Jump to content

தற்கொலைகளை தடுக்க பேஸ்புக்கில் புதிய வசதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

201502271743213271_Facebook-introduces-s
வாஷிங்டன், 

தற்கொலைகளை தடுக்க பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. பேஸ்புக்கில் இருப்பவர்கள் யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களுடன் போராடி வந்தால், அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆறுதல்களை வழங்கி எண்ணத்தை மாற்றும் முயற்சியில் பேஸ்புக் களமிறங்கியுள்ளது. இதற்கென 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு ஹெல்ப்லைனும் உருவாக்கப்பட்டுள்ளது. 

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சேவை அமைப்புடன் இணைந்து இந்த புதிய டூலை உருவாக்கியுள்ளது பேஸ்புக். டைம்லைனில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் எச்சரிக்கை அறிவிப்புகளுடன் போஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் நாம் அதை டிராப்டவுன் மெனுவில் கிளிக் செய்து அந்த போஸ்டை பற்றி பேஸ்புக்கில் ரிப்போர்ட் செய்யலாம். அதேபோல், அந்த போஸ்டை பார்ப்பவர்களும் தற்கொலை செய்ய முற்படும் நபருக்கு மெசேஜ் அனுப்ப முடியும். அவருக்கு ஆதரவாக மற்றொரு பேஸ்புக் நண்பரை தொடர்பு கொள்ளலாம் அல்லது தற்கொலைக்காக அமைக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனில் கனெக்ட் செய்து ரிப்போர்ட் செய்யலாம். 

பேஸ்புக் அந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்து தற்கொலை செய்ய முற்படும் எண்ணத்தில் உள்ளவருக்கு ஆறுதல் அறிவுரைகளை வழங்கும். அந்த நபர் மற்றொரு முறை பேஸ்புக்கை லாக் இன் செய்யும் போது ஆட்டோமேட்டிக்காகவே நிறைய ஆறுதல் செய்திகள் அடங்கிய அழகிய ஸ்கிரீன்கள் அவரது அக்கவுண்ட்டில் டிஸ்பிளே ஆகும். அதில், ஆலோசனைகள் மட்டுமல்ல, உதவிகள் வாங்குவதற்கு வழிமுறைகளும் இருக்கும். 

