Jump to content

மேற்கு இந்தியதீவுகள் vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்


Recommended Posts

16 மாதங்களுக்குப் பிறகு ஆட வந்த ஜொனாதன் டிராட் 'டக்' அவுட்
 

2ikfkuc.jpg

16 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய இங்கிலாந்து வீரர் டிராட் அவுட் ஆகி பரிதாபமாக வெளியேறும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.

 

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய இங்கிலாந்து வீரர் ஜானதன் டிராட் மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

 

ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் இவரது ஆட்டத்தைப் பற்றி எகத்தாளமாகக் கருத்துக்கூற அந்தத் தொடரிலிருந்து மனத்தாங்கலுடன் பாதியிலேயே இங்கிலாந்து திரும்பினார் டிராட்.

 

இந்நிலையில் மோசமான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இன்று ஆண்டிகுவாவில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டிராட் தனது வழக்கமான 3-ம் நிலையில் இல்லாமல் அலிஸ்டர் குக்குடன் தொடக்கத்தில் களமிறங்கினார்.

ஜெரோம் டெய்லர் வீசிய முதல் ஓவரில் குக்தான் முதல் பந்தை எதிர்கொண்டார். 2-வது பந்தில் குக் ஒரு ரன் எடுக்க, டிராட் பேட்டிங் முனைக்கு வந்தார். முதல் பந்தே யார்க்கர் லெந்த் பந்து லெக் ஸ்டம்பில் விழுந்தது. ஸ்டம்புக்கு அருகில் சென்றது.

 

4-வது பந்தை பேட்டில் வாங்கினார். ரன் இல்லை. 5-வது பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி சற்றே லேட் ஸ்விங் ஆனது, கொஞ்சம் நேர் ஆனது, டிராட் மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் டேரன் பிராவோவிடம் கேட்ச் ஆனது. ரன் எடுக்காமல் அவுட் ஆனார் டிராட்.

16 மாதங்களுக்குப் பிறகு களமிறங்கி 0-வில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார் டிராட்.

 

அலிஸ்டர் குக், கிமார் ரோச் பந்தில் பவுல்டு ஆனார். பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் சற்று முன் வரை 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. பேலன்ஸ், இயன் பெல் ஆடி வருகின்றனர்.
 

 

http://tamil.thehindu.com/sports/16-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/article7099070.ece

Link to comment
Share on other sites

இயான் பெல் சதம்: மீண்டது இங்கிலாந்து

 

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இயான் பெல் சதம் அடிக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ராம்தின் பவுலிங் தேர்வு செய்தார்.

 

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் (11) ஏமாற்றினார். டிராட் (0), பேலன்ஸ் (10) சொதப்பினர். இருப்பினும், இயான் பெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாமுவேல்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பெல் சதம் அடித்தார். தன் பங்கிற்கு ஜோ ரூட் (83) அரை சதம் அடித்தார். பெல் 143 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் எடுத்தது. ஸ்டோக்ஸ் (71), டிரட்வெல் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://sports.dinamalar.com/2015/04/1428993716/bellengland.html

Link to comment
Share on other sites

இயான் பெல் சதம்: மீண்டது இங்கிலாந்து

 

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இயான் பெல் சதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ராம்தின் பவுலிங் தேர்வு செய்தார்.

 

 

துவக்க சரிவு:

இங்கிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் குக் (11) ஏமாற்றினார். 18 மாதத்துக்குப் பின் அணிக்கு திரும்பிய டிராட், தனது 50வது டெஸ்டில் ‘டக்’ அவுட்டானார். பேலன்சும் (10) சொதப்ப, இங்கிலாந்து அணி 34 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

 

பெல் சதம்:

பின் இணைந்த ‘சீனியர்’ இயான் பெல், ஜோ ரூட் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடித்த ஜோ ரூட் (83) அவுட்டானார்.

