Jump to content

”தலைவர் பிரபாகரன் வந்து சொன்னாலும் கேட்கமாட்டோம்” - மாவை சேனாதிராஜா உறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து சொன்னாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யமாட்டோம் என மாவை சேனாதிராஜா உறுதிபட கூறியுள்ளார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தமிழரசுக் கட்சியின் ஏகபோகம் அதிகரித்த நிலையில், ஏனைய கட்சிகள் புறக்கணிக்கப்பட தொடங்கியதும், கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது.

 

1429355920-8308.jpg

 

எனினும், பல வருடங்களாக இந்த கோரிக்கையை தமிழரசுக்கட்சி கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த நிலையில், இலங்கை வடக்கு முதல்வர் விக்னேஷ்வரனின் திடீர் எழுச்சியின் பின்னரான சூழலில், தமிழரசுக் கட்சியின் இருப்பிற்கு ஆபத்த நிகழலாமென்ற பரவலான கருத்துக்கள் எழத் தொடங்கியது.
 
இந்தநிலையில் சுவிஸிலுள்ள தமிழர் அமைப்பொன்றின் ஊடாக தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உள்நாட்டில் கூட்டமைப்பினருக்கு சட்ட சிக்கல் ஏற்படாதிருக்க தற்போது இயங்கு நிலையிலுள்ள விடுதலைப்புலி செயற்பாட்டாளர்களே இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர்.
 
கூட்டத்தின் ஆரம்பத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதிவின் அவசியத்தை மிக மென்மையாக முன்னர் விடுதலைப்புலிகளின் தீவிர அரசியல் செயற்பாட்டாளராக இருந்த ஒருவர் புரிய வைத்தார். எனினும், அதற்கு மாவை மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் இரண்டு தரப்பிற்குமிடையில் விவாதம் ஆரம்பமானது.
 
கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததால், தமது இறுக்கத்தை படிப்படியாக அதிகரித்து, மாவையை வற்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென மிரட்டல் பாணியில் கூறியுள்ளனர்.
 
இதனால் எரிச்சலடைந்த மாவை, “நீங்கள் என்ன இப்பிடி பேசுகிறீர்கள்?  தலைவர் கூட என்னோட இப்பிடி பேசியதில்லை” என முறையிட்டுள்ளார்.
 
தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டது, அதனால் அதன் சொற்படி நடக்க வேண்டும். கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்பது புலிகளின் விருப்பம் என உறுதியாக கூறியுள்ளனர்.
 
இந்த தர்க்கங்களின் இறுதியில், ”தமிழ் தேசிய கூட்டமைப்பை இப்போதைக்கு பதிவு செய்யும் எண்ணமில்லை. கூட்டமைப்பை பதிவு செய்யுமாறு உருவாக்கியபோதே சொல்லவில்லை. அதனால் உங்கள் தலைவர் வந்து சொன்னாலும் பதிவு செய்யும் திட்டமில்லை” என மாவை அடித்து கூறிவிட்டார். இது பற்றி இறுதி முடிவெடுப்பதானால் கட்சியுடன் கலந்தாலோசித்துதான் முடிவெடுக்க வேண்டுமென்றார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் இறுதி முயற்சியை, கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகளின் எஞ்சிய அணியினர் முன்னெடுத்தபோதும், அதுவும் தமிழரசுக் கட்சியின் விட்டுக் கொடுக்காத போக்கால் நிறைவேறாமல் சென்றுள்ளது.
 
சுவிட்சர்லாந்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் சரியான பதில். புலிவாலுகளுக்கு நல்ல அடி :D இவையள்தான் கெஞ்சின ஆக்கள் போலை கிடக்கு. இன்னும் காசு சேர்க்கிற பிளானை விடுற யோசனை இல்லப் போல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

”தலைவர் பிரபாகரன் வந்து சொன்னாலும் கேட்கமாட்டோம்”

 

இதை உண்மையா மாவை சொன்னவரோ.. சொல்லி இருந்தால்.. மக்களுக்கு முன்னால் மேடையில் சொல்லட்டும். மக்கள் வழங்க வேண்டிய தீர்ப்பை வழங்குவார்கள். இதுக்கெல்லாம்.. தலைவர் வரனும்.. உவையளுக்கு பாடம் எடுக்கனும் என்ற தேவையில்லை. மக்களை அந்தளவுக்கு விவேகமாக நடக்கக் கூடிய அளவுக்கு.. தலைவர் வழிநடத்தித் தான் சென்றுள்ளார். :):icon_idea:

Link to comment
Share on other sites

நாலு ஊர்வலத்துக்கு போனமா கொடியை ஆட்டினமா கொத்து ரொட்டி சாப்பிட்டமா என்டு இருக்காம இப்ப புலவாலுகள் கூட்டமைப்பு தலைமைக்கு ஓடர் போட வெளிக்கிட்டினமோ?
கூட்டமைப்பை என்ன செய்ய வேணும் என்டு சிந்திக்க முதல் இவை மக்களிட்ட அடிச்ச காசை திரும்ப மக்களிடம் கொடுப்பது பற்றி சிந்திக்கலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முன்னாள் செயற்பாட்டாளர், பின்னால் செயற்பாட்டாளர் இவர்கள்தான் புலத்தில் புலியை சொல்லி கொள்ளை அடிக்கும் பேர்வழிகள்.

