Jump to content

ஊடகவியலாளர் சிவராமின் பத்தாவது ஆண்டு நினைவுநாள் இன்று!


Recommended Posts

சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில்:-

sr%20new_CI.jpg



இலங்கையின் பிரதான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு  தினமாகும்.


பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவாக வாசிக்கப்பட்டன.

பத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990களின் நடுப்பகுதியில் இருந்து2001 வரை அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர். அதன்பின் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் நடைமுறைகளில் ஈர்க்கப்பட்டவராகி,  விடுதலைப் புலிகளின் படைத்துறை வெற்றிகள் ஈழப் போராட்டத்திற்கு வலுவை வழங்கும் என சிவராம் தனது எழுத்துக்களில் எழுதினார்.


தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்த அவர்  அரசாங்கத்தினாலும், அரசாங்க சார்புக் குழுக்களாலும் புலிகளின் ஆதரவாளராக, அனுதாபியாக, செயற்பாட்டாளராக பார்க்கப்பட்டு கடுமையான நெருக்கதல்களை சந்தித்து, இறுதியில் படைப் புலனாய்வாரள்கள், மற்றும் அரசசார்பு கூட்டு செயற்பாட்டாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிவராமுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் என்ற தமது விருதை வழங்கினர்.


இலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவாரமின் படுகொலை நடந்து ஒன்பது வருடங்கள் கடந்தபோதும் இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட அவரின் பின்பும் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 

சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில்:-

சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று 29ஆம் திகதி அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் நினைவு கூரப்படுகிறது.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில், மௌன வணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகளும் ஆவணப்பட வெளியீடும் நடைபெறவுள்ளன.

'சிவராமுடனான நாட்கள்' என்ற தலைப்பில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜா, 'ஊடகங்களின் சுதந்திரம்' என்ற தலைப்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர, 'இனிய நண்பன்' என்ற தலைப்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளரும் லேக்ஹவுஸ் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருமான சமன் வகவாராட்சி, 'தமிழ் அரசியல் போக்கும் ஊடகமும்' என்ற தலைப்பில் புதியவன் நாளிதழ் ஆசிரியர் எஸ்.சிவகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். ஊடகவியலாளன் சகலமும் அறிந்தவன்- சிவராமினுடைய கனவாகும் என்ற வகையில், தமிழ்ச் சமூகத்தில் ஊடகக் கல்வி வாய்ப்புகளும் சவால்களும் தலைப்பில் நிரைவுப் பேருரையினை கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீடத்தின் மொழிகள் மற்றும் தொடர்பாடல் துறையின் தொடர்பாடல் கற்கைகள் துறைத்தலைவர் கலாநிதி சி.ரகுராம் நிகழ்த்தவுள்ளார். வடக்கு கிழக்கு ஊடகவியலாளர் அமைப்புக்கள், இலங்கை சுதந்திர ஊடக இயக்கம், ஊடக செயற்பாட்டுக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறும் சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில்,  அனைத்து ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்

Link to comment
Share on other sites

நினைவு அகவணக்கம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவராம்: ஊடக ஆளுமையின் ஒப்பற்ற உறைவிடம்

2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி..பிற்பகல் 3 மணியிருக்கும்..

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் உடலம் நெல்லியடி மாயானத்தில் தீயிலே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்த உற்றார், உறவினர், நண்பர்கள், தமிழ் தேசிய செயற்பட்டாளர்கள், பத்திரிகை நண்பர்கள் என அனைவரும் வெறித்த பார்வையுடன் மனமெங்கும் வெறுமை நிறைந்தவர்களாக அந்த மயானத்தின் சுற்றாடலில் நின்றுகொண்டிருந்தார்கள்.

மயானத்தின் மூலையிலிருந்த வேப்பமரத்திற்கு கீழே என்னுடன் கொழும்பிலிருந்து கிளிநொச்சியூடாக வந்த பத்திரிகை நண்பர்களும் லண்டனிலிருந்து வந்த அனஸ் அண்ணாவும் மட்டக்களப்பிலிருந்து நடேசன் அண்ணாவின் உடலத்தோடு வந்திருந்த ஊடகவியலாளர்கள் சண். தவராசா மற்றும் துரைரட்ண ஆகியோரும் நின்றுகொண்டிருந்தனர். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாத மௌனம். "அடுத்தது யாரோ" என்று மனதுக்குள் மரண ஓலமிடும் கிழக்கின் தொடர்கொலைகளின் ஒப்பாரிகள் மண்டைக்குள் தனி அலைவரிசையில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த நேரம்.