 

மறுமுனையில் மனம் தளராமல் போராடிய பெல், டெஸ்ட் அரங்கில் 22வது சதம் அடித்தார். பின் வந்த ஸ்டோக்ஸ், தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 130 ரன்கள் சேர்த்த போது, பெல் (143) அவுட்டானார்.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டோக்ஸ் (79), 100வது டெஸ்டில் பங்கேற்ற ஆண்டர்சன் (20) தவிர, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 399 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

 

பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, உணவு இடைவேளைக்குப் பின் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்து 370 ரன்கள் பின்தங்கி இருந்தது. பிராவோ (5), பிராத்வைட் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2015/04/1428993716/bellengland.html

Link to comment
Share on other sites

இங்கிலாந்து 399 ரன்களுக்கு ஆல்அவுட்: மேற்கிந்தியத் தீவுகள்-155/4
 

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 110.4 ஓவர்களில் 399 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மேற்கிந்தியத் தீவுகளின் நார்த் சவுண்டில் (ஆன்டிகுவா) நடை பெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்திருந்தது.

 

 

2-வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 95 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார். இதன்பிறகு டிரெட்வெல் 8 ரன்களிலும், ஜோஸ் பட்லர், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் வெளியேற, 9 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து.

கடைசி விக்கெட்டுக்கு இணைந்த கிறிஸ் ஜோர்டான்-ஆண்டர்சன் ஜோடி 38 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து 399 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆண்டர்சன் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிறிஸ் ஜோர்டான் 21 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

 

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டு களையும், ஜெரோம் டெய்லர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டிவோன் ஸ்மித் 11 ரன்களிலும், டேரன் பிராவோ 10 ரன்களிலும் வீழ்ந்தனர். இதையடுத்து பிராத்வெயிட்டுடன் இணைந்தார் சாமுவேல்ஸ். இந்த ஜோடி 47 ரன்கள் சேர்த்தது.

 

சாமுவேல்ஸ் 33 ரன்களும், பிராத் வெயிட் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 66 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது மேற்கிந்தியத் தீவுகள். சந்தர்பால் 29, பிளாக்வுட் 30 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-399-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D1554/article7108201.ece

Link to comment
Share on other sites

பிளாக்வுட் சதம்: இங்கிலாந்து முன்னிலை

 

 

ஆன்டிகுவா: ஆன்டிகுவா டெஸ்டில், பிளாக்வுட் சதம் அடித்த போதும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 104 ரன்கள் முன்னிலை பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 399 ரன்கள் எடுத்தது.

 

 

பிளாக்வுட் சதம்:

பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட் (39), ஸ்மித் (11), டேரன் பிராவோ (10) ஏமாற்றினர். சாமுவேல்ஸ் 33 ரன்கள் எடுத்தார். 2வது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

நேற்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. சந்தர்பால் (46), ராம்தின் (9) ஏமாற்றினர். இருப்பினும், மனம் தளராமல் போடிய பிளாக்வுட், டெஸ்ட் அரங்கில் முதல் சதம் கடந்தார். ஹோல்டர் (16), கீமர் ரோச் (5), சுலைமன் பென் (2) விரைவில் அவுட்டாக, முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 295 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிளாக்வுட் (112) அவுட்டாகாமல் இருந்தார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

 

http://sports.dinamalar.com/2015/04/1429124521/westindiesenglandfirsttestantiguaa.html

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியைத் தவிர்க்குமா மே.இ.தீவுகள்?
 

ஆண்டிகுவாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான நேற்று இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை 333/7 என்ற நிலையில் முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

 

இதனையடுத்து மே.இ.தீவுகள் அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மே.இ.தீவுகள் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.

 

டி.எஸ்.ஸ்மித் 59 ரன்களுடனும், சாமுயெல்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பிராத்வெய்ட் 5 ரன்களில் பிராடிடமும், டேரன் பிராவோ 32 ரன்களில் ஜோ ரூட்டிடமும் ஆட்டமிழந்தனர்.