இந்த கூட்டத்தோட பேசுவதற்க்கு மாவை சம்மதிச்சிருக்க கூடாது.

ஆனாலும் கொடுத்த பதில் நெத்தியடியாகவே இருக்கு.

நல்லவேளை விக்கியோட பேசியிருந்தால் செருப்படியே விழுந்திருக்கும்.

எனக்கு மாவை மீதான மதிப்பு இதன் பின் கூடியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முன்னாள் செயற்பாட்டாளர், பின்னால் செயற்பாட்டாளர் இவர்கள்தான் புலத்தில் புலியை சொல்லி கொள்ளை அடிக்கும் பேர்வழிகள்.

இந்த கூட்டத்தோட பேசுவதற்க்கு மாவை சம்மதிச்சிருக்க கூடாது.

ஆனாலும் கொடுத்த பதில் நெத்தியடியாகவே இருக்கு.

நல்லவேளை விக்கியோட பேசியிருந்தால் செருப்படியே விழுந்திருக்கும்.

எனக்கு மாவை மீதான மதிப்பு இதன் பின் கூடியுள்ளது.

பேசுறன் பேசுற மாதிரி பேசினால் 
மாவை புலிகொடியே பிடித்து ஆட்டுவார் என்பது திண்ணம்.
 
பதிவு செய்வது 
செய்யாது இருப்பது 
 
இதில் என்ன நன்மை தீமை உண்டு ?
 
எனக்கு என்னமோ முன்னாள் செயட்பாட்டால்ர்கள் இவர்கள் பதிவு செய்துவிடுவார்களோ ...?
என்று தயங்கித்தான் ....
இப்படி பிளான் பண்ணி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மாவையை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 
 
நல்லதை செய் என்றால் 
முடியாது என்பார் என்பது 
எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தது. 
 
தமிழர்கள் கட்சி பிரிந்து அடிபட்டால் உங்களுக்கு 
ஆகா ஓகோ என்று மகிழ்ச்சியாக இருப்பதாக 
பல திரிகளில் உங்கள் மகிழ்ச்சியை காட்டி வருகிறீர்கள்.
 
முன்னாள் செயட்பாட்டாலர்கள் ....
மாவையுடன் பிரிந்தால் பாதிப்பு அதிகம் இல்லை.
திட்டமிட்டு உள்ளூரில் பிரிவை ஏற்படுத்தினால் ...?
பாதிப்பு நிச்சயம் உண்டு.
நீங்கள் வந்து விசில் அடித்து போவீர்கள்.
 
இவர்கள்(மாவை) உண்மையான மன நிலை அறிய 
ரோ இந்த முன்னால்களை வைத்து பேசியிருக்கலாம். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை..

 

நல்லவிடயத்தைத்தானே கேட்கிறார்கள்...

கெஞ்சுகிறார்கள் என்றே வைத்தாலும்

தமிழர்களின் விருப்பு சார்ந்து தானே பேசுகிறார்கள்....

 

அப்படியிருக்க

எதற்கு பணம்

கொத்துரொட்டி

கொள்ளை.....?

 

இப்பொழுதெல்லாம் பிரபாகரன் வந்துகேட்கட்டும் என்று சவால்விடுவது

அதி உச்ச வீரமாக வளர்ந்து வருகிறது

அதற்குள் மாவை ஐயாவுமா...?

நல்லவளர்ச்சி :(

பாராட்டுக்கள் மாவை ஐயா.. :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் பிரபாகரன் வந்துகேட்கட்டும் என்று சவால்விடுவது

அதி உச்ச வீரமாக வளர்ந்து வருகிறது

அதற்குள் மாவை ஐயாவுமா...?

