Jump to content

சுண்ணாகத்து தண்ணியில் எண்ணை” திட்டமிட்ட செய்யலா ? ஐயம் வலுக்கிறது


Recommended Posts

13929028Natn-600x396.jpg

 

”வலிகாமம் பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நோர்தன் பவர் நிறுவனம் காரணம் இல்லை. எவ்வாறு ஏற்பட்டது என்பதற்காக காரணத்தை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து வெளியிடவேண்டும்.
 
கடந்த சில மாதங்களாக சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலப்பு தொடர்பான செய்திகள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
அதில் எமக்கு தெரிந்த சில உண்மைகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கவேண்டியது அவசியம்.
நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிலையம் 2009ஆம் ஆண்டு செயற்பட ஆரம்பித்திருந்தது. அதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான அஸ்ரம் கூல் எயார் நிறுவனம் மின் உற்பத்தி செய்தது.
 
சுன்னாகம் பகுதியிலுள்ள விவசாய அமைப்புக்களின் தலைவர் 2008ஆம் ஆண்டு அந்தப் பிரசேத்திலுள்ள நீரில் ஒயில் கலப்பு அவதானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். அந்த காலத்தில் முனைப்புடன் எந்த செயற்பாடுகளும் நடைபெறவில்லை.
 
இதுவரை நொர்தேன் பவர் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்ட எண்ணெய்யின் மூலம் தான் கசிவு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஊடகங்கள் மூலம் எந்த முடிவுக்கும் நாம் வரமுடியாது. மக்களுக்கு எதிரான செயற்பாட்டில் நாம் இதுவரையில் ஈடுபடவும் இல்லை, ஈடுபடப்போவதுமில்லை. உண்மை நிலை அனைவருக்கும் வெகுவிரைவில் தெரியப்படுத்தவேண்டும்.எமது நிறுவனத்தில் 54 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனார்கள்.
 
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நொர்தேன் பவர் நிறுவனத்தின் இயந்திரங்களை பராமரிப்பு செய்வதற்காகவும், நீதிமன்றில் கோரிக்கை விடுத்து அதற்கு தற்போது அனுமதி பெற்றுள்ளோம்.இதுவரை காலமும் எமது நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்யை விற்பனை செய்கிறோம். அதை மண்ணுக்குள் விடவேண்டிய தேவை இல்லை. மிகுதி கழிவுகளை நிலத்துக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தாங்கியின் மூலம் வெளியேற்றி வருகின்றோம். ”
 
இங்கு அவரால் கூறப்பட்டவைகள் பொய்யானவைகளாகவும், ஏமாற்றுப் பேச்சுக்களாகவும்தான் உள்ளன.
முதலாவதாக, எஸ்.ராஜகுரு என்பவர் மல்லாகம் நீதி மன்றத்தால் பூட்டப்பட்டுச் சீல் வைக்கப்பட்ட நொதேர்ன் பவர் கொம்பனி பராமரிப்பு வேலைகளைச் செய்வதற்கு நீதி மன்றம் அனுமதி வழங்கியதாகக் கூறியிருப்பதைப் பார்ப்போம்.
இது தொட்ர்பாக ராஜகுரு பின்வருமாறு கூறியுள்ளார்
 
”நொர்தேன் பவர் நிறுவனத்தின் இயந்திரங்களை பராமரிப்பு செய்வதற்காகவும், நீதிமன்றில் கோரிக்கை விடுத்து அதற்கு தற்போது அனுமதி பெற்றுள்ளோம்.” இது முற்றிலும் பொய்யானது!!
 
நொதேர்ன் பவர் கம்பனியார் தமது என்ஜின்களை ஓட்டாது நீண்டகாலம் விட்டால் அவை பழுதடைந்துவிடும் எனக் கூறி, மேல் நீதிமன்றத்தில் என்ஜின்களைப் பராமரிக்க அனுமதி கோரியிருந்தனர். அதற்கு மேல் நீதிமன்றம் மல்லாம் நீதிமன்றத்தின் பதிவாளரின் முன்னிலையிலும், இலங்கை மின் சார சபையின் பொறியிலாளரதும், 11 வழக்காளிகளின் சார்பிலான பொறியியலாளரதும் முன்னிலையிலும் பராமரிப்பு வேலைகளைச் செய்ய சென்றவாரம் அனுமதியை வழங்கியிருந்தது.இது பற்றி ஏற்கனவே இந்த முகநூலில் செய்தி போடப்பட்டிருந்தது.
 
ஆனால்,மல்லாகம் நீதி மன்ற பதிவாளர் என்ஜின்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியைத் திறந்து விட்டபோது, உள்ளே நுழைந்த தொதேர்ன் பவர் கம்பனியினர் கொழும்புடன் தொடர்பு கொண்ட பின்னர்,, கட்டிடத்தைக் கூட்டும் வேலைகளில் மாத்திரம் ஈடுபட்டனர். என்ஜின்களைப் பராமரிக்கும் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. அது மாத்திரமன்றி, தாம் தொடர்ந்தும் உள்ளேயே நிற்கவுள்ளோம் என்றும் கூறினர்.
 