 

முன்னதாக 116/3 என்று தொடங்கிய இங்கிலாந்து கேரி பேலன்ஸ் (122) சதத்துடனும் ஜோ ரூட் (59) அரைசதத்துடனும், கடைசியில் ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 59 ரன்களையும் எடுக்க 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முதல் மூன்றரை மணி நேர ஆட்டம் இங்கிலாந்து எதிர்பார்த்தது போல் சென்றது. கேரி பேலன்ஸ் தனது 4-வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார். தேநீர் இடைவேளைக்கு அரைமணி முன்னதாக டிக்ளேர் செய்யப்பட்டது.

 

 

மே.இ.தீவுகள் தொடக்க வீரர் பிராத்வெய்ட், பிராடின் நல்ல திசையில் வீசப்பட்ட எழுச்சிப் பந்துக்கு பலியானார். அவர் மார்புயரம் பந்து வர தடுத்தாடினார். ஆனால் பேக்வர்ட் ஷார்ட் லெக்கில் ரூட் இதற்காகவே நிறுத்தப்பட்டிருந்தார். கேட்ச் ஆனது.

 

அதன் பிறகு டெவன் ஸ்மித், டேரன் பிராவோ பிரச்சினைகளை திறம்பட எதிர்கொண்டனர்.

 

 

ஆனால் ஜோ ரூட்டின் பகுதி நேர ஸ்பின் பந்துவீச்சில் டேரன் பிராவோ டிரைவ் ஆட முயல பந்து கால் தடத்தில் பட்டு திரும்பியது, மட்டையின் விளிம்பில் பட ஜோர்டானிடம் தாழ்வாக ஸ்லிப் திசையில் வலது புறமாகச் செல்ல டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் ஜோர்டான், மிக அருமையான கேட்ச். மிகச்சிறந்த கேட்ச்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய கேட்ச் அது. ஆனால் அதன் பிறகு டெவன் ஸ்மித் கொடுத்த அதே பாணியிலான கேட்சை ஜோர்டானால் பிடிக்க முடியவில்லை.

 

அதன் பிறகு ஆட்ட நேர முடிவு ஓவர்களில் சாமுயெல்ஸ் 16 பந்துகளை எதிர்கொண்டு வேதனை அனுபவித்தார்.

 

இன்று 5-ம் நாள் ஆட்டம். மே.இ.தீவுகள் டிராவுடன் தப்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கடினம்தான் ஏனெனில் டிரெட்வெல் அருமையாக வீசி வருகிறார். இன்று ஜோ ரூட் வீசிய முனையில் டிரெட்வந்தால் நிச்சயம் பந்துகள் திரும்பவும் எழும்பவும் செய்யும். மே.இ.தீவுகள் தாக்குப் பிடித்தால் பெரிய ஆச்சரியம்தான்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7113145.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாவது விக்கட்டுக்காக ஆடவந்த ஜேசன் கோல்டரின் அருமையான ஆட்டத்தினால் அன்டிகுவா டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியிலிருந்து தப்பியது!

Link to comment
Share on other sites

ஹோல்டர் சதம்: முதல் டெஸ்ட் ‘டிரா’

 

ஆன்டிகுவா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஹோல்டர் சதம் அடித்து கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி ‘டிரா’ செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 399, வெஸ்ட் இண்டீஸ் 295 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 333 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

ஹோல்டர் சதம்:

ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில், ஸ்மித் (65) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். டேரன் பிராவோ 32 ரன்கள் மட்டும் எடுத்தார். சாமுவேல்ஸ் (23), சந்தர்பால் (13), பிளாக்வுட் (31) நிலைக்கவில்லை. இதன் பின் ராம்தின், ஹோல்டர் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராம்தின் அரை (57) சதம் கடந்தார். மனம் தளராமல் போராடிய ஹோல்டர் சதம் அடித்து, அணியை தோல்வியிலிருந்து மீட்டார். ஆட்ட நேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் போட்டி ‘டிரா’ ஆனது. ஹோல்டர் (103), கீமர் ரோச் (15) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஹோல்டர் கைப்பற்றினார்.

