Jump to content

போதை மருந்து கடத்திய ஆண்ட்ரூ சான் - மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை


Recommended Posts

போதை மருந்து கடத்திய ஆண்ட்ரூ சான் - மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை:-

 
 

 

 

இந்தோனேசியாவில் மரண தண்டனை  விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும்  தீவிற்கு அவுஸ்ரேலிய நேரம் காலை 5.18 மணிக்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்த 2 குற்றவாளிகளும் பாதுகாப்புப் படையினரும் இரண்டு விமானங்களில் ஏற்றிச் செல்லப்படவுள்ளனர். அதற்காக 100 பொலிசார், தண்ணீர் பாச்சும் வாகனங்கள், கவசவாகன இராணுவ படைப்பிரிவு பாலி கெரோபொகன் சிறைச்சாலைக்கு வெளியியே காவல் காக்க பாலி விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் இருவரும் விமான மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்ள இந்தோனேசியாவின் மத்திய யாவா நுஸகம்பகன் தீவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்... இந்தோனேசிய நேரம் மதியம் இவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதன் மூலம் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

அவர்களுடன் பாலி சிறையிலிருந்து மேலும் இருவர் கொண்டுசெல்லப்படுவார்கள் என அசோஸியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

45 வயதாகும் நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர், ஸ்பெயினைச் சேர்ந்த 30 வயதுப் பெண்மணி ஒருவர் ஆகிய இரண்டு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது.

நைஜீரியா, பிரேஸில், ஃப்ரான்ஸ், கானா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு பேரோடு சேர்த்து இவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து ராஜதந்திர ரீதியாக முயற்சித்து வந்தததுது.

2005ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலிருந்து ஹெராயினை கடந்த முயன்றதாக சான் மற்றும் சுகுமாரன் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் திருந்திவிட்டதாக இவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.

இவர்களைக் காப்பாற்ற தொடர்ந்து சட்டரீதியாகப் போராடிவந்ததாக இவர்களது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இவர்களது கருணை மனுக்களை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு மேலதிகமாக சட்ட ரீதியான வாய்ப்புகள் ஏதும் இல்லையென தெரிவிக்கப்பட்டது.

இம்மாதத் துவக்கத்தில், தற்போது உயிரோடு இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சானையும் சுகுமாரனையும் விடுவிக்கும்படி கோரினர்.

இந்தோனேசியாவில் நான்கு ஆண்டுகளாக மரண தண்டனை இருந்த தடை 2013ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.

http://globaltamilnews.net/gtmn/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117203/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

2005ம் ஆண்டு இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜையான மயூரன் சிவகுமாரன் என்ற தமிழரின் மனுக்கள் அணைத்தும் நிராகரிக்கப்பட்டு அவர் மரணதண்டணையை எதிர்கொள்வதற்கான அதிபாதுகாப்புச் சிறைக்கு இந்தோனேசிய நேரப்படி மார்ச் நான்காம் திகதி புதன்கிழமை மாற்றப்படவுள்ளார்.

நுசாகம்பங்கனொன் என்ற தீவிலியே இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும். அந்தத் தீவிற்கு புதன்கிழமை மாற்றப்படும் இவர்களிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 72 மணித்தியாலங்களிற்கு முதலே விவகாரம் தெரிவிக்கப்படும். இந்தத் தீவிற்கு புறப்படுவதற்கு தயாராகிவிட்ட மயூரன் சிவகுமாரன் தனது ஆடைகள் மற்றும் உபயோகித்த பொருட்களை ஏனைய சிறைக்கைதிகளிற்கு பகிர்ந்தளித்து “நன்றாக நடவுங்கள்”, “அவதானமாக இருங்கள்” என அறிவுரை கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா அதீத அழுத்தத்தைப் பிரயோகிக்காதவிடத்து இந்த வார இறுதிக்குள் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றுப்பட்டுவிடும். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தங்களது அரசு தங்களினாலான அழுத்தத்தைக் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இவர்களின் விடுதலைக்கு ஆதரவாக கடந்த மாதம் மெழுகுவர்த்திப் போராட்டம் இடம்பெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். அதில் கலந்து கொண்ட மயூரனின் பேத்தியார் மயூரனை நீங்கள் விடுதலை செய்யாமல் விடுங்கள் நாங்கள் தாங்குவோம். ஆனால் கொல்லாதீர்கள். இந்தோனேசியா ஜனாதிபதியை மன்றாட்டமாகக் கேட்கிறேன், தயவு செய்து கொல்லாதீர்கள் எனத் தெரிவித்திருந்தார்.

