Jump to content

சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலைய மக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வலி.வடக்கு மக்களை நாளைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில் உடைகளில் சென்ற இராணுவத்தினர் மக்களை மிரட்டியுள்ளனர்.
 
புதிய அரசு பொறுபேற்ற பின்னர் உயர் அதிகாரி ஒருவர் உங்கள் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள அவரிடம்,நாங்கள் இந்த இடத்தில் நீண்ட காலமாக இருந்து பழகி விட்டோம்.  எனவே  உயர் பாதுகாப்பு வலய காணிகளுக்கு பதிலாக தற்போது குடியிருக்கும் காணிகளையே எங்களுக்கே வழங்குமாறு கோருங்கள்.
 
அதனை விடுத்து உயர் பாதுகாப்பு வலய காணிகளை மீள வழங்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டாம் என இராணுவத்தினர்  மக்களை  எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
இதேவேளை பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வெயர் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இன்று கொழும்பு வரும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்  உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 
இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு நாளைய தினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். கொழும்பிலிருந்து விசேட விமான மூலம் யாழ். வரும் அவர் வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 
அதனைத் தொடர்ந்து வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=520393839129580839#sthash.4ePxxian.dpuf
Link to comment
Share on other sites

அதனை விடுத்து உயர் பாதுகாப்பு வலய காணிகளை மீள வழங்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டாம் என இராணுவத்தினர்  மக்களை  எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

நானும்தான் வலிகாமம் வடக்கை சேர்ந்தவன். 1985இலிருந்து எமது ஊர் இலங்கை வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. இந்திய இராணுவ பிரவேசத்தின் போது சிலவருடம் கிடைத்தது. மறுபடியும் இல்லாமல் போனது. நினைக்கும் போதே மனதில் ஒரு வெறுமை.  புலம்பெயர்ந்து சகல வசதிகளோடும் வாழும் எனக்கே இவ்வளவு வெறுமை மனதில் என்றால் அகதிமுகாம்களில் இத்தனை வருடமாக இருக்கும் மக்களிற்கு. 
 
என்னால் இங்கிருந்து செய்யக்கூடியது எதுவுமில்லை. மனதார குடிபெயர்ந்த மக்கள் தங்கள் கஸ்டங்களை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாது வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றேன். இவை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தெரியாத விடயமல்ல இருப்பினும் இந்த மக்களிற்கும் ஏதாவது நல்லது நடக்காதா எனும் எதிர்பார்ப்புத்தான்.
 
நம்பிக்கைதான் வாழ்க்கை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நானும்தான் வலிகாமம் வடக்கை சேர்ந்தவன். 1985இலிருந்து எமது ஊர் இலங்கை வரைபடத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. இந்திய இராணுவ பிரவேசத்தின் போது சிலவருடம் கிடைத்தது. மறுபடியும் இல்லாமல் போனது. நினைக்கும் போதே மனதில் ஒரு வெறுமை.  புலம்பெயர்ந்து சகல வசதிகளோடும் வாழும் எனக்கே இவ்வளவு வெறுமை மனதில் என்றால் அகதிமுகாம்களில் இத்தனை வருடமாக இருக்கும் மக்களிற்கு. 
 
என்னால் இங்கிருந்து செய்யக்கூடியது எதுவுமில்லை. மனதார குடிபெயர்ந்த மக்கள் தங்கள் கஸ்டங்களை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாது வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றேன். இவை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தெரியாத விடயமல்ல இருப்பினும் இந்த மக்களிற்கும் ஏதாவது நல்லது நடக்காதா எனும் எதிர்பார்ப்புத்தான்.
 
நம்பிக்கைதான் வாழ்க்கை.

 

 

உங்கள் வலி புரிகிறது

நம்பிக்கைதான் வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
IDP-camp-350-news.jpg

இன்று வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் இன்று வலி.வடக்கு மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில், நேற்றுக் காலை வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில் உடைகளில் சென்ற இராணுவத்தினர் அவர்களை மிரட்டியுள்ளனர்.

   

புதிய அரசு பொறுபேற்ற பின்னர் உயர் அதிகாரி ஒருவர் உங்கள் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரிடம்,நாங்கள் இந்த இடத்தில் நீண்ட காலமாக இருந்து பழகி விட்டோம். எனவே உயர் பாதுகாப்பு வலய காணிகளுக்கு பதிலாக தற்போது குடியிருக்கும் காணிகளையே எங்களுக்கே வழங்குமாறு கோருங்கள். அதனை விடுத்து உயர் பாதுகாப்பு வலய காணிகளை மீள வழங்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டாம் என இராணுவத்தினர் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வெயர் இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்துள்ளார். கொழும்பிலிருந்து விசேட விமான மூலம் இன்று யாழ். வரும் அவர் வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதனைத் தொடர்ந்து வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://seithy.com/breifNews.php?newsID=125544&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
இங்கிருக்கும் பிள்ளைகள் அனைவரும் தங்களுடைய சொந்த இடங்களில் பிறக்கவில்லை என்றும் இந்த முகாம்களில் பிறந்துள்ளனர் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
 
அனைவரும் ஆர்வமாக இருக்கும் தருணத்தில் நான் இலங்கைக்கு 2 ஆவது தடவையாக வந்துள்ளேன். இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற மாற்றத்தோடு உங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகின்றேன். 
 
பிரித்தானிய மக்களுடைய விருப்பத்திற்குசார்ப்பான காலணிகள் வழங்குவதில் மகிழ்ச்சி, பாடசாலை, உங்களுடைய ஊருக்குச் செல்லவும் வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
 
 
 
 
இராணுவத்தின் பிடியிலுள்ள  நிலங்களை மீட்டுத் தாருங்கள்; வலி.வடக்கு மக்கள் கோரிக்கை
 
இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத்தருமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் வலி.வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமிற்கு இன்றைய தினம் விஜயம் செய்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடமே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
நீண்ட காலமாக முகாம்களிலே வாழ்ந்து வருகின்றோம் விரைவில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை எங்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள் என கோரினர். 
 
இதேவேளை வலி.வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களின் வரைபடத்தையும்பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்  பார்வையிட்டார்.
 
IMG_0008%20copy%284%29.jpg
 
IMG_0010%20copy.jpg
 
IMG_0019%20copy.jpg
 
IMG_0027%20copy.jpg
 
IMG_0092%20copy.jpg
 
IMG_0098%20copy.jpg
 
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=388923842329619478#sthash.sWyhRcQF.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.