நல்லவளர்ச்சி :(

பாராட்டுக்கள் மாவை ஐயா.. :(  :(  :(

 

மாவை  ஒரு மதில் மேல் பூனை. மக்கள் இவர்களைப் பற்றி நன்கே அறிந்துள்ளார்கள். சந்தர்ப்பத்திற்கு பக்கம் தாவ மாவை மட்டுமல்ல.. தமிழரசுக் கட்சி கிழடுகள் கூடாரம் பின் நிற்காது. இன்னும் அதுங்க ஹிந்திய விசுவாசத்தில்.. சிங்கள எஜமானத்தை அதிகம் நம்புகின்றன. :D:lol:

இப்ப விளங்கனும்.. இதுங்கள ஏன் ஒன்றென்றா போட்டுக் கொண்டு வந்தது என்று. இப்ப கூட்டமா விட்டிருந்தால்... எல்லாம் ஒன்றாச்  சேர்ந்து... தமிழனின் கோவணத்தை உரிந்து சிங்கக் கொடி வரைந்திருக்குங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்வதில் ஒரு நன்மையும் இல்லை தீமையும் இல்லை.

சுரேஸ் பிரேமச்சந்திரன் போன முறை தொத்துப் பறியில கொஞ்ச வாக்கு வித்தியாசத்தில எம் பி ஆனவர்.

இந்த முறை சீட்டும் குறையுது, ஐங்கரநேசன் இறங்கினா - அதோ கெதிதான். ஆகாவேதேன் ஆள் தமிழரசுக் கட்சி முதுகில சவாரி செய்ய ஓடுப்பட்டுத்திரியுது.

இப்போ இருக்கும் ஒற்றுமை பதிவுசெய்தா உடனே டபுள் ஆகிவிடுமா?

பதிவு செய்யாமல் இருந்தால் ஒரு ஜனநாயக பல்லினத்துவம் ஆவது இருக்கும்.

கூட்டமைப்புக்குள்ளும் மக்களுக்கு யாரை ஒதுக்குவது யாரை விடுவது என்று ஒரு தெரிவு இருக்கும்.

பதிவு செய்தால் - ஒரு கட்சி, ஒரு கொள்கை, ஒன்றே தேவன் என்றாகி விடும். இதற்க்குப் பேர் ஒற்றுமை இல்லை - சர்வாதிகாரம்.

Link to comment
Share on other sites

"தமிழரசு கட்சி தன்னுடைய சொந்த முகத்திலா தமிழ் மக்களை எதிர்கொண்டு வருகின்றது? எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்துவரும் எந்தவொரு கட்சியும் தங்களின் சொந்த முகம் பற்றிய விவாதங்களில் ஈடுபட முடியாது. இந்த யதார்த்தத்தை கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. அதனை உணர்ந்தே அவை செயற்பட்டும் வருகின்றன. ஒருவேளை தமிழரசு கட்சிக்கு தன்னுடைய சொந்த முகத்தில் நம்பிக்கையிருப்பின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், வெறும் தமிழரசு கட்சியாக மக்களை எதிர்கொண்டு தங்களின் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டும்".

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=0cf128af-8695-42ed-b75d-c6b7f2685bb3#.VTLs3-bbtUo.facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்வதில் ஒரு நன்மையும் இல்லை தீமையும் இல்லை.

சுரேஸ் பிரேமச்சந்திரன் போன முறை தொத்துப் பறியில கொஞ்ச வாக்கு வித்தியாசத்தில எம் பி ஆனவர்.

இந்த முறை சீட்டும் குறையுது, ஐங்கரநேசன் இறங்கினா - அதோ கெதிதான். ஆகாவேதேன் ஆள் தமிழரசுக் கட்சி முதுகில சவாரி செய்ய ஓடுப்பட்டுத்திரியுது.

இப்போ இருக்கும் ஒற்றுமை பதிவுசெய்தா உடனே டபுள் ஆகிவிடுமா?

பதிவு செய்யாமல் இருந்தால் ஒரு ஜனநாயக பல்லினத்துவம் ஆவது இருக்கும்.

கூட்டமைப்புக்குள்ளும் மக்களுக்கு யாரை ஒதுக்குவது யாரை விடுவது என்று ஒரு தெரிவு இருக்கும்.

பதிவு செய்தால் - ஒரு கட்சி, ஒரு கொள்கை, ஒன்றே தேவன் என்றாகி விடும். இதற்க்குப் பேர் ஒற்றுமை இல்லை - சர்வாதிகாரம்.

இதை ஒருக்கா பாருங்கள்.

http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Jaffna_pref_GE2010.pdf

Link to comment
Share on other sites

இந்த முன்னாள் செயற்பாட்டாளர், பின்னால் செயற்பாட்டாளர் இவர்கள்தான் புலத்தில் புலியை சொல்லி கொள்ளை அடிக்கும் பேர்வழிகள்.

இந்த கூட்டத்தோட பேசுவதற்க்கு மாவை சம்மதிச்சிருக்க கூடாது.

ஆனாலும் கொடுத்த பதில் நெத்தியடியாகவே இருக்கு.

