனுவில் வெற்றி திமுக பக்கம் திரும்பினாலும், 'புதிய‌ அரசு வழக்கறிஞர் நியமித்தால், உடனே எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய வேண்டும்' என்று அழுத்தம் கொடுத்தது நரிமன் தான். இதன் அடிப்படையில் தான் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 'அரசு தரப்பு ஒரே நாளில் 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.

 

நாட்டின் மிக முக்கிய குற்றவியல் வழக்கறிஞரான எல்.நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்றத்திலும், பல் வேறு மாநில உயர்நீதிமன்ற‌ங்களி லும் வாதாடியுள்ளவர். ஓரிரு தெலுங்கு படங்களில் தலைகாட்டி யுள்ளார். மூன்று முறை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பொறுப்பை வகித்துள்ள எல்.நாகேஸ்வர ராவ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக 9 நாட்கள் இறுதிவாதம் செய்தார். சுமார் 40 மணி நேரம் அடைமழைப் போல கொட்டித் தீர்த்த இவரது வாதத்தைக் கண்ட அனைவரும் மலைத்துப் போயினர்.

நீதிபதி குன்ஹா கட்டிட மதிப் பீட்டில் காட்டிய 20 சதவீத தள்ளுபடி, ஐதராபாத் திராட்சைத் தோட்ட வருமான‌த்தில் ஏற்றுக்கொண்ட தன்னிச்சையான வருமானம், சுதாகரனின் திருமணத்துக்கு பந்தல் போட்டதில் போட்ட கணக்கு, நகை மதிப்பீட்டில் சேதா ரத்தை கழித்தது என தனது தீர்ப்பில் தெரிவித்த, திருப்பங் களை ஏற்படுத்தும் நுணுக்கமான விஷயங்களை நாகேஸ்வர ராவ் மிகச் சரியாக கண்டுபிடித்தார். மார்பிள் விலை, மின்சார ஒயர் விலை என குன்ஹாவின் மதிப்பீடு களைப் பற்றி ஆராய்ந்தால் புதிய வழக்கே தொடுக்கலாம் என போட்டு உடைத்தார்.

 

ஜெயலலிதாவை விடுவித்த 919 பக்க தீர்ப்பில் நாகேஸ்வர ராவ் முன் வைத்த வாதத்தின் 90 சதவீத அம்சங்களை நீதிபதி குமாரசாமி அப்படியே எதிரொலித்து இருக் கிறார். பொது ஊழியர் வருமானத் துக்கு அதிகமாக சொத்துக்குவிப்ப தில் உள்ள விகிதாச்சாரம், கூட்டு சதியை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் , பினாமி சட்டத்துக்கு வலுச்சேர்க்க தேவையான நேரடி பண பரிவர்த்தனைகள் குறித்து நாகேஸ்வர ராவ் எழுப்பிய கேள்வி களை குமாரசாமி அப்படியே அரசு தரப்பு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.

 

ஜெயலலிதாவை விடுவிக்க காரணமாக இருந்த கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கு, (வருமான அதிகமான சொத்து மதிப்பு 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும்), பொது ஊழியரின் வருமானத்துக்கு அதிகமான சொத்து தொடர்பாக 1989-ல் ஆந்திர அரசு வெளியிட்ட சுற்ற றிக்கை (வருமானத்துக்கு அதிக மான சொத்து மதிப்பு 20 சதவீதம் வரை கூடுதலாக இருந்தால் அனு மதிக்கலாம்) ஆகியவற்றை குமாரசாமியின் கவனத்துக்கு கொண்டு வந்தவர் நாகேஸ்வர ராவ். அந்த வாதத்தை அடிப்படை யாக வைத்தே நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய் தார் என்பதால் ஜூனியர் வழக் கறிஞர்கள் மத்தியில் நாகேஸ்வர ராவ் 'ஹீரோ'வாக மாறியுள்ளார்.

 

(இன்னும் வருவார்கள்)

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7213377.ece?homepage=true

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் திமுக வழக்கறிஞர்கள்

 

தாவுக்கு எதிராக கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கின் ஒவ்வொரு அசைவையும் ஒவ் வொரு அங்குலத்தையும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் தீர் மானித்தவ‌ர்கள் திமுக வழக்கறிஞர்கள்.

 

சுப்பிரமணியன் சுவாமியின் புகாரை அடிப்படையாகக் கொண்டு 18.9.1996-ல் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தபோது திமுக ஆட்சியில் இருந்தது.

 

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போயஸ் கார்டனில் சோதனை நடத்தியது, வழக்கை பெங்களூரு வுக்கு மாற்றிய‌து, மூன்றாவது தரப்பாக சேர்ந்து எழுத்துப்பூர்வ மாக வாதிட்டது, ஜெயலலிதா வுக்கு தண்டனை வாங்கி தந்தது, மேல்முறையீட்டில் பவானி சிங்கை நீக்கியது, தற்போது விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவது வரை திமுக தரப்பு இடைவிடாது இயங்கி கொண்டிருக்கிறது.

அதன்படி வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தலைமையில் சிறப்பு நீதிமன்றத்துக்கு தாமரை செல்வன், உயர் நீதிமன்றத்துக்கு சி.வி.நாகேஷ், உச்ச நீதிமன்றத்துக்கு அந்தி அர்ஜூனா என பெரும் வழக்கறிஞர் படையே செயல்படுகிறது.

 

 

தளராத தாமரை செல்வன்

முன்னாள் மக்களவை உறுப்பினரான தாமரை செல்வன் தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்துக்கு பிறகு திமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர் சொத்துக்குவிப்பு வழக்கின் வரலாற்றிலும் தவிர்க்க முடியாத மனிதர்.

2013-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா இருந்தபோது சொத்துக்குவிப்பு வழக்கு வழக்கத்தை விட வேகமாக பயணித்து கொண்டிருந்தது.

 

ஒரே மூச்சில் ஜெயலலிதா தரப்பும், அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் சூறாவளியென இறுதிவாதத்தை முடித்து தீர்ப்பை நெருங்கிக் கொண்டிருந்தனர். ஓய்வு பெறுவதற்கு முன்பாக தீர்ப்பை எழுதிவிட வேண்டுமென நீதிபதியும் சுறுசுறுப்புக் காட்டினார்.

