Jump to content

அந்தநாள் ஞாபகங்கள்


Recommended Posts

அந்தநாள் ஞாபகங்கள்

சில பாடல்களைக் கேட்டால் கடந்துபோன காலங்களின் இனிமையான நினைவுகள் மனதில் நிழலாடும். எப்போதுமே கடந்து சென்ற காலங்கள் இனிமையானவைதான் மனதைப் பொறுத்த வரைக்கும். அந்த வகையில் பழைய நினைவுகளை மீட்டிச் செல்லும் பாடல்களை இங்கே இணைக்கப் போகிறேன். நீங்களும் இணைக்கலாம். :D ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது உள்ளங்களில் கிளர்ந்தெழும் எண்ணக்குவியல்களையும் எழுத மறக்க வேண்டாம்.

1) சனம் தேரி கசம்

இந்தப்பாடலைக் கேட்டால் ஊரில் இருந்த ஞாபகம் எனக்கு வரும். :unsure: நேற்றுத்தான் இதன் காணொளியை தற்செயலாகப் பார்த்தேன். அதிலிருந்து பலதடவைகள் பார்த்து / கேட்டு ரசித்துவிட்டேன்.

ஆர்.டி. பர்மனின் இசையில் கிஷோர் குமாரின் ஆளுமைமிக்க குரல் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும். குறிப்பாக அவர் சரணம் பாடும்போது அதில் உள்ள நேர்த்தி மிகவும் அலாதியானது. பாடலின் இசையோ ஆகா ரகம்.

ஆரம்ப இசை முடிந்து பல்லவி ஆரம்பிக்கும் 0:19 நேரக்கணக்கில் பேஸ் வேறு தளத்திற்குச் சென்று சஞ்சரிப்பது மிகவும் இனிமையாக இருக்கிறது.

சரணம் ஒரு தெளிந்த நீரோடை போல வளைந்தும் நெளிந்தும் அதே நேரம் நெருடல் இல்லாமலும் போகின்றது. இப்படியான பாடல்கள் இனியும் வருமா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராதனா அருமையான படம் ,70களில் வந்தது. இப்படத்தில் எல்லாப் பாடல்களும் சிறப்பானவை.
 
ஆஷா போஷ்லே , மகமட் ரபி பாடிய பாடல். இசை ஆர். டி. பர்மன்.
 
ராஜேஷ்கண்ணா, ஷர்மிளா தாகுர். நடிப்பு.
 
இதில் ஷர்மிளா தாகுர் அணிந்திருக்கும் சேலை மாதிரி  ஒரு சேலையும் அந்த விடியோ கெசட்டும் கலியாண எழுத்துப் பரிசாக 83ல் எனது மனைவிக்கு வாங்கிவந்து கொடுத்தேன். அவ்வளவுக்கு அந்தப் பாடலும், பின்னனிக் காட்சிகளும் இசையும் ஒருவிதமான மயக்கத்தையே எனக்குக் கொடுத்திருந்தது.

 

நீங்களும் கேட்டு அந்த சேலையையும் பாருங்கள்...! :):D

Link to comment
Share on other sites

ஆராதனா அருமையான படம் ,70களில் வந்தது. இப்படத்தில் எல்லாப் பாடல்களும் சிறப்பானவை.

 

ஆஷா போஷ்லே , மகமட் ரபி பாடிய பாடல். இசை ஆர். டி. பர்மன்.

 

ராஜேஷ்கண்ணா, ஷர்மிளா தாகுர். நடிப்பு.

 

இதில் ஷர்மிளா தாகுர் அணிந்திருக்கும் சேலை மாதிரி  ஒரு சேலையும் அந்த விடியோ கெசட்டும் கலியாண எழுத்துப் பரிசாக 83ல் எனது மனைவிக்கு வாங்கிவந்து கொடுத்தேன். அவ்வளவுக்கு அந்தப் பாடலும், பின்னனிக் காட்சிகளும் இசையும் ஒருவிதமான மயக்கத்தையே எனக்குக் கொடுத்திருந்தது.

 

நீங்களும் கேட்டு அந்த சேலையையும் பாருங்கள்...! :):D

அருமையான பாடல் சுவி அண்ணா.. இதே பாடலை தமிழிலும் பிரதியெடுத்திருந்தார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபிமான் படப் பாடல்கள் இல்லையா?இருந்தால் தரவிறக்கி விடுங்களே ஐயா!லிடோ தியேட்டாரில் மனம் மகிழ்ந்து பின் நெகிழ்ந்து பார்த்து ரசித்த படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிமான்,
அமிதாப் பச்சன் - ஜெயபாதுரி....ஸ்சுவீட் கப்பிள்...!
 
நடியா கினாரே ...சுப்பர் சோங்க்ஸ்...
 
யாழிவன் இது சம்பந்தமாய் உங்கள் நினைவு அனுபவங்களை பதிய வேண்டும்... அதுதான் கொன்டிசன்... இல்லையா இசை...!!!