தனது 24வது பிறந்த தினத்தன்று ஏப்ரல் 17ம், 2005ல் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் வைத்து கைது செய்யப்பட்ட மயூரன் சிவகுமாரனிற்கு 2006ம் ஆண்டு மரணதண்டை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கெதிராக கொடுக்கப்பட்ட கருணைக் கோரிக்கை மனு இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நிராகரிக்கப்பட்டிருந்தது.

“பாலி-9” என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் ஒன்பது பேரடங்கிய குழுவில் ஒருவராக இருந்த மயூரன் சிவகுமாரன் சிறையில் இருந்த போது அங்கே பல மாறுதல்களைக் கொண்டு வந்திருந்தார். தான் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் கலைப்பட்டதாரியாகச் சிறப்புத் தேர்வு பெற்றதோடு,

சிறைச்சாலையில் ஆங்கிலம், கணனி, கணனிவரைகலை, கணக்கியல் போன்ற பாடங்களை கற்பித்ததோடு தானிருந்த சிறைப்பகுதிக்கான தலைமை சிறைக்கைதியாக ஏனையவரை வழிநடத்தும் பொறுப்பையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார்.

அத்தோடு தங்களது சித்திரங்கள், வரைகலைகள் விற்பதற்கான வியாபாரநிறுவனமொன்றையும் ஆரம்பித்து அதனூடே தங்களது தயாரிப்புக்களை விற்பனை செய்து வந்தார். ஒரு சகோதரனையும், ஒரு சகோதரியையும் உடன்பிறப்பாகக் கொண்டிருந்த மயூரன் மற்றும் அவரது நண்பரான சீன இனத்தவர் இருவருமே தற்போது மரணதண்டனையை எதிர்காத்திருக்கின்றனர்.

மரணதண்டனையை உறுதிசெய்யப்பட்டதை அறிந்தவுடன் தனது வயிற்றில் யாரோ உரக்கக் குத்தியதைப் போன்ற வலியைத் தான் உணர்ந்ததாகவும், தன்னைப் பார்க்க வந்த அம்மா நிலத்தில் வீழ்ந்து அழுதபடியே இருந்ததாகவும், தனது தங்கை தேம்பியழுதபடி வார்த்தையில்லாமல் வாயடைத்து நின்றதாகவும் தனது தம்பியோ அதிர்ச்சியடைந்து என்னசெய்வதென்று தெரியாமல் நின்றதாகவும் தெரிவித்த மயூரன்,

புனர்வாழ்வு என்பதன் அர்த்தம் என்ன? எங்களுடைய குடும்பங்கள் இத்தனை துண்பத்தைப் பெறக்கூடாது. நாங்கள் இந்த மரணதண்டணைக்குரியவர்கள் அல்ல எனத் தெரிவித்திருந்தார்.

மயூரன் வரைந்த படங்கள் சிறந்த பரிசைப் பெறுவதற்கான போட்டியொன்றிற்கு அனுப்பப்பட்டதும், மயூரனின் திறமையைக் கண்ணுற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் சிறைச்சாலை சென்று மயூரனிற்கு பயிற்றுவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மயூரன் இல்லாத சிறையை தங்களால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது என அவருடன் சிறையிலிருக்கும் ஏனைய மரணதண்டனைக் கைதிகள் தெரிவித்தனர். மயூரணின் கருணைமனுவை நிராகரித்த இந்தோனேசிய ஜனாதிபதி தற்போது போதைப்பொருள் கடத்தலிற்காக கடந்த காலங்களில் மரணதண்டணை விதிக்கப்பட்டுள்ள 64 பேருக்கும் மரணதண்டனையை நிறைவேற்றும் படி குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசிய நடைமுறைப்படி மரணதண்டனை கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். 12 பேர் கொண்ட குழு ஒவ்வொரு கைதிக்கும் நியமிக்கப்படும். மூன்று காவலர்களின் துப்பாக்கிகளில் உண்மையான சன்னங்களும் ஒன்பது காவலாளிகளின் துப்பாக்கிகளில் சத்தம் மாத்திரம் வருகின்ற சன்னங்களும் இருக்கும். அனைவரும் ஒரே நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்வார்கள். உண்மையான சண்ணங்கள் எந்தத் துப்பாக்கியில் இருந்து சென்றன என்பது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்பவர்களிற்கு தெரியாது. இது ஒரு கொடுரமான மரணதண்டனை முறையாகக் கருதப்படுகின்றது.