இன்னும் ஒரு வாரத்தில் வழக்கு முடிந்துவிடும் என எதிர்பார்த்தபோது, 18.8.2013 அன்று தாமரைச்செல்வன், 'திமுகவை மூன்றாம் தரப்பாக சேர்க்க வேண்டும்' என மனு போட்டார். அதைத் தொடர்ந்து, 'ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படும் பாவனி சிங்கை நீக்க வேண்டும்' எனவும் மனு தாக்கல் செய்தார். இதனால் சொத்துக்குவிப்பு வழக்கின் போக்கில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து, பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வந்தார்.

அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதத்தைக் கண்டு வெறுப்படைந்த திமுக தரப்பு சுமார் 500 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தனர். அதை அடிப்படையாகக் கொண்டே நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனையை தீர்மானித்தார்.

 

'ஒருவேளை தாமரைச்செல்வன் மட்டும் நீதிமன்றத்துக்கு வராமல் போய் இருந்தால் 2013-ம் ஆண்டே ஜெயலலிதா விடுதலை ஆகி இருப்பார்' என அதிமுக வழக்கறிஞர்களே சொல்வார்கள்.

 

மற்றொரு திமுக வழக்கறிஞர் சரவணன் வாதாடுவதில் வல்லவர். சொத்துக்குவிப்பு வழக்கின் அத்தனை அம்சங்களையும் கரைத்து குடித்துள்ள இவருக்கு ஜெயலலிதா தரப்புக்கு எதிரான மனுக்களை தயாரிப்பதில் தொடங்கி, பவானிசிங்கை நீக்கியது வரை முக்கிய பங்கு இருக்கிறது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் திலும், கர்நாடக உயர்நீதிமன்றத் திலும் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினாலும், பின்னால் இருந்து முக்கிய பாயிண்டு களை எடுத்துக்கொடுப்பார்.

மேல்முறையீட்டு விசாரணை யின் போது திமுக மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், வேலைப்பளுவின் காரணமாக ஆஜராகவில்லை. வேறு சில மூத்த வழக்கறிஞர்களை கேட்டபோது வாதிட மறுத்துவிட்டனர்.

 

நீதிமன்றம் கூடியதும் நீதிபதி குமாரசாமி, 'எங்கே திமுக வழக்கறிஞர்?' என்றதும், 'மூத்த வழக்கறிஞர் இல்லாததால் வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என சரவணன் கேட்டார். அதற்கு 'நீங்களும் வழக்கறிஞர்தானே வாதிடுங்கள், குற்றவியல் நடைமுறை சட்டவிதிகள் தெரியும் தானே?' என்று குமாரசாமி கேட்டுக் கொண்டார். அதன்படி வாதத்தை தொடங்கிய சரவணன் சுமார் ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் வாதிட்டார்.

 

உளவு நடேசன்

பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் நடேசனின் சொந்த ஊர் திருவண்ணாமலை அருகே யுள்ள செங்கம். அழகிரியின் நண்பரான இவர், 2006-ம் ஆண்டில் இருந்து நீதிமன்றத்துக்கு வருகிறார்.

 

ஜெயலலிதா தரப்பு அடுத் தடுத்து எந்தெந்த காய்களை நகர்த்துகிறார்கள் என்பதை உளவுப்பார்த்து தலைமைக்கு தகவல் கொடுப்பார்.

ஆச்சார்யா ராஜினாமா செய் ததைத் தொடர்ந்து, பவானிசிங்கை கண்காணிக்க தினமும் நீதிமன்றத் துக்கு வந்தார்.

இதே போல மேல்முறையீட்டு விசாரணையின் போதும் நீதிமன்றத்துக்கு வந்து, ஜெயலலிதா வழக்கறிஞர்களின் வாதத்தை உன்னிப்பாக கவனிப் பார். உள்ளூர் வழக்கறிஞரான இவரது உதவியோடுதான் திமுக வழக்கறிஞர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பல வேலை களை எளிதாக முடித்தார்கள்.

 

விசுவாச பாலாஜி சிங்

ஓசூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி சிங், 2013 முதல் அன்பழகன் தரப்பு வழக்கறிஞராக நீதிமன்றத்தில் ஆஜராகிறார். இதுவரை அவர் ஒரு ரூபாய் கூட ஊதியம் வாங்கியதில்லை. தனது தந்தை ராம்சிங்கின் இறப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக விடுத்த இரங்கல் செய்தியே போதும் என்பார் பாலாஜிசிங்.

 

 

(இன்னும் வருவார்கள்)

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7222423.ece

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெ. மேல்முறையீட்டு வழக்கை தீர்மானிக்கப் போகும் திமுக வழக்கறிஞர்கள்
 

 

கடந்த 19 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக க‌ர்நாடக அரசும் சுப்பிரமணியன் சுவாமியும் அவ்வப்போது புதிய அறிவிப்பு க‌ளை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மேல் முறையீடு தொடர்பான பணிகளை திமுக செய்து கொண்டிருக்கிறது.

 

சளைக்காத சண்முக சுந்தரம்

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சண்முக சுந்தரம், ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக வழக்கறிஞர் குழுவுக்கு தலைமை வகிக்கிறார். திமுக வழக்கறிஞர் அணித் தலைவரான இவர்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் தரப்பின் ஆணி வேர். சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடி வரும் சண்முக சுந்தரம் காட்டும் வழியில் தான் ஜூனியர் வழக் கறிஞர்கள் பயணிக்கிறார்கள்.

 

1995-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது 'டான்சி' வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சண்முக சுந்தரம் மீது வெல்டிங் குமார் தலைமையிலான ரவுடிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். 27 இடங்களில் வெட்டுப்பட்ட சண்முக சுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார். சேதமடைந்த இடது கை, ஒரு விரலை இழந்தபோதும் தளராமல் சொத்துக்குவிப்பு வழக்கில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

 

2002-ல் ஜெயலலிதா வழக்கின் விசாரணை சென்னை சிங்கார வேலர் மாளிகையில் நடை பெற்றபோது சாட்சியங்கள் பல்டி அடித்தன. ‘தீர்ப்பு திசைமாறி பயணிக்கப் போகிறது' என்பதை அறிந்த சண்முக சுந்தரம், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சண்முகசுந்தரம் நேரடியாக நீதிமன்றத்துக்கு வரு வதை குறைத்துக் கொண்டார். ஆனால் தனது ஜூனிய‌ர் சரவணனை அனுப்பி வைத்து சொத்துக்குவிப்பு வழக்கின் போக்கை கண்காணித்தார்.