நல்லவேளை விக்கியோட பேசியிருந்தால் செருப்படியே விழுந்திருக்கும்.

எனக்கு மாவை மீதான மதிப்பு இதன் பின் கூடியுள்ளது.

தமிழரசு கட்சி தனித்து போட்டியிட்டால் அதுதான் அவர்களின் தலை விதியாக இருக்கும் ... வயது வந்த கட்டைகள் மக்களால் ஒதுக்க படுவார்கள் .... 
 
தேசியத்தலைவரால் இணைக்கப்பட்டார்கள் என்ற காரணத்தினால் தான் இவர்கள் மீது மக்கள் கொஞ்ச நம்பிக்கை வைத்திருந்தார்கள் .
 
ஆனந்திக்கு மக்கள் எப்படி வாக்கு போட்டார்கள் ... என்ன தமிழரசு கட்சி என்றா .... மண்ணாங்கட்டி எல்லாம் எங்கள் போராளிகள் தான் ......
 
மாவையருக்கு அரசியல் வெளியகப்போவது உறுதியாகிவிட்டது.....என்னது தலைவர் வந்து சொன்னாலும் செய்ய மாட்டிரோ .... முதலில் மக்களின் நம்பிக்கையை பெறுவதுக்கு நல்லதை செய்யுங்கோ ...இல்லாட்டி வெகு விரைவில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் ....
 
சம்பந்தன் சுமந்திரன் இப்ப மாவை ... நல்ல பிறப்புகள் ....
Link to comment
Share on other sites

இலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வர இருக்கும் இவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் என தம்மை அறிமுகப்படுத்தி கொள்ளும் ஒரு தரப்புக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு மிக இரகசியமாகவே நடைபெற்றது. எனினும் இந்த விடயங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இச்சந்திப்பின் நோக்கம், பேசப்பட்ட விடயங்கள், அதன் பின்னணிகள் பற்றிய தகவல்களை விபரமாக முன்வைக்க வேண்டியது அவசியமாகும். 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் மேற்குலக நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு இரண்டு அல்லது மூன்று குழுக்களாக இயங்குகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தான் விடுதலைப்புலிகளின் உண்மையான அமைப்பு என சொல்லிக்கொள்கிறார்கள். அந்த அமைப்புக்களில் ஒன்றுதான் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமைச் செயலகமாகும். வுpநாயகம் என்பவரின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு இயங்குகிறது. ( இந்த சந்திப்பில் விடுதலைப்புலிகளின் சார்பில் கலந்து கொண்டவர்களின் விபரங்களை அவர்களின் நன்மை கருதி வெளியிடுவதை தவிர்த்திருக்கிறேன். ) இவர்களே இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை செய்தனர். வேடிக்கை என்ன என்றால் இவர்கள் யார், இவர்களின் பின்னணி என்ன, நோக்கம் என்ன என்று அறியாத நிலையிலேயே இவர்கள் அழைத்த உடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சுவிட்சர்லாந்திற்கு வந்திருந்தனர். மோகன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர்தான் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரை தொடர்பு கொண்டு சுவிட்சர்லாநதிற்கு வருமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி பேச வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த சந்திப்பிற்காக தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். புளொட் தலைவர் சித்தார்த்தன் இதில் கலந்து கொள்ளவில்லை. மாவை சேனாதிராசாவுக்கும், ஜனாவுக்கும் இச்சந்திப்பு ஆரம்பமாகும் வரை இச்சந்திப்பை நடத்துபவர்கள் யார்? இதன் நோக்கம் என்ன என்ற எந்த விபரமும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இந்த விடயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தது. சுரேஷிற்கு இந்த சந்திப்பில் இருந்த வகிபாகங்கள், மற்றும் அவரின் நோக்கங்கள், காய்நகர்த்தல்கள் பற்றி இன்னொரு வாரம் விரிவாக எழுத இருக்கிறேன். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகத்தின் சார்பில் மோகன் உட்பட சிலர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் ஆரம்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்ததன் நோக்கம் பற்றி மோகன் என்பவர் பின்வருமாறு கூறினார். நாங்கள் தான் உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு, நாங்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம். 2009ஆம் ஆண்டு வரைக்கும் எமது ஆணையின் கீழ்தான் செயல்பட்டீர்கள், 2009ஆம் ஆண்டின் பின்னர் நீங்கள் தனியாக முடிவெடுத்து செயல்பட்டு வருகிறீர்கள். அதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். இனிமேல் எங்கள் ஆணையின் கீழ்தான் நீங்கள் செயல்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு செயற்குழுவை நாம் நியமிப்போம். அந்த செயற்குழுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கும். சம்பந்தனோ அல்லது இப்போது இருக்கும் நாடாளுமன்ற குழுவோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய செயற்குழுவோ இனிமேல் எந்த முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்க முடியாது. முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டில் கீழ் தான் நீங்கள் செயல்பட வேண்டும். எதிர்வரும் தேர்தலில் நாங்கள் தயாரித்து தரும் வேட்பாளர் பட்டியலைத்தான் நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும். ( 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலை தயாரித்தார்கள்) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவி கஜேந்திரகுமாருக்கு வழங்கப்பட வேண்டும், அடுத்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளராக கஜேந்திரகுமாரின் பெயர் இடம்பெற வேண்டும், விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த அனந்தி உட்பட நாங்கள் தரும் பட்டியலையே வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து விடயங்களும் இனிமேல் எம்மை கேட்டுத்தான் செய்ய வேண்டும். முடிவுகளை நீங்கள் எடுக்க முடியாது. அறிக்கைகளை நீங்கள் விட முடியாது. இவ்வாறு பல நிபந்தனைகளை விதித்த அக்குழு தாங்கள் தயாரித்து வைத்திருந்த ஒப்பந்தம் ஒன்றையும் அங்கு சமூகமளித்திருந்த மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கருணாகரம் ஆகியோரிடம் கொடுத்து அதில் கையொப்பம் இடுமாறும் கோரினர். அந்த ஒப்பந்தத்தில் பின்வரும் விடயங்கள் அடங்கியிருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு செயற்குழுவை விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் நியமிக்கும். அந்த செயற்குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கும். இலங்கை அரசாங்கத்துடன் அல்லது சர்வதேச நாடுகளுடன் நடத்தப்படும் அனைத்து பேச்சுவார்த்தைகளுக்கான பிரதிநிதிகளில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் நியமிக்கும் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். அப்பேச்சுவார்த்தைகளில் தலைமை பிரதிநிதியாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் நியமிக்கும் பிரதிநிதியே செயற்படுவார். அனைத்து பேச்சுவார்த்தைகளுக்கும் முதலும் பேச்சுவார்த்தையின் பின்னரும் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகத்திற்கு அறிவிக்க வேண்டும். தேர்தல்களில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு மாவட்ட ரீதியாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் வேட்பாளர் தெரிவுக்குழுவை நியமிக்கும். அவர்கள் தெரிவு செய்யும் வேட்பாளர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முடியும். இலங்கை அரசாங்கத்துடன் பேசப்படும் விடயங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசப்படும் விடயங்கள் அனைத்தும் உடனடியாக அறிக்கையாக விடுதலைப்புலிகளின் தலைமை செயலகத்திற்கு அனுப்ப வேண்டும். இது போன்ற சில விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்டன. இதனை செவிமடுத்துக் கொண்டிருந்த தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கூறிய விடயங்களை விடுதலைப்புலிகளின் தலைமை செயலகம் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மாவை சேனாதிராசா தனது பாணியில் பேசத்தொடங்கினார். தம்பி, நீங்கள் இங்கு அழைத்த போது உங்களை யார் என்று தெரியாத நிலையிலும் உங்கள் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து இங்கு வந்தோம். உங்கள் பேச்சும் நடவடிக்கைகளும் இந்த ஒப்பந்தமும் எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் 25வருடங்களுக்கு மேலாக பழகியிருக்கிறேன். நீங்கள் பிரபாகரனை சந்திப்பதற்கு முதல் நான் அவருடன் பழகியிருக்கிறேன். வன்னிக்கு பல தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டாகவும் நான் தனியாகவும் பல