ஆண்டர்சன் சாதனை

இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் ராம்தினை அவுட்டாக்கிய இங்கிலாந்தின் ஆண்டர்சன், 384வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம், இங்கிலாந்து அணி சார்பில் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இயான் போத்தமை (102 போட்டி, 383 விக்.,) பின்தள்ளி முதலிடம் பிடித்தார். இதுவரை, 100 டெஸ்டில் பங்கேற்றுள்ள ஆண்டர்சன் 384 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

 

http://sports.dinamalar.com/2015/04/1429296791/jordencricket.html

Link to comment
Share on other sites

சாமுவேல்ஸ் அரைசதம்: மீண்டது வெஸ்ட் இண்டீஸ்

 

செயின்ட் ஜார்ஜ்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், சாமுவேல்ஸ் அரைசதம் கடந்த கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவிலிருந்து மீண்டது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் செயின்ட் ஜார்ஜில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட் (1) ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் டேவான் ஸ்மித் (15) நிலைக்கவில்லை. அடுத்து வந்த டேரன் பிராவோ (35) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அனுபவ சந்தர்பால் (1) சொற்ப ரன்னில் வெளியேறினார். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், பொறுப்பாக ஆடிய சாமுவேல்ஸ் டெஸ்ட் அரங்கில் 22வது அரைசதத்தை பதிவு செய்தார். பிளாக்வுட் (26) ஏமாற்றினார்.

 

வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வௌிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாமுவேல்ஸ் (94), கேப்டன் ராம்தின் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டான் 2, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

http://sports.dinamalar.com/2015/04/1429686547/SamuelsWestIndiesEnglandTestCricket.html

Link to comment
Share on other sites

சாமுவேல்ஸ் சதம்: மே.இ.தீவுகள் 299-க்கு ஆல்அவுட்
 

 

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 104.4 ஓவர்களில் 299 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாமுவேல்ஸ் 103 ரன்கள் குவித்தார்.

 

மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் ஜார்ஜ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 70 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. சாமுவேல்ஸ் 94, கேப்டன் தினேஷ் ராம்தின் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

 

சாமுவேல்ஸ் சதம்

2-வது நாளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. முதல் நாளைப் போலவே 2-வது நாளிலும் அவ்வப்போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. 3 முறை மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் 226 பந்துளில் சதமடித்தார்.

 

அவர் 228 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, தினேஷ் ராம்தின் 31 ரன்களில் (80 பந்துகள்) ஆட்டமிழந்தார். இதனால் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது மேற்கிந்தியத் தீவுகள்.

 

கடைசி விக்கெட்டுக்கு 52

பின்னர் வந்த ஜேசன் ஹோல்டர் 22 ரன்களிலும், கெமர் ரோச் 1 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுக்க, கடைசி விக்கெட் டுக்கு இணைந்த தேவேந்திர பிஷூ-கேபிரியேல் ஜோடி இங்கிலாந்து பவுலர்களை சோதித்தது. 11.2 ஓவர்கள் களத்தில் நின்ற இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்தது. பிஷூ 48 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேபிரியல் 30 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து-74/0

பின்னர் முதல் இன்னங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அலாஸ்டர் குக் 37, ஜொனாதன் டிராட் 32 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இங்கிலாந்து 225 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-299%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/article7137170.ece

Link to comment
Share on other sites

ஜோ ரூட் சதம்; இங்கிலாந்து- 373/6
 

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 124 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது.

