Jump to content

அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன் நினைவாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர............


Recommended Posts

அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன் நினைவாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உதவி

கிளிநொச்சி உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழக்தின் ஆதரவில் அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன் (அப்பையா) 4ம் ஆண்டு நினைவாக லண்டனினல் வசிக்கும் அவரது மகன் கிளிபேட் குலநாயகத்தின் நிதிப்பங்களிப்புடன் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு கடந்த 24ம் நாள் சிவநகர் அ.த.க.பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் இராசரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

என்னுடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராசா மற்றும் அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன்(அப்பையா) ஆகியோரின் குடும்பத்தினர், ஓய்வுநிலை அதிபர் நாகலிங்கம், கிளிநொச்சி கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயம் பரந்தன் அ.த.க.பாடசாலை அதிபர், உழவர் ஒன்றிய விளையாட்டுக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்து உரையாற்றிய கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராசா,

கிளிநொச்சி மாவட்டத்தின் பழம்பெருமை மிக்க கிராமங்களின் ஒன்றான உருத்திரபுரத்தின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் அக்கறைகொண்டுள்ள சமுதாயம் இன்றுவரை தொடர்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி தருகின்றது.

சகல துறைகளிலும் மாவட்டத்திலும் அதை கடந்தும் புகழ்பூத்த மனிதர்களை உருவாக்கிய இந்த கிராமத்தின் எழிலையும் மனிதர்களையும் போர் பறித்தபோதும் எஞ்சிய இந்த மண்ணின் பண்பாட்டு விழுமியத்தின் ஆர்வமும் எதிர்காலம் நோக்கிய சிந்தனையும் இப்படியான கல்வி வளர்ச்சிக்கான உதவிகளை செய்கின்றது மிகுந்த பெருமையுடன் பார்க்கப்படவேண்டிய விடயமாக இருக்கின்றது.

உருத்திரபுரம் மண்;ணின் பல்வேறு துறைகளிலான முன்னேற்றகரமான பொற்காலம் மீண்டும் மெல்ல மெல்ல துளிர்விடுவதை இப்பொழுது பார்க்கமுடிகின்றது.

அத்தகைய காலத்திற்கு உதவும் மனிதர்களை இந்த கிராமம் நன்றியுடன் பார்க்கும் அதேவேளை நல்ல எண்ணங்களோடு உதவிகளை வழங்கும் கருணையாளர்களின் எண்ணங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.