"சண்ணும் துரையும் இனிக்கொஞ்சம் யோசிக்க வேணும் திரும்பி அங்க போறத பற்றி. அவன் போற போக்க பாத்தா ஒண்டொண்டா போட்டுத்தள்ளப்போறான் போல கிடக்கு. உதயகுமாருக்கும் பாதுகாப்பு இல்ல. எல்லாரையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வாறதுதான் புத்திசாலித்தனம்" என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் தளதளத்த குரலில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு மெதுவான குரலில் ஆலோசனை கூறினர். சண் அண்ணையும் துரையண்ணையும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு எதுவமே பேச முடியாதவர்களாக கனத்த நெஞ்சத்துடன் நின்றுகொண்டிருந்தனர். "குடும்பத்த கூட்டிக்கொண்டு வாறதுக்காவது போகவேணுமடா" என்று சண் அண்ணை சொல்ல, என்ன செய்வது என்று எந்த முடிவும் எடுக்க முடியாதவர்களாக - கொஞ்சம் கொஞ்சமாக - அங்கிருந்து கிளம்புகிறோம்.

நடேசன் அண்ணையின் இழப்பு எமக்கெல்லாம் பாரிய இடியாக விழுந்திருந்தாலும் அடுத்தது யாரை கருணா குழு போட்டத்தள்ளப்போகிறார்கள் என்று எண்ணிப்பார்க்கையில் அப்போதைக்கு மனதுக்கு நிம்மதி தந்த ஒரே விடயம், அந்த நேரம் சிவராம் அண்ணா வெளிநாட்டு பயணம் ஒன்றுக்கு சென்றிருந்ததாகும். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த நாள் முதல் அடுக்கடுக்காக ஒவ்வொரு நாளும் கிழக்கில் மூலைக்கு மூலை துப்பாக்கி சன்னங்கள் சல்லடை போட்ட சடலங்கள் வீசிக்கிடந்தாலும் ஊடகவியலாளர்களின் தலைகளின் மீது இவ்வளவு சர்வ சாதரணமாக துப்பாக்கி குண்டை இறக்குவார்கள் என்று எவரும் நம்பவில்லை. ஏனெனில், கிழக்கு ஊடகவியாளர்கள் பலரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா இயங்கிய காலத்தில், கருணாவுடன் மிக நெருக்கமாக அந்நியோன்யமாக பழகியவர்கள்.

ஆனால், நடேசன் அண்ணையின் படுகொலையுடன் சிவராம் அண்ணனின் மீதுதான் அனைவரின் கவனமும் திரும்பியது. வெளிநாட்டில் இருந்த சிவராம் அண்ணைக்கு எத்தனையோ தொலைபேசி அழைப்புக்கள். அவரது தமிழ் நண்பர்கள் மாத்திரமல்ல. கொழும்பிலிருந்த அவரது சிங்கள நண்பர்கள், பத்திரிகை சகாக்கள் என பலர் சிவராம் அண்ணாவை தொடர்புகொண்டு, "தயவுசெய்து இங்கே திரும்பி வரவேண்டாம். நிலமை படுமோசமாக உள்ளது. நடேசன் அண்ணையை போட்டுத்தள்ளினவங்களுக்கு உங்கள போடுறதுக்கு கன நேரமாகாது. பார்த்து, நிதானமாக கொஞ்சம் தணிஞ்சா பிறகு வாறதுதான் நல்லம்" என்று கெஞ்சாத குறையாக விண்ணப்பம் போட்டனர்.

ஆனால், சிவராம் அண்ணையோ அவருக்கே உரித்தான சிங்கக்குரலில் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, அங்கிருந்தே வீடியோ வடிவில் ஊடகமொன்றுக்கு செவ்வியளித்தார். அதாவது "என்னையோ நடேசனையோ போட்டுத்தள்ளுவதன் மூலம் மட்டக்களப்பு மக்களுக்காக போராடப்புறப்பட்டுவிட்டதாக கூறி புலிகள் அமைப்புடன் முரண்பட்டுக்கொண்ட கருணா எதையும் சாதிக்கப்போவதில்லை" என்று முகத்திலடித்தாற்போல கூறினார். அது மட்டுமல்ல. அடுத்த வாரமே கொழும்பில் வந்திறங்கினார்.

எனக்கு இன்றும் அந்த நாள் பசுமரத்தாணி போல நெஞ்சில் நிற்கிறது. வீரகேசரியின் ஆசிரியர்பீடத்திலிருந்து விளம்பர பிரிவின் ஊடாக வெளியே வந்த நான், பிரதான வாயிலின் ஊடாக உள்ளே வந்த சிவராம் அண்ணையை பார்த்து அப்படியே உறைந்துபோய்நின்றேன். எக்காள சிரிப்புடன் "என்ன நான் வரமாட்டன். இனி கட்டுரை எழுதுற வேலையில்லை எண்டு நினைச்சீராக்கும். இண்டைக்கு இரவுக்கு வெடி இருக்கு பாரும்" என்று சொல்லிட்டு உள்ளே வந்தார். எனக்கு மட்டுமல்ல அலுவலகத்தில் அவரை பார்த்த எல்லோருக்கும் ஆச்சரியம்தான்.

