Jump to content

ஈழத்தை ஒடுக்கும் பேரினவாதத் தீயைப் பாதுகாக்கும் ஸ்ரீலங்கா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது. 
ராஜபக்ச சகோதரர்கள் தமது ஆட்சிக் காலம் முழுவதும் ஈழ மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகளை இழைத்தமை குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் செயத மாபெரும் குற்றம் ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றமே. ஈழ மக்கள் ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்து மிகக்கொடிய போர்க்குற்றங்களை அரங்கேற்றிய ராஜபக்சக்களை விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கு மாத்திரம் இலங்கையின் புதிய ஆட்சியாளர் தயங்குவது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கோடு உள்ளக விசாரணை ஒன்றை நடத்துவதாக காட்டுவதற்காய் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தார். அந்த விசாரணைகளில் தமிழ் மக்கள்மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்து மக்கள் துணிந்து சாட்சியங்களை வழங்கியிருந்தனர். எனினும் அந்த ஆணைக்குழுவினால் அதற்கான தீர்வைக் காண முடியவில்லை. 

 
ஈழத்தில் நடந்தது என்ன? ஈழ இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன என்பதைக் கூறவில்லை. ஏனெனில் அது குற்றவாளியான மகிந்த ராஜபக்ச தப்பித்துக் கொள்ளும் நோக்கில் தனக்குத்தானே நியமித்த ஆணைக்குழு. அதனால் ஒன்றும் செய்ய முடியாது. சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற கருத்துப்பட இந்திய ஊடகம் ஒன்றில் பிரதமர் ரணில் பேசியுள்ளார். ஆனால் யுத்தக் குற்றச்சாட்டுக்களை சர்வதேச விசாரணைகளை முறியடிக்கும் திட்டங்களை புதிய அரசு வகுப்பதாக கூறப்படுகிறது.

யுத்ததின் இறுதியில் என்ன நடந்தது? என்பதை அறிய உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அமைச்சரைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன சொல்கிறார். ராஜபக்ச நடத்திய விசாரணைகளைப் போலத்தான் புதிய அரசின் விசாரணைகளும் அமையுமா? என்பதும் சர்வதேச விசாரணையை தோற்கடிக்கும் நோக்கில் உள்ளக விசாரணை ஒன்றை இலங்கை அரசு மனசாட்சியுடன் நடத்துமா என்ற கேள்விகளும் எழுகின்றன

போர்க்குற்றங்களை இழைத்தமையை முன்னைய இலங்கை அரசு ஒப்புக் கொண்டது. அதற்கு ஈடாக மிகவும் தந்திரோபாயமாக யுத்தக் குற்றச்சாட்டுகளை புதிய அரசு முறியடிக்க முயலும் எனில் அது தமிழ் மக்களுக்கு எதிராக இந்தத் தீவில் நடந்தேறிய அநீதியை மறைத்தலாகவே அமையும். போர்க்குற்றம் இனப் படுகொலை குறித்த நம்பகமான நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்ட இயலும். ஏனெனில் இலங்கை இனப் பிரச்சனையின் மெய்யான வடிவத்தை வைத்தே அதற்கான தீர்வைக் காண முடியும் அதுவே நிலைத்திருக்கும்.

 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது யுத்தத்தின் இறுதியில் என்ன நடந்தது? என்ற உண்மையைக் கண்டறிவது அவசியம் என்று தெரிவித்திருக்கின்றார். உண்மையின் மீது கட்டி எழுப்பப்படுவது தான் நிரந்தரமானது. மாறாக பொய்யின் மீதும் ஒடுக்கு முறையினாலும் மேலாண்மையாலும் அநீதிகளை மறைத்து அதன்மீது கட்டி எழுப்பப்படும் காலம் எப்போதும் பொறித்து விழக்கூடியது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி இந்தத் தவறையே செய்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உண்மைகள் யாவற்றையும் மூடி மறைத்து ஒரு ஆபத்து மிகுந்த ஆட்சியை செய்தார்.

 

உண்மைகள் எல்லாம் மறைத்து ஆட்சி புரிந்துவிட முடியும் என்று நம்பினார். இலங்கை வரலாற்றில் எவரும் செய்வதற்கு அஞ்சிய பல விடயங்களை மகிந்த ராஜபக்ச செய்தார். அவற்றில் ஒன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவது. அந்த இடத்தில் தன்னை சிங்கள மன்னன் ஆக்கினார். ஒரு இனத்தினை முழுமையாகத் திரட்டி இன்னொரு இனத்திற்கு எதிராக போர் செய்தார். 
 