Mayooran-600x674.jpg

 

Mayooran4-600x400.jpg

mayooran-last-600x403.jpg

 

 

 

Mayooran3.jpg

 

 
p://www.canadamirror.com/canada/38756.html#sthash.3to8x8kW.dpuf

 

Link to comment
Share on other sites

இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல் காரர்களான சான் மற்றும் சுகுமாரன் ஆகிய இருவரும் பாலி சிறையிலிருந்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உள்ள கவச வாகனங்கள் படகில் ஏற்றப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படும் தீவுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

விரைவில் துப்பாக்கி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் ஒன்பது பேரில் சானும் மயூரன் சுகுமாரனும் அடக்கம். இவர்களுக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என ஆஸ்திரேலியா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. பாலியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஹெராயினைக் கடத்த முயன்றபோது பிடிபட்ட இவர்கள் இருவரும் 2005ஆம் ஆண்டில் தண்டிக்கப்பட்டனர்.

போதைப் பொருள் வர்த்தகம் இந்தோனேஷியாவில் பலரது வாழ்க்கையைச் சீரழிக்கிறது. தண்டிக்கப்பட்டவர்களுக்குத் தான் கருணை காட்டப்போவதில்லையென அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். பாலியிலிருக்கும் கெரோபோகன் சிறையிலிருந்து இன்று அதிகாலையில் சானும் சுகுமாரனும் கவச வாகனங்களில் ஏற்றப்பட்டு நுஸகம்பன்கன் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மரண தண்டனை அங்குதான் நிறைவேற்றப்படும்.

சான், சுகுமாரன் இருக்கும் வாகனங்கள் விஜயபுர துறைமுகத்தில் வந்து இறங்கியுள்ளன. இங்கிருந்துதான் நுஸகம்பகன் சிறைக்குச் செல்லமுடியும். இந்த வாகனம் சென்ற பிறகு, சானின் சகோதரர் மைக்கல், சுகுமாரனின் தாய் ராஜி ஆகியோர் சிறைக் காவலர்களுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவர்கள் குற்றவாளிகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லையென ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என தெளிவாகத் தெரியவில்லை.

அவர்கள் மிக மோசமான குற்றத்தைச் செய்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட், ஆனால், தாங்கள் மரண தண்டனையை ஏற்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இந்த இருவருடன் மரண தண்டனை விதிக்கப்பட்ட 45 வயதாகும் நைஜீரிய ஆண் ஒருவரும் ஸ்பெயினைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவரும் பாலி சிறையிலிருந்து இவர்கள் இருவருடன் சேர்ந்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

சான், சுகுமாரன் ஆகிய இருவரும் சிறையில் இருந்த காலகட்டத்தில் திருந்திவிட்டதாகவும் அதனால் அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என இவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியா கோரிக்கை இம்மாதத் துவக்கத்தில், தற்போது உயிரோடு இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சானையும் சுகுமாரனையும் விடுவிக்கும்படி கோரினர். பிரெசில், ஃப்ரான்ஸ் நாட்டுக் குடிமக்களும் இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர் நோக்கிக் காத்திருக்கும் நிலையில், இவ்விரு நாடுகளும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியத் தூதரை அழைத்து பிரான்ஸ் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரெசிலுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியத் தூதரை ஏற்பதற்கு அந்நாட்டு அதிபர் மறுத்துவிட்டார். இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால், 9 வெளிநாட்டவரும் ஒரு இந்தோனேசியரும் கொல்லப்படுவார்கள். அந்நாட்டின் தற்போதைய அதிபர் விடோடோ பதவிக்கு வந்த பிறகு, போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்கொள்ளும் இரண்டாவது குழு இது.

