Jump to content

சந்திரிக்கா தீர்வு காண்பார் எனக் கூறுவது மோசமான பாதைக்கு கொண்டு செல்லும்: கஜேந்திரகுமார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சந்திரிக்கா தீர்வு காண்பார் எனக் கூறுவது மோசமான பாதைக்கு கொண்டு செல்லும்: கஜேந்திரகுமார்
 
2_kajanthiran.jpg
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விபரித்தால், கூட்டமைப்பு தமிழ் தேசியவாதத்தை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது என்பதை சம்மந்தன் மக்களுக்கு முன்பாக ஒத்துக்கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தொடர்பில் விளக்கமளிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பொன்றைய யாழ்.ஊடக அமையத்தில் முன்னணி நடத்தியிருந்தது.

இதன்போது கலந்து கொண்டு அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இரா.சம்மந்தன் ஐயா அங்கு குறிப்பிடுகையில், இங்கே சிலர் இருதேசம் ஒரு நாடு என கூறிக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான கோஷங்களினால் எதனையும் சாதிக்க முடியாது.

இது ஒருவகையில் பிரிவினைவாதமாகும் என கூறியிருப்பதுடன் இந்தியா, சுவிஸ், கனடா போன்ற நாடுகளில் சமஷ்டி முறை நடைமுறையில் உள்ளதைபோன்று ஒற்றுமையாக வாழலாம் என கூறியுள்ளார். 

அந்தச் சந்திப்பிலேயே தமிழர்கள் ஒரு தேசமாகவும், சிங்களவர்கள் ஒரு தேசமாகவும் இணைந்து இருதேசங்கள் ஒரு நாட்டுக்குள் வாழப்போவதாக கூறுகின்றார்கள் என்றும் கூறியிருக்கின்றார்.

அந்தவகையில் முதலில் இருதேசம் ஒரு நாடு பிரிவினைவாதம் என கூறியவர். இந்த விடயத்தை அவதானிக்கவில்லையா? அதாவது ஒரு நாடு என்பதை ஒரு நாடு என்பது எப்படி பிரிவினைவாதம்?

மேலும் ஐயா ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இருதேசம் ஒரு நாடு கொள்கையினை நாங்கள் முன்வைத்திருக்கவில்லை. முதன்முறையாக திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட கொள்கையே அதுவாகும்.

 அந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயம் தேசமாக வாழும் மக்களே சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பது.

இதுபோக நாங்கள் தனியே இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தவில்லை. தற்போது வடமாகாண முதலமைச்சராக இருக்கும் நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரன் கூட இந்தவிடயத்தை பேசியிருக்கின்றார்.

அவர் நன்றாக சட்டத்தை அறிந்தவர். அவர் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கிறாரா? எனவே இது மக்களை தவறான பாதையில் கொண்டுசெல்வதற்கான முயற்சியாகும் என தெரிவித்தார்.

மேலும் சந்திரிக்காவை தலைமையாக கொண்டு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

அது மிக மோசமான விடயமாகும். இதே சந்திரிக்கா தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்ற கோஷத்துடன் வந்தவர்.

பின்னர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பித்து அதில் எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தை முறிந்த பின்னர் ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை மக்களிடமிருந்து பிரிப்பதற்கு முயற்சித்தவர்.

பேச்சுவார்த்தை முறிந்த பின்னர் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டத்திற்கு சம்மந்தன் ஐயா போன்றவர்கள், ஆதரவு தெரிவித்த நிலையில் விடுதலைப் புலிகளை பிடிவாதக்காரர்களாகவும், தீர்வினை விரும்பாத ஒரு தரப்பாகவும் காண்பிக்க நினைத்தார்.

அதற்கு இவர்கள் துணைபோனவர்கள். இதனை மறைந்த அன்டன் பாலசிங்கம் தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அவர் பிரபாகரனுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களை அதில் பதிவுசெய்துள்ளார்.

எனவே சிங்கள மக்களிடம் வாக்குறுதி கொடுத்த தரப்புக்கள் அதனை மீறி ஒருபோதும் செயற்படப்போவதில்லை என்பதே உன்மை.

மேலும் சந்திரிக்கா தீர்வு தருவார் என கூறுவது மிகமோசமான பாதைக்கு தமிழ் மக்களை அழைத்துச் செல்லூம் பாதையாகும். மேலும் புதிய அரசாங்கத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என சம்மந்தன் ஐயா கூறியிருக்கின்றார்.

எவ்வாறு சரியாக பயன்படுத்துவது? நாம் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். எப்போதென்றால் தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாமல் ஆட்சிமாற்றம் இல்லை. என்பதை உணர்ந்துகொண்டபோது அந்த தரப்புக்களுடன் பேரம் பேசப்பட்டிருந்தால் நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனால் இன்று வடகிழக்கிற்கு வரும் வெளிநாட்டவர்கள், கூறுகின்றார்கள் தமிழர்கள் எதனையும் கேட்கவேண்டாம். அது சிங்கள மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி விடுகின்றது.

