Jump to content

இலங்கை அரசாங்கம் யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதே விசாரணைக்கு அனுமதியளிக்காது:- ராஜித

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலை - காணிகளை மீள் அளித்தல் - இராணுவத்தை குறைத்தல் - உள்நாட்டு விசாரணை - ராஜித - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

இலங்கை அரசாங்கம் யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதே விசாரணைக்கு அனுமதியளிக்காது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனரத்தின,உள்நாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் இராணுவத்தினரிடம் உள்ள தனியார் நிலங்களை ஓப்படைப்பதற்கும்,அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கும் புதிய அரசாங்கம் எண்ணியுள்ளதாக அமைச்சரவை பேச்சளார் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் வடமாகாணத்தில் இராணுவபிரசன்னத்தை குறைக்கும்,கடந்த அரசாங்கத்தை போன்று இராணுவநடவடிக்கைகள் மூலமாக மாத்திரம் பயங்கரவாதத்தின் மீள் எழுச்சியை கட்டுப்படுத்தலாம் என இந்த அரசாங்கம் கருதவில்லை,

குறிப்பாக வடமாகாணத்தை பொறுத்தவரை அவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம் என நாங்கள் கருதவில்லை, வர்த்தக நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட நிலங்களை பொதுமக்களிடம் மீள வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்,

முன்னைய அரசாங்கம் எப்போதும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி குறித்தே சிந்தித்துகொண்டிருந்தது.

இராணுவநடவடிக்கைகளால் மாத்திரம் அதனை தடுக்க முடியும் என நாங்கள் கருதவில்லை.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 275 தமிழர்களை விடுதலைசெய்வது குறித்து ஆராயந்துவருகின்றோம், அவர்கள் வெறுமனே சந்தேகத்தின் பெயரில்கைதுசெய்யப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116054/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசாங்கம் யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதே விசாரணைக்கு அனுமதியளிக்காது:

இந்த தலைப்பு தெரிந்த விஷயம்தானே. மீதி விஷயங்கள் கொள்கையளவில் நன்று. நடைமுறைக்கு வந்தால் நல்லது. ஓரளவுக்காவது செய்வார்கள் (இல்லாவிட்டால் uncle Sam விடமாட்டார்).

(சம்பந்தரை SAM என்று குறிப்பிட்டது சூப்பர் என்றோ, சம்பந்தரை uncle  என்று இந்தாள் எப்படி குறிப்பிடலாம் என்றோ யாரும் கருத்து எழுத சான்ஸ் உண்டு என்பதை இந்த தளத்தில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு ஒன்றைத்தான் சொல்ல முடியும் -    GOD BLESS TAMIL EEALM (புரிந்தவர்களுக்கு சல்யூட்)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

79 நாட்களுக்குள் முயல் பிடிக்கும் நாயை தெரிந்து விடும். :)

எனக்கொரு சந்தேகமுண்டு

அந்த 100 நாட்களை

மைத்திரி  வாசித்திருப்பாரா..?? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்[உ ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள். எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
    • இனி…. எப்படியும் தெரிய வரும். 🤣 ஆதவனுக்கு ஏழரையா… சவுக்குக்கு ஏழரையா… என்று தெரியவில்லை. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.