ஜனவரி மாதத்தில் 5 வெளிநாட்டவர் உள்ளிட்ட ஆறுபேருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நெதர்லாந்து, பிரெசில் நாட்டைச் சேர்ந்தவர்களும் இதில் அடக்கம் என்பதால், இந்தத் தண்டனைகள் ராஜதந்திர உறவுகளைக் கடுமையாகப் பாதித்திருப்பதாகக் கூறி, இந்தோனேசியாவுக்கான தங்கள் தூதர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டன. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக உலகிலேயே மிகக் கடுமையான தண்டனைகளைக் கொண்டிருக்கும் மிகச் சில நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. மரண தண்டனைக்கு நான்கு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2013ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் மரண தண்டனை வழங்கப்பட்டுவருகிறது.Majurn-01.gifMajurn-02.gifMajurn-03.gifMajurn-04.gifMajurn-05.gifMajurn.gif

 

http://www.jvpnews.com/srilanka/99601.html

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

மரணதண்டனையை எதிர்நோக்கும் மயூரன் சுகுமாரனின் விவகாரம் இரு நாடுகளிற்கு இடையேயான பலத்த உட்பூசலாக மாறியுள்ளது.

அதனால் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு மரணதண்டனைக் கைதிக்கும் கொடுக்காத பாதுகாப்பை இந்தோனேசியா அவுஸ்திரேலியப் பிரஜையான மயூரன் சுகுமாரனிற்குற்கும் அவர்களை சிறை மாற்றிய போது கொடுத்துள்ளதோடு இப்போதும் கொடுத்து வருகின்றது.

சிறைச்சாலையில் இருந்து விமான நிலையத்திற்கு கவச வாகணங்களின் அணிவகுப்பில் அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் சென்ற வழியெங்கும் பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட விமானத்தில் இவர்கள் இருவருடனும் முகமூடி அணிந்த அதிரடிப்படையினரால் விமானம் நிறப்பப்பட்டது. மேற்படி இரண்டு மரண தண்டனைக் கைதிகளும் பறந்த விமானத்தை பாதுகாத்தபடி இந்தோனேசியாவின் இரண்டு போர் விமானங்கள் பறந்து சென்றன.

அதேபோல விமான நிலையத்திலிருந்து மரணதண்டனை நிறைவேற்றப்படும் தீவிற்கும் இவ்வாறான பலத்த பாதுகாப்புடனேயே விஜயபுர துறைமுகத்திலிருந்து (Wijaya Pura Port) இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவுஸ்திரேலியாவின் தாக்கமேதுமில்லாமல் தமது நடவடிக்கையை கொண்டு செல்லவே இவ்வாறு இந்தோனேசியா செய்துள்ளது.

இதனிடையே மேற்படி விமானத்திற்குள் இந்தோனேசியாவின் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி இரு மரணதண்டனைக் கைதிகளுடனும் ஏளனமாகக் கதைப்பது போன்ற படங்களை இன்று இந்தோனேசியப் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.

இதற்குக் கண்டனம் தெரிவித்த அவுஸ்திரேலியா இது ஒரு கோபமூட்டும் குரூரமான நடவடிக்கை என்று தெரிவித்திருந்தது. இதேவேளை இந்த விவகாரம் இந்தோனேசியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையேயான ஒரு மௌனப் போராகவே நடைபற்று வருகின்றது.

அவுஸ்திரேலியப் பிரதமர் 2004ம் ஆண்டு சுணாமியின் போது இந்தோனேசியாவிற்கு பல பில்லியன் டொலர்கள் உதவியதைக் குறிப்பிட்டு அதனைக் கருத்திற்கொண்டு இந்தோனேசியா இவர்களை விடுவிக்க வேண்டுமென சில மாதங்களிற்கு முன்னர் குறிப்பிடதிலிருந்து இந்த விவகாரம் இறுகியது.

அவுஸ்திரேலியப் பிரதமரின் கருத்திற்கு எதிரான இந்தோனேசியாவில் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இவர்களை மரண தண்டணையிலிருந்து காப்பாற்ற முயன்று வருகின்றது. இவர்கள் புனர்வாழ்வு பெற்று நல்வழிக்கு வந்துவிட்டார்கள் எனவே மரண தண்டனைக் குறைக்க வேண்டுமென்பதே அதன் வேண்டுகோளாக இருக்கின்றது.

