Jump to content

ஊரைப் பிரிந்து ஒன்பது வருடங்கள்: சம்பூர் மக்களின் அகதித்துயரம் எப்போது முடியும்?


Recommended Posts

Samboor%20displace_CI.JPG

 

 
சம்பூர் மக்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டு நேற்றோடு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டி கட்டைப்பறிச்சான் அகதிமுகாமில் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.
 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபங்களை ஏந்தி ஊருக்குத் திரும்பும் கனவு நனவாக வேண்டுமென வேண்டினர். அத்துடன் 10 என்ற வடிவத்திலும் தீபத்தை ஏற்றினர்.
 
கடந்த 2006ஆம் ஆண்டில் சம்பூரை இலங்கை அரச படைகள் கைப்பற்றியபோது அந்தக்  கிராம மக்கள் அகதி ஆனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மூதூரில் உள்ள அகதி முகாஙகளில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 
 
கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாங்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். 
 
மாற்று நிலங்களில் குடியேற மறுத்துள்ள மக்கள் தம்மை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
தங்கள் பூர்வீக நிலத்தை தவிர சொர்கத்திலும் குடியேற மாட்டொம் என்று தமது வாழ்வையே இந்த மக்கள் போராட்டமாக்கியுள்ளனர். 
 
இன்று திரும்புவோம் நாளை திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான் சம்பூர் முகாம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
கடந்த அரசால் முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்ட காணிகளை இரத்துச் செய்யும் வர்த்தமானியில் ஜனாதிபதி ஓரிரு நாட்களில் ஒப்பம் இட்டவுடன் சம்பூர் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
புதிய அரசாங்கத்தின் நிறைவேற்று சபையிலும் சம்பூர் மக்களை அவர்களின் பூர்வீக மண்ணில் மீள்குடியேற்றுவது தாடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் பிரதமரும் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
 
இதேவேளை சம்பூர் மக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்க வேண்டும் என்றும் அந்த மக்கள் பெரும் துன்பப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிலர் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு புலிச்சாயம் பூசுவதாகவும் சாடியிருந்தார்.
 
ஓரிரு நாட்களில் ஊர் திரும்பிவிடலாம் என்ற கனவுடன் சம்பூர் மக்கள் காத்திருக்கின்றனர். ஒன்பது வருடங்கள் பொறுத்திருந்து போராடிய மக்கள் நம்பிக்கையோடு அகதித்துயர வாழ்வை போராட்டமாக்கி காத்திருக்கின்றனர்.
 
 
சம்பூர் : குருதி வழியக்கொலையுண்ட நிலம் 2006.04.26 - சம்பூர் ப. சுஜந்தன்:-
 
Samboor%20child_CI.JPG

 

 
தொண்டைக்குளியில் கொடு விசம் உருட்டிக்கடந்த
ஒன்பது வருடங்களின் முன்னே
நேற்றைய இரவிலும் இன்றைய பகலிலும்
என்ன நடந்தது சொல்லுங்கள்
 
சித்திரைக்களிப்பில் புதுச்சட்டை வாசனை
தீர்ந்து போகாக்குழந்தைகள் உறங்கினர்
நாளைத்திருவிழாவுக்காய் கோயிலின் தெருக்கள்
தோரணக் கனவில் இருந்தன
பள்ளிச்சிறார்கள் நாளைப் புத்தகத்தை அடுக்கத்தொடங்கினர்
நாளைய வேலை நாளை உணவு
நாளைய சந்திப்பு நாளைய பயணம்
இப்படி எல்லோரிடத்திலும் ஏதேதோ நடந்தன
அல்லது நடந்திருக்கும் இல்லையெனில் நடந்திருக்கலாம்
 
உண்மையில் என்னதான் நடந்தது
கோடை இரவில்
பீரங்கிக் குண்டுகள் மழையெனப் பொழிந்தன
நீர்ச்சகதி வீதியெங்கிலும் சிவந்தே கிடந்தது
ஓலம் எங்கிலும் ஓலம்
அந்தோ
சரிந்து வீழ்ந்தது ஆயிரம் ஆயிரம் அற்புதக் கதைகளால்
அலங்கரிக்கப்பட்ட சூலத்துடையாளின்
அற்புதக் காளிகோயில்
 
குண்டு மழைதான் குளிருமா என்ன
கருகிச்சுருண்டனர் குழந்தைகள்
ஏந்த முடிந்ததைக் கைகளில் சுமந்து
வரிசை வரிசையாய் விழுந்தும் எழுந்தும்
பிணங்களைக் கடந்தும் தெருக்களில் சரிந்தது ஓர் கிராமம்
புதையல் நிலமொன்று மாண்டது
பாலருந்தக் குழந்தைகளின்றி
பருத்த முலையுடன் வரண்டு போனது
 
இப்போது ஒன்றுரைப்பேன்
அவர்கள் என் நிலத்தை
குருதி வழிய வழிய கொன்றனர்
பேரினப் பெரும் பூதங்கள் என் மண்ணை
அள்ளித் தின்றன
பச்சை வேலியும் உயர்ந்த அணைகளும்
அண்ணார்ந்து பார்க்கும் கம்பித்தூண்களும்
அவர்கள் பாட்டன் முப்பாட்டன் பூமியென்றெண்ணி
போட்டு முடித்தனர்
ஊரின் சனங்கள் ஒப்பாரி வைத்தனர்
ஓட்டைக் கொட்டிலில் ஒன்பது வருடங்கள்
அகதிச்சுமையில் அல்லல் கொண்டனர்
 
சொந்த மண்ணில் உடல் அழுகி
ஊனம் வடியும் கனவில் பலநூறு கண்கள் கரைந்தன
அனல் மின் நிலையமும் ஆயிரம் கதைகளும்
சம்பூர் மண்ணில் உலாவித்திரிந்தன
நிலமென்பது உயிர்ப்பிண்டம் ஒன்றின் உரிமை
நிலத்தைப் பறித்தல் கொடுஞ்செயல்
 
இதை நீவிர் அறிக
சித்தாத்தன் பெயரால் மண்பறிக்கும் கைகள்
மிருகத்துடையன அவ்வாறெனில்
நிலம் பறிப்பவனை இழுத்து வந்து
ஓர் அரச மரக்கிளையில் கைகளை நீட்ட வைத்து
தறித்தெறிக
சித்தாத்தன் என்றும் நிலத்தை விரும்புவதில்லை
 
நிலப் பேய்களே
வயிரெரிந்த இச்சொல்லை நீவீர் அறிக
என் பிள்ளைக்கு வன்முறையைக் கற்றுக்கொடுப்பேன்
ரெளத்திரம் பழக்குவேன்
மண்ணள்ளும் கைகளை தீயில் இடச்சொல்வேன்
இல்லையெனில் சுடச்சொல்வேன்
நீவீர் அறிக
இன்னும் என் பிள்ளை நிலமற்றலைதலை உணரவில்லை
 
சம்பூரில் இருந்து இலங்கை இரானுவத்தால் மக்கள் விரட்டப்பட்டு இன்றோடு 9 வருடங்கள் முடிகின்றன இன்னும் அதே அகதி வாழ்வும் ஊர்ச்சுமையும் தொடர்கிறது 
 
சம்பூர் ப. சுஜந்தன்
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.