 

ஆச்சார்யா அரசு வழக் கறிஞராக இருக்கும் வரை அமைதி காத்த அவர், பவானிசிங்கின் நடத்தையை பார்த்து மீண்டும் வழக்கில் களமிறங்கினார். நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணா இருக்கும்போது வழக்கில் மூன்றாம் தரப்பாக நுழைந்து எழுத்துப்பூர்வ அறிக்கையையும் தாக்கல் செய்தார். நீதிபதி குன்ஹாவின் தண்டனை தீர்ப்பால் ஓய்ந்துவிடாமல், மேல் முறையீட்டிலும் ஜெயலலிதா தரப்புக்கு நெருக்கடி கொடுத்தார்.

 

கர்நாடக உயர் நீதிமன்றம் பவானிசிங்கை நீக்கக் கோரும் மனுவையும் மூன்றாம் தரப்பாக சேர்க்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தாலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றி பெற்றார். தற்போது நீதிபதி குமாரசாமி வழங்கி இருக்கும் தீர்ப்பை ஆராய்ந்து, மீண்டும் மேல்முறையீடு செய்வதற்கான மனுக்களை தயாரித்து வருகிறார். மேல்முறையீட்டு விவகாரத்தில் கர்நாடக அரசும் சுப்பிரமணியன் சுவாமியும் சுணங்கினாலும் திமுக கட்டாயம் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

 

 

‘எக்ஸ்பிரஸ்' குமரேசன்

திமுக ஆட்சியில் அரசு வழக் கறிஞராக செயல்பட்ட குமரேசன் 2013-ம் ஆண்டில் இருந்து ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகி வருகிறார். திமுக மூத்த வழக்கறிஞர் நடராஜனின் ஜூனியரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் வாதாடிய அனுபவம் மிக்கவர். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பவானிசிங் தவித்தபோது அவருக்கு பதிலாக குமரேசன்தான் பதில் அளிப்பார்.

‘அன்பழகனை சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பாக சேர்க்கக் கோரிய குமரேசன், குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளை நீதிமன்றத்தில் வரிசையாக அடுக் கினார். ‘எக்ஸ்பிரஸ்' வேகத்தில் அவர் வாதிட்டதால் பெங்களூரு பத்திரிகையாளர்கள் 'எக்ஸ்பிரஸ்' குமரேசன் என அழைக்க தொடங்கினர்.

குமரேசனின் வாதத்தை அடிப் படையாக வைத்தே நீதிபதி குன்ஹா அன்பழகனுக்கு எழுத்துப்பூர்வ வாதம் அளிக்கும் வாய்ப்பை அளித்தார். குன்ஹாவின் அனுமதியை அடிப்படையாக வைத்தே மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று திமுக எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. இதற்கு குமரேசனின் எக்ஸ்பிரஸ் பாணியிலான வாதம்தான் முக்கிய காரணம்.

 

 

‘ஆல் இன் ஆல்' ராமசாமி

கர்நாடக மாநில திமுக அமைப் பாளரான ராமசாமி, 2013-ல் திமுக சொத்துக்குவிப்பு வழக்கில் நுழைந்ததில் இருந்து தினமும் நீதிமன்றத்துக்கு வருவார். திமுக வழக்கறிஞர்கள், திமுக ஆதரவு ஊடகங்களின் செய்தியாளர்கள் வராவிட்டாலும் தினமும் தவறாமல் நீதிமன்றத்துக்கு வந்து செய்தியை தவறாமல் தலைமைக்கு தெரிவிப்பார்.

பெங்களூரு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றுள்ள ராமசாமி அங்குள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் வாதாடியுள்ளார். நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறையோ, உள்ளூர் விடுமுறையோ விட்டாலும் கூட தினமும் நீதிமன்ற வளாகத் துக்கு வந்து ஜெயலலிதா வழக்கறி ஞர்களின் நடவடிக்கையை நோட்டம் விடுவார்.

‘பெங்களூருவில் ராமசாமி போன்ற உண்மையான கட்சிக் காரர் இருப்பதால் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் திமுகவால் ஜெயலலிதாவுக்கு இத்துணை சவாலாக இருந்திருக்க முடிந்தது'' என கன்னட ஊடகங்கள்கூட எழுதியுள்ளன.

 

 

(இன்னும் வருவார்கள்)

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7226286.ece

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதா வழக்குக்கு சவால் விட்ட பவானி சிங் வழக்கு
 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த ஆச்சார்யா ராஜினாமா செய்ததால் 'அடுத்த அரசு வழக்கறிஞர் யார்?' என்ற கேள்வி எழுந்தது.

சி.வி.நாகேஷ், ரவி வர்ம குமார், நானையா, பூவையா, அரளி நாகராஜ் ஆகிய 5 மூத்த வழக்கறிஞர் களை அரசு வழக்கறிஞர் பொறுப் புக்கு பரிசீலிக்குமாறு கர்நாடக அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை பட்டியல் அனுப்பியது. ஆனால் அப் போதைய கர்நாடக உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தர் ராவ், பட்டியலில் இடம்பெறாத பவானிசிங்கை ஜெயலலிதா வழக் கில் அரசு வழக்கறிஞராக நிய மித்தார். இந்த தர் ராவ்தான் நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவையும் நியமித்தார்.

 

நீதிமன்றத்துக்கு வந்த முதல் நாளே பவானிசிங், வழக்கின் ஆவணங்களை படிக்க 3 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. மீண்டும் நீதி மன்றம் கூடியதும் ஜெயலலிதா தரப்பு, சொத்துக்குவிப்பு புகாரை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப் புத்துறை டி.எஸ்.பி. சம்பந்தத்தை குற்றவாளிகள் தரப்பு சாட்சியாக விசாரித்தது. அதற்கு பவானிசிங் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து ஜெயலலிதா தரப் பால் நீதிமன்றத்துக்கு அழைத்து வ‌ரப்பட்ட சாட்சிகளை பவானிசிங் குறுக்கு விசாரணை செய்தார்.