இவர்களிற்கான மரணதண்டனை இந்த வாரம் இடம்பெறமாட்டாது என்ற கருத்து தற்போது இந்தோனேசியச் சட்டமா அதிபரிடமிருந்து வெளிப்பட்டுள்ள போதும் அவர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் தீவிலேயே வைத்திருக்கப்பட்டிருப்பதால் 72 மணிநேரத்திற்கு முன்னர் அவர்களிற்கு மரணதண்டனை விவகாரம் அறியத்தரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்ற அச்சமே தற்போதுள்ளது.

Myuran1-600x335.jpg

Myuran3-600x337.jpg

Myuran4-600x337.jpg

Myuran5-600x401.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38918.html#sthash.OuzSSJdI.dpuf

Link to comment
Share on other sites

கொலைசெய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அரச இயந்திரமும்
மன்னிப்பு கிடையாதா என ஏங்கிக் கொண்டிருக்கும் கைதிகளும்

 

10994323_862723127127095_200568251321094

Link to comment
Share on other sites

இவர்களை ஏன் மன்னிக்க வேண்டும் நுணா?

 

குற்றமே செய்யாதவர்கள் ஆயிரக்கணக்கில் உலகத்தின் சிறைச்சாலைகளுக்குள் இருக்க, தெரிந்து கொண்டே மாபெரும் குற்றம் செய்தவர்களுக்கு ஏன் மன்னிப்பு? போதைப் பொருள் என்பது ஒரு சமூகத்தினை முக்கியமாக இள வயதினரை மோசமாக சீரழிக்க கூடியது என்று தெரிந்தும் வெறும் பணத்தாசைக்காக விற்றுப் பிழைக்க முற்பட்டவர்களுக்காக சிந்தும் கண்ணீர் பிரயோசனமற்றது என நம்புகின்றேன்.

 

இவர்கள் அகப்பட்டு இருக்காவிடின் இன்றும் போதைப் பொருளை விற்றுக் கொண்டு இருப்பார்கள்..

Link to comment
Share on other sites

எதுக்கு  மன்னிப்பு  நிழலி  அண்ணா சொல்வது  தான்  எங்க கருத்தும் ,பல குடும்பம் தெருவுக்கு  வந்திருக்கும்  இவர்களால் மனிதாபிமானம் என்பது தமிழன் என்னும் ரீதியில் பார்ப்பது  தவறு அவர்கள் தண்டிக்க[டவேண்டியவர்கள் என்பதில் எந்த  மாற்று  கருத்தும் இல்லை .

Link to comment
Share on other sites

அநியாயமாக இரு உயிர் போக போகிறது. 
கூடா நட்பு கேடாய் விழையும் என்பதற்கு இது ஒரு உதாரணம். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை ஏன் மன்னிக்க வேண்டும் நுணா?

 

குற்றமே செய்யாதவர்கள் ஆயிரக்கணக்கில் உலகத்தின் சிறைச்சாலைகளுக்குள் இருக்க, தெரிந்து கொண்டே மாபெரும் குற்றம் செய்தவர்களுக்கு ஏன் மன்னிப்பு? போதைப் பொருள் என்பது ஒரு சமூகத்தினை முக்கியமாக இள வயதினரை மோசமாக சீரழிக்க கூடியது என்று தெரிந்தும் வெறும் பணத்தாசைக்காக விற்றுப் பிழைக்க முற்பட்டவர்களுக்காக சிந்தும் கண்ணீர் பிரயோசனமற்றது என நம்புகின்றேன்.

 

இவர்கள் அகப்பட்டு இருக்காவிடின் இன்றும் போதைப் பொருளை விற்றுக் கொண்டு இருப்பார்கள்..

 

 

நானும்  கொஞ்சம் குளப்பத்தில் தான் இருந்தேன்

முதலில் உண்மையில் குற்றவாளிகளா என்பதே கேள்விக்குறியாக உள்ளது....

இந்தோனிசிய சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

(இந்தோனிசிய சட்டங்களில் சிலவற்றில் எனக்கு உடன்பாடில்லை

ஆனாலும் அது அவர்களது நாடு. அவர்களது சட்டம்.)

 

இப்ப

எனது கேள்வி

கொல்லத்தான் வேண்டுமா? என்பதே..

கனகாலம் சிறைக்குள் இருந்திருக்கிறார்கள்

மனம திருந்திவிட்டதாக சொல்கிறார்கள்

அப்படித்தான் விடுதலை செய்யாது விட்டாலும்

உயிருடன் வைத்திருக்கலாமே என்பதே எனது  ஆதங்கம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.