ஈழப்போர்களின் கடந்த கால அனுபவங்களில் இலங்கை அரசுப் படைகள் நிறையத் தோல்விகளை தழுவியிருந்தது. தந்திரமான போர் ஒன்றின் மூலம் ஈழ விடுதலைப் போரட்டத்தை தனி ஈழ இலட்சியத்தைக் துடைத்தெறிய வேண்டும் என்று திட்டமிட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு கடுமையான இழப்புக்களை ஏற்படுத்தினார். அவர் ஏற்படுத்திய இழப்புகளை மூன்று வகைப்படுத்தலாம். மிகப்பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இரண்டு சுய மரியாதை இழக்கும் போர்க்குற்றங்களை நிகழ்த்தியமை. மூன்று தமிழ் மக்களுக்குப் பாரிய சொத்திழப்பை ஏற்படுத்தியது. இவைகள் மீண்டும் ஒருமுறை தமிழ் சமூகத்தை மேலெழாதபடி செய்யும் நோக்கத்திற்காகவே நிகழ்த்தப்பட்டது.

 

உயிரிழிப்பு என்பது இன அழிப்பு ஒன்றை மேற்க்கொள்ளுவதன் மூலம் தனி ஈழக் கோரிக்கை இனி எழாது என ராஜபக்ச கருதினார். மாபெரும் உயிரிழப்பும் அதன் மூலம் காயப்படும் இனமும் மீண்டும் எழுந்து போராடாது என்பது அவரது கணிப்பு. கொடிய போர்க் குற்றங்கள் என்பது சுயமரியாதைக்காக போராடிய இனத்தின் மீது இன மேலாண்மையை காட்டும் இனவெறுத்தலின் வெளிப்பாடாக நிகழ்த்தப்பட்ட சுயமரியாதையை கேவலப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இழப்புக்கள் ஆகும். சொத்திழப்பை ஏற்படுத்தி இனத்தின் முழுமையான வாழ்வுக் கட்டமைப்பை அழிப்பதும் அவர்களை நலிவாக்கி மீள எழாமலும் தனி நாடு கோரி போராடாமலும் செய்யமேற் கொள்ளப்பட்ட உத்தியாகும்.

 

ஈழ இறுதியுத்தம் என்பது இத்தகைய உண்மைகளைக் கொண்டது இத்தகைய கொடிய நோக்கங்களைக் கொண்டது. எனவேதான் ஈழத் தமிழர்கள் எதற்காகக் போராடுகின்றார்கள்? ஏன் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது? இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது? இவைகளைக் குறித்து இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் உண்மைகளை ஒப்புக்கொள்ளும் நிலைமை ஒன்று உருவாகுமா? தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தங்கள் விடுதலைப் போராட்டம்மீது பயங்கரவாத முத்திரை குத்தி அதை பயங்கரவாதமாகச் சித்தரிப்பதும் தமிழ் மக்களை கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக அழித்த இலங்கை அரசு ஒரு ஜனநாயகச் சோசலிசக் குடியரசு அதற்குத் தமிழ் மக்கள் நன்றாக நடத்தப்படுகிறார்கள் என்பதும் உண்மைகளை மறைந்து கட்டி எழுப்பப்பட்ட பொய்கள் என்றே மேற்குறித்த இரண்டு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று மிக தொடர்புபட்டது.
 
இலங்கை அரசுகள் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழித்ததும் அதற்கு எதிராக ஈழத் தமிழர்கள் விடுதலைக்காய் போராடியதுமான உண்மையின்மீது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்ற பொய்யையும் அதன் பயங்கரவாத முத்திரை என்ற பொய்யையும் கட்டி எழுப்பும் கசப்பான உண்மைகளே ஈழத் தமிழர்களின் வரலாற்று அனுபவமாகும். இதுவும் பேரினவாத மேலாண்மையை விரிவுபடுத்தவும் தொடரவும் மேற்கொள்ளப்படும் ஒரு உக்தியாகும். ஒடுக்குமுறையின் மிகக்கொடிய உத்தி இது. ஈழத் தமிழர்களை உளவியல் ரீதியாக ஒடுக்கும் தந்திரம் கொண்டதொரு போக்கு இதுவெனலாம்.