 

'சுதாகரனின் திருமணத்துக்கு நாங்கள் தான் செலவு செய்தோம். நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு நாங்கள் தான் சந்தா செலுத்தி னோம். சூப்பர் டூப்பர் டிவிக்கு நாங்கள் தான் கேபிள் ஆப்ரேட்டராக இருந்தோம்' என அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை பவானிசிங் குறுக் கிடாமல் அப்படியே பதிவு செய் தார். ஜெயலலிதா தரப்பு இறுதி வாதத்தை முடித்த மறுநாளே பவானிசிங் இறுதிவாத‌த்தை தொடங்கினார்.

 

வழக்கு முடியும் நிலையில் பவானிசிங், ''ஜெயலலிதாவின் 1,116 கிலோ வெள்ளிப் பொருட் களை வைத்துள்ள பாஸ்கரனை விசாரிக்க வேண்டும்'' என்று மனு போட்டார். ஆனால் மறுநாளே திமுக வழக்கறிஞர் சரவணன், ''பாஸ்கரன் இறந்து பல மாதங்கள் ஆகிறது. இறந்து போன ஒருவரை அரசு வழக்கறிஞர் விசாரிக்க ஆசைப்படுகிறாரே?'' என இறப்பு சான்றிதழை காண்பித்து கேட்டார். இதனால் கோபமடைந்த நீதிபதி குன்ஹா, 'இனியும் காலம் தாழ்த் தாமல் இறுதிவாதத்தை தொடங்க வேண்டும்' என பவானிசிங்குக்கு உத்தரவிட்டார்.

 

ஆனால் பவானிசிங் நீதிமன்றத் தில் ஆஜராகாமல், 'தனக்கு உடல் நிலை சரியில்லை' எனக்கூறி மருத்துவ சான்றிதழை அனுப்பி னார். ஆனால் அதில் மருத்துவரின் பெயரோ, முகவரியோ, தேதியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதைப் பார்த்த குன்ஹா, பவானி சிங்கின் 2 நாள் ஊதியமான ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை அபராத மாக விதித்தார். கர்நாடக நீதிமன்ற வரலாற்றில் நீதிமன்றத்தில் ஆஜ ராகாமல் இருந்த‌தற்காக அபராதம் பெற்ற முதல் அரசு வழக்கறிஞரான பவானிசிங் மறுநாள் கோபத்தோடு வந்தார்.

‘என்னால் நீண்ட நேரம் நின்று கொண்டு வாதிட முடியாது. எனது ஜூனியர் முருகேஷ் எஸ்.மரடி வாதிடுவார்' எனக்கூறி விட்டு அமர்ந்தார். இறுதிவாதம் முடிந்த நிலையில் ஜெயலலிதா தரப்பை குற்றவாளிகள் என குன்ஹா தீர்ப்பளித்தார் போது, 'ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க நான்தான் காரணம்' என பவானிசிங் பேட்டி அளித்தார்.

 

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் போது, அதிலும் பவானிசிங் ஆஜராக வேண்டுமென தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே நாளில் அரசாணை தயாரித்தது. இதை பவானிசிங்கிடம் கொடுப்பதற்காக அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்ற போது கடிதத்தை வாங்க மறுத்தார்.

மறுநாள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என எதிர் பார்த்த நிலையில் நீதிமன்றத்துக்கு வந்த பவானிசிங், 'எனது நியமனத் துக்கான அரசாணை வழங்கப் படாததால் ஆஜராக முடியாது' என எழுந்து சென்றார்.

 

மேல்முறையீட்டில் பவானிசிங் அதிக ஊதியம் கேட்டு மிரட்டிய போதும், திடீரென ராஜினாமா கடிதத்தை நீட்டிய போதும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் அதிர்ந்தனர்.

 

பவானிசிங்கை நீக்க வேண்டும் என திமுக மீண்டும் மனுதாக்கல் செய்தது. இதனை பவானிசிங் கண்டுகொள்ளாமல் இருக்க ஜெய லலிதா தரப்பு அவருக்காக பெரிய வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து லட்சக்கணக்கில் செலவு செய்தது. திமுக இடைவிடாமல் போராடி யதை தொடர்ந்து கடந்த 27-ம் தேதி பவானி சிங்கை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப் போது, 'எனக்கு விடுதலை கிடைத்து விட்டது' என நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் உற்சாக மாக தெரிவித்தார் பவானி சிங்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் வழக்கறிஞராக ஆஜரான ஜோதியின் ஜூனியர் சந்திரசேகர் 2001-ல் அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜோதியின் சொல்படி நடந்துகொண்ட சந்திர சேகரின் செயல்பாட்டை காரணம் காட்டியே வழக்கு பெங்களூரு வுக்கு மாற்றப்பட்டது. அதே போல 2014-ல் அதிமுக ஆட்சியால் நியமிக்கப்பட்ட பவானி சிங்கை நீக்கியது உச்ச நீதிமன்றம்.

 

முருகேஷ் எஸ். மரடிக்கு அநீதி

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த‌ பவானி சிங்குக்கு ஜூனியராக முருகேஷ் எஸ்.மரடி நியமிக்கப்பட் டார். நீதிபதி குன்ஹா முன்னி லையில் பவானிசிங்குக்கு பதிலாக 10 நாட்களுக்கும் அதிகமாக‌ வாதாடி, ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கி தந்தவர்.

கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் ஜூனியர் வழக்கறிஞராக தொடர்ந்த மரடிக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இவ்வழக்கில் இருந்து மரடி விலகினார்.

 

யார் இந்த கிர்ஜி?

மரடியின் விலகலுக்கு பிறகு சதீஸ் கிர்ஜி என்பவரை புதிய ஜூனியராக பவானிசிங் சேர்த்துக் கொண்டார். எவ்வித உத்தரவும், நியமன ஆணையும் இல்லாமல் மேல்முறையீட்டில் ஆஜரான இந்த கிர்ஜி ஒரு அரசு வழக்கறிஞ ரைப் போல செயல்பட்டார். “யார் இந்த கிர்ஜி?” என பவானிசிங்கிடம் கேட்டால், “உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்பார். கர்நாடக உயர்நீதிமன்ற வட்டார‌த்தில் விசாரித்தால், “யார் இந்த கிர்ஜி?” என அதே கேள்வியை திரும்பி கேட்கிறார்கள்.