இதுபற்றி வாஷிங்டனிலுள்ள போர்பிராண்ட் சேவை அமைப்பின் திட்ட மேலாளர் ஸ்டீபன் பால் கூறுகையில், 'தற்கொலைகளை தடுக்கும் இந்த புதிய வசதி பேஸ்புக்கில் கொண்டு வரப்பட்டது சிறப்பான ஒன்று. ஏனென்றால், பேஸ்புக்கில் மட்டுமே எல்லோரும் பயன்படுத்தும் வகையில் 'டூல்ஸ்' உள்ளது. அது ஒரு பிரண்டாக இருக்கலாம், தாத்தா-பாட்டியாக இருக்கலாம், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவராக கூட இருக்கலாம். மனவலியுடன் இருக்கும் ஒருவரை ஆன்லைனில் கனெக்ட் செய்து அவர்களுக்கு ஆறுதல்களை வழங்க ஒருவர் டிகிரி படித்துவிட்டு வரவேண்டிய அவசியமில்லை. நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றுதான். தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் அந்த நபரின் ரிப்போர்டை ஆய்வு செய்து அவர்களுக்கு உதவி செய்ய பேஸ்புக்கின் வசதி இருக்கிறது என்பது மட்டுமே. பலருடைய உயிரை காப்பாற்றும் சக்தி இந்த வசதிக்கு உண்டு.' என்றார். 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கல் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள்  தானே...இப்ப உபதேசம் செய்யிறியள்..
    • கனகமக்கா போராட்டத்தில் இந்த தாய் யார்... கனகமக்கா என்றால் அந்த ஊரில் யாருக்கும் தெரியும். அவ்வூரின் எல்லா நன்மை தீமைகளிலும் பங்கேற்கும் ஒரு தாயாகவே அவள் மாறிவிட்டாள். தன்னுடைய கணவனுக்கு சிங்கள இராணுவம் இழைத்த கொடுமைச் சாவை அவளின் மனம் மறக்க முடியாதிருந்தது. அன்றைய நிலையிலிருந்து தன்னை ஒரு போராளியாகவே மாற்றி விட்டாள் கனகமக்கா. காலம் உருண்டோடியது. இந்திய இராணுவம் தமிழீழம் எங்கும் ஊடுருவியது. கனகமக்கா தன் மகனுக்காகவே தான் இன்னும் உயிரோடிருப்பதாகக் கூறுவாள். அவனோ தன்னை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். என்னதான் இருந்தாலும் கனகமக்கா தானும் ஒரு சாதாரண தாயாக இருந்துவிட விரும்பவில்லை. அவன் தன்னை இயக்கத்துடன் இணைத்துக்கொன்டத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள். காடுகளுடன் அண்டிய அவ்வூரில் இந்திய இராணுவத்தின் பெரும் படைப்பிரிவு ஒன்று முகாமிட்டிருந்தது. இப்பிரிவைச் சேர்ந்த இராணுவம், கனகமக்கா தன் பிள்ளைகளைப் போல் நேசிக்கும் இயக்க வீரர்களை தேடி அழிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இவ்விராணுவ நடமாட்டங்களை அவ்வப்போது அறிந்து இயக்க வீரர்களின் முகாம்களுக்குச் சென்று தெரிவிப்பதை தனது கடமைபோல் செய்தாள். ஒரு நாள் ஊரின் எல்லையில் வைத்து மேஜர் கஜன் ஒரு அவசரக் கடிதத்தைக் கொடுக்கிறான். மின்வெட்டில் அதை ஒளித்துக் கொள்கிறாள் கனகமக்கா. “ஆமி அங்கால நிக்குதக்கா கவனம்” கஜன் சொல்கிறான். வாயில் கொதப்பிய வெற்றிலையுடன் வெடவெட என்று நடக்கத் தொடங்குகிறாள் கனகமக்கா. இந்திய கூலி இராணுவத்தினன் ஒருவன் கனகமக்காவை வழிமறித்து ‘உந்தப் பக்கம் ஏன் போற’ என்று கேட்கிறான். சற்றும் பதட்டமின்றி ‘விறகு முறிச்சரப் போறான் சாமி’ என்கிறாள் கனகமக்கா. இந்தியச் சிப்பாய் சிறிது ஐயத்துடனே அவளைப் போகச் சம்மதிக்கிறான். காட்டு வழிகளினூடாக நடந்து விடுதலைப் புலிகளின் முகாமைச் சென்றடைகின்றாள். முகாமில் இருந்தவர்களின் இன்முகம் கண்டு முகம் மலர்கிறாள். தான் பெற்ற பிள்ளைகளைவிட பாசம் பொங்க பழகுகிறாள். மேஜர் கஜனின் கடிதத்தை கொடுத்துவிட்டு மீண்டும் திரும்புகிறாள். வழியில் “நெரிஞ்சியாக்கும் குத்திப் போட்டுது” என்றவாறு குனிந்தவள் முல்லை எடுக்கும் போதுதான் உணருகிறாள் அம்முள் குத்தியதை விட மீண்டும் எப்படி இந்திய இராணுவத்தினரைக் கடப்பேன் என்று நினைக்கிறாள். கையிலோ, தலையிலோ ஒரு தடி விறகு கூட இல்லை என்று பதட்டமடைகிறாள். காட்டில் பெரியதொரு புளியமரத்தின் பின்னால் மறைந்து கொள்கிறாள். பல மணி