Jump to content

தோழர் தியாகுவை அவர் மனைவி தாமரை.மகன் தேடுகின்றனர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க.. புலம்பெயர் தமிழர்களே.. எடுத்ததுக்கும் தியாகுவிடம் அறிவுரை கேப்பீங்களே.. இப்ப அவங்க வீட்டில ஒரு பிரச்சனை. பெரியவளா பார்த்து..இதுக்கொரு பஞ்சாயத்துப் பண்ணி வைக்க மாட்டியளா. அக்கா தாமரையும் பிள்ளையும் தெருவில நிற்குதுங்க. தமிழ் தேசியத்தை நம்பினா.. தெருதானா தஞ்சம்.. என்று கேட்க வைச்சிடாதேங்கப்பா. !!  :)  :unsure:  :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு விசயத்தையும் சொன்னாத்தானே, நாங்களும் நாலு நாயம் சொல்லேலும், நெடுக்கர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான... விடயம்.
தோழர் தியாகுவும், தாமரையும்..... தமிழ் மீது, தீராத பற்றுக் கொண்டவர்கள்.
அந்தப் பற்றுத்தான்.... அவர்களை, திருமணத்தில் இணைய வைத்தது.
பின்பு... அவர்களுக்குள் ஏதோ, மனஸ்தாபம் ஏற்பட்டதாக பத்திரிக்கை வாயிலாக அறிந்தோம்.
இதற்கு மேல்... அவர்கள் குடும்ப விடயத்தில், அவர் அருகில் உள்ளவர்கள் தான்.... சமரசம் செய்து வைக்க முடியும்.
இணையத்தில் கருத்து எழுதி,  எப்படி பஞ்சாயத்து செய்யலாம் என்று... நெடுக்ஸ் எதிர் பார்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன் தாமரை ஒரு வாரப்பத்திரிகையில் (விகடனாக இருக்கலாம்) தனது புது திருமண பந்தம் குறித்து சொல்லி இருந்தார்.

அதை வாசித்த போது, இது சரியில்லையே என்று நினைத்தேன். அதாவது, அவர் யாருடன் இனைந்தாரோ, அவர் ஏற்கனவே ஒரு மணவாழ்வில் இருந்தவாறே தாமரையுடன் வாழத் தொடங்கி இருந்தார்.

பேட்டி கண்டவர் அது குறித்த கேள்வி எழுப்பி இருந்தார். பதில் கவிஞர்களுக்குரிய, மழுப்பலாக இருந்தது.

சிறந்த தமிழ் பெண் கவியாக இருந்தாலும், இவர் ஒரு சர்ச்சைக் குரிய தனிப்பட்ட வாழ்வில் இருந்தார் என நினைக்கிறேன்.

இப்போது கூட, தனிப்பட்ட குடும்ப பிரச்சனையை, வீதியில் மகனுடன் இருந்து போராடித்தான் தீர்க்க முடியும் என அவர் நினைப்பதும், சர்ச்சைக் குரியதும் அபத்தமானதுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மகனுடன் கவிஞர் தாமரை திடீர் உண்ணாவிரதம்!

 

சென்னை: பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். சூளைமேடு பெரி யார் சாலையில் இருக்கும் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

thamarai%20500%201.jpg

தமிழ்த்திரையுலகின் பிரபலமான பாடலாசிரியர் தாமரை. இவரும் தமிழ்த்தேசியவாதியும் பெரியாரிஸ் ட்டுமான தோழர் தியாகுவும் கடந்த 2001 ல் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர். ஏற்கனவே திருமணமாகி கருத்துவேறுபாட்டில் மனைவியை பிரிந்துவாழ்ந்த தியாகு, தாமரை வீட்டாரின் சம்மதத்தின்படி அவரை மணந்தார். இவர்களுக்கு சமரன் என்ற 7 வயது மகன் உள்ளான்.

இருப்பினும் சில ஆண்டுகளில் அவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.  இருப்பினும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.

thamarai%20thiyagu.jpgஇந்த நிலையில் கடந்த 2012 ல் கருத்துவேறுபாடு முற்றிய நிலையில் தியாகு, தாமரையுடன் வசித்துவந்த வீட்டிலிருந்து வெளியேறினார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தோழர் தியாகு மற்றும் தாமரையின் நெருக்கமான நண்பர்கள் அவர்களிடையே கலந்துபேசினர்.