 

(இன்னும் வருவார்கள்)

 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article7238385.ece

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: வழக்கை வலுப்படுத்திய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்
 

 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தக்க ஆதாரங்களுடனும், உரிய ஆவணங்களுடனும் வலுவாகக் கட்டமைத்தது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்தான்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஐஜி லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். அப்போது ஜெயலலிதா, ‘இவ் வழக்கை தனி நபரான லத்திகா சரண் விசாரிக்கக் கூடாது' என கோரியதைத் தொடர்ந்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசார ணைக்கு ஏற்றது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐஜியாக இருந்த வி.சி.பெருமாள் விசாரணையை தொடங்கி ஜெய லலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி மீது முதல் தகவல் அறிக் கையை பதிவு செய்தார்.

 

 

சூத்திரதாரி நல்லம்ம நாயுடு

ஜெயலலிதா வழக்கினை வடிவ மைத்த முக்கிய‌ சூத்திரதாரி நல்லம்ம நாயுடு தான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், சுமார் 11 ஆண்டுகள் இவ்வழக்கை நடத்தினார். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி. நல்லம்ம நாயுடுவின் கீழ் 16 காவல் ஆய் வாளர்கள் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் விசார ணையில் இறங்கினர். ஜெயலலிதா உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கு களை முடக்கி, தமிழகம் முழுவது முள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை இந்த குழு ஆய்வு செய்தது. இந்நிலையில் டான்சி நில வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் 7.12.1996 அன்று ஜெயலலிதாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அடுத்த கணமே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நுழைந்த நல்லம்ம நாயுடு தலைமையிலான போலீஸார் 12.12.1996 அன்று மாலை வரை சோதனையிட்டனர்

 

கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட‌ நகை கள், ஆயிரக்கணக்கான சேலை களில் தொடங்கி செருப்புகள் வரை அனைத்தையும் அள்ளினர். வழக்கு தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான், தோட்டாதரணி, கங்கை அமரன், ராம்குமார் உட்பட 1,086 பேரிடம் விசாரித்து அதில் 259 பேரை அரசு தரப்பு சாட்சிகளாக சேர்த்தார் நல்லம்ம நாயுடு.

ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்க சென்னை சிங்கார வேலர் மாளிகையில் சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க 17,500 பக்க கோப்புகளையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சவுந்திர ராஜன் விசாரணை அதி காரியாக செயல்பட்டார். விசாரணை அதிகாரியும், அரசு தரப்பு வழக்கறிஞரும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டதால் வழக்கு 2003-ல் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த போது, ஓய்வு பெற்ற நிலையில் வீட்டில் இருந்த நல்லம்ம நாயுடு மறு அமர்த்தல் செய்யப்பட்டார்.

நல்லம்ம நாயுடு நாள் தவறாமல் நீதிமன்றத்துக்கு வருவார். 2011-ல் திமுக ஆட்சி முடிந்து, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நல்லம்ம நாயுடு விலகினார்.

 

18 ஆண்டுகால சம்பந்தம்

இவ்வழக்கில் அதிக அனுபவம் உள்ளவர் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் டி.எஸ்.பி. சம்பந்தம். இவ்வழக்கின் விசாரணை அதிகாரி யாக நியமிக்கப்பட்டதில் இருந்து தீர்ப்பு வெளியான நாள் வரை ஒரு நாள் விடாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆஜரானார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திமுக, அதிமுக என ஆட்சிகள் மாறும் போது அதிகாரிகள் மாற்றப்பட்டு வந்த நிலையில் மாறாத ஒரே அதிகாரி சம்பந்தம்.

ஜெயலலிதா வழக்கில் 18 ஆண்டுகளாக இடைவிடாமல் பணி யாற்றினார். வழக்கு தொடர்பான அனைத்தையும் தினமும் தனது டைரியில் பதிவு செய்வது சம்பந்தத் தின் வழக்கம்.

 

ஏறக்குறைய 45 டைரிகளை எழுதி முடித்துள்ள சம்பந்தத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் தாக்கியது. எனினும் வழக்கின் தன்மையை கருதி நடுங்கிக் கொண்டே நீதி மன்றத்தில் அமர்ந்திருந்தார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரியான சம்பந்தம் ஒரு கட்டத்தில் குற்றவாளிகள் தரப்பின் 99-வது சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்தார். இதை வலுவாக பிடித்துக் கொண்டே வழக்கில் மூன்றாம் தரப்பாக திமுக நுழைந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை காலத்தில் முன்னுரை எழுதியதில் தொடங்கி கடந்த 11-ம் தேதி முடிவுரை எழுதப்பட்டது வரை அனைத்து அம்சங்களும் அறிந்த சம்பந்தம், விரைவில் நூல் ஒன்றை எழுத இருக்கிறார்.

 

 

வழக்கை முடித்த குணசீலன்

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐஜியாக இருந்த குணசீலன் 2011-ல் சொத்துக்குவிப்பு வழக் கின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிய 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் அதிமுக ஆட்சியில் மீண்டும் பணி அமர்த்தல் மூலமாக இவ்வழக்கின் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப் பட்டார். கடந்த 4 வருடங்களாக சொத்துக்குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எங்கு பயணித் தாலும் அங்கு முதல் ஆளாக இருப்பார். அன்றாட விசாரணையை மிக கவனமாக குறிப்பெடுக்கும் குணசீலன் விசாரணையின் போக்கை துல்லியமாக கணிப்பார்.

கியூ பிரிவு போலீஸில் பணி யாற்றிய அனுபவம் உள்ளதால் நீதிமன்றத்தின் அன்றாட செயல் பாட்டை மிக நுட்பமாக பதிவு செய்து மேலிடத்துக்கு தகவல் சொல்லுவார். அதிலும் குறிப்பாக மேல்முறையீட்டில் நீதிபதி குமார சாமியின் அணுகுமுறையில் ஆரம் பித்து, பவானிசிங் ஏற்படுத்திய பிரச்சி னைகள் வரை அனைத்தையும் முன்னின்று தீர்த்து வைத்தார்.