 

மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் ஜார்ஜ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 104.4 ஓவர்களில் 299 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்லான் சாமுவேல்ஸ் 103 ரன்கள் குவித்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அலாஸ்டர் குக் 37, ஜொனாதன் டிராட் 32 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

 

முதல் விக்கெட்டுக்கு 125

3-வது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் குக் 135 பந்துகளிலும், டிராட் 137 பந்துகளிலும் அரை சதமடித்தனர். அந்த அணி 49.2 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்திருந்தபோது டிராட் ஆட்டமிழந்தார். 147 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த டிராட் பிஷூ பந்துவீச்சில் பிளாக்வுட்டிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து களமிறங்கிய கேரி பேலன்ஸும் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க, இங்கிலாந்து 159 ரன்களை எட்டியபோது குக் ஆட்டமிழந்தார். அவர் 211 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து கேபிரியேல் பந்துவீச்சில் போல்டு ஆனார். பின்னர் வந்த இயான் பெல் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

 

4-வது விக்கெட்டுக்கு 165

இதையடுத்து பேலன்ஸுடன் இணைந்தார் ஜோ ரூட். இந்த ஜோடி சிறப்பாக ஆட, 78 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது இங்கிலாந்து. கேரி பேலன்ஸ் நிதானமாக ரன் சேர்க்க, மறுமுனையில் வேகமாக ஆடிய ஜோ ரூட் 69 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

 

அவரைத் தொடர்ந்து பேலன்ஸ் 129 பந்துகளில் அரைசதம் கண்டார். இதன்பிறகு இந்த ஜோடி வேகமாக ரன் சேர்க்க, 100 ஓவர்களில் 303 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. அந்த அணி 329 ரன்களை எட்டியபோது கேரி பேலன்ஸ் 77 ரன்கள் எடுத்து சாமுவேல்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்தது.

பின்னர் வந்த மொயீன் அலி ரன் ஏதுமின்றி வெளியேற, பென் ஸ்டோக்ஸ் களம்புகுந்தார். கெமர் ரோச் வீசிய 111-வது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசிய ஜோ ரூட் 125 பந்துகளில் சதத்தை எட்டினார். இது அவருடைய 6-வது டெஸ்ட் சதமாகும். இதனிடையே பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களில் வெளியேற, ஆட்டநேர முடிவில் 124 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. ஜோ ரூட் 165 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 118 ரன்களும், ஜோஸ் பட்லர் 4 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

 

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேபிரியேல், பிஷூ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3736/article7140639.ece

Link to comment
Share on other sites

பிராத்வைட் அசத்தல் சதம
 

 

செயின்ட் ஜார்ஜ்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வைட் சதம் அடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் செயின்ட் ஜார்ஜில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 299, இங்கிலாந்து 464 ரன்கள் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டேவன் ஸ்மித் (2) ஏமாற்றினார்.

 

இருப்பினும், பிராத்வைட், டேரன் பிராவோ ஜோடி பொறுப்புணர்ந்து விளையாடியது. சிறப்பாக செயல்பட்ட பிராத்வைட் சதம் அடித்தார். தன் பங்கிற்கு பிராவோ (69) அரை சதம் கடந்தார். நான்காவது நாள் ஆட்ட முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து 37 ரன்கள் முன்னிலை பெற்றது. பிராத்வைட் (101), சாமுவேல்ஸ் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2015/04/1429686547/SamuelsWestIndiesEnglandTestCricket.html

Link to comment
Share on other sites

இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி

 

செயின்ட் ஜார்ஜ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கேப்டன் குக், பேலன்ஸ் அரை சதம் கடக்க இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் செயின்ட் ஜார்ஜில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 299, இங்கிலாந்து 464 ரன்கள் எடுத்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில், 143 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது.

 

குக் அரை சதம்:

இங்கிலாந்து அணிக்கு டிராட் டக்–அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும், கேப்டன் குக், பேலன்ஸ் பொறுப்புடன் விளையாடினர். எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் அரை சதம் கடந்து, வெற்றிக்கு கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குக் (59), பேலன்ஸ் (81) அவுட்டாகாமல்  இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் ஜோ ரூட் வென்றார்.