தடவைகள் சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வனையும் சந்தித்திருக்கிறேன். எந்த ஒரு கட்டத்திலும் தலைவர் பிரபாகரனோ அல்லது தமிழ்செல்வனோ இப்படி நிபந்தனைகளை விதித்ததும் இல்லை, ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து இதில் கையொப்பம் இடுமாறு கோரியதும் இல்லை. சில ஆலோசனைகளை வழங்கினார்கள். அவ்வளவுதான் எதனையும் அவர்கள் எங்கள் மீது திணித்தது கிடையாது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலமை வேறு, இப்போது உள்ள நிலமை வேறு, வெளிநாடுகளில் இருந்து கொண்டு நீங்கள் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. களநிலமைகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நிலமைகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் விரும்பங்களை பிரதிபலித்தே நாம் செயற்பட முடியும். உங்கள் கோரிக்கைகளையோ அல்லது ஒப்பந்தங்களையோ இப்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழரசுக்கட்சிக்கு ஒரு செயற்குழு இருக்கிறது. அது போல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு செயற்குழு இருக்கிறது. இந்த விடயங்கள் பற்றி நான் முடிவு எடுக்க முடியாது. தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுக்களே முடிவு எடுக்க முடியும். உங்களின் ஒப்பந்தத்தில் என்னால் கையொப்பம் இடமுடியாது. இந்த ஒப்பந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என மாவை சேனாதிராசா கூறினார். அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி தலைவர் கஜேந்திரகுமாரை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு எனக்கு ஆட்சேபனை கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு தடையே கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமாரை நாங்கள் விலக்கவில்லை, தானாகத்தான் விலகி சென்று 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். இப்போது மீண்டும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விரும்பினால் தாராளமாக வரலாம். அனந்தியை தமிழரசுக்கட்சிதான் வடமாகாணசபை தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இணைத்து கொண்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டதால் தமிழரசுக்கட்சி அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்பினால் தமிழரசுக்கட்சியிடம் விண்ணப்பித்தால் அது பற்றி தேர்தல் வேட்பாளர் தெரவுக்குழு அதனை பரிசீலிக்கும் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். வழமையாகவே சகலரையும் சமாளிக்கும் வகையில் நழுவல் போக்குடன் பேசும் மாவை சேனாதிராசா அன்று மிக உறுதியாக பதில் அளித்து அவர்களின் கோரிக்கைகளையும் ஒப்பந்தத்தையும் நிராகரித்தது இச்சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கும். சுரேஷ் பிரேமச்சந்திரன் எதுவும் பேசாது மௌனமாக இருந்தார். ( இந்த மௌனத்தின் பின்னணியில் பல விடயங்கள் உள்ளன, அது பற்றி பின்னர் பார்க்கலாம்) ரெலோ சார்பில் கலந்து கொண்ட ஜனாவும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட மறுத்ததுடன் நீங்கள் கூறிய விடயங்கள் பற்றி தமது கட்சி தலைமையிடம் கூறுவதாக கூறினார். எங்கள் கட்சிக்கு ஒரு செயற்குழு இருக்கிறது. அது போல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு செயற்குழு இருக்கிறது. முடிவுகளை அச்செயற்குழுக்களே எடுக்கும். யாரும் எம்மீது எந்த விடயத்தையும் திணிக்க முடியாது என ஜனா கூறினார். இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக பின்வரும் விடயங்களே இருந்ததை அவதானிக்க முடிகிறது. மேற்குலக நாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் தமது உத்தரவின் கீழ்தான் செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றனர். தமது தாளத்திற்கு ஆடக்கூடியவர்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும். முடிவுகளையும் தீரமானங்களையும் எடுக்கும் அதிகாரம் தம்மிடமே இருக்க வேண்டும். தற்போது பெரும்பான்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வடக்கு கிழக்கில் செயற்பட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். சர்வதேச நாடுகள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே சர்வதேச நாடுகளுடனான சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி தங்கள் ஆதிக்கத்தை அதிகரிப்பது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் ஊடாக தங்கள் செயற்பாட்டையும் ஆதிக்கத்தையும் அங்கு நிலை நிறுத்த முடியும். தங்கள் தாளத்திற்கு ஆடக்கூடிய கஜேந்திரகுமார் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்காக வழிவகைகளை செய்வது. தமிழ் காங்கிரஷ் சார்பில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதால் கஜேந்திரகுமார் போன்றவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வைத்து வெற்றிபெற செய்வது. இந்த நோக்கங்களுக்காகவே விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் என தம்மை அழைத்து கொள்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை அழைத்து இந்த உத்தரவுகளை வழங்கியதுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திடுமாறு வலியுறுத்தினர். ஆனால் இவர்கள் யதார்த்தங்களை புரியாதவர்களாகவே உள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் ஒரு நிலப்பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒரு நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆயுத பலம் இருந்தது. விடுதலைப்புலிகளின் உத்தரவை மீறினால் அவர்கள் சுட்டுக்கொன்றுவிடுவார்கள் அல்லது வன்னியில் பிடித்து சிறையில் அல்லது பங்கருக்குள் போட்டு விடுவார்கள் என்ற பயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து தப்பி வந்து சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாழுபவர்கள் போடும் உத்தரவுகளை வாய் மூடி மௌனிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களோ ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்க்க முடியாது. சுவிட்சர்லாந்து போன்ற ஜனநாயக நாடுகளில் அகதி தஞ்சம் கோரி இருப்பவர்கள் ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அச்சுறுத்தல் விடுப்பதையும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுமாறு நெருக்குதல் கொடுப்பதையும் சுவிட்சர்லாந்து அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதும் இங்கு முன்வைக்கப்பட வேண்டிய கேள்வியாகும். தாங்கள் அகதி தஞ்சம் கோரியிருக்கும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் இன்னமும் வன்னி என நினைத்து கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுடன் ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்ப்பது எவ்வளவு தவறு என்பதை ஏன் அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை? இத்தனைக்கும் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு. இப்படி இருக்கும் போது இலங்கையின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்று தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்ய முடியுமா? என்ற கேள்விகளும் எழுகிறது. பிரபாகரன் இருந்த காலத்தில் விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் கூட இவ்வாறான நிபந்தனைகளை விதித்ததில்லை, ஒப்பந்தம் ஒன்றை செய்யுமாறு வலியுறுத்தியதும் இல்லை. http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/