 

ஒருவேளை பவானிசிங்கை குணசீலன் சரியாக கையாளாமல் விட்டு இருந்தால், மேல்முறையீட்டு விசாரணை இன்னும் முடிந்திருக்காது என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் சொல்கின்றனர்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம்பதித்த முக்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்

 

1.வி.சி.பெருமாள் (1996 ஒரு மாதம் மட்டும்)

 

2.நல்லம்ம நாயுடு, சம்பந்தம் உள்ளிட்ட குழுவினர் (1996 முதல் 2001 வரை)

 

3.சவுந்திர ராஜன் மற்றும் குழுவினர் (2001 முதல் 2006 வரை)

 

4.நல்லம்ம நாயுடு, துக்கை யாண்டி (2006 முதல் 2011 வரை)

 

5. குணசீலன், சம்பந்தம் (உதவியாளர்கள்: மோகன், ராம சந்திர மூர்த்தி) (2011 முதல் தற்போது வரை)

 

(இன்னும் வருவார்கள்)

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7241150.ece

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: தாடி வளர்த்த வழக்கறிஞர்களும், ஓடி உழைத்த நீதிமன்ற ஊழியர்களும்
 

 

ஜெயலலிதா கடந்த 19 ஆண்டு களாக சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் நடத்த வில்லை. வழக்கில் இணைக்கப் பட்டிருந்த தனியார் நிறுவனங் களின் சொத்துகளை விடுவிக்கக் கோரும் வழக்கு, அரசு வழக்கறி ஞர் பவானிசிங் நியமனம் தொடர் பான வழக்கு ஆகியவற்றுக்கும் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். இதனால் நீதிமன்றத் தில் எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் கூட்டம் அலைமோதும்.

 

 

தினமும் 500 கிலோ எடையுள்ள ஆவணங்களை கச்சிதமான பைகளில் அடுக்கி, 50-க்கும் மேற் பட்ட வழக்கறிஞர்கள் சுமந்து வருவார்கள்.

சேலத்தில் உள்ள‌ பிரபலமான வழக்கறிஞர் குடும்பத்தை சேர்ந்த குலசேகரன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில்,கிரிமினல் வழக்கு களில் அனுபவம் வாய்ந்தவர். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்திலின் நண்பர் என்பதால் 2013-ல் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களுக்காக களமிறக்கப்பட்டார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன் னிலையில் வழக்கு வேகமெடுத்த போது, சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் கோடிக்கணக் கான சொத்துகளை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

 

 

மூல வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருந்ததால், இதை விசாரிக்காமலேயே பால கிருஷ்ணா ஓய்வு பெற்றார். அடுத்து வந்த நீதிபதி குன்ஹாவும் இதே பாணியை பின்பற்றிய போது, “ தனியார் நிறுவனங்களின் மனுக்கள் மீது தீர்ப்பு அளித்த பிறகு சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும்''என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வேகமாக விசாரித்த குன்ஹா, `வழக்கை தாமதப்படுத்த முயற்சிக் கும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தார்.

 

 

இதனிடையே குலசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997-ல் தனியார் நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தூசு தட்டினார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 2014-ல், ''மூல வழக்கை முடிக்கும் முன் பாகவே தனியார் நிறுவனங்களின் வழக்கை முடிக்க வேண்டும்'' என வழிகாட்டுதல் வழங்கியது. எனவே விசாரணையை முடுக்கி விட்ட குன்ஹா,' தனியார் நிறுவனங் களின் சொத்துகள் அனைத்தும் ஜெயல‌லிதா வாங்கியது' என தீர்ப்பளித்தார்.

 

 

இதை எதிர்த்து 6 நிறுவனங் களும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. தனியார் நிறுவனங்களுக்காக குலசேகரனே வாதிட்டார்.

2009-ம் ஆண்டு ஜெயலலிதா வழக்கில் நவனீதகிருஷ்ணன் ஆஜராகிக் கொண்டிருந்த போது அவருக்கு ஜூனியராக பெரம்ப லூரை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர் செல்வம் பெங்களூரு வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதா தரப்பில் ஆஜரான பி.குமார், நாகேஸ்வர ராவ் உள்ளிட்டவர்களுக்கும் ஜூனியராக செயல்பட்டார். இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படி யெடுத்து, முறையாக‌ கோப்புகள் தயாரிக்கும் பணியை முழுமையாக பார்த்துக்கொண்டார்.

 

பெங்களூருவாசியாகவே மாறி விட்ட பன்னீர் செல்வத்தை திருமணம் செய்துகொள்ள பலரும் வலியுறுத்தினர். ஜெயலலிதா வழக் கில் இருந்து விடுதலை ஆகாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என 5 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லி வந்தார். இந்நிலை யில் தற்போது விடுதலையாகி யுள்ளதால் பன்னீர் செல்வத்துக்கு பெண் பார்க்கும் படலம் வேகமாக நடந்துவருகிறது.

 

ஜெயலலிதா பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த நேரத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட அமைச் சர்கள் தாடி வளர்த்தனர். அதே போல இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் செல்வக்குமார், திவாகர் இருவ‌ரும், ஜெயலலிதா விடுதலையாகும் வரை தாடி வளர்த்தனர்.

 

பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தலைமை நீதிமன்ற அதிகாரியான‌ சுந்தர ராஜ் பிச்ச முத்து, 2003-ல் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப் பட்ட போது இவ்வழக்கின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தமிழ், கன்னடம், ஆங்கிலம் மூன்று மொழியும் எழுத, படிக்கத் தெரியும். பல ஆயிரக் கணக்கான ஆவணங்களை மொழிபெயர்த்ததில் தொடங்கி, நீதிபதி கேட்கும்போது எடுத்து தருவது வரை அனைத்தையும் கவனித்து கொண்டார்.