 

இதன் மூலம் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் அடுத்த மாதம் 1ம் தேதி பிரிட்ஜ்டவுனில் துவங்குகிறது.

 

http://sports.dinamalar.com/2015/04/1429977268/westindiesenglandsecondtest.html

Link to comment
Share on other sites

குக் சதம்: மீண்டது இங்கிலாந்து

 

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அலெஸ்டர் குக் சதம் அடிக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

 

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3வது போட்டி பார்படாசில் நடக்கிறது. இங்கிலாந்து அணிக்கு டிராட் ‘டக்–அவுட்’ ஆகி ஏமாற்றினார். ஹோல்டர் ‘வேகத்தில்’ பேலன்ஸ் (18), பெல் (0) வெளியேறினர். இருப்பினும், கேப்டன் என்ற பொறுப்புடன் குக் விளையாடினார். ஜோ ரூட் 33 ரன்கள் மட்டும் எடுத்தார். பின் வந்த மொயீன் அலி, குக்குடன் ஜோடி சேர்ந்தார்.

 

குக் சதம்:

மொயீன் அலி அரை (58) சதம் அடித்தார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த குக், டெஸ்ட் அரங்கில் 26வது சதத்தை எட்டினார். இவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்ரியல், ஹோல்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2015/05/1430548021/cookengland.html

Link to comment
Share on other sites

பவுலர்கள் ஆதிக்கம்: ஆண்டர்சன் ‘6’

 

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்டில் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இங்கிலாந்தின் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.

 

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3வது போட்டி பார்படாசில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. பட்லர் (0) அவுட்டாகாமல் இருந்தார்.

 

இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஜெரோமி டெய்லர் தொல்லை தந்தார். இவரின் ‘வேகத்தில்’ ஜோர்டான் (3), பிராட் (10), ஆண்டர்சன் (0) அடுத்தடுத்து சிக்கினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.

 

ஆண்டர்சன் ஆதிக்கம்:

முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆண்டர்சன் ‘வேகத்தில்’ சிதறியது. இவரின் பந்துவீச்சில் பிராத்வைட் (0), ஹோப் (5), சாமுவேல்ஸ் (9) அவுட்டாகினர். டேரன் பிராவோ (9) நிலைக்கவில்லை. பிளாக்வுட் மட்டும் அரை (85) சதம் கடந்தார். ஆண்டர்சன் பந்துவீச்சில் வீராசாமி பெருமாள் (18), ஜெரோமி டெய்லர் (15) சிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.

 

டெய்லர் அசத்தல்:

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு, எதிரணி பவுலர்கள் பதிலடி தந்தனர். கேப்டன் குக் (4) ஏமாற்றினார். டெய்லர் பந்துவீச்சில் டிராட் (9), பெல் (0) வெளியேறினர். ஜோ ரூட் (1), மொயீன் அலி (8) விரைவில் திரும்பினர். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்து, 107 ரன்கள் முன்னிலையில் இருந்தது. பேலன்ஸ் (12), ஸ்டோக்ஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

முதல் முறை

நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இங்கிலாந்து (3+5), வெஸ்ட் இண்டீஸ் (10) அணிகளில் ஒட்டுமொத்தமாக 18 விக்கெட் வீழ்ந்தன. வெஸ்ட் இண்டீசில் கடந்த 85 ஆண்டுகால டெஸ்ட் விளையாட்டில், எதிலும் ஒரே நாள் ஆட்டத்தில் இத்தனை விக்கெட்டுகள் வீழ்ந்தது இல்லை.

 

http://sports.dinamalar.com/2015/05/1430548021/cookengland.html

Link to comment
Share on other sites

இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்: டெஸ்ட் தொடர் சமன்

 

பார்படாஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டின் 2வது இன்னிங்சில், டேரன் பிராவோ அரைசதம் அடித்து கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1–1 என சமன் ஆனது.     