நேரத்தின் பின் கூலிப்பட்டாளம் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அதன் பின்புதான் கனகமக்கா வீடு திரும்புகிறாள். இப்படி பலமுறை ஏமாந்த இராணுவம் கனகமக்கா மேல் சந்தேகிக்க ஆரம்பிக்கிறது. இராணுவத்துடன் ஒட்டிய துரோகக் கும்பலுடன் தேடப்படுகிறாள் கணக்மக்கா. “என்னவாயிருந்தாலும் நீயும் பொம்பிளை தானேடி” என்று கூறும் மாமியாரின் வார்த்தைக்கு மதிப்பளித்து மாமியாருடன் அவளின் வீட்டில் தனது இருப்பை அமைத்துக் கொள்கிறாள் கனகமக்கா. ஒருநாள் நடுச்சாமம் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. யாரது இந்த நேரத்தில் என தனக்குள் நினைத்துக் கொண்டு கதவை திறக்கிறாள் கனகமக்காவின் மாமியார். மாமியார் உடலெல்லாம் வெடவெடத்து நடுங்குகிறாள். கனகமக்கா துணிந்து விட்டால். மரணமாயினும் தன்மானத்துடன் ஆகவேண்டும் எண்றெண்ணினாள். கதவைத் திறந்ததும் உள்ளே வந்த இராணுவச் சிப்பாய் ‘யாரடி கனகம்’ என்கிறான். ‘நான்தான் கனகம், என்ன வேணும்’ என்கிறாள் கனகமக்கா. “நீ யாருக்கடி தூது போகிறாய்” என்று சத்தமிட்டவாறே கையிலிருந்த துப்பாக்கியை இயக்குகிறான். பல குண்டுகள் தாக்க நொடிப்பொழுதில் கனகமக்கா தாய் மடியில் சாய்ந்தாள். துயருற்று அழும் குழந்தையைப் போல் கனகத்தின் மாமியார் அழுதாள். அந்த அழுகையிலிருந்து அவள் ஒரு விதி செய்யத் துணிந்தாள். துப்பாக்கி கட்டைகளோடு நிற்கும் இந்தியச் சிப்பாய்களை பழிவாங்கத் துடிக்கும் பார்வையோடு விழித்து “கனகத்தை மட்டுமில்லை நீ யாரைக் கொண்டாலும் நான் உன்னைக் கொல்லாமல் விடமாட்டனடா” என்று கர்ஜிக்கிறாள். கனகம் மடியவில்லை, அவளின் நினைவை எம் தாய்ப் பூமி தன் நெஞ்சில் ஆறாத காயமாக சுமந்து கொண்டெழுகின்றது https://maaveerarkal.blogspot.com/2015/02/blog-post.html   கனகமக்கா
    • Tuesday, June 02, 2020       புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார். திரு.நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ''புலிகளின் குரல்'' என்று அழைக்கப்பட்டு பின்னர் ''உறுமல்''  என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலைகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்றுக் கடமையாற்றியவர். இதேவேளை இவரது ஆங்கிலப் புலமையையும், எழுத்தாற்றலையும், அறிந்த விடுதலைப் புலிகளின் ''படைத்துறைச் செயலகம்'' முக்கியமான தந்திரோபாயங்களை தனது படையணிகளுக்கப் போதிக்கும் பொருட்டு ஆங்கில மொழி நூல்களை மொழிபெயர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். பொறுப்பாளர்களான கேணல் ராஜு, காண்டீபன் ஆகியவர்களின் கீழ் கடமையாற்றிய இவர் 1997-2001 ஆண்டு காலப்பகுதியில் இயக்கப் போராளிகளுக்கு மொழி பெயர்க்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தார். புதிய தமிழ் மொழிச் சொற்களை உருவாக்கும் பணியினையும் மேற்கொண்டிருந்தார். பல ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழாக்கத்திற்கு வழிவகுத்தவர். இவர் ''THE WILD GEESE'' எனும் திரைப்படத்தில் குரல் கொடுத்துமிருந்தார். இறுதியாக சமர்க்கள ஆய்வுப் பணியகத்தில் யோகி என்ற அழைக்கப்படும் யோகரத்தினத்தின் கீழ் பணிபுரிந்து வந்த நிலையில் நோய்வாய்பட்டிருந்தார். அவரின் மதுத்துவ வசதி கருதியும், பாதுகாப்புக் கருதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்த அவரது குடும்பத்தினரின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யுத்தம் மீண்டும் ஆரம்பித்த போது, அங்கிருப்பது பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் இந்தியா சென்று உயிர் போகும் வரை அங்கேயே வசித்து வந்தார்.   https://maaveerarkal.blogspot.com/2020/06/blog-post.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.