Link to comment
Share on other sites

அபிமான் படப் பாடல்கள் இல்லையா?இருந்தால் தரவிறக்கி விடுங்களே ஐயா!லிடோ தியேட்டாரில் மனம் மகிழ்ந்து பின் நெகிழ்ந்து பார்த்து ரசித்த படம்.

நீங்கள் கேட்ட பாடல்கள் எல்லாம் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளன யாழிவன்.. உங்களது எண்ணச்சிதறல்களையும் எடுத்துவிடுங்கோ.. :D

யாழிவன் இது சம்பந்தமாய் உங்கள் நினைவு அனுபவங்களை பதிய வேண்டும்... அதுதான் கொன்டிசன்... இல்லையா இசை...!!!

அதே.. அதே. சுவி அண்ணா.. :D

Link to comment
Share on other sites

2) ஜானா ஓ மெரி ஜானா..

இந்தப்பாடலையும் அண்மையில்தான் கண்டுபிடித்தேன். பல காலமாக மனதுக்குள் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கும் பாடல். இதில் இருக்கும் ஒருவித துள்ளல் நடை எனக்கு மிகவும் பிடித்தது. :wub:

ஆர்.டி. பர்மன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.. லைலா எனும்போது அவர் குரலில் காட்டும் அசைவு பிரமாதம்.. அந்த அசைவை கமலும் தனது நடனத்தில் அட்டகாசமாக வெளிப்படுத்துவார். :D

இந்தப்பாடலைக் கேட்கும்போது ஊரில் மழைநாள் ஒன்றில் பட்டம் ஏற்ற முயற்சித்தது ஞாபகத்துக்கு வரும்.. :o

Link to comment
Share on other sites

ஆராதனா-ரூப்பதெரா  மஸ்தானா பாடல் முடிய என்ன நடக்கும் என்று கேட்க அந்த நேரம் "அது "அறியாமல் முழுசிய காலம் .ராஜேஷ் கண்ணா ஒரே படத்துடன் உச்சிக்கு போனார் .

அபிமான் -லண்டனால் வந்த நண்பனுடன் காரில் போய் ஸ்டவுட் அடித்துவிட்டு லிடோவில் பார்த்தபடம் .கொழும்பில் அதற்கு முதல் ஒரு ஐந்து தடவைகள் பார்த்திருப்பேன் .பாட்டுகள் சொல்லி வேலையில்லை 

 

சனம் தேரி கசம் -இது லண்டனில் பார்த்தது .கமல் மவுத் ஒர்கனுடன் பஸ் எல்லாம் ஏறி விழுந்த சீன் கண்ணுக்குள் நிற்குது .

 

எனது நினைவுகள் பின்னர் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டுத் தனமான காதல்.வீட்டுக்கு போய் வாறபடியால் நிறையவே பாட்டுக்களை எமதாக்கி கொள்வோம்.

 

கீழே உள்ள பாடல் வெளிநாடு போவதென்று கொழும்புக்கு அடிக்கடி போவேன்.

 

அந்த நேரங்களில் அடிக்கடி பாடும் பாடல்.எமக்காக தான் போட்ட மாதிரி இருக்கும்.

 

இப்போது கூட சொல்லி சிரிப்போம்.

 

 

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

படம்--காற்றினிலே வரும் கீதம்

பாடியவர்---ஜெயசந்திரன்.

 

https://www.youtube.com/watch?v=7omh_arDvrE

Link to comment
Share on other sites

திருட்டுத் தனமான காதல்.வீட்டுக்கு போய் வாறபடியால் நிறையவே பாட்டுக்களை எமதாக்கி கொள்வோம்.

 

கீழே உள்ள பாடல் வெளிநாடு போவதென்று கொழும்புக்கு அடிக்கடி போவேன்.

 

அந்த நேரங்களில் அடிக்கடி பாடும் பாடல்.எமக்காக தான் போட்ட மாதிரி இருக்கும்.

 

இப்போது கூட சொல்லி சிரிப்போம்.

 

 

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

படம்--காற்றினிலே வரும் கீதம்

பாடியவர்---ஜெயசந்திரன்.

 

https://www.youtube.com/watch?v=7omh_arDvrE

இந்தப்படத்தில் எல்லாமே ஹிட்டான பாடல்கள்தான்.. ஒரு வானவில் போலே.. கண்டேன் எங்கும்.. இப்படி..