Link to comment
Share on other sites

மாவை சுவிஸ் வந்து இப்படி ஒரு பதிலை கொடுத்ததுதான் நல்லது இல்லாவிட்டால் புலம் பெயர்ந்த முன்னாள்களுக்கு தாங்கள் இப்போ செல்லாக்காசு என்று தெரியவராது .

தொடர்ந்து சும்மா சவுண்டு விட்டுக்கொண்டே இருப்பார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இநத புலிவால்கள் இன்னும் கற்பனையிலேயே புலிவாலைப் பிடிச்சுக்கொண்ட்டு நிக்குதுகள். இந்த ஜென்மங்கள் திருந்திறதுக்குச் சண்சே இல்லை. மீண்டும் மாவைக்கு ஒரு சபாஷ்!

Link to comment
Share on other sites

அன்பின் தளபதி மாவை அண்ணா, வாழ்த்துக்கள், புலி வால்களுக்கு நல்ல பதிலளித்துள்ளீர்கள். உங்களுக்கு தெரியாததா அரசியல்? ஏறக்குறைய 40 வருடகாலம் உங்கள் அரசியல் முதுமை, தளபதி அமிர்தலிங்கத்திடன் கற்றதில் இருந்து தொடங்கியதல்லவா? புலத்தில் உள்ள புலிவால்கள், என்னதான் சம்பந்த/சுமந்திர/உங்களை எதிர்த்தாலும், நீங்கள் என்னதான் கூத்துக்கள் அடித்தாலும் கீரக்கடைக்கு எதிர்கடையாக வந்து வாக்குகள் சிதைய அனுமதிக்க மாட்டார்கள் என்பதை, நன்கு உணர்ந்துள்ளீர்கள். நீங்கள்/சம்பந்தசுமந்திரர்கள் சிங்கங்கொடி அசைத்தும், கொழும்பில் ஒன்றாக கூத்தடிப்பதும் பகிரங்கமாகியும் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? நிச்சயம் தமிழ் மக்களின் ஆதரவு உங்களை விட்டு விலகப்போவதில்லை! நீங்கள் என்றும் தனிக்காட்டு ராஜாக்கள்தான்.

 

வடக்கு கிழக்கில் இருக்கும் பல புலி வால்கள் மடுவில் சிங்கள குடியேற்றம், கிழக்கில் சிங்கள குடியேற்றம், காணி அபகரிப்பு தொடர்கிறது, கைதுகள் தொடர்கின்றன, இடம்பெயர்ந்த மக்கள் நாயாக இன்றும் அலைகின்றனர், .. என்றெல்லாம் இப்போது மீண்டும் கூக்குரலிடுகின்றனர். உதென்ன கூக்குரல்கள்? முள்ளிவாய்க்கலில் கேட்பாரற்று அழித்த்போது கேட்காத குரல்களை விடவா இவைகள்? இவைகளை நீங்கள் செவி மடுக்கவில்லை என்பது பெருமைக்கு உரியதே! தொடருங்கள்

Link to comment
Share on other sites

மாவை சொன்னது மிகவும் தவுறு. பிரபாகரன் வந்து சொன்னால்தான் கேட்போம் என்று சொல்லியிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த  புலிவால்  பிடிப்பு  பிழைப்புவாதிகளுக்கு  எல்லாம்  மாவை  போன்ற பெரும் அரசியல் தலைவர்கள் பதில்  சொல்லிக்கொண்டு  இருப்பது  வேதனை .....

 

அவர்கள்  தங்கள்  அரசியல்  பாதையில்  சரியாக  போகிறார்கள்  ,வேணும்  என்றால்  இந்த  புலம் ஈழம்  புலி  வால்கள்  இணைத்து  கூட்டாக  ஒரு  நல்லா  தங்களின்  சொல்வழி  கேட்க  கூடிய  ஒரு  கட்சியை  உருவாக்கலாம்  தானே எதுக்கு  தமிழரசு கட்சியை  விமர்சிப்பான் .