இதையடுத்து மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழத்துவங்கினர். இருப்பினும் நண்பர்களின் இந்த முயற்சி தோல்வியடைந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக தஞ்சை செல்வதாக சென்ற தியாகு, அதன்பின் தாமரையுடன் எந்தவித தொடர்பினையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே விவகாரம் வெளியே தெரியாதபடி இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று தாமரை அதிரடியாக கணவர் தியாகுவின் கட்சி அலுவலம் இயங்கிவரும் சூளைமேடு பெரியார் சாலையில் உள்ள கட்டடம் முன் உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார். அவரது மகன் சமரனும் அவருடன் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

thamarai%20500%202.jpg

உண்ணாவிரதம் இருந்துவரும் தாமரை, தனது பக்க நியாயத்தை வலியுறுத்தி மக்களுக்கும் மற்ற தோழர்களுக்கும் எழுதிய 9 பக்க கடிதத்தில், தனக்கும் தோழர் தியாகுவுக்குமான கடந்தகால பிரச்னையை குறிப்பிட்டுள்ளதோடு,  தியாகுவின் செயலை வன்மையாக கண்டித்தும் எழுதியிருக்கிறார்.

கடிதத்தின் இறுதியில், இந்த விவகாரத்தில் தான் எந்த தற்காலிக தீர்வுக்கும் உடன்படமாட்டேன் என்றும் தியாகு தன் வீட்டிற்கு திரும்ப வருவது வரை தன் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தியாகுவுக்கு எதிராக பாடலாசிரியர் தாமரையின் இந்த அதிரடி போராட்டம் தோழர்கள் மத்தியிலும் திரையுலகிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39125

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாமரையைப் பிரிந்தது ஏன்?: தியாகு விளக்கம்! 

 

 

சென்னை: தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தாமரையுடன் திரும்ப வாழவும் விரும்பவில்லை என கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தன் கணவர் தியாகு தன்னை விட்டுப் பிரிந்து சென்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவரது வீட்டில் திரைப்படப் பாடலாசியர் தாமரை உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், உணமையாகவே தியாகு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாரா என தியாகுவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

‘’நான் ஏன் ஓடி ஒளியணும். பத்திரிகைகளுக்கு தாமரை கொடுத்த கடித்தைப் பாத்தேன்.எவ்ளோ தான் மோசமான கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரிவுதான் இதுக்கு நிரந்த தீர்வா இருக்கும். நான் வேளச்சேரியிலதான் இருக்கேன். நான் எங்கயும் ஓடி ஒளியலை. ஒரு நாள் என்னோட போன் ஸ்விட்ச் ஆப் ஆனதுக்காக எப்பவுமே இப்படிதான்னு முடிவு பண்ணா என்ன அர்த்தம்.

நான் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துட்டுதான் இருக்கேன்.களப்பணியிலயும் இயங்கிட்டுதான் இருக்கேன். தொடர்ந்து 5 வருஷமா எங்களுக்குள்ள ஒத்து வரலைனு அவங்களே சொல்றாங்க. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு யோசிக்கிற பொண்ணும் அவங்க இல்ல...அப்படி இருக்க எதுக்காக இப்படி யோசிக்கணும்.

என் மகனோட நான் தொடர்ந்து ஈமெயில் மூலமா பேசிட்டுதான் இருந்தேன். அவனும் எனக்கு பதில் அனுப் பியிருக்கான்.மகனுக்கும் எனக்குமான உறவு சுமூமாக இருந்த நிலையில், அவனோட மெயிலையும் முடக் கிட்டாங்க.ஒரு கட்டத்துல மகனை பிரியிற சக்தி எனக்கில்லைனாலும் என் மேல பாசத்தோட இருக்குற மகனுக்கு கஷ்டத்தை கொடுக்க வேணாம்னு கொஞ்சம் கொஞ்சமா அவனைவிட்டும் வேற வழியில்லாம அவனை தொடர்பு கொள்ள முடியாம பிரிஞ்சிட்டேன்.ஒரு பையனுக்காக ரெண்டு பேர் சண்டை போட் டுக்குறதை விட,  அவன் அம்மாகிட்டயே அவன் இருக்கட்டும்னு விலகிட்டேன்.