இந்தப் பாடலும் எனக்கு மிகப்பிடித்த பாடல்தான்.. ஜெயச்சந்திரனின் மந்திரக்குரல் மனதை மயக்கும். மேலும் நம்மாளு வேறை இசையமைத்திருக்கிறார்.. சொல்லவா வேணும்.. :D

குறிப்பாக 2:30 இல் ஆரம்பிக்கும் அந்தப் புல்லாங்குழல் / வயலின் இசை இதயத்தை சின்னதா ஒரு சுண்டு சுண்டுவதுபோல் இருக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

3) Baazigar

இந்தப்பாடலைக் கேட்டால் தனிக்காட்டு ராஜாவாக சிங்கையில் வலம் வந்தது ஞாபகத்துக்கு வரும்.. இந்தப் பாடலை விசிடியில் போட்டு பல தடவை தேய்த்திருப்பேன்.. :D எல்லாத்துக்கும் கனவுக்கன்னி கஜோல் குடுத்த நெருக்கடிதான் காரணம்.. :wub:

Link to comment
Share on other sites

யாழ் இந்துவில் படித்துக் கொண்டிருந்த காலம். வீட்டுக்கருகில் நல்லூர் திருவிழா நேரம் சைக்கிள் பார்க் நடத்துபவர்கள் இந்தப் பாடலை அடிக்கடி போடுவார்கள். 
 
சக மாணவிகளின் பார்வைப் பரிமாற்றங்களில் கனவுகளில் மிதந்த காலம். அவர்கள் தேவதைகளாகத் தெரிந்த காலம்.
 
பாடலைக் கேட்டால் நல்லூர்த்திருவிழா, பருவகாலம், பருவகாலம் தந்த கனவுலகம், இனிமையான உணர்வுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வரும். கூடவே திரும்பவும் அந்தக்காலத்துக்குப் போகமுடியாது என்ற கவலையும் வரும்.
 
Epidiascope என்ற சினிமா புறொஜெக்டர் மாதிரியான உபகரணம் ஒன்றைச் செய்து அதில் அழகான இரவு நேர நிலாக்காட்சி ஒன்றை சுவரில் விழுத்தி வீட்டு லைட் எல்லாத்தையும் அணைத்து விட்டு பின்ணனியில் இந்தப் பாடலைப் போட்டு வீட்டில் இருந்தவர்களை மகிழ்வித்த ஞாபகமும் இருக்கிறது.
 
 
 
 
https://www.youtube.com/watch?v=qjnorxdJ2J8
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக் கூட பருவம். கன்னியின் கடைக் கண் பார்வை கிடைத்து விட்டாலே, மனம் ஆனந்த வெள்ளத்தில் நீந்தும். school bus இல் எங்களை ஏற்ற மாட்டார்கள், ஆனால் எங்கள் சைக்கிள் அதனுடன் போட்டி போடும். பல இடங்களில் செயினும் கழறும். அந்த கால கட்டத்தில் வந்ததுதான் ஒரு தலை ராகம். இதில் வரும் ஒவ்வொரு பாடலும் ஏதோ எங்களுக்காக எழுதப்பட்டதாக நினைத்தோம். அப்படி மனதில் பதிந்ததுதான் இந்த பாடல் வரிகள்.

........ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும், அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் .......

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் அனுபவப் பகிர்வுகளுக்கு.. ஈசன் மற்றும் அகஸ்தியன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக் கூட பருவம். கன்னியின் கடைக் கண் பார்வை கிடைத்து விட்டாலே, மனம் ஆனந்த வெள்ளத்தில் நீந்தும். school bus இல் எங்களை ஏற்ற மாட்டார்கள், ஆனால் எங்கள் சைக்கிள் அதனுடன் போட்டி போடும். பல இடங்களில் செயினும் கழறும். அந்த கால கட்டத்தில் வந்ததுதான் ஒரு தலை ராகம். இதில் வரும் ஒவ்வொரு பாடலும் ஏதோ எங்களுக்காக எழுதப்பட்டதாக நினைத்தோம். அப்படி மனதில் பதிந்ததுதான் இந்த பாடல் வரிகள்.

........ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும், அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் .....

 

இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். தங்களை பாடசாலை பேரூந்தில்  ஏற்ற மறுப்பு தெரிவித்ததன் காரணத்தை யானும் அறிந்து கொள்ளலாமா?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குமாரசாமி

பாடசாலை பஸ் என்றால் அதில் பெண் பிள்ளைகள் மட்டும்தான் போகலாம். பெயரை மாற்றி வைத்திருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=b7JIfXxw6OU

 

1966´ம் ஆண்டு வெளிவந்த, "செம்மீன்" என்ற மலையாளப் படத்தில்... ஜேசுதாஸ் பாடிய பாடல்.
இதன் அர்த்தங்களை... தமிழர்களாலும் இலகுவில்  புரிந்து கொள்ள முடியும்.
அக்காலத்தில்.... இப்பாடல் ஒலிக்காத, தேநீர் கடைகளே இல்லை எனலாம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=9lswDCuLwh8

 

சேட்டன், சேச்சிகளின்.... கோரஸ் பாடல்.

Link to comment
Share on other sites

 

 

"தென்னமரத் தோப்புக்குள்ளே"~எஸ்.செல்லத்துரை & லில்லி மயில்வாகனம்!~பாடல் வரிகள்;இறைதாசன்(அப்துல் ஹமீது) இசையமைப்பு;அப்சராஸ் எம்.மோகன்ராஜ்!

Link to comment
Share on other sites

 

 

ஈழத்து கவிஞர் சில்லையூர் செல்வராஜனின் வரிகளில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.