Link to comment
Share on other sites

பிரபாகரன் யார்? மா தளபதி மாவை யார்? இருவரையும் ஒரே தராசில்? புலி வால்களுக்கு புரியுமா? முட்டாள்கள் புலிவால்கள். காலா காலமாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இளைஞர்களின் கைகளை கீறி இரத்ததிலகமிட்டு பூமாலைகள் வாரியிறைக்கப்பட்டு கள்ளுக்கும் போத்தலுக்கும் பின் அலையும் தொண்டர்கள் புடைசூழ வெற்றி வாகை சூடி, இளைஞர்களே ஆயுதம் ஏந்துங்கள், உங்கள் ஆயுதங்கள் தான் எம்மை விடுவிக்கும் என அழைப்பு விட்டு, உங்களுக்கு பிடிக்காதவர்களை போட்ட பெருமை மட்டுமல்ல, இந்த ஆயுத போராட்டத்தின் தொடக்க நாயகர்களில் மாவையும் முக்கியமானவர். மாவையின் அழைப்பில் தூக்கியவர்கள் மண்ணுக்குள் மண்ணாகப் போக, தான் பெற்ற செல்வங்களை புலத்தே சிறப்பாக வாழ வைத்த பெருமை மா தளபதி மாவைக்கே சாரும். மா தளபதி மாவை பிரபாகரனை ஏன் கூப்பிட வேண்டும், கேட்க வேண்டும்,?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இநத புலிவால்கள் இன்னும் கற்பனையிலேயே புலிவாலைப் பிடிச்சுக்கொண்ட்டு நிக்குதுகள். இந்த ஜென்மங்கள் திருந்திறதுக்குச் சண்சே இல்லை. மீண்டும் மாவைக்கு ஒரு சபாஷ்!

 

புலிகளின் வால் நீளுகின்றதோ இல்லையோ

நரிகளின் ஊழை சத்தமாகக் கேட்கின்றது 

 

Link to comment
Share on other sites

பின்கதவால் வர துடிக்கும் கூட்டமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல வாழ்(ல்)களுக்கு நல்ல மூக்கறுப்பு.

அனைத்துலக தலமைச்செயலகம் - நல்ல காமெடியா பெயர் வைக்கிறாங்க.

இதுக்க இவங்க ஓடர் வேற போடீனமாம். லுச்சா பசங்களுகெல்லாம் தாங்களும் பிரபாகரன் என்று நினைப்பு.

பிரபாகரனுக்குப் பின் இங்கே யாரும் புலி இல்லை. இந்த யாவாரிகளை சுவிஸ் பொலீசிடம் மாவை போட்டுக் கொடுத்திருக்கோணும்.

Link to comment
Share on other sites

ஒரு விடயத்தை மாவை மட்டுமல்ல் எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும் . புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவர்கள் மக்களின் நன்மை கருதிய விடயங்களைத்தான் செய்தார்கள் அதனையே கூட்டமைபினரையும் செய்ய சொன்னார்கள் தவிர வெருட்டவில்லை . அதற்கான தேவையும் இல்லை ஏனெனில் புலிகளின் போராட்டம் கொள்கைகள் எல்லாமே தமிழ் மக்களின் எதிகாலத்தை பற்றியதாகவே இருந்தது . இருக்கின்றது . 
 
மாவையின் செயல்பாடுகள் இப்ப தனிச்சையகவே இருக்கின்றது இது ரணிலின் பிரிக்கின்ற வேலையாக கூட இருக்கலாம் . ஆனந்தியை கட்சியின் கொள்கையை மீறியதால் தான் வெளியேற்ற்யதாக சொல்கின்றார் அப்படிஎன்றால் இவர்கள் இப்பவும் செய்கின்ற  தவறினை யார் தண்டிப்பது .
 
இப்ப உள்ள உலக அமைப்பால் புலிகள் வெளிவர முடியாத நிலையில் இப்படியான கருத்துகளை மாவை அவர்கள் சொல்லலாம் . ஆனால் இதன் விளைவை கட்டாயம் அனுபவிப்பர் .
 
இனி தேசியதலைவர் வந்துதான் சொல்லவேண்டும் என்ற நிலை இப்ப இல்லை அவர் வளர்த்த மக்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று . 
 
இங்க கொஞ்ச பேர் சும்மா எப்பவும் புலி எதிர்ப்பு கொள்கை என்று அல்ட்டுவதை தவிர . ஒரு உருப்படியான கருத்துகளையும் எழுதுகின்றார்கள் இல்லை .  சந்திரனை பார்த்து குலைப்பதால் பிரயோசனம் இல்லை.....
Link to comment
Share on other sites

Swiss-300x130.jpg

 

இக் கூட்டம் முக்கியமாக ரணிலால் ஏற்படுத்தப்பட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.