அன்று இரவு, தலையங்கம் போடச்சொன்ன கட்டுரையின் பெயரே, "நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி" அவர் சொல்ல சொல்ல நான் எழுதிய அன்றைய கட்டுரையும் அடுத்தவாரம் எழுதிய "கருணா ஓடியது எதற்காக" என்ற கட்டுரையும் கிட்டத்தட்ட - என்னைப்பொறுத்தவரை - அவரது ஆயுளை தீர்மானித்துவிட்டன. தனது உற்ற நண்பன் நடேசனை இழந்த வேதனையும் அவர் உயிருக்கு உயிராக நேசித்த கிழக்கு மண் மீதான கொலைப்படலமும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே அவரைக்கொண்டு சென்றிருந்தாலும் மிக நிதானமாக பொறுப்பான சொற் பிரயோகங்களினால் கருணாவின் நடவடிக்கைகளை தனது கனதியான கட்டுரையின் மூலம் தீர்த்துக்கட்டினார். அது மட்டுமல்லாமல், கருணாவின் முட்டாள்தனத்தையும் முரட்டுப்போக்கையும் மக்களுக்கு தோலுரித்துக்காட்டினார். இவையெல்லாம், சிவராம் அண்ணையை பகையாளியாக பார்த்த கொலையாளிகளுக்கு மேலும் மேலும் இரத்தத்தை சூடேற்றியிருக்கும். உண்மையின் பக்கமிருந்து கிழக்கு மக்களுக்கு தெளிவேற்படமுனைந்த சிவராம் அண்ணையின் எழுத்துக்கள் நிச்சயம் அவர்களின் குறிக்கோளுக்கு குழிதோண்டியிருக்கும்.

கடைசியில் முடிவு என்ன என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

தேசியத்தின் மீது தீராத பற்றுறுதியையும் தமிழனுக்கே உரித்தான வீரத்தையும் கொள்கைகளாக கொண்டவர்கள் எல்லோரையும் மரணம்தான் அதிகம் காதலித்திருக்கிறது. இதில் சிவராம் அண்ணையும் விதிவிலக்கில்லாத கொள்கைவாதியாக இணைந்துகொண்டுவிட்டார்.

இன்று , 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி. சிவராம் அண்ணா கடத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நள்ளிரவு 12.30 மணிக்கும் பின்னர்தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சடலத்தை சோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். சுடப்பயன்படுத்திய துப்பாக்கி முதல்கொண்டு எப்போது சுட்டிருக்கலாம் என்ற நேரம் வரை கண்டுபிடித்தாயிற்று. ஆனால், நாட்டின் உயர்ந்த நீதிபரிபாலன அவையாக கருதப்படும் நாடாளுமன்ற கட்டடத்துக்கு 500 மீற்றர் தொலைவில் இழுத்துவந்து சுட்டுக்கொன்றுவிட்டு சென்ற கொலையாளியை மட்டும் பத்து வருடங்களாக சிறிலங்கா காவல்துறையினரால் கண்டுபிடிக்கமுடியவே இல்லை.

ஆனால், ரணிலின் ஆட்சியில் சிங்களத்தால் தத்தெடுக்கப்பட்ட கருணா மகிந்தவின் மடியிலும் தவண்டு விளையாடி இன்று மறுபடியும் ரணில் - மைத்திரி அரசின் அரவணைப்பிலும் சமத்தாக இருக்கிறார். மட்டக்களப்பு மக்களுக்காக புலிகளுடன் போரிட்டு அதிலிருந்து புறப்பட்டுவந்தவர், கொழும்பிலிருந்துகொண்டு சிங்களத்தில் பாடுகிறார். ஜனநாயகமெல்லாம் பேசுகிறார்.

மாலையின் நடுவிலிருந்த படத்திலுள்ள சிவராம் அண்ணனின் முகத்தில் படர்ந்துள்ள அந்த சிரிப்புக்கு எந்த அர்த்தத்தை பொருத்திப்பார்த்தாலும் சரியாகத்தானிருக்கிறது.

https://www.facebook.com/theivigan.panchalingam

 

11188190_10155567834030604_4531219836359

Link to comment
Share on other sites

நினைவு வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் மாற்று கருத்து மாணிக்கங்கள் கண்களில் இவர் தெரிவதில்லை ??
அப்படி என்ன கொடுமையை இவர் செய்தார் ?
 
 
அழ்ந்த இரங்கல்கள் 
இவருக்கு வெளிநாடு செல்லும்படி புலிகள் வற்புறுத்தியதாக கேள்விபட்டேன்.
உண்மைகளை இங்கிருந்துதான் எழுத வேண்டும் என்று சொன்னாராம்.
மரணத்தை எதிர்பார்த்துதான் இருந்தார். 
ஊடக துறைக்கு உயிரை கொடுத்து இருக்கிறார். 
 
அஞ்சலிகள் !
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த ஊடகவியலாளர், அமரர் சிவராம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கங்கள்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.