 

பிச்சமுத்து

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னுரை முதல் முடிவுரை வரை அறிந்தவர் என்பதால் அதிமுக தரப்பும், திமுக தரப்பும் பிச்சமுத்துவை வட்டமடித்துக் கொண்டே இருப்பார்கள். அனை வரிடமும் நட்பாக பழகும் பிச்ச முத்து நீதிபதிக்கு நெருக்கமானவர் என்பதால் உளவுத்துறை அதிகாரி கள் 24 மணி நேரமும் கண்காணிப் பார்கள். 2006-ம் ஆண்டு பிச்சமுத்து பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

 

கால நேரம் பார்க்காமல் விடு முறை நாட்களிலும் பணியாற்றி னார். கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பிச்சமுத்து ஜெயலலிதாவின் வழக்கில் இருந்து விடுபட்டாலும், குன்ஹாவுக்கு மலை போல வந்து குவிந்த கடிதங்களை படித்து காட்டுவதற்காக நீதிமன்றத்துக்கு சில நாட்கள் வந்தார்.

கடந்த ஜனவரியில் மேல்முறை யீட்டு விசாரணை தொடங்கிய போது நீதிபதி குமாரசாமி, பதிவாள ரிடம் பேசி பிச்சமுத்துவை மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து, தன்னுடன் வைத்து கொண்டார். தீர்ப்பு எழுதப்பட்ட போதும் நீதிபதி யுடனே இருந்தார் பிச்சமுத்து.

 

தீர்ப்பு இறுதி செய்யப்பட்ட நாட்களில் தொடர்பு எல்லைக்கு அப்பால் பறந்தார். தீர்ப்பு வெளி யான மறுநாளே பெங்களூருவில் உள்ள பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிச்சமுத்து வுக்கு வெற்றிகரமாக‌ முழங்கால் அறுவை சிகிச்சை நடந்து முடிந் துள்ளது.

 

(இன்னும் வருவார்கள்)

 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7246808.ece

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெ.வுக்கு எதிராக களமிறங்கும் சமூக சேவகர்கள்

டிராபிக் ராமசாமி| கோப்புப் படம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற‌த்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதில் தேமுதிக-வின் வழக்கறிஞர் பிரிவும் பாமகவின் வழக்கறிஞர் பிரிவும் தீவிரமாகவே களத்தில் குதித்துள்ளன. ஜெயலலிதா முதல்வர் பதவியேற்க தடைவிதிக்க வேண்டும் என தேமுதிக தொடுத்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதே போல கர்நாடகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்னி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த அந்த மாநில உயர் நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

 

 

இதனிடையே, 'ஜெயலலிதா வின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த முறையே தவறானது. மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என்பது போன்ற வழிமுறைகள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது' என மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக குடியரசு தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற‌ தலைமை நீதிபதி ஆகியோரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதா வுக்கு எதிராக சமூக ஆர்வ லர்கள் சிலர் தீவிரமாக களமிறங் கியுள்ளனர்.

 

ஓயாத டிராபிக் ராம‌சாமி

அரசுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் அஞ்சாமல் சட்டப் போராட்டம் நடத்தும் மூத்த குடிமகன் டிராபிக் ராமசாமி இவ்வழக்கிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். நீதிபதி குன்ஹா முன்னிலையில் இறுதிக்கட்ட விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, தன்னை மூன்றாம் தரப்பாக சேர்க்க வேண்டும் என மனு போட்டார். அதை ஏற்க மறுத்த குன்ஹா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிடுமாறு வழிகாட்டினார்.

அதன்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியபோது அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டார். இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிய டிராபிக் ராமசாமி, தலைமை நீதிபதி தத்து லஞ்சம் வாங்கியிருப்பதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி குமாரசாமியை சந்தித்து, 'ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை போதாது. அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என மனு அளித்தார்.

 

இந்நிலையில், “சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக் கில் கர்நாடக உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்''என உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை ( மனு எண்: 17027) டிராபிக் ராமசாமி கடந்த 19-ம் தேதி தாக்கல் செய்துள்ளார். இம்மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கும் வேளை யில் தனது உதவியாளர் பாத்திமா மூலம் நேற்று முன் தினம் இன்னொரு மனுவையும் (மனு எண்: 17418) தாக்கல் செய் துள்ளார். மேலும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக குடியரசு தலைவர், பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

 

கர்நாடகத்தில் 'நரசிம்ம மூர்த்தி'

பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறி ஞருமான நரசிம்ம மூர்த்தி திருப்பதி தேவஸ்தானத்துக்கு எதிராகவும் திருவனந்தபுரம் பத்மநாப கோயிலுக்கு எதிராகவும் தொடுத்த வழக்குகள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவை. கர்நாடக அரசுக்கு எதிராகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவரும் நரசிம்ம மூர்த்தி, ஜெயலலிதா வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டதில் இருந்து நீதிமன்றத்துக்கு வருகிறார். வழக்கின் போக்கு குறித்த தகவல்களை திரட்டிய அவர், நேரடியாக விசாரணையில் குறுக்கிட்டதில்லை.

 

எனினும் ஜெயலலிதா வழக்கு விசாரணையால் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கர்நாடக அரசுக்கு எவ்வளவு செலவு ஆகியுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டார். இதுவரை சுமார் ரூ.6 கோடி செலவாகி இருக்கிறது என தெரியவர, 'கர்நாடக அரசு இதனை ஜெயலலிதாவிடம் வசூலிக்க வேண்டும்' என்று அம்மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதினார்.

 

இதேபோல “ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க தற்போது கர்நாட காவுக்கு எவ்வளவு செலவு ஆகியுள்ளது?''என நரசிம்ம மூர்த்தி கேட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நரசிம்ம மூர்த்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தீர்ப்பில் பல அடிப்படை தவறுகள் இருப்பதாக மூத்த வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் பத்திரிகையாளர்களும் தெரிவித் துள்ளனர்.

 

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசும் சுப்பிரமணியன் சுவாமியும் அன்பழகனும் அரசியல் செய்து வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் மேல்முறையீடு செய்தால் நிச்சயம் அரசியல் உள்நோக்கம் இருக்கும். எனவே இவ்வழக்கில் உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு (தத்து) தயக்கம் இருந்தால் நானே மேல்முறையீடு செய்கிறேன். மன்மோகன் சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஊழலுக்கு எதிரான இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய எனக்கு முழு உரிமை இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக தத்து இருந்தபோது நரசிம்ம மூர்த்தி அவருக்கு எதிராக பல புகார்களை எழுப்பி இருக்கும் நிலையில், இந்த கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா வுக்கு வழங்கப்பட்டுள்ள‌ விடு தலையை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் நீதித்துறை வட்டாரத்தின் கவ‌னத்தை பெற்றுள்ளது.