tamarai.jpg

குடும்பத்துல இருக்குறதால களப்பணியில ஈடுபட முடியாதுனு எதுவும் இல்ல. இதுக்கு முன்னாடி என் னோட சமுதாயப் பணிகளை ஏத்துக்கிட்டவங்க இப்ப ஏத்துக்க மறுக்குறாங்க...அவ்வளவுதான்.இனி அவங்க என்னை அழைத்தாலும் அவங்களோட சேர்ந்து வாழற எண்ணம் எதுவும் எனக்கு இல்ல. அவங்களோட உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனா சேர்ந்து வாழ விருப்பம் இல்ல.

எனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லை. அதனால அவங்களா விவாகரத்து கேக்காம நானாவும் நீதிமன்றத்தை அணுக மாட்டேன். அவங்க விவகாரத்து கேட்டாலும் மனசு ஒத்து கொடுக்க தயாரா இருக்கேன்.அதே நேரத்துல என் மகனிடம் மனப்பூர்வமா மன்னிப்பு கேக்குறேன்.

விகடன் மூலமா அவன்கிட்ட ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்.’’என்றவர் சற்று இடைவெளியுடன் சொன்னார்.

‘’மகனே சமரா...நீ ரொம்ப புத்திசாலி..நல்லா படிக்கணும்.நல்லா வளர்ந்து வாழ்ந்து காட்டணும்.அப்பா உன்கிட்ட  மானசீகமா மன்னிப்பு கேட்டுக்கிறேன் ‘’!

-செங்காந்தள்

 

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39139

Link to comment
Share on other sites

குடும்பத்துல இருக்குறதால களப்பணியில ஈடுபட முடியாதுனு எதுவும் இல்ல.

கரெக்ட். இங்கே எத்தனையோ குடும்பஸ்தர்கள் (யாழ்)களப்பணியில் உள்ளார்கள்..! :icon_idea::D

Link to comment
Share on other sites

களம் காணும் கடுவன்கள்!!  
எந்தக் களத்தில என்ன பணி என்றுதான் தெரியேல!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு உபதேசம்  என்பது தாமரைக்கும் பொருந்துமா????

எந்தக்காலத்தில் இருக்கிறார்?

ஆனால் கருத்துக்களும் எழுத்தும்

கவிதைகளும்............ :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் தியாகுவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் கவிஞர் தாமரை

 

கவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவிற்கு எதிராக 7ஆவது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

1425568610-0105.jpg

 

கவிஞரும், பாடலாசிரியருமான தாமரை கடந்த வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 27-2015) தனது கணவர் தியாகுவிற்கு எதிராக சூளைமேட்டில் உள்ள தியாகுவின் இல்லத்தில் போராட்டத்தை அறிவித்தார்.
 
அது முதல் இன்றுவரை அவர் தனது போராட்டத்தை பல்வேறு இடங்களில், தெருவில் தங்கி நடத்தி வருகின்றார். அவர் 'தமிழுக்கு உழைத்தேன் தெருவுக்கு வந்துவிட்டேன் தமிழ் உணர்வுள்ளவர்களே சம்மதம்தானா?'  என்று எழுதப்பட்டுள்ள பேனருடன் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.   
 
இது குறித்து கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
 
இன்று (5.3.15) ஏழாவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.
 
சமாதான முயற்சி எடுத்த ஓவியர் வீரசந்தனம் ஐயா, இயக்குனர் வ.கௌதமன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் மூலம் தியாகு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
 
அதற்கான பதில் அனுப்ப ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டேன். இன்று பதில் அனுப்புகிறேன். முடிவு அதன் பிறகு தெரியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
தனக்கு சட்ட ரீதியிலான தீர்வு தேவையில்லை என்றும் சமூகரீதியிலான முடிவுதான் தேவை என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம களத்திலிருந்தும் தமிழ் *** உணர்வாளர்கள் தியாகுவையும் தாமரையையும் சேர்த்துவைக்க ஏன் முயலக்கூடாது? ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொசிடிவ் சார்ச் பொசிடிவ் சார்சுடன் சேர்ந்து ஒரு அசைவியலை  தோற்றுவிக்க முடியாது .....
 