மகிந்த ராஜபக்சவுக்கு யுத்தவெற்றியின் பங்கை ஒருபோதும் மறுக்கமாட்டோம் என்று புதிய அரசில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். யுத்தத்தை வெற்றி யுத்தம் எனப் புகழ்பவர்கள் அதன்போது கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மக்கள் குறித்த இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதை மிக சுலபமாக மறைத்து விடுகின்றனர். ராஜபக்சவின் யுத்தத்தை வெற்றிக்குரியதாக கருதுபவர்கள் தோற்கடிக்கப்பட்ட ஈழமக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளை மறைத்து விடுகின்றனர்.

ராஜபக்சவும் அவரது யுத்த வெற்றியும் கொண்டாடப்படுகையில் அதன்போது இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை மறைக்க முடியாது. அதைக் கொண்டாடுபவர்களும்  பாதுகாப்பவர்களும் அதற்கான பொறுப்புக்கு உரியவர்கள். ஏனெனில் இனப்படுகொலை யுத்தம் ஓர் இனவாத அரசால் ஓர் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்டது.

யுத்தம் மீண்டும் மீண்டும் நினைவு கூரப்படும் வெற்றியாய் இருக்கும்போது அந்த யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை அநீதிகளை மறைப்பது எந்த வகையில் நியாயம்?

இது பாரபட்சமும் மூடி மறைத்தலுமல்லவா? இதைப் பயங்கரவாதம் என்பவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் பிள்ளைகள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள்? என்பதனை மறைக்கின்றனர்.

பேரினவாத நோக்கம் கருதி மேலாண்மை அரசுகள் சொல்லித் தநதபடி சொல்வதன் மூலம் ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை எந்தவிதப் புரிதலுமின்றி மேம்போக்காக பயங்கரவாதம் என அழிப்பவர்கள் அந்த மக்களையே பயங்கரவாதிகள் என அழைக்கிறார்கள். உலகில் விடுதலைக்காகப் போராடிய அனைவரும் ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் என்றே அழைக்கப்பட்டனர் என்பதுதான் வரலாறு.

படுகொலை செய்யப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் அவர்களை நினைவுகூர முடியும். போராடியவர்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் அவர்களை நினைவுகூர முடியும். அந்த நினைவுகூரல்கள் இன்னொரு ஒடுக்குமுறையை படுகொலையைத் தடுக்கும் ஓர் அனுபவத்தை தரும்.

மனித உயிர்களின் மகத்துவத்தையும் இழப்பின் அவலத்தையும் உணர்த்தும் பழியுணர்ச்சியைத் தடுக்கவும் தவறுகளை நினைவுகூரவும் முடியும். இவ்வாறு உயிரிழந்த, கொல்லப்பட்ட ஈழ மக்களை நினைவுகூர இடமளித்தல் என்பது தமிழ் மக்களின் தேசிய கூட்டுணர்வுக்கு மதிப்பளித்தலாகும்.

மாறாக கொல்லப்பட்ட, உயிரிழந்த மக்களை நினைவுகூர மறுப்பதென்பதே உண்மைகளை மறைத்தல் ஆகும். ஒடுக்குமுறையையும் அதற்கு எதிராக போராடி உயிரிழந்தவர்களையும் அதனால் பலியெடுக்கப்பட்டவர்களையும் வரலாற்றிலிருந்து மறைத்தலே இந்த நடவடிக்கையின் நோக்கம்.

இவை எதுவுமின்றி ஏராளமான பொய்களின்மீது அநீதிகளின்மீது படுகொலையின்மீது ஒடுக்குமுறையின்மீது ராஜபக்ச இலங்கையை கட்டியெழுப்ப நினைத்தார். ஓர் இனத்திற்கு எதிராக யுத்தம் செய்யவில்லை என்றார். ஒரு பொதுமகனையும் கொல்லவில்லை என்றார்.

தனது கையில் இரத்தைக்கறை படியவில்லை என்றார். பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ்மக்களை விடுவித்ததாக சொன்னார். இவைகள் யாவற்றின் மூலமும் உண்மையை மறைத்து பொய்யை விதைத்து தனது அரசியலைச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றபோது அந்தப் பொறி உடைந்து ராஜபக்ச சிதறுண்டார், அதிகாரத்தை இழந்தார். தான் கைப்பற்றிய எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாக மாறினார்.