 

 

(இன்னும் வருவார்கள்)

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7250364.ece

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: 20 ஆண்டுகளாக ஜெ.வை அச்சுறுத்தும் சுப்பிரமணியன் சுவாமி, அன்பழகன்
 

 

ஏப்ரல் 1-ம் தேதி, 1995-ம் ஆண்டு அப்போதைய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, `ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்” என அதிர வைத்தார்.

 

 

1991-96 காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடர அனுமதியளிக்க ஆளுநர் சென்னாரெட்டி காலம் தாழ்த்தினார். இதையடுத்து சுப்பிரமணியன் சுவாமி உயர் நீதிமன்றத்தை அணுகி, அனுமதியளிக்க காலக்கெடு விதித்தார். இதனால் அதிர்ந்த சென்னாரெட்டி, `என்ன முடிவெடுக்கலாம்?' என பிரதமர் நரசிம்ம ராவுடன் ஆலோசித்தார். அப்போதைய காங்கிரஸ் தலைமை பச்சைக்கொடி காட்டியது.

 

1996-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் சொத்துக்குவிப்பு வழக்கு சூடுபிடித்தது. 2001-ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதால் வழக்கு தடம் மாற, 2003-ல் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி குன்ஹா முன்னிலையில் இறுதிவாதம் முடிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு பிறகு சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கில் தடம்பதித்தார்.

 

மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடங்கியதும், சுவாமி வழக்கின் முதல் புகார்தாரரான‌ தன்னை மூன்றாம் தரப்பாக சேர்க்கக் கோரினார். எழுத்துப்பூர்வமாக ஆவணங்களை தாக்கல் செய்ய மட்டுமே அனுமதி கிடைத்தது.

தனது 14 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தில், `நீதிபதி குன்ஹா வழங்கிய தண்டனையை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.

ஆனால் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை நிரபராதி என விடுதலை செய்த‌தால் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். `இப்படி ஒரு தீர்ப்பு வருமென முன்கூட்டியே தகவல் வந்தது. நான் நீதி வெல்லும் என நம்பினேன்' என சொன்னார். நீதிமன்றத்தில் வாதிட்டதைவிட ட்விட்டரில் திரியை கொளுத்திப் போடும் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது மேல்முறையீட்டுக்கான அஸ்திவாரத்தை கையில் எடுத்துள்ளார். ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி இருக்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, `இன்னும் 150 நாட்கள்' என ஏதோ புது கணக்கைத் தொடங்கியுள்ளார்.

 

அலுக்காத அன்பழகன்

சொத்துக்குவிப்பு வழக்குக்கு சுப்பிரமணியன் சுவாமி பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பிருந்தே, `ஜெயலலிதாவின் ஊழல்கள்' என கருணாநிதி உடன்பிறப்புக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்டது. டான்சி வழக்கு உட்பட அனைத்து வழக்கிலும் தப்பிய ஜெயலலிதா, இவ்வழக்கால் பெரும் இன்னல்களை சந்தித்தார்.

சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, தீர்ப்பை நெருங்கும் வேளையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து மீண்டும் சாட்சிகள் விசாரணை ஆரம்பித்த போது 70-க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சிகள் பல்டி அடித்தனர்.

அரசு வழக்கறிஞரும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக மாற, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என அன்பழகன் உச்ச நீதிமன்றத்துக்கு போனார். 2003-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி அன்பழகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.என்.வரைவா, ஹெச்.கே.சீமா அதே ஆண்டு நவம்பர் 18-ம் தேதி வழக்கை பெங்களூருவுக்கு மாற்றினர்.

 

அரசுத்தரப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டு, நீதிபதி ஏ.எஸ். பச்சாப்புர்ரே முன்னிலையில் வழக்கு மீண்டும் புதிதாக தொடங்கியது. லட்சக்கணக்கான பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு, சாட்சிகள் விசாரணை தொடங்கியது. குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விளக்கம் பெறுதல் உள்ளிட்ட பணிகள் முடிந்த நிலையில் ஆச்சார்யா திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து வந்த அரசு வழக்கறிஞர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால், மீண்டும் அன்பழகன் வழக்கில் நுழைந்தார்.

பவானிசிங்கை நீக்கக் கோரியும், வழக்கில் தன்னை மூன்றாம் தரப்பாக சேர்க்கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது. பவானிசிங் வழக்கில் நீடித்தாலும், அன்பழகன் மூன்றாம் தரப்பாக உள்ளே நுழைந்தார். ஜெயலலிதாவுக்கு எதிராக சுமார் 500 பக்கங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார்.

 

குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா மேல்முறையீடு செய்த போதும் அன்பழகன் விடாமல் துரத்தினார். நீதிபதி குமாரசாமி அன்பழகனை வழக்கில் அனுமதிக்க மறுத்து, சுப்பிரமணியன் சுவாமியை சேர்த்துக் கொண்டார். இதையடுத்து அன்ப‌ழகன் உச்ச நீதிமன்றத்தை அணுகியதால் கடந்த 27-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து அன்பழகனும், மீண்டும் அரசு வழக்கறிஞரான ஆச்சார்யாவும் ஜெயலலிதாவுக்கு எதிராக எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தனர். கால அவகாசம் வழங்கப்படாமல், பக்க அளவு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட ஒர் அம்சத்தைக் கூட குமாரசாமி ஏற்கவில்லை.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள அன்பழகன் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். கர்நாடக அரசும், சொத்துக்குவிப்பு வழக்கின் மூலகாரணமான சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாவிட்டாலும் அன்பழகன் கட்டாயம் மேல்முறையீடு செய்யக்கூடும். அடுத்த தேர்தலுக்கான வேலைகளை விட, இவ்வழக்கை கவனிப்பதில் தான் கருணாநிதி மும்முரமாக இருக்கிறார் என்கிறார்கள் அன்பழகனின் வழக்கறிஞர்கள்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article7252545.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.