இதனால் மல்லாகம் நீதிமன்றப் பதிவாளர் நீதிவானுக்கு விடயங்களைக் கூறிய நிலையில், நீதிவானின் உத்தரவில் நொதேர்ன் பவர் கொம்பனியார்கள் பொலீசாரால் வெளியே விரட்டப்பட்டு, மீண்டும் அவர்களின் மின் நிலையம் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டது!
 
இதன் பின்னர், மேல் நீதி மன்றம் இனிவரும் 10ஆம் திகதியன்றே வழக்கினை விசாரணை செய்ய தேதியை நேறறைய தினம் நிர்ணயித்திருந்தது! இந்தநிலையில், இந்த ராஜகுரு என்பவர் யாழ்ப்பாணத்தில் மேல் நீதி மன்றத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாகவே முழுப் பொய்யினைக் கூறியுள்ளார்! அவர் நீதி மன்றத்தில் நடைபெற்றவைகளையே பொய்யாகக் கூறத் துணிந்துவிட்டார். முன்னைய ஆட்சியின்கீழ் நீதித் துறைக்கு நடைபெற்றவைகள் போன்று, இன்று வடக்கின் நீதித்துறைக்கு நொதேர்ன் பவர் கொம்பனியால் உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வியை இது எழுப்பவைக்கிறது!
 
இப்படி நீதி மன்ற விடயங்களிலேயே பொய் சொல்லும் நொதேர்ன் பவர் கொம்பனியினர் தமது செயற்பாடுகள் தொடர்பாகக் கூறுகின்றவைகள் எவ்வளவு பொய்யாக இருக்கமுடியும் என்பதை ஒருவர் சுலபமாக ஊகிக்கமுடியும்.
இந்த நொதேர்ன் பவர் கொம்பனியினர் மல்லாகம் நீதி மன்றத்தில் முதலில் சமர்ப்பிருந்த சத்தியக்கூற்றில், வழக்குத் தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட11 பேரும், அவர்கள் சார்பில் தோன்றும் சட்டத்தரணிகளும் புலிகளின் சார்பான ஆட்கள் எனக் கூறி, சில்லறை இனவாதம் நீதி மன்றத்தில் பேசிய நிலையில், சட்டத்தரணிகள் அதைத் தீவிரமான எதிர்த்த நிலையில், நீதிவான் நீதி மன்றத்தில் இனவாதத்திற்கு இடமில்லை எனக் கொழும்பிலிருந்து வந்து கம்பனி சார்ப்பில் தோன்றிய சட்டத்தரணிகளை எச்சரித்து.சத்தியக் கூற்றில் இனவாதம் பேசியிருந்த இரண்டு பந்திகளையும் நீக்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்,
 
அப்பந்திகள் நீக்கப்பட்ட பின்னர்தான் அச்சத்தியக்கூற்று நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டிருந்தது!
இது மாத்திரமல்ல. மேல் நீதிமன்ற விசாரணையின்போது, நொதேர்ன் பவர் கொம்பனி சார்பில் தோன்றிய சிங்களச் சட்டத்தரணி ”தோசைக் கடை” என விமர்சனம் செய்த நிலையில், தமிழ்ச் சட்டத்தரணிகளது காரசாரமான பேச்சுக்களால் வாயடைத்தும் நின்றிருந்தார்!
 
இவை நொதேர்ன் பவர் கொம்பனியாரினதும், அவர்கள் சார்பில் தோன்றிய சிங்களச் சட்டத்தரணிகளதும் இனவாதப் போக்கினையும், ஒருவிதம மேலாதிக்கச் சிந்தனைப் போக்கினையும்தான் அப்பட்டமாகக் காட்டியிருந்தது!
இப்படியான கொம்பனியினர் என்னென்ன விடயங்களைச் சட்டத்திற்கு முரணாகச் செய்திருந்தனர் என்பதை, முழுமையாக ஆராய்ந்துதான் அறியவேண்டும்.
 
எதுவிதத்திலும், கழிவு எண்ணெய்கள் தொடர்பாக ராஜகுரு என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
”இதுவரை காலமும் எமது நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்யை விற்பனை செய்கிறோம். அதை மண்ணுக்குள் விடவேண்டிய தேவை இல்லை. மிகுதி கழிவுகளை நிலத்துக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தாங்கியின் மூலம் வெளியேற்றி வருகின்றோம். ”
 
ஆனால், நொதேர்ன் பவர் கொம்பனியின் இயக்குகை தொடர்பாகப் பல சட்டபுர்வமான கேள்விகள் எழுப்பப்படவேண்டியுள்ளன, பொறியியல் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படவேண்டியுள்ளன.
முதலாவதாக, இந்தக் கொம்பனி எத்தனை MW மின்சக்தியை உற்பத்திசெய்யும் மின்பிறப்பாக்கிகளைக் கொண்டது என்பது மிக முக்கியமானதாகும்.
 