ராஜபக்சவை தோல்விக்குள்ளாக்கிய இந்த அனுபவத்தில் ஈழத் தமிழ் மக்கள் இலங்கையின் புதிய ஆட்சியாளருக்குச் சொல்லும் செய்தியும் உலகத்திற்குச் சொல்லும் செய்தியும் உண்மைகளைக் கண்டறியும் பேரவாவையும் அதன் ஊடாக நிம்மதியைத் தரும் ஓர் தீர்வை எதிர்பார்க்கும் அவசியத்தையும் புதிய அரசு உணரவேண்டும். ராஜபக்ச ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளும் அவைகள் குறித்த உண்மைகளைக் கண்டறிதல் குறித்து இருக்கும் அவசியத்தையும் இலங்கையின் புதிய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்.

யுத்தத்தின் இறுதியில் என்ன நடந்தது? சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? உயிருடன் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள் எங்கே? ராஜபக்சக்கள் மட்டுமே அறிந்த இந்தக் கதைகள் எப்போது வெளிச்சத்திற்கு வரும்? யுத்தத்தில் காணாமல் போனவர்களுக்கும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் நடந்தது என்ன? என்று அவர்களின் உறவுகள் அலைந்து கொண்டே இருக்கிறார்கள். இன்றைய ஈழத்தின் முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படும் இந்கப் பிரச்சினையை உண்மைகள்தான் ஒரு முடிவுக்குக் கொண்டுவரும். அந்த உண்மைகளை கொண்டுவரவேண்டும் எனில் இலங்கை அரசும் ராஜபக்சக்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

உண்மைகளைக் கண்டறிதலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின்போதும் ராஜபக்சக்கள் இழைத்த குற்றங்களிலும் ஈழத் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது. ஏனெனில் கடந்த காலம் முழுவதும் பாரபட்சத்தினாலும் அதன்வழியான இனவொறுத்தலினாலுமே எல்லா அநீதிகளும் நிகழ்த்தப்பட்டன. ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்கு இழைத்த கொடூரங்களைக் காட்டிலும் ஈழத் தமிழ் இனத்திற்கு எதிராக இழைத்த கொடூரங்கள் குறைந்தவையல்ல. மிகக் கொடூரங்கள் சிங்கள மக்களுக்கு இழைத்த குற்றங்கள் என்றும் தமிழ் மக்களுக்கு இழைத்தவை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்றும் பார்ப்பது பாரபட்சப் பார்வையும் ஒடுக்குமுறைக்கான உடந்தையுமாகும்.

உண்மையைக் கண்டறிதல் என்பது பகுதி உண்மையைக் கண்டறிவதல்ல. உண்மை எல்லோருக்கும் ஒரே மாதிரியானது. ஒரு பகுதியை மறைத்து ஒரு பகுதி உண்மைகளைக் கண்டடைவது அறமல்ல,. உண்மைகள் என்பது தெற்கிற்கு மாத்திரமல்ல, வடக்கு கிழக்கிற்கும் அந்த உண்மைகளுக்கு இடமளிக்க வேண்டும். உண்மையைப் பாரபட்சம் காட்டாமல் பகிர்ந்தளிக்க வேண்டும். உண்மைகளை மறைத்தாலும் அநீதிகளை பொய்களால் மறைத்தாலும் இலங்கையின் அரசியலில் முரண்பாடும் போருமாய்த் தொடர்கிறது.

வரலாறு முழுவதும் இந்த மறைக்கப்படுதலும் நினைவுபடுத்தலும் ஓர் யுத்தமாகத் தொடரும் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்வதில் இருந்தே பிரச்சினைக்கான தீர்வைக் கண்டடைய முடியும். காணப்படும் தீர்வும் நிலைத்து நிற்கும். இலங்கையில் நிலையான அமைதி திரும்புவதற்கு மாத்திரமல்ல உண்மையில் பாதிக்கப்பட்ட தமிழ் ஜனங்களின் காயங்கள் ஆறவும் அவர்கள் மறுவாழ்வைப் பெறவும் உண்மைகளைக் கண்டறிய வேண்டும். ஒடுக்குமுறைகளும் களைய உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

ஒடுக்குறைகள்மீது கட்டி எழுப்பப்படும் பொய்கள் எப்போதும் பொறிந்து விழக் கூடியது.

அது பேரினவாத தீயைப் பாதுகாக்கும் கொடுஞ்செயல். புதிய ச்ரிலங்கா அரசு ஈழந்த்தை ஒடுக்கும் பேரினவாதத் தீயை தந்திரமாக சேமிக்கிறது.

- தீபச்செல்வன் -

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.