 

 

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதலிரண்டு டெஸ்டின் முடிவில், இங்கிலாந்து அணி 1–0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது டெஸ்ட் பார்படாசில் நடந்தது.     

 

 

பிராவோ அரைசதம்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 257, வெஸ்ட் இண்டீஸ் 189 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 123 ரன்களுக்கு சுருண்டது. பின், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கோடு 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட் (25), ஹோப் (9), சாமுவேல்ஸ் (20), சந்தர்பால் (0) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய டேரன் பிராவோ (82) அரைசதம் கடந்தார். இவருக்கு பிளாக்வுட் ஒத்துழைப்பு தந்தார்.     

 

 

இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிளாக்வுட் (47), கேப்டன் ராம்தின் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.     

இந்த வெற்றியின்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1–1 என சமனில் முடிந்தது. ஆட்டநாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் பிளாக்வுட் வென்றார். தொடர் நாயகன் விருதை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றினார்.

 

http://sports.dinamalar.com/2015/05/1430548021/cookengland.html

Link to comment
Share on other sites

3-வது டெஸ்டில் மே.இ.தீவுகள் வெற்றி: இங்கிலாந்து அதிர்ச்சி

 

பார்பேடோஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை மே.இ,தீவுகள் 1-1 என்று சமன் செய்தது.

 

39/5 என்று 3-ம் நாள் களமிறங்கிய இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்சில் 123 ரன்களுக்குச் சுருண்டது. டெய்லர், ஹோல்டர், வி.பெர்மால் ஆகியோர் தலா 3 விக்கெடுகளைக் கைப்பற்றினர்.

 

வெற்றி பெற 192 ரன்கள் தேவை என்று களமிறங்கிய மே.இ.தீவுகள். 80/4 என்று தடுமாறிய போது, டேரன் பிராவோ, பிளாக்வுட் ஜோடி இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 108 ரன்களைச் சேர்த்தது. டேரன் பிராவோ 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆனார்.

முதல் இன்னிங்சில் அதிரடி 85 ரன்களை எடுத்த பிளாக்வுட் இம்முறை நிதானம் கடைபிடித்து 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இந்தியாவில் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறி சர்ச்சையில் சிக்கி பிறகு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரிலும் சோபிக்காமல் போன மே.இ.தீவுகளுக்கு சிம்மன்ஸ் வழிகாட்டுதலின் கீழ் ஒரு அரிய டெஸ்ட் வெற்றி கிட்டியுள்ளது.

 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கொலின் கிரேவ்ஸ், இந்தத் தொடருக்கு முன்னதாக ‘தரமற்ற’ அணி என்று மேற்கிந்திய அணியை வர்ணித்திருந்தார்.

சந்தர்பால் விக்கெட்டை கைப்பற்றிய ஆண்டர்சன் 397 விக்கெட்டுகளில் இருக்கிறார். ஆஷஸ் தொடரில் நிச்சயம் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

 

2012-ம் ஆண்டு அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக 72 ரன்களுக்குச் சுருண்ட பிறகு இங்கிலாந்தின் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கை இதுவே. ஸ்டோக்ஸ் 32 ரன்களையும், கிறிஸ் பட்லர் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்களையும் எடுத்தாலும் இங்கிலாந்தினால் முன்னிலையை 200 ரன்களுக்குக் கொண்டு செல்லமுடியவில்லை.

 

ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்ட நாயகனாக ஜெர்மைன் பிளாக்வுட் தேர்வு செய்யப்பட்டார்.

 

இங்கிலாந்து அடுத்ததாக அயர்லாந்துடன் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. பிறகு நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

மே.இ.தீவுகளுக்கு ஒரு மாதம் ஓய்வு, அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிராங்க் வொரல் டிராபியில் விளையாடுகிறது.
 

 

http://tamil.thehindu.com/sports/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article7170074.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.