சிங்கள உணர்வாளர்கள் வேண்டுமானால் முயன்று பார்க்கலாம்!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகு நேரில் சென்று மன்னிப்பு கேட்டார்: தாமரை போராட்டத்தை முடித்தார்!

8dd4fd40-08d5-4f45-b15b-f9c1d9c9b1cc_S_s

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவரும், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரையின் கணவருமான தியாகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினார். அதன் தொடர்ச்சியாக 3 மாத இடைவெளிக்கு பின் கவிஞர் தாமரை கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

அவரது போராட்டத்தை நிறுத்தி வீடு திரும்ப வேண்டும் என்றால் தியாகு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கவிஞர் தாமரை தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரவு 9 மணியளவில், வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாமரையிடம் மன்னிப்பு கேட்பதற்காக தியாகு வந்தார்.

தியாகு தனது மனைவி தாமரை மற்றும் மகன் சமரனிடமும் மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றை எழுதி கொண்டு வந்திருந்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஓவியர் வீர.சந்தானம், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு 3-ந்தேதியும், இன்று(நேற்று) காலையும் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் (தாமரை) கோரியிருந்தபடி நடுநிலையான விசாரணை குழு அமைக்கும் பொறுப்பை ஓவியரும், வழக்கறிஞரும் ஏற்று கொண்டுள்ளார்கள்.

சென்ற நவம்பர் 23-ந்தேதி நான், வீட்டை விட்டு வெளியேறியதற்கு அடிப்படையாகவும், உடனடியாகவும் அழுத்தமான காரணங்கள் இருப்பினும், அந்த வெளிநகர்வினாலும், அடுத்து வந்த 3 மாத கால பிரிவினாலும், அனைத்துக்கும் உச்சமாக கடந்த 7 நாள் தர்ணா போராட்டத்தாலும் உங்களுக்கும் (தாமரை), சமரனுக்கும் ஏற்பட்டுள்ள உடல் துன்பத்துக்காகவும், மன வேதனைக்காகவும் உளமார வருந்துகிறேன். நான் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருப்பதை ஏற்று உங்கள் போராட்டத்தை கைவிட்டு இல்லம் திரும்ப வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

அதனை படித்து காட்டிய தியாகு மேற்கொண்டு நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து, கவிஞர் தாமரை நிருபர்களிடம் கூறியதாவது:-

இது ஒரு முழுமையான தீர்வு கிடையாது. நேரில் வந்தவர் கடிதம் மூலம் மன்னிப்பு கூறி உள்ளார். இது ஒரு அரசியல் நிகழ்வு போலவே உள்ளது. எங்கள் வீடும் போர்க்களம் போலவும், அரசியலாகவும் தான் இருந்தது. நீதிமன்ற தீர்வுக்கு நான் ஒருபோதும் போவதில்லை. விவாகரத்து எளிதான தீர்வு. அதை நான் ஏற்கவில்லை. அவரை அசிங்கப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ தர்ணா போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதுவரை நான் அவரை பற்றி எதுவும் கூறவில்லை. இனி, விசாரணை குழுவினர் விசாரித்து, பிரச்சினைக்கு தீர்வு காணட்டும். அதில், உண்மையிலேயே என் மீது தவறு உள்ளதா? அவர் மீது தவறு உள்ளதா? என்பதை கண்ட பிறகுதான் முழுமையான முடிவு எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தியாகு, கவிஞர் தாமரையிடம் மன்னிப்பு கோரியபோது, ஓவியர் வீர.சந்தானம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

http://pagetamil.com/?p=24598

Link to comment
Share on other sites

எப்பா  யாரவோ தமிழா  அவரைத்தான்  புதிதா  நேசிப்பதா  தகவல் பாவம் தியாகு எவ்வளவு  தியாகம்  பண்ணவேண்டி  இருக்கு   :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.