எனவே அமைதியாக இருங்கள் மீண்டும் மஹிந்தாவை கொண்டுவந்துவிட வேண்டாம் என்று. எனவே நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை கூற கூட வழியில்லாத போது எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது?

எனவே நாம் கூட்டமைப்பிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், கூட்டமைப்பின் கடந்த 5வருடகால இராஜதந்திரம் எதனை சாதித்தது?

சர்வதேச விசாரணை உள்ளூர் விசாரணையாக மாறிவிட்டது. தமிழ்தேசம் என்ற அடிப்படையிலான தீர்வு 13ம் திருத்தச் சட்டமாகிவிட்டது. இதனைவிட எதுவும் சாதிக்கவில்லை. என்பதே உன்மையாகும். எனவே கூட்டமைப்பு மற்றவர்களுடைய நலன்களுக்காக, தமிழ் மக்களை அழிவுகளுக்குள் தள்ளியதுபோதும் என்றார்.

tamilwin.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்திக்கு சித்தம்போக்கு சிவம்போக்கு எனக் கருத்துக்கூறாமல் தர்க்கரீதியான விவாதங்களை முன்வைக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தில் இருந்த போதே சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதே தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை தராமல்.. போரை திணித்து.. போர் வெற்றியின் உச்சியில் நின்று கொண்டு.. ஒரு அரைகுறை தீர்வை திணிக்க முயல.. அதற்கு வக்காளத்து வாங்கிய சம்பந்தன் மூலம் அதிகாரத்தில் இல்லாத சந்திரிக்கா.. பிரச்சனைகளை தீர்ப்பார் என்று நம்பினால்.. அது தமிழ் மக்களின் முழு முட்டாள் தனமே அன்றி வேறில்லை.

 

சம்பந்தன் செய்வது சோரம்போதல் அரசியல். அதற்கு.. ஓர் இனத்தின் எல்லா துயர்களையும் விலையாக்கி அந்த இனத்தை முழு அடிமையாக்கும் செயலை எந்த ஒரு உருப்படியான.. மனித சமூகமும் ஏற்றுக் கொள்ளாது.  :icon_idea:

Link to comment
Share on other sites

கனவுகள் நனவாக மாற மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
 
 
 
 
Gajan_CI.jpg

 

 

கனவுகள் நனவாக மாற மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-
 
பேரம் பேசி வாக்குறுதிகளை பெற்றிருந்தாலே தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பலாபலனை அடைந்திருக்கமுடியும். ஆனால் அவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டு இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசின் பலாபலன்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வது பற்றி பேசிக் கொண்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.
 
 யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில் கூட்டமைப்பின் பதிவு என்பது இப்போதைக்கு ஒன்றும் முக்கியமானதல்ல. அதன் கொள்கையே இப்போது முக்கியமானது.
 
முன்னர் நாங்கள் கூட்டமைப்பிலிருந்த போது பங்காளிக் கட்சிகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தவிர்ந்தவை தேசியம் தன்னாட்சி, சுயநிர்ணயம் போன்றவற்றை முன்னிறுத்துவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் அதனால் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளது பெரும்பான்மையென்ற வகையில் அதனையே கூட்டமைப்பின் நிலைப்பாடாக முன்னெடுக்கப் போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அப்போது தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது தெரிந்ததே.
 
ஆனால் இப்போது அதே சம்பந்தன் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் ஜனநாயக ரீதியில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை முன்னிறுத்தியே பதிவு செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டியிருப்பதாக கூறுகின்றார். இப்போது கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பில் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்திவருகின்ற நிலையில் இப்போது அவர் கூறுவது எந்தவகை ஜனநாயகமெனவும் கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.
 
இவர்களது இராஜதந்திரங்களை நம்பி நம்பி தமிழ் மக்கள் நடுத்தெருவிற்கு வந்து அழிந்தது போதும். இந்த 65 வருட போராட்டம இலட்சியம், நோக்கம், இழப்பு அனைத்துமே வீணானவையல்ல. அவற்றை வீணான இழப்பாகவும் மாற்ற முடியாது. கனவுகள் நனவாக மாற மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
 
Link to comment
Share on other sites

மற்றவர்களை விமர்சிக்க முன் கஜேந்திரகுமார் அரசியலுக்கு வந்து என்ன சாதித்தார் ?இவர் மட்டுமில்லாமல் இங்கு கருத்தெழுதும் சிலரும் வெத்து வேட்டுகள்தான் .