ஏன் எனில் 30 MW இற்கு மேற்பட்ட மினசக்தியை உற்பத்தி செய்வதாயின், அந்த மின் நிலையத்தை அமைப்பதில் வேறு விதமான பலதரப்பான சட்டதிட்டங்கள் உள்ளன.
இதைவிட, இந்தக் கொம்பனியானது செயற்பட எந்த ஆண்டில் அனுமதி எழுத்து வடிவில் வழங்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.
 
மேலும், இந்தக் கொம்பனியிடமிருந்து மின் சக்தியைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை எழுதியிருந்த இலங்கை மின்சாரசபை ஒப்பந்தத்தில் எவையெவைகளைச் சட்டத்திற்கு இணங்கவும், சட்டத்திற்கு முரணாகவும் குறிப்பிட்டிருந்தது என்பது மிகமுக்கிய கேள்வி.
 
ஒப்பந்தத்தில் இந்த என்ஜின்கள் என்ன எரிபொருள் கொண்டு இயக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது? உண்மையில் இந்த என்ஜின்கள் எந்த எரிபொருள்கொண்டு இயக்கப்பட்டன?
 
மேலும், இந்தக் கொம்பனி எவ்வளவு மின்சக்தியை உண்மையில் ஒவ்வொரு மாதமும் இலங்கை மின்சார சபைக்கு என்ன விலைக்கு விற்று வந்துள்ளது என்பதும் முக்கியமானதாகும்.
 
இவைகளைவிட, இந்தக் கம்பனியின் என்ஜின்கள் எந்த நாட்டின் எந்தக் கம்பனியால் எப்போது உற்பத்தி செய்யப்பட்டது, அவற்றின் வியாபாரத்திற்கான பெயர் என்ன, அவை எப்போது முதன் முதலாக எந்தக் கம்பனிக்கு விற்கப்பட்டிருந்தன, நொதேர்ன் பவர் கம்பனி அதனது இந்த என்ஜின்களைப் புதிதாகத்தான் வாங்கியிருந்ததா, அல்லது அவை பழைய என்ஜின்களா, இலங்கை மின்சார சபையுடன் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா, சட்டவிதிகளுக்கு இணங்கத்தான் மின் சக்தியை மின்சார சபை கொள்வனவு செய்துள்ளதா எனப் பல கேள்விகள் எழுகின்றன.
 
இவற்றைவிட, இந்த ஒரு என்ஜின் சராசரியாக ஒரு வருடத்தில் எவ்வளவு கழிவு எண்ணெய்களை உருவாக்கும், ஒரு வருடத்தில் எத்தனையாயிரம் லிற்றர் கழிவு எண்ணெய்களை அனைத்து என்ஜின்களும் உருவாக்கியிருக்கும், இந்தக் கொம்பனி செயற்பட்டுவரும் மொத்தக் காலத்தில் எத்தனை லட்சம் லிற்றர் கழிவு எண்ணெய்கள் சுண்ணாகத்தில் உற்பத்தியாகியிருக்கும், இவற்றை எப்படி கம்பனி முகாமைப்படுத்தியது, அதற்கான ஆதாரங்கள் எவை, …… எனப் பல தொழில் நுட்பம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன.
 
இவைகளுக்கெல்லாம் நொதேர்ன் பவர் கொம்பனி ஆதாரபூர்வமான விடைகளைக் கொடுக்கவேண்டும்.
இவைகளைவிட, இன்று தொழில் நுட்பம் முன்னேறியுள்ள நிலையில், பரிசோதனைகளுடாகச் சுண்ணாகம் மின்னிலையப் பகுதியில் எவைகள் கடந்த காலத்தில் நடைபெற்றன என்பதைச் சுலபமாக அறியமுடியும்.
இந்த நிலையில், நொதேர்ன் பவர் கொம்பனி எவற்றையும் கூறமுடியும். ஆனால், எவை உண்மையனவை, எவை பொய்யானவை என்பதை ஆய்வுகளுடாகச் சுலபமாக உறுதிப்படுத்த முடியும்.
 
பொய்களையே சகலவற்றிலும் கூறிவரும் இனவாதப் பேச்சுப் பேசும் நொதேர்ன் பவர் கொம்பனியர்கள் சொல்வதெல்லாம் பொய் என்றே ஒருவரைக் கருத வைக்கும். ஐயா ராஜகுரு! யாழ்ப்பாணத்தில் வசிப்பர்களுக்கு எதுவும் தெரியாது என்று மாத்திரம் நினைக்கவேண்டாம். ”சர்வதேசம்” கொஞ்சம் நசுக்கிவிட்டது. அவ்வளவுதான்!
 
பரிசோதனைகள் முடிந்த பின்னர், எவரெவர்கள் குற்றவாளிகள் என்பது சரியாகத் தெரியும். ஆகவே, சில்லறை அரசியல் நடாத்தாது இருந்துகொள்வது நல்லது ஐயா! எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது
 
Link to comment
Share on other sites

கிணற்றில் வந்த எண்ணையையும், நிறுவனத்தின் எண்ணையையும் பகுப்பாய்வு செய்தால் முடிவு தெரிந்துவிடுமே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.