Link to comment
Share on other sites

சந்திரிக்கா செய்த இனக்கொலைகள்  எத்தனை எத்தனை? இவர் இனப்பிரச்சனையை தீர்ப்பார் என்[பது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது. சிங்கலத்தில் இதய சுத்தியான தலைவர் வராத வரை தமிழர்களுக்கு தீர்வு இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை விமர்சிக்க முன் கஜேந்திரகுமார் அரசியலுக்கு வந்து என்ன சாதித்தார் ?இவர் மட்டுமில்லாமல் இங்கு கருத்தெழுதும் சிலரும் வெத்து வேட்டுகள்தான் .

அப்ப கஜேந்திரகுமாரும் மக்களை ஏமாற்றவேண்டும் என்கிறீர்களா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை விமர்சிக்க முன் கஜேந்திரகுமார் அரசியலுக்கு வந்து என்ன சாதித்தார் ?இவர் மட்டுமில்லாமல் இங்கு கருத்தெழுதும் சிலரும் வெத்து வேட்டுகள்தான் .

இந்த வெத்து வேட்டத்தான் உங்கட ஆட்கள் கூப்பிடுகினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விபரித்தால், கூட்டமைப்பு தமிழ் தேசியவாதத்தை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது என்பதை சம்மந்தன் மக்களுக்கு முன்பாக ஒத்துக்கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

இன்றையநிலையில் இரண்டே இரண்டு தெரிவுகள் தான் தமிழருக்கு..

1 - கூட்டமைப்பு

2 - தமிழ்த்தேசிய மக்கள் முண்ணணி

 

 தமிழ்த்தேசிய மக்கள் முண்ணணிக்கான கதவை தமிழ்மக்கள் மூடிவைத்திருப்பதற்கு காரணம் காலம்.

ஆனால் அந்தக்காலத்தை நிர்ணயிப்பது நிச்சயமாக கூட்டமைப்பாகத்தான் இருக்கும்.

முகமாலையால் புலிகளைத்தோழில் தூக்கி வந்ததைப்போல

மக்கள் கதவை உடைத்து  தமிழ்த்தேசிய மக்கள் முண்ணணியை தூக்கிவரும் காலத்தை கூட்டமைப்பின் நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

 

மீண்டும் கூட்டமைப்பு தனக்கு கிடைத்த காலத்தை பயன்படுத்தி

தமிழ் மக்களுக்கு எதையாவது செய்யணும் என்பதே எதிபார்ப்பு

பின்னர் அழுது புலம்பி  பிரயோசனமில்லை

முன்பு பெடியளிடம் கொடுத்துவிட்டு அழுதது போல...

 

 

Link to comment
Share on other sites

அண்ணா உந்த கஜேந்திரர் முன்னணியை நன்கு தெரிந்த மட்டில் சொல்கிறேன்

அவர்கள் கையால் ஆகாத ஆக்கள்

இதை இருந்து பாருங்கள்

பெடியள்ண்ட கால் தூசுக்கும் இவர்களை ஒப்பிட முடியாது

இவர்களின் செயல்பாடுகளை யாழ்ப்பாணத்தில் ஆதரிப்பார்கள் என்று நினைக்கவில்லை

இவர்கள் பார்லிமென்ட்டில இருந்த காலத்தில் என்னத்தை புடிங்கினவை?

கட்டைகழுத்து கஜேந்திரனுடன் நிண்ட எத்தனை பெடியள் செத்தவங்கள்(எனது பல நண்பர்கள் உட்பட), அப்ப எங்க போனவர்?

இவர்களை பார்லிமென்ட்டுக்கு அனுப்ப வேலை செய்ததிற்கு இன்றும் எனது மனம் குமுறுகின்றது

இவைகள் யாழ்ப்பாணத்தில் உதவித்திட்டம் ஒன்றை செய்யும் முன்னரே facebookஇல் படம் போட்டு விடுவார் மணி(லோயர்)

இவை கூடுதலா லோயர் பரம்பரை, கட்டை கழுத்தை தவிர

இங்கு பரம்பரை லோயர்களின் ஆட்டம் தான்

என்ன கூட்டமைப்பில் உள்ள சில போக்கிலிகளால் இவர்கள் வாழ்கிறார்கள்

முகமாலையால் இயக்கம் வரும்போது அங்குதான் இருந்தேன், அன்றைய தினம் பின்நேரம் நல்லூரில் திலீபன் அண்ணா மரணித்த அதே இடத்தில் ஒரு கூட்டம் ஒன்று நடைபெற்றது, அங்கு கட்டை கழுத்து கஜேந்திரன் ஆற்றிய உரையை கேட்டிருந்தால் தெரியும் அவரது பீத்தல்

ரணில் ஆட்சிக்கு வந்தா பிறகு தொடங்கிட்டினம்

எல்லாம் ரணிலின் குள்ள நரிதிட்டம் நடந்தேறுகின்றது என்பதே வெளிச்சம் :icon_idea:

ஏன் அது சரி,

குமார் போன்னம்பலம் சந்திரிக்காவின் வால் தானே

இன்றும் இவர்கள் சுனத்திரா பண்டாரநாயக்கவுடன் கடும் ஒட்டு :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.